ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 T.N.Balasubramanian

கடவுள் தந்த இருமலர்கள்...
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

சின்னச் சின்ன சிந்தனைகள்
 SK

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 SK

புதிய சமயங்கள்
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by ayyasamy ram on Sat Apr 25, 2015 12:12 pm

First topic message reminder :புதுடில்லி : தெற்கு டில்லியின் புறநகர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

லக்னோ, கொல்கட்டா , சென்னை உள்ளிட்ட நகரங்கள் சிலவற்றிலும் இதே நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது.

சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
-
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down


Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Tue Apr 28, 2015 1:59 am

நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் எங்கள் நாட்டு மக்களை மீட்டுத் தாருங்கள்: இந்தியாவிடம் ஸ்பெயின் வேண்டுகோள்

நேபாளத்தில் 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பேரழிவில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், மீட்புப் பணியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மீட்புக்குழுவினருடன் நிவாரணப் பொருட்களையும் தாராளமாக அனுப்பியுள்ளது. அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பத்திரமாக மீட்டு அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில், நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் ஸ்பெயின் நாட்டு மக்களை மீட்பதற்கு இந்தியா உதவி செய்ய வேண்டும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி கார்சியா-மார்கலோ, பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அப்போது, தேசிய பேரிடரால் பாதிக்கப்படும் அனைத்து நாடுகளுக்கும் இந்தியா உதவி செய்துவருவதை சுட்டிக் காட்டிய மோடி, ஸ்பெயின் நாட்டிற்கும் சாத்தியமுள்ள அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.

மேலும் ரெயில்வே துறையில் ஒத்துழைப்பு குறித்தும் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தில் ஸ்பெயின் நிறுவனங்கள் பங்கேற்று, இந்தியாவில் உற்பத்தி தளங்களை அமைக்க வேண்டும் என்றும் மோடி அழைப்பு விடுத்தார்.

மேலும், ஸ்பெயின் பிரதமரின் அழைப்பை ஏற்ற மோடி, ஸ்பெயினுக்கு 2016ல் சுற்றுப் பயணம் செய்வதாகவும் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Tue Apr 28, 2015 2:00 am

நில நடுக்க பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தொடும்: நேபாள துணைத் தூதர் அதிர்ச்சி தகவல்

நேபாள நில நடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3700-ஐ நெருங்கியுள்ள நிலையில் மேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தாவில் இந்தியாவுக்கான நேபாள துணைத்தூதராக உள்ள சந்திர குமார் கிமிரே இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, கடந்த 80 ஆண்டுகளில் ஏற்படாத அளவுக்கு தற்போதைய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில், இந்தப் பேரழிவில் பலியானோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தொடும் என்று அவர் கூறினார்.

மேலும், துயரப்படும் நேபாள மக்களுக்கு உறுதுணையாக இந்திய அரசு ஆற்றிவரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தங்கள் நாட்டின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்ட கிமிரே, நேபாள பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கென யுனைட்டட் பேங்க் ஆப் இந்தியாவில் (டல்ஹவுஸி கிளை) தனியாக கணக்கு துவங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

நேபாள மக்களின் துயரை துடைக்க விரும்பும் மேற்கு வங்காள மாநில மக்கள் இந்த வங்கிக் கணக்கில் தங்களது நிதியுதவியை செலுத்தலாம். பணம் தவிர இதர நிவாரணப் பொருட்களையும் இங்குள்ளவர்களிடம் பெற்று, நேபாள மக்களுக்கு அனுப்புவதற்கென்று கொல்கத்தா துணைத் தூதரகத்தில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Tue Apr 28, 2015 6:27 pm

நிலநடுக்க பலி 10,000-ஐ எட்டும் அபாயம்: பெருந்துயரை விவரித்த நேபாள பிரதமர் உருக்கம்

நேபாளத்தை புரட்டிப் போட்டிருக்கும் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 10,000-ஐ எட்டும் அபாயம் உண்டு என்று அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா கவலை தெரிவித்துள்ளார்.

கடந்த 25-ம் தேதி காலை இமாலய மலைப்பகுதியில் இருக்கும் நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பேரழிவைச் சந்தித்துள்ளன. நேபாளத்தின் எல்லை நாடுகளிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,347 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை 7,500-க்கும் அதிகமாக உள்ளது. நேபாளத்துக்கு பல நாடுகள் உதவிக்கரம் அளித்து வருகிறது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக கூடாரங்கள் மற்றும் மருந்து பொருட்களை வழங்கி வெளிநாடுகள் உதவ வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா அழைப்பு விடுத்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த உருக்காமான பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "நிலநடுக்க பலி எண்ணிக்கை 10,000-ஐ எட்டும் அபாயம் உள்ளது. அரசுக்கு நிறைய கூடாரங்கள், மருத்துவ பொருட்களின் தேவை உள்ளது. எங்கள் மக்கள் மழையிலும் திறந்தவெளியிலும் உறங்குகின்றனர்.

7000-க்கும் அதிகமானோர் காயங்களுடன் உயிர் வாழ்கின்றனர். அவர்களுக்காக எங்களிடம் மருந்துகள் இல்லை. அவர்களுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்கான பணிகளும் எங்களுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. போர்க்கால அடிப்படையில் அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது" என்றார்.

கடந்த 1934-ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு 8,500 பேர் பலியாகினர். தற்போதைய நிலநடுக்க சூழல் அதனையும் தாண்டிய அபாயகரமான இறப்பு எண்ணிக்கையை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இமாலய மலைப் பகுதியில் ஏற்பட்ட மிக மோசமாக நிலநடுக்கமாக இந்த பேரிடர் பார்க்கப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Tue Apr 28, 2015 6:47 pm

நேபாள நிலநடுக்கம்: இந்தியாவின் மீட்பு பணிக்கு அமெரிக்கா பாராட்டு

நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த நேபாளம், போரால் சீரழிவுக்குள்ளான ஏமனில் இந்திய அரசு மேற்கொண்ட மீட்பு பணிகளை அமெரிக்கா வெகுவாக பாராட்டியுள்ளது.

புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்டு வெர்மா கூறியதாவது:-

“ சமீப காலங்களில் இந்தியா தனது உலகளாவிய தலைமைத்துவத்தை நிரூபித்துள்ளது. முதலில் ஏமனில் மீட்பு பணிகளில் சிறப்பாக ஈடுபட்ட இந்தியா தற்போது நேபாளிலும் செய்திருக்கிறது. இதற்காக நாங்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இந்தியாவின் மீட்பு பணிகளால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளோம். எங்களுடைய ஒத்துழைப்பு விரிவடைந்து வரும் காரணத்தால், இந்தியா சி-17 எஸ், மற்றும் சி-30 எஸ் ரக ஹெலிகாப்டர்களை மீட்பு பணிகளில் பயன்படுத்தி வருகிறது. நமது உறவுகள் வளர்ந்து வருவதால், நாம் மேலும் ஒன்றிணைந்து இன்னும் சிறப்பாக செய்ய முடியும்” என்று தெரிவித்தார். மேலும், நேபாளத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் 10 மில்லியன் டாலரை அமெரிக்கா வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவையொட்டி இமயமலை பகுதியில் அமைந்துள்ள இயற்கை எழில் மிகுந்த தேசமான நேபாளத்தை கடந்த சனிக்கிழமை அன்று கடுமையான பூகம்பம் தாக்கியது.இதில் தற்போது வரை 4350க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்தியா உடனடியாக அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டது. வீடுகளை இழந்து தவித்த மக்களுக்கு உடனடியாக நிவாரணப்பொருட்களையும் இந்தியா வழங்கியதால் உலக நாடுகளின் கவனத்தை இந்தியா பெற்றது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by ayyasamy ram on Tue Apr 28, 2015 7:12 pm

அரசு தரப்பில் தெரிவிக்கப்பட படி,
இறந்தவர்கள் எண்ணிக்கை 5000-ஐ தாண்டி விட்டது
-
6500 பேர் காயமடைந்துள்ளனர்
-
சாவு எண்ணிக்கை 10,000 க்கு இருக்கலாம் என
அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Tue Apr 28, 2015 10:28 pm

நேபாளத்திற்கு விரைகிறார்கள் குஜராத் சிறப்பு அதிகாரிகள்

நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு இந்திய மீட்பு குழுக்களும், பாதுகாப்பு ஏஜென்ஸிகளும் களத்தில் உள்ள நிலையில், குஜராத்திலிருந்து சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழு அங்குள்ள மீட்புக் குழுக்களை ஒன்றிணைக்க விரைகிறது.

இதற்கான உத்தரவு விரைவில் வெளியாக உள்ளது. நேபாளத்தில் சிக்கித் தவித்து வரும் குஜராத்திய மக்கள் மத்திய அரசின் தொடர் முயற்சியால் மீட்கப்பட்டு பாதுகாப்பாக வீடு திரும்பி வருகிறார்கள். இதுவரை, 550 பேர் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஹாம் ரேடியோ ஆபரேட்டர்கள் அடங்கிய 2 குழுக்களும் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Tue Apr 28, 2015 10:29 pm

நேபாளத்திற்கு ரூ.1 கோடி மதிப்புள்ள இன்சுலின் மருந்தை அனுப்புகிறது இந்தியா

நேபாள நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அந்நாட்டு பிரதமரும் தெரிவித்துள்ள நிலையில், அங்கு படுகாயமடைந்துள்ள நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் மருந்து கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதையடுத்து, மீட்பு பணியில் முழு உதவியை வழங்கி வரும் இந்தியா நேபாளத்திற்கு ரூ.1 கோடி மதிப்புள்ள இன்சுலின் மருந்தை அனுப்ப முடிவு செய்துள்ளது. அதன்படி, 75 ஆயிரம் குப்பிகளில் இன்சுலின் மருந்துகள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. சிறிய நாடான நேபாளத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமான சர்க்கரை நோயாளிகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Tue Apr 28, 2015 10:31 pm

“நான் இதுபோன்ற பூகம்பத்தை பார்த்தது கிடையாது, மிகவும் மோசமானது” மீட்கப்பட்ட இந்தியர் பேட்டி

“நான் இதுபோன்ற சக்திவாய்ந்த பூகம்பத்தை பார்த்தது கிடையாது, மிகவும் மோசமானது” என்று பேரழிவு பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர் தெரிவித்துஉள்ளார்.

பேரழிவு பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் இந்திய மீட்புக்குழுவினர் இடிபாடுகளில் சிக்கியிருக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து நிலஅதிர்வால் பாதிக்கப்பட்டு உள்ள நேபாளத்தில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்தியர்கள் மற்றும் விருப்பப்படும் வெளிநாட்டவர்கள் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இந்திய விமானப்படை இதுவரையில் 2,500-க்கும் அதிகமான இந்தியர்களை நேபாளத்தில் இருந்து மீட்டுஉள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது.

இந்தியா, நேபாளம், துருக்கி மற்றும் சீனாவின் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர் பேசுகையில், “நான் இதுபோன்ற பூகம்பத்தை பார்த்தது கிடையாது, மிகவும் மோசமானது” என்று கூறினார். நேபாளத்தில் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய பெண்அளித்த பேட்டியில், பேரழிவு பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு உள்ள நேபாளத்திற்கு இந்தியா தரப்பில் இருந்து பெரும் ஆதரவு கொடுக்கப்படுகிறது, அதிகமான உதவியை இந்தியா செய்து வருகிறது,” என்று தெரிவித்தார்.

நேபாளத்தில் மீட்கப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாபயணி ஒருவர் பேசுகையில், முழு இரவும் எங்களது மீது கற்கள் விழுந்து கிடந்தது, நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம். என்று தெரிவித்து உள்ளார். தொடர்ந்து இந்தியா தரப்பில் பாதிக்கப்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்திய வான்படை கமாண்டர் பேசுகையில், நாங்கள் நேபாளம் ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம், எங்களால் முடிந்த பணியினை சிறப்பாக செய்து வருகிறோம், நாங்கள் அதிகமான மக்களை மீட்க முயற்சி செய்து வருகிறோம். என்று தெரிவித்து உள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Tue Apr 28, 2015 10:33 pm

அதிபயங்கர நில நடுக்கத்தால் நேபாள தலைநகர் 3 மீட்டர் இடம் பெயர்ந்து உள்ளது அதிர்ச்சி தகவல்

கடந்த 25-ந்தேதி (சனிக்கிழமை) காட்மாண்டில் இருந்து 80 கிலோமீட்டர் தூரம் உள்ள லாம்ஜங் பகுதியை மையமாக கொண்டு 7. 9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. காட்மாண்டு, போக்ரா, கீர்த்திநகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இது பேரழிவை ஏற்படுத்தியது. வீடுகள், ஓட்டல்கள், கோவில்கள் என பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. இடிபாடுகளுக்குள் சிக்கி ஆயிரக்கணக்கானவர்கள் பாலியானார்கள். இதுவரை 4,310 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இடிபாடுகளுக்குள் இன்னும் ஏராளமான மனித உடலகள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் என கூறப்படுகிறது. 7953 பேர் காயம் அடைந்துள்ளனர்.

நில நடுக்கம் குறித்துஆரம்ப கட்ட ஆய்வில் இந்த பயங்கர பூகம்பத்தால் நேபாளத்தின் தலைநகர் தெற்கே 3 மீட்டர் (10 அடி) இடம்பெயர்ந்து உள்ளதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் புவியமைப்பு நிபுணர் ஜேம்ஸ் ஜாக்சன் கூறிஉள்ளார்.

காட்மாண்டு பள்ளதாக்கின் அடியில் உள்ள 150 கிலோமீட்டர் நீளம் உள்ள 50 கிலோமீட்டர் பரந்த தகடு நகர்ந்து உள்ளது. இந்த அதிபயங்கர நகர்வினால் உலக வரைபடத்தில் கூட மாற்றங்களை கொண்டுவர வேண்டிய அவசியம் இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by T.N.Balasubramanian on Wed Apr 29, 2015 4:23 pm

படிக்க படிக்க வேதனை அதிகம் ஆகிறது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21496
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Wed Apr 29, 2015 4:37 pm

நேபாள நில நடுக்கம்: மீட்பு பணிக்கு இந்தியா கூர்க்கா படையினரை அனுப்பியது

நேபாள நாட்டில் கடந்த 25-ந்தேதி காட்மாண்டில் இருந்து 80 கிலோமீட்டர் தூரம் உள்ள லாம்ஜங் பகுதியை மையமாக கொண்டு 7. 9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காட்மாண்டு, போக்ரா, கீர்த்திநகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இது பேரழிவை ஏற்படுத்தியது. இடிபாடுகளுக்குள் சிக்கி ஆயிரக்கணக்கானவர்கள் பலியானார்கள்.இன்று வரை 5 ,067 உடல்கள் மீடகபட்டு உள்ளன. தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இடிபாடுகளுக்குள் இன்னும் ஏராளமான மனித உடல்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு குழுவினர் இன்று கரடுமுரடான மலைபகுதிகளில் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இந்தியா மீட்பு பணிகளில் ஈடுபட நேபாளி கூர்க்கா படையினரை அனுப்பிவைத்து உள்ளது. மிகவும் பலமான கூர்க்கா படையில் 38 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் ஒரு பகுதியினர் அனுப்பப்பட்டு உள்ளனர்.

இந்திய விமானப்படை விமானம் நேபாளத்தின் லூக்லா பகுதியில் 19 மலையேற்ற வீரர்களை மீட்டது.மேலும் தரைபகுதியில் இருந்து 251 பேரை மீட்டு உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Wed Apr 29, 2015 4:38 pm

பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

இயற்கை எழில் மிக்க இமயமலை பகுதியில் உள்ள நேபாள நாட்டில் கடந்த 25-ந்தேதி காட்மாண்டில் இருந்து 80 கிலோமீட்டர் தூரம் உள்ள லாம்ஜங் பகுதியை மையமாக கொண்டு 7. 9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காட்மாண்டு, போக்ரா, கீர்த்திநகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இது பேரழிவை ஏற்படுத்தியது. வீடுகள், ஓட்டல்கள், கோவில்கள் என பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின.

இடிபாடுகளுக்குள் சிக்கி ஆயிரக்கணக்கானவர்கள் பலியானார்கள்.இன்று வரை 5 ,067 உடல்கள் மீடகபட்டு உள்ளன. தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இடிபாடுகளுக்குள் இன்னும் ஏராளமான மனித உடலகள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு குழுவினர் இன்று கரடுமுரடான மலைபகுதிகளில் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

சில கிராமங்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளன. அங்கு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் மலை ரோடுகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அங்கு மீட்பு குழுவினர் செல்வது சிரமமாக உள்ளது. இருந்தும் பிரதமர் கொய்ராலா ஹெலிகாபடர்கள் மூலம் அந்த பகுதிகளுக்கு மருத்துவ குழுக்களை அனுப்பி வைத்து உள்ளார்.அங்கு போர்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

பல இடங்களில் இடிபாடுகள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. இடிபாடுகளுக்குள் இன்னும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் சிக்கி கிடக்கின்றன.

பூகம்பம் ஏற்பட்டு 5 நாட்களாகியும் பிணங்கள் மீட்கப்படாததால் அவை அழுக தொடங்கி விட்டன. இதனால் தெருவெங்கும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

அதை தொடர்ந்து பிரதமர் கொய்ராலா நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். மீட்பு பணிக்கு அனைத்து கட்சியினரும் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடாரங்கள், தண்ணீர், உணவு போன்றவை தேவைப்படுகிறது. அது குறித்தும் அவர்களிடம் எடுத்துரைத்தார்.

உள்ளடங்கிய கிராம பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, சாவு எண்ணிக்கை 10 ஆயிரம் ஆக உயரும் அபாயம் உள்ளதாக பிரதமர் கொய்ராலா தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Tue May 05, 2015 12:52 am

நேபாளத்தில் இருந்து இந்தியா உள்பட 34 நாடுகளின் மீட்பு குழுக்கள் வெளியேற உத்தரவு

கடந்த 25–ந்தேதி நேபாள நாட்டில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் 1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள் இடிந்து விழுந்தன. இதையடுத்து உதவிக்காக இந்தியா, ஜப்பான், துருக்கி, உக்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட 34 நாடுகளின் மீட்பு குழுக்கள் நேபாளம் சென்றன. குறிப்பாக இந்தியாவில் இருந்து சென்ற தேசிய பேரிடர் மீட்பு படைகள்தான் பெரும் எண்ணிக்கையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்தன.

இந்த குழுக்கள் முழுவீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டன. இதையடுத்து இந்த குழுக்கள் பெரும் அளவில் நிவாரண பணிகளில் ஈடுபடுவதாக இருந்தது.

இந்த நிலையில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளின் மீட்பு குழுக்களையும் நாட்டை விட்டு வெளியேறும்படி நேபாள அரசு கேட்டுக்கொண்டது. இந்த தகவலை நேபாள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

நேபாளத்தில் இந்தியா மேற்கொண்ட உதவி நடவடிக்கைகளை இந்திய சமூக ஊடகங்கள் பெரிதாக புகழ்வது குறித்து நேபாள நாட்டவர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதைத்தொடர்ந்தே இந்த முடிவை நேபாள அரசு எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum