ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 மாணிக்கம் நடேசன்

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 T.N.Balasubramanian

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

View previous topic View next topic Go down

ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா on Tue Apr 07, 2015 3:59 pmதிருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டச் சென்ற தமிழக தொழிலாளர்கள் மீது ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

திருப்பதி சேஷாசல வனப்பகுதி ஈசகுண்டாவில் சிலர் செம்மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஆந்திர போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இதில், 12 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி. கங்காராவ் கூறும்போது, ''திருப்பதி சேஷாசல வனப்பகுதி ஈசகுண்டாவில் ஸ்ரீவாரிமெட்டு என்ற இடத்தில் தமிழகத்தை சேர்ந்த 200 தொழிலாளர்கள் செம்மரம் வெட்டுவதாக ஆந்திர போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த தகவலை அடுத்து அந்த வனப்பகுதியில் ஆந்திர போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்துள்ளனர். தேடுதல் வேட்டையின்போது, போலீசார் மீது மரம் வெட்டும் தொழிலாளர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த கல்வீச்சுத் தாக்குதலில் 2 ஆந்திர போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதை தொடர்ந்து தொழிலாளர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில் சிலர் பலியாகி உள்ளனர். அதில், 9 தொழிலாளர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தையும், 3 பேர் வேலூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர் என தெரிய வந்திருக்கிறது.

மேலும், இந்த துப்பாக்கி சூட்டில் சர்வதேச செம்மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த நபரும் உயிரிழந்து உள்ளார். மீதமுள்ள 7 பேரை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்று கூறி உள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா on Tue Apr 07, 2015 3:59 pm

ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: கருணாநிதி வருத்தம்

சென்னை: ஆந்திரப் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் உட்பட இருபது பேர் பலியாகியுள்ளதாக வந்துள்ள செய்திகள் பெரிதும் வருத்தத்திற்குரியது திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஆந்திர மாநிலம், திருப்பதி வனப் பகுதியிலே, செம்மரம் வெட்டிய தொழிலாளர்கள் மீது ஆந்திரப் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் உட்பட இருபது பேர் பலியாகியுள்ளதாக வந்துள்ள செய்திகள் பெரிதும் வருத்தத்திற்குரியது.

கடந்த பல மாதங்களாக இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற போதிலும் அது பற்றி இரண்டு மாநில அரசுகளும் கலந்து பேசி அதற்கோர் முடிவு காணாத காரணத்தால் இன்றைக்கு இருபது பேர் பலியான சம்பவம் நடைபெற்றுள்ளது.

இனியாவது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இரண்டு மாநில அரசுகளும் முயற்சி எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மறைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு என் ஆறுதலைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பங்களுக்கு இரண்டு மாநில அரசுகளின் சார்பில் உடனடியாக உதவித் தொகை வழங்கிடவும் ஆவன செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா on Tue Apr 07, 2015 4:01 pm

வைகோ அதிர்ச்சி

சென்னை: ஆந்திர காவல்துறையினரால் 12 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது என்று வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

ஸ்ரீவாரு மெட்டு சேசாலம் வனப்பகுதியில் ஆந்திர காவல்துறையினரால் 12 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

மரங்களை வெட்டிக் கடத்துகின்ற பெரும் திமிங்கலங்களும், பண முதலைகளும் எதிலும் சிக்காமல் தப்பித்துக் கொள்கின்றனர், அன்றாடம் உழைக்கின்ற அப்பாவி கூலித் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டிருந்தால், அவர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுதான் முறையாகும்.

காடுகளில் உலவும் விலங்குகள், பறவைகளைக்கூட சுட்டுப் பொசுக்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால், 12 தமிழர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் ஆந்திர காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இப்படுகொலையில் ஈடுபட்ட காவல்துறையினருக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, இதற்குக் காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்கு தொடரப்பட்டு பணி நீக்கம் செய்வதுடன், கைது செய்யப்பட வேண்டும். பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

துப்பாக்கிச் சூட்டில் பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தக்க நிவாரணத்தை ஆந்திர மாநில அரசு வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா on Tue Apr 07, 2015 4:04 pm

நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

செம்மரக் கடத்தல் விவகாரத்தில் முதலாளிகளாக இருக்கும் ஆந்திர முதலைகளை விட்டுவிட்டு மரம் வெட்டும் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்படும் தமிழர்கள் மீது அடுத்தடுத்து வழக்குகளைப் பாய்ச்சியும் தாக்குதல் நடத்தியும் வெறியாட்டம் போடும் ஆந்திர அதிகாரிகள், உச்சபட்ச கொடூரமாக 12 தமிழர்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். ஆந்திர அதிகாரிகளின் இந்த மனசாட்சியற்ற கொடூரத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது.

திருப்பதி சேசாத்திரி மலையில் ஸ்ரீவாரிமெட்டு ஈசகுண்டா பகுதியில் மரம் வெட்டும் கும்பல் செம்மரங்களை வெட்டி கடத்தியதாகவும் அப்போது ஆந்திர வனதுறையினருக்கும் அவர்களுக்கும் மோதல் நடந்ததாகவும் இதில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் திரைக்கதைகளையே மிஞ்சக்கூடிய அளவுக்கு கற்பனைக் கதையை சித்தரித்து 20 பேரைக் கொன்று வெறியாட்டம் போட்டிருக்கிறது ஆந்திர அதிகாரத் தரப்பு. முதலில் வனத்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றதாகக் கசிந்த தகவல் அடுத்த சில மணி நேரங்களிலேயே ஆந்திர மாநில சிறப்பு பிரிவு காவல் துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூடாக மாற்றப்பட்டிருக்கிறது.

கொல்லப்பட்ட 20 பேர்களில் 12 பேர் தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி தொழிலாளர்கள் என்பது நெஞ்சை நொறுக்கக்கூடிய துயரமாக ஒவ்வொரு தமிழர்களையும் கொதிக்க வைத்திருக்கிறது. மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவி தமிழர்களைச் சிட்டுக் குருவிகளைப் போல் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். மரம் வெட்டுவது தவறு என்பது மறுக்க முடியாது. அதற்காக மனிதர்களை வெட்டுவது நியாயமாகிவிடுமா? வெட்டப்பட்ட மரத்தை நாளைக்கு ஒரு கன்று வைத்து நாம் உருவாக்கிவிடலாம். ஆனால், சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி உயிர்களை ஆந்திர அதிகாரிகளால் மீட்டுத்தந்துவிட முடியுமா? ஒரு மரக்கட்டைக்குக் கொடுக்கிற மரியாதை மனித உயிருக்குக் கிடையாதா?

அப்பாவித் தொழிலாளர்கள் மீது கொலைத்தாக்குதல் நடத்திய ஆந்திர அதிகாரிகள் செம்மரக் கடத்தலின் முதலாளிகள் மீது என்றைக்காவது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா? ஒவ்வொரு முறையும் மரம் வெட்டியதாகச் சொல்லி தொழிலாளர்களைக் கைது செய்யும் ஆந்திர அரசு, அந்தத் தொழிலாளர்கள் யாருக்காக மரம் வெட்டினார்கள், அவர்களை மரம் வெட்டப் பணித்தது யார் என்பதை எல்லாம் என்றைக்காவது விசாரித்து அந்த முக்கியப் புள்ளிகளை என்றைக்காவது கைது செய்திருக்கிறார்களா?

தமிழனுக்குச் செல்லும் இடமெல்லாம் அடி என்கிற நாதியற்ற நிலைமை நாளுக்கு நாள் தொடருவதை இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. மேக்கேதாட்டூ அணை கட்டக்கூடாது என்பதற்காக கர்நாடகா செல்லும் தமிழன் அடி வாங்குகிறான். முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமக்கான உரிமையைக் கேட்ட பாவத்துக்காக கேரளா செல்லும் தமிழன் அடி வாங்குகிறான். சிங்கள இனவெறிக்கு ஆளாகி அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தில் தமிழன் அடிவாங்கி வருகிறான். இந்நிலையில் செம்மரக் கடத்தல் எனக் கூறி அப்பாவிக் கூலித் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது நாற்புறமும் தமிழனுக்கான பாதுகாப்பற்ற சூழலும் கேட்கத் துப்பற்ற நிராதரவையுமே காட்டுகிறது.

12 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தை வெறும் மரக்கடத்தல் பிரச்னையாக மட்டும் பார்க்க முடியாது. இந்திய இறையாண்மையை கூறுபோடத்தக்க கொடூரத்தை சர்வசாதாரணமாக நிகழ்த்தி இருக்கிறார்கள் ஆந்திர அதிகாரிகள். அப்பாவித் தொழிலாளர்களைக் காட்டுமிராண்டிகளாகச் சுட்டுக் கொன்ற ஆந்திர மாநில அதிகாரிகள் அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் என்ன நடந்தது என்பதை நியாயமான மனித உரிமைக் குழுக்களை வைத்து விசாரிக்க வேண்டும். நியாயமான விசாரணைக்கு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவித் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பாற்ற உடனடியாக உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். தமிழர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் இனியும் தொடர்ந்தால் நாம் தமிழர் கட்சி மிகக் கடுமையான போராட்டங்களைக் கையிலெடுக்கும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா on Tue Apr 07, 2015 4:05 pm

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கை:

இன்று (07-04-2015)அதிகாலை ஆந்திர மாநிலம் ஸ்ரீவாரு மெட்டு சேசாலம் வனப்பகுதியில் 12 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டு படுகொலை செய்தனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் அதற்காக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அதே நேரம் செம்மரக்கட்டை கடத்தலில் பெரும் புள்ளிகளும் அரசியல்வாதிகளும் பின்னணியில் உள்ளனர். அவர்களை கண்டறிந்து கைது செய்வதை விடுத்து சாதாரண கூலித்தொழிலாளர்களை காக்கை குருவிகளை சுட்டுக் கொள்வதை போன்று சுடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. நிராயுதபாணிகளை கண் மூடித்தனமாக சுட்டு கொள்வது அநியாயமானது. காட்டுமிராண்டித்தனமானது. மனித உரிமைகளுக்கு எதிரானது.

இதற்கு காரணமான காவல்துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். செம்மரக்கட்டை கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். படுகொலை செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா on Tue Apr 07, 2015 4:05 pm

தமிழர்களை சுட்டு கொன்ற ஆந்திர போலீஸ் மீது நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை: 12 தமிழர்கள் உட்பட 20 பேரை சுட்டுக் கொன்ற ஆந்திர காவல்துறையின் துணைத் தலைவர் காந்தா ராவ் உள்ளிட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 20 பேரை, ஆந்திர மாநிலக் காவல்துறையின் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் சுட்டுக் கொன்றுள்ளனர். மனித நேயமின்றி, கொலைவெறியுடன் ஆந்திரக் காவல்துறை நடத்திய இந்தத் தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இக் கொடியத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆந்திர மாநில வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் நீண்டநாட்களாக நடப்பதாக கூறப்படுகிறது. இதற்குக் காரணமானோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. செம்மரங்களை வெட்டிக் கடத்துபவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி சட்டத்தின்படி தண்டனை பெற்றுத் தருவதுதான் காவல்துறையின் பணி ஆகும். அதை விடுத்து, அப்பாவி தொழிலாளர்களை காக்கை குருவிகளைப் போல சுட்டுக் கொல்வது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத கொலைக் குற்றமாகும். சுட்டுக் கொல்லப்பட்ட 12 தமிழர்களும் ஆந்திராவில் கல் உடைக்கும் பணி மற்றும் மரம் வெட்டும் பணிக்காக ஆள் தேவை என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டவர்கள் ஆவர்.

தினமும் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை ஊதியம் கிடைக்கும் என்று ஆசை காட்டி அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவிகளை விசாரணை கூட நடத்தாமல் காவல்துறை சுட்டுக் கொன்றிருப்பதும், தற்காப்புக்காகத் தான் அவர்களைச் சுட்டுக்கொன்றதாக பொய்க் காரணம் கூறுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. செம்மரக் கடத்தலைக் காரணம் காட்டி தமிழகத்தைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்றும் மரம் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் தமிழகத்தின் செயல்படாத அரசு, ஆந்திர அரசைக் கண்டிக்காததுதான் தமிழர்களை சுட்டுக்கொல்லும் அளவுக்கு துணிச்சலைக் கொடுத்திருக்கிறது.

அந்த வகையில் இக்கொலைகளுக்கு தமிழக அரசும் பொறுப்பேற்க வேண்டும். 12 தமிழர்கள் உட்பட 20 பேரை சுட்டுக் கொன்ற ஆந்திர காவல்துறையின் துணைத் தலைவர் காந்தா ராவ் உள்ளிட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தாக்குதல் குறித்து பணியிலுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்துவதுடன், கொல்லப்பட்ட 20 தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் ஆந்திர அரசு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா on Tue Apr 07, 2015 4:12 pm

3 ஆந்திர பஸ்கள் சிறைபிடிப்பு

வேலூர்: திருப்பதி வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து வேலூரில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. அப்போது, வேலூர் பஸ்ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று ஆந்திர பேருந்துகளை ஆர்பாட்டக்காரர்கள் சிறைபிடித்தனர். பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா on Tue Apr 07, 2015 4:19 pm

சென்னையில் ஆந்திரா கிளப் முற்றுகை- சந்திரபாபு கொடும்பாவி எரிப்பு- 100 பேர் கைது!!

12 அப்பாவித் தமிழர்களை சுட்டுப் படுகொலை செய்த ஆந்திராவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள ஆந்திரா கிளப்பை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

ஆந்திராவின் திருப்பதி அருகே வனப்பகுதியில் செம்மரங்களை வெடியதாகக் கூறி 12 அப்பாவி தமிழர்கள் உட்பட 20 பேரை அம்மாநில போலீசார் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இந்த படுகொலை சம்பவம் தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது.

இப்படுகொலைக்கு தமிழகத்தின் அரசியல்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஆந்திரா கிளப்பை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. இதில் தந்தை பெரியார் தி.க மற்றும் மே 17 இயக்கத்தினரும் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழர் படுகொலை: சென்னையில் ஆந்திரா கிளப் முற்றுகை- சந்திரபாபு கொடும்பாவி எரிப்பு- 100 பேர் கைது!! இதேபோல் கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா on Tue Apr 07, 2015 4:20 pm

20 தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை - மனித உரிமை மீறலே இல்லை - ஆந்திரா அரசு!!

ஹைதராபாத்: செம்மரம் கடத்தியதாக 12 தமிழர் உட்பட 20 தொழிலாளர்களை சுட்டுப் படுகொலை செய்துவிட்டு இதில் மனித உரிமை மீறல் எதுவுமே இல்லை என்று சாதிக்கிறது ஆந்திரா அரசு.

ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக கூறி இன்று அதிகாலை அம்மாநில போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இத்தேடுதல் நடவடிக்கையின் போது 20 தொழிலாளர்களை அம்மாநில காவல்துறை சுட்டுக் கொன்றது. இதில் 12 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஆந்திரா உள்துறை அமைச்சர் சின்ன ராஜகப்பாவிடம் செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர் விளக்கம் அளிக்கையில், செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாலேயே சுட்டுப் படுகொலை செய்தோம் என்று கூறியுள்ளனர். இதனிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆந்திரா அரசு உத்தரவிட்டுள்ளது.

எப்படி இந்த சம்பவம் நடந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த ஆந்திரா அமைச்சர் சின்ன ராஜப்பா, இச்சம்பவத்தில் எந்த ஒரு மனித உரிமை மீறலுமே இல்லை. செம்மரக் கடத்தல்காரர்களும் தொழிலாளர்களும் மரங்களை வெட்டி கடத்த முயன்றனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா on Tue Apr 07, 2015 4:21 pm

12 தமிழர்கள் பலிக்கு பதில் சொல்லுமா ஆந்திரா அரசு…: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

ஆந்திர வனப்பகுதியில் 12 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டித்தலைவர் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆந்திர மாநிலம், திருப்பதி சேஷாத்திரி மலையில் ஸ்ரீவாரிமெட்டு ஈசகுண்டா பகுதியில் செம்மரம் வெட்டும் கும்பலை பிடிக்க அந்த மாநில வனத்துறையினர் முயற்சித்த போது 20 பேர் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாக்கப்பட்டுள்ளனர். இதில் 12 தமிழர்கள் பலியாக்கப்பட்டதாக நம்பகத்தகுந்த தகவல்கள் உறுதி செய்கின்றன. மரம் வெட்டும் கும்பலை துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. வனத்துறையினரின் இத்தகைய தாக்குதல் பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திடுகின்றன.

இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு ஆந்திர மாநில அரசுக்கு இருக்கிறது. சமீபகாலமாக செம்மர கடத்தலில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்வதிலும் நடவடிக்கை எடுப்பதிலும் சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. இவை குறித்து இரு மாநில சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கொண்ட குழுவின் மூலமாக பாரபட்சமற்ற விசாரணைக்கு ஆந்திர மாநில அரசு உத்தரவிட வேண்டும் என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by ராஜா on Tue Apr 07, 2015 4:22 pm

உயிரிழப்பு வருந்தத்தக்க செய்தி சோகம் , இது போன்ற அரசாங்க விரோத செயலில் ஈடுபடும் பொது பாதிக்கபடுவது அப்பாவி கடைநிலை தொழிலாளர்கள் தான்.

நீண்ட காலமாக இந்த மரம் வெட்டும் தொழில் நடைபெற்று வருகிறது , இங்கிருந்து கூட்டம் கூட்டமாக பேருந்திலும் ரயிலிலும் சென்று செம்மரம் வெட்டி கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா on Tue Apr 07, 2015 4:41 pm

துப்பாக்கிச்சூடு குறித்து சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக அரசு அவசர கடிதம்.

திருப்பதி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்துமாறு ஆந்திரா முதல்வர் சந்திரபாபுவுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. சுட்டுக் கொன்றதற்கு பதில் 20 பேரையும் கைது செய்திருக்கலாம் என்றும் துப்பாக்கிச் சூட்டில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருக்கலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது. விசாரணை நடத்தினால் முழு உண்மைகள் வெளியாகும் என தமிழக அரசு கருத்து தெரிவித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by T.N.Balasubramanian on Tue Apr 07, 2015 4:42 pm

தமிழர்கள் என்றால் இளிச்சவாயர்களா என்று ஏற்கனவே பதிவு செய்த படி , அண்டை நாடுகளிலும் ,(லங்கா , மாலத்தீவு ) அண்டை மாநிலங்களிலும் கர்நாடகா ,ஆந்திரா , கேரளா முதலிய இடங்களிலும் கொடுமைக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் . தமிழ்நாட்டிலேயே தமிழர்களை கிண்டல் அடிக்கும் குழுவும் இருக்கிறது .
தமிழ் மக்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய தருணம் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21520
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா on Wed Apr 08, 2015 4:07 pm

ஆந்திரத்திடம் தமிழக அரசு கெஞ்சுவது தவறானது: ராமதாஸ்

திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், ஆந்திர அரசிடம் தமிழக அரசு கெஞ்சுவது தவறான அணுகுமுறை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தை உடனடியாக குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்று தமிழர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ஆந்திர மாநிலம் சேஷாசலம் மலைப் பகுதியில் 20 தமிழர்கள் ஆந்திரக் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன. இது எதிர்பாராமல் நடந்த மோதலின் விளைவு அல்ல... திட்டமிட்டு நடத்தப்பட்ட போலி மோதல் படுகொலைகள் என்று நம்புவதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்களும் வெளியாகியிருக்கின்றன.

சேஷாசலம் மலைப்பகுதியில் உள்ள ஈதலகுண்ட, சீக்கட்டி தீகலகோண ஆகிய இடங்களில்தான் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் இருந்த செம்மரங்களை வெட்டிக் கடத்தும் முயற்சியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்; அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது, கற்களை வீசியதால் தற்காப்புக்காக சுட்டோம் என்று ஆந்திரக் காவல்துறையினர் கூறுவதை ஏற்க முடியாது. ஏனெனில், தொழிலாளர்கள் சுட்டுகொல்லப்பட்ட இடங்களில் ஒன்றான ஈதலகுண்டு பகுதியில் செம்மரங்களே கிடையாது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் புதர்களைத் தவிர வேறு எதுவும் கிடையாது. அப்பகுதியில் தொழிலாளர்கள் செம்மரம் வெட்டினார்கள் என்றும், காவல்துறையினர் சென்ற போது மறைந்திருந்து கற்களை வீசித் தாக்கினார்கள் என்பதும் பொய்களால் புனையப்பட்ட கட்டுக்கதை என்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

கொல்லப்பட்ட தொழிலாளர்கள் வெட்டி வீழ்த்தியதாக கூறி பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் அனைத்து பல ஆண்டுகள் பழமையானவை ஆகும். பழைய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட அந்தக்கட்டைகளை அங்கு போட்டு காவல்துறையினர் நாடகம் ஆடியுள்ளனர். அக்கட்டைகளில் பழைய வழக்கு எண் எழுதப்பட்டிருப்பதும், அதை மறைக்கும் நோக்குடன் அவற்றின் மீது காவல்துறையினர் பெயிண்ட் பூசியிருப்பதுமே இது நாடகம் என்பதை வெட்ட வெளிச்சமாக்கும். பழையக் கட்டைகளா... புதிய கட்டைகளா? என்பதைக் கூட பார்க்காமல் இந்த படுகொலைகள் குறித்த தங்களின் கருத்தை விசாரணை அதிகாரிகள் நம்பி விடுவர் என்று காவல்துறையினர் கருதுகிறார்கள் என்றால் அவர்களின் படுகொலைகளுக்கு ஆந்திர அரசும், அதன் விசாரணை அதிகாரிகளும் எந்த அளவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

மோதலின்போது தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தால் அவர்களது உடலின் பல பகுதிகளில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த காயம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொல்லப்பட்ட 20 பேருக்கும் மார்பு மற்றும் நெற்றியில் தான் குண்டு பாய்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, மிகவும் நெருக்கத்தில் வைத்து அவர்களது உடலில் குண்டு பாய்ச்சப்பட்டிருக்கிறது. அவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நெருக்கமாக நிற்கவைத்து தான் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை இவை உறுதி செய்கின்றன. தொழிலாளர்களின் உடல்களில் நெருப்புக் காயங்களும் காணப்படுவதால் கொல்லப்படுவதற்கு முன்பு அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.

ஆந்திரக் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படைத் தலைவரான காந்தராவ், கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழகக் காவல்துறை அதிகாரிகளுக்கு எழுதியிருந்த கடிதத்தில், தமிழகத் தொழிலாளர்கள் ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட வந்தால் அவர்களைச் சுட்டுக் கொல்வோம் என்று எச்சரித்திருந்தார். தமிழகத் தொழிலாளர்களை சுட்டு கொல்ல வேண்டும் என்ற வெறி அவருக்கு இருந்ததையே இது காட்டுகிறது. அதுமட்டுமின்றி, தமிழர்களை சுட்டுக்கொல்ல முடிவு செய்து விட்டு, அதற்கான காரணத்தை உருவாக்குவதற்காகக் கூட இப்படி ஒரு கடிதத்தை காந்த ராவ் எழுதியிருக்கக் கூடும்.

கொல்லப்பட்ட தொழிலாளர்களின் உடல்கள் காவல்துறையினரால் கையாளப்பட்ட விதம் இன்னும் கொடுமையானது. விலங்குகளின் உடல்களை எடுத்து வருவதைப் போல மூங்கிலில் கட்டித் தொங்க விடப்பட்ட நிலையில் தான் தொழிலாளர்களின் உடல்கள் கொண்டு வரப்பட்டன. ஒரு குறிப்பிட்ட தொலைவுக்குப் பிறகு அசுத்தமான டிராக்டரில் ஒன்றின்மீது ஒன்றாக உடல்களைப் போட்டு குப்பையைப் போல அள்ளிச் சென்றுள்ளனர். படுகொலைகள் நடந்த இடத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் செல்வதற்கு பாதை உள்ளது. அப்பாதையில் தான் பத்திரிகையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவ்வாறு இருக்கும் போது தமிழகத் தொழிலாளர்களின் உடல்களை மிக மோசமான முறையில் ஆந்திரக் காவல்துறையினர் கையாண்டது அவர்களின் மனதில் புதைந்து கிடக்கும் தமிழகத் தொழிலாளர்களுக்கு எதிரான வன்மத்தையும், வெறுப்பையும் தான் காட்டுகின்றன.

ஏற்கனவே நான் கூறியதைப் போல சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் அனைவரும் அதிக கூலிக்கு ஆசைப்பட்டு போன அப்பாவிகள் தான். ஆந்திரத்தைச் சேர்ந்த மாஃபியா கும்பல்கள் தான் செம்மரங்களை கடத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. அவர்களுக்கு ஆந்திரத்திலுள்ள அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளுடனும் நெருங்கியத் தொடர்பு உள்ளது. இந்தக் கூட்டணி ஆந்திர வனத்தை மொட்டையடித்து வருகிறது. இதை மூடி மறைக்கவே அப்பாவித் தமிழர்களைக் கொன்று கடத்தல்காரர்களாக சித்தரித்து தங்களை உத்தமர்களாகக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரும் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருப்பதால், அதன் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் காந்தாராவ் உள்ளிட்ட காவல்துறையினர் மீது கொலை மற்றும் கூட்டுச் சதி வழக்குத் தொடர்ந்து கைது செய்ய வேண்டும். ஆந்திர அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகள் குறித்து அம்மாநில அரசே விசாரிப்பது முறையாக இருக்காது. எனவே, இது பற்றி உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரிக்க வேண்டும்.

தமிழக தொழிலாளர்கள் கொல்லப்பட்ட விஷயத்தில் தமிழக அரசு அலட்சியமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் பிகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதை பிகார் மாநில அரசு தேசிய பிரச்சினையாக்கியது. இப்போது 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் நியாயமான விசாரணை நடத்தும்படி ஆந்திரத்திடம் தமிழகம் கெஞ்சுகிறது. இது தவறான அணுகுமுறையாகும். உடனடியாக குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்று தமிழர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by T.N.Balasubramanian on Wed Apr 08, 2015 4:24 pm

ராமதாஸ் கூறியுள்ளபடி , ராமதாஸ் கூறுவதற்கு முன்னமே , OPS செய்து இருந்தால் ,அதன் விளைவாக சென்னைக்கு வரவேண்டிய கிருஷ்ணா நீரில் , பங்கம் ஏற்பட்டால் , அப்பாவும் இதே ராமதாஸ் , இந்த விவகாரத்தை சரியான முறையில் கையாள தெரியவில்லை என்பார் .
எப்பிடி எல்லாம் குடைசல் தரலாம் என்று ரூம் போடாமல் தோட்டத்தில் உட்கார்ந்து யோசிப்பவர் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21520
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா on Wed Apr 08, 2015 4:35 pm

ஆந்திராவில், 20 கூலித்தொழிலாளிகள் மீது நடந்தது என்கவுன்டர் இல்லை; அப்பட்டமான கொலை' என, தமிழக போலீசார் கருத்து தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து, தமிழக போலீசார் கூறியதாவது:

செம்மரம் கடத்தலின் பின்னால் மிகப்பெரிய கும்பல் செயல்படுகிறது. அவர்களின் பிடியில், திருவண்ணாமலை, வேலுார், சேலம், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த, கூலித்தொழிலாளிகள் சிக்கித் தவிக்கின்றனர்.அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட, கூலித்தொழிலாளிகள் தான், ஆந்திர மாநில போலீசாரின் துப்பாக்கி தோட்டாவுக்கு பலியாகி உள்ளனர்.அந்த சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

*தொழிலாளிகள் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில், உடல்களுக்கு அருகிலேயே, பழைய செம்மரக்கட்டைகள் கிடத்தப்பட்டு உள்ளன; இது நம்பும்படியாக இல்லை.

*உடல்களுக்கு அருகில் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்கள், அறுபடாத செருப்பு, திட்டமிட்டு வைக்கப்பட்ட பை கிடக்கின்றன. இவையெல்லாம் ஜோடிக்கப்பட்டவையே.

*துப்பாக்கி சூடு நடத்தும் போது, குற்றவாளியின் மார்பையோ, நெற்றி பொட்டையோ குறி பார்த்து சுட முடியாது. அப்படி தோட்டா பாய்ந்தால் ஆச்சரியம்.

* முழங்காலுக்கு கீழே சுடப்பட்டு, ஓட முடியாமல் சரிந்து விழச் செய்து, மார்பில் சுடலாம். இவை அனைத்தும் போலீசாரின் உயிரை பாதுகாத்துகொள்ளவே. ஆனால், ஆந்திராவில் நடந்த என்கவுன்டரில், 20 பேருக்கும் நெற்றிபொட்டு, மார்பு பகுதியில் துப்பாக்கி சூடு இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.இதனால், உண்மையான என்கவுன்டர் என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை; அப்பட்டமான கொலை என்றே சொல்லத்தோன்றுகிறது.

* இருபதுபேரை ஒரு நேரத்தில், மார்பில், நெற்றிப் பொட்டில் சுட்டு, என்கவுன்டர் செய்யவே முடியாது. அவ்வாறு நடந்து இருந்தால், அந்த இடத்தின் சூழலே காட்டிக்கொடுத்து விடும்.

* செம்மரங்களை வெட்டச்சென்ற கூலித்தொழிலாளிகள் கூண்டோடு சிக்கிய போது, இந்த கொடூர சம்பவத்தை போலீசார் அரங்கேற்றி இருக்கலாம்.

* கூலித்தொழிலாளிகளிடம் அரிவாள், கோடாரி உள்ளிட்ட ஆயுதங்கள் மட்டுமே இருந்துள்ளன. அதைவைத்து, துரத்தி வரும் போலீஸ் பெரும்படையை, அவர்களால் என்ன செய்ய முடியும். கற்களை வீசலாம். அரிவாளால் வெட்ட வந்தனர் என்பதும் கேள்விக்குறியே.

* செம்மரக்கட்டை கடத்தலுக்கு பின்னால், இருக்கும் பெரும் தாதாக்களை கண்டறிந்து, அவர்களின் கொட்டத்தை அடக்கினால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு காண இயலும்.

அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை:

ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தமிழகத்தை சேர்ந்த, 12 கூலித்தொழிலாளிகள் இறந்தது தொடர்பாக, நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் பன்னீர்செல்வம், அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். உள்துறை செயலர் அபூர்வவர்மா, டி.ஜி.பி., அசோக்குமார், உளவுத்துறை ஐ.ஜி., கண்ணப்பன், அரசு ஆலோசகர்கள், ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விசாரணைக்கு போலீஸ் வரவில்லை:

சித்துார் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயசந்த் கூறியதாவது:சித்துார் மாவட்ட கலெக்டர் சித்தார்த் உத்தரவின் பேரில், நான் நேரில் சென்று பார்வையிட்டேன்; ஒரு இடத்தில் ஒன்பது சடலங்களும், மற்றொரு இடத்தில், 11 சடலங்களும் கிடந்தன. நடந்த சம்பவம் குறித்து அறிய, துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசாரை விசாரணைக்கு அழைத்தோம்; ஆனால், இரவு 7:00 மணியாகியும் யாரும் வரவில்லை. அவர்களிடம் விசாரணை நடத்திய பின் தான், சம்பவம் குறித்த முழு விவரங்கள் தெரிய வரும்.இறந்தவர்களின் அடையாளமும், இதுவரை தெரியவில்லை. முதல் தகவலறிக்கையும் இன்னும் பதிவு செய்யப்படாததால், அவர்களின் உறவினர்களிடம் தகவல் கூறவில்லை.

இறந்தவர்களின் உடல்களை, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

காங்., முன்னாள் எம்.பி., கண்டனம்:

சம்பவ இடத்தை, திருப்பதி தொகுதியின் காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ஜிந்தா மோகன் பார்வையிட்ட பின் கூறுகையில், ''காங்கிரஸ் ஆட்சியில், இதுபோன்ற என்கவுன்டர் நடந்ததில்லை. சம்பவத்தை நேரில் பார்க்கும் போது, போலீசாரே அழைத்து வந்து சுட்டு கொன்றுள்ளதாக தெரிகிறது. மரங்களை வெட்டும்போது தாக்கப்பட்ட சம்பவம் போல் இல்லை. மேலும், ஏற்கனவே பறிமுதல் செய்த ஆயுதங்களை, இவர்கள் வைத்திருப்பதாக கூறி, போலீசார் தப்பித்துக் கொள்வதற்காக இங்கு போட்டுள்ளனர். இந்த செயல் கண்டிக்கத்தது,'' என்றார்.

பிடித்து விசாரிக்காதது ஏன்?

இதுகுறித்து, திருப்பதியைச் சேர்ந்த ராமையா என்பவர் கூறுகையில், ''கூலித் தொழிலாளர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக வருகின்றனர். அவர்களை சுட்டுக் கொன்றது, ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்களை ஏவி விடும் தரகர்களை கண்டிக்காமல், ஏழை தொழிலாளர்களை சுட்டுக் கொல்வது கண்டிக்கத்தக்கது. கூலித்தொழிலாளர்களை பிடித்து உரிய விசாரணை நடத்தியிருந்தாலே, கடத்தல் தொழிலில் ஈடுப்ட்டுள்ள முக்கிய புள்ளிகளின் விவரங்கள் தெரிய வந்திருக்கும்,'' என்றார்.

பலியானவர்கள் யார்? உறவினர்கள் தவிப்பு:

திருப்பதி வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த, 20 பேரில், திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையை சேர்ந்த நம்மியம்பட்டு, கானமலை, மற்றும் வீரப்பனுார் கிராமங்களை சேர்ந்த, ஒன்பது பேர் அடங்குவர். முதற்கட்டமாக, இறந்தவர்களின் உடலை அடையாளம் காணும் பணியில், ஆந்திர போலீசார் ஈடுபட்டு உள்ளனர். ஆனால், நேற்று மாலை வரை, ஜவ்வாது மலை பகுதியில் இருந்து மரம் வெட்டச் சென்று இறந்தவர்கள் யார் என தெரிவில்லை. மரம் வெட்ட சென்ற தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், யார் இறந்தது என, தெரியாமல் தவித்து வருகின்றனர்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா on Wed Apr 08, 2015 4:39 pm

லியான 20 தமிழர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: தமிழக அரசு

திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 20 தமிழர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவியை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீவாரி மெட்டு மற்றும் ஈசகுண்டா பகுதியில் உள்ள சேஷாசல வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர் 7.4.2015 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 20 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதை அறிந்த தமிழக முதல்வர், ஆந்திர மாநில முதல்வருக்கு இது தொடர்பாக 07.04.2015 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்கள்.

அந்தக் கடிதத்தில், இந்தச் சம்பவத்தில் இறந்த அனைவரும் தமிழ்நாட்டிலுள்ள திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அதற்காக நடத்தப்பட்ட நடவடிக்கையில் பலரும் இறந்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் ஒரு வேளை சட்டத்துக்கு விரோதமான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும் கூட, இவ்வளவு பேர்கள் இறந்திருப்பதைப் பார்க்கும்போது அதிரடிப் படையினரின் நடவடிக்கைகள் அனைத்தும் கட்டுப்பாட்டுடன்தான் நடந்ததா என்பது சந்தேகத்தை எழுப்புவதாகவும் கூறியிருந்தார்.

அவர்கள் சட்ட விரோதமாக மரம் வெட்டுவதில் ஈடுபட்டிருந்தாலும் கூட, அவர்களை சுட்டுக்கொல்லாமல் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என்றும், இந்தச் சூழ்நிலையில் ஒரு விரைவான மற்றும் நம்பகமான விசாரணைக்கு ஆணையிடுமாறும், அப்பொழுதுதான் உண்மைநிலை அறியப்பட்டு, மனித உரிமை மீறியவர்களை பொறுப்பாக்க இயலும் என்றும், மனித

உரிமை மீறல் குற்றம் நடந்திருந்தால் இறப்பை ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், மேலும் இறந்தவர்கள் குடும்பத்தினர்களுக்கு போதிய நிவாரணம் அளிக்கப்படவேண்டும் என்றும் அக்கடிதத்தில் தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா on Wed Apr 08, 2015 4:39 pm


20 பேர் உடல்களை கொண்டுவர ஏற்பாடு

இச்சம்பவத்தில் பலியான பெரும்பாலோர் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அம்மாவட்டங்களின் மாவட்ட வருவாய் அலுவலர்களை அடங்கிய குழு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் திருப்பதிக்குச் சென்று இறந்தவர்களின் உடல்களை உடனடியாக திரும்ப கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினர் இறந்தவர்களின் உடல்களை திரும்ப கொண்டு வர தமிழக அரசின் சுகாதாரத் துறையின் அமரர் ஊர்திகளை எடுத்துச்செல்வார்கள். மேலும் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு அவற்றைத் திரும்ப கொண்டு வருவதற்காக சம்பந்தப்பட்ட உறவினர்களை தொடர்பு கொண்டு அவர்களையும் திருப்பதி அழைத்துச் செல்ல சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு பிரேத பரிசோதனை முடிப்பதற்காக திருப்பதியில் காவல் துறையினருடன் இணைந்து செயல்படுவதற்காக மஞ்சுநாதா, இ.கா.ப., காவல்துறை தலைவர் தலைமையில் காவலர் குழு ஒன்று திருப்பதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தத் துயரமான சம்பவத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இறந்தவர் ஒவ்வொருவருடைய குடும்பத்திற்கும் தலா ரூ.3 லட்சம் வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா on Wed Apr 08, 2015 4:41 pm

சென்னை - ஆந்திரா பேருந்துகள் 2-வது நாளாக நிறுத்தம்

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு 2வது நாளாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆந்திர பேருந்துகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆந்திரா செல்லும் ரயில்களிலும் போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.

திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிய 20 தமிழர்களை ஆந்திர அதிரடிப்படை மற்றும் வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் இன்று(புதன்கிழமை) 2வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளன. நெல்லூர், திருப்பதி, நகரி, குண்டூர் செல்லும் பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by ayyasamy ram on Wed Apr 08, 2015 8:08 pm

தற்காப்புக்காகத்தான் 20 பேரை சுட்டு கொன்றோம் என்கிறார்
டி.ஐ.ஜி. காந்தாராவ்
--
20 தமிழர்களை சுட்டுக் கொன்றது எப்படி என்பது பற்றி ஆந்திர சிறப்பு படை போலீஸ் டி.ஐ.ஜி. காந்தாராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பேட்டியில் அவர், ’’கடந்த 4–ந் தேதி (சனிக்கிழமை) மாலையில் 500–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செம்மரம் வெட்டுவதற்காக ஆந்திர காடுகளில் புகுந்தனர். அவர்கள் அங்கேயே தங்கி இருந்து செம்மரகட்டைகளை வெட்டினார்கள். அவர்கள் காடுகளில் கும்பல் கும்பலாக ஆங்காங்கே குவிந்திருந்தனர்.

திருப்பதி அருகே சித்தூரில் சந்திரகிரி மண்டல பகுதியில் உள்ள சீகடிகோணை பகுதியில் 150 பேர் கொண்ட கும்பல் செம்மர கட்டைகள் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தது. பின்னர் அங்கிருந்து 1½ கி.மீ. தொலைவில் உள்ள ஈத குண்டா பகுதியில் மேலும் 150 பேர் கொண்ட கும்பல் செம்மரகட்டைகளை வெட்டிக் கொண்டிருந்தனர். மற்றொரு இடத்தில் 30 பேர் கொண்ட கும்பல் செம்மரக் கட்டைகளை வெட்டியது.

இதற்கிடையே செம்மர கட்டைகளை வெட்டுவதாக தகவல் கிடைத்ததும் எனது தலைமையில் சிறப்பு படையினர் அங்கு விரைந்தோம். எங்கள் குழுவில் 10 பேர் கொண்ட வனத்துறை ஊழியர்களும், 14 பேர் கொண்ட சிறப்பு படை போலீசாரும் இடம் பெற்றிருந்தனர்.

செம்மர கடத்தல் கும்பல் இருக்கும் சீகடிகோணை என்ற இடத்தை அடைந்த போது அங்கு ஒரு இடத்தில் 150 பேர் இருந்தனர். நாங்கள் 24 பேர்களே இருந்தோம். அதிகாலை 4½ மணிக்கு பவுர்ணமி நிலா வெளிச்சம் அதிகமாக இருந்ததால் காட்டில் எத்தனை பேர் கொண்ட கும்பல் இருந்தது என்பதை எங்களால் நன்றாக பார்க்க முடிந்தது.

முதலில் செம்மர கடத்தல் கும்பலை சரண் அடையுமாறு நான் எச்சரிக்கை செய்தேன். நாங்கள் குறைவான பேரே சென்றதால் அந்த கும்பல் எங்களை கண்டு பயப்பட வில்லை. மாறாக எங்களை தாக்க தொடங்கினார்கள். செம்மர கடத்தல் கும்பலில் உள்ளவர்கள் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தனர். கற்களையும் ஆங்காங்கே குவித்து வைத்திருந்தனர்.

எங்களை நோக்கி அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். நாட்டு துப்பாக்கியாலும் சுட்டனர். அவர்கள் தாக்கிய படியே எங்களை நோக்கி முன்னேறி வந்தனர். இதனால் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினோம். இதில் 11 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

மேலும் ஈதகுண்டா பகுதியிலும் தங்கியிருந்த மற்றொரு கும்பல் மீதும் துப்பாக்கி சூடு நடத்தினோம். இதில் 9 பேர் பலியானார்கள். செம்மர கடத்தல் கும்பல் எங்களை தாக்க வந்ததால் தற்காப்புக்காக நாங்கள் சுட வேண்டியதாகி விட்டது’’என்று கூறினார்.

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா on Thu Apr 09, 2015 10:47 pm

முகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 7 பேர்... இதுவரை நடக்காத கொடூரம்!

ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களில் 7 பேருக்கு முகத்தில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த காயங்கள் இருந்துள்ளது. இது தொடர்பாக மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி முருகேஷன், ‘ஆந்திர போலீசார் தற்காப்பு என்ற பெயரில் 20 பேரை சுட்டுக் கொன்றதை நியாயப் படுத்தவே முடியாது' எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் ஆந்திர மாநிலத்தில் திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசார், தமிழக தொழிலாளர்கள் 20 பேரை சுட்டுக் கொன்றனர். செம்மரக்கட்டைகளை கடத்தியதாகவும், தடுக்க முற்பட்ட தங்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இது முன்கூட்டியே திட்டமிட்ட என்கவுண்டர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுவரை இந்த அளவுக்கு என்கவுண்டர் என்ற பெயரில் ஒரே இடத்தில் 20 பேர் கொல்லப்பட்டது இல்லை. அதுவும் ஆயுதம் எதுவும் இல்லாதவர்கள் சுடப்பட்டுள்ளனர். அதனால் தான் ஆந்திர அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகமும் ஆந்திர அரசிடம் நடந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை கேட்டுள்ளது. ‘தற்காப்பு என்ற பெயரில் 20 பேரை சுட்டுக்கொன்றதை நியாயப்படுத்தவே முடியாது' என மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரில் 11 பேரின் உடல் ஓரிடத்திலும், மீதமுள்ள 9 பேரின் வேறொரு இடத்திலும் கிடந்தது. அதில், 9 பேர் சடலங்கள் இருந்த இடத்தில் 7 பேர் முகத்திலும், பின்புறத்தில் கழுத்திலும் சுடப்பட்ட காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும், பலரது உடல் எரிந்த நிலையில் காணப்பட்டது. சிலரது வயிறு, தோள்பட்டை, கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. தோல் உரிந்திருந்தது. இறந்தவர்கள் பெரும்பாலும் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள்.

என்கவுண்டரில் கொல்லப் பட்டிருந்தால் தீக்காயங்கள் ஏற்பட்டது எவ்வாறு எனக் கேள்வி எழுந்துள்ளது.

முன்கூட்டியே தமிழக தொழிலாளர்களைக் கைது செய்து அழைத்துச் சென்று, அவர்கள் கைகளைப் பின்புறமாகக் கட்டி ஆந்திர போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர் என பலியான தொழிலாளர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா on Thu Apr 09, 2015 11:31 pm

இது முடிவு அல்ல, ஆரம்பம்..: ஆந்திர அமைச்சர் உறுதி

அதிரடி படையினர் மீது தாக்குதலில் ஈடுபட்டதால்தான் தமிழக தொழிலாளர்கள் மீது என்கவுன்ட்டர் நடத்தியதாகவும் இது முடிவு அல்ல ஆரம்பம் என்றும் ஆந்திர மாநில வனத் துறை அமைச்சர் நேற்று தெரிவித்தார்.

இதுகுறித்து ஆந்திர மாநில வனத் துறை அமைச்சர் பொஜ்ஜல கோபால கிருஷ்ணா ரெட்டி திருப்பதியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: போலீஸார் மீது ஆயுதங்களால் கடத்தல் கும்பல் தாக்கியது. இதனால்தான் போலீஸார் தற்காப்புக்காக சுட நேர்ந்தது. என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களே. பல முறை எச்சரிக்கை செய்தும் ஏன் இவர்கள் பணத்துக்காக ஆசைப்பட்டு மரங்களை வெட்ட இங்கு வர வேண்டும்?

இவர்களுக்கு வனப்பகுதியில் என்ன வேலை? ஆந்திர போலீஸார் செய்தது சரிதான். இது முடிவு அல்ல ஆரம்பம். இதுகுறித்து நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் உண்மை வெளிவரும். ஆந்திர வனப்பகுதிகளில் செம்மரங்கள் கடத்தப்படுவதை முற்றிலுமாக தடுக்க அரசு தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by krishnaamma on Fri Apr 10, 2015 12:01 am

ரொம்ப பரிதாபம் ..............அநியாயமாய்  இருக்கு சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by M.Saranya on Fri Apr 10, 2015 2:44 pm

பாவம் நம் மக்கள்........ சோகம் சோகம் சோகம்

வறுமை எவ்வாறெல்லாம் மக்களை வதைக்கிறது..?????????????
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum