ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 Dr.S.Soundarapandian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 Dr.S.Soundarapandian

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 ayyasamy ram

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

ஆதார் காட்டுங்க....!!
 SK

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by ayyasamy ram on Sat Apr 25, 2015 12:12 pmபுதுடில்லி : தெற்கு டில்லியின் புறநகர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

லக்னோ, கொல்கட்டா , சென்னை உள்ளிட்ட நகரங்கள் சிலவற்றிலும் இதே நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது.

சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
-
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by ayyasamy ram on Sat Apr 25, 2015 12:14 pm

டில்லியில் நிலநடுக்கம் உணரப்பட்டதை தொடர்ந்து
மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
-
சென்னையில் கோடம்பாக்கம் பகுதியில் இந்த நில
அதிர்வு இருந்தது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by சிவா on Sat Apr 25, 2015 2:17 pm

நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தினால் டில்லி, பீகார், மேற்குவங்கம், தமிழகம் , உத்தரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நில அதிர்வும், நடுக்கமும் உணரப்பட்டது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் விழுந்தன; பலர் காயமுற்றுள்ளனர். உயிர்ப்பலி இருக்கும் என அஞ்சப்படுகிறது.

இன்று காலை 11. 44 க்கு நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து 80 கி.மீ., தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7. 8 ஆக பதிவானது. இந்த நில நடுக்கம் எதிரொலியாக டில்லியை ஒட்டியுள்ள நொய்டாவில் கடும் அதிர்வும் , கட்டடங்கள் குலுங்கியும் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. இந்த உணர்வு 20 நிமிடங்கள் வரை இருந்ததாக இப்பகுதியினர் கூறியுள்ளனர். தமிழகத்தில் சென்னையில் குறிப்பாக நந்தனம், கோடம்பாக்கத்தில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பலரும் வீதிகளுக்கு வந்தனர். இதனால் பலரும் பதட்டத்துடன் காணப்பட்டனர்.

நில நடுக்கம் காரணமாக டில்லியில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பீகாரிலும் நேபாளத்திலும் மொபைல் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பலரும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறினர்.

நேபாளத்திற்கு மீட்பு படையை அனுப்பியது இந்தியா. நேபாளம் சென்ற விமானம் இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்டது . கேரளா- புதுச்சேரியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

பிரதமர் விவரம் கேட்பு: இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் ; டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நில நடுக்கம் தொடர்பான விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள், பீகார், உ.பி., சிக்கிம் முதல்வர்களுடன் பேசியுள்ளேன். விரைவான மீட்பு நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன். நேபாள மீட்பு பணிக்கும் இந்தியா உதவி செய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Sat Apr 25, 2015 2:20 pm

நேபாள நிலநடுக்கம்: ட்விட்டரில் பிரதமர் ஆதரவுக்கரம்:

நேபாளத்தில் ரிக்டரில் 7.7 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு தேவையான உதவிகளை இந்தியா அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம் தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல் அறிய அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்திய மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்.

நேபாளத்துக்கு தேவையான உதவிகளை இந்தியா அளிக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Sat Apr 25, 2015 2:23 pm

டெல்லி, ராஞ்சி,கொல்கத்தா, கவுகாத்தி , பாட்னா, ஜெய்பூர், போபால் உள பட இந்தியாமுழுவதும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இன்று முற்பகல் 11.44 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது.

அதுபோல் தமிழகம், புதுவை, கேரளா, ஒடிஷா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் நிலநடுக்கம் லேசாக உணரப்பட்டுள்ளது.

நேபாளம் போகராவில் இருந்து தமிழகம் வரை இந்த நிலநடுக்கம் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லியில் சிறிது நேரம் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு மீண்டும் இயங்கின.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Sat Apr 25, 2015 2:28 pm

நிலநடுக்கம் எதிரொலி: பிரதமர் மோடி இன்று மதியம் உயர்மட்ட குழுவுடன் அவசர ஆலோசனை

இன்று தலைநகர் டெல்லி மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா மற்றும் நேபாளத்தில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது.

நேபாளத்தின் போகராவின் கிழக்கே 80 கிலோமீட்டர் தூரத்தில் மையமாக கொண்டு 15 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்து ரிக்டர் அளவு கோளில் 7.9 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்கா வானிலை ஆய்வு நிலையம் அறிவித்து உள்ளது.

நேபாளம் போகராவில் இருந்து தமிழகம் வரை இந்த நிலநடுக்கம் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லியில் சிறிது நேரம் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு மீண்டும் இயங்கின.

நேபாளத்தை மையம் கொண்டு தாக்கிய நில நடுக்கத்தால் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கம்: உயர்மட்ட குழுவுடன் 3 மணிக்கு பிரதமர் மோடி அவசர ஆலோசனை இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் நேபாள பிரதமரை மோடி தொலைபேசியில் அழைக்க முயன்றார். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், நேபாள குடியரசு தலைவரை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார். இந்தியா சார்பில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதாக மோடி வாக்களித்தார். இந்நிலையில், இந்தியாவின் சேத விவரம் மற்றும் நேபாள மீட்பு பற்றி ஆலோசிக்க உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு மோடி அழைப்புவிடுத்துள்ளார். அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அடங்கிய இந்த கூட்டம் மதியம் 3 மணிக்கு டெல்லியில் தொடங்குகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Sat Apr 25, 2015 2:29 pm

பீகாரில் 2 பேர் பலி; 10 பேர் காயம்

பாட்னா : நிலநடுக்கம் காரணமாக பீகாரின் தர்பகங்கா மாவட்டத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Sat Apr 25, 2015 2:29 pm

நிலநடுக்கம்: இந்தியாவில் பாதிப்பு விபரம்

புதுடில்லி : இந்தியாவின் பல மாநிலங்களில் நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் வாரணாசியில் கெஜ்ரிவாலுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது நிலநடுக்கம் ஏற்பட்டதால், சிதறி ஓடிய கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். 50 பேர் படுகாயம் அடைந்துள்ளார்.

மேற்குவங்கத்தின் மால்டா பகுதியில் பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 40 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Sat Apr 25, 2015 2:39 pm

கட்டிட இடிபாடுகளில் 400 பேர் தவிப்பு?

காத்மண்ட் : நேபாள தலைநகரம் காத்மண்டில் உள்ள புகழ்பெற்ற தரரா கட்டிடம் நிலநடுக்கத்தில் முற்றிலும் இடிந்து சேதமடைந்துள்ளது. இதில் சுமார் 400 பேர் வரை இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் ன அஞ்சப்படுகிறது. தரரா கட்டிடம் 9 அடுக்குகளை கொண்ட கட்டிடம் ஆகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Sat Apr 25, 2015 2:40 pm

காத்மண்ட் விமானநிலையம் மூடல்

காத்மண்ட் : நிலநடுக்கம் காரணமாக நேபாள தலைநகர் காத்மண்ட்டில் உள்ள த்ரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து நேபாளம் சென்ற விமானங்கள் இந்தியாவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Sat Apr 25, 2015 2:43 pm

வாரணாசியில் நிலஅதிர்வால் மக்கள் அலறி அடித்தபடி வீதிகளில் ஓடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

குஜராத், கேரளாவில் நிலஅதிர்வு

திருவனந்தபுரம்: கேரளாவிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல இடங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இதே போன்று குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியிலும் நிலஅதிர்வு

புதுச்சேரி : நாட்டின் வடமாநிலங்கள், தமிழகம் ஆகியவற்றை தொடர்ந்து புதுச்சேரியிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. கடைகளில் பொருட்கள் குலுங்கியதால் மக்கள் அலறி அடித்தபடி ஓடி, வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

நிலநடுக்கம்: பலர் பலி?

புதுடில்லி : நேபாளத்திலும், டில்லியிலும் நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்ததாக கூறப்படுகிறது. இதில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Sat Apr 25, 2015 2:45 pm

நில அதிர்வால் பாதிப்பு: சல்மான் குர்ஷித் வீட்டில் இருந்து வெளியேறினார்

நேபாள நிலநடுக்கம்: 100 ஆண்டு பழமையான டவர் இடிந்து விழுந்தது.

தரைமட்டமான புராதன கட்டிடங்கள்

காத்மண்ட் : நேபாளத்தில் இன்று காலை 11.42 மணியளவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் எந்நாட்டில் உள்ள பல புராதன பழமை வாய்ந்த கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. வீடுகள் பலவும் இடிந்துள்ளதால் சாலைகளில் கட்டிட துகள்கள் குவிந்து கிடக்கின்றன. சாலைகளில் விரிசல் ஏற்பட்டு மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by ayyasamy ram on Sat Apr 25, 2015 2:46 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Sat Apr 25, 2015 2:46 pm

இந்திய தூதரக அவசர எண் அறிவிப்பு

காத்மண்ட் : நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக காத்மண்ட் இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. +977 98511 07021, +977 98511 35141ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு நிலநடுக்கம் குறித்த விபரங்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Sat Apr 25, 2015 2:47 pm

பீகாரில் மின் விநியோகம் நிறுத்தம்

பாட்னா : நிலநடுக்க சேத விபர கணக்கீட்டு குழுவிற்கு மத்திய அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி தலைமை வகிக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சேத விபரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரூடி, பாதுகாப்பு காரணங்களுக்காக வடக்கு பீகாரில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. சேத விபரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக 3 மணிக்கு பிரதமர் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Sat Apr 25, 2015 2:48 pm

வங்கதேசத்தில் 40 பேர் காயம்

தாகா : வங்கதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் தப்பி ஓட முயற்சித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by ayyasamy ram on Sat Apr 25, 2015 2:49 pm


-
Damage due to earthquake in Nepal.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Sat Apr 25, 2015 2:50 pm

நேபாள் விரைந்தது இந்திய மீட்புக்குழு

புதுடில்லி : நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நேபாளத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியா சார்பில் 4 தேசிய பேரிடர் மீட்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நிதியுதவி அறிவித்தார் அகிலேஷ்

லக்னோ : உத்திர பிரதேசத்தில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.20,000மும் நிவாரண தொகையாக வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணியில் பேரிடர் குழு

புதுடில்லி : நிலநடுக்க பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில் பேரிடம் மீட்புக் குழுவினரை அரசு நியமித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து முதல் கட்ட தகவல்கள் ஏதும் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேபாள பிரதமருடன் மோடி ஆலோசனை

புதுடில்லி : நிலநடுக்கம் குறித்து நேபாள பிரதமருடன், இந்திய பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அங்கு நடைபெறும் மீட்பு பணிகள் குறித்தும், சேத விபரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து விபரங்கள் சேகரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மோடி தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Sat Apr 25, 2015 2:53 pm

டெல்லி முதல்வர் வேண்டுகோள்:

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ட்விட்டரில் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். "நேபாள நிலநடுக்கத்தின் பாதிப்பு டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது. மக்கள் பீதி அடைய வேண்டாம். அதிகாரிகள் சேத விவரங்களை திரட்டி வருகின்றனர். பொதுமக்கள் பொறுமை காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

கொச்சியில் நில அதிர்வு:

கொச்சியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக எர்ணாகுளம் மாவட்ட கூடுதல் நீதிபதி பி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மம்தா பிரார்த்தனை:

நிலநடுக்கம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. நேபாள மக்களின் பாதுகாப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

சென்னையிலும் உணரப்பட்டது:

சென்னையில் கோடம்பாக்கம், நந்தனம் போன்ற பகுதிகளில் ஒரு சில வினாடிகளுக்கு நில அதிர்வு ஏற்ப்பட்டது. மீண்டும் நில அதிர்வு ஏற்படும் என்ற அச்சத்தில் அலுவலகங்கள், வீடுகளில் இருந்து வெளியேறி மக்கள் சிறிது நேரம் வீதிகளில் தஞ்சமடைந்தனர். பின்னர் சகஜ நிலைக்கு திரும்பினர்.

பிரதமர் ஆதரவுக்கரம்:

நிலநடுக்கம் தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல் அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்" என குறிப்பிட்டுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Sat Apr 25, 2015 2:55 pm

நிலநடுக்க பாதிப்புகள் பற்றி அதிகாரிகள் தகவல் சேகரிப்பு: மோடி

நேபாளம் மற்றும் ஈரானில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்தியாவிலும் இதன் தாக்கம் இருந்தது. டெல்லி, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி இருந்தது. சென்னையில் சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளிக்கு வந்தனர்.

நிலநடுக்கம் காரணமாக இந்தியா மற்றும் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக அதிகாரிகள் தகவல்கள் சேகரித்து வருவதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை தொடர்பு கொண்டு நிலநடுக்கம் தொடர்பான தகவல்களை கேட்டறிந்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Sat Apr 25, 2015 3:04 pm

நிலநடுக்கத்தில் புதையுண்டது காத்மண்டுவின் 19-ம் நூற்றாண்டு “தரகரா” கட்டிடம்!காத்மாண்டு: நேபாளத்தை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மண்டுவில் இருந்த19-ஆம் நூற்றாண்டு பழமையான 9 மாடிக் கட்டிடமான "தரகரா" டவர் முழுமையாக இடிந்து விழுந்தது. அக்கட்டிடத்தில் இருந்த 50 பேர் மண்ணோடு மண்ணாக புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து 80 கி.மீ., தொலைவில் இன்று முற்பகல் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7. 9 அலகுகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கம் நேபாளத்தை மிக மோசமாக பாதித்துள்ளது. இந்தக் கடுமையான நிலநடுக்கத்தினால் காத்மண்டு உள்ளிட்ட பல இடங்களில் கட்டிடங்கள், கோவில்கள் இடிந்து விழுந்தன. காத்மண்டுவின் அடையாளமாக இருந்த 19ஆம் நூற்றாண்டு பழமையான கட்டிடமான "தரகரா" என்ற 9 மாடிக் கட்டிடமும் முழுமையாக இடிந்து விழுந்தது.

இக்கட்டிடத்திற்குள் இருந்த 50க்கும் மேற்பட்டோரும் மண்ணோடு மண்ணாக புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பீஸ்மன் டவர் என்றும் அழைக்கப்படும் இக்கட்டிடம் 61.88 மீட்டர் உயரமானது. காத்மாண்டுவின் சுந்தரா என்னும் மையப்பகுதியில் 1832 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கட்டிடம் அதன் கட்டிடக் கலைக்காக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Sat Apr 25, 2015 3:07 pm

நிலநடுக்கத்தால் இமய மலை சிகரங்களில் பனிச்சரிவு அபாயம்.. நதிகளில் வெள்ளப்பெருக்கு ஆபத்து

நில நடுக்கம் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தில் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் மிக தீவிரமாக தாக்கியுள்ளது. அதன் தாக்கம், இந்திய வட மாநிலங்களிலும் உணரப்பட்டது. இந்தியா-நேபாள் நடுவே உள்ள இமயமலை சிகரமான எவரெஸ்டில் பனிப்பாறைகள் அதிகம் காணப்படுகின்றன.

இமயம் ஆடியதால் பனி சரிவு ஏற்பட்டு பெரும் அழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதை இந்திய பேரிடர் மீட்பு குழுவினர் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.

இமயமலை அடிவாரத்திலுள்ள மக்கள், நதியோரங்களிலுள்ள மக்கள் அங்கிருந்து கிளம்பி செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில் பனி உருகி, நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Sat Apr 25, 2015 3:09 pm

நில நடுக்கத்தை உணர்ந்த பீதியில் ஐபிஎல் வீரர்கள்.. போட்டிகள் தொடருமா?

நில நடுக்கத்தை உணர்ந்ததாக பீதியுடன் தகவல்களை பரிமாறிக்கொண்டுள்ளனர் ஐபிஎல் வீரர்கள்.

இதுகுறித்து ராபின் உத்தப்பா கூறுகையில், இன்று நில நடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வை முதல் முறையாக உணர்ந்தேன். புழுக்கமான வானிலையில் இருந்து கொல்கத்தா திடீரென 2 நிமிடங்களுக்கு, குளி்ச்சியாக மாறியதையும் உணர முடிந்தது. உலக வாழ்க்கை மிக குறுகியது. மகிழ்ச்சியோடும், அடுத்தவர்கள் மீது பாசத்தோடும் வாழ்வோமாக. இவ்வாறு ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.

மற்றொரு வீரர் குல்திப் யாதவ் கூறுகையில், எனது இதயம் வேகமாக துடிப்பதை உணர்ந்தேன். அது ஒரு பயங்கர அனுபவம். என்னால் நில நடுக்கத்தை உணர முடிந்தது என்றுள்ளார்.

மற்றொரு வீரர் ஜாதவ் உனட்கட் கூறுகையில், தாய்நிலத்தில் அதிர்வை உணர்ந்தேன். அமைதியாகவும், பூமியோடு இசைந்தும் வாழ வேண்டும் என்பதை கடவுள் உணர்த்துகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவும், டெல்லியில் நில நடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum