புதிய இடுகைகள்
காங்., பேரணியில் பாலியல் தொல்லைM.Jagadeesan
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
M.Jagadeesan
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
M.Jagadeesan
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
ayyasamy ram
ஐ.பி.எல் -2018 !!
ayyasamy ram
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
ayyasamy ram
பசு மாடு கற்பழிப்பு
அம்புலிமாமா
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
அம்புலிமாமா
மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
அம்புலிமாமா
வணக்கம் நண்பர்களே
அம்புலிமாமா
தலைவருக்கு ஓவர் மறதி...!!
ayyasamy ram
ட்விட்டரில் ரசித்தவை
ayyasamy ram
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
ayyasamy ram
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ayyasamy ram
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
ayyasamy ram
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
சிவனாசான்
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
ayyasamy ram
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
ayyasamy ram
கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
SK
பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
SK
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
SK
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
SK
தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
ayyasamy ram
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
ஜாஹீதாபானு
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
SK
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
SK
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
என்ன படம், யார் யார் நடிச்சது
SK
வெறுப்பா இருக்கு!
SK
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
SK
சிந்திக்க சில நொடிகள்
SK
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
SK
100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
SK
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
ayyasamy ram
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
ayyasamy ram
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
கீரையின் பயன்கள்
danadjeane
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK
நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
ஜாஹீதாபானு
அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
SK
தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
SK
மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
SK
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
SK
அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
SK
நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
SK
திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
SK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
SK
பயனுள்ள மருத்துவ நூல்கள்
மாணிக்கம் நடேசன்
அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
krishnaamma
முருங்கைக்கீரை கூட்டு
krishnaamma
பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
ராஜா |
| |||
M.Jagadeesan |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
தேசியச் செய்திகள்
Page 3 of 4 • 1, 2, 3, 4
தேசியச் செய்திகள்
First topic message reminder :
பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்
பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.
இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.

சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Re: தேசியச் செய்திகள்
1 மில்லியன் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க இருக்கும் ஃபாக்ஸ்கான்!

ஆப்பிள் பற்றியும், ஐபோன்கள் பற்றியும் அலசி ஆராய்பவர்களுக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி தான் ஐபோன் மற்றும் ஆப்பிள் கருவிகளின் முக்கிய உற்பத்தி நிறுவனமாகும். இதுவரை தைவான், சீனா போன்ற நாடுகளில் செயல்பட்டு வந்த ஃபாக்ஸ்கானின் பார்வை சமீபத்தில் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது. வரும் 2020-ம் ஆண்டிற்குள் 10-12 உற்பத்தி ஆலைகளை உருவாக்க ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ள ஃபாக்ஸ்கான், இதன் மூலம் சுமார் 1 மில்லியன் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் மீது ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் கவனம் திரும்புவதற்கு இந்தியாவின் வளர்ச்சி மட்டும் காரணம் அல்ல, சீனாவின் பொருளாதார சரிவும் மிக முக்கியக் காரணம்.
முதலில் ஆந்திர பிரதேசம், குஜராத் மற்றும் மகராஷ்டிராவில் தனது உற்பத்தி ஆலைகளை நிறுவ இருக்கும் ஃபாக்ஸ்கான், அதன் பிறகு படிப்படியாக மற்ற மாநிலங்களிலும் தனது கிளைகளை நிறுவ திட்டமிட்டுள்ளது. உற்பத்தி ஆலைகள் மட்டுமல்லாமல், தகவல் மையங்கள் மற்றும் சில தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்களையும் அமைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல்லி, பெங்களூரு, மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் பல்வேறு இடங்களை பார்த்து வருகிறது.
இதற்கிடையே ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் வருகையால், ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் கருவிகள் உற்பத்தி செய்யப்படுவது மட்டுமல்லாமல் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் கருவிகளும் உற்பத்தி செய்யப்படும் என்றும், இதன் மூலம் இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான தரம் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Re: தேசியச் செய்திகள்
செவ்வாய்க் கிரகத்திற்குப் பயணம் போகிறார் சுனிதா வில்லியம்ஸ்!
செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டத்திற்கு இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தேர்வாகியுள்ளார்.
அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழும் சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.
இதற்காகப் போயிஸ் கம்பெனி மற்றும் ‘ஸ்பேஸ்–எக்ஸ்’ என்னும் நிறுவனம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான விண்கலத்தைத் தயாரித்து வருகிறது.
அந்த வகையில் முதல் கட்டமாக 2017- ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட் உருவாக்கப்படுகிறது.
இந்தச் சாதனைப் பயணத்திற்காகச் சுனிதா வில்லியம்ஸ், ராபர்ட், டக்லஸ் ஹர்லி ஆகியோரை நாசா தேர்வு செய்துள்ளது.
இம்மூவருக்கும் விரைவில் செவ்வாய்க் கிரகத்திற்குச் செல்வதற்கான சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் இணையதளம் முடங்கியது: சீனாவின் கைவரிசையா?
வெளிநாட்டின் செயற்கைக் கோள்களை ஒப்பந்தத்தின் அடிப்படையில் விண்ணில் செலுத்துவதற்காக வணிக நோக்கில் தொடங்கப்பட்டது இஸ்ரோவின் வர்த்தக நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ். இது 1992 -ஆம் ஆண்டு பெங்களுரூவில் ஏற்படுத்தப்பட்டது.
ஆன்ட்ரிக்ஸ், வெள்ளிக்கிழமையன்று 1440 கிலோ எடை கொண்ட 5 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைத்தது.
இந்நிலையில் இதன் இணையதளம் திடீரெனச் செயல் இழந்து விட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயல் இழந்துள்ளதாக ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தாலும், சீனாவைச் சேர்ந்த முடக்கர்கள் இந்த இணையதளத்தை முடக்கி இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நல்ல தகவல்கள் சிவா
.....நன்றி !

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595
Re: தேசியச் செய்திகள்
தகவலுக்கு நன்றி
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843
Re: தேசியச் செய்திகள்
வட இந்தியாவில் கனமழைக்கு 11 பேர் பலி
வட இந்தியாவில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 11 பேர் பலியாகினர். பல்வேறு பெரு நகரங்களிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்ராகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மழை பாதிப்பு அதிகளவில் இருக்கிறது.
இந்த மாநிலங்களில் பல்வேறு நதிகளில் நீரோட்டம் அபாய அளவை கடந்து செல்கிறது.
மழை காரணமாக உத்தரப் பிரதேசத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 7 பேரும், ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 3 பேரும் பலியாகினர். உத்ராகண்ட் மாநிலத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டுமானத் தொழிலாளர் ஒருவர் பலியானார்.
போக்குவரத்து பாதிப்பு:
டெல்லியில் தொடர்ந்து 4-வது நாளாக கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளிலும் நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.டி.ஓ., விகாஸ் மார்க், சவுத் எக்ஸ்டன்ஷன், கான்பூர், மஹிபால்பூர், ஹரிநகர், ஐஐடி கிராஸிங், நேரு பிளேஸ், யூசுப் சராய் மார்கெட், முன்ரிகா ஆகிய பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.
டெல்லியில் கடந்த சனிக்கிழமை நிலவரப்படி 147.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பூட்டிய அறைக்குள் 'போர்னோ' பார்ப்பதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்
வயது வந்த நபர் ஒருவர் பூட்டிய அறைக்குள் போர்னோ படத்தை பார்த்தால் அதை எப்படி நீதிமன்றம் தடுக்க முடியும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் போர்னோகிராஃபி இணையதளங்களுக்கு (ஆபாசப் பட இணையதளங்கள்) இடைக்கால தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் கமலேஷ் வஷ்வானி என்பவர் அந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அவர், ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கில் மத்திய அரசு இன்னும் பதில் மனு தாக்கல் செய்யாததால் இடைக்கால நிவாரணமாக போர்னோ இணையதளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். மேலும், இந்தியாவில் 4 கோடி ஆபாச இணையதளங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு, "இதுபோன்ற இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்க நீதிமன்றத்தால் இயலாது. ஏனெனில், வயது வந்த நபர் ஒருவர் பூட்டிய அறைக்குள் போர்னோ படத்தை பார்ப்பது அவரது அடிப்படை உரிமையாகும்.
எனவே, அதற்கு எதிராக நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தால், 18 வயது நிரம்பிய நபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தை அணுகி கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது. "வயது வந்த நான், பூட்டிய அறைக்குள் போர்னோ படத்தைப் பார்க்கக் கூடாது என நீங்கள் கூறுவது அரசியல் சட்டப்பிரிவு 21 (தனிநபர் உரிமை)-யை மீறுவதாகும்" எனக் கூறலாம்.
இதனால், வயது வந்த நபர் ஒருவர் பூட்டிய அறைக்குள் போர்னோ படத்தை பார்த்தால் அதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க முடியாது" என்றார்.
அதேவேளையில், "ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்துவது அவசியமானதே. இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மத்திய அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்" என்றார்.

இந்தியர்கள் உணவுக்காக அதிகம் செலவிடுகிறார்கள்
ஓர் இந்தியர் தனது மொத்த செலவில் சராசரியாக 65%-ஐ உணவுக்காக செலவிடுவதாக புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.
டயட் அட்லஸ் ஆஃப் இந்தியா (Diet Atlas of India) என்ற பெயரில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
இதற்காக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், பல்வேறு தரப்பு மக்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, கிராமப்புற மக்கள், நகர்ப்புற மக்களவைவிட அதிகளவில் உணவு தானியங்களுக்காக செலவு செய்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு கிராமவாசி, தனது உணவுக்கான தனது மொத்த செலவினத்தில் 41% உணவு தானியங்களுக்காகவும், 8% பால் பொருட்களுக்காகவும், 19% மற்றவைக்காகவும் செலவிடுகிறார்.
அதேவேளையில் நகர்ப்புறத்தில் வசிக்கும் நபர் ஒருவர், தனது உணவுக்கான தனது மொத்த செலவினத்தில் 25% உணவு தானியங்களுக்காகவும், 9% பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்காகவும், 26% மற்ற உணவு வகைகளுக்காகவும் செலவிடுகிறார்.
மேலும் அந்த ஆய்வறிக்கையின்படி நாட்டில் பாதிக்கும் அதிகமானோர் அசைவ உணவு உண்பவர்களாகவே உள்ளனர். குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் மட்டுமே சைவ உணவு சாப்பிடுவோர் அதிகமாக இருக்கின்றனர். அந்த மாநிலங்களில் மொத்த மக்கள் தொகையில் 40%-க்கு குறைவானவர்களே அசைவ உணவு உண்கின்றனர் எனத் தெரிகிறது.

இஸ்ரோ இணையதளத்தில் தகவல்களை அழித்து சதி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இணையதளத்தில் மர்ம நபர்கள் சிலர் நேற்று ஊடுருவி தகவல்களை அழித்துள்ளனர். இது சீனாவின் சதித் திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட், இங்கிலாந்தின் 5 செயற்கைக்கோள்களை வெற்றி கரமாக விண்ணில் செலுத்திய 2 தினங்களில் இந்த விஷமச் செயல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இஸ்ரோ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆன்ட்ரிக்ஸ் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் இருந்த சில தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது மர்ம நபர்களின் சதி வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேநேரம் இணையதளத்தின் மற்ற பக்கங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து ஆன்ட்ரிக்ஸ் அதிகாரி களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதை சரிசெய்யும் பணியில் அவர்கள் ஈடுபட் டுள்ளனர்.

அரசு விளம்பரம்: டெல்லிக்கு எதிரான மனு நிராகரிப்பு
டெல்லி மாநில அரசுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மாக்கன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
அரசு வெளியிடும் விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். தனிநபர் வழிபாடு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என உச்ச நீதிமன்றம் வழக்கொன்றில் கடந்த மே மாதம் தெரிவித்திருந்தது.
அரசு விளம்பரங்கள் வெளியிடுவதற்கும் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது. இந்த நெறிமுறைகளை டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு மீறுவதாகக் கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மாக்கன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மேலும், டெல்லி அரசு, விளம்பரங்களுக்கான தொகையை ரூ.30 கோடியிலிருந்து ரூ.500 கோடியாக உயர்த்தி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்ற அமர்வு மறுத்துவிட்டது. மனுதாரருக்கு தீர்வுபெறுவதற்கான வேறு வழிமுறைகள் உள்ளன. வழிகாட்டு நெறிமுறைகளை மீறி தாக்கல் செய்யப்படும் தனிப்பட்ட மனுக்களை ஊக்குவிப்பதில்லை என உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

நல்ல தகவல்கள் சிவாண்ணா . nandri.
shobana sahas- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877
Re: தேசியச் செய்திகள்
இந்தியாவைத் தாக்க ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டம்: அமெரிக்க நாளிதழ் திடுக்கிடும் தகவல்!
ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வருவதாக, உருது மொழியில் எழுதப்பட்ட ஆவணத்தை மேற்கோள் காட்டி, அமெரிக்க நாளிதழ் யூஎஸ்ஏ டுடே திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
‘இஸ்லாமிக் ஸ்டேட்டின் சுருக்கமான வரலாறு’ என்னும் பெயர் கொண்ட அந்த ஆவணம் 32 பக்கங்களைக் கொண்டுள்ளது. அந்த ஆவணத்தில், “இந்தியாவின் மீதான தாக்குதல் தெற்காசிய ஜிகாதிகளின் புனிதப் போர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது தலிபான் இயக்கத் தீவிரவாதக் கும்பலோடு தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவனிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. உருது மொழியில் புலமை பெற்ற அறிஞர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆவணத்தை உளவுத்துறை அதிகாரிகளால் நன்றாக ஆராய்ந்த பிறகே இச்செய்தியை அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணத்தின் மூலம் பெறுகின்ற செய்தி என்னவெனில்:
“ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்தத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாகச் செய்து வருகிறது. இந்தியா மீதான இந்தத் தாக்குதல், அமெரிக்காவுக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்குமான சண்டையை மீண்டும் தூண்டி விடுவதாக இருக்கப் போகிறது. அமெரிக்கா பல நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தால், கண்டிப்பாகத் தீவிரவாதிகள் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து தாக்குதலில் இறங்குவோம். அப்படி நடக்கும் பட்சத்தில் இதுதான் கடைசி யுத்தமாக இருக்கும்” என்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
தீவிரவாத அமைப்புகளிலேயே மிகவும் கொடூரமான அமைப்பாக ஐஎஸ் அமைப்பு வளர்ந்து வருகிறது. அது ஏற்கனவே ஈராக், சிரியா நாடுகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்திப் பல மாகாணங்களைத் தங்களது வசம் கொண்டு வந்துள்ளது. பிரான்ஸிலும் இருவேறு தாக்குதலை நடத்தியுள்ளது.
மேலும், இயக்கத்தைப் பலப்படுத்த உலகின் பல நாடுகளில் இருந்தும் இளைஞர்களை ஈர்த்து இயக்கத்துக்கு ஆள் சேர்த்து வருகிறது.
ஏற்கனவே அல்கொய்தா தீவிரவாத அமைப்பு இந்தியாவில் கிளை தொடங்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதல் முயற்சி இந்தியாவுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வருவதாக, உருது மொழியில் எழுதப்பட்ட ஆவணத்தை மேற்கோள் காட்டி, அமெரிக்க நாளிதழ் யூஎஸ்ஏ டுடே திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
‘இஸ்லாமிக் ஸ்டேட்டின் சுருக்கமான வரலாறு’ என்னும் பெயர் கொண்ட அந்த ஆவணம் 32 பக்கங்களைக் கொண்டுள்ளது. அந்த ஆவணத்தில், “இந்தியாவின் மீதான தாக்குதல் தெற்காசிய ஜிகாதிகளின் புனிதப் போர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது தலிபான் இயக்கத் தீவிரவாதக் கும்பலோடு தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவனிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. உருது மொழியில் புலமை பெற்ற அறிஞர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆவணத்தை உளவுத்துறை அதிகாரிகளால் நன்றாக ஆராய்ந்த பிறகே இச்செய்தியை அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணத்தின் மூலம் பெறுகின்ற செய்தி என்னவெனில்:
“ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்தத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாகச் செய்து வருகிறது. இந்தியா மீதான இந்தத் தாக்குதல், அமெரிக்காவுக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்குமான சண்டையை மீண்டும் தூண்டி விடுவதாக இருக்கப் போகிறது. அமெரிக்கா பல நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தால், கண்டிப்பாகத் தீவிரவாதிகள் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து தாக்குதலில் இறங்குவோம். அப்படி நடக்கும் பட்சத்தில் இதுதான் கடைசி யுத்தமாக இருக்கும்” என்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
தீவிரவாத அமைப்புகளிலேயே மிகவும் கொடூரமான அமைப்பாக ஐஎஸ் அமைப்பு வளர்ந்து வருகிறது. அது ஏற்கனவே ஈராக், சிரியா நாடுகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்திப் பல மாகாணங்களைத் தங்களது வசம் கொண்டு வந்துள்ளது. பிரான்ஸிலும் இருவேறு தாக்குதலை நடத்தியுள்ளது.
மேலும், இயக்கத்தைப் பலப்படுத்த உலகின் பல நாடுகளில் இருந்தும் இளைஞர்களை ஈர்த்து இயக்கத்துக்கு ஆள் சேர்த்து வருகிறது.
ஏற்கனவே அல்கொய்தா தீவிரவாத அமைப்பு இந்தியாவில் கிளை தொடங்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதல் முயற்சி இந்தியாவுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Re: தேசியச் செய்திகள்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595
Re: தேசியச் செய்திகள்
அய்யய்யோ ... படிக்கவே பயமா இருக்கே ....

shobana sahas- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877
Re: தேசியச் செய்திகள்
தாஜ்மகாலில் ஆரத்தி எடுக்க முயன்றவர்கள் விரட்டியடிப்பு: பாதுகாப்பு போலீசார் நடவடிக்கை
சிவசேனா ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்ட சிலர் ஆரத்தியுடன் தாஜ்மகாலுக்குள் நுழைய முயன்றனர். புனித சிரவண மாதத்தின் முதல் திங்கட்கிழமை என்பதால் அவர்கள் அங்கு ஆரத்தி எடுக்க திட்டமிட்டதாக தெரிகிறது. ஆனால் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை லத்தியால் விரட்டியடித்தனர்.
உத்தரபிரதேச மாநில சிவசேனா தலைவர் அனில்சிங், தங்கள் கட்சிக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தாஜ்மகாலில் ஆரத்தி எடுக்கும் திட்டமும் எங்களிடம் இல்லை என்றார். தாஜ்மகால் உண்மையிலேயே சிவன் கோவில் என்று சில வக்கீல்கள் கோர்ட்டில் தொடர்ந்த மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிவசேனா ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்ட சிலர் ஆரத்தியுடன் தாஜ்மகாலுக்குள் நுழைய முயன்றனர். புனித சிரவண மாதத்தின் முதல் திங்கட்கிழமை என்பதால் அவர்கள் அங்கு ஆரத்தி எடுக்க திட்டமிட்டதாக தெரிகிறது. ஆனால் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை லத்தியால் விரட்டியடித்தனர்.
உத்தரபிரதேச மாநில சிவசேனா தலைவர் அனில்சிங், தங்கள் கட்சிக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தாஜ்மகாலில் ஆரத்தி எடுக்கும் திட்டமும் எங்களிடம் இல்லை என்றார். தாஜ்மகால் உண்மையிலேயே சிவன் கோவில் என்று சில வக்கீல்கள் கோர்ட்டில் தொடர்ந்த மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Re: தேசியச் செய்திகள்
பெங்களூருவில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 100 அபராதம் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை விரைவில் அமலுக்கு வருகிறது.
பிரச்சினைகள்
பெங்களூரு நகரம் தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் இங்குள்ள மக்கள் தொகை ஏறக்குறைய 1 கோடியை தொட்டுள்ளது. மக்கள் தொகை உயர்வால் இங்கு தினமும் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன. இதில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் குப்பை அகற்றுவது உள்பட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சினைகளை போக்க பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் பிரச்சினைகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இருப்பினும் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுபவர்கள், கடைகள் மற்றும் வீடுகளில் சேரும் குப்பைகளை மட்கும் மற்றும் மட்காத குப்பைகள் என்று தனித்தனியாக பிரித்து வைக்காமல் இருப்பவர்கள் ஆகியோருக்கு தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகிறார்கள். இதில், மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணியை குத்தகைக்கு எடுத்து சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படும் வகையில் தங்களது பணியில் அலட்சியமாக செயல்படும் குத்தகைதாரர்களும் விதிவிலக்கல்ல.
எச்சில் துப்பினால் அபராதம்
அதன்படி, வீடுகளில் சேரும் குப்பைகளை பிரித்து வைக்காமல் இருக்கும் நபர்களிடம் இருந்து முதல்முறையாக ரூ.100-ம், 2-ம் முறையாக ரூ.200-ம் அபராதமாக வசூலிக்கப்படுகிறது. இதேபோல வணிக வளாகங்களில் குப்பைகளை பிரித்து வைக்காமல் இருந்தால் அதன் உரிமையாளர்களிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.500-ம், 2-வது கட்டமாக ரூ.1,000-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த வரிசையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், தற்போது பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது, வளர்ப்பு பிராணிகளை பொது இடங்களில் மலம் கழிக்க செய்பவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் அறிக்கை தயார் செய்து மாநில அரசுக்கு அனுப்பி வைத்தனர். அதை ஆய்வு செய்த அதிகாரிகள் மாநகராட்சிக்கு அனுமதி அளித்துள்ளனர். அதன்படி பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது, வளர்ப்பு பிராணிகளை பொது இடங்களில் மலம் கழிக்க செய்பவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.100-ம், 2-ம் கட்டமாக ரூ.200-ம் அபராதம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

ஒடிசாவில் 8 வயது சிறுவனை நரபலி கொடுத்த கொடூர மந்திரவாதிக்கு மரண தண்டனை
ஒடிசாவில் நரபலி வழக்கில் 30 வயது மந்திரவாதிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டம் தாமோதர்பூர் பகுதியில் வசித்து வந்தவர் பிதாம்பர் கெய்பெய். தன்னை யோகசக்தி வாய்ந்த தாந்திரீகவாதியாக அடையாளம் காட்டிக்கொண்ட இவர் மந்திர தந்திர வேலைகள் செய்து வந்துள்ளார். 2010ம் ஆண்டு 8 வயது சிறுவனை நைசாகப் பேசி சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் சிறுவனை நரபலி கொடுத்து பூஜை செய்துள்ளார்.
சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மந்திரவாதி பிதாம்பர் இந்த படுபாதக செயலைச் செய்தது தெரியவந்தது. ஒரு வருடத்திற்குப் பிறகு அவரது வீட்டில் புதைக்கப்பட்டிருந்த சிறுவனின் தலையை தோண்டி எடுத்த போலீசார், உடலை வேறு ஒரு இடத்தில் உள்ள சாக்கடையில் இருந்து எடுத்தனர்.
மந்திரவாதி பிதாம்பர் கைது செய்யப்பட்டு ஜாஜ்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசுத் தரப்பு வாதங்கள், 22 சாட்சிகளிடம் விசாரணை என 5 ஆண்டுகளாக நடந்த இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறுவனின் தலையை அறுத்துக் கொன்ற குற்றவாளி பிதாம்பருக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி ஜீவன் பாலவ் தாஸ் தீர்ப்பளித்தார்.

நண்பனின் கழுத்தை அறுத்துக் கொன்ற 3 பள்ளி மாணவர்கள் கைது
பள்ளி மாணவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள், நாளுக்கு நாள் தற்போது அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்து வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் தங்கள் சக நண்பனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு சம்பரன் மாவட்டத்தின் தலைநகர் மோதிஹரியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து, தங்கள் குழுவிற்கு 'எக்ஸ்-கேங்' என்று பெயர் வைத்துக் கொண்டு 10-க்கும் மேற்பட்ட பைக்குகளை திருடியுள்ளனர்.
இவர்களுடன், இணைந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 9-ம் வகுப்பு மாணவன்தான் அஷிஷ் குமார். கடந்த சில வாரங்களாகவே ஆஷிஷின் நடவடிக்கைகள் மாறுவதை கவனித்த அவனது நண்பர்கள், எங்கே அவன் தாங்கள் செய்த குற்றத்தை அம்பலப்படுத்தி விடுவானோ என்கிற பயத்தில் அவனை ஆளில்லாத வீட்டிற்கு கூட்டிச் சென்று கழுத்தையும் மணிக்கட்டையும் அறுத்துக் கொலை செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட மாணவனின் செல்போன் மற்றும் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார் இன்று 3 மாணவர்களைக் கைது செய்துள்ளார். மேலும் பல மாணவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

ராணுவம் எங்களை வெளியேற கேட்டுக் கொண்டது, எனவே நாங்கள் புறப்படுகிறோம் -பாதிக்கப்பட்ட கிராம மக்கள்
எல்லையில் ராணுவம் எங்களை வெளியேற கேட்டுக் கொண்டதால், நாங்கள் இங்கிருந்து புறப்பட்டு செல்கிறோம் என்று பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கூறிஉள்ளனர்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 2003–ம் ஆண்டு முதல் சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மதிக்காமல், காஷ்மீரில் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. தொடர்ந்து 8 வது நாளாக காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தொடர் தாக்குதல்களை நடத்தியது. பூஞ்ச் மாவட்டத்தில், மெந்தார் தாலுகாவில் பசோனி என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவம், பீரங்கி தாக்குதல் நடத்தி உள்ளது. பூஞ்ச் மாவட்டத்தில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.
இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் உள்ள இந்திய கிராமங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் நடத்திய அடாவடி தாக்குதலில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ஜம்மு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல் எல்லையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்ந்து வருகின்றனர். அவர்களுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கி சூட்டிற்கு பயந்து மக்கள் உயிரைபிடித்துக் கொண்டு மறைவிடங்களில் வசித்து வருகின்றனர். இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துவரும் நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மக்கள் கூட்டம் கூட்டமாக எல்லை கிராமங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் பேசுகையில், எல்லையில் ராணுவம் எங்களை வெளியேற கேட்டுக் கொண்டதால், நாங்கள் இங்கிருந்து புறப்பட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்கிறோம். பொதுமக்கள் பெரிதும் அச்சமாக உள்ளனர், இறந்தவர்களின் சடலங்களை தூக்கிச்செல்லக் கூட யாரும் வெளியே வராத நிலையே நீடிக்கிறது என்று கூறிஉள்ளனர். காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அம்மாநில துணை முதல்-மந்திரி நிர்மல் சிங் சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார்.
கிராம மக்கள் கொல்லப்படும் சம்பவத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தை கடுமையாக சாடிஉள்ள, பாதுகாப்பு நிபுணர் பி.என்.ஹூன், பாதுகாப்பு அமைச்சகத்திற்கு இவ்விவகாரத்தில் எந்தஒரு திட்டமும் கிடையாதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். பாதுகாப்பு நெறிமுறைகளை பயன்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது என்று தான் நினைப்பதாக குறிப்பிட்டு உள்ளார்

61 பச்சிளங்குழந்தைகளை காவு வாங்கிய ஒடிசா அரசு மருத்துவமனை: ஊழியர்களை குறை கூறும் அரசு

ஒடிசா மாநிலத்தில் உள்ள சிஷூ பவன் என்ற குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 61 பச்சிளங்குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
இதையடுத்து, ஒடிசாவை ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சிக்கெதிராக பா.ஜ.க உட்பட எதிர்க்கட்சியினர் பல்வேறு அரசு மருத்துவமனைகள் முன்பாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 5 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அலட்சியமான நடத்தையினால் பச்சிளங்குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக இருந்த 3 ஊழியர்கள் மீது கிரிமினல் விசாரணையும் நடத்தப்படவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒடிசா அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது குறை கூறி வரும் நிலையில், அந்த மருத்துவமனையின் மூத்த அதிகாரி நிரஞ்சன் மொகந்தி, “இங்கு, ஒரு நாளைக்கு 50 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்படுகின்றனர். வெளி நோயாளிகளாக மட்டுமே ஒரு நாளைக்கு 500 குழந்தைகளுக்கும் மேல் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இவ்வளவு அழுத்தங்கள் இருக்கும் போது, நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று கேள்வியெழுப்புகிறார்.
இப்படியே அரசும் ஊழியர்களும் மாறி மாறி ஏதாவது காரணம் சொல்லிக் கொண்டிருந்தால் இறந்த குழந்தைகளின் உயிர்களுக்கும், சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுடைய உயிர்களின் உத்தரவாதத்திற்கும் யார் பொறுப்பு? என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது

ஏவுகணை சோதனை மையமான வீலர் தீவுக்கு அப்துல் கலாம் பெயர்
ஒடிசா மாநிலத்தில் உள்ள ஏவுகணை சோதனை மையமான வீலர் தீவுக்கு குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பெயரை சூட்டி உள்ளது.
ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்திற்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அளித்த பங்களிப்பிற்கு கெளவுரவம் அளிக்கும் வகையில் அவர் ஏவுகணை நாயகன் என்றே அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் பாலாசூர் அருகே உள்ள ஏவுகணை சோதனை மையமான வீலர் தீவுக்கு அப்துல் கலாம் பெயரை சூட்டியுள்ளது ஓடிசா மாநில அரசு. மாநில தலைநகர் புவனேஷ்வரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள இந்த தீவு இனி அப்துல் கலாம் தீவு என்று அழைக்கப்படும்.
இதேபோல் தில்லியில் உள்ள அவுரங்கசீப் சாலையும் அப்துல் கலாம் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வீலர் தீவு இந்தியாவின் மிகவும் முக்கியமான ஏவுகணை ஏவும்தளம் ஆகும்.

ஐ.நா. பிரச்சார தூதுவராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்
ஐக்கிய நாடுகள் சபையின் லட்சிய திட்டங்களை விளம்பரப்படுத்தும் பிரச்சார தூதர்களாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வறுமை ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, பாலின பாகுபாடு களைதல், அனைவருக்கும் சமவாய்ப்பு உள்ளிட்ட 17 அம்சங்களை லட்சிய இலக்குகளை ஐ.நா. சபை நிர்ணயம் செய்துள்ளது.
இவைகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க சர்வதேச அளவில் பிரபலமானவர்களை பிரச்சார தூதுவர்களாக ஐ.நா. சபை நியமித்து வருகிறது. அந்த பட்டியலில் ஆஸ்கர் விருது வென்ற தமிழகத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் உட்பட பலர் விளம்பர தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

‘ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்’ திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் அமித்ஷா உறுதி
ராணுவ வீரர்களுக்கு ‘ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்’ திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா உறுதி அளித்துஉள்ளார்.
முன்னாள் ராணுவத்தினரின் நீண்ட கால கோரிக்கையான, ‘ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் சில காரணங்களால் இந்த திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. ஆனால் இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திட்டத்தை அமல்படுத்தவில்லை என்றால் கடும் போராட்டத்தை தொடர்வோம் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்நிலையில், ராணுவ வீரர்களுக்கு ‘ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்’ திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா உறுதி அளித்துஉள்ளார். பாரதீய ஜனதா - ஆர்.எஸ்.எஸ். மூன்றுநாள் ஒருங்கிணந்த கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்றது. தலைவர்கள் கூட்டத்தில் ‘ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்’ திட்டமும் முக்கிய அங்கம் வகித்தது. சங்பரிவார் செய்தித் தொடர்பாளர் மன்மோகன் வைத்யா செய்தியாளர்களிடம் பேசுகையில், இது விரையில் செய்யப்படும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவரின் கருத்தும் உள்ளது என்று கூறிஉள்ளார்.
வைத்யா பேசுகையில் “ ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்’ திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா கூறிஉள்ளார்,” என்று கூறிஉள்ளார்.
இதற்கிடையே முன்னாள் ராணுவ மேஜர் ஜெனரல் சாத்பீர் சிங் பேசுகையில், “விரைவில் திட்டத்தை ஒருதலைப்பட்சமாக மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டுவரலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. எங்களுடைய கோரிக்கைப்படி இருந்தால் நாங்களும் வரவேற்கிறோம், அரசுக்கும் நன்றி. எங்களுடைய கோரிக்கைகள் இல்லாமல் இருந்தால், ஒருதலைப்பட்சமான முடிவானது எங்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது கிடையாது. நாங்கள் எங்களுடைய போராட்டத்தை தொடர்வோம்,” என்று கூறிஉள்ளார்.

பிறந்த குழந்தையின் மூக்கை கடித்த எலி: மருத்துவமனை ஊழியர்கள் சஸ்பெண்ட்
மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்ட மருத்துவமனையில், பிறந்து 45 நாட்களே ஆன குழந்தையின் மூக்கை எலி கடித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் பணியாற்றி செவிலியர் மற்றும் குழந்தைகள் பராமரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று தினங்களுக்கு முன்பாக நடந்த இந்த கொடூர சம்பவம் நேற்றுதான் வெளிச்சத்திற்கு வந்தது.
தனியார் மருத்துவமனையில் பிறந்த அந்த குழந்தையின் நிலை கவலைக்கிடமானதையடுத்து மாவட்ட மருத்துவமனைக்கு பெற்றோர்கள் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களிடம் குழந்தை காட்டப்படவில்லை. குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து அந்த குழந்தையின் மூக்கை எலி கடித்துள்ளது.
இது குறித்து, மருத்துவமனை அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து 2 பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இதே போன்று, ஆந்திர மாநிலம் குண்டூர் அரசு பொது மருத்துவமனையில் எலி கடித்ததால் பச்சிளம் குழந்தை இறந்தது நினைவிருக்கலாம்.

Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum