ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by M.Jagadeesan on Thu May 14, 2015 7:34 pm

திருவள்ளுவர் "புலால் மறுத்தல்" அதிகாரத்தில் குறிப்பிடும் அறக்கருத்துகள் ஆழ்ந்த ஆய்விற்குரியன. உணவு உண்ணுதல் என்பது சமூக வாழ்க்கையுடன் தொடர்புடையது. ஆண்டு முழுவதும் பனி உறைந்திருக்கும் துருவப் பகுதியில் வாழும் எஸ்கிமோவின் உணவில் மீன், இறைச்சி முதன்மையானது. இயற்கைச் சூழலுடன் மனிதர்கள் தங்கள் முன்னோரிடமிருந்தும் உணவு பற்றிய அறிவைப் பெற்றுள்ளனர். தமிழகக் கடற்கரையோரம் வாழ்கின்ற மீனவர்களின் தினசரி உணவில் மீன் அல்லது கருவாடு நிச்சயம் இடம்பெறும். கிறிஸ்துவ விவிலியம், உலகத்திலுள்ள பிற உயிரினங்களை மனிதனுக்காக இறைவன் படைத்தான் என்கிறது. இஸ்லாமியரின் குர்ஆன், ஹலால் ஓதிச் சொல்லப்பட்ட விலங்கின் உடலைச் சமைத்துச் சாப்பிடலாம் என்று குறிப்பிடுகின்றது. இந்நிலையில் உயிரினங்களைக் கொல்லக்கூடாது என்ற ஜைன, பௌத்த சமயக் கருத்துகளைப் பிற மதத்தினர் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. சங்க காலத்திலிருந்து இன்றுவரை இறைச்சியை உணவாகக் கொள்ளும் பெரும்பான்மைத் தமிழர்களும் திருவள்ளுவரின் புலால் மறுத்தல் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மாடன், இசக்கி, பாண்டி, முனி, காளி போன்ற பல்வேறு துடியான கிராமத்துத் தெய்வங்களுக்கு விலங்குகளைப் பலி கொடுத்துத்தான் வழிபாடு நடைபெறுகிறது. நாட்டார் தெய்வங்களும் குலதெய்வங்களும் நிரம்பிய தமிழரின் நடைமுறை வாழ்க்கையில் உயிர்ப்பலி கூடாது என்ற கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால் திருவள்ளுவர் உணவுக்காகப் பிற உயிரினங்களைக் கொல்லுகிறவர்களைப் "புலையர்" என்றும், அவ்வாறு கொல்லும்போது ஏற்படும் வெட்டினைப் "புண்" என்றும் இழிவுபடுத்துகின்றார். அறக்கருத்து என்ற பெயரில் ஜைன சமயக் கருத்தைத் தமிழர்கள் மீது திணிக்கும்போது, புலால் உண்பதற்காகப் "புலையர்" என்று திட்டுவது பொருத்தமன்று.
"புலால் மறுத்தல்" அதிகாரம் வலியுறுத்தும் அறக்கருத்துகளைப் பெரும்பான்மைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், எல்லாத் தமிழர்களுக்கும் ஏற்புடைய கருத்துகள் திருக்குறளில் உள்ளன என்பது முரண்பாடானது. இந்நிலையில், இறைச்சியையே தினசரி முதன்மை உணவாகக் கொண்டுள்ள ஐரோப்பிய, அமெரிக்க மக்களிடையே "இறைச்சி உண்ணக்கூடாது" என்று அறம் போதிப்பது நடைமுறை சாத்தியமற்றது.
மது குடிக்கக்கூடாது என்பதனை அறமாக வலியுறுத்தும் வள்ளுவரின் குரலும் விமர்சனத்திற்குரியது. மது குடித்தலுக்குப் பல்லாண்டுகளாக மக்கள் பழகியுள்ளனர். மேலும் தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்தும் மேலை நாடுகளில் "மது கூடாது" என்ற பேச்சுக்கே இடமில்லை. மது குடித்தலைக் குற்றமெனக் கற்பிக்கும் குறளின் அறக்கருத்து நவீன வாழ்க்கையுடன் முரண்படுகிறது.
புலால் உண்ணுதலையும், கள் குடித்தலையும் கடுமையாகக் கண்டிக்கும் திருக்குறளின் அறங்களை உலக மக்களுக்குப் பரிந்துரைக்க முடியுமா? என்பது முக்கியமான கேள்வி


மேல்கண்ட கருத்துக்களை திரு ந. முருகேச பாண்டியன் அவர்கள், " திருக்குறள் உலகப் பொதுமறையா ? " என்ற தமது கட்டுரையில் கேட்டுள்ளார்.
திருக்குறளை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், திருக்குறளை முழுவதும் படிக்கவேண்டும். திருக்குறளை பலமுறை படிக்கவேண்டும்; மீண்டும், மீண்டும் படிக்கவேண்டும். முதல் தடவை படிக்கும்போது தோன்றாத கருத்துக்கள், இரண்டாம் முறை படிக்கும்போது தோன்றும். இரண்டாம்முறை படிக்கும்போது தோன்றாத கருத்துக்கள் மூன்றாம்முறை படிக்கும்போது தோன்றும். ஒவ்வொருமுறை படிக்கும்போதும், புதிய கருத்துக்கள் ஊறிக்கொண்டே இருக்கும் அறிவுக்கேணி திருக்குறளாகும். " அறிதோறும் அறியாமை கண்டற்றால் " என்பது திருக்குறளுக்கே மிகவும் பொருந்தும்.

ஒரு குறளுக்குப் பொருள் கொள்ளுங்கால் , முதலில் அக்குறள் எந்த அதிகாரத்தின் கீழ் வந்துள்ளது; இரண்டாவதாக எந்த இயலில் வந்துள்ளது; மூன்றாவதாக எந்தப் பாலில் வந்துள்ளது ஆகிய பின்புலங்களை மனதில்கொண்டே பொருள் காணவேண்டும். " புலால் மறுத்தல் " என்ற நீதி துறவிகளுக்குச் சொல்லப்பட்டதாகும்; இல்லறத்தானுக்கு அல்ல. இல்லறத்தான் புலால் உண்ணலாம் என்றோ அல்லது உண்ணக்கூடாது என்றோ வள்ளுவர் சொல்லவில்லை. ஆனால் துறவிகள், அவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எப்படிப்பட்ட தட்ப வெப்ப நிலையில் வாழ்பவர்களாக இருந்தாலும் புலால் உண்ணக்கூடாது. ஆகவேதான் துறவிகளின் அடிப்படைத் தகுதிகளான அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை ஆகிய அதிகாரங்களை துறவறவியலில் வைத்தார். புலால் உண்ணும் நெஞ்சிலே அருள் எவ்வாறு சுரக்கும் ? ஆகவே புலால் மறுத்தல் என்னும் நெறி துறவிகளுக்குச் சொல்லப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

கொலையின் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். (செங்கோன்மை-550 )

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை. ( கொல்லாமை- 327 )

இவ்விரண்டு குறள்களும் கருத்தால் முரண்பட்டு நிற்பதுபோல் தோன்றும். ஆனால் முரண் நம்மிடம் உள்ளதேயன்றி , வள்ளுவரிடம் அல்ல. முன்னது நாடாளும் வேந்தனுக்குச் சொல்லப்பட்ட நீதி; பின்னது பற்ற்ற துறவிக்குச் சொல்லப்பட்ட நீதி. எனவே ஒவ்வொரு குறளையும், அதன் பின்புலத்தை மனதில்கொண்டே ஆராயவேண்டும்.

திருக்குறள் உலகப்பொதுமறை என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. திருக்குறளை எழுத்தெண்ணிப் படிப்பார்க்கு இவ்வுண்மை தெற்றென விளங்கும்.
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by M.Jagadeesan on Fri May 15, 2015 8:13 am

ஒட்டாமையும் , ஒட்டுதலும்
====================


யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். ( துறவு- 341 )

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை. ( வான்சிறப்பு-12 )


இவ்விரண்டு குறட்பாக்களுக்கும் தனிச் சிறப்பு உள்ளது.

முதல் குறட்பாவைப் படிக்கும்போது சீருக்குசீர் உதடுகள் ஒட்டாது; ஆனால் இரண்டாவது குறட்பாவைப் படிக்கும்போது சீருக்குசீர் உதடுகள் ஒட்டும்.

துறவு என்று வந்துவிட்டால் , எப்பொருளிடத்தும் ஓட்டோ உறவோ இருக்கக்கூடாது என்ற கருத்தில் உதடுகள் ஒட்டாத முதல் குறளை வள்ளுவர் அமைத்தாரோ ?

வான்சிறப்பு மழையைக் குறிப்பதாகும். பூமிக்கும், மழைக்கும் எப்போதும் உறவு இருந்துகொண்டே இருக்கவேண்டும். இல்லையெனில் நாட்டில் பசியும், பஞ்சமும் தாண்டவமாடும். பூமியும், மழையும் பிரியாது இருக்கவேண்டும் என்ற கருத்தில் சீருக்கு சீர்  உதடுகள் ஒட்டும் இரண்டாவது குறளை அமைத்தாரோ ?

வள்ளுவர் அறிந்து செய்தாரோ ! அன்றி அறியாமல் செய்தாரோ ! நமக்குத் தெரியாது. ஆனால் இவ்விரண்டு குறட்பாக்களிலும் அமைந்துள்ள இந்த அழகை ரசிப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by சதாசிவம் on Fri May 15, 2015 3:13 pm

அழகான விளக்கங்கள், தொடருங்கள் உங்களின் திருக்குறள் தகவல்களை....
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by M.Jagadeesan on Fri May 15, 2015 6:42 pm

மழலை இன்பம்
===============

இழுக்க இழுக்க விரியும் பரோட்டா மாவுபோல , சில குறட்பாக்களின் பொருளை நாம் விரித்துக் கொண்டே  செல்லலாம்.

அத்தகைய குறட்பாக்களில் இதுவும் ஒன்று.

குழலினிது  யாழினிது என்பதம்  மக்கள்
மழலைச்  சொல்கேளா  தவர். ( மக்கட்பேறு-66 )

பொதுவாக இக்குறளுக்கு

தம்முடைய  மக்களின் மழலைச் சொல்லைக் கேளாதவர்கள் , குழலிசையும், யாழிசையும் இனிமையாக இருக்கின்றன என்று சொல்வார்கள்.

என்பதுதான் பெரும்பாலான ஆசிரியர்களின் உரையாகும்.

" நாமிருவர் நமக்கிருவர் " என்ற குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தை திருவள்ளுவர் காலத்திலேயே  மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்  என்று எண்ணத் தோன்றுகிறது. இன்ப வாழ்க்கைக்கு இரு குழந்தைகள் போதும் என்ற கருத்துப்பட  குழலையும், யாழையும்  குறிப்பிட்டார். அதுவும் ஆண் ஒன்று , பெண் ஒன்று இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் கண்ணன் கையிலே இருக்கின்ற குழலையும், சரஸ்வதியின் கையிலே இருக்கின்ற யாழையும் குறிப்பிட்டாரோ என்று எண்ணவும் தோன்றுகிறது.

இது திருக்குறள் அவதானி இராமையா அவர்களின் கருத்தாகும்.
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by M.Jagadeesan on Sat May 16, 2015 8:31 am

மூவர் யார்?
============
வள்ளுவர் எண்களைப் பயன்படுத்தி பல குறட்பாக்களை எழுதியுள்ளார். அவ்வாறு எழுதியுள்ள குறட்பாக்கள் சில வற்றில், அந்த எண்கள் எவற்றைக் குறிப்பிடுகின்றன என்று தெளிவாகக் காட்டுவார். சில குறட்பாக்களில் அவ்வாறு குறிப்பிடாமல் , நம்முடைய ஊகத்திற்கே விட்டுவிடுவார். உதாரணமாக,

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். ( அறன் வலியுறுத்தல்-35 )

தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்.( வான்சிறப்பு-19 )

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.( நீத்தர்பெருமை-27 )

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.( மெய்யுணர்தல் -360 )

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. ( இறைமாட்சி- 381 )

மேலே காட்டிய குறட்பாக்களில் இரண்டு, மூன்று, நான்கு , ஐந்து, ஆறு ஆகிய எண்களைப் பயன்படுத்திய வள்ளுவர் , அந்த எண்கள் எவற்றைக் குறிப்பிடுகின்றன என்பதையும் தெளிவாகக் காட்டியுள்ளார். ஆனால் சில குறட்பாக்களில் எண்களை மட்டும் கூறிவிட்டு, அந்த எண்கள் எதைக் குறிப்பிடுகின்றன என்பதைக் கூறாது விட்டுவிடுவார். நம்முடைய ஊகத்திற்கே விட்டுவிடுவார்.

உதாரணமாக,

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. (கடவுள் வாழ்த்து-9 )

இக்குறளில் , " எண்குணத்தான் " என்று கூறிய வள்ளுவர் இறைவனின் எட்டு குணங்களைக் கூறாது விடுத்தார்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.( மருந்து- 942 )

இக்குறளில் நோய்செய்யும் மூன்று எது என்பதைக் கூறாது விடுத்தார்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. ( இல்வாழ்க்கை-41 )

இக்குறளில் இயல்புடைய மூவர் யார் என்பதைக் கூறாது விடுத்தார். " எண்குணத்தான் ", " நோய்செய்யும் மூன்று " ஆகிய சொற்களுக்கு உரை எழுதுங்கால் உரை ஆசிரியர்களுக்கிடையே கருத்து மாறுபாடு எதுவும் இல்லை. ஆனால் , " இயல்புடைய மூவர் " யார் என்பதில் உரை ஆசிரியர்களுக்கிடையே கருத்து மாறுபாடு நிலவுகிறது.

குடும்பத் தலைவன் என்பவன் தாய், தந்தை , தாரம் ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று சில உரை ஆசிரியர்கள் பொருள் கூறுவார். இன்னும் சிலர், குடும்பத் தலைவன் என்பவன், பிரம்மச்சாரி , வானப்பிரத்தன், சந்நியாசி ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று பொருள் கூறுவார். இன்னும் சிலரோ, குடும்பத் தலைவன் என்பவன் , தாய், தந்தை, குழந்தை ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று பொருள் கொள்வர்.

ஆக இயல்புடைய மூவர் என்னும் சொல் யாரைக் குறிக்கிறது என்பதை நூலைப் படிப்பவர் ஊகத்திற்கே வள்ளுவர் விட்டுவிடுகின்றார்.

வானப்பிரத்தன்- மனைவியுடன் காட்டிற்குச் சென்று தவம் இருப்பவன்.
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat May 16, 2015 10:12 am

மிகவும் நன்றி ஜெகதீசன் .....தொடருங்கள் :வணக்கம்: மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5303
மதிப்பீடுகள் : 1840

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by M.Jagadeesan on Sun May 17, 2015 11:40 am

எச்சம் என்பது என்ன?
================
தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் கணப் படும்.

நடுவுநிலைமை என்ற அதிகாரத்தில் வந்துள்ள நான்காம் குறள் இது. இக்குறளில் வந்துள்ள " எச்சம் " என்ற சொல் பரந்த பொருளைக் கொண்டது. எச்சம் என்ற சொல்லுக்கு, மிச்சம்,பறவை மலம்,மக்கள்,குறைவு,செல்வம், முன்னோர் வைப்பு , புகழ், ஒரு வாசனைப் பண்டம் என்று பல பொருள் உண்டு. இதில் இக்குறளில் வந்துள்ள " எச்சம் " என்ற சொல் எதைக் குறிக்கிறது ? அதிகாரத் தலைப்பை வைத்துப் பார்த்தால் பறவைமலம்,குறைவு, செல்வம், முன்னோர் வைப்பு, வாசனைப் பண்டம் ஆகிய பொருள் எச்சம் என்ற சொல்லுக்கு ஒத்துவரவில்லை என்றே தோன்றுகிறது. அப்படியானால் எச்சம் என்ற சொல் மக்களைக் குறிக்கிறதா? அல்லது மிச்சத்தைக் குறிக்கிறதா? அல்லது புகழைக் குறிக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.

ஒருவர் நடுநிலைமை உள்ளவர் அல்லது இல்லாதவர் என்பதை அவருக்குக் குழந்தை பிறப்பதையும் அல்லது பிறக்காமல் இருப்பதையும் வைத்துத் தெரிந்து கொள்ளலாம். அதாவது நடுநிலை உள்ளவர்களுக்குக் குழந்தை பிறக்கும், நடுநிலை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்காது என்று ஒரு சாரார் பொருள் கூறுவர். குழந்தைப் பிறப்பு என்பது ஒருவருடைய வினைப்பயன். நல்வினையாளருக்குக் குழந்தை பிறக்கும்; தீ வினையாளருக்குக் குழந்தை பிறக்காது என்பது அவர்தம் கருத்து.

குழந்தைகளின் குணத்தைக் கொண்டே தாய் தந்தையர் எப்படிப்பட்டவர் என்பதைக் கூறிவிடலாம். " தாயைப்போலப் பிள்ளை;நூலைப்போல சேலை " என்பது சான்றோர் வாக்கு. எனவே இக்குறளில் வந்துள்ள " எச்சம் " என்ற சொல்லுக்கு , " மக்கள் " என்பது பொருள் என்று ஒரு சிலர் கூறுவர்.

ஒருவன் விட்டுச்சென்ற மிச்சத்தை வைத்து அவன் எப்படிப் பட்டவன் என்பதைக் கூறிவிடலாம். ராஜராஜ சோழன் விட்டுச்சென்ற மிச்சம் தஞ்சைப் பெரியகோவில். அவன் கட்டிடக் கலையில் ஆர்வம் கொண்டவன் என்றும், சிறந்த சிவபக்தன் என்பதையும் அக்கோவில் நமக்குச் சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறது. ஷாஜஹான் விட்டுச்சென்ற மிச்சம் தாஜ்மஹால் ஆகும். அவன் தன் அருமை மனைவி மும்தாஜ்ஜின் மீது கொண்ட காதலை அக்கட்டிடம் நமக்குச் சொல்லிக்கொண்டு இருக்கிறது. வள்ளுவர் விட்டுச்சென்ற மிச்சம் திருக்குறள் ஆகும்.அது அவர் ஒரு அறிஞர் என்பதையும், உலகத்து சான்றோர் வரிசையில் முதன்மையாக வைத்து எண்ணத் தக்கவர் என்பதையும் நமக்குச் சொல்கிறது. எனவே " எச்சம் " என்ற சொல்லுக்கு , " மிச்சம் " என்பதே தக்க பொருள் என்று ஒரு சிலர் வாதிடுவர்.

இறுதியாக ," எச்சம் " என்ற சொல்லுக்குப் " புகழ் " என்ற ஒரு பொருளும் உண்டு. பூத உடல் அழிந்தாலும் புகழ் உடம்பு அழியாது. செயற்கரிய செயல்களைச் செய்தால் மட்டுமே ஒருவன் புகழைப் பெறமுடியும். ஒருவன் நல்லவனா அல்லது தீயவனா என்பதை அவனுக்குப்பின் எஞ்சியிருக்கின்ற புகழை வைத்துச் சொல்லிவிடலாம். வள்ளுவரும், " எச்சம் " என்ற சொல்லிற்குப், " புகழ் " என்றே பொருள் கொள்கிறார்.

வசையென்ப வையத்தார்க்கு எல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின். ( புகழ்-238 )


இசை- புகழ்

எனவே, " எச்சம் " என்ற சொல்லிற்குப், " புகழ் " என்று பொருள் கொள்வதே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun May 17, 2015 7:56 pm

அருமை ஜெகதீசன் அவர்களே மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5303
மதிப்பீடுகள் : 1840

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by M.Jagadeesan on Sun May 17, 2015 9:08 pm

தங்கள் பாராட்டுக்கு நன்றி தயாளன் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by சிவா on Sun May 17, 2015 11:53 pm

படித்து பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டிய அறிவுப் பெட்டகமாகத் திகழ்கிறது தங்களின் பதிவுகள்! தொடர்ந்து தாருங்கள்!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by M.Jagadeesan on Tue May 19, 2015 5:51 pm

முரண்பாடா?
==========
தமிழாசிரியர் திருக்குறள் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். " உழவு " என்ற அதிகாரத்தில் உள்ள பத்துக் குறட்பாக்களையும் நடத்தி முடித்துவிட்டு மாணவர்களிடம், " ஏதேனும் ஐயம் இருப்பின் கேளுங்கள் " என்றார். அப்பொழுது ஒரு மாணவன் எழுந்து, " ஐயா! இரண்டு குறட்பாக்களில் முரண்பாடு இருப்பது போலத் தோன்றுகிறது." என்றான்.

உடனே ஆசிரியர் ," எந்தெந்த குறட்பாக்களில் முரண்பாடு உள்ளது? " என்று கேட்டார். அதற்கு மாணவன்,

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

இந்த குறட்பாக்களில் முதல் குறட்பாவில் நன்றாக உழுதால், நிலத்திற்கு உரம் இடத் தேவையில்லை என்று சொல்கிறார்; ஆனால் இரண்டாம் குறட்பாவில் உரம் இடவேண்டும் என்று சொல்கிறார் ; ஏன் இந்த முரண்பாடு? " என்று கேட்டான்.

ஆசிரியர் சிரித்துக் கொண்டே ," நல்ல கேள்வி, காரணம் சொல்கிறேன், முதல் குறள் புன்செய் நிலத்தில் பயிர் செய்யும் முறையைக் குறிப்பது. ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகுமாறு உழுதுவிட்டு , மழை பெய்தவுடன் புன்செய்த் தானியங்கள், பயறு வகைகளை விதைத்து விட்டால் மேல் உரத்தையோ, பாய்ச்சு நீரையோ எதிர்பாராமல் வானத்தை, அதாவது மழையைப் பார்த்தே புன்செய்ப் பயிர்கள் விளைந்துவிடும்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

இந்தக் குறள் நன்செய் நிலத்தில் பயிர் செய்யும் முறையைக் குறிப்பது. உழுதல்,எருவிடுதல்,களையெடுத்தல்,நீர்பாய்ச்சுதல், காவல் காத்தல் என்பது போன்ற எல்லா வேலைகளையும் பார்த்தால்தான் நன்செய் நிலத்தில் பலன் காணமுடியும். இப்போது புரிகிறதா? முரண்பாடு உன்னிடம்தான் உள்ளது; வள்ளுவரிடம் இல்லை."

" மிக்க நன்றி ஐயா! தெளிவாகப் புரிந்து கொண்டேன். இன்னும் சில குறட்பாக்களில் முரண்பாடு உள்ளதுபோல எனக்குத் தோன்றுகிறது. அவற்றைக் கேட்கலாமா ஐயா?"

" நாளைக்குப் பார்க்கலாம் " என்று ஆசிரியர் சொன்னார்.
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by M.Jagadeesan on Wed May 20, 2015 11:27 am

இடுக்கண் வருங்கால் நகுக.
====================
அது தமிழ்ப் பாடவேளை.புதிய தமிழாசிரியரின் வரவுக்காக மாணவர்கள் காத்திருந்தனர். நெடுநெடுவென்று வளர்ந்த , ஒடிசலான உருவம் கொண்ட , சுமார் 25 வயது மதிக்கத் தக்க வாலிபர் ஒருவர் , வகுப்பறையினுள் நுழைந்தார். அவரைப் பார்த்தவுடன் மாணவர்கள் அனைவரும், " ஓ " வென்று கூச்சலிட்டனர்.

ஒரு மாணவன் அவர் காதுபடவே, " டேய் ! ஒட்டடைக் குச்சிடா ! " என்று கத்தினான். சில மாணவர்கள் அவரைப் பார்த்து ஊளையிட்டனர். இன்னும் சில மாணவர்கள் , காகிதத்தை மடித்து அம்புபோலச் செய்து அவர்மீது ஏவினர். அந்தக் காகித அம்புகள் ஆசிரியர் முகத்தை வேகமாக வந்து தாக்கின. சில போக்கிரி மாணவர்கள் பெஞ்சின்மீது ஏறிநின்று நாட்டியமாடினர். இவ்வளவு அமளியையும் கண்ட அந்தப் புதிய ஆசிரியர் , சற்றும் அலட்டிக் கொள்ளாமல் , புன்னகை பூத்தவாறு நின்றுகொண்டிருந்தார்.

பத்து நிமிடம் சென்றபின்பு மாணவர்கள் அனைவரும் அமைதியாயினர்.

ஒரு மாணவன் அவரைப் பார்த்து," சார் ! உங்களுக்குக் கோபம் வரலையா ? சிரித்துக் கொண்டே இருக்கீங்களே? " என்று கேட்டான்.

' எனக்குக் கோபம் வராது; ஏனென்றால் நான் தமிழ் படித்தவன். "

" தமிழ் படித்தால் கோபம் வராதா சார் ? "

" அப்படியில்லை ; நான் அய்யன் திருவள்ளுவர் சொற்படி நடப்பவன்; அதனால் நான் எதற்கும் கோபம் கொள்வதில்லை. "

" அப்படி அவரு என்ன சார் சொல்லி இருக்காரு திருக்குறள்ல? "

' இடுக்கண் வருங்கால் நகுக. " என்று சொல்லியிருப்பதை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? அதன்படி எனக்குத் துன்பம் வரும்போதெல்லாம் நான் சிரிப்பது வழக்கம். "

" அதெப்படி சார் முடியும்? கஷ்டம் வரும்போது எப்படி சார் சிரிக்க முடியும்? "

உடனே மற்றொரு மாணவன் எழுந்து ,

துன்பம் வரும்போது
கொஞ்சம் சிரிங்க - என்று
சொல்லி வச்சார்
வள்ளுவரு சரிங்க!

பாம்பு வந்து கடிக்கையில்
பாழும் உடல் துடிக்கையில்
யார் முகத்தில்
பொங்கிவரும் சிரிப்பு ?

என்ற சினிமாப் பாடலுக்கு உங்க பதில் என்ன சார்? என்று கேட்டான்.

" நல்ல கேள்வி! துன்பம் இரண்டு வகைப்படும். உடல் படும் துன்பம்; மனம் படுகின்ற துன்பம். பாம்பு கடிக்கும்போது உடல் துன்பமடைகிறது. வள்ளுவர் " நகும் " என்ற சொல்லைப் பல இடங்களில் பயன்படுத்துகிறார். இடத்திற்குத் தகுந்தவாறு நாம் பொருள் கொள்ளவேண்டும்.

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும். ( உழவு-1040 )

தங்களுக்கு வாழ்க்கையில்லை என்று சோம்பி இருப்பவரைக் கண்டு நிலமாகிய நல்லபெண் பரிகசித்துச் சிரிப்பாள் என்பது இக்குறளின் பொருளாகும். இக்குறளில் " நகும் " என்ற சொல் " எள்ளலின் அடிப்படையில் பிறந்த சிரிப்பு " என்னும் பொருள்படும்.

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும். ( குறிப்பறிதல்- 1094 )

இக்குறளில் " நகும் " என்ற சொல் , நாணத்தின் அடிப்படையில் பிறந்த சிரிப்பு என்னும் பொருள்படும்.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (நட்பு- 784 )

இன்ப விளையாட்டுக்கு மாத்திரம் நட்பு அல்ல.தீய செயலைச் செய்ய நண்பன் முற்படும்போது அதைத் தடுத்து நிறுத்துவதும் நட்பிற்கு அழகாகும்.

இக்குறளில் " நகுதல் " என்ற சொல் இன்ப நுகர்ச்சியின் அடிப்படையில் பிறந்த சிரிப்பு " என்னும் பொருள்படும்.

சரி! இப்பொழுது பாடத்துக்கு வருவோம். " இடுக்கண் வருங்கால் நகுக " என்ற குறளில் வந்துள்ள " நகுக " என்றசொல் துணிவின் அடிப்படையில் பிறந்த சிரிப்பு என்னும் பொருள்படும்.

பாம்பு கடித்து இறப்போரைக் காட்டிலும், பாம்பு கடித்துவிட்டதே என்ற பயத்தில் இறப்பவர்களே அதிகம். இது உளவியல் உண்மையாகும். ஒரு காட்டின் வழியாக சில நண்பர்கள் செல்வதாக வைத்துக் கொள்வோம். அப்போது ஒருவனைப் பாம்பு கடித்துவிட்டது. உடனே மற்றவர்கள் அவனை நோக்கி ," அய்யய்யோ! உன்னைப் பாம்பு கடித்து விட்டதே! " என்று பதறுகிறார்கள்.

ஆனால் பாம்பால் கடிபட்டவனோ, " அஹ்ஹாஹ்ஹா என்று சிரித்துவிட்டு , பதட்டப் படாதிர்கள்! எனக்கு ஒன்றும் ஆகாது; சீக்கிரம் ஒரு கயிறு கொண்டு வாருங்கள் "என்று கேட்கிறான்.

உடனே ஒருவன் தன் வேட்டியைக் கிழித்து கயிறுபோல ஆக்கி அவனிடம் கொடுக்கிறான்.

" பாம்பு கடித்த கடிவாய்க்கு சற்றுமேலே இறுகக் கட்டுங்கள் " என்று அவன் சொல்ல மற்றவர்கள் அவ்வாறே செய்கின்றனர்.

" சீக்கிரம் என்னை மருத்துமனைக்கு தூக்கிச் செல்லுங்கள்!" என்று கேட்க , நண்பர்கள் அவனை மருத்துவ மனையில் சேர்த்து அவனைக் காப்பாற்றி விடுகின்றனர். பாம்பால் கடிபட்டவன் பயம் கொள்ளாது, துணிவுடன் சிரித்தானல்லவா ! அந்தச் சிரிப்பைத்தான் வள்ளுவர்," இடுக்கண் வருங்கால் நகுக " என்று வேண்டுகிறார்.

உடனே மற்றொரு மாணவன் எழுந்து," சார் ! நான் ஒரு கேள்வி கேட்கலாமா ? "

" சரி கேள் ! "

அந்தணர் ஒருவர் ஆற்றிலே குளிக்கச் சென்றார். குளிக்கும் முன்பாகக் காதிலே இருந்த கடுக்கண்களைக் கழற்றி கரையிலே வைத்துவிட்டுக் குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியே வந்த திருடன் ஒருவன் அக் கடுக்கண்களைக் களவாடிக் கொண்டு ஓடினான். அதைக் கண்ட அந்தணர் " திருடன்! திருடன்! " என்று கத்தினார். உடனே பொதுமக்கள் சிலர் அவனைப் பிடித்து அரசனிடம் ஒப்படைத்தனர். அரசனும் அவனுக்கு சிறைத் தண்டனை விதித்து சிறையில் அடைத்தான். இப்பொழுது அந்தத் திருடனுக்கு இடுக்கண் வந்துவிட்டது. இந்த நேரத்தில் அவனால் எப்படி சிரிக்க முடியும்? அப்படி சிரித்தால் துன்பம் போய்விடுமா என்ன ?"

உடனே ஆசிரியர் , " இதுவும் நல்ல கேள்விதான் ! பாம்பு கடித்து வந்த இடுக்கண் தானாக வந்தது; கடுக்கண் திருடியதால் திருடனுக்கு வந்த இடுக்கண் அவனாகத் தேடிக்கொண்டது. தானாக வந்த துன்பத்திற்குத் தீர்வு உண்டு. நாமாகத் தேடிச்செல்லும் துன்பத்திற்குத் தீர்வு இல்லை. தண்டனையை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். எனவேதான் வள்ளுவரும், " இடுக்கண் வருங்கால் நகுக " என்று கூறினார். தானாக வருகின்ற துன்பத்தைத் துணிவோடு எதிர்கொண்டு சிரித்தால் , அத்துன்பம் பகலவனைக் கண்ட பனிபோல மறைந்துவிடும் என்று அறிவுறுத்தவே " இடுக்கண் வருங்கால் நகுக " என்று கூறினார். இனிக் குறளைப் பார்ப்போம்.

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்.

பொருள் : துன்பம் வரும்போது துணிவுடன் புன்னகையோடு அதை எதிர்கொள்ளவேண்டும். அத்துன்பத்தைக் கடப்பதற்கு இதைவிடச் சிறந்த வழி ஏதும் இல்லை.

துன்பம் வரும்போது சிரித்தல் என்பது முதல் தீர்வேயன்றி , முற்றிலும் முடிந்த தீர்வாகாது. பாம்பு கடித்தபோது , பதட்டப்படாமல் , கடிவாய்க்கு மேலே கட்டுப்போட்ட செயல் முதல் தீர்வு. பிறகு அவனை மருத்துமனைக்குத் தூக்கிச் சென்று , முறையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து காப்பாற்றிய செயல் முடிந்த தீர்வாகும்.

பாடவேளை முடிந்து மணி அடிக்கவே , மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று , " நன்றி ஐயா!" என்று ஆசிரியருக்கு வணக்கம் கூறினார்.
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by M.Jagadeesan on Fri May 22, 2015 8:14 am

எது சரி ?
======
தினற்பொருட்டாற் கொல்லாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டாற் ஊன்தருவார் இல். ( புலால்மறுத்தல் -256 )

இதன் பொருள் :

தின்பது காரணமாக உலக மக்கள் கொல்லவில்லை யானால் , பொருள் காரணமாக ஊனை விற்பவர் எவரும் இல்லை என்பது பரிமேலழகர் கருத்து. மகாவித்துவான் மு. அருணாசலக் கவிராயர் அவர்களும், பேராசிரியர் கா. சு. பிள்ளை அவர்களும், பிறரும் தாங்கள் பதிப்பித்த பதிப்புகளில் இவ்வுரையை அப்படியே பொழிப்புரையாக்கிப் பதிப்பித்திருக்கிறார்கள்.

மூலத்திற்கும் உரைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா ? என்பதைத் தயவு செய்து அமைதியாக இருந்து எண்ணிப் பார்ப்பது நல்லது.

" தின்பதற்காக " என்று உலகமக்கள் கொல்லாதிருந்தால் என மூலத்தில் இருக்கும்போது பரிமேலழகரும், பிறரும் உலக மக்கள் வாங்காதிருந்தால் என்று கருதும்படி உரை எழுதுவானேன் என்பது நமது ஐயப்பாடு.

குறளுக்கு உள்ள நேரான உரை பின்வருமாறு:

தின்பதற்காக என்று உலக மக்கள் கொல்லுவதில்லை யானால் , விலை பெற்று ஊன் தருபவர் எவரும் இருக்க மாட்டார்கள் என்பதே.

இவ்வுரை நேரானதே எனினும் கருத்தில் பெரும்பிழை காணப்படுவதைக் காணுங்கள். அதாவது தின்பதற்காகக் கொல்லுகிற எவனும் வேறு எவனுக்கும் விலை கொடுக்க வேண்டியிராது. அவனே கொன்று தின்பான். கொன்று தின்பவனிடம் சும்மாயிருப்பவன் விலை கேட்க முடியாது. கொடுப்பதற்கு அவனிடம் ஊனும் இராது. ஆகவே இவ்வுரையும், குறளும் குழப்பத்தை விளைவிக்கின்றன. ஆகவே உண்மைதான் என்ன என ஆராய வேண்டியிருக்கிறது.

முதன்முதலில் ஏடு எழுதியவரோ , அச்சுக் கோப்பவரோ, பதிப்பித்தவரோ செய்த சிறு பிழையே இக்குழப்பதிற்கெல்லாம் காரணமாயிற்று. " கொல்லா " என்பது தவறு. " கொள்ளா " என்பதே சரியான பாடம் ஆகும்.இப்போது கொல்லா என்பதைக் கொள்ளா எனத் திருத்தி மூலத்தைப் படித்துப் பாருங்கள். இக்குழப்பங்கள் அனைத்தும் ஒழிந்து வெளிப்படையாகப் பொருளைக் காணலாம்.

' தின்பதற்காக வாங்குபவர்கள் இல்லையானால் பொருளுக்காகக் கொன்று விற்பவர் எவரும் இரார் " என்பதே வள்ளுவரின் குறளும் , அவரது கருத்துமாகும். ' கொல்லுவதுதான் பாவம், கொன்றதைத் தின்பது பாவமில்லை " என்பாரது கூற்றையும் வள்ளுவர் இக்குறளின் மூலம் மறுத்திருப்பதைக் கண்டும் மகிழலாம்.

தினற்பொருட்டாற் கொள்ளாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டாற் ஊன்தருவார் இல்.

என்பதே சரி.


நன்றி : திருக்குறளில் எழுத்துப்பிழை பற்றிய ஆய்வு - முத்தமிழ்க் காவலர் டாக்டர் கி.ஆ. பெ. விசுவநாதம் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by M.Jagadeesan on Sat May 23, 2015 8:00 am

திருவள்ளுவர் காட்டும் எண்கள்
=======================
திருவள்ளுவர் ஒன்றிலிருந்து கோடி வரையில் எண்களைப் பயன்படுத்தியுள்ளார்.ஆனால் ஒன்பது என்ற எண்ணை மட்டும் அவர் பயன்படுத்தவில்லை.என்ன காரணம் என்று தெரியவில்லை.

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோ ராறு. (932)

இக்குறளில் மட்டும்தான் " நூறு" வருகிறது. " ஒன்று" என்ற எண்ணும் வருகிறது. மொத்தம் 47 குறட்பாக்களில் "ஒன்று" வருகிறது.

தானம் தவம்இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.(19)

இதுபோல் 13 குறட்பாக்களில் "இரண்டு" வருகிறது.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.(941)

இதுபோல் 8 குறட்பாக்களில் "மூன்று" வருகிறது.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.(35)

இதுபோல் 11 குறட்பாக்களில் "நான்கு' வருகிறது.

ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.(25)

இதுபோல் 12 குறட்பாக்களில் "ஐந்து" வருகிறது.

படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.(381)

இரண்டு குறட்பாக்களில் "ஆறு" வருகிறது.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.(107)

இதுபோல் 8 குறட்பாக்களில் "ஏழு" வருகிறது.

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.(9)

இந்த ஒரே குறளில்தான் "எட்டு" வருகிறது.

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.(450)

இந்த ஒரே குறளில்தான் "பத்து" வருகிறது.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.(259)

இந்த ஒரே குறளில்தான் "ஆயிரம்" வருகிறது.

ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப*
கோடியும் அல்ல பல.(337)

இதுபோல 4 குறட்பாக்களில் "கோடி" வருகிறது.

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி யுறும்.(817)

இந்த ஒரு குறளில்தான் "பத்துக்கோடி" வருகிறது.

பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி யுறும்.(639)

இந்த ஒரு குறளில்தான் "எழுபதுகோடி" வருகிறது.

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.(954)

இதுபோல் இரண்டு குறட்பாக்களில் "அடுக்கியகோடி' வருகிறது.

இத்தனை எண்களையும் பயன்படுத்திய வள்ளுவர் "ஒன்பது' என்ற எண்ணை மட்டும் பயன்படுத்தாமல் விட்ட காரணம் தெரியவில்லை. "ஒன்பது" என்ற சொல் மிகவும் பிற்காலத்தது என்று சிலர் சொல்லுகின்றனர். பண்டைக்காலத்தில் "தொண்டு" என்ற சொல் சங்க இலக்கியங்களிலும், தொல்காப்பியத்திலும் இடம்பெற்றுள்ளது.இது "ஒன்பது" என்ற எண்ணைக் குறிப்பதாகக் கருதுவர்.
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by M.Jagadeesan on Mon May 25, 2015 10:36 am

குறளுக்கு வேறு பெயர்கள்திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள்.
==============================
1 .அறம்
2 .இரண்டு
3 .உத்தரவேதம்
4 .எழுதுண்ட மறை
5 .ஒன்றே முக்காலடி
6 .ஒத்து
7 .கட்டுரை
8 .குறளமுது
9 .தமிழ் மறை
10 .திருக்குறள்
11 .திருமறை
12 .திருவள்ளுவப்பயன்
13 .திவள்ளுவர்
14 .திருவள்ளுவன் வாக்கு
15 .திருவறம்
16 .தெய்வ நூல்
17 .பழமொழி
18 .பால்முறை
19 .பொதுமறை
20 .பொய்யாமொழி
21 .பொருளுரை
22 .முதுமொழி
23 .முப்பால்
24 .மெய்ஞான முப்பால் நூல்
25 .வள்ளுவ தேவர் வாய்மை
26 .வள்ளுவம்
27 .வள்ளுவ மாலை
28 .வள்ளுவர்
29 .வள்ளுவர் வாய்ச்சொல்
30 .வள்ளுவர் வாய்மொழி
31 .வள்ளுவனார் வாக்கு
32 .வள்ளுவனார் வைப்பு
33 .வாயுறை வாழ்த்து
34 .வான் மறை

நன்றி: டாக்டர். கு. மோகன ராசுவின் " திருக்குறள் மரபுகள்."
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by Preethika Chandrakumar on Mon May 25, 2015 8:01 pm

பொன்னான பொக்கிஷ தகவல்கள்.
மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்!!!
avatar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 541
மதிப்பீடுகள் : 126

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by M.Jagadeesan on Tue May 26, 2015 7:43 am

நன்றி !ப்ரீதிகா சந்திரகுமார் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by M.Jagadeesan on Tue May 26, 2015 4:50 pm

சுற்றும் உலகு
===============
அந்தப் பள்ளியில் ஆண்டாய்வு நடந்துகொண்டிருந்தது. மாவட்டக் கல்வி அதிகாரி அவர்கள் வகுப்புகளை மேற்பார்வை செய்துகொண்டு இருந்தார். பத்தாம் வகுப்பில் தமிழாசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்.

மாவட்டக் கல்வி அதிகாரி, 10ம் வகுப்பில் நுழைந்தார். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று, "வணக்கம் ஐயா!" என்றனர்.

தமிழாசிரியரும், " வணக்கம்! வாருங்கள் ஐயா!" என்று வரவேற்றார்.

மாவட்டக் கல்வி அதிகாரி அனைவருக்கும் வணக்கம் சொன்னார்.

" என்ன பாடம் நடத்துகிறீர்கள்?" என்று தமிழாசிரியரை அதிகாரி கேட்டார்.

" திருக்குறள் ஐயா!"

" சரி, நடத்துங்கள்."

" சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
..உழந்தும் உழவே தலை."

மாணவர்களே! உழவு என்ற அதிகாரத்தில் முதல் குறள் இது. இந்தக் குறளில் ஓர் அறிவியல் உண்மை உள்ளது.16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த கலிலியோ சூரியனைப் பூமி சுற்றுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்தார். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஐயன் வள்ளுவர் இந்த பூமியானது தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது என்ற உண்மையை உலகுக்கு உரைத்துள்ளார். " சுழன்றும் " என்ற சொல்லிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது. சுற்றுகின்ற இந்த உலகமானது உழவுத் தொழிலின் பின்னே உள்ளது. மற்ற தொழில்களின் மூலமாக மக்கள் துன்பமடைவதால் உழவுத்தொழிலே சிறந்த தொழிலாகக் கருதப்படுகிறது.

தமிழாசிரியரின் இந்த உரையைக் கேட்டு மாவட்டக் கல்வி அதிகாரி முகம் சுளித்தார்.வகுப்பு முடிந்தவுடன் அதிகாரி, தமிழாசிரியரைத் தனியாக அழைத்து, " அந்தக் குறளுக்கு உங்களுடைய விளக்கம் எனக்கு சரியாகப் படவில்லை. " சுழன்றும் " என்ற சொல்லுக்கு " சுற்றுகின்ற உலகம் " என்பது பொருள் அல்ல. " உலகம் " என்றது உலகத்திலே வாழும் மக்களைக் குறித்து நின்றது. இடவாகு பெயர். தாங்கள் குறிப்பிட்டது போல " பூமி " யை அல்ல. அந்தக் குறளின் பொருள்

உழவுத் தொழில் கடினமானது என்பதால், அதை ஒதுக்கிவிட்டுப் பிற தொழில்களைச் செய்து திரிந்தாலும்,முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம்;ஆதலால் எவ்வளவுதான் துன்பம் தருவதாக இருந்தாலும் உழவுத் தொழிலே சிறந்தது என்பதுதான் அக்குறளின் பொருள்." என்று கல்வி அதிகாரி கூறினார்.

" ஐயா! மிக்க நன்றி! அக்குறளுக்கு உண்மையான உரையை அறிந்துகொண்டேன். இனி பிழை நேராதவாறு பாடம் நடத்துகிறேன் என்று சொன்னார்.

" நூல்களைப் பிழையில்லாமல் கற்கவேண்டும் என்பதற்காகத்தான் " கற்க கசடற " என்றார் வள்ளுவர். இந்த அறிவுரை திருக்குறளுக்கும் பொருந்தும். எனவே வகுப்பறைக்குச் செல்லும் முன்பாக உங்களை நன்கு தயார்செய்து கொண்டு செல்லுங்கள். நாம் கூறும் தவறான கருத்துக்கள் மாணவர்கள் மனதில் பதிந்துவிடும். எனவே எச்சரிக்கையுடன் பாடம் நடத்துங்கள்."

" நன்றி ஐயா! இனி அவ்வாறே செய்கிறேன்."

" கற்க கசடற கற்பவை கற்றபின்
..நிற்க அதற்குத் தக.
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by krishnaamma on Tue May 26, 2015 4:59 pm

//ஒரு குறளுக்குப் பொருள் கொள்ளுங்கால் , முதலில் அக்குறள் எந்த அதிகாரத்தின் கீழ் வந்துள்ளது; இரண்டாவதாக எந்த இயலில் வந்துள்ளது; மூன்றாவதாக எந்தப் பாலில் வந்துள்ளது ஆகிய பின்புலங்களை மனதில்கொண்டே பொருள் காணவேண்டும். " புலால் மறுத்தல் " என்ற நீதி துறவிகளுக்குச் சொல்லப்பட்டதாகும்; இல்லறத்தானுக்கு அல்ல. இல்லறத்தான் புலால் உண்ணலாம் என்றோ அல்லது உண்ணக்கூடாது என்றோ வள்ளுவர் சொல்லவில்லை. ஆனால் துறவிகள், அவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எப்படிப்பட்ட தட்ப வெப்ப நிலையில் வாழ்பவர்களாக இருந்தாலும் புலால் உண்ணக்கூடாது. ஆகவேதான் துறவிகளின் அடிப்படைத் தகுதிகளான அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை ஆகிய அதிகாரங்களை துறவறவியலில் வைத்தார். புலால் உண்ணும் நெஞ்சிலே அருள் எவ்வாறு சுரக்கும் ? ஆகவே புலால் மறுத்தல் என்னும் நெறி துறவிகளுக்குச் சொல்லப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.//

அருமையான விளக்கம் புன்னகை..........இன்று தான் இந்த பதிவை படிக்கிறேன்  ..............நன்றி.................. .தொடருங்கள் ..............ஜெகதீசன் புன்னகை  சூப்பருங்க  சூப்பருங்க  சூப்பருங்க


Last edited by krishnaamma on Tue May 26, 2015 5:30 pm; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by krishnaamma on Tue May 26, 2015 5:03 pm

//" நாமிருவர் நமக்கிருவர் " என்ற குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தை திருவள்ளுவர் காலத்திலேயே மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இன்ப வாழ்க்கைக்கு இரு குழந்தைகள் போதும் என்ற கருத்துப்பட குழலையும், யாழையும் குறிப்பிட்டார். அதுவும் ஆண் ஒன்று , பெண் ஒன்று இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் கண்ணன் கையிலே இருக்கின்ற குழலையும், சரஸ்வதியின் கையிலே இருக்கின்ற யாழையும் குறிப்பிட்டாரோ என்று எண்ணவும் தோன்றுகிறது.//

நல்லா இருக்கே இது புன்னகை ...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by krishnaamma on Tue May 26, 2015 5:29 pm

//குடும்பத் தலைவன் என்பவன் தாய், தந்தை , தாரம் ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று சில உரை ஆசிரியர்கள் பொருள் கூறுவார். இன்னும் சிலர், குடும்பத் தலைவன் என்பவன், பிரம்மச்சாரி , வானப்பிரத்தன், சந்நியாசி ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று பொருள் கூறுவார். இன்னும் சிலரோ, குடும்பத் தலைவன் என்பவன் , தாய், தந்தை, குழந்தை ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று பொருள் கொள்வர்.

ஆக இயல்புடைய மூவர் என்னும் சொல் யாரைக் குறிக்கிறது என்பதை நூலைப் படிப்பவர் ஊகத்திற்கே வள்ளுவர் விட்டுவிடுகின்றார்.//

எனக்கு என்னவோ, 'குடும்பத் தலைவன் என்பவன், பிரம்மச்சாரி , வானப்பிரத்தன், சந்நியாசி ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் ' என்பது தான் சரியாகப்படுகிறது புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by krishnaamma on Tue May 26, 2015 5:44 pm

// " எச்சம் " என்ற சொல்லிற்குப், " புகழ் " என்று பொருள் கொள்வதே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.//

சூப்பர் ! ........................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by krishnaamma on Tue May 26, 2015 5:59 pm

முழுவதும் படித்துவிட்டேன், பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் இந்தத்திரி....முடிந்தால் மின்னுலாகத் தாருங்கள் புன்னகை .................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by M.Jagadeesan on Thu May 28, 2015 9:10 pm

கால் இல்லாத குறள் :
======================
நிற்பதற்குக் கால் வேண்டும் . ஆனால் கால் இல்லாமலேயே ஒரு குறள் நீண்ட நெடுங்காலமாக நிற்கிறது .

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக . ( கல்வி-391 )

இந்தக் குறளில் நெடிலுக்குரிய துணைக்கால் இல்லை .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by M.Jagadeesan on Thu May 28, 2015 9:29 pm

மூன்று திரவங்கள் பயின்று வரும் குறட்பா ;
===========================================
ஒரே ஒரு குறளில் மட்டும் மூன்று திரவங்கள் வருகின்றன .

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர் . ( காதற் சிறப்புரைத்தல் -1121 )

பொழிப்புரை :
==============
பணிவான மொழியினையுடைய இந்தப் பெண்ணின் எயிற்றிலே ஊறுகிற உமிழ் நீரானது , பாலொடு தேன் கலந்தால் எப்படி இனிக்குமோ அப்படி இருக்கிறது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum