ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
 krishnaamma

இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!
 பழ.முத்துராமலிங்கம்

கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….!!
 krishnaamma

இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
 krishnaamma

`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
 krishnaamma

* "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
 krishnaamma

சவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்
 krishnaamma

பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
 பழ.முத்துராமலிங்கம்

என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
 T.N.Balasubramanian

ஐ.பி.எல் -2018 !!
 T.N.Balasubramanian

3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
 ayyasamy ram

நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
 ayyasamy ram

‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
 ayyasamy ram

ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
 ayyasamy ram

பெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்
 SK

தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
 ayyasamy ram

இலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி
 ayyasamy ram

லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
 SK

நானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்
 SK

மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
 SK

கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
 SK

காஜல் அகர்வால் கொந்தளிப்பு!-
 SK

சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்..!! ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..!!!
 பழ.முத்துராமலிங்கம்

வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி
 பழ.முத்துராமலிங்கம்

அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
 பழ.முத்துராமலிங்கம்

`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்!’ - டர்பனுடன் பதவியேற்றார்
 பழ.முத்துராமலிங்கம்

வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை…!
 ayyasamy ram

செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
 ayyasamy ram

அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
 SK

திண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா? நியூட்ரினோ ஆய்வா?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

நலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்
 பழ.முத்துராமலிங்கம்

மரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..!
 பழ.முத்துராமலிங்கம்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04
 Raju_007

வருங்காலப் பொறியாளன்
 ayyasamy ram

கற்றுக்கொள்! – கவிதை
 ayyasamy ram

பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது
 ராஜா

வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

கன்னட மொழி படத்தில் சிம்பு!
 ayyasamy ram

ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
 ayyasamy ram

மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
 ayyasamy ram

மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
 ayyasamy ram

கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
 ayyasamy ram

பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
 ayyasamy ram

இப்படி செய்து பாருங்க... "இட்லி" பஞ்சு போல் இருக்கும்.
 பழ.முத்துராமலிங்கம்

ஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும் - தொடர் பதிவு
 ayyasamy ram

​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு!
 Dr.S.Soundarapandian

பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!
 Dr.S.Soundarapandian

சுஜாதா நாவல்கள்
 தமிழ்நேயன் ஏழுமலை

பதவியை ராஜினமா செய்தார் தமிழிசை!? தொண்டர்கள் அதிர்ச்சி!
 பழ.முத்துராமலிங்கம்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்
 பழ.முத்துராமலிங்கம்

கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை

View previous topic View next topic Go down

சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை

Post by சிவா on Thu Apr 16, 2015 2:34 am

[You must be registered and logged in to see this image.]

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் மதுரையில், நாணயம் சேகரிக்கும் ஒருவரிடமிருந்து வாங்கிய சங்ககால நாணயங்கள் குறித்து, ஏற்கனவே தமிழிலும், ஆங்கிலத்திலும் நுால்களாக வெளியிட்டிருக்கிறேன். சமீபத்தில், அந்த நாணயங்களை மீண்டும் சோதித்துப் பார்க்கும்போது, அந்த நாணயங்களைப் பாதுகாப்பாக வைத்திருந்த காகித அட்டைகளில் சில கிழிந்திருந்தன. அவைகளை வெளியில் எடுத்து சீர் செய்து கொண்டிருந்தேன்.

அப்போது, சரியாகச் சுத்தம் செய்யப்படாத ஒரு செம்பு நாணயம், என் கண்ணில் பட்டது. அதை வெளியில் எடுத்து, நேரம் கிடைக்கும்போது எல்லாம் சுத்தம் செய்தபோது, இதுவரை நான் பார்த்திராத ஒரு நாணயம் அது என்று புலப்பட்டது. அந்த நாணயத்தின் முன்புற, பின்புற படங்களையும், அவைகளின் வரைப் படங்களையும் இங்கே கொடுத்துள்ளேன்.

நாணயத்தின் முன்புற மத்தியில், யானை ஒன்று, துதிக்கையை உயர்த்தி, வலப்பக்கம் நோக்கி நின்று கொண்டிருக்கிறது. யானையின் காலின் கீழ் இரண்டு கரைகளைக் கொண்ட ஆறு தெரிகிறது. ஆற்றில், இரண்டு மீன்களும், ஒரு ஆமையும் மிதக்கின்றன. இச்சின்னம் மிகத் தொன்மையான சின்னம்.யானையின் மேல்புறம், இடப்பக்கத்திலிருந்து துவங்கி, 'தமிழ்-பிராமி' எழுத்து முறையில், நான்கு எழுத்துக்கள் தெரிகின்றன. அதில், 'செழியன்' என்ற பெயர் தெரிகிறது. நாணயம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆற்றுப் படுகையில் கிடந்திருந்ததால், எழுத்துக்கள் தெளிவில்லாமல் உள்ளன. நுட்பமாக ஒளிபெருக்கிக் கண்ணாடி கொண்டு பார்த்தால், எழுத்துக்களைப் படிக்க முடியும்.

நாணயத்தில் இடப் பற்றாக்குறையால், 'ய' எழுத்து, 'ழி' எழுத்திற்கும் 'ன்' எழுத்திற்கும் கீழ்புறம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துகளுக்கு அப்பால் வலப்புறம், ஆறு வளைவுகளைக் கொண்ட முகடு தெரிகிறது. தொன்மையான நாணயங்களில் தான், இந்தச் சின்னத்தைப் பார்க்க முடியும். நாணயத்தின் பின்புறத்தில், மத்தியில் இரண்டு பெரிய மீன்கள், ஒன்றை ஒன்று எதிர்நோக்கி நின்ற நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. இந்த இரண்டு மீன்களையும் சுற்றி, இரண்டு வளைந்த எல்லைக் கோடுகள் தெரிகின்றன. இந்த எல்லைக் கோடுகளுக்கு இடையில் தொடர்ச்சியாக, முத்துக்களும், சிறு மீன் சின்னங்களையும் கொண்ட மாலை போன்று பொறிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின் முடிவு:

இந்த நாணயத்தின் பின்புறம் இருக்கும் இரண்டு மீன்கள் சின்னம், நமக்கு புதிய செய்தியைச் சொல்கிறது. மதுரை சங்ககாலப் பாண்டியர் நாணயங்களில், பின்புறம் கோட்டு வடிவுடைய மீன் சின்னத்தைத்தான் பார்க்கிறோம். ஆனால், இந்த, 'செழியன்' பெயர் பொறிக்கப்பட்ட நாணயத்தில், அச்சின்னம் பயன்படுத்தப்படவில்லை.

அசோகப் பேரரசர் தன் 'கிர்னார்' கல்வெட்டில், சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, சேர, தாம்பரபருணி என்ற நாடுகள், தன் நாட்டின் தென் எல்லைக்கப்பால் இருந்ததாகக் கூறியுள்ளார். நான், சங்ககாலக் கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட, 'செழிய, செழியன்' நாணயங்களை வைத்து ஆய்வு செய்தபோது, 'தாம்பரபருணி நாடு' தென் தமிழ்நாட்டில் தான் இருந்தது; அதன் தலைநகர், 'கொற்கை' என்று கூறியுள்ளேன். பல அறிஞர்கள், தாமிரபருணி நாடு இலங்கையைக் குறிப்பதாக, 19 ஆம் நுாற்றாண்டில் எழுதியுள்ளனர்.

இக்கட்டுரையில் வெளியிடப்பட்டிருக்கும் அரிய நாணயத்தின் பின்புறம் காணப்படும், 'இரண்டு மீன்கள்' சின்னம், கொற்கைப் பாண்டியர்களின் தனி ஆட்சியை உறுதிப்படுத்துகிறது. இந்த நாணயத்தின் காலம், கி.மு., 3 ஆம் நுாற்றாண்டாகக் கொள்ளலாம். இதுவரை கிடைத்த நாணயங்களை வைத்து, கொற்கை பாண்டியர்களுக்கு, நின்று கொண்டிருக்கும் நிலையில் உள்ள இரண்டு மீன்கள், மதுரைப் பாண்டியர்களுக்கு, கோட்டு வடிவ மீன் சின்னம், சேரர்களுக்கு, 'வில், அம்பு'ச் சின்னம், சோழர்களுக்கு, 'பாயும் புலி' என்பது உறுதியாகிவிட்டது.

அதியமான்கள் தான் சத்தியபுத்திரர்கள் என்பது, திருக்கோவிலுார் அருகே உள்ள ஜம்பைக் கல்வெட்டின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நல்ல நிலையிலுள்ள அதியமான் நாணயங்கள் கிடைத்தால், அசோகர் காலத்தில் தமிழகத்தை ஆண்ட ஐந்து அரசு வம்சங்களின் இலச்சினைகளை முழுமையாக அறிய முடியும்.

இரா.கிருஷ்ணமூர்த்தி, தலைவர், தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக்கழகம், சென்னை


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை

Post by ayyasamy ram on Thu Apr 16, 2015 6:15 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum