ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உபயோகமான வீட்டுக்குறிப்புகள்
 ayyasamy ram

ரசாயனம் பூச்சு நிறைவு: வள்ளுவர் சிலையை இன்று முதல் பார்வையிடலாம்
 ayyasamy ram

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ஜாஹீதாபானு

மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன்
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 Dr.S.Soundarapandian

போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 Dr.S.Soundarapandian

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

அவல் பக்கோடா!
 Dr.S.Soundarapandian

வாளிப்பான பெண்ணின் துருப்புச் சீட்டு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

அவள் என்னைக் கரங்களால் அணைத்தபோது! (அயர்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி- தம்பதிகள் படிக்க தரமான நூல்

View previous topic View next topic Go down

ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி- தம்பதிகள் படிக்க தரமான நூல்

Post by தமிழ்நேசன்1981 on Tue Apr 14, 2015 11:02 pm



புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் என்ற இரண்டு மந்திரச் சொற்கள் மனதில் நுழையாதபட்சத்தில் உறவுகளில் சிக்கல் வருகிறது. புரிந்து கொள்ளுதல் இருந்துவிட்டால் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும். குறிப்பாக, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படக் கூடிய உரசல்கள் ஒழிந்து விடும். தனக்கு அடங்கியவளாக மனைவி இருக்க வேண்டும் என்று கணவன் எதிர்பார்ப்பதும், தன் பேச்சைக் கேட்டு நடப்பவனாக கணவன் இருக்க வேண்டும் என்று மனைவி எதிர்பார்ப்பதும் மிகத் தவறான போக்கு என்பதை சுமார் 282 பக்கங்களில் விரிவாக எடுத்துக் கூறிய ஆங்கில நூல் Men Are from Mars, Women Are from Venus என்பது. இதை எழுதியவர் ஜான் க்ரே (John Gray) என்கிற அமெரிக்க எழுத்தாளர். [color:f2e3= #003300]50 மில்லியன் காப்பிகளுக்கும் மேலாக விற்ற சாதனைப் புத்தகம் அது.


அந்த நூலின் முக்கிய அம்சங்களை மூலத்தின் ஜீவன் கெடாமல் தமிழில் மொழிபெயர்த்து சுருக்கமாக 88 பக்கங்களில் ‘ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி' என்கிற நூலாக வழங்கியிருக்கிறார் திரு.ரா.கி.ரங்கராஜன் அவர்கள்! பிரபல ‘குமுதம்' வாரஇதழின் முக்கியத் தூணாக பல்லாண்டுகள் ஜொலித்த ரா.கி.ர.வுக்கு அறிமுகம் தேவையில்லை. ஆங்கில நூல்களைத் தமிழில் அப்படியே வரிக்கு வரி மொழிபெயர்க்காமல் தமிழுக்கு ஏற்ப அழகுற மொழிபெயர்ப்பதில் வல்லவர் அவர் என்பதால் இந்த நூலைப் படித்தாலும் வேற்றுமொழி புத்தகம் படிக்கும் உணர்வே உங்களிடம் எழாது.


செவ்வாய்க் கிரகத்தில இருந்த ஆண்கள் டெலஸ்கோப் வைத்து வெள்ளிக் கிரகத்தைப் பார்த்தார்கள். அழகழகான பெண்களைப் பார்த்ததும் காதல் வயப்பட்டு விண்வெளிக் கப்பலைத் தயார் செய்து வெள்ளிக் கிரகத்தை அடைந்தார்கள். அங்கே கூடி மகிழ்ந்தவர்கள் பூமி என்கிற புதிய கிரகத்துக்கு வந்தார்கள். ஆரம்பத்தில் எல்லாமே அற்புதமாயிருந்தது; அழகாயிருந்தது. ஆனால் பூமியின் சுற்றுச்சூழல் அவர்களைப் பாதித்தது. ஒருநாள் காலை விழிக்கையில் ‘அம்னீஷியா' என்ற விசித்திரமான மறதி நோய் அவர்களைப் பற்றிக் கொண்டது. செவ்வாய் ஆண்களுக்கும் சரி, வெள்ளிப் பெண்களுக்கும் சரி தாங்கள் வெவ்வேறு கிரகத்திலிருந்து வந்தவர்கள் என்பது மறந்து விட்டது. தங்களுடைய வேறுவேறு தன்மைகளை மீறி நேசித்துக் கொண்டிருந்தது மொத்தமும் ஒரே இரவில் மறந்துவிட்டதில் அன்றுதொட்டு செவ்வாய் ஆண்களும், வெள்ளிப் பெண்களும் மோதிக் கொள்ளத் தொடங்கி விட்டனர்.


இப்படி ஒரு தத்துவத்துடன் ஆரம்பிக்கிற புத்தகம் கணவன் மனைவி உறவின் கூறுகளை விரிவாக அலசுகிறது. சண்டை ஏன் வருகிறது என்பதற்கான காரணங்கள், மன்னிப்புக் கேட்டலின் மகத்துவம், மனைவியின் பிரியத்தைக் கணவன் சம்பாதித்துக் கொள்ள சுலபமான 40 வழிமுறைகள், மனைவி கோபமாக இருந்தால் (என்ன காரணத்துக்காக கோபம் வருகிறது என்கிற அலசலுடன்) எப்படிச் சமாதானப்படுத்த வேண்டும் என்கிற அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை விரிவாக அலசும் இந்நூல் இறுதியில் கணவன் மனைவி இருவருக்குமான அறிவுரைகளைத் தந்து, புரிந்து கொள்ளும் வாழ்வின் தத்துவத்தை படிப்பவருக்குள் ஆழமாக இறக்குகிறது. (எவ்ளோ பெரிய வாக்கியம்டா சாமீ!)


அவள் கோபப்படுகிறாள் என்பதால் நானும கோபப்படுவது என்ற பழக்கத்தை மாற்றிக் கொண்டேன். மாறாக, எதனால் அவளுக்குக் கோபம் ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள முயன்றேன். எனக்கு அவள் மீது பிரியம் உண்டு என்பதை வெளிப்படுத்தினேன். அவள் என்னைத் தப்பாகப் புரிந்து கொண்டு கோபப்பட்டிருந்தால்கூட ‘ஸாரி’ சொன்னேன். ஆண்களைப் பொறுத்தமட்டில் ‘ஸாரி’ என்று சொன்னால் ஏதோ தவறு செய்து விட்டதை ஒப்புக் கொள்வது போலவும், அதற்காக மன்னிப்புக் கேட்பது போலவும் எண்ணுகிறார்கள். பெண்கள் அப்படி அல்ல. ‘ஸாரி’ என்று சொன்னால் உங்கள் மீது எனக்கு கொள்ளைப் பிரியம் என்பதை அப்படி மனப்பூர்வமாகக் குறிப்பிடுகிறார்கள். தப்புப் பண்ணிவிட்டு மன்னிப்புக் கேட்பதாக நினைப்பதில்லை. இதைப் படிக்கும் ஆண்கள் அடுத்த முறை வாக்குவாதம் ஏற்படும் போது ‘ஸாரி’ என்று சொல்லிப் பாருங்கள். அற்புதங்கள் விளையும்!

இது ஒரு ஸாம்பிள்தான்! புத்தகம் முழுவதும் கோர்வையாக கொட்டிக் கிடக்கும் கருத்துக்கள் ஒவ்வொரு கணவனும், ஒவ்வொரு மனைவியும் படித்தறிய வேண்டியவை. புதுமணத் தம்பதிகளுக்கு பரிசாக புத்தகங்களைத் தரும பழக்கம் உங்களுக்கு உண்டு எனில் சென்னை தி.நகர் தலைமை அஞ்சலகத்தை ஒட்டிய தெருவான நானா தெருவில் 10ம் இலக்கத்தில் இருக்கும் நர்மதா பதிப்பகம் 35 ரூபாய்க்கு வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகத்தையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்பது என் பலமான சிபாரிசு!

இதன் பதிப்பு தற்போது கடைகளில் கிடைப்பதில்லை என்பதாலும். தமிழ் தம்பதியினர் படித்து பயன்பெறுவும் இங்கே மின்நூலாக தருகிறேன். இந்த புத்தகத்தை ஸ்கேன் செய்து அனுப்பி வைத்த நண்பருக்கு என் மனமார்ந்த நன்றிகள். புத்தகம் கிடைத்தால் அவசியம் வாங்கி படியுங்க்கள் பரிசளியுங்கள். தொடர்ந்து வரும் உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்-தமிழ்நேசன்

பதிவிறக்கம்

ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி




நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி- தம்பதிகள் படிக்க தரமான நூல்

Post by T.N.Balasubramanian on Tue Apr 14, 2015 11:08 pm

MEN ARE  FROM  MARS 
WOMEN  ARE FROM  VENUS 
அதை தமிழாக்கம் பண்ணியதோ 
ராகி என்றால் சுவையாகவே இருக்கும் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி- தம்பதிகள் படிக்க தரமான நூல்

Post by தமிழ்நேசன்1981 on Tue Apr 14, 2015 11:12 pm

@T.N.Balasubramanian wrote:MEN ARE  FROM  MARS 
WOMEN  ARE FROM  VENUS 
அதை தமிழாக்கம் பண்ணியதோ 
ராகி என்றால் சுவையாகவே இருக்கும் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1130626

ஆம் ஐயா, ரா.கி அவர்களுக்கே உரிய நடையில் அசத்தி இருப்பார். படிப்பதற்கு மொழிபெயர்ப்பு நூல் என்ற எண்ணமே வராது. தங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு மன்மத ஆண்டு வாழ்த்துக்கள்.. :வணக்கம்:



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி- தம்பதிகள் படிக்க தரமான நூல்

Post by சிவா on Tue Apr 14, 2015 11:13 pm



சிறந்த மின்னூல் பகிர்வுக்கு நன்றி தமிழ் நேசன்!

தரவிறக்கம் செய்து கொண்டேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி- தம்பதிகள் படிக்க தரமான நூல்

Post by தமிழ்நேசன்1981 on Tue Apr 14, 2015 11:17 pm

@சிவா wrote:

சிறந்த மின்னூல் பகிர்வுக்கு நன்றி தமிழ் நேசன்!

தரவிறக்கம் செய்து கொண்டேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1130631

நன்றி அண்ணா. இனிய தமிழ்(மன்மத) புத்தாண்டு வாழ்த்துக்கள். :வணக்கம்: அன்பு மலர்



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி- தம்பதிகள் படிக்க தரமான நூல்

Post by தமிழ்நேசன்1981 on Tue Apr 14, 2015 11:18 pm

Men Are from Mars, Women Are from Venus என்ற இந்த நூலினை தமிழில் நாகலட்சுமி சண்முகம் என்பவரும் 377 பக்கங்களில் மொழிபெயர்த்துள்ளார். இருந்தாலும் ரா.கி.ரங்கராஜனின் சுருக்கமான 88 பக்க மொழி பெயர்ப்பே அனைவரும் படிக்க ஏற்றதாகவும் எளிதாகவும் இருக்கும் என்பது என் கருத்து. இருந்தாலும் அதை படிக்க நீங்கள் விரும்பினால் கீழே உள்ள லிங்கில் சென்று பதிவிறக்கி கொள்ளலாம்.


ஆண்களின் பூர்வீகம் செவ்வாய் பெண்களின் பூர்வீகம் சுக்கிரன்-ஜான் கிரே-தமிழில்-நாகலட்சுமி சண்முகம்



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி- தம்பதிகள் படிக்க தரமான நூல்

Post by சிவா on Tue Apr 14, 2015 11:31 pm

உங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் நேசன்!



தரவிறக்கிக் கொண்டேன் தமிழ்நேசன்!

இதை தனித் திரியில் பதிவிட்டால் அனைவரும் அறிந்து கொள்ள எளிதாக இருக்கும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி- தம்பதிகள் படிக்க தரமான நூல்

Post by தமிழ்நேசன்1981 on Tue Apr 14, 2015 11:33 pm

@சிவா wrote:உங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் நேசன்!



தரவிறக்கிக் கொண்டேன் தமிழ்நேசன்!

இதை தனித் திரியில் பதிவிட்டால் அனைவரும் அறிந்து கொள்ள எளிதாக இருக்கும்!
மேற்கோள் செய்த பதிவு: 1130639

வெளியிட்டு இருக்கிறேன் அண்ணா. அந்த பதிவு எதில் இருக்கிறது என்று தெரியவில்லை. அதனால் இங்கும் ஒரு லிங்க் இருக்கட்டும் என்று கொடுத்து விட்டேன். அந்த பதிவை தேடிக்கொண்டு இருக்கிறேன்.



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி- தம்பதிகள் படிக்க தரமான நூல்

Post by தமிழ்நேசன்1981 on Tue Apr 14, 2015 11:55 pm

நாவல் மழை - தொடர்பதிவு

இங்கு லிங்க் கொடுத்திருக்கிறேன் அண்ணா. இது தொடர்பதிவு. இந்த நூலை தனிப்பதிவாக பிரிக்க இயலுமா என்று கூறுங்கள் அண்ணா. இன்னொரு தனிப்பதிவாக வேண்டுமானால் பதிவிடலாம். இரண்டு பதிவுகள் வருமே என்று யோசிக்கிறேன் அண்ணா...



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி- தம்பதிகள் படிக்க தரமான நூல்

Post by T.N.Balasubramanian on Wed Apr 15, 2015 6:40 am

ராகி அவர்கள் குமுதத்தில் சிட்னி ஷெல்டனின் நாவல்களை தமிழாக்கம் செய்து 
வெளி இடுவார் , அந்த காலங்களில் .Rage of  angels போன்றவை படித்த ஞாபகம் .
சிறு வயதில் தமிழில் படித்து விட்டு , வயதானப் பிறகு ஆங்கிலத்தில் மூலத்தை படிக்கையில் , 
தமிழாக்கத்தில் எவ்வளவு கவனம் செலுத்தி , மூலத்தின் புனிதத்தன்மையை கெடாதவாறு 
போற்றியுள்ளதை  , குறிப்பிட்ட சிலராலே அறியமுடியும் .
நன்றி ,தமிழ்நேசன். 

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி- தம்பதிகள் படிக்க தரமான நூல்

Post by ayyasamy ram on Wed Apr 15, 2015 6:57 am

பயனுள்ள சேவை...
-
சூப்பருங்க
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32537
மதிப்பீடுகள் : 10814

View user profile

Back to top Go down

Re: ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி- தம்பதிகள் படிக்க தரமான நூல்

Post by விமந்தனி on Wed Apr 15, 2015 8:29 am

சூப்பருங்க நன்றி தமிழ்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி- தம்பதிகள் படிக்க தரமான நூல்

Post by M.Saranya on Wed Apr 15, 2015 11:17 am

மிக்க நன்றி...........
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 878

View user profile

Back to top Go down

Re: ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி- தம்பதிகள் படிக்க தரமான நூல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum