புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_m10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10 
30 Posts - 54%
heezulia
பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_m10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10 
21 Posts - 38%
Manimegala
பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_m10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_m10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_m10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10 
1 Post - 2%
jairam
பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_m10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10 
1 Post - 2%
சிவா
பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_m10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_m10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_m10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_m10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10 
12 Posts - 4%
prajai
பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_m10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10 
9 Posts - 3%
Jenila
பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_m10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10 
4 Posts - 1%
Rutu
பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_m10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10 
3 Posts - 1%
jairam
பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_m10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_m10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_m10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_m10பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 28, 2015 4:52 pm

பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  P60a

அந்தப் பிராந்தியம்தான் அந்த நாட்டின் ஆன்மா; இதயப் பகுதி. அதைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் வசிக்கும் இரண்டு கோடி மக்கள் குடிநீருக்கு அல்லாடுகிறார்கள். அங்கே இருக்கும் ஆறு, அணை, குளம், குட்டை என நாட்டில் ஒட்டுமொத்தத் தண்ணீர் கையிருப்புமே 10 சதவிகிதத்துக்கும் கீழ் (ஒரு நாட்டின் தண்ணீர் வளம் அந்த அளவுக்குக் குறைவதை 'டெட் வால்யூம்’ என அபாயகரமாகக் குறிப்பிடுவர்). நாடு, கிட்டத்தட்ட பாதிப் பாலைவனம் ஆகிவிட்டது. வாரத்தில் ஐந்து நாட்களுக்குக் குழாய் களில் தண்ணீர் வராது. இரண்டு நாட்களுக்கு மட்டும் அதிகாலை, நள்ளிரவுகளில் அவ்வப்போது வரும். பிடித்துவைத்து வாரம் முழுக்கக் குடித்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தண்ணீரை அதிகமாகப் பயன்படுத்தினால், அபராதம். இதனால் கூரையில் விழும் மழை நீரைக்கூடச் சேமித்துக் குடிக்கிறார்கள். தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக, கிட்னி பிரச்னை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு டயாலிசிஸ் செய்வதைக்கூட நிறுத்திவைத்திருக்கிறார்கள்.

தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக இத்தனை தண்ணீர்த் தகராறுகள் அரங்கேறுவது எங்கே தெரியுமா? உலகிலேயே தண்ணீர் வளம் மிக அதிகமாக இருக்கும் பிரேசில் நாட்டில்! அதிலும் குறிப்பாக, சுமார் இரண்டு கோடி பேர் வசிக்கும் பெரிய நகரான சவ் பாலோ நகரில்தான்.

உலகின் அடர்த்தியான, வளமான அமேசான் காடு, உலகின் அதிக அளவு தண்ணீர் பாயும் அமேசான் ஆறு... ஆகியவை இருப்பதும் அதே பிரேசிலில்தான். பக்கத்து நாடுகளில் இருந்து பல ஆறுகள் பிரேசிலில் பாய்ந்து கடக்க, உலகின் மிக அடர்த்தியான நிலத்தடி நீர்வளமும் அந்த நாட்டுக்கே சொந்தம். ஆனால், அங்குதான் தலைவிரித்தாடுகிறது உலகின் மிக மோசமான தண்ணீர் பஞ்சம்... ஏன்?

பதில் வழக்கமானதுதான்... காடுகள் மற்றும் மரங்கள் அழிப்பு. அதன் விளைவே இப்போது பதறவைக்கிறது.

தண்ணீர், காய்கறி, கனிகள், தங்கம், வைரம், நிலக்கரி... என பிரேசிலில் இயற்கை வளங்கள் திக்கெட்டும் குவிந்துகிடக்கின்றன. இதனால், எதையுமே அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தியே பழகியவர்கள் சவ் பாலோ நகர மக்கள். அதில் முக்கியமானது... தண்ணீர்!

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், குடி தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவோம் என நாம் நினைத்திருக்கவே மாட்டோம். அதுபோலத்தான் அந்த நகர மக்களும் குடிநீர்ப் பஞ்சம் வரும் எனக் கனவிலும் எதிர்பார்க்கவே இல்லை. இரண்டுமே இப்போது நடந்துவிட்டன!

அரிசி, பருப்புக்காக ரேஷனில் நிற்பதுபோல தண்ணீரைச் சின்னச் சின்னக் குடுவைகளில் பிடித்துச் செல்ல, அந்த நகர மக்கள் வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள். அமேசான் காடு, ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகள் தரும் தண்ணீர் வளம் தவிரவும், மழையாகப் பொழியும் தண்ணீர் அதிகபட்சமாக மறுசுழற்சியாவதும் அங்கேதான். இத்தனை சாதகங்கள் இருந்தும் தண்ணீர் வளத்துக்கு பெரும் பாதகம் ஏற்பட காரணம் என்ன? காடுகளைக் கண்மூடித்தனமாக அழித்ததும் எகிறிக்கொண்டே இருக்கும் மக்கள்தொகையும்தான் எனச் சொல்லப்பட்டாலும், வேறு பல காரணங்களும் பின்னணியில் ஒளிந்திருக்கின்றன என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் காட்டை அழித்தது ஒரு பக்கம் இருக்க, விவசாயத்தைப் பெருக்குகிறேன் என்றும் காட்டை அபகரிக்கிறார்கள். சோயா, பாதாம் போன்ற பணப் பயிர்களை விளைவித்து, அவற்றின் ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணியைப் பெருக்க ஊக்குவிக்கிறது அரசாங்கம். மேலும், தண்ணீரை உருவாக்கும், சேமிக்கும் காடுகளை அழித்து, பெருமளவில் தண்ணீரை உறிஞ்சும் பணப்பயிர்களை விளைவிப்பதற்காக, காடுகளின் விஸ்தீரணத்தையும் சரசரவெனக் குறைத்தது. இதுபோக மாட்டு இறைச்சி மற்றும் இரும்பு உற்பத்தி, கரி, வைரம் போன்ற பொருட்களைத் தோண்டும் சுரங்கத் தொழில் பெருக்கம் என பிரேசிலில் நடைபெற்ற ஒவ்வொன்றும் இயற்கையின் அடிமடியிலேயே கை வைத்திருக்கிறது. இதனாலேயே பருவநிலை தாறுமாறாக மாறி, கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை அளவு குறைந்தது.

இத்தனைக்கும் இந்த அபாயங்களை பல வருடங்களுக்கு முன்னரே சுட்டிக்காட்டினார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். ஆனால், அரசாங்கம் அதைக் கண்டுகொள்ளவில்லை. வகைதொகை இல்லாமல் புதுப்புது தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதிலேயே பரபரப்பாக இருந்துவிட்டு, இப்போது சாமானியனின் குடிநீர் தேவையைக் கட்டுப்படுத்த சட்டம் போடுகிறது. இதனால் 'அல்லையன்ஸ் ஃபார் வாட்டர்’ என்ற தன்னார்வ அமைப்பு மூலம் பொதுமக்களே தண்ணீரைச் சேமிக்கும், நிர்வகிக்கும் வேலைகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர்.

தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கே திண்டாடும் பிரேசிலின் பொருளாதாரத் தள்ளாட்டம், சர்வதேச அரங்கில் அந்த நாட்டின் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைத்திருக்கிறது. பிரேசிலின் இந்த நிலை, மற்ற உலக நாடுகள் அனைத்துக்கும் ஒரு பாடம்.

தற்போது சவ் பாலோவின் சரிபாதி மக்களுக்குக் குடிதண்ணீர் வழங்கும் கன்டரைரா அணையில் ஐந்து சதவிகிதக் கொள்ளளவுக்கே தண்ணீர் இருக்கிறது. பருவமழை பெய்யாவிட்டால், அடுத்த நான்கைந்து மாதங்களில் அந்தத் தண்ணீரும் மொத்தமாகத் தீர்ந்துவிடும். எனில், அது மூன்றாம் உலக யுத்தத்துக்கான தொடக்கப்புள்ளியாகக்கூட இருக்கக்கூடும்.

அமேசான் காட்டின் அரியவகை மூலிகைகளை அழித்ததால், என்னவெல்லாம் நடக்கிறது பாருங்கள்!

ஞா.சுதாகர்

பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 28, 2015 6:21 pm

இயற்கையின் மீது கையை வைக்கும் சுயநலவாதிகளுக்கு சரியான சவுக்கடி.

அது சரி , இந்த "எருமைமாட்டின்" எண்ணை என்று நம்மூர் தொல்லைகாட்சிகளில் கூவி கூவி விற்கிறார்களே அது இங்கேருந்து தான் கிடைக்கிறதா புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 28, 2015 6:40 pm

ராஜா wrote:இயற்கையின் மீது கையை வைக்கும் சுயநலவாதிகளுக்கு சரியான சவுக்கடி.

அது சரி , இந்த "எருமைமாட்டின்"  எண்ணை என்று நம்மூர் தொல்லைகாட்சிகளில் கூவி கூவி விற்கிறார்களே அது இங்கேருந்து தான் கிடைக்கிறதா புன்னகை  
மேற்கோள் செய்த பதிவு: 1127429

ஹையோ ஹையோ ,அது எருமைமாட்டின் இல்லை .
எர்வொ மாட்டின் , திருப்பி சொல்லுங்க எர்வொ மாட்டின் .
அந்த எண்ணை எல்லாம் நம்மவர்கள் தலையில்தான் . வேண்டுமா !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 28, 2015 6:43 pm

நல்ல பதிவு .
நம்மூர் அரசியல்வாதிகள்/ தலைவர்கள் /விழிப்புணர்ச்சி ஆர்வலர்கள் 
 முழித்துக்கொள்ளவேண்டிய நேரம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 28, 2015 7:25 pm

T.N.Balasubramanian wrote:
ஹையோ ஹையோ ,அது எருமைமாட்டின் இல்லை .
எர்வொ மாட்டின் , திருப்பி சொல்லுங்க எர்வொ மாட்டின் .
அந்த எண்ணை எல்லாம் நம்மவர்கள் தலையில்தான் . வேண்டுமா !
ரமணியன்
விடுங்க ஐயா .... நம்ம ஊருல "எருமை மாட்டின்" , அவிங்க ஊருல "எர்வொ மாட்டின்" ஆக மொத்தம் எதோ ஒரு மாடு தானே புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 28, 2015 7:52 pm

குடி நீர் பஞ்சம் நம் நாட்டில் எங்கு அதிகம் தெரியுமா ?
உலகிலேயே அதிகம் மழை பொழியும், நம் நாட்டில் உள்ள , சிரபுஞ்சியில்தான் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 28, 2015 10:16 pm

//அது மூன்றாம் உலக யுத்தத்துக்கான தொடக்கப்புள்ளியாகக்கூட இருக்கக்கூடும்.//

பயம் பயம் பயம்

//அமேசான் காட்டின் அரியவகை மூலிகைகளை அழித்ததால், என்னவெல்லாம் நடக்கிறது பாருங்கள்!//

எல்லா காட்டையும் அழித்து எண்ணை எடுத்துட்டாங்களோ ?????????

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Sun Mar 29, 2015 7:55 am

சார் எங்கள் ஊரில் நல்ல விளைந்துகொண்டிருந்த நெல் வயல்களை இப்போது ரப்பர் தோட்டங்களாக மாற்றி விட்டார்கள்.அந்த நல்ல வயல்களில் தண்ணீர் வந்த பாதைகளை அடைத்து விட்டார்கள் .இந்த ரப்பர் மரமும் நீங்கள் கூறியது போல் தண்ணீரை உறிஞ்சும் பயிர்கள்.அரசும் கண்டுகொள்வதில்லை .இங்கும் ஒரு நாள் "டெட் வால்யூம் " அளவுக்கு வந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை .கடவுள் தான் காப்பத்தவேண்டும் .

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 29, 2015 10:08 am

anikuttan wrote:சார் எங்கள் ஊரில் நல்ல விளைந்துகொண்டிருந்த நெல் வயல்களை இப்போது ரப்பர் தோட்டங்களாக மாற்றி விட்டார்கள்.அந்த நல்ல வயல்களில் தண்ணீர் வந்த பாதைகளை அடைத்து விட்டார்கள் .இந்த ரப்பர் மரமும் நீங்கள் கூறியது போல் தண்ணீரை உறிஞ்சும் பயிர்கள்.அரசும் கண்டுகொள்வதில்லை .இங்கும் ஒரு நாள் "டெட் வால்யூம் " அளவுக்கு வந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை .கடவுள் தான் காப்பத்தவேண்டும் .
கடவுள் வந்து காப்பாற்றுவார் என்று நாம் அமைதியா இருந்தால் , அதற்குள் நிலைமை கைமீறி போய் விடும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 29, 2015 11:22 am

ராஜா wrote:
anikuttan wrote:சார் எங்கள் ஊரில் நல்ல விளைந்துகொண்டிருந்த நெல் வயல்களை இப்போது ரப்பர் தோட்டங்களாக மாற்றி விட்டார்கள்.அந்த நல்ல வயல்களில் தண்ணீர் வந்த பாதைகளை அடைத்து விட்டார்கள் .இந்த ரப்பர் மரமும் நீங்கள் கூறியது போல் தண்ணீரை உறிஞ்சும் பயிர்கள்.அரசும் கண்டுகொள்வதில்லை .இங்கும் ஒரு நாள் "டெட் வால்யூம் " அளவுக்கு வந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை .கடவுள் தான் காப்பத்தவேண்டும் .  
கடவுள் வந்து காப்பாற்றுவார் என்று நாம் அமைதியா இருந்தால் , அதற்குள் நிலைமை கைமீறி போய் விடும்.
மேற்கோள் செய்த பதிவு: 1127541

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக