புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவரவர் பார்வையில்.... Poll_c10அவரவர் பார்வையில்.... Poll_m10அவரவர் பார்வையில்.... Poll_c10 
48 Posts - 45%
heezulia
அவரவர் பார்வையில்.... Poll_c10அவரவர் பார்வையில்.... Poll_m10அவரவர் பார்வையில்.... Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
அவரவர் பார்வையில்.... Poll_c10அவரவர் பார்வையில்.... Poll_m10அவரவர் பார்வையில்.... Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
அவரவர் பார்வையில்.... Poll_c10அவரவர் பார்வையில்.... Poll_m10அவரவர் பார்வையில்.... Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அவரவர் பார்வையில்.... Poll_c10அவரவர் பார்வையில்.... Poll_m10அவரவர் பார்வையில்.... Poll_c10 
3 Posts - 3%
jairam
அவரவர் பார்வையில்.... Poll_c10அவரவர் பார்வையில்.... Poll_m10அவரவர் பார்வையில்.... Poll_c10 
2 Posts - 2%
Manimegala
அவரவர் பார்வையில்.... Poll_c10அவரவர் பார்வையில்.... Poll_m10அவரவர் பார்வையில்.... Poll_c10 
1 Post - 1%
சிவா
அவரவர் பார்வையில்.... Poll_c10அவரவர் பார்வையில்.... Poll_m10அவரவர் பார்வையில்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவரவர் பார்வையில்.... Poll_c10அவரவர் பார்வையில்.... Poll_m10அவரவர் பார்வையில்.... Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
அவரவர் பார்வையில்.... Poll_c10அவரவர் பார்வையில்.... Poll_m10அவரவர் பார்வையில்.... Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
அவரவர் பார்வையில்.... Poll_c10அவரவர் பார்வையில்.... Poll_m10அவரவர் பார்வையில்.... Poll_c10 
14 Posts - 4%
prajai
அவரவர் பார்வையில்.... Poll_c10அவரவர் பார்வையில்.... Poll_m10அவரவர் பார்வையில்.... Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
அவரவர் பார்வையில்.... Poll_c10அவரவர் பார்வையில்.... Poll_m10அவரவர் பார்வையில்.... Poll_c10 
6 Posts - 2%
Jenila
அவரவர் பார்வையில்.... Poll_c10அவரவர் பார்வையில்.... Poll_m10அவரவர் பார்வையில்.... Poll_c10 
4 Posts - 1%
jairam
அவரவர் பார்வையில்.... Poll_c10அவரவர் பார்வையில்.... Poll_m10அவரவர் பார்வையில்.... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அவரவர் பார்வையில்.... Poll_c10அவரவர் பார்வையில்.... Poll_m10அவரவர் பார்வையில்.... Poll_c10 
3 Posts - 1%
Rutu
அவரவர் பார்வையில்.... Poll_c10அவரவர் பார்வையில்.... Poll_m10அவரவர் பார்வையில்.... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அவரவர் பார்வையில்.... Poll_c10அவரவர் பார்வையில்.... Poll_m10அவரவர் பார்வையில்.... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவரவர் பார்வையில்....


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 30, 2015 11:55 pm

ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணெய் சாத்து பார்த்த கையோடு, கோவில் பிரகாரத்தை சுற்றி, அங்குமிங்குமாய் மக்கள் பிரிந்து உட்கார்ந்தனர்.

நடந்த கதையையும், நடக்கப் போற கதையையும், கூடிக் குலவி பேசிக் கொண்டிருந்தோரை விட்டு பிரிந்து, தெற்குபுரம் ராமர் - சீதையை மண்டியிட்டு வணங்கும் அனுமன் சிலை அமைந்திருந்த திடலில் அமர்ந்தேன். நிழலும், குளுகுளு காற்றும், வழிபாட்டு மக்களுக்கு, இயற்கை அமைத்துக் கொடுத்த, 'ஏசி' என்று தான் தோன்றியது.

எனக்கென்னவோ மார்பிள் பதிக்கப்பட்ட பிரமாண்ட கோவிலை விடவும், கருங்கல்லில் எழும்பிய பழமையான கோவில்களே மனதிற்கு இதமாய் தோன்றியது. மிச்சமான விபூதியும், குங்குமமும் கொட்டி கொட்டி, இயல்பு பெருத்த தூண் திடல்களில் இருக்கும் கறுப்பு அடையாளங்களில் இருக்கும் லயிப்பு, ஏனோ மார்பிள் கோவில்களில் ஏற்படுவதில்லை.

சாமி பார்த்த கையோடு, மனிதர்களை பார்க்கத் துவங்கினேன். கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்த சரளா மாமியின் முகம், பக்கவாட்டில், 'பளீரெனத் தெரிந்தது.

சரளா மாமி... மலர் அபார்ட்மென்டில் நாங்கள் குடியிருந்த சமயம், எங்கள் எதிர் வீட்டில் இருந்தவர். ரொம்ப பாந்தமான மனுஷி; எப்போதும் சிரித்த முகமாய் இனிமையாக பேசுவாள். மாமியின் மகள் சரயுவும், நானும் நெருங்கிய தோழிகள். அதனால், நாள் முழுவதும் மாமியின் வீட்டில் தான் இருப்பேன். அவருடைய மகன் வங்கியில் வேலை செய்தான்.

அவர் அருகில் சென்று, ''நமஸ்காரம் மாமி, என்னத் தெரியுதா,'' என்று கேட்டதும், லேசாய் திடுக்கிட்டு திரும்பிய மாமி, வினாடியில், அடையாளம் கண்டு கொண்டார்.

''பானு... பானுமதி தானே... எப்படி இருக்கே... அம்மா நல்லா இருக்காங்களா?''என்று கேட்டவாறு, கையில் இருந்த குங்குமத்தை நீட்டினார். கொஞ்சமாய் எடுத்து, நெற்றியில் இட்டுக் கொண்டேன்.
''நல்லா இருக்கேன் மாமி... அம்மாவுக்கென்ன தன்னோட பொறுப்புகளை எல்லாம் முடிச்சாச்சு. அதனால, நினைச்ச இடத்துக்கு போய் வந்துட்டு இருக்காங்க. அது சரி சரயு, நியூஜெர்சியிலயே செட்டிலாக போறாளா என்ன... இங்கே வர்ற ஐடியாவே இல்லையா...''என்று கேட்டவாறு, மாமியின் முகத்தையே பார்த்தேன். அதில், களையே இல்லை.

''ம்... எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும். நாம எத்தனையோ எதிர்பார்த்து பிள்ளைகள வளக்கிறோம்; அதுக வளந்ததும், தம்முடைய சவுகரியங்களை மட்டும்தான் பாக்குதுக. அதை விடு... மாமாக்கு உடம்புக்கு முடியலங்கறது உனக்கு தெரியும் தானே?''என்று கேட்டாள்.
தெரியும் என்பது போல் தலையசைத்தேன்.

''வாதம் வந்து, நடை போயி, நாலு ஆண்டுக முடிஞ்சிருச்சு; எல்லாமே வீல் சேர் தான். எனக்கும், 60 வயசாகிறது; தினமும் ரெண்டுவேளை உடம்பு துடைச்சு, சோறு ஊட்டி, வீட்டை சுத்தம் செஞ்சு, என்னால முடியல பானு,'' என்றாள்.

மாமியை பார்க்க பாவமாக இருந்தது. முந்தானையை எடுத்து கண்ணைத் துடைத்துக் கொண்டார் மாமி. என்ன பேசுவதென்று தெரியாமல், மாமியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
''உண்மையில இந்த நிமிடம் சொல்றேன்... எப்பத்தான் மாமாவுடைய காலம் முடியும்ன்னு இருக்கு,'' என்றாள்.

அவள் அவ்வாறு கூறியதும், திடுக்கிட்டு மாமியை நிமிர்ந்து பார்த்தேன். 'எந்தவொரு மனைவியும் எந்தச் சூழலிலும் சொல்லத் துணியாத வார்த்தையை மாமி சர்வ சாதாரணமாக சொல்கிறாளே... இவள் சொல்வதைப் பார்த்தால், இதை பல முறை, சொல்லி பழக்கப்பட்டவள் போல தோணுகிறதே...' என, நினைத்துக் கொண்டிருந்த போது, ''என்னடா மாமி இப்படி பேசுறாளேன்னு நினைக்காதே... வேற வழியில்ல. முடியாம போனபின் செக்கு மாடென்ன, உழவு மாடென்ன, எல்லாமே அடிமாடுக தான். மனசும், உடம்பும் ரணப்பட்டு கிடக்கு; என்னுடைய நிலையில இருக்கிற எல்லாரும் இப்படித்தான் பேசுவாங்க,'' என்றாள் மாமி விரக்தியுடன்!

thodarum...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 31, 2015 12:00 am

நிறைந்த சந்நிதியில் இத்தனை மன வெதும்பலுடன் மாமி பேசியதை கேட்ட போது, ஏன் தான் மாமியை சந்தித்தோம் என்ற உணர்வு ஏற்பட்டது. இத்தனை வயதுக்கு இப்படி நிர்தாட்சணியமாய் பேசிய மாமியை பார்க்க வெறுப்பாக இருந்தது. அதனால், கிளம்ப எத்தணித்தேன்.
''பானு, அச்சானியமாக பேசுறேன்னு தானே நினைக்கிறே... ஆனா, என்னை பேசவைக்குற சூழ்நிலை எதுன்னு யாருக்குமே புரியல,'' என, புலம்ப ஆரம்பித்தாள் மாமி.

''அப்படியெல்லாம் எதுவும் நினைக்கல மாமி,'' என்று சொல்லி, ''சரிங்க மாமி, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு; கிளம்புறேன். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க,'' என்று கூறி, இல்லாத அவசர வேலையை உருவாக்கி, அங்கிருந்து கிளம்பினேன்.

பிரகாரத்தை விட்டு வெளியில் வந்து வெகு நேரமாகியும், மாமி கூறிய வார்த்தைகள் என் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. மாமியின் மீது இருந்த நல்லெண்ணம் உதிர்ந்து போக, அம்மாவிடம் இவ்விஷயத்தை சொன்னால் தான் மனசு அடங்கும் போலிருந்தது.
அண்ணன் வீட்டிற்கு சென்றேன்; மல்லிகை தொடுத்துக் கொண்டிருந்த அம்மா, வாயெல்லாம் பல்லாக வரவேற்றாள்.

''என்ன பானு... உங்க அண்ணி இல்லாத நேரத்துல வந்துருக்கே... எதுவும் தனியா பேசணும்ன்னு வந்தியா?''என்று கேட்ட அம்மா, புறணி கேட்பதற்கு வசதியாய் வந்து அமர்ந்து கொண்டது, என்னை மேலும் எரிச்சலூட்டியது.

''ஏம்மா, அண்ணியை பத்தி பேசுறதை தவிர, உனக்கு வேறு வேலையே இல்லயா... அந்த சரளா மாமியை இன்னைக்கு கோவில்ல பாத்தேன்; அதச் சொல்லத்தான் வந்தேன்,'' என்றேன்.
''எந்த சரளா... நாம மலர் அபார்ட்மென்ட்ல குடியிருந்தப்ப எதிர் வீட்ல இருந்த சரளா மாமியா? எப்படி இருக்காங்க... தங்கமான மனுஷி; உனக்கு ஒருதரம் அடிபட்டப்போ ரத்தம் கொடுத்து உதவினாங்க. மறக்க முடியுமா அதெல்லாம்,'' அம்மா பழைய நினைவுகளில் மூழ்கத் துவங்கினாள்

.
''எல்லாம் பழைய கதைம்மா... இப்போ மாமி பேசுறதை கேட்டா, சீ... இவங்கெல்லாம் ஒரு பெரிய மனுஷியா... நாளும், கிழமையுமா எதுக்கு அந்தம்மாவ பாத்தேன்னு சொல்லுவே,'' என்று கூறி, மாமி, மாமாவைப் பற்றி கூறியவற்றை சொல்லி முடித்தேன்.

அம்மாவால் நம்பவும் முடியாமல், தள்ளவும் இயலாமல், அமைதியாய் இருந்தாள். நான் தான், அன்று முழுவதும் புலம்பிக் கொண்டிருந்துவிட்டு, வீட்டிற்கு கிளம்பினேன்.
நேர ஓட்டத்தில் எல்லாமே மறந்து போனது.

வேலைப்பளு, குடும்ப பிரச்னை என்று, ஏதேதோ காரணங்களால் அடுத்து வந்த நாட்களில், கோவிலுக்கு போக முடியவில்லை.

இடையில், ஒரு வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு ஊர்வந்த சேர்ந்தபோது, சரளா மாமியின் கணவர் இறந்து விட்டதாய் அம்மா சொன்னாள்.

''பானு, முடிஞ்சா ஒரு நடை மாமி வீட்ல போய் துக்கம் விசாரிச்சுட்டு வந்துடேன்,'' என்று அங்கலாய்ப்பாய் சொன்னாள் அம்மா. மனசுக்குள் வருத்தமாய் இருந்தாலும், மாமியை சந்திக்க மனசு ஒப்பவில்லை.

''துக்கம் இருக்கிறவங்களத் தான் விசாரிக்கணும்; என்னைப் பொறுத்தவரை, மாமிக்கு எந்த துக்கமும் இல்ல. நீ போனை வைம்மா; எனக்கு வேலை இருக்கு,'' என்று விட்டேத்தியாய் சொல்லி, போனை வைத்தேன்.

மனசுக்குள், சிறியவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய இவர்களைப் போன்ற பெரியவர்கள் கோணலாய் வாழத் துவங்கியதால் தான், இளைய தலைமுறை சீர்கெட்டுப் போனதாய் தோன்றியது.
வலம்புரி விநாயகர் கோவிலில் சங்கடகரசதுர்த்தி நடைபெறுவதாய், அம்மா போன் செய்துச் சொன்னாள். ஒருநடை போய்விட்டு வரலாம் என்று புறப்பட்டேன். வாழ்க்கையில், நான் சந்திக்கும் சங்கடங்களுக்கு, நித்தமும் சங்கடகரசதுர்த்தி செய்தாலும், தீராது என்றே தோன்றியது.

கோவிலில் நல்ல கூட்டமிருந்தது. பூஜை முடிந்து, பிளாஸ்டிக் கிண்ணத்தில் தந்த சர்க்கரைப் பொங்கல் நிவேதத்துடன் பிரகாரத்தில் நின்று, வேடிக்கை பார்த்த போது, பிரகாரத்தின் வடகோடியில், விளக்கு வெளிச்சத்திற்கு கீழ் பளிச்சென்று அமர்ந்திருந்த உருவம், என் கண்ணை நெருடியது. அது, சரளா மாமியே தான்! திருநீறு பூசிய நெற்றியுடன், யாரோ ஒரு பெண்ணுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். கடந்தமுறை பார்த்தபோது, மாமியின் முகத்தில் தென்பட்ட குழப்பமும், துக்கமும் மறைந்து, முகம் தேஜசாய் இருந்தது.

மாமியிடம் பேசலாமா என ஒரு நொடி நினைத்தாலும், மறு நிமிடம் மனசை மாற்றிக் கொண்டேன். மாமியை பார்ப்பதை தவிர்த்து, அவர்கள் அமர்ந்திருந்த தூணிற்கு பின்புறமாய் சென்று அமர்ந்தேன். மாமியின் பக்கவாட்டு முகம் நன்றாக தெரிந்தது.

''வருத்தமா இருக்கு மாமி... மாமா, நின்னா வேர், நடந்தா தேருன்னு இருந்தவர். இப்படி ஆயிடுச்சேன்னு கஷ்டமா இருக்கு. காலன் விருந்தோம்பாத வீடே இருக்காது; நீங்க கவலைப்படாதீங்க,''என்று அனுதாபமாய் சொன்னாள் அந்தப் பெண்.

''எனக்கு எந்த வருத்தமும் இல்ல; இப்பத் தான் என் மனசு நிர்சலனமா இருக்கு. என்னன்னு சொல்லத் தெரியல. ஆனா, இப்போ எனக்குன்னு எந்தவித கட்டுப்பாடும் இல்ல,'' மாமி அமைதியாய் சொல்ல, அப்பெண் அசந்து போய் பார்த்தாள். எனக்கு மாமியின் வார்த்தையில், எந்த அதிர்வும் ஏற்படவில்லை.

''என்ன மாமி சொல்றீங்க...'' அந்தப் பெண்ணின் குரலிலேயே, அவள் முகம்போன போக்கை யூகிக்க முடிந்தது. மாமியின் குரலில் எந்த மாற்றமும் இல்லை.

''உனக்கு நான் சொல்றது புரியுமான்னு தெரியல. ஆனா, யார்கிட்டயாவது என் நிலைமைய, சொல்லணும் போல இருக்கு. எனக்கு முன்போல முடியல; திடீர் திடீர்ன்னு மயக்கம் வந்துடறது. ஆறு மாசம் முன்னாடி திடீர்ன்னு ஒருநாள் மயக்கம் போட்டு நடுக் கூடத்துல விழுந்துட்டேன். டாக்டர்கிட்ட என் மகன் தான் கூட்டிப் போனான். எல்லா டெஸ்ட்டும் எடுத்துப் பாத்துட்டு, டாக்டர் என்னோட இதயத்துல அடைப்பு இருக்குன்னு சொல்லிட்டார்.

''மருந்து, மாத்திரைன்னு வண்டி வண்டியா எழுதித் தந்தார். அடைப்பு அதிகமாகறதுக்குள்ள, ஆஞ்சியோவோ என்னவோ செய்யணும்ன்னு சொன்னார். உடனே, என் மகளுக்கு போன் செய்து சொன்ன போது, 'அடடே... என்னமா இப்படி ஆயிடுச்சு... உடம்ப நல்லா பாத்துக்கம்மா'ன்னு சொன்னாளே தவிர, அதற்கு பின், அதப் பற்றி மறந்து கூட விசாரிக்கல. பையனும், மருமகளும், இதை ஒரு விஷயமாகவே எடுத்துக்கல.

''எனக்கு இதையெல்லாம் நினைச்சுக் கூட வருத்தமில்ல. என்னுடைய கடமைகளை நான் சரிவர முடிச்சுட்டேன். ஆனா, மாமாவை யோசிச்சு பார்... அவருடைய ஒவ்வொரு அடியும், நான் இல்லாம ஆகாது; ஒரு பச்சைக் குழந்தைய பாத்துக்கிற மாதிரி பாத்துக்கணும். நான் யாரையும் குறை சொல்ல விரும்பல. எல்லாரும் வேலைக்கு போறாங்க; அவங்க மாமாவ பாத்துப்பாங்கன்னு நினைக்க முடியாது. நான் தான் அவரப் பாத்துக்கணும். ஒருவேளை எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, அவர யார் கவனிச்சுப்பாங்க? அந்த நினைப்பே என்னை குலை நடுங்க வைத்தது.

''ஒவ்வொரு பொண்ணும், புருஷனுக்கு முன் பூவோட, பொட்டோட தீர்க்க சுமங்கலியா போய் சேரணும்ன்னு தான் பகவானை வேண்டிப்பா. ஒருவேளை நான் அப்படி வேண்டிட்டா, அதுதான் சுயநலத்தோட உச்சம். அந்த வேதனைய நான் மாமாவுக்கு தரணுமான்னு தினமும், அழுது புலம்பினேன்.

''ஒரு மனைவியோட கடமை, கணவனுக்கு அழகான வாழ்க்கையை மட்டுமல்ல, அழகான மரணத்தையும் தரணும்ன்னு, இறைவனை இறைஞ்சணும்; நான் அப்படித் தான் வேண்டினேன்.
''கடவுளும், எனக்கு முன், அவருக்கு பூப்போல மரணத்தை தந்தார். அந்த நொடி, என் மனசு கழுவித்துடைச்ச மாதிரி நிர்சலனமாச்சு. ஏதோவொரு இனம்புரியாத நிம்மதி.

இனி எந்த நிமிடம் எனக்கு எது வந்தாலும், அத தலைவணங்கி ஏத்துக்குவேன்,''என்றாள் மாமி கண்கள் கலங்க!

இதைக் கேட்ட போது, என்னை அறியாமல், என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. எப்போதும், நம்முடைய பார்வை எல்லையில் மட்டும் உலகம் சிக்குண்டு நிற்காது என்ற நிதர்சனம் புரிபட, மாமியை தவறாக நினைத்ததற்காக, அவளிடம் மானசீகமாய் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.

எஸ்.ஷைலஜா பானு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 31, 2015 12:09 am

அருமையான கதை.

எப்போதும், நம்முடைய பார்வை எல்லையில் மட்டும் உலகம் சிக்குண்டு நிற்காது
சூப்பருங்க சூப்பருங்க
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



அவரவர் பார்வையில்.... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅவரவர் பார்வையில்.... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அவரவர் பார்வையில்.... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 31, 2015 8:49 am

நிஜம் விமந்தனி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக