ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆயுளைத் தீர்மானிக்கும் மெட்டபாலிசம்
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 ayyasamy ram

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 ayyasamy ram

ஆதார் காட்டுங்க....!!
 SK

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 SK

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 SK

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 SK

புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by ayyasamy ram on Mon Mar 23, 2015 8:46 am

First topic message reminder :


-
சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் இயூ
இன்று திங்கட்கிழமை 23.3.2015 அதிகாலை
3.18 மணிக்கு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில்
காலமானார்.

இதனை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
திரு லீ குவான் இயூ நிமோனியா பாதிப்புக்காக
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி
முதல் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டிருந்தார்.

————————————
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35093
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down


Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Sun Mar 29, 2015 12:15 pm

பிரதமர் மோடி புகழாரம்

பிரதமர் மோடி தனது இறுதி மரியாதை செய்தியில்;

எங்களின் எண்ணத்தில் பதிந்தவர் லீ குவான் யு . அவர் எங்களின் மனதில் தாக்கங்களை ஏற்படுத்தியவர். அனைவருக்கும் வீடு, தூய்மை தொடர்பான விஷயத்தில் எங்களின் முன் மாதிரியாக திகழ்ந்தவர். இவருக்கு எனது இதயப்பூர்வ அஞ்சலி .
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Sun Mar 29, 2015 11:19 pm

சிங்கப்பூர் நிறுவனர் லீ குவான் யூ-வின் உடல் தகனம்

சிங்கப்பூரின் முதலாவது பிரதமர் லீ குவான் யூ-வின் உடல் தகனம் செய்யப்பட்டது. வெளிநாட்டுத் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.

சிங்கப்பூரை நிறுவியவர் என்று அறியப்படும் லீ குவான் யூ-வின் இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள், மதத் தலைவர்கள் மற்றும் பன்னாட்டுத் தலைவர்கள் உட்பட பலர் பங்குபெற்றனர்.

கசப்பான உண்மைகளிலிருந்து விலகிச் செல்லாமல் தமது தந்தை சிங்கப்பூரைக் கட்டியெழுப்பினார் என்று லீ குவான் யூவின் இறுதி நிகழ்வில் உரையாற்றிய அவரது மகனும் தற்போதைய பிரதமருமான லீ ஸியென் லூங் புகழாரம் சூட்டினார்.

தமது தந்தை ஒரு போராளியாக இருந்தார் என்றார் லீ ஸியென் லூங். அமைச்சரவை உறுப்பினர்களும் மறைந்த தலைவரின் நண்பர்களும் இறுதி நிகழ்வில் பேசினர்.

ஒரு நிமிடம் மௌன அஞ்சலிக்குப் பின்னர், மிகவும் நெருங்கியவர்கள் மட்டுமே பங்குபெறும் வகையில் அவரது உடல் தகனம் செய்யப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.

சிங்கப்பூரின் பிரதமராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக லீ குவான் இருந்தார் என்றாலும் அடக்குமுறை ஆட்சியை முன்னெடுத்தார் என்று அடிக்கடி விமர்சிக்கப்பட்டவர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Sun Mar 29, 2015 11:22 pm

லீ குவான் இயூ இறுதி ஊர்வலம் – வழிநெடுக மக்கள் வெள்ளம்!


 சிங்கையின் சிற்பி லீ குவான் இயூவின் இறுதி ஊர்வலம் சிங்கப்பூரின் தெருக்களின் வழியாக இன்று பிற்பகல் தொடங்கிய வேளையில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாலைகளின் இரு மருங்கிலும் சிங்கப்பூர் மக்கள் திரண்டனர்.
சாலைகளில் சிங்கப்பூரின் தேசியக் கொடி வரிசையாக தொங்கிக் கொண்டிருக்க, மழைத் தூறலிலும், தங்களின் தலைவனுக்கு, இறுதி மரியாதை தெரிவிக்கவும், ஊர்வலத்தில் பங்கு பெறவும் திரண்டிருந்த மக்கள் வெள்ளம்.
லீ குவான் இயூவிற்கு இறுதி மரியாதை தெரிவிக்கும் சடங்குகளில் கலந்து கொள்ள இன்று சாங்கி விமான நிலையம் வந்தடைந்த தென் கொரிய அதிபர் பார்க் கியூன் ஹாய்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Sun Mar 29, 2015 11:24 pm

லீ குவான் இயூ இறுதிச் சடங்கில் பில் கிளிண்டன், மோடி, ஜோக்கோ, டோனி அப்போட் – உலகத் தலைவர்கள்!


சிங்கப்பூர், மார்ச் 29 – நினைவு தெரிந்து அண்மையக் காலத்தில் எந்த ஒரு நாட்டிலும், எந்த ஒரு உலகத் தலைவருக்காகவும் – அதுவும் இருபதாண்டுகளுக்கு முன்பே தனது பதவியைத் துறந்து விட்ட ஓரு முன்னாள் பிரதமருக்கு – இத்தனை நாடுகளின் தலைவர்கள் ஒன்று திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.


லீ குவான் இயூவின் புகைப்படத்தை ஏந்தி அவரது குடும்ப உறுப்பினர்கள் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் கலாச்சார மையத்திற்குள் கொண்டு வந்தபோது…


ஆம், இன்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் கலாச்சார மைய மண்டபத்திற்குக் கொண்டுவரப்பட்ட சிங்கையின் சிற்பி லீ குவான் இயூவின் நல்லுடல் ஒருபுறம் வைக்கப்பட்டிருந்த நிலையில் – நடைபெற்ற இறுதிச் சடங்குகளில் பத்து முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி உரைகளை ஆற்றிய வேளையில் உலகின் முக்கிய தலைவர்கள் அமர்ந்திருந்து அந்த நிகழ்வுகளில் பங்கு பெற்றார்கள்.

அவர்களில் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட், புருணையின் ஆட்சியாளர் சுல்தான் ஹாசானால் போல்கியா, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக், கம்போடிய பிரதமர் ஹன் சென், கனடாவின் கவர்னர் ஜெனரல் டேவிட் ஜோன்ஸ்டன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தோனிசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, இஸ்ரேலிய அதிபர் ரேவன் ரிவ்லின், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரும் அடங்குவர்.
லீ குவான் இயூவின் நல்லுடல் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் கலாச்சார மையத்திற்குள் கொண்டுவரப்படுகின்றது


இந்த இறுதி அஞ்சலி சடங்குகளில்  மலேசிய மாமன்னர் அப்துல் ஹாலிம் முவாசாம் ஷா, கசக்ஸ்தான் பிரதமர் கரிம் மாசிமோவ், லாவோஸ் பிரதமர் தோங்சிங் தம்மாவோங், மியன்மார் அதிபர் யு தெய்ன் செய்ன், நியூசிலாந்து கவர்னர் ஜெனரல் ஜெர்ரி மாட்பெரே, பிலிப்பைன்ஸ் நாடாளுமன்ற மேல்சபை தலைவர் பிராங்க்ளின் டிரிலோன், சீனா துணை அதிபர் லி யுவான்சாவ், தென் கொரியா அதிபர் பார்க் கியூன் ஹாய், கத்தார் எமிர் ஷேக் தமிம் பின் ஹாமாட் அல் தானி, ரஷியாவின் முதல் துணைப் பிரதமர் இகோர், ஷூவாலோவ், தாய்லாந்து பிரதமர் பிராயுட் சான்-ஓ-சா, வியட்னாம் பிரதமர் ங்குயென் தான் டங், பிரிட்டனின் வெளியுறவு அமைச்சரும் நாடாளுமன்ற கீழ் சபையின் தலைவருமான வில்லியம் ஹேக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சிங்கப்பூரின் முக்கிய நட்புறவு நாடான அமெரிக்கா லீ குவான் இயூவிற்கு மரியாதை தரும் பொருட்டு, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தலைமையிலான குழுவை இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள அனுப்பியுள்ளது.

இத்தனை உலகத் தலைவர்கள் கலந்து கொண்டது சிங்கப்பூருக்கு அந்தத் தலைவர்கள் தரும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும், லீ குவான் இயூ மீது அவர்கள் கொண்டிருந்த அபிமானத்தையும் கௌரவத்தையும் உணர்த்துவதாகவும் அமைந்திருந்தது.
லீ குவான் இயூவின் நல்லுடல் இராணுவ மரியாதையுடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும் காட்சி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Sun Mar 29, 2015 11:27 pm

25 மார்ச் 2015 – அனல் பறக்கும் வெயிலிலும் தங்களின் தலைவனுக்கு இறுதி மரியாதை செலுத்த குடைகளோடு, வரிசை பிடித்துக் காத்திருக்கும் பொதுமக்கள்….
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Sun Mar 29, 2015 11:28 pm

25 மார்ச் 2015 – லீ குவான் இயூவின் நல்லடலைத் தாங்கிய இராணுவ வாகனம் அதிபர் மாளிகையிலிருந்து நாடாளுமன்ற சதுக்கத்திற்கு இராணுவ மரியாதையுடன் செல்லும் காட்சி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Sun Mar 29, 2015 11:28 pm

25 மார்ச் 2015 – இஸ்தானா எனப்படும் அதிபர் மாளிகையில் இருந்து நாடாளுமன்ற சதுக்கத்திற்குக் கொண்டு செல்லப்படும் முன்னர் லீ குவான் இயூவின் நல்லுடல் மீது சிங்கப்பூர் தேசியக் கொடி போர்த்தப்படுகின்றது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Sun Mar 29, 2015 11:29 pm


25 மார்ச் 2015 – லீ குவான் இயூவின் நல்லுடலை ஏந்தி இராணுவ வீரர்கள் நாடாளுமன்ற சதுக்கத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்வதற்காக இராணுவ வாகனத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Sun Mar 29, 2015 11:29 pm

25 மார்ச் 2015 – நாடாளுமன்ற சதுக்கத்தில் லீ குவான் இயூவிற்கு இறுதி மரியாதை செலுத்த நீண்ட வரிசை பிடித்து நிற்கும் மக்கள் கூட்டம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Sun Mar 29, 2015 11:30 pm

26 மார்ச் 2015 – லீ குவான் இயூவிற்கு இறுதி மரியாதை செலுத்த காத்திருக்கும் நேரம் மணிக்கணக்காக கூடியதால், சிங்கை இராணுவத்தினர் தற்காலிகமாக கூடாரங்களை ஏற்படுத்தி மக்களுக்கு வசதி செய்து தந்தனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Sun Mar 29, 2015 11:30 pm

26 மார்ச் 2015 – நாடாளுமன்ற சதுக்கத்தில் லீ குவான் இயூவிற்கு இறுதி மரியாதை செலுத்த வரிசையில் நிற்கும் பொதுமக்களின் கூட்டம் நீண்டு கொண்டே போனதில் சாலைகளும் போக்குவரத்துக்கு மூடப்பட்டன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Sun Mar 29, 2015 11:30 pm

27 மார்ச் 2015 – சிங்கப்பூரின் சமூக நிலையம் ஒன்றில் லீ குவான் இயூவிற்கு இறுதி மரியாதை செலுத்த திரண்ட மக்கள், லீ குவான் இயூவின் உருவப் படத்தை வரைந்து, அதனைச் சுற்றி மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்திய காட்சி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Sun Mar 29, 2015 11:31 pm

28 மார்ச் 2015 – தங்கள் நாட்டிற்கு ஒரு கௌரவத்தையும், தங்களுக்கு வளமான வாழ்க்கைச் சூழலையும் ஏற்படுத்தித் தந்த தங்கத் தலைவனுக்கு, இரவிலும் கூட காத்திருந்து அஞ்சலி செலுத்திய மக்கள். அவர்களின் வசதிக்காக சிங்கை இராணுவம் தற்காலிக கூடாரங்களை ஏற்படுத்தி இருந்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by சிவா on Sun Mar 29, 2015 11:45 pm

சரித்திரமாய் நிலைத்த ஆசியப் புலி!

கடந்த திங்கள்கிழமை தனது 92-ஆவது வயதில் காலமான சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் மரணத்துக்கு வேறு யார் அஞ்சலி செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை, தமிழர்களும் தமிழகமும் அஞ்சலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

சிங்கப்பூரில் தமிழர்கள் கணிசமாக வாழ்கிறார்கள் என்பது மட்டுமல்ல அதற்குக் காரணம். இனத்தால் சீனரான லீ குவான் யூ சிங்கப்பூரைத் தனி நாடாக்கி அதன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, தமிழர்களை அன்னியர்களாக ஒதுக்கி வைத்திருக்கலாம். அவர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கப் போவதில்லை. ஆனால், ஆட்சி அதி

காரத்தில் தமிழர்களை இணைத்துக் கொண்டு அமைச்சரவையில் அவர்களுக்கு இடமளித்தது மட்டுமல்ல, தமிழும் சிங்கப்பூரின் தேசிய மொழிகளில் ஒன்று என்று தமிழுக்கு அங்கீகாரம் அளித்தவர் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ!

20-ஆம் நூற்றாண்டின் சரித்திரம் எழுதப்படும்போது, அதில் லீ குவான் யூவுக்கு ஒரு தனி இடம் நிச்சயமாக உண்டு. உலக நாடுகள் பின்பற்றுவதற்கான நிர்வாக வழிமுறைகளை நிறுவிய பெருமையும், குறைந்தபட்ச சர்வாதிகாரத்துடன் கூடிய ஜனநாயக அமைப்பை உருவாக்கி வெற்றிகரமாக நடத்திக் காட்டிய பாங்கும், முதலாளித்துவப் பொருளாதார அமைப்பில் மக்கள் நலனையும் முன்னிலைப்படுத்த முடியும் என்கிற சாதனையும் லீ குவான் யூவின் தனிச் சிறப்புகள்.

ஒரு மிகச் சிறிய "சிட்டி ஸ்டேட்' என்று அழைக்கப்படும் நகர தேசத்தை நிர்வாகம் செய்தவர் என்றாலும்கூட, காலனிய காலகட்டத்திற்குப் பிந்தைய ஆசியாவின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் லீ குவான் யூ. இத்தனைக்கும் சிங்கப்பூர் என்கிற அந்தக் குட்டியூண்டு தேசத்தில் அதன் தேவைக்கேற்ற அளவுக்கு தண்ணீர் கிடையாது. சுயதேவையை நிறைவு செய்யும் அளவிலான உணவு உற்பத்தி இல்லை. மின்சாரத்திற்கு அண்டை நாடுகளைத்தான் சார்ந்திருக்க வேண்டும். அப்படியெல்லாம் இருந்தும் தட்டுப்பாடில்லாத தண்ணீர், தடையற்ற மின்சாரம், தேவைக்கேற்ற உணவு ஆகியவற்றைத் தனது நாட்டு மக்களுக்கு அவரால் வழங்க முடிந்தது.

1965-இல்தான் சிங்கப்பூர் என்கிற நாடு மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்டது. அதுவரை இனக் கலவரங்களாலும் சர்சைகளாலும் பிரிந்து கிடந்த சிங்கப்பூரை ஒன்று படுத்தியதும் ஒழுங்குபடுத்தியதும் லீ குவான் யூதான். சீனர்களுக்கும் மலாய் இனத்தவர்களுக்கும் இடையே இருந்த கசப்புணர்வைப் போக்க தமிழர்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்ட அவரது ராஜதந்திரம்தான் இன்றுவரை சிங்கப்பூர் எந்தவித இனக் கலவரமும் இல்லாமல் இந்துக்கள், பௌத்தர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழும் நல்லிணக்க சமுதாயமாகத் திகழ்வதற்கு அடிப்படைக் காரணம்.

லீ குவான் யூவின் மற்றொரு சாதனை, அதுவரை பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய சின்னஞ்சிறு ஆசிய நாடாக இருந்த சிங்கப்பூரை உலகின் மிகப் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாற்றியது. லீயின் "குறைந்தபட்ச சர்வாதிகாரம்' என்கிற நிர்வாக உத்தி உலகின் பல தலைவர்களையும் கவர்ந்திருக்கிறது. குறிப்பாக, கம்யூனிச நாடான சீனா ஒரு கட்டத்தில் பொருளாதாரத் தேக்க நிலைமையில் சிக்கியபோது, அப்போதைய சீன அதிபர் டென் ஜியாபிங்கின் மனதைக் கவர்ந்த தலைவர் லீ குவான் யூதான்.

சந்தைப் பொருளாதாரத்தின் மூலம் அடையும் அசுர வளர்ச்சியும், ஒரு கட்சி ஆட்சி முறையை நிலைநிறுத்தும் அரசியல் வழிமுறையும் லீ குவான் யூவின் சிங்கப்பூரிலிருந்து டென் ஜியாபிங் கற்றுக்கொண்ட பாடங்கள். இன்று சீனா உலக வல்லரசாக வலம் வருகிறது என்றால் அதற்குக் காரணம் லீயின் அரசியல் பொருளாதாரக் கண்ணோட்டத்தை அந்நாடு பின்பற்றியதுதான்.

பிரிட்டிஷ் காலனியாக சிங்கப்பூர் இருந்த 1959 முதல் பிரதமராக இருந்த லீ குவான் யூ, 1990-இல் தனது 67-வது வயதில் பதவி விலகிய நிகழ்வு, உலக சரித்திரத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம். சொல்லப்போனால், ஏறத்தாழ சர்வாதிகாரி போன்றவர் லீ குவான் யூ. ஆனாலும், இளைய தலைமுறைக்கு வழிவிட்டுப் பதவி விலகியபோது அவர் நிஜமான ஜனநாயகவாதியாக மாறிவிட்டார். தான் பதவி விலகி இப்போதைய பிரதமரான தனது மகன் லீ சியன் லூங்கைத் தனது வாரிசாக அறிவித்துப் பதவியில் அமர்த்தினாரா என்றால் அதுவும் இல்லை. லீ குவான் யூவைத் தொடர்ந்து பிரதமரானது கோகோக் டோங்க். 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஓய்வு பெற்ற பிறகுதான் 2004-இல் லீ சியன் லூங் பிரதமரானார்.

லீயைப் பொருத்தவரை, தனிப்பெரும் தலைவராக அவர் திகழ்ந்தார் என்பது மட்டுமல்லாமல், தம் அளவிலும் தனது அரசு நிர்வாகத்திலும் லஞ்சம், முறைகேடுகள் போன்றவை இடம் பெறாமல் நேர்மையான அரசு நிர்வாகத்தை அவரால் உறுதிப்படுத்த முடிந்தது.

லீ குவான் யூவிற்குப் பிறகு சிங்கப்பூர் எப்படி இருக்கும், மாறிவரும் உலகச் சூழலில் சிங்கப்பூர் முதன்மையான பொருளாதாரமாகத் தாக்குப் பிடிக்குமா என்பதெல்லாம் காலத்தின் கையில்தான் இருக்கிறது.

சிங்கப்பூரில் இப்போதைய ஆட்சிக்கு எதிராக முணுமுணுப்பு எழத் தொடங்கி இருக்கிறது. உள்ளூர்வாசிகளுக்கு வேலையின்மை பிரச்னை அதிகரித்திருக்கிறது. லீ குவான் யூ உருவாக்கிய "குறைந்தபட்ச சர்வாதிகார ஆட்சி முறை' இன்னும் எத்தனை காலம் தொடரும் என்பதேகூட விவாதிக்கப்படுகிறது.

ஆனால், சிங்கப்பூரே இல்லாமல் போனாலும்கூட, உலக சரித்திரத்தில் லீ குவான் யூ என்கிற ஆளுமையின் பெருமை நிலைத்து நிற்கும். அதுதான் அவரது தனிச் சிறப்பு!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by T.N.Balasubramanian on Mon Mar 30, 2015 9:02 am

படத்தொகுப்பு அருமை , சிவா !
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21543
மதிப்பீடுகள் : 8154

View user profile

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by ayyasamy ram on Mon Mar 30, 2015 9:08 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35093
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum