ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ரா.ரமேஷ்குமார்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ஜாஹீதாபானு

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 ஜாஹீதாபானு

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 - Fast and furious 7

View previous topic View next topic Go down

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 - Fast and furious 7

Post by சிவா on Thu Apr 09, 2015 11:49 pmபடத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?

படத் தலைப்பு மாதிரியே செம ஃபாஸ்ட் ஆகவும், வெறித்தனமாகவும் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7’ திரைப்படம்.

ரிலீஸான இரண்டு நாட்களில் மட்டும் இந்தியா முழுவதும் 80 கோடி ரூபாய் வசூல் அள்ளிக் குவித்திருக்கிறதாம். வின் டீசல், ட்வெய்ன் ஜான்சன், ஜேசன் ஸ்டாதம், டோனி ஜா, மிட்செல் ராட்ரிக்ஸ் போன்ற ஸ்டார்களுக்காக மட்டுமில்லை; படத்தில் ‘வ்ர்ர்ரூம்... வ்வ்ர்ர்ர்..ரூம்’ எனக் கிளம்பும் கார்களுக்காகவும் தியேட்டரில் கூட்டம் அள்ளு கிளப்புகிறது.

‘மச்சான்... ஆஸ்டன் மார்ட்டின்டா... மஸராட்டி டா... ஆடி டா!’ என்று படத்தில் கார்களைப் பார்க்கும்போதே உற்சாகம் தொற்றிக்கொள்ளும் கார் ஆர்வலர் நீங்கள் என்றால், உங்களுக்கு ஒரு சோகமான செய்தி.

படத்தில் பறந்து பறந்து சாகசங்கள் செய்த கார்கள் அனைத்தும், இப்போது அடித்து நொறுக்கப்பட்டு, பழைய இரும்புக் கடைகளில் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் விமானத்திலிருந்து பாராசூட்டில் இறங்கும் காட்சியில் மட்டும் 40 கார்கள் கண்டம் செய்யப்பட்டதாம். கண்டம் செய்யப்பட்ட கார்களின் மெட்டல் பாகங்களை எப்படி டிஸ்போஸ் செய்கிறார்கள்? இதுபற்றி, இந்தப் படத்துக்காக கார்களை ஒருங்கிணைத்து உதவி புரிந்த கார் விற்பனையாளர் ஃப்ரான்சிஸ் என்பவர் சொல்கிறார்.

‘‘நான் ஏகப்பட்ட ஹாலிவுட் படங்களுக்கு கார் சப்ளை செய்திருக்கிறேன். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 25 கார்கள் டேமேஜ் ஆகிவரும். நாங்கள் டேமேஜ் ஆன கார்களை ‘டோ’ பண்ணி இங்கு எடுத்துவந்து, முழுதாக ரெடி பண்ணி, இங்கேயே மலிவான விலைக்கு விற்றுவிடுவோம். இல்லையென்றால், வேறு படங்களுக்கு அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். இப்படி எங்களிடம் ரெடியாகும் கார்களுக்கு இங்கே லோக்கல் ஜங்க் யார்டுகளிடமும், பழைய கார் மார்க்கெட்டிலும் நல்ல வேல்யூ உண்டு. ஆனால், ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ படத்தின் தயாரிப்புக் குழு, ‘சேதமடைந்த இந்த கார்களைத் திரும்பவும் ஆர்டர் செய்து யாருக்கும் விற்க வேண்டாம்; ஏனென்றால், மக்கள் விபத்தான கார்களை ஓட்டுவது ஆபத்தில் முடியும்’ என்று கடுமையாக எச்சரித்து விட்டதால், இந்த கார்கள் இனி வெறும் தகரம்தான்!’’ என்று அசால்ட்டாகச் சொல்கிறார்.

ஃபெராரி, ஆஸ்டன் மார்ட்டின், புகாட்டி வெய்ரான், மஸ்டாங், ஆடி, மஸராட்டி என்று ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ 7-ம் பாகத்தில், கண்டம் செய்யப்பட்ட சூப்பர் கார்கள் மொத்தம் எத்தனை தெரியுமா?

ஜஸ்ட் 230 கார்கள்! கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 - Fast and furious 7

Post by krishnaamma on Thu Apr 09, 2015 11:59 pm

//ஃபெராரி, ஆஸ்டன் மார்ட்டின், புகாட்டி வெய்ரான், மஸ்டாங், ஆடி, மஸராட்டி என்று ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ 7-ம் பாகத்தில், கண்டம் செய்யப்பட்ட சூப்பர் கார்கள் மொத்தம் எத்தனை தெரியுமா?

ஜஸ்ட் 230 கார்கள்! கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய்//ஒ............ பயம் பயம் பயம்......அப்போ படம் பார்த்துட வேண்டியது தான்  புன்னகை என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 - Fast and furious 7

Post by சிவா on Fri Apr 10, 2015 12:02 am

திரையை மிரட்டிய ஃப்யூரியஸ் 7... உலகின் டாப் 10 கார்கள் ஒரே படத்தில்!

சட்டவிரோத செயல்கள் செய்துவந்த வின் டீசலின் டீம் திருந்தி வாழ நினைத்தாலும் அவர்களின் கர்மபலன் அவர்களைத் தொடர்கிறது. அதில் இருந்து தப்பித்து கொடியவர்களின் கையில் இருந்து உலகத்தைக் காப்பாற்றும் மசாலா ஆக்ஷன் கதையே ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7.

காஞ்ஜூரிங், இன்சிடியஸ், சா போன்ற படங்களை இயக்கிய ஜேம்ஸ் வான் இயக்கத்தில் வின் டீசல், பால் வாக்கர், டுவைனி ஜான்சன், ஜேசன் ஸ்டேர்தன், டோனி ஜா உள்ளிட்ட பல நட்சத்திரப் பட்டாளங்களின் நடிப்பில் வெளியாகியுள்ளது ஃப்யூரியஸ் 7.

இந்த உலகத்தில் யார் எங்கே இருந்தாலும் அவரை எளிதில் கண்டுபிடிக்கக்கூடிய, அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரித்த ட்ராக்கிங் டிவைஸை திருடப்பார்க்கிறார்கள் எதிரிகள். கடவுளின் கண் (God's Eye) என்ற அந்த டிவைஸைக் கண்டுபிடித்த ஹாக்கர் ராம்சியை கடத்திவிடுகின்றனர் எதிரிகள். இந்த மெஷின் எதிரிகள் கையில் கிடைத்தால், உலகத்தில் எது நடந்தாலும் எளிதில் கண்டுபிடிக்கலாம். யாரை வேண்டுமானாலும் கண்டுபிடித்து கொன்றுவிடலாம் என்பதால், தவறானவர்கள் கைகளுக்கு சென்றுவிடக் கூடாது என்று அஞ்சுகிறது அமெரிக்கா. இதனால், யாருக்கும் தெரியாமல் ரகசிய நிறுவன உதவியுடன் கண்டுபிடிக்கச் சொல்கிறது அமெரிக்கா அரசு.

முந்தைய பாகத்தில் டெக்கர்ட் ஷாவின் சகோதரனைக் கொன்றுவிடுகிறான் டாமினிக் (வின் டீசல்). அதனால், அவனையும் அவனுடைய கூட்டத்தையும் கொல்வதற்காகத் திட்டமிட்டு வருகிறான் டெக்கர்ட் ஷா. அந்த நேரத்தில் அமெரிக்க ரகசிய நிறுவனம் டாமினிக் (வின் டீசல்) உதவியை நாடுகின்றனர். ராம்சியையும் அந்த மெஷினையும் காப்பாற்றித் தந்தால் டெக்கர் ஷாவைக் கொல்வதற்கு உதவுகிறோம் என்று டீல் பேசுகிறார்கள். டாமினிக், பால் வாக்கர் மற்றும் அவர்களின் டீம் ஒன்றிணைந்து ராம்சியைக் கண்டுபிடித்து அந்த மெஷினைக் காப்பாற்றி, இறுதியில் டெக்கட் ஷாவை கொன்றார்களா இல்லையா என்பதே கதை!

அதிநவீன டெக்னாலஜி, அபுதாபியின் உயரமான கட்டடமான இதியட் டவரில் கட்டடம் விட்டு கட்டடம் தாண்டும் கார்கள், வேகமாக நகரும் சேஸிங் காட்சிகள், அச்சத்தையும் மீறிய அசாத்திய ஆச்சர்யம் என்று தொழில்நுட்பத்தால் படத்தில் பார்ப்பவர்களை கட்டிப்போடுகிறது ஃப்யூரியஸ்.

பழைய வின் டீசலின் காதலியான லெட்டி, சென்ற பாகத்தின் முடிவில் ஒரு விபத்தில் பழைய நினைவுகளை மறந்துவிடுகிறார். வின் டீசலுடனான காதல், மீண்டும் கடந்த கால நினைவுகள் லெட்டிக்குத் திரும்புவது, வழக்கம்போல ஜிப்சனின் காமெடி கலாட்டா, நடுநடுவே சென்டிமென்ட் மற்றும் வழக்கம்போல கார்களின் சாகசம் என்று நல்ல கதை நகர்வுடன் முடிகிறது படம். போலீஸ் அதிகாரியாக வரும் ராக் (டுவைனி ஜான்சன்) மெஷின் துப்பாக்கியைத் தூக்கி விமானத்தை வீழ்த்துவது போன்ற அவரின் ஸ்டைல் இந்தப் படத்திலும் அப்படியே இருப்பது சிறப்பு. சுருக்கமாகச் சொன்னால் அர்னால்டை சற்றே ஞாபகப்படுத்தும் விதம்தான்.

250 மில்லியன் பட்ஜெட்டில் உருவாகி முதல் நான்கு நாட்களில் மட்டும் 384 மில்லியன் டாலர்களை வசூலித்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் 50 கோடி வரை வசூலித்து வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இதுவரை வெளிவந்த ஃப்யூரியஸ் பாகங்களிலேயே அதிகம் வசூலித்த படமும் இதுவே.

உலகின் தலைச்சிறந்த 10 ஸ்போட்ர்ஸ் கார்களை இந்தப் படத்தில் உபயோகித்து இருக்கின்றனர். அஸ்டன் மார்டின், ஆடி ஆர் 8, புகாட்டி வேரான், டாட்ஜ் வைப்பர் எஸ்ஆர்டி - 10, ஃபெராரி 458 இட்டாலியா, மஸராட்டி கிப்ளி, மெக்லாரன் எம்பி- 4 12சி, மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ், நிசான் ஜிடி ஆர் மற்றும் அரபின் தலைசிறந்த காரான லைகன் ஹைப்பர்ஸ்போர்ட் போன்ற கார்களை ஆக்ஷன் காட்சிகளில் ஓட்டி, ரேஸ் பிரியர்களுக்கும் விருந்துகளை அள்ளித் தெளிக்கிறது.

எனினும், அடுத்து வரும் காட்சிகளை முன்கூட்டியே யூகிக்கும் வகையில் இருப்பது சிறிய குறை. காரில் இருந்து இப்போது மலையில் தவ்வப்போகிறார்கள் என்றால், அப்படியே நடக்கிறது. அதேபோல் ஒரு காரில் ஜிப்சன் மட்டும் அந்தரத்தில் தொங்குவார் என நினைப்பதற்குள், அப்படியே நடக்கிறது. இதனை சற்றே குறைத்திருக்கலாம்.

படப்பிடிப்பின்போதே பால் வாக்கர் கார் விபத்தில் நவம்பர் 30-ல் இறந்துவிட, படமும் பாதியில் நின்றுவிடும் என்று பலராலும் பேசப்பட்டது. ஏனெனில் 7 பாகத்திலும் நடித்தவர், மேலும் வின் டீசலின் நெருக்கத்திற்குரிய நண்பரான பால்வாக்கரின் மரணம் ஃப்யூரியஸ் டீமையுமே துயரத்தில் ஆழ்த்தியது. இருப்பினும், பால் வாக்கரின் சகோதரரான கோடி வாக்கரை வைத்து மீதி கதையையும் எடுத்து படத்தினையும் ரிலீஸ் செய்துவிட்டது சிறப்பு. இந்தப் படத்தை பால் வாக்கருக்காகவே சமர்ப்பணம் செய்துவிட்டார் தயாரிப்பாளரும் படத்தின் நாயகனுமான வின் டீசல். RIP PAUL.

கடைசி காட்சிகளில் பாலை எவ்வளவு மிஸ் செய்கிறேன் என்பதை ஒரு அழகான காட்சியாகவும் முடித்துள்ளது, ஆக்ஷன் படத்தில் நம்மையும் மீறி கண்களைக் கலங்க வைத்துவிடுகிறது. இதுவரை பால் வாக்கர் நடித்த 7 பாகத்தின் காட்சிகளையும் திரையில் ஓடவிட்டு, 'நீ மறைந்தாலும் என்னுடன்தான் இருக்கிறாய்' என்று வின் டீசல் படத்தின் முடிவில் பேசும்போது திரையரங்கே அதிர்ந்தது. மொத்தத்தில் ரேஸ் பிரியர்களையும், ஆக்ஷன் விரும்பிகளையும் விசில் போடச் செய்துள்ளது ஃப்யூரியஸ் 7.

இதன் எட்டாவது பாகமும் ஆன் தி வே...
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 - Fast and furious 7

Post by சிவா on Fri Apr 10, 2015 12:03 am

சாதனைப் படைத்தது ஃப்யூரியஸ் 7!

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் படத்தின் ஏழாவது பாகம் தற்பொழுது வெளியாகி ஹிட் அடித்துள்ளது. முதல் நான்கு நாட்களில் மட்டும் 384 மில்லியன் டாலர்களைக் குவித்து புதிய சாதனைப் படைத்துள்ளது ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 7.

இதுவரை வெளியான ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் பாகங்களின் வரிசையில் அதிக வசூல் குவித்த படம் இது தான். மேலும் யூனிவர்சல் நிறுவனம் இதுவரை வெளியிட்ட படங்களிலேயே முதல் வாரத்தில் அதிக வசூலித்தப் படமும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மட்டும் 200 திரையரங்குகளில் படம் வெளியானது. உலகமெங்கும் 10,000க்கும் மேற்பட்ட அரங்குகளில் படம் வெளியானது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது

ஜேம்ஸ் வான் இயக்கத்தில் வின் டீசல் மற்றும் பால் வாக்கரின் நடிப்பில் வெளியான இப்படம் பால்வாக்கரின் கடைசிப்படம் என்பதால் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அமெரிக்க பாக்ஸ் ஆஃபீஸில் முதல் நான்கு நாட்களில் மட்டும் 143.6 மில்லியன் டாலர்கள் வசூலித்திருக்கிறது. மேலும் உலகமெங்கும் 384 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 50 கோடி இந்தப் படத்திற்கு வசூலாகியுள்ளது. ஹாலிவுட் படத்திற்கான அதிகபட்ச இந்திய வசூல் சாதனையை இந்தப் படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 - Fast and furious 7

Post by சிவா on Fri Apr 10, 2015 12:19 am

HD தரத்தில் தரவிறக்கம் செய்ய:

http://reblop.net/video1/Fast%20and%20Furious%207%20ayee1234567891.mp4

தரவிறக்க அளவு: 2.78GB
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 - Fast and furious 7

Post by ayyasamy ram on Fri Apr 10, 2015 8:08 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35981
மதிப்பீடுகள் : 11401

View user profile

Back to top Go down

Re: ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 - Fast and furious 7

Post by சிவா on Fri Apr 10, 2015 9:08 pm

இந்தியாவில் ரூ.100 கோடி வசூல்: பியூரியஸ் 7 சாதனை

வெளியான ஒரே வாரத்தில் இந்தியாவில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்த ஹாலிவுட் திரைப்படம் என்ற சாதனையை பியூரியஸ் 7 திரைப்படம் படைத்துள்ளது.

வின் டீசல், மறைந்த பால் வாக்கர், ராக் ஜான்சன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படத்தின் 7-ஆம் பாகமான பியூரியஸ் 7, இந்தியாவில் 2800 திரையரங்குகளில் 2டி, 3டி மற்றும் ஐமேக்ஸ் வடிவங்களில் வெளியாகியுள்ளது .

இந்த வசூல் சாதனை குறித்து யுனீவர்சல் பிக்சர்ஸின் மேலாளர் சரப்ஜித் சிங் கூறுகையில், "இந்தியாவில் அதிகபட்ச அரங்குகளில் வெளியான ஹாலிவுட் படம் என்ற முறையில் பியூரியஸ் 7 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்தியாவின் நகரங்களைத் தாண்டியும் ஹாலிவுட் படங்களுக்கான ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதையே இது காட்டுகிறது" என்றார்.

யூனிவர்சல் பிக்சர்ஸ், அடுத்ததாக, ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படத்தை வெளியிடவுள்ளது. ஜுராசிக் பார்க் பட வரிசையை சேர்ந்த இத்திரைப்படம் ஜூன் மாதம், ஆங்கிலம், இந்தி, தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 - Fast and furious 7

Post by krishnaamma on Fri Apr 10, 2015 11:01 pm

வாவ் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 - Fast and furious 7

Post by சிவா on Wed Apr 22, 2015 4:25 pm

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 7 வசூல் வேட்டை

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் தொடரின் ஏழாவது பாகமான ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 7,ஜேம்ஸ் வான் இயக்கத்தில் பால் வாக்கர்,வின் டீஸல்,ட்வய்னே யோன்சன் நடித்துள்ள இந்தப் படம் மூன்று வாரங்களுக்கு முன் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று வசூலிலும் சக்கைபோடு போட்டுவருகிறது.

உலகெங்கும் 10500 அரங்குகளில் இந்தப் படம் வெளியானது. இந்தியாவில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக 200 அரங்குகள் இந்தப் படத்துக்கு தரப்பட்டது.

அதுமட்டுமின்றி இத் திரைப்படம் ஆங்கிலத்தில் மட்டுமில்லாமல், தமிழ், இந்தி, தெலுங்கு,ஜப்பான்,டுட்ச் மொழிகளிலும் இப்படம் வெளியாகியுள்ளது.

2013-ம் ஆண்டு ஒரு கார் விபத்தில் பலியான நடிகர் பால் வாக்கரின் கடைசிப் படம் என்பதால் உலகம் முழுவதும்ரசிகர்கள் மிகுந்த நெகிழ்ச்சியுடன் இப் படத்தைப் பார்த்துவருகின்றனர்.

யுனிவர்சல் நிறுவனம் இதுவரை வெளியிட்ட படங்களிலேயே அதிக முதல் வார வசூல் இந்தப் படத்துக்குத்தான். அதேபோல, இதுவரை வெளியான ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் படங்களின் வரிசையில், அதிக வசூல் குவித்ததும் இந்தப் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வசூலில் உலகெங்கும் இந்தப் படம் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதல் வாரத்தில் மட்டும் $191 மில்லியன் டாலர்கள் குவித்து முதலிடத்தில் உள்ளது இந்தப் படம். உலகெங்கும் 384 மில்லியன் டாலர்களைக் குவித்துள்ளது. இதுவரை எந்தப் படத்துக்கும் இந்த வசூல் கிடைத்ததில்லை.

அத்துடன் இத் திரைப்படம் புதிய சாதனையையும் படைத்துள்ளது.குறைந்த நாட்களில்(17நாட்கள்) $1 billion worldwide வசூல் சாதனையை தன்வசப்படுத்தியுள்ளது.

இதற்குமுன் (19நாட்கள்) அவென்கேர்ஸ்,ஹர்ரி போட்டர் பைனல் இச்சாதனையை நிகழ்த்தின

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 7 இப்போது மொத்தமாக $1.15Billion வசூலித்துஉள்ளது

இந்தியாவில் ரூ 100 கோடியைக் குவித்த முதல் ஹாலிவுட் அல்லது வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பெருமையைப் பெறுகிறது ஃபாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் 7 அத்துடன் இந்திய சினிமா வரலாற்றில், ஹாலிவுட் படம் ஒன்று இவ்வளவு வசூல் குவித்திருப்பது இதுவே முதல் முறை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 - Fast and furious 7

Post by krishnaamma on Thu Apr 23, 2015 11:50 pm

//ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 7 இப்போது மொத்தமாக $1.15Billion வசூலித்துஉள்ளது

இந்தியாவில் ரூ 100 கோடியைக் குவித்த முதல் ஹாலிவுட் அல்லது வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பெருமையைப் பெறுகிறது ஃபாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் 7 அத்துடன் இந்திய சினிமா வரலாற்றில், ஹாலிவுட் படம் ஒன்று இவ்வளவு வசூல் குவித்திருப்பது இதுவே முதல் முறை.//


ம்...சூப்பர் ! புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

அம்மாடியோவ்… ரூ. 7,000 கோடி வசூல்!

Post by ayyasamy ram on Sun May 31, 2015 7:59 am


-

சமீபத்தில் வெளியாகி, உலகம் முழுவதும் சக்கை
போடு போடும்,’பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் – 7′ என்ற
ஆங்கில படம், வசூலில் சாதனை படைத்துள்ளது.
படம் வெளியான, ஒரு சில வாரங்களிலேயே,
7,000 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இந்தியாவில்
மட்டும், இதன் வசூல், 100 கோடி ரூபாய்.
-

இங்கு, முன்னணி நடிகர்கள் நடித்த படங்களே,
ஒரு சில நாட்களுடன் தியேட்டரை விட்டு, தூக்கப்பட்டு
விடுகின்றன. ஆனால், ஒரு ஆங்கில படம், 100 கோடி
ரூபாய் வசூலித்துள்ளது,
-

இந்திய திரைப்பட ஜாம்பவான்களை மிரள வைத்துள்ளது.
இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, இதன்,
8ம் பாகத்தையும் தயாரிக்க, தயாரிப்பாளர்கள் முடிவு
செய்துள்ளனர்.

— ஜோல்னாபையன்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35981
மதிப்பீடுகள் : 11401

View user profile

Back to top Go down

Re: ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 - Fast and furious 7

Post by நவீன் on Sun May 31, 2015 9:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி : மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 - Fast and furious 7

Post by balakarthik on Mon Jun 01, 2015 10:55 am

செம படம் தமிழில் நல்ல ஆடியோ தறத்துடம் தரவிறக்க சுட்டி கிடைக்கவில்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 - Fast and furious 7

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum