ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
Ideas on changing Government rules and regulations for easing lives of citizens
 T.N.Balasubramanian

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ஊர காணோம்
 ayyasamy ram

என் இடத்தைத் தீர்மானிக்க நேரம் வரவில்லை – கீர்த்தி சுரேஷ்
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 T.N.Balasubramanian

ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
 ayyasamy ram

பென்குவின் பறவைகள்
 ayyasamy ram

இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
 ayyasamy ram

காதல் என்பது…..
 ayyasamy ram

மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
 ayyasamy ram

உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
 ayyasamy ram

மாற்றம் என்பது...
 ayyasamy ram

ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
 ayyasamy ram

ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
 ayyasamy ram

பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
 ayyasamy ram

'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
 ayyasamy ram

எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
 ayyasamy ram

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 03
 shruthi

Youtube. வீடியோ டவுண்லோட் செய்ய சிறந்த ஆப்
 Meeran

இந்த வார இதழ்கள் சில
 Meeran

மே 25 நடப்பு நிகழ்வுகள்
 Meeran

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 02 - தவறவிடாதீர்கள்
 தமிழ்நேசன்1981

கனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்
 vighneshbalaji

எனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு
 vighneshbalaji

சிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை
 vighneshbalaji

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்
 sudhagaran

"குருவே சரணம்" - மகா பெரியவா !
 T.N.Balasubramanian

2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்
 ayyasamy ram

வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
 பழ.முத்துராமலிங்கம்

சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
 ayyasamy ram

தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
 ayyasamy ram

மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
 ayyasamy ram

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குதிரை பேர வரலாறு
 ayyasamy ram

புறாக்களின் பாலின சமத்துவம்
 ayyasamy ram

போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
 ayyasamy ram

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 பழ.முத்துராமலிங்கம்

மாறுவேடப் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
 ayyasamy ram

தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ….(பொது அறிவு தகவல்)
 ayyasamy ram

ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
 ayyasamy ram

விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
 ayyasamy ram

சினிமா -முதல் பார்வை: செம
 ayyasamy ram

அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”
 கோபால்ஜி

ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

எல்லாம் நன்மைக்கே! - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*
 krishnaamma

மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
 krishnaamma

திருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி
 krishnaamma

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 krishnaamma

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 krishnaamma

ஓர் அழகான கதை !
 krishnaamma

'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !
 krishnaamma

அது யார், ஜகத்குரு?..
 krishnaamma

நான் யார் ?
 B VEERARAGHAVAN

டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
 பழ.முத்துராமலிங்கம்

நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
 ayyasamy ram

அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்
 ayyasamy ram

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

முத்தமிழ்: சொல்லேர் உழவர்

View previous topic View next topic Go down

முத்தமிழ்: சொல்லேர் உழவர்

Post by சிவா on Wed Apr 22, 2015 12:23 am


மானுட மனத்தில் அறிவுக்கூறு, உணர்ச்சிக்கூறு, முயற்சிக்கூறு என்ற மூக்கூறுகளும் ஒன்றையொன்று பற்றிப் படர்ந்துள்ளன. தமிழ்மொழி சங்க காலத்தில் மூன்று வகைகளில் நிலைபெற்றிருந்தது. ஒன்று இயல், மற்றொன்று இசை, பிறிதொன்று நாடகம். தமிழ் மொழி, “இயல்“ வழியாக மானுடத்தின் அறிவுக்கூறையும் “இசை“ வழியாக உணர்ச்சிக் கூறையும் இயலும் இசையும் இணைந்த “நாடக“த்தின் வழியாக முயற்சிக்கூறையும் வளர்த்தது. இயலையும் நாடகத்தினையும் இணைக்கும் கயிறுதான் இசை. முத்தமிழின் மையமும் அதுதான்.

கூத்தும் நாடகமும் ஒரு பொருள் குறித்த சொற்கள்தான். அக்காலத்தில் “கூத்து“ என்று அறிய்பட்டது பின்னாளில் நாடகமாக நிலைபெற்றது. முத்தமிழைப் “பரிபாடல்“ என்ற நூல் “தமிழ்மும்மை“ என்றது. “ஒரு விஷயத்தைச் சொல்லால் விளக்குவது இயல், பாட்டால் விளக்குவது இசை, நடிப்பால் விளக்குவது நாடகம்“ என்று குறிப்பிட்டுள்ளார் ஆறு. அழகப்பன். “நடனமும் நாடகமும் கூத்துமெல்லாம் முதன் முதல் கண்டறிந்து நூல்கள் எழுதினோர் பண்டைத் தமிழாசிரியர்களே. தொன்று தொட்டு இயலும் இசையும் நாடகமும் தமிழுக்கே உரியவாதலில் தெரிந்து சான்றோர் எல்லாம் தமிழை “முத்தமிழ்“ என வழங்கி வருகின்றனர்“ என்றார் மறைமலை அடிகள். பிற்கால ஔவையின் செய்யுளில் உள்ள “சங்கத் தமிழ் மூன்றும் தா“ என்ற அடியிலிருந்து, “இயல், இசை, நாடகம் (கூத்து) ஆகிய மூன்றும் இணைந்ததே சங்கத் தமிழ்“ என்பது தெளிவாகின்றது.

புலவர் மரபு

இயற்றமிழை வளர்த்து, வாழச்செய்த அக்காலச் செந்நாப் புலவர்களைச் “சொல்லேர் உழவர்“ என்று இலக்கியங்கள் சிறப்பித்துள்ளன. “இளவேனிற் காலத்தில் சான்றோர் நாவிற்பிறந்த கவிதைகளின் புதுமையை மதுரை மக்கள் கொண்டாடுவர். புலவர்கள் தம் செவிகளை வயலாகவும் தமக்கு முற்பட்ட சான்றோர் கூறிய செய்யுட்களைத் தம் சொல்லை வளர்க்கும் நீராகவும் கொண்டு தமது அறிவுடைய நாவாகிய கலப்பையால் உழுது உண்டனர். இத்தகு புலவர் பெருமக்கள் கவிகளைப் பாண்டியன் கேட்டு மகிழ்வான்“ என்ற செய்தியைக் கலித்தொகையின் நெய்தற்கலி 35ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது. விவசாயி ஏரினைக் கொண்டு நிலத்தினை உழுது நல்ல பயிரினை விளைவிப்பதைப் போலப் புலவர்கள் சொற்கள் என்ற ஏரினைக் கொண்டு தமிழ்மொழியினை உழுது நல்ல செய்யுட்களைப் புனைந்துள்ளனர். ஆதலால், அப் புலவர்களைச் “சொல்லேர் உழவர்“ என்று “தமிழ்விடுதூது“ என்ற சிற்றிலக்கியம் குறிப்பிட்டுள்ளது.

இப் புலவர்கள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற நான்கு வகையான பாக்களைக் கொண்டு இயற்றமிழ் வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றியுள்ளனர். சங்க காலப் புலவர்களாக 473 பேரைக் குறிப்பிடுவர். 102 பாடல்களை இயற்றிய புலவர்களின் பெயர்கள் அறியப்படவில்லை. 473பேரில் 41பேர் பெண் புலவர்கள். மொத்தச் சங்க இலக்கியப் பாடல்கள் 2381. இவற்றுள் 235 பாடல்கள் கபிலர் இயற்றியவை. சங்க இலக்கியத்தில் மூன்று அடிகளிலும் ஒரு பாட்டு உண்டு, 782 அடிகளிலும் ஒரு பாட்டு உண்டு. பாட்டும் தொகையும்தான் சங்க இலக்கியம் என்பர். பாட்டு என்பது பத்துப்பாட்டினைக் குறிக்கும். தொகை என்பது எட்டுத்தொகையினைக் குறிக்கும்.

எட்டுத்தொகை

தனிப்பாடல்களின் தொகுப்புதான் எட்டுத்தொகை. அதாவது எட்டுத்தொகுப்புகள். ஒவ்வொரு தொகுப்பும் பாடல்களின் அடிவரையறை மற்றும் பொருள்மரபு (பாடல் அடிகளின் எண்ணிக்கை, அகப்பொருள், புறப்பொருள்) ஆகியவற்றின் அடிப்படையில் தொகுக்கப்பெற்றுள்ளது. இத்தொகுப்பு நூல்களை “எண்பெருந்தொகை“ என்பர். எட்டுத்தொகையில் உள்ள மொத்தப் பாடல்களில் மிகக் குறைந்த அடி அளவு மூன்றாகவும் மிகுதியான அடி அளவு 140 ஆகவும் உள்ளது.

நற்றிணை

அகத்திணை சார்ந்து ஆசிரியப்பாவில் ஒன்பது அடிகள் முதல் பன்னிரண்டு அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 400 பாடல்களின் தொகுப்பு நூல் நற்றிணை. விதிவிலக்காக இத்தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள 110 மற்றும் 379 ஆகிய பாடல்கள் உள்ளன. “நல்ல திணை“ என்ற பொருளில் இத்தொகுப்பு நூலின் தலைப்பு வைக்கப்பெற்றுள்ளது. இதிலுள்ள பாடல்களை 187 புலவர்கள் இயற்றியுள்ளனர். 56 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் அறியப்படவில்லை. நற்றிணைப் பாடல்களைத் திரட்டித் தொகுக்கச் செய்த வேந்தர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். இந்நூலுக்கு “நற்றிணை நானூறு“ என்ற பெயரும் உண்டு.

காதலன் (தலைவன்) வரவினைப் பல்லி ஒலி எழுப்பிக் கூறுவதாகக் கருதி, நம்பிக்கையுடன் காத்திருக்கும் காதலி (தலைவி), காதலர் வரும் வரை சுவரில் கோடிட்டு எண்ணும் வழக்கத்தினை இத்தொகுப்பு நூலில் காணமுடிகின்றது.

சோழ மன்னர் அழிசிக்குரிய பெருங்காட்டில் விளைந்த நெல்லிக்கனிகளின் புளிப்புச் சுவையை நினைத்து வாவல் (வெளவால்) தன் கனவிலும் ஏங்கும் என்ற செய்தி குறிப்பிடத்தக்கது.

இத்தொகைநூலில் அதியமான் அஞ்சி, அழிசி, ஆய் அண்டிரன், உதியன், ஓரி, காரி, குட்டுவன், சேந்தன், நன்னன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகியோர் சுட்டப்பெற்றுள்ளனர்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முத்தமிழ்: சொல்லேர் உழவர்

Post by சிவா on Wed Apr 22, 2015 12:23 am

குறுந்தொகை

அகத்திணை சார்ந்து ஆசிரியப்பாவில் நான்கு அடிகள் முதல் எட்டு அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 400 பாடல்களின் தொகுப்பு நூல் குறுந்தொகை. இதிலுள்ள பாடல்களை 203 புலவர்கள் இயற்றியுள்ளனர். 10 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் அறியப்படவில்லை. குறுந்தொகைப் பாடல்களைத் திரட்டித் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார். விதிவிலக்காக இத்தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள 307 மற்றும் 391 ஆகிய பாடல்கள் உள்ளன. இந்நூலுக்குக் “குறுந்தொகை நானூறு“ என்ற பெயரும் உண்டு. இத்தொகைநூலில் ஆகுதை, அதியன், ஆய், எவ்வி, ஓரி, கட்டி, குட்டுவன், நள்ளி, நன்னன், பாரி, மலையன், வடுகர் ஆகியோர் சுட்டப்பெற்றுள்ளனர். காஞ்சியூர், உறந்தை, தொண்டி, குறும்பூர், மாந்தை, சிறுநல்லூர், குன்றூர் முதலிய பழந்தமிழக ஊர்களும் சுட்டப்பெற்றுள்ளன.

குழந்தைகள் சிறுதேர் இழுத்தும் பெண்கள் குரவைக்கூத்து ஆடியும் மகிழ்ந்துள்ளனர். நல்வினை, தீவினை, வீடுபேறு, சுவர்க்கம், நரகம், கூற்றுவன் (எமன்) போன்ற தொன்மக் கருத்துகளையும் வீட்டின் கூரையின் மீதமர்ந்து காக்கை கரைந்தால் வீட்டிற்கு விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கைசார்ந்த கருத்துகளையும் இத்தொகுப்பு நூலினுள் காணமுடிகின்றது.

பண்டமாற்றாக இடையவர் பாலைக்கொடுத்துத் தானியத்தைப் பெற்றதனையும் உமணர்கள் உப்பினைக் கொடுத்து நெல்லினைப் பெற்றதனையும் இத்தொகுப்பு நூலின் வழியாக அறியமுடிகின்றது.

நடனப் பெண்ணை “ஆடுகள மகள்“ என்றும் நடனமாடும் ஆடவரை “ஆடுகள மகன்“ என்று அக்காலத்தில் அழைத்துள்ளனர். அக்காலத்தில் பறை, பண்லம், பதலை, முழவு, தட்டப்பறை, குளிர் முரசு போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தியுள்ளனர். இவற்றை இத்தொகுப்பு நூலின் வழியாகத் தெரிந்துகொள்ள முடிகின்றது.

தலைவன் மீது தலைவிகொண்ட காதல் நிலத்தைவிடப் பெரியதாகவும் வானத்தைவிட உயர்ந்ததாகவும் கடலைவிட ஆழமானதாகவும் உள்ளது என்று நீள, அகல, உயர (ஆழ) கணித அளவீடுகளால் புலவர் குறிப்பிட்டுள்ளார். இது, அம் மூன்றின் (நிலம், வானம், கடல்) தன்மை சார்ந்தும் உயர்வானதாகக் குறிக்கப்பெற்றுள்ளது எனலாம்.

தமிழர்கள் அக்காலத்திலேயே “சேமச்செப்பு“ என்ற மட்பாண்டத்தை இக்கால ஃபிளாஸ்க் (தெர்மாசு குடுவை) போலப் பயன்படுத்தியுள்ளனர். “முன்பனிக் காலத்திற்கு உகந்த சூட்டையுடைய நீரைச் சேமச்செப்பிலிருந்து பருகலாம்“ என்ற செய்தி குறுந்தொகையின் 277ஆவது பாடலில் இடம்பெற்றுள்ளது. வெப்பத் தண்ணீரை நெடுநேரம்வரை வெப்பமாகவே வைத்திருக்கும் கலத்தினைத் தமிழர்கள் உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளனர் என்பது இப்பாடலின் வழியாக உறுதிப்படுகின்றது.[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முத்தமிழ்: சொல்லேர் உழவர்

Post by சிவா on Wed Apr 22, 2015 12:24 am

ஐங்குறுநூறு

அகத்திணை சார்ந்து ஆசிரியப்பாவில் மூன்று அடிகள் முதல் ஐந்து அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 500 பாடல்களின் தொகுப்பு நூல் ஐங்குறுநூறு. இதிலுள்ள பாடல்களை ஓரம்போகி, அம்மூவன், கபிலர், ஓதலாந்தை, பேயன் ஆகிய ஐந்து புலவர்கள் இயற்றியுள்ளனர். இப்பாடல்களைத் திரட்டித் தொகுத்தவர் கூடலூர்கிழார் ஆவார். இப்பாடல்களைத் திரட்டித் தொகுக்கச் செய்த வேந்தர் யானைக்கட்சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஆவார். திணைக்கு நூறு பாடல்கள் வீதம் அன்பின் ஐந்திணைகளுக்கு ஐநூறு பாடல்கள் இயற்றப்பெற்றுள்ளன. ஒவ்வொரு நூறு பாடலும் பத்துப் பிரிவுகளாகவும் பிரிவுக்குப் பத்துப் பாடல்கள் வீதமும் தொகுக்கப்பெற்றுள்ளன. இத்தொகுப்புகள் ஒவ்வொன்றும் “பத்து“ என்ற சொல்லினைப் பின்னொட்டாகக்கொண்ட தலைப்பினைப் பெற்றுள்ளன. நெய்தல் திணையில் அம்மூவனார் இயற்றிய “தொண்டிப்பத்து“ என்ற தொகுப்பு அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது. இத்தொகுப்பு நூலில் சோழன் கடுமான் கிள்ளி, குட்டுவன், பாண்டியன், சேரன் ஆதன்அவினி, விராஅன், மத்தி, கொற்கைக்கோமான் ஆகியோர் சுட்டப்பெற்றுள்ளனர். ஆமூர், தேனூர், இருப்பை, கொற்கை, மாந்தை, கோவலூர், கழார் (காவிரி), தொண்டி ஆகிய ஊர்கள் குறிப்பிடப்பெற்றுள்ளன. இத்தொகுப்பு நூலில் “அம்மை“, “அழகு“ ஆகிய வனப்புகள் முழுமையாக இடம்பெற்றுள்ளன.

இந்திரவிழா, தைந்நீராடல் போன்ற பழந்தமிழரின் பழக்க வழக்கங்கள் குறிப்பிடப்பெற்றுள்ளன. இறைவனை வேண்டி நோன்பு நோற்றுப் பிள்ளைபெற்ற தம்பதியரை இத் தொகுப்பு நூலில் காணமுடிகின்றது.[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முத்தமிழ்: சொல்லேர் உழவர்

Post by சிவா on Wed Apr 22, 2015 12:24 am

பதிற்றுப்பத்து

பாடாண்திணையில் (புறத்திணை) ஆசிரியப்பாவில் எட்டு அடிகள் முதல் 57 அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 100 பாடல்களின் தொகுப்பு நூல் பதிற்றுப்பத்து. இது, பத்துப்பத்துப் பாடல்களின் தொகுப்பாகப் பத்துத் தொகுப்புகள் அடங்கிய 100 பாடல்களின் தொகுப்பு நூல். முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கப்பெறவில்லை (20 பாடல்கள்). நான்காம் பத்து அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு பத்துப்பாடல்களின் இறுதியிலும் பதிகம் காணப்படுகின்றது. அப்பதிகத்தில் பாடினோர் பெயர், செய்யுட்களின் பெயர், புலவர் பெற்ற பரிசில், அரசர் ஆண்ட கால அளவு, வேந்தனின் பெற்றோர், வேந்தனின் சிறப்புகள் ஆகியன குறிப்பிடப்பெற்றுள்ளன. பாடலின் சிறப்பான தொடரே அப்பாடலின் தலைப்பாக வைக்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலின் முடிவிலும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் முதலிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. 18 துறைகள் இத்தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளன. பயன்பாட்டில் இல்லாத சொற்கள் பல இத்தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளமையால் இத்தொகுப்புநூலினை “இரும்புக்கடலை“ என்பர்.

புலவர் குமட்டூர்க்கண்ணனார் 58ஆண்டுகள் ஆட்சிபுரிந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பற்றிப் பாடிய பாடல் இரண்டாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் உம்பற்காட்டில் 500 ஊர்களை பிரமதேயமாகவும் தென்னாட்டு வருவாயுள் பாதியினைச் சில ஆண்டுகளுக்கும் பரிசிலாகப் பெற்றுள்ளார்.

புலவர் பாலைக்கௌதமனார் 25ஆண்டுகள் ஆட்சிபுரிந்த பல்யானைச் செல்கெழுகுட்டுவன் பற்றிப் பாடிய பாடல் மூன்றாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் பெற்ற பரிசில் குறிப்பிடத்தக்கது. அவர் விரும்பிய வண்ணம் பத்துப் பெரு வேள்விகள் செய்து அவரும் அவரின் மனைவியும் விண்ணுலகம் அடைய வேந்தர் உதவியுள்ளார்.

புலவர் காப்பியாற்றுக்காப்பியனார் 25ஆண்டுகள் ஆட்சிபுரிந்த களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலைப் பற்றிப் பாடிய பாடல் நான்காம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் 40,00,000 பொன்னும் ஆளுவதில் பாதியையும் பரிசிலாகப் பெற்றுள்ளார்.

புலவர் பரணர் 55ஆண்டுகள் ஆட்சிபுரிந்த கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பற்றிப் பாடிய பாடல் ஐந்தாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் உம்பற்காட்டு வருவாயையும் வேந்தரின் மகன் குட்டுவன் சேரலையும் பரிசிலாகப் பெற்றுள்ளார்.

புலவர் காக்கைப்பாடினியார் 88ஆண்டுகள் ஆட்சிபுரிந்த ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பற்றிப் பாடிய பாடல் ஆறாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் ஒன்பது துலாம் (காய்ப்) பொன்னும் 1,00,000 பொற்காசுகளும் “அவைக்களப் புலவர்“ என்ற தகுதியையும் பரிசிலாகப் பெற்றுள்ளார்.

புலவர் கபிலர் 22ஆண்டுகள் ஆட்சிபுரிந்த செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பற்றிப் பாடியபாடல் ஏழாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் 1,00,000 (காணம்) பொற்காசுகளும் “நன்றா“ என்ற குன்றின் மீதேறி அவரின் கண்களுக்கு எட்டிய எல்லைவரையிலுள்ள நிலங்களையும் பரிசிலாகப் பெற்றுள்ளார்.

புலவர் அரிசில் கிழார் 17ஆண்டுகள் ஆட்சிபுரிந்த தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைப் பற்றிப் பாடிய பாடல் எட்டாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் 9,00,000 (காணம்) பொன்னும் அரசுக் கட்டிலும் பெற்றார்.

புலவர் பெருங்குன்றூர்க் கிழார் 16ஆண்டுகள் ஆட்சிபுரிந்த இளஞ்சேரல் இரும்பொறையைப் பற்றிப் பாடிய பாடல் ஒன்பதாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் 32,000 பொற்காசுகளும் பல நூறாயிரம் அருங்கலன்களும் ஊரும் மனையும் ஏரும் பிறவும் பரிசிலாகப் பெற்றுள்ளார்.

செல்வக்கடுங்கோ வாழியாதன் வேள்விகள் பல செய்ய புரோசுகளுக்கு (புரோகிதர்கள்) மிகுதியான பொருட்களை வழங்கியுள்ளார். வேள்வியில் ஆகுதியாக்குவதற்குச் சிறந்த நெல்லான ஓத்திரநெல் ஓகந்தூரில் மிகுதியாக விளைந்துள்ளது. ஆதலால், அந்த ஊரினை தேவதானமாக புரோசுகளுக்கு இவ் வேந்தர் வழங்கியுள்ளார். தன்னைப் “புரோசு மயக்கி“ என்று பெருமையாக அழைத்துக்கொண்டார்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் துணங்கைக் கூத்தாடுவோரோடு தானும் சேர்ந்து அக் கூத்தினை ஆடி மகிழ்ந்துள்ளார்.

யாழ் போன்று இனிய இசையைத் தரவல்ல “இன்னரம்“ என்ற கருவியைப் பற்றிய குறிப்பு இத்தொகுப்பு நூலினுள் உள்ளது. ஆம்பற்குழல், கொம்பு, வலம்புரிச்சங்கு போன்ற இசைக்கருவிகள் சிறப்பித்துக் கூறுப்பெற்றுள்ளன.

இத்தொகுப்பு நூலில் போரில் விழுப்புண்ணடைந்து வருந்தும் வீரர்களை விறலியர்கள் யாழிசைத்து ஆறுதல் படுத்திய செய்தியைக் காணமுடிகின்றது.

சகுனம் பார்த்தலை “நிமித்தம்“ என்பர். இதனை நல்நிமித்தம், தீநிமித்தம் என்று இருவகைப்படுத்துவர். “நிமித்தம்“ என்பதனை இத்தொகுப்பு நூல் “உன்னம்“ என்று குறிப்பிட்டுள்ளது. இது ஒரு வகை மரம் என்றும் அதன் நிலையைக் குறித்து நிமித்தம் கணிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

பேய்கள் தாம் விரும்பிய உயிர்களின் மீது மேவும் என்றும் உரிய பலியினை அவற்றுக்குத் தந்தால் அவை அவ் உயிரை விட்டு நீங்கும் என்று நம்பினர்.[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முத்தமிழ்: சொல்லேர் உழவர்

Post by சிவா on Wed Apr 22, 2015 12:25 am

பரிபாடல்

அகத்திணையும் புறத்திணையும் கலந்து, பரிபாட்டு என்ற பாவகையில் 32 அடிகள் முதல் 140 அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 70 பாடல்களின் தொகுப்பு நூல் பரிபாடல். ஆனால், 22 பாடல்களே கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றைப் பாடியுள்ள புலவர்களின் எண்ணிக்கை 13. மதுரை மாநகரை ஒட்டி ஓடும் வைகையாற்றில் புதுவெள்ளம் வந்தபோது மக்கள் அடைந்த மகிழ்ச்சியும் அவர்களின் செயல்பாடுகளும் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. மதுரை, வையைஆறு, திருப்பரங்குன்றம், அழகர்கோவில், காளி ஆகியன சிறப்பிக்கப்பெற்றுள்ளன. பாலையாழ், நோதிறம், காந்தாரம் ஆகிய மூப்பண்களைக் கொண்டு பாடல்கள் புனையப்பட்டுள்ளன.

இந்நூலுள் மருத நிலத்திற்குரிய தெய்வமாக மதுரை மாதெய்வமும் நெய்தலுக்குரிய தெய்வமாக வைகையாகிய நீர்த்தெய்வமும் உள்ளீடாகக் குறிக்கப்பெற்றுள்ளன என்பர்.

சுழியத்தை (பூசியம்) “பாழ்“ என்றும் அரையைப் “பாகு“ என்றும் ஒன்பதைத் “தொண்டு“ என்றும் இந்நூல் குறிப்பிட்டுள்ளது.

சாக்தம் (காடுகாள்), கௌமாரம் (செவ்வேள்), வைணவம் ஆகிய மூன்று சமயங்கள் பற்றி இந்நூல் பகர்ந்துள்ளது.

புலவரின் கற்பனைத் திறத்திற்கு ஒரு பெருஞ்சான்று – “விரும்பத்தகுந்த ஈரமான அணிகளைக் கொண்ட உடலினது ஈரமானது தீரும்பொருட்டு, ஒருத்தி வண்டு மொய்க்கும் போதை கொண்ட கள்ளைத்தன் கையில் ஏந்தி நின்றாள். அவ்வேளையில் அவள் கண்கள் கரிய நெய்தல் மலரைப் போலத் தோன்றின. அவள் பெருமகிழ்ச்சியை உண்டாக்கும் போதை மிகக் கள்ளைக் குடித்தாள். குடித்ததும் அவளுடைய கருநிறக் கண்கள், பெரிய நறவம் பூவைப் போலச் செந்நிறத்தை அடைந்தன“. இக் கற்பனைசார்ந்த வருணனை பரிபாடலின் 60 முதல் 65 வரையிலான அடிகளில் உள்ளன.

பழந்தமிழகத்தில் இருந்த தைநீராடல் வழக்கம், காலப்போக்கில் மார்கழி நீராடலாக மாற்றம் பெற்றதோடு, பனிநீர் தோய்தலும் பாவையாடலுமாகத் திகழ்ந்த இளம் பெண்களின் விளையாட்டு, காலப்போக்கில் வழிபாடும் பாவைநோன்புமாக வளர்ந்துவிட்டது. பாகவதத்தில் கார்த்தியாயினி விரதம் நோற்று கண்ணனை அடையும் நெறி மார்கழி மாதத்தில் நிகழ்கின்றது. இக்குறிப்பு, பழந்தமிழகத்தின் பாவை நோன்புடன் உறவுடையது. பரிபாடலில், “அம்பா ஆடல்“ என்று கூறப்பெறுவதுதான் கேரளத்தில் திருவாதிரைத் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது.[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முத்தமிழ்: சொல்லேர் உழவர்

Post by சிவா on Wed Apr 22, 2015 12:25 am

கலித்தொகை

அகத்திணை சார்ந்து கலிப்பாவில் 11 அடிகள் முதல் 80 அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 149 பாடல்களின் தொகுப்பு நூல் கலித்தொகை. இதிலுள்ள பாடல்களைத் திணைக்கு ஒரு புலவராக பாலை பாடிய பெருங்கடுங்கோ (பாலை), கபிலர் (குறிஞ்சி), மருதன் இளநாகனார் (மருதம்), சோழன் நல்லுருத்திரன் (முல்லை), நல்லந்துவனார் (நெய்தல்) ஆகிய ஐந்து புலவர்களும் ஐந்து திணைகள் சார்ந்த பாடல்களை இயற்றியுள்ளனர். இப்பாடல்களைத் திரட்டித் தொகுத்தவர் நல்லந்துவனார் ஆவார். இத்தொகுப்பு நூலினை “நல்லந்துவனார் கலித்தொகை“ என்றும் குறிப்பிடுவர். இந்நூலுள் 641 உவமைகள் உள்ளன.

இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஓரங்க நாடக அமைப்பினைப் பெற்றுள்ளன. கைக்கிளையும் பெருந்திணையும் இந்நூலுள் காணப்படுகின்றன. குறிஞ்சிக்கலியில் ஒத்தாழிசைக்கலியும் கொச்சகக்கலியும் பெருமளிவில் இடம்பெற்றுள்ளன. முல்லைக்கலியில் ஏறுதழுவுதல், குரவையாடுதல் போன்றன பற்றிய செய்திகள் சுட்டப்பெற்றுள்ளன. நெய்தற்கலியில் தைநீராடுதல், மடலேறுதல் போன்றன பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. “பெண்கள் பிறந்தவீட்டிற்கு உரியவர்கள் அல்லர்“ என்ற சிந்தனையை இத்தொகுப்பு நூல் வலியுறுத்தியுள்ளது.

கலித்தொகையில் குறிஞ்சிக்கலியில் அன்னாய் வாழிப் பத்து என்ற தலைப்பில் உள்ள ஒரு பாடலில் புலவர் கபிலர் ஓர் உளவியல் நிபுணர்போலச் செயல்பட்டுள்ளார். தலைவனால் தலைவிக்கு ஏற்பட்ட காதல்நோயினைத் தலைவியின் தாய் ஏதோ அணங்கு பற்றியதாகக் கருதி, அதனை நீக்க வெறியாடல் நிகழ்த்த ஏற்பாடுசெய்கின்றாள். அன்னையின் அச்செயலினைத் தடுத்த தலைவியின் தோழி, “அன்னையே! நான் சொல்வதைக் கேட்பாயாக. நின் மகள் அடைந்துள்ள இந்நோய் தீர்வதற்குரிய மற்றொரு முறையும் உள்ளது. அது யாதெனில்? நின் மகளை நமது வீட்டுப் புழக்கடையில் உள்ள, விலங்குகளைப் பலியிடுவதால் புலால் நாற்றம் தாங்கிய துறு கல்லின் மீது ஏற்றி நிறுத்தி, அவர் நாட்டில் உள்ள பூக்கள் பொருந்திய குன்றத்தை நோக்கி, நீலமணி போல் விளங்கும் இழையை அணிந்த இவள் நிற்கும் நிலைபெறின் இவள் உற்ற நோய் எளிதி்ல் தீரும். வெறியாடற் செயலினும் இச்செயல் சிறந்தது“ என்று கூறுகின்றாள். தலைவியின் மன அழுத்தத்தினைப் போக்கத் தலைவன் வாழும் இடத்தின் காட்சி ஒரு மருந்தாகப் பயன்படுவதனைக் கபிலர் உளவியல் நோக்குடன் இப்பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூல் எட்டு அறக்கருத்துகளை எடுத்துரைத்துள்ளது. அவை செல்வம் நிலையாமை, வறியவரது இளமை சிறக்காது, ஈகையற்றவரின் செல்வம் அவரை அண்டியோர்க்குப் பயன்படாது, பிறருக்குத் தீங்கு செய்வோர் தாமே ஒழிவர், இளமையும் காலமும் தாமே கழியும் தன்மையுடையன, அறவழியில் பொருளீட்டினால் அச்செல்வம் இவ் உலக வாழ்விற்கும் மறு உலக வாழ்விற்கும் பயன்படும், நிலையாமையை உணர்ந்தவர் ஈகைபுரிவர், மனித உடல் பெறுவதற்கு அரியது என்பனவாகும்.

கலித்தொகைப் பாடல்கள் யாப்பால் இயற்றமிழ், வழங்கொலியால் இசைத்தமிழ், பா அமைப்பால் நாடகத்தமிழ் என்று முத்தமிழையும் கலித்தொகையில் கண்ணுறமுடிகின்றது.[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முத்தமிழ்: சொல்லேர் உழவர்

Post by சிவா on Wed Apr 22, 2015 12:25 am

அகநானூறு

அகத்திணை சார்ந்து ஆசிரியப்பாவில் 13 அடிகள் முதல் 31 அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 400 பாடல்களின் தொகுப்பு நூல் அகநானூறு. இதிலுள்ள பாடல்களை 158 புலவர்கள் இயற்றியுள்ளனர். மூன்று பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் அறியப்படவில்லை. அகநானூற்றுப் பாடல்களைத் திரட்டித் தொகுத்தவர் உருத்திரன் சன்மனார் ஆவார். இப்பாடல்களைத் திரட்டித் தொகுக்கச் செய்த வேந்தர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி ஆவார். இத்தொகுப்பு நூலுக்கு நெடுந்தொகை, பெருந்தொகை நானூறு, அகப்பாட்டு என்ற பெயர்களும் உண்டு. இத்தொகுப்பு நூலில் உள்ள பாடல்கள் களிற்றியானைநிரை (1-120), மணிமிடை பவளம் (121-300), நித்திலக்கோவை (301-400) என்ற மூப்பிரிவினை உடையன. பாலைத்திணைப் பாடல்கள் 1,3,5,7,9 என ஒற்றைப்படை எண்வரிசையிலும் குறிஞ்சித்திணைப் பாடல்கள் 2,8,12,18 என்ற எண்வரிசையிலும் முல்லைத்திணைப் பாடல்கள் 4,14,24,34 என்ற எண்வரிசையிலும் மருதத்திணைப் பாடல்கள் 6,16,26,36 என்ற எண்வரிசையிலும் நெய்தற்திணைப் பாடல்கள் 10,20,30,40 என்ற எண்வரிசையிலும் வைக்கப்பெற்றுள்ளன.

இத்தொகுப்பு நூலுள் அஃதை, அகுதை, அதியமான் நெடுமான் அஞ்சி, அத்தி, ஆதிமந்தி, உதியஞ் சேரலாதன், அவ்வி, எழினி, கரிகால் வளவன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆகியோர் குறிப்பிடப்பெற்றுள்ளனர்.

சங்க இலக்கியங்களிலேயே அகநானூற்றில்தான் “முதலிரவு“ நிகழ்வு இலக்கிய நயத்துடன் காட்டப்பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் ஒரு கோட்டோவியமாகவே இது இடம்பெற்றுள்ளது. அகநானூற்றில், திருமணம் முடிந்தபின் புதுமண மக்கள் தனித்து விடப்படுகின்றனர். தலைவி நாண மிகுதியால் முகம் புதைத்து நிற்கின்றாள். தலைவன் விருப்பமுடன் அவள் முகத்தை மூடிய கைகளை விலக்கிவிடத் தொடுகின்றான். தலைவனின் முதல் தீண்டலில் தலைவியின் நாணம் அச்சமாக மாறிப் பெருமூச்சாக மிகுந்துவிடுகின்றது. தலைவியின் மெல்லிய உணர்வுகளைப் புரிந்து கொண்ட தலைவன், அவளின் அச்ச உணர்வினைப் போக்கும்விதமாக, “நின் மனத்தில் நினைப்பதை அஞ்சாமல் கூறு“ என்று தணிந்த குரலில் இனிமையாகப் பேசுகின்றான். தலைவனின் மென்மையான சிரிப்பும் அருகில் அமர வைத்து, பேசத்தூண்டியதுமான அணுகுமுறையும் தலைவின் அச்சத்தை நீக்குகின்றன. தலைவியின் மனத்தில் தோன்றிய மகிழ்ச்சி அவளின் முகத்தில் வெளிப்படுகின்றது என்ற செய்தி நயத்துடன் கூறப்பெற்றுள்ளது.

குடவேலைத் தேர்தல் முறை, ஆடுமகள் (நடனப்பெண்) பாவைபோல வெறியாடும் நிலை போன்றன இத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளன.

பொ.யு.மு. 326 ஆம் ஆண்டுல் நடைபெற்ற அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு அஞ்சிய வடநாட்டைச் சார்ந்த நந்தர்கள் தங்களின் செல்வங்களைக் கங்கை நதிக்கு அடியில் மறைத்து வைத்த செய்தியையும் பொ.யு.மு. 310 ஆம் ஆண்டு நடைபெற்ற சந்திரகுப்த மோரியரின் மாமன் பிந்துசாரனின் தென்னகப் படையெடுப்புக்கு வடுகர் உதவினர் என்ற செய்தியையும் இத்தொகுப்பு நூலின் வழியாக அறியமுடிகின்றது.[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முத்தமிழ்: சொல்லேர் உழவர்

Post by சிவா on Wed Apr 22, 2015 12:26 am

புறநானூறு

அகத்திணை சார்ந்து ஆசிரியப்பாவில் நான்கு அடிகள் முதல் 40 அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 399 பாடல்களின் தொகுப்பு நூல் புறநானூறு. இதிலுள்ள பாடல்களை 157 புலவர்கள் இயற்றியுள்ளனர். 14 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் அறியப்படவில்லை. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் திணை, துறை, பாடினோர், பாடப்பட்டோர், பாடல் எழுந்த சூழல் போன்ற குறிப்புகள் காணப்படுகின்றன.

பாண்டிய வேந்தர்கள் 12பேர், சேர வேந்தர்கள் 18பேர், சோழ வேந்தர்கள் 13பேர் வேளிர்கள் 18பேர் பற்றியும் அவர்களின் வீர, தீர, ஈர உணர்வுகளையும் இத்தொகுப்பு நூல் விரித்துக்கூறியுள்ளது. அதியமான் நெடுமான் அஞ்சி, ஆய் அண்டிரன், ஓய்மான் நல்லியக்கோடன், சோழன் கரிகாற் பெருளத்தான், குமணன், கோப்பெருஞ்சோழன் ஆகியோருக்கும் அவர்களைச் சார்ந்த புலவர்களுக்கும் இருந்த உறவுநிலையினை விரிவாகக் கூறியுள்ளது.

அருவிக்குத் துகில் (துணி), அருளுக்கு நீர், கந்தைத்துணிக்குப் பாசியின் வேர், கள்ளின் மயக்கத்திற்கு தேளின் கடுப்பு, கலிங்க ஆடைக்குப் பாம்பின் தோல், குதிரையின் வேகத்திற்குக் காற்றின் வேகம், நரைத்த கூந்தலுக்குக் கொக்கின் இறகு, பொறுமைக்கு நிலம் ஆகியன உவமையாக இத்தொகுப்பு நூலில் கூறப்பெற்றுள்ளன. 10 வகையான ஆடைகள், 28 வகையான அணிகலன்கள், 30 வகையான படைக்கருவிகள், 67 வகையான உணவுகள் முதலியன சுட்டப்பெற்றுள்ளன.

தனிமனிதனின் உரிமைகளும் கடமைகளும் சமூக இணைப்பும் பழக்கவழக்கங்களும் விருப்பு வெறுப்புகளும் ஆகிய இயல்புகள் எல்லாம் அறக்கோட்பாட்டால் கட்டுப்படுத்தப்பட்டன. இவ் அறக்கோட்பாட்டினை உருவாக்குவதும் வழிநடத்துவதும் சமூகத்தின் பொருளாதார உறவு முறைகளே. பொருளாதார வளர்ச்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்போர் அவர்களின் நலன்களைப் பாதுகாக்கச் சமூகத்தின் கருத்துகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பொருளாதார வளர்ச்சியால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களை நெறிப்படுத்துவதே அறத்தன் முதன்மைநோக்கம். அறத்தின் இயல்பு, சிறப்பு, ஆற்றல் பற்றிப் புறநானூற்றில் ஏறத்தாழ 35 பாடல்கள் எடுத்துரைத்துள்ளன. நிலையாமை பற்றி ஏறத்தாழ 40 பாடல்கள் வலியுறுத்தியுள்ளன.66 “மறவாழ்வில் அறநெறி முதன்மையானது“ என்பதனை மீண்டும் மீண்டும் கூறுகின்றன. “சங்க இலக்கியங்களுக்கு முன்னர் தமிழ் மக்களிடையே தோன்றி வளர்ந்த அறநூல்கள் பல இருந்து, அவை பற்றி அறிவதற்குப் போதிய சான்றுகள் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், ஆலத்தூர் கிழார் காலத்த்திலும் திருவள்ளுவரின் காலத்திலும் அவை இருந்துள்ளன. அக்கால அரசர்கள் அறங்கூறவையங்களில் அவற்றைப் பேணிக்காத்தனர். அவையே அறங்கூறுவோர்க்கும் பிறர்க்கும் வழிகாட்டியாக இருந்துள்ளன“67 என்ற சிந்தனையைச் சொ. இலக்குமணசாமி முன்வைத்துள்ளார். “அறம்“ என்ற சொல் புறநானூற்றில் ஆட்சி, நீதி, கொடை, மக்கள் நலம் ஆகியவற்றைக் குறிப்புணர்த்தும் சொல்லாகவே புறநானூற்றில் கையாளப்பெற்றுள்ளது.

கணவரை இழந்த கைம்மைப் பெண்கள் தங்களின் பொருளாதாரத்திற்கு பருத்தி நூல்நூற்றல் தொழிலினைச் செய்கின்றனர் என்ற செய்தியினை இத்தொகுப்பு நூல் சுட்டியுள்ளது. அத்தகைய பெண்களைப் “பருத்திப்பெண்டிர்“ என்று சுட்டியுள்ளது.

இத்தொகுப்பு நூல் வெண்ணிப்பறந்தலை, வாகைப் பறந்தலை, கழுமலம், தகடூர், தலையாலங்கானம், காணப்பேரெயில் போன்ற போர்க்களங்களின் விரிவான வரலாற்றை எடுத்துக்கூறியுள்ளது.[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முத்தமிழ்: சொல்லேர் உழவர்

Post by சிவா on Wed Apr 22, 2015 12:26 am

பத்துப்பாட்டு

பத்து நெடிய தனிப்பாடல்களின் தொகுப்புதான் பத்துப்பாட்டு. ஒரு பாடல் ஒரு தனிநூல். இந்தப் பத்துப் பாடல்களும் ஆசிரியப்பாவினால் பாடப்பட்டுள்ளன. எல்லாம் பாடாண்திணையில் அமைந்தவை. எட்டுப் புலவர்கள் ஆறு தலைவர்களைப் பற்றிப் பாடப்பட்ட பத்துப் பாடல்களின் தொகுப்பினைத்தான் “பத்துப்பாட்டு“ என்கிறோம். இதில் ஐந்து நூல்கள் ஆற்றுப்படையைச் சார்ந்தவை. ஆற்றுப்படை என்றால் “வழிப்படுத்துதல்“ என்று பொருள். ஆற்றுப்படை நூல்கள் ஒருவகையில் பயணக்குறிப்பு இலக்கியங்கள்.

திருமுருகாற்றுப்படை

புலவர் நக்கீரர், செவ்வேளாகிய முருகப்பெருமானைத் தலைவராகக்கொண்டு ஆற்றுப்படை இலக்கணத்தில் 317 அடிகளில் புறத்திணையில் பாடிய பாடல்தான் திருமுருகாற்றுப்படை. இந்நூல் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது.

இந்நூலுக்குப் “புலவராற்றுப்படை“ என்றும் “முருகு“ என்றும் வேறுபெயர்கள் உண்டு. துன்பப்படுவோரை முருகனிடம் செல்லுமாறு கூறி (ஆற்றுப்படுத்தி – வழிகாட்டி) அவர்கள் தம் துயரிலிருந்து விடுபட நக்கீரர் உதவியுள்ளார். இந்நூலின் நோக்கமும் இதுதான். முருகப்பெருமானுக்கு திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவி நன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை என ஆறுபடைவீடுகள் உண்டு. அவற்றைச் சென்றடைந்து முருகப்பெருமான வழிபட நக்கீரர் வழிகாட்டியுள்ளார். ஒரு படைவீட்டிற்கு ஒரு பகுதியென இந்நூல் ஆறு பகுதிகளை உடையது.

இந்நூலுள் திருமால், பரமசிவன், இந்திரன், பிரம்மன் முதலிய தெய்வங்கள் பற்றிய குறி்ப்புகளும் உண்டு. முருகனைக் காட்டிலும் சோலைகளிலும் ஆற்றிலும் குளக்கரையிலும் கடம்பமரத்திலும் முச்சந்தியிலும் நாற்சந்தியிலும் ஐஞ்சந்தியிலும் அம்பலத்திலும் மரத்தடியிலும் மரக்கட்டையிலும் உறைந்திருப்பதாகக் கருதி வழிபட்டனர் என்பதனை இப்பாடலின் வழியாக அறியமுடிகின்றது. முருகப்பெருமானை ஆறு முகங்களையும் 12 கரங்களையும் உடைய உருவமாகக் கற்பனைசெய்து வழிபட்டனர். சிறிய தினை அரிசியை மலரோடு கலந்து வைத்தும் ஆடறுத்தும் கோழிக் கொடியோடு முருகனை வரிசையாக நிறுத்தியும் ஊர்கள் தோறும் முருகனுக்குச் சிறந்த விழாக்களை நடத்தினர். பலிப் பொருட்களைப் பிரப்பங்கூடைகளில் வைத்து முருகனைத் தொழுதனர். இந்நூலுள் மாபுராணம், பூத புராணம், கந்தபுராணம் போன்றவற்றின் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முத்தமிழ்: சொல்லேர் உழவர்

Post by சிவா on Wed Apr 22, 2015 12:27 am

பொருநராற்றுப்படை

புலவர் முடத்தாமக் கண்ணியார், கரிகாற்பெருவளத்தானைத் தலைவராகக்கொண்டு ஆற்றுப்படை இலக்கணத்தில் 248 அடிகளில் புறத்திணையில் பாடிய பாடல்தான் பொருநராற்றுப்படை. இந்நூல் வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டுள்ளது.

வேடம் புனைந்து பாடுவோரைப் (பாடுநர்) “பொருநர்“ என்பர். வேளாண்மையைப் பற்றிப் பாடும் ஏர்க்களம் பாடுநர், போர்க்களத்தில் நின்று அது பற்றி வர்ணித்துப்பாடும் போர்க்களம் பாடுநர், போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற மன்னரின் வெற்றியைப் பாடும் பரணி பாடுநர் எனப் பொருநரில் மூன்று வகையினர் உண்டு. இந்நூலில் குறிப்பிடப்படும் பொருநர் போர்க்களம் பாடுநராவர்.

கரிகாற்பெருவளத்தானிடம் பரிசில் பெற்றுத் திரும்பிய ஒரு பொருநர் தன்னை எதிர்ப்படும் வறிய பொருநரிடம், “கரிகாற்பெருவளத்தானின் பெருமைகளைக் கூறி, அவனிடம் சென்று நீயும் பரிசில் பெற்று வளம்பெருக“ என்று வழிகாட்டும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

பொருநரின் மனைவியர் யாழ்வாசிப்பதிலும் இன்னிசை பாடுவதிலும் வல்லவர்களாக இருந்தனர். ஆதலால், அவர்களைப் “பாடினி“ என்றனர். அந்தப் பாடினியின் உருவ அழகினைப் பொருநராற்றுப்படை நுட்பமாக வர்ணித்துள்ளது. ஆற்றுமணல் போன்ற கூந்தல், எட்டாம் பிறைபோன்ற நெற்றி, வில் போன்ற புருவங்கள், மழைபோன்ற கண்கள், இலவம் பூப்போன்ற வாய், முததுப்போன்ற பற்கள், மகரக் குழைகள் ஆடுபவை போன்ற காதுகள், வெட்கத்தால் கவிழ்ந்திருக்கும் கழுத்து, மூங்கில் போன்ற தோள்கள், மெல்லிய மயிர் நிறைந்த முன் கைகள், காந்தள் போன்ற மெல்லிய விரல்கள், கிளியின் வாய் போன்ற நகங்கள், பிறருக்கு வருத்தம் விளைவிக்கும் மார்புகள், நீர்ச்சுழி போன்ற கொப்பூழ், உண்டென்று உணரப் படாத நுண்ணிடை, மேகலை அணியப்பெற்ற அல்குல், யானையின் துதிக்கை போன்ற தொடைகள், மயி்ர் ஒழுங்குபட்ட கணைக்கால், ஓடி இளைத்த நாயின் நாக்கு போன்ற சிவந்த பாதங்கள் என அவளது தலை முதல் பாதம் வரையுள்ள 19 உறுப்புகளையும் புலவர் வர்ணித்துள்ளார்.

யாழினிசை, “தீயோரின் குணத்தை மாற்றி, அவர்களை நல்லோராக மாற்றவல்லது“ என்று இந்நூல் தெரிவித்துள்ளது.

அக்காலக்கட்டத்தில் மக்களிடையே இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வினை இருவேறு வர்ணனைகளின் வழியாக இந்நூல் தெரிவித்துள்ளது. செல்வ வளமுடையவர்கள் கண்ணால் காணமுடியாத அளவு மெல்லிய நூலால் நெய்யப்பெற்ற, அழகான பூவேலைப்பாடுகள் செய்யப்பெற்ற, பாம்பின் தோலைப் போல மென்மையும் வழவழப்பும் பளபளப்பும் உடைய மெல்லி துணியினை அணிந்தனர். கொட்டைக் கரை போட்ட பட்டாடையை அணிந்தனர். வறுமையில் வாடுவோர் ஈரும் பேனும் கூடிக் குடியிருந்து அரசாட்சி செய்யக்கூடிய, வேர்வையால் நனைந்து நாற்றமடிக்கக்கூடிய, வேறு நூல்கள் நுழைந்திருக்கின்ற தையல் போடப்பெற்ற, கிழிந்த கந்தையினை அணிந்திருந்தனர்.

அக்காலத் தமிழர்கள் தாம் உணவு உண்பதற்கு முன்னர் காக்கைக்கு உணவிடும் வழக்கத்தினை இந்நூலின் 181 முதல் 184 வரையிலுள்ள அடிகள் குறிப்பிட்டுள்ளன. “உயர மற்ற தென்னை மரங்கள் நிறைந்திருக்கின்ற குளிர்ந்த சோலை. அந்தத் தென்னந்தோப்பின் வாசலில் நெற்குதிர் நிற்கின்ற குடிசை. அக் குடிசையில் குடியிருப்போர் இரத்தங்கலந்த சோற்றைக் காக்கைக்குப் பலியாகக் கொடுத்தனர். அந்தப் பலியைக் கருங்காக்கைகள் உண்டன“ என்ற செய்தி அவ் அடிகளில் உள்ளன.

அக் காலத்தில் வழக்கிலிருந்த பண்டமாற்றுமுறை பற்றியும் இந் நூலில் அறியமுடிகின்றது. தேனையும் நெய்யையும் கிழங்கையும் கரும்பினையும் அவலினையும் கொடுத்து, மீனையும் நெய்யையும் மதுவையும் மானிறைச்சியையும் கள்ளையும் பெற்றுச் சென்றுள்ளனர்.

விருந்தினரைப் பேணிப் பின்னர் அவர்களை வழியனுப்பும்போது அவர்களுடன் ஏழடி நடந்துசென்று வழியனுப்பும் பண்பாடு அக்காலத்தில் இருந்துள்ளமையை இந் நூல் குறிப்பிட்டுள்ளது.[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முத்தமிழ்: சொல்லேர் உழவர்

Post by சிவா on Wed Apr 22, 2015 12:27 am

சிறுபாணாற்றுப்படை

புலவர் இடைகழிநாட்டு நல்லூர் நத்தத்தனார், மாவிலங்கையைத் தலைநகரமாகக் கொண்ட ஆட்சிபுரிந்த ஓய்மா நாட்டு நல்லியக்கோடனைத் தலைவராகக்கொண்டு ஆற்றுப்படை இலக்கணத்தில் 269 அடிகளில் புறத்திணையில் பாடிய பாடல்தான் சிறுபாணாற்றுப்படை. இந்நூல் ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டுள்ளது.

“பாண்“ வாசிக்கும் தொழிலைச் செய்ய ஒரு பிரிவினரைப் “பாணர்“ என்றனர். பாணர்கள் மூவகைப்படுவர். இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர். யாழ்ப்பாணர் இரண்டு வகைப்படுவர். சீறியாழ்ப்பாணர், பேரியாழ்ப்பாணர். இந்நூலில் இடம்பெறும் பாணர் சீறியாழ்ப்பாணர். ஆதலால்தான் “சிறுபாணாற்றுப்படை“ என்ற பெயரினைப் புலவர் இந்நூலுக்கு இட்டுள்ளார்.

ஓய்மா நாட்டு நல்லியக்கோடனிடம் பரிசில் பெற்றுத் திரும்பிய ஒரு சிறுபாணன் தன்னை எதிர்ப்படும் வறிய சிறுபாணனிடம், “ஓய்மா நாட்டு நல்லியக்கோடனின் பெருமைகளைக் கூறி, அவனிடம் சென்று நீயும் பரிசில் பெற்று வளம்பெருக“ என்று வழிகாட்டும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

இந்நூலில் விறலியின் உருவ அழகு வர்ணிக்கப்பட்டு்ள்ளது. அவளின் கன்னம், கூந்தல், நுதல், நோக்கு, பல் முதலிய பத்து உறுப்புகள் மட்டும் வர்ணிக்கப்பட்டுள்ளன.

இந்நூலில் உப்பு வணிகர்களின் குடும்பம் சுட்டப்பெற்றுள்ளது. அவர்கள் உப்பு விற்பனைக்காக வண்டிகளில் உப்பு மூடைகளை ஏற்றிக்கொண்டுச் செல்லும்போது அவ் வணிகரும் அவருடைய மனைவியும் அவரின் குழந்தைகளும் அவர்கள் வளர்த்த பெண் குரங்கும் (மந்தி) உடன் செல்வதாகக் குறிப்பு உள்ளது. நுணா மரத்தின் கட்டையினைக் கடைந்து மணிகள் (மரமணிகள்) செய்து, மாலையாகக் கோத்து, தாங்கள் வளர்க்கும் பெண்குரங்கின் கழுத்தில் கட்டியிருந்தனர். வேளாளர்கள் தங்களின் வீட்டு வளர்ப்பு விலங்காக நாயினை வைத்திருந்தனர் என்ற செய்தியையும் அறியமுடிகின்றது.

நல்லியக்கோடனின் 16 நற்குணங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 1. செய்ந்நன்றி அறிதல், 2. சிற்றினம் இன்மை, 3. இன்முகம் உடைமை, 4. இனியன் ஆதல், 5. அஞ்சினோர்க்கு அளித்தல், 6. வெஞ்சினம் இன்மை, 7. ஆண் அணி புகுதல் (போர்க்கலத்தில் எதிரியின் படைக்குள் புகுதல்), 8. அழிபடை தாங்கள் (போர்க்கலத்தில் தன் படை சிதறாமல் காத்தல்), 9. கருதியது முடித்தல், 10. காமுறப்படுதல், 11. ஒருவழிப்படாமை, 12. ஓதியது உணர்தல், 13. அறிவு மடல் படுதல், 14. அறிவு நன்கு உடைமை, 15. வரிசை அறிதல், 16. வரையாது கொடுத்தல்.

இந்நூலில் அக்காலத்தில் நிலவிய உணவுப் பண்பாட்டினை அறியமுடிகின்றது. நெய்தல் நிலத்தினர் வறல் குழல் மீன் கருவாடினை விருந்தளிப்பர் என்றும் வேடர்குலத்தினர் புளிக்கறியுடன் சோறும் வேட்டையாடிவந்த ஆமான் முதலியவற்றைச் சமைத்து விருந்தளிப்பர் என்றும் உழவர் குலத்தினர் கைக்குத்தல் அரிசிச் சோற்றினையும் வயல் நண்டினையும் பீர்க்கங்காய்க் கூட்டினையும் விருந்தளிப்பர்.[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முத்தமிழ்: சொல்லேர் உழவர்

Post by சிவா on Wed Apr 22, 2015 12:28 am

பெரும்பாணாற்றுப்படை

புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார், தொண்டைமான் இளந்திரையனைத் தலைவராகக்கொண்டு ஆற்றுப்படை இலக்கணத்தில் 500 அடிகளில் புறத்திணையில் பாடிய பாடல்தான் பெரும்பாணாற்றுப்படை. இந்நூல் ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டுள்ளது.

இந்நூலில் இடம்பெறும் பாணர் பேரியாழ்ப்பாணர். ஆதலால்தான் “பெரும்பாணாற்றுப்படை“ என்ற பெயரினைப் புலவர் இந்நூலுக்கு இட்டுள்ளார்.

தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசில் பெற்றுத் திரும்பிய ஒரு பெரும்பாணன் தன்னை எதிர்ப்படும் வறிய பெரும்பாணனிடம், “தொண்டைமான் இளந்திரையனின் பெருமைகளைக் கூறி, அவனிடம் சென்று நீயும் பரிசில் பெற்று வளம்பெருக“ என்று வழிகாட்டும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

நிலம் சார்ந்த குடியிருப்புகள் பற்றிய குறிப்புகளை இந்நூலுள் காணமுடிகின்றது. வரகு வைக்கோலால் வேயப்பட்ட முல்லை நிலக் கோவலர் குடில், வைக்கோலால் வேயப்பட்ட மருதநில வேளாளரின் அழகிய குடில், தருப்பைப் புல்லால் வேயப்பட்ட நெய்தல் நில வலைஞர் குடில், ஈந்தின் இலையாலும் ஊகம் புல்லாலும் வேயப்பட்ட பாலைநில எயினரின் குடில், அக் குடிலினைச் சுற்றி அமைக்கப்பெற்ற உயிருடன் வளரும் செடியால் ஆன வாழ் முள் வேலி, கன்றுகள் பிணிக்கப்பட்ட பந்தல், சாணத்தால் மெழுகப்பட்ட தரையுடன் கூடிய அந்தணர்க் குடியிருப்பு போன்றவற்றைப் பற்றி இந்நூல் குறிப்பிட்டுள்ளது.

இவர்களின் உணவுப் பண்பாட்டினை பற்றியும் அறியமுடிகின்றது. ஏற்றை அறுத்துச் சமைத்தும் வீட்டிலேயே நெல்லால் காய்ச்சிய கொழியல் அரிசிக் கள் முதலியவற்றையும் உண்ணும் குறிஞ்சி நிலமக்கள், அவரைப் பருப்பு கலந்த வரகுச் சோற்றை (கும்மாயம்?) உண்ணும் முல்லை நில மக்கள், நெல்லரிசியுடன் கோழிவறுவல், தினைச்சோறும் பாலும் உண்ணும் மருத நிலமக்கள், மீன் இறாலுடன் கொழியல் அரிசிக் கஞ்சியினை உண்ணும் நெய்தல் நில மக்கள், முயல், பன்றி, உடும்பு, ஈந்தின் விதை போன்ற சிவந்த சோறு, புல்லரிசியுடன் கூடிய கருவாட்டுக்குழம்பு முதலியவற்றை உண்ணும் பாலை நிலமக்கள், கருடன் சம்பா என்று குறிப்பிடப்படும் இராசா அன்னம், நெய்ச்சோறு, கறிவேப்பிலை கருவேம்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்து வெண்ணெயில் செய்த மாதுளைக் கறியையும் மாவடு ஊறுகாயையும் உண்ணும் அந்தணர்கள் என அக்கால மக்களின் பொருளாதாரம் சார்ந்த உணவுமுறைகளை இந்நூல் பட்டியலிட்டுள்ளது.

உழுதுவாழும் விவசாயக்கூலிகளை உழவர்கள் என்றனர். இவர்கள் நிலஉரிமையுடைய வேளாளர்கள் அல்லர். இவர்களின் புன்செய் நிலத்தில் விளையும் வரகினையும் அவரையினையும் தம் உணவாகக்கொண்டனர். வரகரிசிச் சோற்றை, புழுக்கிய அவரைப் பருப்புடன் கலந்து பெருகிய சோற்றை உண்டனர். நன்செய் நிலஉரிமையாளர்களான வேளாளர்கள் வீடுகளில் இனிப்பான சுளைகள் நிறைந்த பெரியபலாப்பழம், நல்ல இன்சுவை இளநீர், யானைக் கொம்புகளைப் போன்ற தோற்றமுடைய வளைந்து, குலையிலே பழுத்திருக்கும் வாழைக்கனிகள், நல்ல பனை நுங்கு, இனிய பண்டங்கள், சேப்பம் இலையுடன் முற்றிய நல்ல கிழங்கு போன்ற உணவுகளாக உள்ளன. உழுகுடிகளுக்கும் நன்செய் உழவுநிலங்களை வைத்திருக்கும் வேளாளர்களுக்கும் இடையே உள்ள வர்க்க வேறுபாடுகளை அவர்களின் உணவுப் பண்பாட்டின் வழியாக அறியa முடிகின்றது.

“நீர்ப்பாயல்துறை“ (நீர்ப்பெயற்று) என்ற இடத்தில் மிகப்பெரிய கலங்கரைவிளக்கம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. aதொண்டைநாட்டின் தலைநகரான் காஞ்சிமாநகரின் செல்வச் செழிப்பினையும் பெருமையினையும் இந்நூல் 393 முதல் 420 வரையிலான அடிகளில் குறிப்பிட்டுள்ளது. இந்நகர்த் தெருக்களில் எப்பொழுதும் தேர்கள் ஓடிக்கொண்டிருப்பதால் தெருக்கள் பள்ளமும் மேடுமாகவும் படுகுழியுமாகவும் சிதைந்து காணப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நகரைச் சார்ந்த திருவெஃகா அக்காலத்திலேயே திருமால் திருப்பதியாகப் பெயர்பெற்றிருந்துள்ளது. காஞ்சி நகரத்தில் சோலைகள் பல இருந்தன. அச்சோலைகளில் குரங்குகள் பலவுண்டு. யானைப் பாகர்கள், யானைகளுக்கு நெய் கலந்த சோற்றுக் கவளத்தை வைக்கின்றனர். யானைகள் அக்கவளங்களைத் தம் கால்களில் இட்டு மிதிக்கின்றன. அக்கவளங்களைக் குரங்குகள் கவர்ந்துகொண்டு சோலைக்குள் ஓடுகின்றன. இந்நூல் இதனைக் காட்சிபடுத்தியுள்ளது.[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முத்தமிழ்: சொல்லேர் உழவர்

Post by சிவா on Wed Apr 22, 2015 12:28 am

கூத்தராற்றுப்படை

புலவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார், பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்து வேள் நன்னன் சேஎய் நன்னனைத் தலைவராகக்கொண்டு ஆற்றுப்படை இலக்கணத்தில் 583 அடிகளில் புறத்திணையில் பாடிய பாடல்தான் கூத்தராற்றுப்படை. இந்நூல் ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டுள்ளது. இந்நூலுக்கு “மலைபடுகடாம்“ என்ற சிறப்புப்பெயரும் உண்டு.

பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்து வேள் நன்னன் சேஎய் நன்னனிடம் பரிசில் பெற்றுத் திரும்பிய ஒரு கூத்தர் தன்னை எதிர்ப்படும் வறிய கூத்தரிடம், “பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்து வேள் நன்னன் சேஎய் நன்னனின் பெருமைகளைக் கூறி, அவனிடம் சென்று நீயும் பரிசில் பெற்று வளம்பெருக“ என்று வழிகாட்டும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

கூத்தர்கள் என்போர் நாடகக் கலைஞர்கள். இவர்கள் தம்மோடு இசைக்கருவிகள் பலவற்றை எடுத்துச்செல்வது இயல்பு. முழவு, ஆகுளி, பதலை, கோடு, தூம்பு, குழல், யாழ், பாண்டில் முதலிய இசைக்கருவிகளைத் தம்மோடு எடுத்துச்சென்றதாக இந்நூல் குறிப்பிட்டுள்ளது. இவர்கள் தம்முடன் பேரியாழினையும் வைத்திருந்தனர். அந்தப் பேரியாழின் அமைப்பினையும் இந்நூல் விளக்கியுள்ளது. பேரியாழ் முறுக்கிய நரம்புகள், வரகின் கதிர் போன்ற துளைகள், சுள்ளாணிகள், பத்தல், யானைக் கொம்பினால் ஆன யாப்பு, பொல்லம் பொத்தப்பட்ட போர்வை, உந்தி, கோடு, வணர் என பல உறுப்புகளை உடையது என்று விளக்கியுள்ளது.

கூத்தர்கள் செல்லும் வழி மலைப்பாதை. அங்குள்ள சிக்கல்கள் பற்றியும் இந்நூல் சுட்டியுள்ளது. ஆங்காங்கு பன்றிகளைப் பிடிப்பதற்காகப் பன்றிப்பொறிகள் வைக்கப்பெற்றிருக்கும். பரற்கற்கள் நிரம்பிய குழிகளில் பாம்புகள் மறைந்திருக்கும். தினைப்புனத்தைக் காக்கும் குறவர்கள் யானைகளை விரட்ட எறியும் கவண்கற்கள் பறந்துகொண்டிருக்கும். காட்டாற்று வழியில் வழுக்கும் இடங்கள் மிகுதி. மலையின் இயற்கைப் பேரழகினை இரசித்துக்கொண்டு நடந்தால் வழிதவறிவிடு வாய்ப்புண்டு. அவ்வாறு வழிதவறியவர்களுக்குக் குறவர்கள் வழிகாட்டுவார்கள். இரவில் குகைகளில் தங்கிக்கொள்ளலாம். செல்லும் வழியில் பல நடுகற்கள் காணப்படும். திரும்பி வரும்போது வந்த வழியினை அறியவேண்டும் என்பதற்காகச் செல்லும்போதே ஆங்காங்கே புல்லை முடிந்துகொண்டே வழிநெடுகச் செல்லவேண்டும் எனப் பல அறிவுரைகள் இந்நூலுள் கூறப்பெற்றுள்ளன.

இந்நூலில் 20 வகையான ஓசைகள் கூறப்பெற்றுள்ளன. அருவி விழும் ஒலி, குறவர்களின் சங்கொலி, காயம்பட்ட கானவரின் அழுகை ஒலி, புண் ஆற்றும் கொடிச்சியரின் பாட்டொலி, வேங்கை மலரைப் பார்த்து அஞ்சும் பெண்களின் அச்ச ஒலி, தன் துணையை இழந்த ஆண் யானையின் ஆற்றாமை ஒலி, தன் குட்டியை இழந்த பெண்குரங்கின் தவிப்பொலி, மலைத்தேனைக் கைப்பற்றிய கானவரின் ஆரவார ஒலி, குறுநில மன்னரின் பாதுகாவல்களை அழித்துவிட்ட கானவரின் வெற்றி ஒலி, குரவைக்கூத்தாடும் குறவர்களின் ஒலி, ஆற்றுவெள்ளத்தின் ஒலி, யானைப் பாகரின் ஒலி, கிளிகளை ஓட்டும் பெண்களின் குரலாசை, மலைக்காளையும் வளர்ப்புக்காளையும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் ஒலி, எருமைக் கடாக்களின் போர் ஒலி, பலாச்சுளையிலிருந்து கொட்டைகளைப் பிரித்தெடுக்க அதன் மீது கன்றுகளை மிதிக்கச்செய்யும் சிறுவர்களின் ஒலி, கரும்பிலிருந்து சாறினைப் பிழிந்து எடுக்கும் எந்திரத்தின் ஒலி, தினையைக் குற்றும் மகளிரின் பாட்டொலி, பன்றிகளை விரட்டுவதற்காக முழக்கப்படும் பறையொலி, இந்த ஓசைகள் மலையில்பட்டு எதிரொலிப்பதால் ஏற்படும் எதிரொலி என 20 வகையான ஒலிகளை (ஓசைகளை) இந்நூல் சுட்டியுள்ளது.

கூத்தர்களின் பழக்க வழக்கங்கள் பலவற்றை இந்நூலினுள் காணமுடிகின்றது. நடுகற்களை வணங்குதல், பாடுவதற்கு முன்போ அல்லது ஆடுவதற்கு முன்போ அவர்கள் இறைவனை வணங்குதல், ஓரிடம் விட்டுப் பிறிதொரு இடம்செல்வதற்கு முன்பு நிமித்தம் பார்த்தல், மது, எருமைத் தயிர் முதலியவற்றைச் சேமித்துவைக்கும் கலமாக (பாத்திரம்) மூங்கிற் குழாய்களைப் பயன்படுத்தியுள்ளனர். இசைக்கருவிகளை உறையிட்டுப் பாதுகாத்தனர். சக்கரத்தில் களிமண்ணை வைத்துச் சுழற்றி மட்கலன்கள் செய்துள்ளனர். மனித உயிரைப்பறிக்கும் தெய்வத்திற்குக் “கூற்றுவன்“ (எமன்) என்று பெயரிட்டிருந்தனர்.[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முத்தமிழ்: சொல்லேர் உழவர்

Post by சிவா on Wed Apr 22, 2015 12:29 am

முல்லைப்பாட்டு

புலவர் நப்பூதனார், முல்லைத் திணையில் 103 அடிகளில் அகப்பொருளில் ஆற்றியிருத்தல் என்ற பொருளில் பாடிய பாடல் முல்லைப்பாட்டு. இந்தக் குறுநூலுக்கு “நெஞ்சாற்றுப்படை“ என்ற சிறப்புப்பெயரும் உண்டு. போர் நிமித்தமாகத் தன்னைப் பிரிந்து சென்ற தலைவனை நினைத்துத் தலைவி துன்பப்படுவதும், பின்னர் தன் மனத்தினைத் தாமே தேற்றிக்கொள்வதும் (ஆற்றியிருத்தல்) முல்லைப்பாட்டின் மையக்கரு.

தலைவியின் இல்லறக்காட்சிகளும் தலைவரின் பாசறைக்காட்சிகளும் சரிபாதியாக இந்தக் குறுநூலில் பதிவாகியுள்ளன. முல்லைநிலக்காட்சியும் கார்கால (மழைக்காலம்) வர்ணனையும் சிறப்புற பதிவாகியுள்ளன. விரிச்சிகேட்டல், நற்சொல்கேட்டல், நாழிகை அறிதல், யானையைப் பழக்குதல், பாசறை அமைத்தல், பாசறையைப் பேணுதல், பாசறையில் இருக்கும் ஆயுதமேந்திய பணிப்பெண்கள், மெய்க்காப்பாளர்களாக விளங்கிய யவனர்கள், குற்றேவல்புரியும் மிலேச்சர்கள், வீரர்கள் பற்றிய குறிப்புகள், முதல்நாள் போரின் பின்விளைவுகள் எனப் பிற இலக்கியங்களில் இல்லாத பல செய்திகள் இந்தக் குறுநூலில் இடம்பெற்றுள்ளன.

நிறைந்த இலைகளையுடைய இருண்ட காசாஞ்செடிகள், வெண்காந்தள் மொட்டுக்கள், பொன்னிறமுடைய கொன்றை, இரத்த வண்ணத்தில் பூத்திருக்கும் தோன்றிச் செடிகள் என்று மழைக்காலச் செடிகள், மலர்கள் பற்றிய குறிப்புகளும் இதில் உள்ளன.[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முத்தமிழ்: சொல்லேர் உழவர்

Post by சிவா on Wed Apr 22, 2015 12:29 am

குறிஞ்சிப்பாட்டு

புலவர் கபிலர், குறிஞ்சித் திணையில் 261 அடிகளில் அகப்பொருளில் பாடிய பாடல் குறிஞ்சிப்பாட்டு. இப்பாடலுக்குப் “பெருங்குறிஞ்சி“ என்ற பெயரும் உண்டு. தலைவன் மீது தலைவிகொண்ட காதலைத் தோழி தலைவியின் செவிலித்தாயிடம் தெரியப்படுத்துதலே (அறத்தொடு நிற்றல்) குறிஞ்சிப்பாட்டின் மையக்கரு. தலைவன்-தலைவியின் காதலைப் பின்நோக்கு உத்தியில் தோழி எடுத்துரைத்துள்ளாள். தோழி அறத்தொடு நிற்றலுக்கு எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல், ஏதீடு, தலைப்பாடு, உண்மை செப்பும் கிளவி, கூறுதல் உசாதல் என்ற ஏழு நிலைகள் உள்ளன. இப்பாடலில் தோழி, “கூறுதல் உசாதல்“ நிலையைத் தவிர்த்து மற்ற ஆறுநிலைகளில் தலைவியின் செவிலிக்கு அறத்தொடு நிற்கின்றாள்.

இப்பாடலில் பழந்தமிழ் நிலத்தில் பூத்துக்குலுங்கிய 99 வகையான மலர்கள் பற்றிய பட்டியல் இடம்பெற்றுள்ளது. தலைவியைச் சந்தித்து, காதலித்து, கந்தர்வ மணம் புரிந்த தலைவன் அவளை விட்டுச் செல்லும்போது, “உன்னை ஊரறிய மணந்துகொள்வேன்“ என்று உறுதியளிக்கின்றான். அப்போது அவன் அவ் உறுதியளித்தலைச் சிறு சடங்கின் வழியாகச் செய்தான். மலையில் உறைந்துள்ள இறைவனை வாழ்த்தி, தன் மனத்தில் உள்ள உண்மைநிலையினை இறைவனிடம் கூறுகின்றான். எந்நிலையிலும் எக்காரணம் கொண்டும் தலைவியைப் பிரியேன் என்று தன் வாய்மையைத் தெளிவுபடுத்தித் தலைவியின் மனத்திற்கு உறுதியளிக்கின்றான். அருகில் வீழ்ந்திருந்த அருவியின் தெளிந்த நீரைக் கையால் அள்ளி, உன்னை ஊரறிய மணப்பேன் என்று உறுதியளித்து அந் நீரைப் பருகினான்.

“மறுபிறப்பு“ குறித்த நம்பிக்கை இந்நூலில் இடம்பெற்றுள்ளது. தன்னை ஊரறிய மணந்துகொள்வதாக உறுதியளித்த தலைவன் வாராததால் தலைவி வருந்தி, பின்னர், “இப்பொழுது நம்மை அவர் மணந்துகொள்ளாவிட்டாலும் மறு உலகத்திலாயினும் அவரைக் கூடி இன்புறும் வாழ்வு கிடைப்பதாக“ என்று வேண்டிக்கொள்கின்றாள்.

“ஓர் இறைக்கோட்பாடு“ இந்நூலில் சுட்டப்பெற்றுள்ளது. “இறைவன் ஒருவனே. அவரே பல்வேறு உருவங்களில் பல்வேறு தெய்வங்களாகக் காட்சிதருகின்றார்“ என்ற கருத்தினை, “வேறு பல் உருவின் கடவுள்“ என்ற அடியில் இந்நூல் தெரிவித்துள்ளது.

“கழைக்கூத்தாடிகள்“ பற்றிய குறிப்பும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. விலகி நிற்கும் இரண்டு மரங்களுக்கு இடையில் கயிற்றைக்கட்டி அதன்மீது நின்றுகொண்டு, கைகளில் ஒரு கழையினைப் பற்றிக்கொண்டு நடனமாடும் கழைக்கூத்தாடிகள் பற்றியும் அவர்களின் ஆட்டத்திற்கு ஏற்ற இசைக்கும் கலைஞர்கள் பற்றியும் குறிப்பிடப்பெற்றுள்ளது.[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முத்தமிழ்: சொல்லேர் உழவர்

Post by சிவா on Wed Apr 22, 2015 12:30 am

மதுரைக்காஞ்சி

புலவர் மாங்குடி மருதனார், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைத் தலைவராகக்கொண்டு மருதத்திணையில் புறத்திணை இலக்கணத்தில் 782 அடிகளில் வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பாவினால் பாடிய நெடும்பாடல்தான் மதுரைக்காஞ்சி. இந்நூலினைக் காஞ்சிப்பாட்டு, கூடல்தமிழ், காஞ்சித்திணை என்றும் சிறப்பித்துள்ளனர். மதுரை நகரின் ஒருநாள் நிகழ்வுதான் இந்நூலின் மையக்கரு.

இப்பாடலின் 346ஆவது அடிமுதல் 699ஆவது அடி வரையுள்ள 354 அடிகள் ஒருநாள் மதுரையில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் விவரிக்கின்றன. ஆதலால், இப்பாட்டினை “மாநகர்ப்பாட்டு“ என்றனர். ஒரு தனிப்பாடல் இப்பாடலைக் “கூடற்றமிழ்“ என்று குறிப்பிட்டுள்ளது.

தலையாலங்கானம் திருவாதவூருக்கு அருகில் இருக்கிறது. இவ் இடத்தில் இப்பாடலின் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் சேர, சோழரோடு ஐம்பெரும் குறுநில வேளிரையும் சேர்த்து வென்றதாக இப்பாடல் தெரிவித்துள்ளது.

இவ் வேந்தருக்கு நிலையாமைக் கருத்தை வலியுறுத்த இப்பாடல் பாடப்பெற்றதாகவும் அதனால்தான் இப்பாடல் “மதுரைக்காஞ்சி“ (காஞ்சி-நிலையாமை) என்ற பெயரினைப் பெற்றதாகவும் கூறுகின்றனர். இக்கருத்தினைச் சு. வேணுகோபால் ஏற்கவில்லை. அவர், “ தொல்காப்பியம், “மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை“ என்று வஞ்சினக் காஞ்சித்துறையைப் பற்றிக் கூறியுள்ளது. பகைவரின் படையெடுப்பை எதிர்த்துப் போர்செய்து, முறியடிக்கிற வெற்றி என்பது இதன் பொருளாகும். மதுரைக்காஞ்சி போர் வெற்றியோடு பண்பாட்டு இயக்கத்தைத்தான் மிகுதியாக விவரிக்கின்றது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள “ஒண்பெண் அவிர் இழை தெழிப்ப இயலி“, “திண்சுவர் நல் இல்“, “ கதவம் கரைதல்“, “வானம் நீங்கிய நீல் நிற விசும்பு“, “திரையிடும் மணலினும் பலரே உரைசெய மலர்தலை உலகம் ஆண்டு அழிந்தோரே“ என்பன போன்ற சொற்றொடர்களில் நிலையில்லாது அழிந்துவிடும் நிலத்தியல் வாழ்க்கை பற்றியும் நிலைத்து நிற்கக்கூடியதாக நம்பப்படும் மேலுலகு வாழ்க்கையின் வீடுபேறு பற்றியும் சொல்லப்பட்டிருந்தாலும் நிலையாமையை வலியுறுத்துவதற்காகவே இப்பாடல் பாடப்பட்டதன்று. உண்மையில் வாழ்க்கையின் பல்வேறு விதமான அம்சங்களை ஒருங்குதிரட்டி முன்வைப்பது நோக்கமாக இருக்கிறது. மனித வாழ்க்கையின் அகம்,புறம் இரண்டையும் முழுமையாகத் திரட்டி வைக்கிறது எனலாம். கொடை, ஆட்சித்திறம், உண்மை, நீதி, வணிகம், விவசாயம், தொழில் இவற்றிற்கான வளத்தைப் பெருக்கும் தன்மைகள், நீடித்த நிலைபேறுக்கு உரியவை என்ற அடிப்படையில்தான் “காஞ்சி“ என்ற கருத்தியல் மதுரைக்காஞ்சி முழுமைக்கும் ஊடாடி வருகின்றது. பத்துப்பாட்டின் நூல்வரிசையைக் குறிப்பிடும் வெண்பா, இப்பாட்டினைப் “பெருகு வள மதுரைக்காஞ்சி“ என்று சரியாகக் குறிப்பிட்டுள்ளது“68 என்று கருத்துத்தெரிவித்துள்ளார்.

பாண்டியர் புகழ்பாடும் இந்நூலின் பெரும்பகுதி மதுரைமாநகரை வர்ணித்துள்ளது. பாண்டிய நெடுஞ்செழியனின் ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பகுதியில் விளைந்த பொருட்களை இந்நூல் வரிசைப்படுத்தியுள்ளது. அகில், சந்தனம், தோரை என்னும் நெல்வகை, வெண்சிறு கடுகு, ஐவன நெல் போன்றன குறிஞ்சி நிலத்திலும் வரகு, அழகிய மணிகள், தினை, எள், முசுண்டை, முல்லை, கிழங்கு வகைகள் போன்றன முல்லை நிலத்திலும் நெல், கவலைக் கிழங்குகள், தாமரை, நெய்தல், நீலம், ஆம்பல் போன்றன மருத நிலத்திலும் முத்து, சங்கு, உப்பு, தீம்புளி, மீன் போன்றன நெய்தல் நிலத்திலும் மூங்கில், ஊகம்புல் போன்றன பாலை நிலத்திலும் மிகுதியாக விளைந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

மதுரை நகரில் பறந்த விழாக்கொடி, வெற்றிக்கொடி, வணிகக்கொடி போன்றவற்றைப் பற்றி இந்நூல் குறிப்பிட்டுள்ளது. வணிகக்கொடிகளின் வரிசையில் “உயர்ரக மதுபானம் கிடைக்கும்“ என்பதனை உணர்த்தும் கொடியும் இருந்ததாகக் குறிப்பு உள்ளது.

பல்வேறு கோயில்கள், பௌத்தப் பள்ளிகள், சமணப்பள்ளிகள் ஆகிய பல சமயங்களுக்கும் உரிய நிலையங்கள் அக்கால மதுரையில் இருந்துள்ளமையை இப்பாடலால் அறியமுடிகின்றது. இருப்பினும், சிவனே முழுமுதற் கடவுளாக இருந்தமையைத் “தெள் அரிப்பொற்சிலம்பு ஒலிப்ப ஒள் அழல் தா அறிவிளங்கிய ஆய்பெண் அவிர் இழை“ என்ற அடி குறிப்புணர்த்தியுள்ளது.

“திருவோணநாள்விழா“ மதுரையில் கொண்டாடப்பட்ட செய்தியினை “மாயோன் மேய ஓணநல்நாள்“ என்ற அடியின் வழியாப் பெறமுடிகின்றது. இப்பாடல் திருப்பரங்குன்ற விழா, வேந்தரின் பிறப்புநாள்விழா, அந்திவிழா போன்ற பல்வேறு விழாக்களையும் குறிப்பிட்டுள்ளது.

சூலுற்ற மகளிர் விளக்கேந்தி கோயிலை நோக்கி ஊர்வலமாகச் சென்றமையும் யாழ், முழவு, ஆகுளி முதலான இசைக்கருவிகள் இசைக்க அவ் ஊர்வலம் நகர்ந்தமையையும் கடவுளைத் தொழுது சாலினி என்ற தேவராட்டி முன் பலி கொடுத்தமையையும் காணமுடிகின்றது. இவ் வழிபாடு பற்றிச் சு. வேணுகோபால், “சூல் உற்றதற்குப் பலிச்சோறு படைத்த இனக்குழுச் சடங்கு, இங்குச் சமய வழிபாடு கலந்த்தொரு வழக்கமாக மாறியுள்ளது“69 என்று கருத்துத்தெரிவித்துள்ளார்.

ஏழைகளுக்கு இலவசமாக உணவளிக்கும் “அன்னசாலைகள்“ மதுரையில் நிறைந்திருந்தனஎன்ற குறிப்பு இந்நூலில் உள்ளது. அந்த அன்னசாலைகளில் தேன் மணம் கமழும் பலாச்சுளைகள், பலவகைப்பட்ட மாம்பழங்கள், பலவகையான காய்கறிகள், வாழைப்பழம், மழையினால் கொடிகளில் அழகாக முளைத்திருக்கின்ற இளங்கீரை, அமுதம் போன்ற இனிமையான பலவகைப்பட்டச் சாதம், புலவுச்சோறு (சைவமும் அசைவமும் கலந்தது), முற்றிய கிழங்கு ஆகியவை இலவசமாக அளிக்கப்பெற்றன.[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முத்தமிழ்: சொல்லேர் உழவர்

Post by சிவா on Wed Apr 22, 2015 12:30 am

நெடுநல்வாடை

புலவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைத் தலைவராகக்கொண்டு முல்லை மற்றும் வஞ்சித்திணையில் அகமும் புறமும் கலந்து 188 அடிகளில் ஆசிரியப்பாவினால் பாடிய பாடல்தான் நெடுநல்வாடை. இந்நூலினைச் “சிற்பப்பாட்டு“ என்றும் சிறப்பித்துள்ளனர்.

கூதிர்காலத்தில் வீசக்கூடிய வாடைக்காற்று, தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் துன்பம் தருவதாகவும் போர்த்தொழிலுக்குச் சென்ற தலைவனுக்கு அதே வாடைக்காற்று இன்பம் தருவதாகவும் அமைந்துள்ள முரண்நிலையே இந்நூலின் மையக்கரு.

“வாடை“ என்பதற்குக் “குளிர்காற்று“ என்று பொருள். இது வடதிசையிலிருந்து வீசுவதால் “வாடைக்காற்று“ என்ற பெயரினைப் பெற்றது. தெற்கிலிருந்து வீசுவது “தென்றல்“ என்றதனைப் போல இதற்குப் பொருள்கொள்ளலாம்.

பெண்கள் மாலைக் காலத்தில் விளக்கேற்றி, நெல்லையும் மலரையும் தூவி அந்த விளக்கின் ஒளியை வணங்கியுள்ளனர். சந்தனக் கற்கள் வடநாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளனர். சந்தனக்கல்லினை “வான்கேழ் வட்டம்“ என்று அழைத்துள்ளனர். கோடைக்காலத்தில் குளிர்ந்த நீரைப் பருகுவதற்காக வாய் குறுகலாக அமைந்த மட்பாண்டத்தினைப் பயன்படுத்தியுள்ளனர். இத்தகைய மண் கூஜாக்கள் பரவலான பயன்பாட்டில் இருந்துள்ளன. இந்த மண் கூஜாக்களைத் “தொகுவாய்க்கன்னல்“ (சிறிய வாயுடைய நீர்ப்பாண்டம்) என்று அழைத்துள்ளனர்.

40 வயதுவரை வாழ்ந்து மடிந்த யானையின் தந்தத்தினை அறுத்தெடுத்து, அதனைக்கொண்டு கட்டிலுக்குக் கால்கள் செய்துள்ளனர். அக் கட்டில்காலில் பலவிதமான சித்திர வேலைப்பாடுகளையும் செய்துள்ளனர். இச்செய்திகளை இந்நூலின் வழியாக அறியமுடிகின்றது.[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முத்தமிழ்: சொல்லேர் உழவர்

Post by சிவா on Wed Apr 22, 2015 12:31 am

பட்டினப்பாலை

புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார், கரிகாற்பெருவளத்தானைத் தலைவராகக்கொண்டு நெய்தல் மற்றும் பாலைத்திணையில் பொருள் வயின் பிரியக் கருதிய தலைவன் செலவழுங்குதல் (செல்லாமல் விடுதல்) எனும் துறையில் 301 அடிகளில் வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பாவினால் பாடிய பாடல்தான் பட்டினப்பாலை. இந்நூலினைக் “வஞ்சிநெடும்பாட்டு“ சிறப்பித்துள்ளனர். காவிரிப்பூம்பட்டினத்தின் சிற்பினை விரிவாகக் கூறுவதே இந்நூலின் மையக்கரு.

இப் பாடலைப் பாடிய உருத்திரங் கண்ணனாருக்குக் கரிகாற்பெருவளத்தான் பதினாறுகால் மண்டபத்தைப் பரிசாக வழங்கினார். பிற்காலத்தில், பாண்டிய மன்னர் சோழநாட்டினை முற்றுகையிட்டுத் தரைமட்டமாக்கியபோது, கரிகாற்பெருவளத்தான் உருத்திரங் கண்ணனாருக்குப் பரிசாக வழங்கிய பதினாறுகால் மண்டபத்தையும் தஞ்சைப் பெரியகோவிலையும் இடிக்காமல் விட்டுவிட்டதாகத் திருவெள்ளறைக் கல்வெட்டு தெரிவித்துள்ளது.

இந்நூலில் பல செய்திகள் விரவியுள்ளன. வெண்மீன் என்ற வெள்ளிக் கோள்மீன் வடக்குத் திசையில் நின்றால் நாட்டில் மழை பொழிவு ஏற்பட்டு வளம்பெருகும் என்றும் அது தெற்கு திசையில் நின்றால் மழைநீங்கி வறட்சிமிகும் என்றும் இந்நூலில் வானியல் செய்தி குறிக்கப்பெற்றுள்ளது.

வணிகத்திற்காகப் படகில் (பஃறி) உப்பினைக் கொணர்ந்த உமணர்கள், அவற்றை நெல்லுக்குப் பண்டமாற்றாக விற்றுத் திரும்பும்போது அவர்களின் படகில் உப்புக்குப் பதிலாக நெல் இருந்தமையைச் சுட்டியுள்ளது. இச்செய்தியிலிருந்து, அக்காலத்தில் உப்பும் நெல்லும் சம மதிப்பில் இருந்தமையை அறியமுடிகின்றது.

பழம் புலவர்கள் படைத்தளித்துள்ள தனிப்பாடல்கள் ஒவ்வொன்றும் அக்காலத்தினை நம் கண்முன் காட்டவல்லது. அவர்கள் மிகைப்படுத்திப் பலவற்றை அவற்றில் கூறியிருந்தாலும், அவற்றின் மையப்பொருளில் மாற்றமோ, திரிபோ, முழுக் கற்பனையோ இருக்க வாய்ப்பில்லை. ஆதலால், இலக்கியச் சான்றுகளான இத் தனிப்பாடல்கள் 50 சதவிகிதம் வரலாற்றாய்வுக்கு ஏற்றவை. அதேவேளையில், பழம் புலவர்களின் கவிப் புலமைத்திறத்திற்கு 100 சதவிகிதம் வலுவான ஆதாரமாகத் திகழ்பவை.

[thanks]தமிழ் பேப்பர்[/thanks]


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முத்தமிழ்: சொல்லேர் உழவர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum