ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உபயோகமான வீட்டுக்குறிப்புகள்
 ayyasamy ram

ரசாயனம் பூச்சு நிறைவு: வள்ளுவர் சிலையை இன்று முதல் பார்வையிடலாம்
 ayyasamy ram

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ஜாஹீதாபானு

மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன்
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 Dr.S.Soundarapandian

போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 Dr.S.Soundarapandian

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

அவல் பக்கோடா!
 Dr.S.Soundarapandian

வாளிப்பான பெண்ணின் துருப்புச் சீட்டு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

அவள் என்னைக் கரங்களால் அணைத்தபோது! (அயர்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு

View previous topic View next topic Go down

நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு

Post by சிவா on Wed Apr 22, 2015 11:45 pm


பழங்காலத்தில் இருந்தே மிக நுணுக்கமான எண்கள் மற்றும் அளவைகள் தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளன.

அணுவை விட மிகச் சிறிய அளவுக்கும் தமிழில் பெயர் குறித்து இருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் ஒன்றுக்கு பின் 14 பூஜ்யங்கள் வரையிலான எண்களுக்கு மட்டுமே பெயர்கள் உள்ள நிலையில், தமிழக முன்னோர்கள் ஒன்றுக்கு பின் 22 பூஜ்யங்களைக் கொண்ட மிக, மிகப்பெரிய எண்களுக்கு பெயர் வைத்து இருக்கிறார்கள்.

எடை அளவிலும் மிகச் சிறிய எடையான 'குன்றிமணி' என்பதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

320-ல் ஒரு பங்கு என்பது, ஒரு 'முந்திரி' என்ற மிகச் சிறிய பின்னம், கணித பயன்பாட்டில் இருந்து இருக்கிறது.

இப்போது ஒரு மணி நேரம் என்பதை ஆங்கிலத்தில் 'ஒன் ஹவர்' என்கிறோமே! அந்த 'ஹவர்' என்ற சொல் உருவாகக் காரணமான 'ஓரை' என்பதை நமது முன்னோர்கள் எப்போது இருந்தோ பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இப்படிப் பல நிலைகளிலும் கணிதத்தில் நமது முன்னோர்கள் மிக முன்னேறிய நிலையில் இருந்தார்கள்.

நீதித் துறையில் இருந்தாலும், இந்த மகத்தான அம்சம், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியனை வெகுவாகக் கவர்ந்து இருக்க வேண்டும்.

அவர் கல்லூரி விழாக்களில் கலந்துகொள்ளும்போது, தமிழனின் இந்தப் பழங்காலப் பெருமையைப் பற்றி பேசி, மாணவ, மாணவிகளுக்கு ஊக்கம் அளிப்பது உண்டு.

பழங்காலத்தில் தமிழகத்தில் கணிதம் எந்த அளவு மேம்பட்டு இருந்தது என்பது குறித்து இங்கே நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன், ஆதாரங்களுடன் விவரமாகத் தருகிறார்.

அவரது அருமையான கருத்துக்களை இதோ காணலாம்:-

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

- என்றார் வள்ளுவப் பெருந்தகை.

இதற்கு உரை எழுதிய பரிமேலழகர், எண் என்பது கணிதம் என்றும் அது கருவியும் செய்கையும் என இருவகைப்படும் என்றும் எண் என்னும் சாத்திரத்தின் வழியிலேயே அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றின் நிறைந்த பகுப்புக்களை அறிய முடியும் என்றும் கூறுகின்றார்.

எனவே கல்வி என்பது எண்ணையும் எழுத்தையும் மட்டுமே அடிப்படையாக கொண்டது என்பது தமிழர் கொள்கை.

இன்றைக்கு ஆங்கிலத்தில் மில்லியன், ட்ரில்லியன் மற்றும் கில்லியன் என்கிறார்கள். இவற்றுக்கு மேல் உள்ள எண்ணிக்கையை குறிக்கும் சொற்கள் அவர்களிடம் இல்லை.

ஆனால் தமிழில் ஒரு கோடி, பத்துக்கோடி, நூறுகோடி என்றும், இவற்றிலும் தாண்டி கோடி கோடி அவற்றுக்கெல்லாம் கோடி என்பது போன்றவற்றை குறிக்கும் சொற்கள் அக்காலத்திலேயே உருவாக்கப்பட்டன என்பது தமிழரின் பெருமையைக் காட்டும். அச்சொற்களாவன:-

நூறாயிரம், பத்து நூறாயிரம், கோடி, அற்புதம் (பத்து கோடி), நிகர்புதம் (நூறு கோடி), கும்பம் (ஆயிரம் கோடி), கணம் (பத்தாயிரம் கோடி), கற்பம் (நூறு ஆயிரம் கோடி), நிகற்பம் (ஆயிரம் ஆயிரம் கோடி), பதுமம் (கோடி கோடி), சங்கம்.

இதற்குப் பின்வரும் எண்கள் வெள்ளம், அன்னியம், அர்த்தம், பரார்த்தம், பூரியம், முக்கோடி, மகாயுகம் எனப்பட்டன.

மகாயுகம் என்பது ஒன்றுக்குப்பின் 22 பூஜ்யங்களைக்கொண்ட எண் ஆகும்.

பெரும் எண்களைக் குறிப்பதற்கு சொற்கள் இருந்ததைப் போலவே பின்னங்களை குறிப்பதற்கும் தமிழில் சொற்கள் இருந்திருக்கின்றன.

ஆங்கிலத்தில் இரண்டில் ஒரு பங்கைக் குறிக்க பிணீறீயீ என்றும் நான்கில் ஒரு பங்கைக் குறிக்க னிuணீக்ஷீtமீக்ஷீ, என்றும் குறிக்கின்றனர்.

அதற்கும் மேல் 8-ல் ஒரு பங்கு 16-ல் ஒரு பங்கு இவற்றையெல்லாம் குறிக்க தனிச் சொற்கள் ஆங்கிலத்தில் உண்டா என்பது ஐயமாக இருக்கிறது.

ஆனால் தமிழில் பின்னங்களைக் குறிக்கும் சொற்கள் ஏராளம். அவையாவன:-

320-ல் ஒரு பங்கு முந்திரி என்றும், 160-ல் ஒரு பங்கு அரைக்காணி என்றும், 80-ல் ஒரு பங்கு காணி என்றும், 40-ல் ஒரு பங்கு அரைமா என்றும், 80-ல் 3 பங்கு முக்காணி என்றும், 20-ல் ஒரு பங்கு ஒரு மா என்றும், 10-ல் ஒரு பங்கு இருமா என்றும், 20-ல் 3 பங்கு மூன்றுமா என்றும், 5-ல் ஒரு பங்கு நான்குமா என்றும், 4-ல் ஒரு பங்கு கால் என்றும், 2-ல் ஒரு பங்கு அரை என்றும் குறிக்கப்பட்டது.
இந்த பின்னங்களை குறிக்கும் சொற்களை வைத்தே காளமேகப்புலவர் ஒரு பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பாடல் கீழ்வருமாறு:-

முக்காலுக்கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்காலரைக் கால் கண்டஞ்சாமுன்- விக்கி
இருமாமுன் மாகாணிக்கேகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரை நின்றோது.


எடைகளையும், கால அளவையும் துல்லியமாகக் குறிக்கும் சொற்களும் தமிழில் உண்டு என்பதை கீழ்க்கண்டவற்றின் மூலம் அறியலாம்:-

எடையளவு

32 குன்றிமணி = 1 வராகன் எடை
10 வராகன் எடை = 1 பலம்
180 தானியமணி =1 தோலா
3 தோலா = 1 பலம்
8 பலம் = 1 சேர்
5 சேர் = 1 வீசை
8 வீசை = 1 மணங்கு
20 மணங்கு = 1 பாரம்
கால அளவு
60 வினாடி = 1 நாழிகை
2½ நாழிகை = 1 ஓரை
3¾ நாழிகை = 1 முகூர்த்தம்
7½ நாழிகை = 1 சாமம்
8 சாமம் = 1 நாள்
7 நாள் = 1 கிழமை
15 நாள் = 1 பக்கம்
30 நாள் = 1 திங்கள்
6 திங்கள் = 1 அயனம்
2 அயனம் = 1 ஆண்டு


காரி நாயனார் என்பவர் எழுதிய கணக்கதிகாரம் என்னும் நூல் கணிதக் குறிப்புக்களை கொண்டது.

அதில் சின்னச்சின்ன கணக்குகள் பாடல்களாகவே தரப்பட்டுள்ளதாக, குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த ஆய்வாளர் ராம கல்யாணி Òதமிழ் கணித நூல்கள்Ó என்னும் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

அவர் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பாடல் குடிவாரக் கணக்காக அமைந்துள்ளது.

அப்பாடல் பின்வருமாறு:-

ஊரொன்றில் நாலுகுடி உள்நிலமும் நாலாறு
வேலியிறை நூறு கூறியதால்- பான்மொழியாய்
ஆறுடனே முக்காலும் அஞ்சேகால் நாலரையும்
ஏழரையுமாக வியம்பு


24 வேலி நிலத்தை நான்கு குடிகள் எப்படி பங்கு பிரித்துக் கொண்டார்கள் என்பதை கூறும் பாடல் இது.

ஆனால் துரதிருஷ்டவசமாக, பல தமிழ் கணித நூல்கள் நமக்கு கிடைக்காமலேயே போய் விட்டன. நாம் பெற்றதை விட, இழந்தது ஏராளம். எனவே மிஞ்சியிருப்பதையாவது காப்பாற்ற வேண்டியது நமது கடமை.
மேற்கண்டவாறு நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் கூறி இருக்கிறார்.

நமது மூதாதையர்களின் கணிதம் என்பது வர்த்தக பயன்பாட்டை விட, வானவியலுக்கே மிக அதிகமாக பயன்பட்டது.

நமது பழங்கால கணித மேதைகள், வானில் சுற்றும் கிரகங்களின் போக்கு, அவற்றின் ஈர்ப்பு சக்தி, அவை மனிதர்களை எந்த அளவு பாதிக்கும்?

கிரகங்களால் மனிதனுக்கு ஏற்படும் நன்மை, தீமைகள் ஆகியவற்றையும் ஆய்ந்து அறிந்து அதன் மூலம் ஜோதிடம் என்பதை உருவாக்கினார்கள்.

சாதகமான தகவல்களைக் கூறுவதுதான் சாதகம் அதாவது ஜாதகம்: எனவே இது அபத்தமானது என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். இதுபற்றி ஜோதிட வல்லுநர் காழியூர் நாராயணன் ஆணித்தரமாகக் கூறும் கருத்துக்களை அடுத்த வாரம் பார்க்கலாம்.

பல தமிழ் கணித நூல்கள் நமக்கு கிடைக்காமலேயே போய் விட்டன. நாம் பெற்றதை விட, இழந்தது ஏராளம். எனவே மிஞ்சியிருப்பதையாவது காப்பாற்ற வேண்டியது நமது கடமை...

நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன்


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Apr 26, 2015 2:09 pm

அரிதான தகவல்கள் நன்றி சிவா.
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5303
மதிப்பீடுகள் : 1840

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு

Post by T.N.Balasubramanian on Sun Apr 26, 2015 4:42 pm

அருமையான பதிவு .
குடத்தினுள் இருக்கும் விளக்கென ,
அடக்கமான விஷயங்கள் ஆயிரம் ஆயிரம் .
வெளி உலகுக்கு கொணர அரசு முன் வருமா ?
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு

Post by Dr.S.Soundarapandian on Sun Apr 26, 2015 6:13 pm

நீதியரசர் வெ.இராமசுப்ரமணியன் அவர்களுக்கும் சிவா அவர்களுக்கும் நன்றி !

ஓலைச் சுவடியிலிருந்து சிறு கணக்கு நூல் ஒன்றை நான் பதிப்பித்துள்ளேன் ! சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பருவ இதழில் (Bulletin) அது வெளிவந்துள்ளது !

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4322
மதிப்பீடுகள் : 2319

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum