ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?
 aeroboy2000

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

வீரக்குமார். ப
 kuloththungan

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 aeroboy2000

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 aeroboy2000

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 ayyasamy ram

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 aeroboy2000

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 aeroboy2000

December மாதம் நடப்பு நிகழ்வுகள் முழுவதும் Audio வடிவில்
 thiru907

நெல்லிக்காய்
 T.N.Balasubramanian

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 SK

பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 ayyasamy ram

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்

View previous topic View next topic Go down

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்

Post by சரவணன் on Fri May 15, 2015 9:33 pm

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் – பார்வைகள் பலவிதம்.

ஒரு சமயம் துறவி ஒருவர் சாலை ஓரம் மரத்தடியில் சமாதி நிலையில் படித்திருந்தார். அந்த வழியாக வந்த திருடன் ஒருவன் அவரை பார்த்து இவனும் நம்மை போல் ஒரு திருடன் போலிருக்கிறது, இரவு திருடிய களைப்பில் இப்படி தூங்கிக்கொண்டிருக்கிறான் போல. காவல்கள் கையில் அகப்பட்டால் மாட்டிக்கொள்வான் பாவம் என்று எண்ணியபடியே அங்கிருந்து புறப்பட்டான்.

அதே வழியாக குடிகாரன் ஒருவன் வந்தான், அவனும் அந்த துறவியை பார்த்தான். அவன் இங்கு கிடப்பது என்னை போல ஒரு குடிகாரன் போலிருக்கிறது. போதை தலைக்கு ஏறி நிதானம் இல்லாமல் விழுந்து கிடக்கிறான். நானும் தான் குடித்திருக்கிறேன்  இப்படியா விழுந்து கிடக்கிறேன் என்று கூறியபடியே அவனும் சென்றான்.

அடுத்து சன்யாசி ஒருவர் அந்த வழியாக வந்தார். அவரும் அந்த துறவியை பார்த்தார். யாரோ ஒரு மகான் மிகுந்த களைப்பால் படுத்திருக்கிறார் என்று எண்ணியவன். அவர் திருவடிகளை வணக்கி சென்றான்.

இப்படி யார் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்பது அவரவரின் மனநிலையை பொறுத்து மாறுபடும். அதனால் உண்மை யாருக்கும் சரியாக புலப்படுவதில்லை. இதைப்போலத்தான் உண்மையான பக்தியும் தூய்மையும் நமக்கு தெரியவிடாமல் தடுத்துவிடுவது உலக ஆசைதான்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்

Post by சரவணன் on Fri May 15, 2015 9:34 pm

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் – அன்பின் தன்மை!மூன்று நண்பர்கள் காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தனர். திடீரென  மூன்று புலிகள் அவர்களின் எதிரே வந்துகொண்டிருந்தத.

மூவரில் ஒருவன் சொன்னான். அவ்வளவுதான், நம் கதை இன்றோடு முடியப்போகிறது என்று.

இரண்டாமவன் சொன்னான் நாம் இறைவனிடம் பிரார்த்திப்போம் அவர் நம்மை காப்பாற்றுவார் என்று.

மூன்றாமவன் சொன்னான். நாம் ஏன் இந்த சிறிய விடயத்துக்கு இறைவனை தொந்தரவு செய்ய வேண்டும். இந்த மரத்தின் மேல் ஏறிக்கொள்வோம் என்று. இவன் இறைவனை மிகவும் நேசிப்பவன், அன்புள்ளம் கொண்டவன். தன்னால் நேசிக்கப்படுபவனுக்கு இறைவன் ஒருபோதும் சிரமத்தை கொடுப்பதில்லை. அன்பின் தன்மை அத்தகயது.


Last edited by சரவணன் on Fri May 15, 2015 9:36 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்

Post by சரவணன் on Fri May 15, 2015 9:36 pm

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் – சந்தேகம் சங்கடமே!


ஒருவன் பெரிய ஆற்றை கடக்க வேண்டியிருந்தது. வெள்ளம் அதிகமாக இருந்ததால் எப்படி கடந்து செல்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தான். விபீடணன் ஒரு இலையை அவனது துணியில் முடிந்து வைத்தார். பிறகு அந்த மனிதனிடம், நீ சிறிதளவும் அஞ்சாமல் தண்ணீரில் நடந்து செல்லலாம். ஆனால் நம்பிக்கை இழந்த கணத்தில் நீரி மூழ்கிவிடுவாய் என்று எச்சரித்தார்.

அந்த மனிதன் நம்பிக்கையோடு ஆற்றில் நடக்க ஆரம்பித்தான். அவனால் தண்ணீரில் நடக்க முடிந்தது அது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் திடீரென அவனுக்கு ஒரு சபலம் ஏற்ப்பட்டது. விபீடணன் தனது துணியில் முடிந்தது என்ன என்று அறிந்துகொள்ள அவன் மனம் துடித்தது. ஆவல் அதிகமாகவே அந்த முடிச்சை அவிழ்த்தான். அந்த இலையில் ராம நாமம் எழுதப்பட்டிருந்தது.

சாதாரண ராம நாமம் எப்படி நம்மை தண்ணீரில் நடக்க வைக்கும் என்று நினைத்தான். அக்கணமே அவன் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தான்.

நம்பிக்கை நமக்குள் அசாத்திய வலிமையைத் தோற்றுவிக்கிறது. அது குறைந்தால் வலிமையையும் குறையும். நம்பிக்கை இழந்தால் வலிமை அடியோடு போய்விடுகிறது.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்

Post by சரவணன் on Fri May 15, 2015 9:39 pm

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் - சமயோசிதம்!

ஒரு ஊரில் செல்வந்தன் இருந்தான். அவனுக்கு ஒரு தோட்டம் இருந்தது. அந்த தோட்டத்தில் ஒரு குளம் வெட்டி மீன்களை வளர்த்தான். ஒரு நாள் இரவு திருடன் ஒருவன் யாருக்கும் தெரியாமல் அந்த தோட்டத்தில் நுழைந்து மீன்களை பிடித்துக்கொண்டிருந்தான். இது செல்வந்தனுக்கு தெரியவர திருடனை பிடிப்பதற்கு ஆட்களை அனுப்பினான்.

காவலர்கள் வருவதை கண்ட திருடன், எந்த வகையிலும் தோட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது, மாட்டிக்கொள்வது உறுதி என்று உணர்ந்தான். இனி தப்பிக்க வழி என்ன என்று யோசித்தான்! உடனே அருகில் கிடந்த சாம்பலை எடுத்து தன் உடல் முழுதும் பூசிக்கொண்டு ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டான்.காவலாளிகள் தோட்டம் முழுதும் தேடியும் அவர்களால் திருடனை பிடிக்க முடியவில்லை. ஆனால் ஒரு மரத்தடியில் உடல் முழுதும் சாம்பல் பூசியிருந்த சாதுவைத்தான் அவர்கள் கண்டனர் .  

மறுநாள் காலையில் செல்வந்தனின் தோட்டத்தில் ஒரு ஞானி எழுந்தருளியிருக்கிறார் என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியது. மக்கள் கூட்டம் கூட்டமாக மலர்கள், காணிக்கை, பட்சணங்களுடன் அந்த தோட்டத்துக்கு சென்று வந்தனர். இதை கண்ட சாது வேடத்தில் இருந்த திருடன் மெய்சிலிர்த்துப் போனான்.

நானோ உண்மையில் ஒரு சாது அல்ல, சாதுவை போல் வேடம் தரித்த திருடன். அப்படி இருந்தும் மக்கள் என்னை உண்மையான சாது என்று நம்பி காணிக்கை வழங்குகின்றனர். என் மீது மதிப்பும் மரியாதையும் காட்டுகின்றனர். நான் உண்மையில் ஒரு சாதுவாக இருந்தால் இதைவிட மேலான சிறப்புகள் கிடைப்பதுடன் எனக்கு நிச்சயம் ஆண்டவனின் தரிசனமும், அருளும் கிட்டும் என்று தனக்குத் தானே பேசிக்கொண்டான்.

இப்படி அந்த திருடன் மேற்கொண்ட வெறும் வேடமே அவனது உள்ளத்தில் ஆன்மீக விழிப்பு உணர்வை உண்டாக்கியது. அன்று முதல் மனமாற்றம் பெற்று மேன்மை அடைந்தான்.

ஆசைகள் ஒருவன் மனதை விட்டு விலகும் போது ஆத்மாவிடம் தங்கியிருப்பது பிரம்மானந்தமே!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்

Post by சரவணன் on Fri May 15, 2015 9:42 pm

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் - மாய மயக்கம்!

ஒரு குருவும் சீடனும் உரையாடிக் கொண்டிருந்தனர்.

சீடன்: குருவே என் மீது என் மனைவி மிகுந்த பாசம் வைத்துள்ளார், ஆகவே என்னால் துறவியாக முடியவில்லை என்றான்.

சீடனின் வார்த்தையில் மெய்பொருள் இல்லை என்பதை அறிந்த குருநாதர், சீடன் நினைப்பதைப்போல உலக மாந்தர் இல்லை என்பதை அவனாகவே உணர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்தார். அதன்படி குருநாதர் தம் சீடனுக்கு ஒரு யோக முறையை ரகசியமாகக் கற்பித்தார். குருநாதர் கற்பித்த யோக முறையைச் சீடன் செயல்படுத்த தொடங்கினான்.

ஒருநாள் சீடனின் வீட்டில் அழுகுரல் கேட்டது. அது கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். சீடன் தான் கற்ற யோக மார்க்கத்தால் மூச்சடக்கி உயிரற்ற பிணம் போல் கிடந்தான். அவன் ஒரு ஹட யோகியானதால் அவனது உடல் அவயங்கள் இயல்புக்கு மாறாக கோணி, குறுகி காணப்பட்டது.

அந்த தோற்றத்தை கண்ட அவன் மனைவி மற்றும் உறவினர்கள் அவன் இறந்துவிட்டதாக முடிவுக்கு வந்துவிட்டனர். அவனுடைய மனைவி ஐயோ இது என்ன சோதனை என் இனிய பிராண நாதா என்னை விட்டு போய்விட்டீரே என்று கதறினால். இதனிடையே உறவினர்கள் சீடனை தகனம் செய்ய ஏற்பாடு செய்தனர்.  சீடனின் உடல் கோணல் மாணலாக இருந்ததால் நிலையை தாண்டி அவனை கொண்டுவரவது சிரமமாக இருந்தது.

அந்நேரத்தில் ஒருவன் கோடரியை எடுத்து வந்து நிலையை வெட்டி அப்புறப்படுத்த தொடங்கினான். பிணத்தின் அருகே அழுதுகொண்டிருந்த அவன் மனைவி எழுந்து ஓடிவந்து நிலை படியை ஏன் இடிக்கிறீர்கள் என்றாள்.  அம்மா பதற்றம் வேண்டாம், பிணம் நேராக இல்லாததால் பிணத்தை வாசல் வழியே கொண்டு செல்வது கடினம், அதனால் தான் இடிக்கிறோம் என்றான்.

அதைகேட்ட சீடனின் மனைவி, நிறுத்துங்கள் நிலைபடியை இடிக்க வேண்டாம்.  விதி வசத்தால் என் கணவன் இறந்துவிட்டார் , இனி என் குடும்பத்தை காப்பாற்றுவார் யாரும் இல்லை, தந்தையை இழந்து தவிக்கும்   குழந்தைகளையும் இனி நான் தான் காப்பாற்ற வேண்டும். இந்த நிலைமையில் வாசலை இடித்துவிட்டால் மீண்டும் அதை புதுப்பிக்க என்னால் முடியாது. என் கணவருக்கு நேர வேண்டியது நேர்ந்துவிட்டது, இனி என்ன செய்ய, வேண்டுமானால் கைகால்களை வெட்டி வெளியில் கொண்டு செல்லலாம் என்றாள்.

இந்த வார்த்தைகளை கேட்ட அந்த சீடன் எழுந்து நின்றான். அப்போது ஹடயோகியான சீடனுக்கு குருநாதர் கற்பித்த யோக முறையின் வேகம் தணிந்திருந்தது. மனைவியை நோக்கி அவன், அடி  பாதகி ! உன்னை என் மனைவி என்று சொல்ல என் மனம் கூசுகிறது.இவ்வளவு காலமும் என்னிடம் பாசம் கொண்டதுபோல் நடித்து என்னை ஏமாற்றிவிட்டாய்.  என் கை கால்களை வெட்ட சொல்கிறாய். உன் உண்மையான சுய ரூபத்தை தெரிந்துகொண்டேன்  என்று கூறியவாறு வீடு, மனைவி, அனைத்தையும் துறந்து தன் குரு நாதர் நோக்கி விரைந்தான்.

உலக ஆசைகளைப் பூர்த்தி செய்வதில் ஈடுபட்டு, அவற்றில் மூழ்கி அந்த காரணத்தினால் துன்புற்றாலும் நாம் யார்? இவற்றை அனுபவிப்பது யார் என்ற கேள்வி எப்போதாவது நம் உள்ளத்தில் எழும். அந்த காலம் தான் ரகசியப் பொருளை விளக்கும் புனித காலம்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்

Post by சரவணன் on Fri May 15, 2015 9:43 pm

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் - மோக மயக்கம்!

ஒரு ஊரில் ஏழை வேதியன் ஒருவன் வாழ்ந்து வந்தான். எந்த வித வேலையும் கிடைக்காமல் குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வந்தான். வறுமை அவனை வாட்டியது. இந்த நிலையில் அந்த வேதியன் ஒரு தொழிலதிபரை அணுகி தனக்கு ஏதாவது வேலை போட்டு தருமாறு அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தான். அவன் வேலை கேட்டு வந்த போதெல்லாம் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அவனை பிறகு வருமாறு கூறினார் அந்த தொழிலதிபர்.

இவ்வாறு நாட்கள் கடந்து கொண்டிருந்தது. வேதியனுக்கு வேலை கிடைத்த பாடில்லை. மிகவும் கவலை அடைந்தான். ஒருநாள் அவன் தன் நண்பனிடம் தன்னுடைய துன்பமான நிலையை கூறினான்.  அவனுடைய நண்பன் கூறினான், ஏன் கால் தேய நடந்து தொழிலதிபரை சந்திக்க செல்கிறாய். நான் சொல்வது போல் நடந்துகொள், உடனே வேலை கிடைக்கும். இப்போதே ரோஜாமணியிடம் சென்று முறையிடு, அவள் உன்மீது இறக்கம் கொண்டு உதவி செய்வாள், அவள் மனம் வைத்தல் வேலை உன்னை தேடிவரும் என்றான்.

அதைக் கேட்ட வேதியன் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தான். அப்படியா எனக்கு உடனே வேலை கிடைக்குமா? நான் இப்போதே ரோஜாமணியை சந்திக்க செல்கிறேன் என்றான். வேதியன் ரோஜா மணியை சந்தித்து, அம்மா நான் ஒரு ஏழை வேதியன் வேலை ஏதும் கிடைக்காமல் சிரமப்படுகிறேன், தாங்கள் என் நிலைமையை நினைத்து எனக்கு உதவுங்கள் என்றான். அந்த வேதியனின் நிலையை கேட்டு ரோஜாமணியின் மனம் இலகியது, உனக்கு யாரிடம் வேலை வேண்டும் என்று கேட்டாள்.  அந்த தொழிலதிபரிடம் சொன்னால் போதும் என்றான்.

ரோஜாமணியும் அவனுக்கு உதவுவதாக உறுதி அளித்தாள். வேதியன் நிம்மதி பெருமூச்சுடன் வீடு திரும்பினான். மறுநாள் காலை தொழிலதிபரின் சேவகன் வேதியனின் வீட்டுக்கு வந்து வேதியனை அழைத்து சென்றான். தொழிலதிபர் அவனை வேலைக்கு சேர்த்து கொண்டார்.

உலகம் முழுதும் பெண் ஆசையில் தான் மயங்கி கிடக்கிறது. ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் காமமே உலகை ஆட்டிப்படைக்கவல்ல மாயை.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum