ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 T.N.Balasubramanian

கடவுள் தந்த இருமலர்கள்...
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

சின்னச் சின்ன சிந்தனைகள்
 SK

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 SK

புதிய சமயங்கள்
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by ayyasamy ram on Mon Mar 23, 2015 8:46 am


-
சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் இயூ
இன்று திங்கட்கிழமை 23.3.2015 அதிகாலை
3.18 மணிக்கு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில்
காலமானார்.

இதனை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
திரு லீ குவான் இயூ நிமோனியா பாதிப்புக்காக
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி
முதல் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டிருந்தார்.

————————————
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by ராஜா on Mon Mar 23, 2015 10:55 am

ஆழ்ந்த இரங்கல்கள் ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Mon Mar 23, 2015 12:32 pm

திரு லீ குவான் இயூவின் மறைவு- தேசிய அளவில் துக்கம் அனுசரிப்பு

திரு லீ குவான் இயூவின் மறைவுக்கு, தேசிய அளவில், இன்று தொடங்கி, வரும் ஞாயிற்றுக்கிழமை வரை துக்கம் அனுசரிக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. திரு லீக்கு மரியாதை செலுத்தும் வகையில், அரசாங்கக் கட்டடங்களில் உள்ள அனைத்து தேசியக் கொடிகளும் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.

Sri Temasek வளாகத்தில், இன்றும் நாளையும், குடும்பத்தினருக்கான தனிப்பட்ட துக்க அனுசரிப்பாக இருக்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Mon Mar 23, 2015 12:34 pm

திரு லீ குவான் இயூ மறைவு - உலகத் தலைவர்கள் அனுதாபம்


சிங்கப்பூர்: திரு லீ குவான் இயூவுக்கு, வெளிநாட்டுத் தலைவர்கள் புகழாரம் சூட்டியிருக்கின்றனர்.

அதிபர் ஒபாமா
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, திரு லீ-யின் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.திரு லீயின் மதிநுட்பத்தைப் பாராட்டுவதாகத் திரு ஒபாமா கூறினார். 

பான் கீ மூன்
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் பான் கீ முன், திரு லீக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.மிகவும் ஊக்கமளிக்கும் ஆசியத் தலைவர்களில் ஒருவராகத் திரு லீ, தொடர்ந்து போற்றப்படுவார் என்றார் திரு பான்.

நஜிப் ரசாக்
மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், பிரதமர் திரு லீ சியன் லுாங்கிற்கு அனுதாபச் செய்தி அனுப்பியிருக்கிறார். தந்தையின் மறைவு குறித்து வருத்தம் அடைவதாக பிரதமரிடம் அவர் முகநூல் வழி தெரிவித்திருக்கிறார். மலேசியர்களின் சார்பில் சிங்கப்பூர் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக திரு நஜிப் ரசாக் கூறியிருக்கிறார். திரு லீ குவான் இயூவின் சாதனைகள் மகத்தானவை, அவை என்றும் நினைவிலிருக்கும் என்பது உறுதி என்று கூறியிருக்கிறார் மலேசியப் பிரதமர்.

புருணை சுல்தான் 
புருணை சுல்தான் Hassanal Bolkiah திரு. லீ குவான் இயூ, எடுத்துக்காட்டாய் திகழ்ந்த, மக்களைக் கவர்ந்த தலைவர் என்று புகழாரம்  சூட்டியுள்ளார்.திரு. லீ குவான் இயூவின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை அவர் தெரிவித்துக்கொண்டார்.   திரு.லீ , தமக்கு மிக நெருக்கமாய் இருந்தோடு, குடும்ப நண்பராகவும் திகழ்ந்ததாக அவர் சொன்னார். திரு லீயின்  மறைவு தமக்கும், தம் குடும்பத்தாருக்கும் பேரிழப்பு  புருணை சுல்தான் கூறியுள்ளார்.

பிலிப்பீன்ஸ் அதிபர் அக்கினோ
பிலிப்பின்ஸ் அதிபர் பெனிக்னோ அக்கினோ, திரு.லீ குவான் இயூவின் மறைவு குறித்து  பிரதமர் லீ சியான் லூங்கிற்கு தம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். சிங்கப்பூரர்களைப் போன்று பிலிப்பின்சும் திரு லீ குவான் இயூவின் மறைவு குறித்து துக்கமடைவதாகவும் சிங்கப்பூரை உருவாக்கிய தந்தை என அழைக்கப்படும் ஒரு ராஜதந்திரிக்கு மரியாதை செலுத்துவதில்  பிலிப்பின்ஸ் மக்களும் சேர்ந்துகொள்வதாகவும் அதிபரின் அலுவலகம் தெரிவித்தது.

நரேந்திர மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பிரதமர் லீக்கு அனுதாபச் செய்தி அனுப்பியுள்ளார். திரு லீ குவான் இயூ, தலைவர்களில் சிங்கம் என்று அவர் தமது அ.னுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். திரு லீ குவான் இயூவின் வாழ்க்கை அனைவருக்கும் படிப்பினையாக அமையும். அவரின் மறைவு மிகுந்த கவலையளிப்பதாக திரு மோடி தெரிவித்துள்ளார். திரு லீ குவான் இயூவின் குடும்பத்தினருக்கும் சிங்கப்பூர் மக்களுக்கும் தமது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாக திரு மோடி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியப் பிரதமர்
ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் (Tony Abbott), தமது அரசாங்கம், தமது நாட்டு-மக்கள் சார்பில், திரு லீ-யின் குடும்பத்தினருக்கும், சிங்கப்பூரர்களுக்கும் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த வட்டாரத்தின் மிகப் பெரிய மனிதர் ஒருவரின் மறைவுக்காக ஆஸ்திரேலியா இன்று துக்கம் அனுசரிப்பதாகத் திரு அபோட்  சொன்னார்.
திரு லீ-யின் தொலைநோக்குப் பார்வை காரணமாக, சிங்கப்பூர், உலகின் மிக வெற்றிகரமான நாடுகளில் ஒன்றாகத் திகழ்வதாய், ஆஸ்திரேலியப் பிரதமர் திரு. அபோட் குறிப்பிட்டார்.

நியூசிலந்து பிரதமர்
திரு லீ-யின் துணிச்சல், மனத் திண்மை, கடப்பாடு, குணம், ஆற்றல் ஆகியவை, அவரை மாபெரும் தலைவராக்கி இருப்பதாகவும், அவர் சிங்கப்பூரர்களின் மரியாதையை மட்டுமல்ல, அனைத்துலக ரீதியிலும் மரியாதையைப் பெற்றிருப்பதாக நியூசிலந்துப் பிரதமர் John Key கூறி, அனுதாபம் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

ஜார்ஜ் புஷ்
திரு லீ, ஊழலற்ற முறையில், திறம்பட்ட தலைமைத்துவத்தின் மூலம், சிங்கப்பூரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் George H.W. Bush கூறினார். 

இந்தோனேசியா
திரு.லீ குவான் இயூ, ஒரு பெரும் தலைவர் மட்டுமல்ல சிறந்த  ராஜதந்திரி என்று   இந்தோனேசியா புகழாரம் சூட்டியுள்ளது. இந்த இக்கட்டான காலத்தைக் கடந்து சென்று, மக்களின் தேசிய  விருப்பங்களோடு சிங்கப்பூர் தொடர்ந்து வளர்ச்சி காணும் என்று இந்தோனேசியாவும அதன் மக்களும் நம்புகின்றனர்  என்று இந்தோனேசிய வெளியுறவு அமைச்சு அதன் அறிக்கையில் தெரிவித்தது.  திரு. லீயின் மறைவு குறித்து, இந்தோனேசிய வெளியுறவு அமைச்சு, சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத்  தெரிவித்துக்கொண்டது

சீனா
திரு. லீ குவான் இயூவின் மறைவு குறித்து, பிரதமர் லீ சியென் லூங்கிற்கு சீன வெளியுறவு அமைச்சு அதன் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளது. ஆசியா- மீது தனித்தன்மை வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர், திரு லீ குவான் இயூ என்று ச்சீன வெளியுறவு அமைச்சின் அறிக்கை சொன்னது.  
கிழக்கத்தியப் பண்புகளோடு அனைத்துலகக் கண்ணோட்டத்தையும் உள்ளடக்கிய உத்திகளைக் கொண்டவர் திரு லீ என்றும் அறிக்கை குறிப்பிட்டது. சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்பு உறவைத் தோற்றுவித்தவர் திரு லீ.  இரு நாடுகளின் மேம்பாட்டிற்கும் அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களித்திருப்பதாகக் கூறியது சீனா
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by M.Saranya on Mon Mar 23, 2015 1:58 pm

ஆழ்ந்த இரங்கல்கள் ........
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Mon Mar 23, 2015 3:41 pm


‘ஓங்கி ஒலித்த குரல்’ அடங்கிவிட்டது; லீ குவான் மறைவிற்கு வைகோ இரங்கல்!

சிங்கப்பூரின் தேசத்தந்தை லீ குவான் யூ மறைவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு ஈழத்தமிழர்களுக்கும், சிங்கப்பூர் தமிழர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார் வைகோ.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “தென்கிழக்கு ஆசியாவில் சின்னஞ்சிறு தேசமான சிங்கப்பூரை உலகமே வியந்து பார்க்கும் உன்னத நிலைக்கு உயர்த்தியவரும், ‘சிங்கப்பூரின் தந்தை’ என அழைக்கப்பட்டவருமான அந்நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ மறைந்த செய்தி, அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது”.

“ஒரு நாட்டின் அதிபர் எப்படி மக்கள் சேவை புரிய வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் லீ குவான் யூ. பிரதமர் பதவி வகித்தபோதும், அந்நாட்டின் முதல் ஊழியன் என்ற உணர்வுடன் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி விண்முட்டும் புகழ்பெற்ற லீ குவான், அங்கு வாழும் தமிழர்கள் மீது எல்லையற்ற அன்பு கொண்டு அவர்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தார்”.

“இலங்கை தீவில் கொடுந்துயருக்கு ஆளாகிய ஈழத்தமிழர்களின் நியாயத்தை உணர்ந்து சிங்கள அரசுக்கும், ராஜபக்சேவுக்கும் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்தார். தமிழ் இன அழிப்பின் வெளிப்பாடு என்பதையும் உலகத்துக்குச் சொன்னார்”.

“சிங்கள அரசு, ஈழத்தமிழர்களை ஒருபோதும் அழிக்க முடியாது என்றும், தமிழர்கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள் என்பதனால் தான் இன அழிப்புக்கு எதிராக விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் நேர்ந்தது என்றும் உலக நாடுகளில் வெளிப்படையாக சொன்ன ஒரே ஒரு அதிபர் லீ குவான் மட்டும்தான்”.

“தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்த அந்தக் குரல் அடங்கிவிட்டது! அவர் மறைந்துவிட்டார்! என்பது தாங்கமுடியாத துக்கத்தைத் தருகிறது. ஈழத்தமிழர்களும், சிங்கப்பூர் தமிழர்களும், தாய்த் தமிழகம் உள்ளிட்ட தரணி வாழ் தமிழர்களும்,

நன்றி உணர்வோடு அந்த மாபெரும் தலைவர் லீ குவான் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்தும் இந்த நேரத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். லீ குவான் அவர்களின் புகழ் காலத்தால் அழியாது நிலைத்து இருக்கும்” என வைகோ தனது இரங்களைத் தெரிவித்தார்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Mon Mar 23, 2015 3:49 pm

சுத்தத்தின் அவசியத்தை உயர்த்திய லீசிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்படும் லீ க்வான் யூ, சுத்தத்தை அதிகம் விரும்பியவர். அவர் பிரதமராக பதவி வகித்த காலங்களில், ஆயிரக்கணக்கான தொண்டு ஊழியர்களுடன் தானும் இணைந்து, சிங்கப்பூர் நகரத்தின் தெருக்களை கூட்டி சுத்தம் செய்தார்.

இதற்கு பின்னரே, சிங்கப்பூர் மக்கள் சுத்தம் குறித்த அவசியத்தை உணரத் துவங்கினர். இன்று, சிங்கப்பூர் நகரம் தூய்மையாக இருப்பதன் பின்னணி இதுதான்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by M.Saranya on Mon Mar 23, 2015 4:06 pm

எத்தகைய உயர்ந்த மனிதர் !!!!!!
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Mon Mar 23, 2015 5:14 pm

லீ க்வான் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு: ராமதாஸ்

'சிங்கப்பூர் தந்தை' லீ க்வான் மறைவு தமிழர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது இரங்கல் செய்தியில், "சிங்கப்பூரை உருவாக்கியவரும், தமது வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை அந்நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்தவருமான லீ குவான் யூ காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

சிங்கப்பூர் நாட்டின் பிரதமராக 31 ஆண்டுகள் பதவி வகித்தவர்; அதற்குப் பிறகும் இவர் கை காட்டுபவர் தான் அந்நாட்டின் பிரதமராக முடியும் என்ற நிலை நிலவுகிறது. ஆனால், அவ்வளவு செல்வாக்கு இருந்தும் எளிமையின் சின்னமாக திகழ்ந்தவர். சிறிய நாடான சிங்கப்பூரை அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்காத வகையில் உலகின் சந்தையாக மாற்றி மக்களின் வளமான வாழ்க்கைக்கு வழி வகுத்தவர். சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பில் அக்கறை காட்டியவர். தமிழை சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவித்து மரியாதை செய்தவர்.

ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டவர். ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய இந்திய ஆட்சியாளர்கள் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை தீவிரவாத ஒழிப்பு என்று வர்ணித்த நிலையில், அது இனப்படுகொலை என்று துணிச்சலுடன் கூறிய தலைவர் லீ குவான் யூ மட்டுமே. அதுமட்டுமின்றி, ‘‘இலங்கை அதிபர் இராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி; அவரைத் திருத்த முடியாது. ஈழத் தமிழர்களை சிங்களத்தால் வீழ்த்தி விட முடியாது. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருக்க முடியாது; அந்நாட்டு பிரச்சினைக்கு தமிழீழம் தான் தீர்வு’’ என பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியவர். பிறப்பால் தமிழர் இல்லாவிட்டாலும் தமிழர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த லீ'யின் மறைவு தமிழர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும்.

அவரை இழந்து வாடும் சிங்கப்பூர் மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர் மறைந்தாலும் அவரது புகழும், சாதனைகளும் என்றென்றும் வாழும்" என கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by T.N.Balasubramanian on Mon Mar 23, 2015 5:39 pm

இன்றைய சிங்கப்பூர் ஒரு எடுத்துக்காட்டு எனில் ,
அதற்கு மூலக் காரணம் லீ குவான் இயூ என்றால் மிகையாது .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21496
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Mon Mar 23, 2015 5:56 pm

சிங்கப்பூரின் நிஜ நாயகன் லீ குவான் யூ !எதுவுமே இல்லை என்பதிலிருந்து எதுவும் சாத்தியம் என்பதை சாதித்து காட்டிய லீ குவானின் மறைவு சிங்கப்பூர் மக்களிடையே மட்டுமல்லாது, உலக அளவிலும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

லீ குவான் யூ நவீன சிங்கப்பூரைச் செதுக்கியவர். சிங்கப்பூர் ராபல்ஸ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது. பல்வேறு தீவுகளைக்கொண்ட சில நூறு சதுரகிலோமீட்டர்கள் கொண்ட சிறிய தேசம் அது. ராபல்ஸ் கட்டுப்பாடுகள் அற்ற துறைமுகமாகச் சிங்கப்பூரை மாற்றினார். இங்கிலாந்து ஆதிக்கத்தின் கீழ் அப்பகுதி ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்வரை இருந்தது. லீ குவான் யூ நான்கு தேசியகீதங்கள் பாடுகிற அளவுக்கு நாட்டில் இந்த ஐம்பது வருட காலத்துக்குள் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன.

லீ, செல்வம் வளம் மிகுந்த பாபாக்கள் என்று அழைக்கப்படும் சீனப் பாரம்பரியம் கொண்ட தொழிற்துறையில் இயங்குகிற குடும்பத்தில் வளர்ந்தவர். தங்கத்தட்டில் ஏந்திப் பிள்ளையைக் கொண்டாடினார்கள். அவரின் இளம்வயது முதலாளித்துவக் காதல், பொருளாதார வீழ்ச்சியின்பொழுது விழுந்தது. குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருந்தது. அம்மா எண்ணற்ற வேலைகள் செய்து குடும்பத்தைக் கரை சேர்த்தார்.கேம்ப்ரிட்ஜில் படிக்கப்போன லீக்கு ஆங்கிலேயர்களின் நிறவெறி அதிர்ச்சியை அதிகரித்தது. பட்டங்கள் பெற்று நாடு திரும்பிய சூழலில், உலகப்போரில் ஜப்பான், பிரிட்டனைப் பந்தாடியது அவருக்கு இங்கிலாந்து மீதிருந்த காதலை அடித்து நொறுக்கியது.

ஜப்பானுக்குப் போரில் வேலை பார்த்து அவர் தன்னைக் காப்பாற்றிக்கொண்டார். சோசியலிசம் மீதான காதல் அரும்பி மறைந்திருந்தது.இங்கிலாந்து உலகப்போருக்குப் பின்னர் மீண்டும் சிங்கப்பூரைப் பிடித்துக்கொண்டது. PAP கட்சியை, தோழர்களோடு இணைந்து ஆரம்பித்தார் அவர். டோய்ன்பீ-யின் நூல்களை வாசித்தது பெரிய மாற்றத்தை அவருக்குள் உண்டாக்கியது. படைப்பாற்றல் கொண்ட சிறுபான்மையினரே நாட்டை மாற்றியமைப்பார்கள் என்கிற சிந்தனை ஆழமாக அவருக்குள் வேர்விட்டிருந்தது. ஜெர்மனி உலகப்போருக்குப் பின்னர் வலிமையான அரசாங்கத்தால் படிப்படியாக அற்புதமாக எழுந்தது அவரின் எண்ணத்தை வலுப்படுத்தியது.

முதல் முதலாகப் பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது நடந்த தேர்தலில் அவரின் கட்சி ஒப்புக்கு போட்டியிட்டு நான்கு தொகுதிகளை வென்றது. மலேசியாவின் பிரதமர் எங்களோடு நீங்கள் இணையுங்கள் என்று அழைத்தார். லீ அதை முன் வைத்து, தேர்தலில் பிரிட்டனுக்கு எதிராக விடுதலை மற்றும் மலேசிய இணைப்புக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். தேர்தலில் கட்சி அமோக வெற்றிப் பெற்றது. மலேசியாவுடன் இணைந்தபிறகு சிக்கல்கள் ஆரம்பித்தன.இயற்கை வளங்களோ, தங்களைப்போல ஒரே இனமாகவோ இல்லாத சிங்கப்பூர் மக்களை ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் எழுந்தன.ஒரு கட்டத்தில் பெரும் கலவரங்கள் வெடித்தன. சிங்கப்பூர் தனிதேசமாக உருவான பொழுது அது நீடித்து நிற்காது என்பதே பலரின் பார்வையாக இருந்தது. "பெருத்த துயரத்தோடு தான் இந்தப் பிரிவை நான் ஏற்றுக்கொள்கிறேன் !" என்று சொல்லிவிட்டு லீ சிலகாலம் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார். பின்னர் எழுந்து வந்தார்.லீ தனக்கென்று பாதைகள் வகுத்துக்கொண்டார்.

ஜனநாயகம் என்றெல்லாம் பெரிதாக வாய்த் திறக்கக்கூடாது. தேசத்தின் தேவைகள் முக்கியம். மூன்றுவகையாக மக்களை வடிவமைத்தார். நல்ல தலைவர்கள் மேலே இருப்பார்கள்,சிறந்த அதிகார வட்டம் அடுத்து இருக்கும்,மீதமிருக்கும் மக்கள் சுய மற்றும் சமூகக் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ளவேண்டும். தேசம் உருப்படும் என்பது அவரின் பார்வையாக இருந்தது. கூடவே எப்பொழுதும் தன்னைச் சீனா சாப்பிடலாம் என்கிற அச்சம்துளிர்க்கவே வலுவான ராணுவத்தை இஸ்ரேலின் உதவியோடு அமைத்துக்கொண்டார்கள். அரசு செய்கிற செலவில் கால்வாசி ராணுவம்
சார்ந்தே அமைந்திருந்தது,

சான் பிரான்சிஸ்கோ பங்குச்சந்தை மூடுவதற்கும், ஜெர்மனியின் ஜூரிச் பங்குச்சந்தை திறப்பதற்கும் இடையே அரைநாள் அளவுக்கு இடைவெளி இருப்பதை நெதர்லாந்தில் இருந்து பொருளாதார ஆலோசனை சொல்ல வந்த ஆல்பர்ட் வின்செமியஸ் கவனித்துச் சொன்னார். இருபத்திநான்கு மணிநேரமும் இயங்கும் பங்குச்சந்தை ஆரம்பிக்கப்பட்டது. பெரிய தொல்லைகள் தராமல் தொழில் தொடங்க கதவுகள் திறந்து விடப்பட்டன. வரி விதிப்பு அளவுகள் குறைவாக இருந்து, முதலீட்டாளர்களின் சொர்க்கமானது சிங்கப்பூர்

பல பில்லியன் டாலர்களை இருக்கிற பத்துக்கும் குறைவான பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக்குகள் ஆகியவற்றுக்கு ஒதுக்கினார். பள்ளிகளில் கல்வி அரசு கவனித்து வழங்குவதாக மாறியது. வெளிநாட்டில் இருப்பவர்கள் படிக்க வந்தால் கிட்டத்தட்ட இலவசம் என்று கூவிக்கூவி அழைத்தார்கள். படித்த பின்பு இங்கேயே நிரந்தரமாகத் தங்கிக்கொள்ளும் வாய்ப்பு மற்றும் மூன்று ஆண்டுகள் கட்டாய வேலை ஒப்பந்தம் காத்திருக்கும். இப்படி உலகம்முழுக்கவும் இருந்து சிறந்த திறமைகள் வந்து சேர்ந்தன. சேரிகள் புதிய கட்டடத்திட்டங்களின் மூலம் காலி செய்யப்பட்டன. வசதியான வீடுகள்கட்டித்தரப்பட்டன. இலவசம் இல்லையென்றாலும் படிப்படியாக மக்களிடம் இருந்து அவர்களின் வருமானத்தில் இருந்துபோட்ட பணம் மீட்டெடுக்கப்பட்டது.

சின்னத் தேசம் என்பதும், ஏற்றுமதியை முன்னிலைப்படுத்தியும் நகர்ந்ததால் ரோட்டில் கார்கள் ஓடத் தடைகள் சுற்றி வளைத்து விதிக்கப்பட்டன. பத்து சதவிகித நிலப்பரப்பு இயற்கைப் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டது. உலகம் முழுக்க இருந்து நாட்டுக்குள் நடைபெற்றபெரும்பாலான தொழில்களை அரசாங்கம் கவனித்துக்கொண்டாலும், அவற்றின் மேலாண்மையைச் செயல்படுத்த எண்ணற்ற சுதந்திரம் கொண்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். கட்டாயப் PF திட்டத்தின் கீழ் எல்லாச் சம்பளக்காரர்களின் சேமிப்பில் ஐம்பது சதவிகிதம் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் நோக்கி செலுத்தப்பட்டது.கேள்விகள் கேட்கிற எதிர்க்கட்சியினர், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை என்று குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் கேள்விகள் கேட்காமல் சிறை வரவேற்கும். நீதி என்றெல்லாம் பேச முடியாது. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். சீனப்பாரம்பரியம் கொண்டவர்கள்தான் எண்பது சதவிகிதத்துக்கும் மேலே கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கிறார்கள். கல்லூரிகளிலும் பெரும்பாலான உதவித்தொகைகள் அவர்களுக்கே சென்று சேர்கிறது. பாதி ஜனநாயகம் கொண்டிருக்கும் இந்தத் தேசத்தில் ஆளுங்கட்சியான லீயின் கட்சியை எதிர்த்து பெரும்பாலும் வேட்பாளர்கள் நிற்க மாட்டார்கள்.

இப்பொழுது லீயின் மகன் கோலோச்சுகிறார். நாட்டின் பரப்பளவு லீ குவான் யூ போட்ட பாதையில் விரிந்து கொண்டே செல்கிறது. உலகிலேயே வர்த்தகம் செய்ய விரும்புகிறவர்களின் சொர்க்க பூமியாகச் சிங்கப்பூர் இருக்கிறது. அதற்காகத் தியாகங்கள் சிலவற்றை மக்களைச் செய்யவைத்த அதிகார சூத்திரதாரியான லீ, ஊழலுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை வகுத்துச் செயல்படுத்தியதும் நல்ல பலன் தந்தது. அவர் தண்ணீருக்குக் கூடப் பக்கத்துத் தேசத்தை நம்பிக்கொண்டிருந்த மண்ணைத் தலைநிமிர்ந்து உலக வல்லரசுகளில் ஒன்றாக மாற்றிய திருப்தியோடு விடை பெற்றுக்கொண்டார்.

"ஆசியாவின் இருண்ட மூலையில் இருக்கும் பாவப்பட்ட சிறிய சந்தை !" எனப்பட்ட சிங்கப்பூர், 'பொருளாதாரப்புலி' என்கிற பெயரை அவரின் பணிகளால் பெற்றது. எதுவுமே இல்லை என்பதிலிருந்து எதுவும் சாத்தியம் என்பதைச் சாதித்த சிங்கப்பூரின் நிஜ நாயகன் அவர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Mon Mar 23, 2015 5:57 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Mon Mar 23, 2015 5:59 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Mon Mar 23, 2015 6:08 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Mon Mar 23, 2015 6:37 pm

காலத்தை வென்றவர் லீ...: காவியம் ஆனவர் லீ...

சிங்கப்பூர் : மக்கள் நலனையும், நாட்டின் உயர்வையும், சுகாதாரத்தையும் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்த மாபெரும் தலைவர் ; நவீன சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் லீ க்வான் யூ. இது போன்ற தலைவர் தங்களுக்கும், தங்கள் நாட்டிற்கும் கிடைக்க மாட்டாரா என உலக மக்களை ஏங்க வைத்தவர். தனது வாழ்நாளில் உலக நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் லீ பேசிய சிறந்த மேடைப் பேச்சுகள் மற்றும் பேட்டிகளில் இருந்து எடுக்கப்பட்ட துளிகள்:

" மனிதர்கள் அனைவரும் சமம். அனைத்து மதங்களும், அரசியல் கொள்கையாளர்களும் கூறுவதும் இதனைத் தான். கட்சி பேதங்கள், மதங்கள், கொள்கைகளின் அடிப்படையில் மக்களை வேறுபடுத்தி பார்க்காதீர்கள். அவ்வாறு செய்யாவிட்டால் அந்நாடு அழிவை சந்திக்கும்.

சிங்கப்பூரில் இருக்கும் அமெரிக்க பத்திரிக்கையாளர்களை நாங்கள் மதிக்கிறோம். சிங்கப்பூர் தலைவர்கள் குறித்து அவர்கள் கூறும் கருத்துக்களையும் வரவேற்கிறோம். சிங்கப்பூரைப் பற்றி வெளிநாட்டிவர் என்ன படிக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். சிங்கப்பூரில் இருக்கும் வெளிநாட்டு பத்திரிகைகளையும் நாங்கள் நேசிக்கிறோம். ஆனால் அமெரிக்க பத்திரிகைகள் சிங்கப்பூரின் ஆட்சி அதிகாரங்களில் தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம். அமெரிக்க பத்திரிகைகள் அமெரிக்காவை ஆளலாம்.

1959 முதல் 7 பொதுத் தேர்தல்களை சந்தித்துள்ளேன். சிங்கப்பூரை சிறப்பாக மாற்ற நான் செய்துள்ள திட்டங்களே, சிங்கப்பூர் மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சான்று". இவை பல்வேறு காலகட்டங்களில் அவர் பேசியவை.

லீ ஒரு சர்வாதிகாரி, அடக்குமுறையாளர் என பலரும் விமர்சித்து வந்த வேளையில் அதற்கு அவர் அளித்த பதில்:

''நீங்கள் சிங்கப்பூரில் நல்லாட்சி நடத்த வேண்டுமானால் இரும்பு கரம் கொண்டு செயல்பட வேண்டும். மற்றவற்றை தூக்கி எறியுங்கள். இது சீட்டுக்கட்டு விளையாட்டல்ல. இதில் உங்கள் வாழ்க்கையும் என் வாழ்க்கையும் அடங்கி உள்ளது. நமது மொத்த வாழ்க்கையும் சேர்ந்து உருவானது தான் இந்த கட்டடம். இதற்கு மற்றவர்கள் பொறுப்பேற்க முடியாது.

மக்களின் நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரமே எங்களின் முக்கிய நோக்கம். அடுத்தது ஜனநாயக நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள். அதனை காலத்திற்கு தகுந்தாற் போல் மாற்ற வேண்டும். மீடியாக்களின் விமர்சனத்திற்கும் மக்களின் எண்ணங்களுக்கும் ஏற்றவாறு நீங்கள் ஆடிக் கொண்டிருந்தால் நல்ல தலைவனாக இருக்க முடியாது. புயல் எந்த திசையில் அடித்தாலும் அதனை சமாளிக்கும் திறன் வேண்டும். அதன் போக்கில் செல்வது திறமையல்ல.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளும் கருத்து சுதந்திரம், கருத்து உரிமை என்ற பெயரில் தங்கள் நாட்டு தலைவர்களை கேலி செய்து கார்ட்டூன்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால் சிங்கப்பூரில் அப்படி கிடையாது. தலைவர்களை அவர்கள் மதிக்கிறார்கள். தலைவர்களை கேலி செய்வதை அனுமதித்தால் அவர்களின் ஆணைக்கு அங்கு மதிப்பு கிடைப்பது கடினம்.

உங்களைச் சுற்றி இருப்பவர்கள் யார், நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள், எப்படி பேசுகிறீர்கள், என்ன பேசுகிறீர்கள், எங்கு பேசுகிறீர்கள், என்ன மொழி பயன்படுத்துகிறீர்கள் என்பன போன்ற உள்ளார்ந்த தேடல்களை தீவிரமாக மேற்கொள்ளாவிட்டால், நாம் பொருளாதார வளர்ச்சி காண முடியாது. நாம் இன்று இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது'' என்றார்.

உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்டவர் லீ. அவரிடம் புகைப்பழக்கம், குடிப்பழக்கம் போன்றவை கிடையாது. தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டவர். இது தான் தனது உற்சாகத்தின் ரகசியம் எனவும் அவர் பல முறை கூறி உள்ளார்.

தான் எவ்வாறு சுத்தமாக இருக்க வேண்டும் என கருதுவாரோ அதே அளவிற்கு சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்பியவர் லீ. அதற்கான நடவடிக்கைகளில் தானே நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்டார். அதில் வெற்றியும் கண்டு, இன்றைய தூய்மை நகரமாக சிங்கப்பூரை மாற்றி காட்டி உள்ளார்.

அது குறித்து அவர் ஒருமுறை மேடையில் பேசிய போது, "நான் மரணப்படுக்கையில் இருந்தால் கூட என்னைச் சுற்றி அசுத்தம் இருப்பதை உணர்ந்தால் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்து கொண்டு மீண்டும் எழுந்து வருவேன்" என சுத்தத்தை உயிர்மூச்சாக எண்ணி முழங்கிய, மகத்தான தலைவர் லீ.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Wed Mar 25, 2015 12:02 pm


லீ குவான் யூ இறுதிச்சடங்கில் கலந்துகொள்கிறார் மோடி!

modiபுதுடெல்லி, மார்ச் 25 – சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ குவான் யூ இறுதிச்சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். நிமோனியா காய்ச்சலால் லீ குவான் 91 வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அவரது இறுதிச்சடங்கு வரும் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. லீ குவான் இறுதிச்சடங்கில், பிரதமர் மோடி கலந்துகொள்வார் என வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று முன்தினம் பிரதமர் மோடி வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், “சிங்கப்பூர் தந்தையும் முன்னாள் பிரதமருமான லீ குவான் யூ மரணமடைந்தது மிகவும் வேதனை அளிக்கும் தருணம்”.

“தொலைநோக்குப் பார்வையுடன் தலைவர்கள் மத்தியில் சிங்கமாகத் திகழ்ந்தவர். லீயின் வாழ்க்கை நமக்கு நிறைய பாடங்களை அளிப்பதாக இருக்கிறது. அவரது இழப்பு வருத்தமளிக்கிறது”.

“லீயின் குடும்பத்தினருக்கும் அம்மக்களுக்கும் நமது பிரார்த்தனை எப்போதும் உடனிருக்கும். லீயின் ஆன்மா சாந்தியடையட்டும்” என்று தெரிவித்திருந்தார் மோடி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Wed Mar 25, 2015 12:04 pm

லீ குவான் இயூ மறைவு: உலகத் தலைவர்கள் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டு அஞ்சலி (படத்தொகுப்பு)

சிங்கப்பூர், மார்ச் 25 – மறைந்த சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவிற்கு உலகத்தலைவர்கள் பலர், அந்தந்த நாட்டில் அமைந்திருக்கும் சிங்கப்பூர் தூதரகத்திற்கு சென்று இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டு தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.


 (மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், கோலாலம்பூரில் அமைந்திருக்கும் சிங்கப்பூர் தூதரகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.)(தென்கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் யங் பியங் சே, சியோலில் அமைந்திருக்கும் சிங்கப்பூர் தூதரகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.)(அமெரிக்க பொதுச்செயலாளர் பான் கீ மூன், நியூயார்க்கில் அமைந்திருக்கும் சிங்கப்பூர் தூதரகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.)(ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே, டோக்கியோவில் அமைந்திருக்கும் சிங்கப்பூர் தூதரகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.)(சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன், சிங்கப்பூர் இஸ்தானா அதிபர் மாளிகையில் வைக்கப்பட்டிருக்கும் லீ குவான் இயூ நல்லுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.)
(சிங்கப்பூரின் நடப்பு அதிபர் டோனி டான் கெங், தனது மனைவியுடன் சிங்கப்பூர் நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.)


மறைந்த சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் இயூவின் இறுதிச் சடங்கில் உலகத் தலைவர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கலாசார மண்டபத்தில் நிகழும் இச்சடங்கில் நேரடியாகக் கலந்துகொள்ள உலகத் தலைவர்கள் தங்களது பயணத்தை உறுதிசெய்து வருகின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Wed Mar 25, 2015 5:12 pm

தமிழர்கள் மீது தனிப்பாசம் கொண்ட லீ குவான் யூ

தற்போது சிங்கப்பூர் பிரதமராக லீயின் மூத்த மகன் லீசியன் லூங் இருக்கிறார். லீயின் வாரிசு என்பதால் எளிதில் சியனுக்கு பிரதமர் அரியணை கிடைத்திடவில்லை. ஹார்வர்டு பல்கலைகழகத்தில் முதுகலைபட்டம் பெற்று 13 ஆண்டுகள் ராணுவத்தில் பயிற்சி பெற்ற பிறகு தான் 1990–ல் துணை பிரதமர் ஆனார். 14 ஆண்டுகள் கழித்து 2004–ல் பிரதமர் ஆனார்.

நடிகர் ரஜினிகாந்திடம் டைரக்டர் பாலசந்தர் ஒருமுறை உனக்கு பிடித்த தலைவர் யார்? என்று கேட்ட போது டக் என்று சொன்னார். ‘எனக்கு பிடித்த தலைவர் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ என்று.

தமிழர்கள் மீது லீ தனிப்பாசம் கொண்டவர். இலங்கை தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இலங்கை கட்டாயம் ஒரு சந்தோசமான நாடாக இருக்க வாய்ப்பில்லை. யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்களுக்கு இழைக்கப்படும். அநீதியை பொறுக்க முடியவில்லை. இலங்கையில் சிங்களர்கள் இருந்த காலம் தொட்டு தமிழர்களும் இருந்து வருகிறார்கள். அந்த நிலப்பரப்பில் இரு இனத்தவர்களுக்கும் சம உரிமை உண்டு. ஆனால் திறமையில் தமிழர்களைவிட பின் தங்கிய சிங்களர்கள் தாழ்வு மனப்பான்மையால் தமிழர்களை கொன்று வருகிறார்கள். அதை எதிர்த்து ஈழத் தமிழர்கள் தொடுத்த போர் என்னை பொறுத்தவரை நியாய மானதே.

நான் ராஜபக்சேவின் சில பிரசாரங்களையும், மேடை பேச்சுக்களையும் கேட்டிருக்கிறேன். அதையெல்லாம் வைத்து பார்க்கும் போது அவர் ஒரு சிங்கள வெறியர் என்றுதான் தோன்றுகிறது. வெற்றிக்காக எதையும் துணிந்து செய்யக்கூடியவர் என்று புரிகிறது.

இந்த போரில் தமிழர்களின் தோல்வி தற்காலிகமானது. அவர்கள் வெகுநாட்களாக அமைதியாக இருக்கப்போவதில்லை. கூடிய விரைவில் மீண்டு வருவார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Wed Mar 25, 2015 5:14 pm

சிங்கப்பூரை சொர்க்க பூமியாக மாற்றிய மாமனிதர் லீ குவான் யூ

அக்கரை சீமை அழகினிலே மனம் ஆடக்கண்டேனே...
புதுமையிலே மயங்குகிறேன்...
பார்க்க பார்க்க ஆனந்தம்
வேலையின்றி யாரும் இல்லை எங்கும் சந்தோசம்!
வெறும் பேச்சு வெட்டிக்கூட்டம் ஏதும் இல்லை
இந்த ஊரில் சீனர், தமிழர், மலேசிய மக்கள் உறவினர் போல
அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர்!

சொர்க்கம் போல இன்பமும் பெருமையும் வாழும் சிங்கப்பூர்...

– என்று கவிஞர்களையும் வியந்து பாட வைத்த பூமி சிங்கப்பூர்.

அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை குட்டித் தீவாய் காட்சியளித்த இந்த சின்னஞ்சிறு தீவு இன்று உலகமே அண்ணாந்து பார்த்து வியந்து மகிழும் அளவுக்கு சொர்க்க பூமியாக உயர்ந்து நிற்பது எப்படி?

ஒரு மாயா ஜாலக்காரரை போல் உலக தலைவர்கள் பிரமித்து பார்க்கும் இந்த மாபெரும் தலைவர் தான் சிங்கப்பூரை செதுக்கிய சிற்பி.

சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் இந்த சிற்பி உயிரற்ற சிற்பமாய் மாறி இரண்டு நாட்கள் ஆகிவிட்டன.

வழிந்தோடும் கண்ணீரோடு தங்கள் மனம் கவர்ந்த தலைவனுக்கு சிங்கப்பூர் பிரியா விடை கொடுத்து விட்டது.

உலகை சிருஷ்டித்த பிரம்மா போல் சிங்கப்பூரை சிருஷ்டிக்க இந்த மாமனிதர் அரும்பணியாற்றி இருக்கிறார்.

இந்த குட்டித்தீவில் தமிழர்கள், சீனர்கள், மலாய்மக்கள் என்று உலகின் பல நாட்டினரும் பிழைப்புதேடி சென்று குடியேறினார்கள்.

லீ குவான் யூவின் மூதாதையர்களும் சீனத்துகாரர்கள் தான். அந்த பரம்பரையில் 1923–ம் ஆண்டு லீ குவான் யூ பிறந்தார்.

அப்போது ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது சிங்கப்பூர். படிப்பில் படுசுட்டியாக விளங்கிய லீ பள்ளிப்படிப்பை முடித்து பல்கலைக் கழக படிப்புக்கு நுழைந்த போது இரண்டாம் உலகப்போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்ததால் படிப்பு தடைபட்டது. தனது உறவினரின் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் தானே சொந்தமாக ‘பசை’ தயாரித்து விற்பனை செய்தார்.

போரும் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு லீயின் வாழ்க்கை பயணமும் மாறியது. லண்டன் பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்து வக்கீல் ஆனார். சிங்கப்பூர் திரும்பிய லீ மாதம் 500 டாலர் சம்பளத்தில் ஜான் லே காக் என்ற சீனியர் வக்கீலிடம் ஜூனியராக பணியாற்றினார். தொழிற்சங்கம் மற்றும் மாணவர் அமைப்புகளுக்கு ஆலோசகராகவும் இருந்தார்.

1951–ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பிரிட்டீஸ் ஆதரவு கட்சியின் பூத் ஏஜென்டாக பணியாற்றினார். அதுவே அவருக்கு அரசியல் ஆர்வத்தை ஊட்டியது.

அதன் விளைவாக 1954–ல் ‘மக்கள் செயல்கட்சி’ என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். மறு ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் லீயின் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.

1959–ல் நடந்த பொதுத் தேர்தலில் மொத்தம் உள்ள 53 தொகுதிகளில் 43 தொகுதியை லீயின் மக்கள் செயல் கட்சி கைப்பற்றியது. சிங்கப்பூரின் முதல் பிரதமராக அதே ஆண்டு ஜூன் 3–ந்தேதி பதவி ஏற்றார்.

சுய கவுரவத்துடன் தன்னிறைவு பெற்ற நாடாக சிங்கப்பூரை நிர்மாணிக்க திட்டமிட்டு பணியாற்றினார். மலாய் மக்களும், அதிக அளவில் வசித்ததால் சிங்கப்பூரைையும் மலேசியாவையும் இணைத்து ஒரே தேசமாக உருவாக்க பாடுபட்டார். அவரது முயற்சிக்கு ஆதரவும் கிடைத்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Wed Mar 25, 2015 5:14 pm


லீயின் மனம் ஒன்றுபட்ட மலேசியாவை நேசித்தது. ஆனால் அரசியல் சதுரங்கத்தில் முடிவு வேறு விதமாக அமைந்தது. சிங்கப்பூரில் சீன மொழி பேசுபவர்கள் அதிகம் பேர் இருந்தனர்.

அவர்களுக்கும் மலாய் மக்களுக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டது. 23 பேர் கொல்லப்பட்டனர். மக்களை அமைதிப்படுத்த லீ எடுத்த முயற்சிகள் பலனளிக்க வில்லை. எனவே சிங்கப்பூர் – மலேசியா இணைப்பு நெடுநாள் நீடிக்கவில்லை. வேறு வழியின்றி 1965–ல் சிங்கப்பூரை மீண்டும் தனிநாடாக பிரித்து குடியரசு நாடாக அறிவித்தார்.

ஆனால் அவரது மனம் துடித்தது. இது பற்றி அவர் கூறும்போது, ‘சிங்கப்பூரை மலேசியாவில் இருந்து பிரித்து குடியரசு நாடாக நான் அறிவித்தேன். நாடு முழுவதும் பலரும் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். ஆனால் எனக்கோ தூக்கங்கள் இல்லாத இரவுகளாக கழிந்தன. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்’ என்றார்.

அதற்கு காரணம் சிங்கப்பூருக்கு அப்போது வாழ்வா? சாவா? பிரச்சினை. ஒரு தனி நாடாக இயங்குவதற்கு தேவையான இயற்கை வளம், மனித வளம் எதுவும் அங்கு இல்லை. பிரதமராக இருந்து எப்படி நாட்டை உயர்த்துவது என்று சிந்தித்தார்.

கடல் வாணிபத்துக்கு ஏதுவான புவியியல் அமைப்பு மட்டுமே இருந்தது. புலம் பெயர்ந்து வந்த மக்கள் கடுமையாக உழைத்தார்கள். லீயின் அரசும் மக்களின் செயல்பாட்டுக்கு உகந்த அரசாக இருந்தது.

கடுமையான சட்டங்களை கொண்டுவந்தார். சாலையில் எச்சில் உமிழ்ந்தால் பிரம்படி, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் ஜெயில் தண்டனை, போதை பொருட்களை விற்றாலோ, சாப்பிட்டாலோ மரண தண்டனை... இப்படிப்பட்ட சட்டங்களால் நாடே கிடுகிடுத்து போனது. இதனால் லீ பலரது விரோதத்தையும் சம்பாதித்தார். ஆனால் அதை அவர் பொருட்படுத்த வில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு சில தியாகங்களை செய்தாக வேண்டும். இது ஆரம்பத்தில் கசப்பான கஷாயமாகத்தான் தெரியும். காலப்போக்கில் இதன் பலன்களை நீங்கள் கட்டாயம் அனுபவிப்பீர்கள் என்றார்.

50 ஆண்டுகளில் அவர் சொன்னபடியே பலனை பலமடங்கு அனுபவித்து வருகிறார்கள். அதனால் தான் அந்த மக்கள் மனதில் தங்கள் தேசத்தின் தந்தையாக குடிகொண்டிருக்கிறார்.

உலக வரைபடத்தில் ஒரு சின்னஞ்சிறு புள்ளியாக தெரியும் சிங்கப்பூர் இன்று நிர்வாகம், தொழில் நுட்பம், வாணிபம் என்று எல்லாதுறைகளிலும் சாதனை படைத்து உயர்ந்து நிற்கிறது. எல்லா நாடுகளும் ஒரு முன் மாதிரி நாடாக சிங்கப்பூரை எடுத்து சொல்கிறது. ஒருமுறை சிங்கப்பூர் சென்று திரும்பியவர்கள் ஆஹா என்ன அற்புதமான நாடு... என்று மறக்க முடியாத நினைவுகளை சுமந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் பிரதமராக இருந்த லீயின் திட்டமிட்ட செயல்பாடுகள் தான்.

அரசியலுக்கு வருபவர்களிடம் நிறைய தகுதிகளை லீ எதிர்பார்த்தார். ‘சைக்கோமெட்ரிக்’ முறையில் திறமையானவர்களை தேர்வு செய்து அரசியல் கடலில் நீந்த பாராளுமன்ற உறுப்பினர்களாக்குவார். 2 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு எந்த சலுகையும் பதவிகளும் வழங்காமல் தொகுதிகளை பார்க்க சொல்வார். அவர்கள் தொகுதிகளை பராமரிப்பதை வைத்து தான் அவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும்.

இத்தனை சோதனைகளை கடந்து வருபவர்கள் தன்னலமற்ற சேவை மனப்பான்மையுடன் வருவார்கள். அதன் பிறகும் அவர்கள் தடம் மாறாமல் இருக்க... மக்களின் காசுக்கு ஆசைப்படாமல் இருக்க... ஊதியம் பெருமளவில் வழங்கப்படுகிறது. லீயின் நம்பிக்கை வீண்போகவில்லை. அமைச்சர்கள் தேவைக்கு அதிகமான சம்பளம் பெற்றதால் ‘கிம்பளத்தை’ எதிர் பார்ப்பதில்லை.

சுமார் 50 ஆண்டுகள் வரை எதிர்க்கட்சிகள் ஒரு சில தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்க முடிந்தது. தொடர்ந்து 7 முறை கட்சியை வெற்றிபாதையில் பயணிக்க வைத்தவர். 31 ஆண்டுகள் பிரதமராக இருந்து உலகில் நீண்டநாள் பிரதமராக இருந்தவர் என்ற பெயரை பெற்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Wed Mar 25, 2015 5:14 pm


2011–ல் நடந்த தேர்தலில் லீயின் மக்கள் செயல்கட்சி லேசான சறுக்கலை சந்தித்தது. கைவசம் இருந்த முக்கியமான 6 தொகுதிகளை இழந்தது. இந்த சிறு சறுக்கலை பெரிதாக எடுத்துக்கொண்ட லீ சுயபரிசோதனை செய்தார். அப்போது இன்றைய இளைஞர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்த நவீன காலத்து இளைஞர்களின் குரல்களுக்கு செவி சாய்க்கும் சுறுசுறுப்பான அமைச்சர்களையே தங்கள் பிரதிநிதிகளாக எதிர்பார்க்கிறார்கள். எனவே இளைய சமுதாயத்துக்கு வழிவிட்டு நான் அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகி கொள்கிறேன் என்று அறிவித்தார்.

தன்னைப்போன்ற மூத்தவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை தானே முன்னின்று மற்றவர்களுக்கு உணர்த்தினார்.

1990–ல் லீ பிரதமர் பதவியில் இருந்து விலகி அவரது கட்சியை சேர்ந்த கோ சோக் தோங்குவை பிரதமராக நியமித்தார். சிங்கப்பூரை வார்த்தெடுத்த அந்த வாழும் பிரம்மாவை விடுவதற்கு அந்த நாடு விரும்பவில்லை. அவருக்காகவே வழிகாட்டி அமைச்சர் என்ற புதிய இலாகா உருவாக்கப்பட்டது. இந்த பதவியில் 2004 முதல் 2011 வரை செயல்பட்டார்.

சிங்கப்பூரில் பெருகி வந்த மக்கள் தொகை நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகி விடும் என்று குடும்ப கட்டுப்பாடு முறையை நமக்கும் முன்பே அந்த நாட்டில் அவர் அமுல்படுத்தி விட்டார். 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் சலுகைகள் ரத்து என்றார்.

படித்த பெண்களை திருமணம் செய்ய விரும்பாத மனநிலையில் மக்கள் இருந்த காலம் அது. அந்த நிலையை மாற்ற படித்த பெண்களை திருமணம் செய்பவர்களுக்கு அரசு சலுகைகளை அறிவித்தார்.

பொதுவாக குற்றச் செயல்களுக்குத் தான் சட்டத்தில் தண்டனை அதிகம் இருக்கும். ஆனால் லீயோ ஒழுக்ககேடான செயல்களை செய்பவர்களுக்குத் தான் தண்டனை அதிகம் வழங்கினார்.

ஊழல் எல்லா நாடுகளுக்கும் பொதுவானது தான். சிங்கப்பூரிலும் தலை தூக்கியது. ஆனால் அதை ஒழிக்க அவர் எடுத்த நடவடிக்கை கடுமையானது. ஊழலை விசாரிக்க அதிக அதிகாரம் கொண்ட குழுவை அமைத்தார். இந்த குழு தேவைப்பட்டால் யாரையும், விசாரிக்கலாம். எங்கும் சோதனை போடலாம் என்று முழு அதிகாரம் வழங்கினார். அதனால் தலை தூக்கிய ஊழல் தடம் தெரியாமல் போய் விட்டது. இப்படி ஒரு குட்டித்தீவை எல்லோரும் எட்டிப்பார்க்கும் பிரமாண்டமான சிங்கப்பூராக உருவாக்கிய லீ மறைந்து விட்டார். ஆனால் அவரது ஆன்மா சிங்கப்பூரையே சுற்றி சுற்றி வரும்...

அதற்கு அவர் உள்ளம் உதிர்த்த வார்த்தைகளே சாட்சி. ‘‘சிங்கப்பூரை ஆட்சி செய்பவர்கள் எவராக இருந்தாலும் அவரிடத்தில் இரும்பு போன்ற திடம் இருக்க வேண்டும் ஏதோ வந்தோம், சென்றோம் என்று விளையாட்டாக ஆட்சி செய்து விட்டு போக இது ஒன்றும் சீட்டாட்டம் இல்லை.

சிங்கப்பூரை வளர்க்க நான் என்னுடைய மொத்த ஆயுளையும் அர்ப்பணித்து இருக்கிறேன். நான் உயிருடன் இருக்கும் வரையில் என் நாட்டை யாரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஒரு வேளை நான் இறந்த பிறகும் என் நாட்டுக்கு ஏதாவது ஒருவகையில் அச்சுறுத்தல் நேர்ந்தால் கல்லறையில் இருந்தும் எழுந்து வருவேன்” என்பது தான் அந்த வார்த்தைகள்.

சிங்கப்பூர் மண் இருக்கும் வரை இந்த மாமனிதரின் நினைவும் நிலைத்து நிற்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Sat Mar 28, 2015 3:56 pm

லீ குவான் யூ உடலுக்கு 3 லட்சத்திற்கு அதிகமான சிங்கப்பூர் மக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ உடலுக்கு 3 லட்சத்திற்கு அதிகமான சிங்கப்பூர் மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து மக்கள் கூட்டம் அந்நாட்டு பாராளுமன்ற வளாகத்தை நோக்கி படையெடுத்தப்படியே உள்ளனர்.

சிங்கப்பூரின் தந்தை மற்றும் ‘நவீன சிங்கப்பூரின் சிற்பி’ என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ உடல்நலக்குறைவு காரணமாக கடந்த திங்கட்கிழமை காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறுகின்றது. அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 5.5 மில்லியன் (55 லட்சம்) ஆகும். இதில் 3.34 லட்சம் மக்களே சிங்கப்பூர் குடிமக்கள். மற்றவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். இதுவரை 3,30,000 சிங்கப்பூர் மக்கள் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் உடன் வந்து தங்களின் அன்பிற்கு இனிய தலைவருக்கு அஞ்சலி செலுத்தியபடி உள்ளனர். இது அந்த நாட்டு மக்கள் தொகையில் 10 சதவிதம் ஆகும்.

நேற்று மாலை கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தால் மக்களின் பாதுகாப்பு நலன் கருதி அந்நாட்டு பாராளுமன்ற வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது. மீண்டும் இன்று காலை முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக பாராளுமன்ற வளாகம் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஞாயிற்றுக்கிழமையன்று இறுதி சடங்கு நடைபெறயிருப்பதால் பலரினால் இறுதி அஞ்சலி செலுத்த முடியாமல் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய பிரதமர் மோடி உட்பட பல வெளிநாட்டு தலைவர்கள் நாளை நடைபெறும் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Sun Mar 29, 2015 12:14 pm

லீ குவான் யுக்கு இன்று இறுதிச்சடங்கு: மக்களுடன் மழையும் அஞ்சலி.,

சிங்கப்பூர்: நீண்ட காலம் நோய் வாய்ப்பட்டிருந்த சிங்கப்பூர் நிறுவனரான அந்நாட்டு முன்னாள் பிரதமர் லீ குவான் யு (91) இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது. முன்னதாக கடந்த 5 நாட்களாக மக்கள் திரள், திரளாக அணிவகுத்து நின்று நீண்ட நேரம் காத்து கிடந்து தங்களின் அன்பு தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று நடக்கும் இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். கண்ணீருடன் சென்ற மக்களோடு வானமும் மழை பொழிந்தது. தொடர் மழையும் பொருட்படுத்தாமல் மக்கள் அலை, அலையாய் தங்களின் அன்பு தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Sun Mar 29, 2015 12:14 pm

உலகத் தலைவர்கள் பங்கேற்பு

இன்று நடக்கும் இறுதிச்சடங்கில் உலகம் முழுவதும் பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்திய பிரதமர் நரேந்திரமோடி, ஆஸி., பிரதமர் டோனி அப்போட், ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, இந்தோனேஷிய பிரதமர் ஜாக்கோ விதோபா, மியான்மர் அதிபர் திய்ன் செய்ன், தென்கொரிய அதிபர் பார்க் க்யூன், கம்போடிய பிரதமர் ஹூன் சென் , மலேசிய மன்னர் சுல்தான் அப்துல், இஸ்ரேல் அதிபர் ரிவன்ரிவ்லின், சீன துணை அதிபர் லீ யுவான்ஷோ, முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், லாவோஸ் பிரதமர் தான்சிங் தம்மாவாங், வியட்னாம் பிரதமர் நிகியான் தான் டங், கனடா சார்பில் கவர்னர் ஜெனரல் டேவிட் ஜான்சன், கஜகஸ்தான் பிரதமர் கரீம் மாசிமோவ், பிரிட்டன் , நியூஸிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளின் முதன்மை செயலர்கள் , குவான் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum