ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 SK

ஏர்செல் நிறுவனம் திவால்
 SK

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 kuloththungan

ஜென்
 T.N.Balasubramanian

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016)

View previous topic View next topic Go down

மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016)

Post by சிவா on Fri Apr 10, 2015 2:38 pmஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான மன்மத வருடம் பிறக்கிறது. 14.04.2015 செவ்வாய் கிழமை மதியம் மணி 1.42க்கு கிருஷ்ண பட்சத்தில் தசமி திதி, அவிட்டம் நட்சத்திரம் 2-ம் பாதம், மகர ராசி, கடக லக்னம் எட்டாம் பாதத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னம் கன்னி ராசியில், சுபம் நாம யோகம் பத்தரை நாம கரணத்தில், சித்தயோகத்தில், நேத்திரம் ஜீவனம் நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் பகல் நான்காம் சாமத்தில் மயில் ஊண் கொள்ளும் நேரத்தில் செவ்வாய் மகா தசையில், சனி புக்தியில், சுக்ரன் அந்தரத்தில், அங்காரகன் ஓரையில் மன்மத வருடம் சிறப்பாக பிறக்கிறது.

இந்த வருடம் இப்படித்தான்;

மன்மத வருடத்தின் பலன் வெண்பா:

மன்மதத்தின் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே
நன்மைமிகும் பல்பொருளுநண்ணுமே- மன்னவரால்
சீனத்திற் சண்டையுண்டு தென்திசையில் காற்றுமிகு
கானப்பொருள் குறையுங் காண்.


சித்தர் பெருமான் இடைக்காடரின் மேற்கண்ட பாடலின்படி மன்மத ஆண்டில் நன்கு மழை பொழியும். மரம், செடி, கொடி, பறவை மற்றும் விலங்குகள் பெருகும். அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். நல்லதெல்லாம் நடக்கும். பலவகை தானியங்களும் நன்கு விளையும். நாடாளுபவர்கள் போர் குணம் கொண்டிருப்பார்கள். உலகின் ஒரு பகுதியில் சண்டை மூளும். தெற்கு திசையிலிருந்து புயல் உருவாகி சூறாவளிக் காற்று வீசும். அரிதான மூலிகைசெடிகள் அழியும்.

இந்த வருடத்தின் ராஜாவாக சனி பகவான் வருவதால் உலகெங்கும் சாதாரணமானவர்கள் சாமானிய பதவியில் அமர்வார்கள். சில இடங்களில் வறட்சியும், சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் அதிகரிக்கும். மத்திய மாநில அரசுகளுக்கு இடையே மறைமுக பகைமை இருக்கும். இரும்பு, எண்ணெய் வித்துக்களின் விலைகள் குறையும். எலக்ட்ரானிக் சாதனங்களின் அதிக உற்பத்தியால் விலை மலிவாகும். கால்நடைகளை வினோத நோய்கள் தாக்கும். வேலை நிறுத்தங்களும் உண்ணாவிரதங்களும் ஊர்வலங்களும் அதிகரிக்கும். மக்கள் பாபகாரியங்களை துணிந்து செய்வார்கள்.

திருட்டு பயம் அதிகரிக்கும். சிறுபான்மை மக்கள் பலமடைவார்கள். மந்திரியாக செவ்வாய் வருவதால் வாகனப் பெருக்கத்தால் பூமியில் வெப்பம் அதிகரிக்கும். மின்சார கசிவால் தீ விபத்துகள் அதிகரிக்கும். எரிமலைகள் வெடிக்கும். முதன்மை பதவியில் இருப்பவர்களுக்கும் இரண்டாம் கட்ட பதவியில் இருப்பவர்களுக்கும் இடையே ஈகோ பிரச்னைகள் அதிகரிக்கும். சேனாதிபதியாக சந்திரன் வருவதாலும் அந்த சந்திரனை குரு பார்ப்பதாலும் ராணுவத்தின் வலிமை அதிகரிக்கும். புதிய ஏவுகணைகள் நவீன போர்தளவாடங்கள் ராணுவத்தில் சேர்க்கப்படும். ஜலகிரகம் சந்திரன் சேனாதிபதியாக வருவதால் கப்பற்படை நவீனபடுத்தப்படும். புதிய நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கப்படும்.

எல்லைப்பாதுகாப்பிற்காக பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்படும். தண்ணீரால் அதிக நோய் பரவும். பூமியில் நீர் மட்டம் குறையும். வடமேற்கு திக்கில் அமைந்துள்ள நாடுகள், மாநிலங்கள் செழிப்படையும். பால் உற்பத்தியை பெருக்க அரசு புது திட்டங்களை அமல்படுத்தும். அர்க்காதிபதியாகவும் சந்திரன் வருவதால் தங்கம், வெள்ளி விலை நிலையற்றதாக இருக்கும். செப்டம்பர் மாதம் முதல் தங்கம், வெள்ளி விலை உயரும். பெட்ரோல், டீசல் விலை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். பருவம் மாறி மழை பொழியும். வெள்ளை தானியமான நெல் உற்பத்தி அதிகரிக்கும். அரிசி விலை குறையும்.

மேகாதிபதியாகவும் சந்திரன் வருவதாலும் நவாம்சத்தில் சந்திரனை மழைக்கோள் சுக்கிரன் பார்ப்பதாலும் பருவமழை அதிகரிக்கும். ஆறு, குளங்கள் நிரம்பும். பலவித தானியங்களும் செழிப்படையும். கரும்பு உற்பத்தி அதிகரிக்கும். மாலை நேரத்தில் புயல் சின்னம் உருவாகி, இரவு நேரத்தில் மழை பொழிவு அதிகமாகும். வெள்ளை நிற மேகங்களின் உற்பத்தி அதிகமாகும். நதிகள் பெருக்கெடுத்து ஓடும். நீர்தேக்கங்கள் பாதிப்படையும். ஸஸ்யாதிபதியாக குரு வருவதால் அதிக பால் தரும் கலப்பின மாடுகளின் எண்ணிக்கை அதிகமாகும். ஆடு, கோழி உற்பத்தி அதிகமாகும். ஜவுளி உற்பத்தி அதிகமாகும்.

துணிகளின் விலை குறையும். அலுமினியம், பித்தளை பயன்பாடு அதிகரிக்கும். இரசாதிபதியாக சனி வருவதால் மழை பொழிவு சீராக இருக்காது, பாதரசத்தின் விலை உயரும். அமிலங்களின் விலை அதிகரிக்கும். தான்யாதிபதியாக புதன் அமைந்து சூரியன், செவ்வாயுடன் புதன் சம்மந்தப்பட்டிருப்பதால் தரிசுநிலங்கள், சதுப்புநிலங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நிலங்களிலும் பயிர்கள் விளையும். பயிறு வகைளைகள் தழைக்கும். சர்க்கரை, மதுபான வகைகளின் விலை அதிகரிக்கும். மஞ்சல் விலை உயரும். நீரஸாதிபதியாக சுக்ரன் வருவதாலும் சுக்ரன் ஆட்சி பெற்றிருப்பதாலும் மீனவர்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்கும். கடலில் மீன் உற்பத்தி அதிகரிக்கும். கடலில் வாழும் அதிசய உயிரினங்கள் கரையேறும். பாக்கு, தேயிலை, காபி கொட்டை உற்பத்தி அதிகரிக்கும். சந்தனம் அதிகம் விளையும்.

இந்த மன்மத வருடம் கடக லக்னத்தில் பிறப்பதால், மக்களிடையே திட்டமிடல் அதிகரிக்கும். ஜனநாயகம் தழைக்கும். சாதி, மத, சமத்துவத்தையும் பாதுகாப்பையும் ஆட்சியாளர்களிடமிருந்து மக்கள் எதிர்ப்பார்ப்பார்கள். குரு உச்சமாக இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், இந்தியாவின் வெளிநாட்டுக்குக் கடன் குறையும். மத்திய அரசு புது சலுகைகளை அறிவிக்கும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் குறைந்த விலையில் வீடு, கலப்படமற்ற மருந்துகள் தருவதில் ஆளுபவர்கள் அக்கறைக் காட்டுவார்கள். மதுபானம், சிகரெட் ஆகியவற்றின் மீது அரசு புதிய வரிகளை விதிக்கும். லக்னாதிபதி சந்திரனை குரு பார்ப்பதால் இரண்டாம் எண்ணின் ஆதிக்கம் அதிகரிக்கும்.

கள்ளநோட்டை தடுக்க கடுமையான சட்டங்கள் அமலாகும். சந்திரனை சனி பார்ப்பதால் சளி தொந்தரவு, காய்ச்சல், நுரையீரல் தொற்று ஆகியவற்றால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ராகு வலுவாக இருப்பதால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். வருடம் பிறக்கும் போது தனாதிபதி சூரியன், செவ்வாய், புதனுடன் சேர்ந்து நிற்பதால் இந்திய நாட்டின் நிதியிருப்பு அதிகரிக்கும்.

பங்குச்சந்தை சீராக இருக்கும். கருப்புப்பணம் பறிமுதல் செய்யப்படும். தீ விபத்துகள் அதிகமாகும். நாட்டின் மின் உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் மானியத்தொகை வழங்கும். ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிடும். திருதிய-விரையாதிபதியாக புதன் வருவதால் விளையாட்டுத் துறையில் இந்தியா பின் தங்கும். தோட்டப் பயிர்கள் நன்கு விளையும். கரும்புக்கு அரசு அதிக விலை அறிவிக்கும்.

விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள். அயல்நாட்டில் சென்று கல்வி கற்போரின் எண்ணிக்கை உயரும். சுக-லாபாதிபதியான சுக்ரனை சனி பார்வையிடுவதால் சிமெண்ட், மணல் இல்லாத நவீன கட்டுமான முறை கட்டிடங்கள் பிரபலமாகும். வரதட்சணைக் கொடுமை குறையும். பாலியல் பலாத்காரத்தை தடுப்பதற்கு மேலும் கடுமையான சட்டம் நடைமுறைக்கு வரும். இந்திய மாணவர்கள் உலகளவில் புகழடைவார்கள். பஞ்சம-தசமாதிபதியாக செவ்வாய் வருவதாலும் செவ்வாய் சுக்ரனின் சாரம் பெற்றிருப்பதாலும் பூமியின் விலை உயரும்.

அடுக்குமாடி கட்டிடங்களின் விலையும் உயரும். பத்திரபதிவுத் துறை நவீனமாகும். மலைப் பிரதேசங்களில் நிலச்சரிவு அதிகரிக்கும். குடும்பத் தொழில், பாரம்பரிய தொழிலுக்கு மரியாதை கூடும். பாக்யாதிபதியாகவும், சஷ்டமாதிபதியாகவும் குரு வருவதால் ஆன்மீகத்துறை அதிக வளர்ச்சி அடையும். வேதங்கள் பிரபலமடையும். புதைந்திருக்கும் புதிய சிலைகள் கண்டறியப்படும். கோவில் அர்ச்சகர்களின் சம்பளம் உயரும். சினிமாத்துறை நலிவடையும். புது முகங்கள் வெற்றி பெறுவார்கள். சப்தம-அஷ்டமாதிபதியாக சனி வருவதால் நீதிபதிகள் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆணைப் பிறப்பிப்பார்கள்.

காடு, வனவிலங்குகளை காப்பாற்ற புதிய சட்டங்கள் வரும். சுற்றுலாத் துறை வளர்ச்சியடையும். அரிதான பறவைகள், விலங்குகள் அழியும். வைகாசி, கார்த்திகை, மார்கழி, மாசி, பங்குனி மாதங்களில் சாலை விபத்துகள், ஆட்சி மாற்றங்கள், வெள்ளப் பெருக்கு, அதிக உயிரிழப்புகள், கலவரங்கள், இன மோதல்கள் ஆகியன அதிகரிக்கும்.

மந்தா என்ற பெயருடன் மகர சங்கராந்தி தேவதை பெண், ஆண் ரூபம் கலந்து பன்றி வாகனத்தில் வடக்கு திசை நோக்கி வருவதால் மழை அதிகரிக்கும். சன்னியாசிகள், நாட்டை ஆளுபவர்களின் உடல் நலம் பாதிக்கும். பரம்பரைபணக்காரர்களின் அந்தரங்கங்கள் வெளியாகும்.

இந்த மன்மத வருடத்தில் விலை வாசிகள் குறைவதுடன் ஏழை, எளிய நடுத்தர மக்களும் மேல்தட்டு மக்களுக்கு ஈடு இணையாக சுக போகங்களை அனுபவிக்க வைப்பதாகவும் அமையும்.

க.ப.வித்யாதரன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84493
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016)

Post by யினியவன் on Fri Apr 10, 2015 2:44 pm

மன்மத ஆண்டு பெயரே கிளுகிளுப்பா தான் இருக்கு அப்ப குளுகுளுன்னு இருந்தா சரிavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016)

Post by M.Saranya on Fri Apr 10, 2015 2:49 pm

நன்மைகள் நடக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.......பார்க்கலாம்........
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016)

Post by T.N.Balasubramanian on Fri Apr 10, 2015 4:53 pm

நம்பிக்கைதான் வாழ்வின் க்ரியாஊக்கி !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21137
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016)

Post by ayyasamy ram on Fri Apr 10, 2015 7:44 pm

விலை வாசிகள் குறைவதுடன்....!!!
-
சிரி சிரி சிரி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34396
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016)

Post by சரவணன் on Fri Apr 10, 2015 10:18 pm

எப்ப பார்த்தாலும் ஜோசியம் சொல்லிட்டே இருக்காரு..இவரு மருத்துவரா ஜோசியரான்னே தெரியலை. ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016)

Post by சிவா on Fri Apr 10, 2015 10:37 pm

@சரவணன் wrote:எப்ப பார்த்தாலும் ஜோசியம் சொல்லிட்டே இருக்காரு..இவரு மருத்துவரா ஜோசியரான்னே தெரியலை. ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஜோதிடத் தொழில் தான் இன்று தமிழகத்தின் முன்னணி தொழிலாக உள்ளது!

பெண்கள் அனைவரும் கணவன் சொல்வதைக் கேட்கிறார்களோ இல்லையோ, ஜோதிடன் கூறுவதை அப்படியே கேட்பார்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84493
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016)

Post by krishnaamma on Fri Apr 10, 2015 10:40 pm

@சிவா wrote:
@சரவணன் wrote:எப்ப பார்த்தாலும் ஜோசியம் சொல்லிட்டே இருக்காரு..இவரு மருத்துவரா ஜோசியரான்னே தெரியலை. ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஜோதிடத் தொழில் தான் இன்று தமிழகத்தின் முன்னணி தொழிலாக உள்ளது!

பெண்கள் அனைவரும் கணவன் சொல்வதைக் கேட்கிறார்களோ இல்லையோ, ஜோதிடன் கூறுவதை அப்படியே கேட்பார்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1129733


சூப்பர் !  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016)

Post by மாணிக்கம் நடேசன் on Sat Apr 11, 2015 7:37 am

எங்க மாமா அங்களுக்கு எல்லா கலையும் தெரியம். சகல கலா வல்லவர்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4227
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016)

Post by T.N.Balasubramanian on Sat Apr 11, 2015 8:47 am

ஜோசியன் சொல்லுவதை கேட்கிறார்கள் .
சாமியார்கள் சொல்லுவதையும் கேட்கிறார்கள் .
TV லே எதை சொன்னாலும் பார்க்குறாங்க /கேட்குறாங்க !
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21137
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016)

Post by சிவா on Sat Apr 11, 2015 1:03 pm

@மாணிக்கம் நடேசன் wrote:எங்க மாமா அங்களுக்கு எல்லா கலையும் தெரியம். சகல கலா வல்லவர்.


யாரு இந்த கலா? ஜொள்ளு
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84493
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016)

Post by யினியவன் on Sat Apr 11, 2015 1:53 pm

@சிவா wrote:
@மாணிக்கம் நடேசன் wrote:எங்க மாமா அங்களுக்கு எல்லா கலையும் தெரியம். சகல கலா வல்லவர்.


யாரு இந்த கலா? ஜொள்ளு

அய்யாவுக்கு அடி மரத்து பலா வை விட கையில் உள்ள கலா க்கா போதும் ன்னு நெனச்சுட்டார் பாஸ் - அந்த கிழி கிழின்னு கிழிக்கிற கலா தான் புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum