ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 SK

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

ஆதார் காட்டுங்க....!!
 Dr.S.Soundarapandian

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 Dr.S.Soundarapandian

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 Dr.S.Soundarapandian

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 SK

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 Dr.S.Soundarapandian

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 Dr.S.Soundarapandian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

திரைப் பிரபலங்கள்
 heezulia

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 மூர்த்தி

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

View previous topic View next topic Go down

கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

Post by ராஜா on Tue Mar 31, 2015 12:47 pm

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள அகம் பிள்ளைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 38) சலவை தொழிலாளி. இவரது மனைவி கவிதா (30). இவர்களுக்கு சரண்யா (5), நவீன் (3) என்ற 2 குழந்தைகள் இருந்தனர். சரண்யா செட்டிகுளத்தில் உள்ள பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தாள்.

குமாருக்கும், கவிதாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த குமார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் கவிதா 2 குழந்தைகளுடன் செய்வதறியாது தவித்தார். பல நாட்கள் வீட்டில் சமையல் கூட செய்யாமல் இருந்துள்ளார். பக்கத்து வீட்டில் உள்ள குமாரின் பெற்றோர் தான் கவிதாவின் குழந்தைகளை கவனித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கவிதா தனது குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் விஷம் குடித்து குடும்பத்தோடு தற்கொலை செய்வது என்று முடிவு செய்தார். அதன்படி கணவர் குடித்த அதே விஷத்தை வாங்கி வந்தார். தான் இறந்த பிறகு குழந்தைகள் உயிர் பிழைத்து கஷ்டப்படக்கூடாதே என்று முதலில் 2 குழந்தைகளுக்கும் இரவு சாப்பாடு கொடுக்கும் போது அதில் விஷத்தையும் கலந்து கொடுத்தார்.

ஒன்றும் அறியாத பிஞ்சு குழந்தைகள் தாய் கொடுத்த விஷம் கலந்த உணவை சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். அதன் பிறகு கவிதாவும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டு விட்டு, குழந்தைகளை கட்டிப்பிடித்தபடி படுத்துக்கொண்டார். சிறிது நேரத்தில் கவிதாவும், அவரது குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பிணமானார்கள்.

இன்று காலை வழக்கம் போல் பேரன்–பேத்திகள் தங்களிடம் வராததால், குமாரின் பெற்றோர் கவிதா வீட்டுக்கு சென்றனர். அங்கு படுக்கையில் 3 பேரும் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி துடித்தனர். அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் அங்கு திரண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவமுருகன், சப்–இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, மீராள்பானு மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணமாக கிடந்த 3 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனை செய்வதற்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் தற்கொலை செய்த துக்கம் தாங்காமலும், குடும்பத்தை கவனிக்க வேறு யாரும் இல்லாததாலும், வறுமையில் சிக்கி தவிப்போமே என்ற எண்ணத்தில் குழந்தைகளை கொன்று கவிதா தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

இது குறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. -maalaimalar
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

Post by T.N.Balasubramanian on Tue Mar 31, 2015 1:06 pm

அடப் பாவமே ! கொடுமை !!
யாரை குற்றம் சொல்லுவது ?
வீட்டில் ஆண்பிள்ளை அடவு இல்லையெனில் இதுதான் நடக்கும் .
வாழ்வதற்கு வழியா இல்லை ?
ரமணியன் .


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21550
மதிப்பீடுகள் : 8169

View user profile

Back to top Go down

Re: கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

Post by ராஜா on Tue Mar 31, 2015 2:09 pm

@T.N.Balasubramanian wrote:அடப் பாவமே ! கொடுமை !!
யாரை குற்றம் சொல்லுவது ?
வீட்டில் ஆண்பிள்ளை அடவு இல்லையெனில் இதுதான் நடக்கும் .
வாழ்வதற்கு வழியா இல்லை ?
ரமணியன் .
தற்கொலை என்பது கோழைத்தனமான முடிவு தான் , ஆனால் நம் நாட்டின் தற்போதைய நிலையை பார்க்கும்போது பிள்ளைகளை விட்டுட்டு செல்வது மிக கொடுமை. அதற்கு தன கூடவே அழைத்து போவது எவ்வளவோ மேல்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

Post by T.N.Balasubramanian on Tue Mar 31, 2015 2:52 pm

அதுவும் சரிதான் ஒரு கோணத்தில் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21550
மதிப்பீடுகள் : 8169

View user profile

Back to top Go down

Re: கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum