ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

புதிய சமயங்கள்
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஏமன் உள்நாட்டுப் போர்

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Fri Mar 27, 2015 5:08 pm

First topic message reminder :

உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் ஏமன் அரசை காப்பாற்ற சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியது அரபு நாடுகளும் படையை அனுப்பி ஆதரவு

ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத்ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியுள்ளது.

சனாவை கைப்பற்றினர்

அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் அதிபராக, அபேத்ரப்போ மன்சூர் காதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் போராட்டத்தை தொடங்கினர்.

முன்னாள் அதிபர் அலி அப்துல்லாவின் ஆதரவாளர்களும், ஷியா பிரிவை சேர்ந்தவர்களுமான இந்த ஹவுத்தி படையினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதனால் ஏமனின் பல்வேறு பகுதிகளில் தாக்குதலை தொடங்கிய இவர்கள், கடந்த மாதம் தலைநகர் சனாவை கைப்பற்றியதுடன், சன்னி பிரிவினரின் பகுதிகளை நோக்கி முன்னேற தொடங்கினர்.

அதிபர் வேண்டுகோள்

இதன் காரணமாக அதிபர் மன்சூர் காதி சனாவை விட்டு வெளியேறி ஏடன் நகரில் தஞ்சம் புகுந்தார். தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து அங்கே முகாமிட்டுள்ள அவர், தனது அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி படையினரை முறியடிக்க உதவுமாறு சவுதி அரேபியாவுக்கு நேரடி வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து ஹவுத்தி படையினருக்கு எதிராக சவுதி அரேபியா நேற்று களத்தில் இறங்கியது. ஏமன் தலைநகர் சனா மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் வசமிருக்கும் பகுதிகளில் 100–க்கும் மேற்பட்ட சவுதி அரேபிய போர் விமானங்கள் அதிரடியாக குண்டு மழை பொழிந்தன.

10 நாடுகள்

இதில் கிளர்ச்சியாளர்களின் ஏராளமான போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உடனடியான தகவல் எதுவும் இல்லை. மேலும் சவுதி அரேபியாவை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் படை வீரர்களும் ஏமனில் குவிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சவுதி அரேபிய படைகளுடன், கத்தார், ஜோர்டான், குவைத், பஹ்ரைன், எகிப்து, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 10 நாடுகளின் படைகளும் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளன. மேலும் பாகிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகளும் இந்த தாக்குதலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து உள்ளன.

அமெரிக்கா ஆதரவு – சீனா கவலை

ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள அரபு நாட்டு படைகளுக்கு ஆயுத வினியோகம் மற்றும் உளவுத்துறை உதவிகளை செய்ய அமெரிக்காவும் முன் வந்துள்ளது. இதனால் ஏமனில் மிகப்பெரும் தாக்குதல் நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் ஏமனில் நிலவி வரும் உள்நோட்டுப்போர் கவலையளிப்பதாக சீனா கூறியுள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குவா சுனியிங் கூறும்போது, ‘ஏமன் விவகாரத்தில் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின்படி அனைத்து நாடுகளும் செயலாற்ற வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்’ என்றார்.

மிகப்பெரிய போர் அபாயம்

இந்த தாக்குதல் குறித்து ஹவுத்தி இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘ஏமனில் சவுதி அரேபிய படைகள் தொடங்கியுள்ள இந்த தாக்குதல், அந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய போருக்கு வழிவகுக்கும்’ என தெரிவித்தார். மேலும் சவுதி அரேபிய படைகள் சனா அருகே நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக ஹவுத்தி ஆதரவு தொலைக்காட்சி ஒன்றும் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் ஹவுத்தி படையினரின் வசமிருந்த ஏடன் விமான நிலையத்தை மீட்க, அதிபர் மன்சூர் காதியின் ஆதரவு படையினர் கடும் தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நடந்த இந்த தாக்குதலின் இறுதியில், ஏடன் விமான நிலையம் மீட்கப்பட்டது.

எண்ணெய் விலை உயர்வு

இதற்கிடையே ஏமனில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப்போர் தீவிரமடைந்தால் உலகம் முழுவதும் எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. நேற்று தாக்குதல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கச்சா எண்ணெய் விலை சுமார் 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது.

எண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் லாரிகள், ஏடன் வளைகுடா வழியாகவே ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by rksivam on Fri Apr 24, 2015 2:30 pm

அதெல்லாம் சரி, சண்டை ஆரம்பித்தவுடன் அங்கே சிக்கிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களை அவசரம் அவசரமாக பத்திரமாக இந்தியா கொண்டு வந்து சேர்த்த சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் மோடி அரசை பற்றியும் யாராவது புகழ்ந்தார்களா. தற்கொலை செய்துகொண்ட கஜேந்திரனை பற்றி வாய் கிழிய பேசும் ஆங்கீல செய்தி தொலை காட்சிகள் வசதியாக மறந்ததேன். ஆரணப் கோஸ்வாமி காது கேட்க்கிறதா. எதிர் கட்சிகள் எதிரி கட்சிகளே.

சிவம்
avatar
rksivam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 61
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Fri Apr 24, 2015 11:32 pm

ஏமன் சண்டையில் 1,080 பேர் உயிரிழப்பு 4,352 படுகாயம் - உலக சுகாதார அமைப்பு

ஏமன் சண்டையில் 1,080 பேர் உயிரிழந்தனர், 4,352 படுகாயம் அடைந்தனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

ஏமன் நாட்டில், அதிபரை ஓட வைத்து, முக்கிய நகரங்களை தங்கள் வசப்படுத்திய, ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு, சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய நாடுகள் கரம் கோர்த்தன. இந்த நாடுகளின் கூட்டுப்படைகள் ஏமனில் கடந்த மாதம் 26–ந் தேதி தொடங்கி வான்தாக்குதல்களை நடத்தி வந்தன. இந்த தாக்குதல்களில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்தனர்.

ஏறத்தாழ ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த இந்த தாக்குதல்களை, ஏமன் அதிபர் கேட்டுக்கொண்டதின்பேரில், நிறுத்திக்கொள்வதாக சவூதி கூட்டுப்படைகள் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டது. சவுதி அரேபியா மற்றும் அதன் அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும், அந்த அச்சுறுத்தலை அகற்றுவதற்காகத்தான் தாக்குதல்கள் தொடுத்ததாகவும், தங்கள் நோக்கம் நிறைவேறி விட்டதாகவும் சவுதி கூட்டுப்படைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏமன் மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வந்தாலும் கூட, கடற்படையின் முற்றுகை தொடரும். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம் இருந்தால் தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள், டாய்ஸ் நகரில் ஏமன் ராணுவத்தின் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் தொடுத்தனர். அதைத் தொடர்ந்து, அங்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் மீண்டும் வான் தாக்குதல்கள் நடத்தியது. ஏமனில் தாக்குதல்களை மீண்டும் சவுதி கூட்டுப்படைகள் தொடங்கி விட்டனவா அல்லது இது ஒரு குறுகிய கால நடவடிக்கையா என தெரியத நிலையே நிலவியது. இந்நிலையில் ஏமன் விவகாரத்தில் ஐ.நா. ஆதரவுடன் கூடிய அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும். ஆனால் தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட்டபின்னர்தான் பேச்சு வார்த்தை என்று கிளர்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஏமன் சண்டையில் 1,080 பேர் உயிரிழந்தனர், 4,352 படுகாயம் அடைந்தனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இதில் 48 சிறுவர்கள், 28 பெண்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்படாத நிலையில் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே உதவி பணிகளுக்கான நடவடிக்கையும் தொடங்கப்பட்டு உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Fri Apr 24, 2015 11:35 pm

ஏமன் நாட்டில் அமைதிப்பேச்சுக்கு கிளர்ச்சியாளர்கள் நிபந்தனை ‘அனைத்து வகையிலான தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும்’

ஏமன் நாட்டில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு, அனைத்து வகையிலான தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல்

ஏமன் நாட்டில், அதிபரை ஓட வைத்து, முக்கிய நகரங்களை தங்கள் வசப்படுத்திய, ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு, சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய நாடுகள் கரம் கோர்த்தன.

இந்த நாடுகளின் கூட்டுப்படைகள் ஏமனில் கடந்த மாதம் 26–ந் தேதி தொடங்கி வான்தாக்குதல்களை நடத்தி வந்தன. இந்த தாக்குதல்களில் 900–க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்தனர்.

தாக்குதல்கள் நிறுத்தம்

ஏறத்தாழ ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த இந்த தாக்குதல்களை, ஏமன் அதிபர் கேட்டுக்கொண்டதின்பேரில், நிறுத்திக்கொள்வதாக சவூதி கூட்டுப்படைகள் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டன. சவுதி அரேபியா மற்றும் அதன் அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும், அந்த அச்சுறுத்தலை அகற்றுவதற்காகத்தான் தாக்குதல்கள் தொடுத்ததாகவும், தங்கள் நோக்கம் நிறைவேறி விட்டதாகவும் சவுதி கூட்டுப்படைகள் கூறின.

ஏமன் மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வந்தாலும் கூட, கடற்படையின் முற்றுகை தொடரும். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம் இருந்தால் தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் அவை தெரிவித்தன.

மீண்டும் தாக்குதல்

ஆனால் சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள், டாய்ஸ் நகரில் ஏமன் ராணுவத்தின் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் தொடுத்தனர். அதைத் தொடர்ந்து, அங்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் மீண்டும் வான் தாக்குதல்கள் நடத்தின.

ஏமனில் தாக்குதல்களை மீண்டும் சவுதி கூட்டுப்படைகள் தொடங்கி விட்டனவா அல்லது இது ஒரு குறுகிய கால நடவடிக்கையா என தெரிய வில்லை.

ராணுவ மந்திரி விடுவிப்பு

இதற்கிடையே கடந்த மாதம் 26–ந் தேதி ஏடன் நகருக்கு அருகே ஒரு விமான தளத்தில் வைத்து பிடித்து தங்கள் வசம் வைத்திருந்த ஏமன் ராணுவ மந்திரி மகமது அல் சுபாய்ஹியை கிளர்ச்சியாளர்கள் சனாவில் விடுதலை செய்தனர்.

அவரை கிளர்ச்சியாளர்கள் விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. கோரிக்கை விடுத்தது நினைவுகூரத்தகுந்தது.

பேச்சு வார்த்தைக்கு நிபந்தனை

இந்த நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் முகமது அப்துல் சலாம், ‘‘ஏமன் விவகாரத்தில் ஐ.நா. ஆதரவுடன் கூடிய அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும். ஆனால் தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட்டபின்னர்தான் பேச்சு வார்த்தை’’ என கூறி உள்ளார்.

இதற்கு முன்பு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அதிபர் அப்து ரபு மன்சூர் ஹாதி அரசுக்கும் இடையே கடந்த ஜனவரியில் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Fri May 01, 2015 10:48 pm

ஏமன் நாட்டில் மீண்டும் சண்டை வலுக்கிறது சவுதி கூட்டுப்படைகள் குண்டு மழை

ஏமன் நாட்டில் மீண்டும் சண்டை வலுக்கிறது. கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று குண்டு மழை பொழிந்தன.

ஏமனில் சண்டை

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவு படையை எதிர்த்து ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்களும், முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே படையினரும் தீவிரமாக சண்டையிட்டு வந்தனர்.

முக்கிய நகரங்களைப் பிடித்து கிளர்ச்சியாளர்கள் கைகள் ஓங்கிய நிலையில், சவுதி அரேபியா தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய நாடுகளின் கூட்டுப்படைகள் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி களத்தில் குதித்தன.

சண்டை நிறுத்தம்

கடுமையான வான்தாக்குதல்களை தொடுத்தன. சுமார் 1 மாதம் நடந்த இந்த தாக்குதல்களில் சுமார் 950 பேர் கொல்லப்பட்டு, 3 ஆயிரத்து 500 பேர் காயம் அடைந்து, 1½ லட்சம் பேர் இடம் பெயர்ந்த நிலையில், சவுதி கூட்டுப்படைகள் கடந்த மாதம் 21-ந் தேதி தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.

ஆனாலும் ஏமன் முழுவதும் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் ஆங்காங்கே நடந்து வருகிறது.

ஏடனில் சண்டை

இந்த நிலையில், அங்கு நேற்று முன்தினம் ஏடன் நகரில் அதிபர் ஆதரவு படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.

இந்த சண்டையில் 8 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 5 பேர் அதிபர் ஆதரவு படையினர், 3 பேர் பொதுமக்கள். இந்த தகவலை ஏடன் சுகாதாரத்துறை தலைவர் உறுதி செய்தார்.

2 மாகாணங்களில் தாக்குதல்

இது தொடர்பாக அவர் கூறும்போது, மேலும் 44 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில் கிளர்ச்சியாளர்கள் தரப்பு சேதம் குறித்து எந்தவொரு தகவலையும் அவர் வெளியிடவில்லை.

நேற்று முன்தினம் இரவில் லாஜ், அப்யான் மாகாணங்களில் கிளர்ச்சியாளர்களை குறி வைத்து சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல்கள் நடத்தின.

2 மாவட்டங்களில் குண்டுமழை

மேலும், தெற்கு ஏடனில் கோர் மஸ்கார், தார் சாத் மாவட்டங்களில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து இழந்த நிலைகளை மீட்கும் வகையில், சவுதி கூட்டுப்படைகள் நேற்று கிளர்ச்சியாளர்களை குறி வைத்து போர் விமானங்களில் பறந்து குண்டு மழை பொழிந்தன.

இந்த தாக்குதல்களின் சேத விவரம் உடனடியாக தெரிய வரவில்லை. ஏமனில் மீண்டும் சண்டை வலுத்து வருவது அந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Tue May 12, 2015 11:17 pm

ஏமனில் போர் விமான தாக்குதல்: குண்டு வீச்சில் பொதுமக்கள் 69 பேர் பலி

ஏமன் நாட்டில் அரசு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அண்மைக் காலமாக சண்டை தீவிரமடைந்து உள்ளது. கிளர்ச்சியாளர்கள் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளதால் அரசு படையினருக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

நேற்று தலைநகர் சனாவின் புறநகர் பகுதியான மவுண்ட் நோபும் என்ற இடத்தில் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியிருந்த ராணுவ முகாமை குறி வைத்து சவுதி அரேபியா போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. 2-வது நாளாக இன்றும் இந்த தாக்குதல் நீடித்தது. அப்போது குண்டுகள் ராணுவ முகாம் மீதும் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகள் மீதும் விழுந்து வெடித்து சிதறின. இதில் சிக்கி 69 பேர் பலியானார்கள். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலியான மற்றும் காயம் அடைந்த அனைவரும் பொதுமக்கள் என்று மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum