புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_m10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_m10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_m10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_m10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10 
3 Posts - 3%
prajai
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_m10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_m10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_m10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10 
1 Post - 1%
Rutu
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_m10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10 
1 Post - 1%
Pradepa
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_m10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_m10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_m10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_m10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_m10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10 
231 Posts - 22%
sugumaran
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_m10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_m10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_m10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_m10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10 
18 Posts - 2%
prajai
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_m10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_m10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_m10ஜெயகாந்தன் Vs வைரமுத்து Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயகாந்தன் Vs வைரமுத்து


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 16, 2015 6:01 pm

ஜே.கே என்னும் எழுத்தாளனின் மரணமும், தமிழ் எழுத்துலகும்
அன்றைக்குக் காலையில் தான் ஜே.கே மரணமடைந்ததாக செய்தி வந்தது. யாரோ டிவிட்டரில் ஷேர் செய்திருந்தார்கள். பத்திரிகைகளில் பெரும்பாலும் ஒரு ஓரச் செய்தியாகவே வந்திருக்கும் என்று நினைக்கிறேன். தி இந்து தமிழ் நாளிதழ் மட்டும் ஒரு நாள் நடுப்பக்கம் முழுவதும் அவரைப் பற்றிய நினைவுகளைப் பதிந்திருந்தது. தவிர, யு. ஆர். அனந்தமூர்த்திக்கு கிடைத்த எந்த மரியாதையும் ஜே.கேவுக்குக் கிடைக்கவில்லை.

ஜே.கேவின் மரணத்துக்குப் பின்பு நடந்த விஷயங்களில் முக்கியமானவை.

1. அவரது எழுத்துகள் தட்டையானவை என்று சொல்லி ஒரு குழு அவரை டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் நிராகரித்தது. நான் அச்சில் வந்த ஜே.கேயின் சில எழுத்துகளைப் படித்திருக்கிறேன். வழக்கமான தமிழ் எழுத்துகளைப் போலவே அவை தட்டையாகவும், உருண்டையாகவும், வளைவாகவும் இருந்தன. வேறு சிறப்பான தட்டைத்தனம் எதையும் காண முடியவில்லை. ஒருவேளை அவர்கள் ஜே.கேவின் கையெழுத்தைப் பற்றி அப்படிச் சொல்கிறார்களோ என்று நினைத்து குமுதத்தில் வெளியான அவரது "இறுதி படைப்பை"ப் பார்த்தால் அந்த கையெழுத்தும் வழக்கமான நெளிவு சுளிவுகளுடனே இருந்ததால் தட்டையெழுத்துகள் பற்றிய என் ஆராய்ச்சியை அத்தோடு நிறுத்திக் கொண்டேன்.

2. தி இந்து நடுப்பக்கத்தில் வெளிவந்திருந்த கருணாநிதியின் கருத்துகள்- ஜே.கேவுக்கு அவர் செய்த உதவியைப் பற்றியும், ஜே.கே அவரிடம் நன்றி சொன்னதைப் பற்றியும் எழுதியிருந்தார். இறந்த வீட்டில் ஒப்பாரி ராகம் பாடும் படிப்பறிவில்லா பாட்டிகள் கூட இறந்தவர் தன்னை சுற்றியிருந்தவர்களுக்கு என்ன செய்தார், தனக்கு என்ன செய்தார் என்பதைத் தான் பட்டியலிடுவார்களே தவிர தான் இறந்தவர்களுக்குச் செய்தவற்றைப் பட்டியலிட மாட்டார்கள். தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் கிழவருக்கு குறைந்தபட்ச நாகரிகம் கூட தெரியவில்லையா?

3. பேசவும் முடியாமல், படிக்கவும் முடியாமல் படுக்கையில் இருந்தவர் பாராட்டுக் கடிதம் எழுதியதாகச் சொல்லி வெளியிட்ட குமுதம் & வைரமுத்துவின் செயல். வைரமுத்து இன்னும் கவிஞர் என்று அழைக்கப்படுவதைவிட ஆச்சரியமான விஷயம் வேறொன்றுமில்லை. 1983 என்கிற மலையாளத் திரைப்படத்தில் பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் ஒரு மலையாளக் கவிதையை ஒருவன் சொல்லும் போது, "இந்தப் பாட்டை யார் எழுதியது? அழ வைக்கிறது" என்பான் இன்னொருவன். "இது பாட்டு இல்லை. சுள்ளிக்காடு சாரின் கவிதை" என்று அவனுக்கு பதில் கிடைக்கும். அதைப் போலவே தமிழ்நாட்டிலும் பாட்டுக்கும் கவிதைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் இருப்பதால் தான் வைரமுத்து கவிஞர், ஐயோ, வெறுங்கவிஞர் இல்லை, கவிப்பேரரசு என்கிற பட்டத்தையெல்லாம் காட்டிக்கொண்டு நடமாட முடிகிறது. வாலி, மு.மேத்தா, வைரமுத்து ஆகியோரை sidewalkers in Tamil free verse என்று குறிப்பிடுகிறார் ஆத்மாநாம்.

எவ்வளவோ பணம் இருந்தும், புகழ் இருந்தும் என்ன? அங்கீகாரம் கிடைக்க வேண்டிய இடத்திலிருந்து கிடைக்கவில்லை, கிடைப்பதற்கு வாய்ப்புமில்லை, ஏனென்றால் வைரமுத்துவுக்கு அதற்கான தகுதியுமில்லை. (தமிழ் இலக்கியவாதிகளுக்கும், பிற எழுத்தாளர்களுக்குமான யுத்தங்கள் மிகச் சுவாரசியமானவை. இரண்டு உலகிலும் ஓரளவு தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் சுஜாதா மட்டும் தான். அந்த யுத்தங்களைப் பற்றியே பல புத்தகங்கள் எழுதலாம்) வெள்ளைச்சட்டைக்காரரின் மன அழுக்குகள் அம்பலமேறியிருக்கின்றன. வேறென்ன சொல்வது?


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 16, 2015 6:01 pm

Deepa Lakshmi
April 20 at 2:21pm · 

சில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது:
இந்த வாரக் குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, அவரது கடைசி எழுத்து என ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.
அப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ எழுதவோ இயலாத நிலையில் தான் இருந்து வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும்.
அன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப்பிடித்துக் கொண்டு பேசும், அவர்கள் எது சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூட இயலாத நிலையில் இருந்தார் என்பதை வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன்.
ஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதி வந்து, வாசித்துக்காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போடவராத நிலையில், 'உங்கள் பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா' என்று அனுமதியையும் கேட்டுப் பெற்றபின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமே!
அவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் அதுவே பெரிய விஷயம் தான் என்று!
அப்படி இருக்க, அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது.




ஜெயகாந்தன் Vs வைரமுத்து Aஜெயகாந்தன் Vs வைரமுத்து Aஜெயகாந்தன் Vs வைரமுத்து Tஜெயகாந்தன் Vs வைரமுத்து Hஜெயகாந்தன் Vs வைரமுத்து Iஜெயகாந்தன் Vs வைரமுத்து Rஜெயகாந்தன் Vs வைரமுத்து Aஜெயகாந்தன் Vs வைரமுத்து Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 16, 2015 6:02 pm

ஜே.கே.வின் மகள் மாடி வீட்டில் இருந்ததால் கீழே நடந்த மேற்கண்ட விஷயங்கள் தெரியாமல் போயிருக்கலாம்
APRIL 26, 2015 AT 8:12 PM

ஜெயகாந்தன் Vs வைரமுத்து Vairamuthu-jayakanthan
தனது கதைகள் மூலம் அதிர்வுகளையும் சர்ச்சைகளையும் ஒரு சேர உருவாக்கியவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். அவர் மறைந்தபிறகும் அவரது எழுத்துகளை மையமாக வைத்து சர்ச்சை சுழல்கிறது. இந்த சர்ச்சையின் மையப்புள்ளியானவர் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து.
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Vairamuthu-jayakanthan1“”அந்த மாபெரும் படைப்பாளியின் கடைசி கடிதம் வைரமுத்து சிறுகதையை பாராட்டியவைதான் என ஒரு வாரஇதழில் ஜெயகாந்தனின் பாராட்டு மடல் என்பதாக ஒன்று வெளிவந்தது. இந்நிலையில் இந்த மடலையொட்டி ஜெயகாந்தனின் மகள் தீபலக்ஷ்மி, வைரமுத்துவை தாக்கி முகநூலில் ஒரு பதிவுபோட… இதுதான் சர்ச்சைக்கு வழி வகுத்தது”’என்கின்றனர் இலக்கிய உலகைச் சேர்ந்தவர்கள்..
நாம் தீபலக்ஷ்மியிடம் நடந்தவைகளை கேட்டோம். “”அப்பா கடந்த பல மாதங்களா எதையும் படிக்கவோ எழுதவோ முடியாத நிலையில்தான் இருந்தார். யாராவது வந்து அன்பா பேசினா கூட குழந்தை மாதிரி அதை ஏத்துக்குவாரு. மறுத்து பேசவோ, கருத்து கூறவோ அவரால முடியாது. அப்படி இருக்க, அந்த வார இதழில் வெளியாகும் வைரமுத்துவின் கதைகளை அவரே தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்த முயற்சிப்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் யாருக்கும் நியாயமாகப்படாது”’என்றார் காட்டமாக. இந்த கேள்விகளோடு நாம் கவிஞர் வைரமுத்துவை தொடர்பு கொண்டு பேசினோம். “”"இந்த விசயத்தில் நான் முழுக்க முழுக்க நூறு சதவீதம் உண்மையாகத்தான் இருந்திருக்கிறேன். இதனால் ஏதாவது பழி வந்தால் அந்த குடும்பத்துக்கு ஊறு வருவதை விட அந்த பழியை நான் தாங்கிக் கொள்கிறேன்”’என்றார் உருக்கமாக.
“நீங்கள் உண்மையாக இருக்கும்போது எதற்காக பழியை ஏற்றுக்கொள்ள வேண்டும்? ஜே.கே.வின் கடிதத்திற்கு சாட்சியாக யாராவது இருக்கிறார்களா?’ என்றோம். “”யு.எஸ்.எஸ்.ஆர். நடராஜன் இருக்கிறார்” என்றார் வைரமுத்து. ஜே.கே.வின் நண்பர் குழாமைச் சேர்ந்தவர்தான் இந்த நடராஜன். அவரிடம் பேசினோம்.
“வைரமுத்துவை பாராட்டினார் ஜெயகாந்தன் என்பதற்கு நானே சாட்சி’’என்ற நடராஜன் அந்தப் பாராட்டின் பின்னணியையும் விவரிக்கத் தொடங்கினார்.
“”நானும் ஜெயகாந்தனும் பல ஆண்டுகால நண்பர்கள். கடைசி ஆறு மாதங்கள் நான் கூடவே இருந்து மருத்துவமனை கூட்டி செல்வது போன்ற உதவிகள் செய்துவந்தேன். இறக்கும் வரையிலும் ஜே.கே உணர்வோடுதான் இருந்தார். ஆனால் பேச்சை குறைச்சுகிட்டார். அவருக்கு கதைகள், கவிதைகள் படித்து காட்டுவேன். அப்படித்தான் ஒரு வாரஇதழில் வந்த வைரமுத்துவின் சிறுகதையை நான் படித்துக் காட்டினேன். சிறந்த வரிகளை அடிக்கோடிட்டுக் காட்டினேன். அதில் ஒரு கதாபாத்திரம் ஜெயகாந்தன் சாயலில் இடம் பெற, ‘”சிறுகதை நல்லாருக்கே’’என்றார் மெல்லிய குரலில்.
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Vairamuthu-jayakanthan2இதை நான் தற்செயலாக கவிப்பேரரசு வைரமுத்துவிடம் பேசும்போது சொன்னேன். அவரோ “ஒரு மாமனிதரே நம்மை பாராட்டுகிறாரே’’என ஆனந்தப்பட்டவர், “இந்த சிறுகதைகளை நூலாகப் போடவுள்ளேன். தனது கருத்தை ஒரு மடலாக எழுதித் தருவாரா அந்த மாமனிதர்’’என கேட்டார். இதை ஜே.கே.விடம் நான் கூற, ‘சரி’ என்றார் ஒரே வார்த்தையில். அதன்பின் நானும் ஜெயகாந்தனின் இரண்டாம் மனைவி கௌசல்யாயும் ஒரு டிராப்ட் போட்டோம். கௌசல்யாதான் ஜே.கே.வுக்கு இலக்கிய உதவி யாளர்… எழுத்தாளர். ஜே.கே. பெயரில் வரும் வாழ்த்து மடல்களை படித்து சரிபார்ப்பவர். அப்படி வாழ்த்துமடல் எழுதி ஜே.கே. விடம் படித்துக் காட்ட, அவரும் ஒப்புதல் கொடுத்துவிட்டார். உடல் தளர்ந்து இருந்ததால் ஜே.கே.வால் பாதி கையெழுத்துதான் போட முடிந்தது. எனவே தான் அவரிடம் ஒப்புதல் பெற்று, ஏற்கனவே இருந்த கையெழுத்தை எடுத்து பயன்படுத்தினோம். அதன்பின் மடல் வைரமுத்து வுக்கு அனுப்பப்பட, படித்துவிட்டு மகிழ்ந்தவர், ஜே.கே.விடம் பேசுவதற்காக எனக்கு போன் செய்தார். நான் மொபைலை ஜே.கே. காதில் வைத்தேன்.
அப்போது வைரமுத்து, “நான் மதுரை பிளைட்டுக்கு காத்திருக்கிறேன். என் சிறுகதை படித்தமைக்கு நன்றி. மதுரை போயிட்டு வந்து உங்களை பார்க்கிறேன்’ என்றார். “மகிழ்ச்சி’ ‘வாங்கோ’’ என்றார் ஜே.கே. வைரமுத்து நெகிழ்ச்சியோடு, “என்னை வாழ்த்தியதில் ரொம்ப மகிழ்ச்சி. எழுத்தில் நீங்க பெரிய முன்னோடி’ன்னு சொன்னாரு. ஜெயகாந்தன் உடனே, அதை மறுக்க முடியாது என தனக்கேயுரிய தொனியிலே சொன்னாரு. உண்மை இவ்வாறு இருக்க வைரமுத்து மீது பழிபோடுவது வேதனையாக இருக்கிறது. ஜே.கே.வின் மகள் மாடி வீட்டில் இருந்ததால் கீழே நடந்த மேற்கண்ட விஷயங்கள் தெரியாமல் போயிருக்கலாம். ஆனாலும் அப்பா மீது அளவில்லாத பாசம் கொண்டவர் அவர். உணர்வுரீதியாக அணுகியதால் சலசலப்பு உண்டாகிவிட்டது”’என்றார் நடராஜன் தனது சாட்சியமாக.
இறந்த பிறகும் அச்சு வாகனத்தின் நாயகனாகவே இருக்கிறார் ஜெயகாந்தன்.                                            -நமது நிருபர்
படங்கள் : சுந்தர்
Thanks Nakkeeran +Thamaraiselvan , Thenee
Above is being reproduced as a Public Service




ஜெயகாந்தன் Vs வைரமுத்து Aஜெயகாந்தன் Vs வைரமுத்து Aஜெயகாந்தன் Vs வைரமுத்து Tஜெயகாந்தன் Vs வைரமுத்து Hஜெயகாந்தன் Vs வைரமுத்து Iஜெயகாந்தன் Vs வைரமுத்து Rஜெயகாந்தன் Vs வைரமுத்து Aஜெயகாந்தன் Vs வைரமுத்து Empty

Rajana3480 இந்த பதிவை விரும்பியுள்ளார்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 16, 2015 6:03 pm

விளம்பர வெறியர்களின் விளையாட்ட


ஜெயகாந்தன் Vs வைரமுத்து For-my-blog
கவிஞர் வைரமுத்து அவர்களின் ‘எழுத்து மோசடி’ பற்றிய விவாதங்கள் கொழுந்து விட்டு எரிகின்ற இந்நேரத்தில் எனக்கு தெரிந்த சில விஷயங்களை இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.
ஜெயகாந்தனின் மகள் தீபா சொல்வது உண்மைதானா? நாடறிந்த கவிஞர் வைரமுத்துவிற்கு இப்படியொரு விளம்பரம் தேவைதானா? வைரமுத்துவின் சிறுகதைகளை ஜெயகாந்தன் படிக்கச் சொன்னார் என்பதற்காக வாசகர்கள் விழுந்தடித்துக் கொண்டு படித்து விடப் போகிறார்களா என்ன?
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Letterஜெயகாந்தன் Vs வைரமுத்து Jayakanthan-11

ஜெயகாந்தன் அவர்களின் உடல்நிலை கடந்த பல மாதங்களாகவே மோசமாக இருந்தது அவருக்கு  நெருங்கிய வட்டாரங்களுக்கு நன்றாகவே தெரியும்.
உண்மை இப்படியிருக்க, இதுபோன்ற கீழ்த்தரமான விளம்பர யுக்தி வெளியே தெரியவந்தால் அது வைரமுத்துவின் புகழுக்கு பெரும் களங்கம் விளைவிக்கும் என்பது அனுபவப்பட்ட கவிஞர் வைரமுத்து அவர்களுக்குத் தெரியாதா என்ன? பின்னே இது யாருடைய சித்து விளையாட்டு?
ஜெயகாந்தனிடம் மிக நெருங்கிப் பழகிய நண்பர்களிடம் உண்மை என்னவென்று விசாரித்துப் பார்த்தேன். இவ்விஷயத்தில் இடைப்பட்ட தரகர்கள் நிறையவே விளையாடியிருப்பது தெரியவந்தது.
ஜே.கே.யின் புதல்வி தீபா சொல்லியிருப்பது முழுக்க முழுக்க உண்மை. இப்பிரச்சினையில் கவிஞர் வைரமுத்து இதன் விளைவுகள் அறியாமலேயே பலிகடா ஆக்கப்பட்டார் என்பது என் தாழ்மையான கருத்து.
கவிஞர் கண்ணதாசன் தன் கவிதைகளை ஒவ்வொரு வரிகளாகச் சொல்லச் சொல்ல கண்ணப்பன் அல்லது அரசு நாச்சியப்பன் போன்ற அவரது உதவியாளர்கள் எழுதி பதிவு செய்வார்கள் என்பது  நம்மில் பலருக்கும் தெரியும்.
அதே போன்று ஜெயகாந்தனிடமும் இப்படிப்பட்ட பழக்கம் இருந்து வந்தது. பல சந்தர்ப்பங்களில், அப்படி அவர் சொல்லச் சொல்ல எழுதும் பணியில் இருந்தவர் செல்லூர் கிருஷ்ணன் என்பவர். இவர் ஆரம்பக் காலத்தில் கொத்தனார் பணி பார்த்தவராம். பின்னர் கவிஞர் பரிணாமன் என்ற பெயரில் சினிமா உலகில் வலம் வந்திருக்கிறார்.திரைப்படத் துறையில் கவிஞர் பிறைசூடனுக்கு உதவியாளராக இருந்த அனுபவம் இவருக்குண்டு. பல நூல்களும் எழுதியிருக்கிறார்.
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Download
கவிஞர் பரிணாமன் என்கிற செல்லூர் கிருஷ்ணன்
 
“ஐந்தாம் வகுப்போடு எனது பள்ளிக் கல்வி நின்று போனது. சித்தாள் வேலைத் தொடங்கி கட்டிடக் கொத்தனார் ஆகிவிட்டேன்” என்று அவரே வாக்குமூலம் வழங்கியிருக்கிறார்.
இக்கவிதை அவரது ஆரம்ப நாட்களில் கவிஞர் பரிணாமன் எழுதியது.
“பெற்றோர்க்குப் பணியாமல் ஊரை சுற்றி
பிழைபலவும் செய்தவன்நான் உண்மை சொல்வேன்!
நற்றாயும் பள்ளியிலே கொண்டு விட்டாள்
நான்கைந்து ஆண்டிருக்கப் பொறுமையில்லை!
சுற்றத்தார் யாவருமே கருதவில்லை!
சுதந்திரமாய்த் தெருக்களையே கற்றுத் தேர்ந்து
கற்றோர்கள் முன்வந்தேன் கவிதையாகி
கல்லாத எனைநன்கு கற்றுக்கொள்வீர்! ‘’
சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்ததைப் போன்று வைரமுத்துவை எக்குத்தப்பாக இவர்தான் மாட்டிவிட்டார் என்று பேசிக் கொள்கிறார்கள். கவிப்பேரரசிடம் நல்ல பெயர் வாங்குவதற்காகவும், சினிமா வாய்ப்பு சிபாரிசுக்காகவும் இப்படியொரு புகழ்ச்சி கடிதத்தை இவர் வைரமுத்துவிற்காக தயார் செய்து கொடுத்தார் என்ற பேச்சு பரவலாக அடிபடுகிறது.
கவிஞர் வைரமுத்து இதுபோன்ற புகழ்ச்சியில் எளிதில் மயங்குபவர்; விளம்பரத்துக்காக ஏங்குபவர் என்பதை மனதில் இருத்தி இடைப்பட்ட தரகர்கள் விளையாடிய நாடகமிது. இதில் குமுதம் நிருபருக்கும் பெருமளவு பங்கு உள்ளது.
“கேப்பையிலே நெய் வடியுதென்றால் கேட்பவனுக்கு எங்கே போனது புத்தி” என்பதுபோல் குமுதத்தில் பணிபுரியும் நிருபரொருவர் இப்படிப்பட்ட கீழ்த்தரமான விளம்பர யுக்தியைக் கையாண்டார் என்று சொன்னால் குமுதம் நிர்வாகத்தினர் இதனை தடுத்திருக்க வேண்டாமா?
முன்பொருமுறை வைரமுத்து எழுதியிருந்தது இளையராஜா ரசிகர்களுக்கிடையே பெருத்த சர்ச்சையை உண்டு பண்ணியது எல்லோருக்கும் நினைவில் இருக்கும்.
வைரமுத்து எழுதிய அந்தச் சர்ச்சைக்குரிய செய்தி இதுதான்:
ஒரு நாள் காலையில் என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது.
நான் ஜெயகாந்தன் பேசுகிறேன்.
வணக்கம். வைரமுத்து பேசுகிறேன்.
என் மகள் திருமண வரவேற்புக்கு உங்கள் மண்டபம் தேவைப்படுகிறது.
அது உங்கள் மண்டபம்; எடுத்துக்கொள்ளுங்கள்.
‘பொன்மணி மாளிகை’ பெயரிட்டுத் திருமண அழைப்பிதழ் அச்சிட்டவர், ஓர் இசையமைப்பாளரைச் சந்தித்து அழைப்பிதழ் தந்தாராம்.
‘கட்டாயம் வருகிறேன்’ என்ற உறுதிமொழி தந்து அழைப்பிதழைப் பிரித்த இசையமைப்பாளர், திருமண மண்டபத்தின் பெயரைப் பார்த்ததும் திகைத்துப்போனாராம். ‘நான் அங்கு வர முடியாதே’ என்று நெளிந்தாராம்.
விசுக்கென்று எழுந்து வாசல் வரை சென்ற ஜெயகாந்தன் விறுவிறுவென்று திரும்பிவந்து, ‘நீதான் திருமணத்திற்கு வரப்போவதில்லையே! உனக்கெதற்கு அழைப்பிதழ்?’ என்று அழைப்பிதழைப் பறித்துக்கொண்டு வெளியேறிவிட்டாராம்.
இந்தச் சம்பவத்தை ஒரு நண்பரின் வாய்மொழியாக அறிந்தேன்.
கண்ணதாசன் வரியைப் பொருத்தி ஜெயகாந்தனை நினைத்துக்கொண்டேன்.
“சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?”
இது வைரமுத்து அவர்கள் ஜெயகாந்தனை வைத்து விளம்பரம் தேடியும், இளையராஜா மீதான ஆத்திரத்தையும் தீர்த்துக் கொண்ட பழைய கதை.
ஆனால் ஜெயகாந்தன் மரணத்தை அடிப்படையாக வைத்து “வைரமுத்து சிறுகதைகளை வாழ்த்தி ஜெயகாந்தன் அனுப்பிய இந்தக் கடிதம்தான் அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம்” என்று குமுதம் பத்திரிக்கை எழுதியிருப்பது மிகவும் கேவலமானச் செயல்.
ஜெயகாந்தன்தான் உயிரோடு இல்லையே ? அவர் இனி எழுந்து வந்து இதற்கு மறுப்பு கொடுக்கவா போகிறார் என்ற இறுமாப்புதானே இவர்களுக்க?. ஒரு மாமனிதரின் மரணத்தை வைத்து விளம்பரம் தேடும் இவர்களை எந்த கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்வது?
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Munraam-ulakappor
“மூன்றாம் உலகப்போர்” நூல் வெளியீட்டின்போது ஜே.கே., கலைஞர்,கமலஹாசன், வைரமுத்து
 
வைரமுத்துவைப் பொறுத்தவரை ஜே.கே. கடைசிவரை ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்தார் என்பது உண்மை. வைரமுத்துவின் “மூன்றாம் உலகப் போர்” புத்தக வெளியீட்டு விழாவில் ஜெயகாந்தன், கலைஞர் கருணாநிதி, கமலஹாஸன் உட்பட பல பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெயகாந்தன். ‘ஓசோனில் ஓட்டை விழுந்தால் உமக்கென்ன ஆயிற்று. அந்த ஓட்டையை வியாபாரமாக்குகிறாயா..?. படைப்புகள் மனிதர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். பயத்தை ஏற்படுத்தக்கூடாது” என்று தன் வழக்கமான பாணியில் வைரமுத்துவை கண்டித்தார். அப்படிப்பட்ட ஆளுமையுள்ள மனிதர் ஜே.கே..
ஜெயகாந்தன் Vs வைரமுத்து Jayakanthan270409_1
வேறொரு விழாவின்போது கமலஹாஸன், ஜே.கே., வைரமுத்து
 
ஜெயகாந்தன் மீது வைரமுத்துவிற்கு எப்பொழுதுமே ஒரு “Hero Worship” உண்டு. அந்த எண்ணத்தில் இந்த இடைப்பட்ட தரகர்களின் சூழ்ச்சிக்கு வைரமுத்து இலக்கானார் என்பதில் சற்றும் வியப்பில்லை. இந்த விளையாட்டில் போதிய பங்கு அந்த குமுதம் நிருபருக்கு உண்டு என்பது நிரூபணம்.
தன் அருமை தந்தையை இழந்து வாடும் ஜெயகாந்தனின் புதல்வி தீபாவுக்கு இவர்களுடைய இந்த கீழ்த்தரமான விளம்பர வெறி எந்த அளவுக்கு அவருடைய மனதை புண்படுத்தியிருக்க வேண்டும் என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும். முகநூலில் அவரெழுதியிருப்பது அவரது உள்ளக்கிடக்கை.
ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர் திரு வி.என்.சுப்பிரமணியன் அவர்களிடம் இன்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன். கடந்த மாதம் சூர்யா மருத்துவமனையில் ICU வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவரை காணச் சென்றபோது “நான் VNS வந்திருக்கிறேன்” என்று இவர் அழைத்தபோதும் கூட ஜெயகாந்தனால் சரியாகப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஒரு குழந்தையைப் போன்ற மன நிலையிலிருந்த அவர் வைரமுத்துவின் சிறுகதைகளை படிக்கச் சொல்லி வாழ்த்தி ஒரு கடிதமாகவே எழுதி ஒரு ஆள் மூலம் அனுப்பி வைத்தார் என்பது நம்பும்படியாகவா இருக்கிறது. அதுவும் அவர் இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு என்பதாகப் பேச்சு.
தீபாவின் சோகத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் நாம், இந்த கீழ்த்தரமான விளையாட்டை நிகழ்த்தியவர்கள் யாராக இருப்பினும் அவர்களின் கேவலமானச் செயலை வன்மையாக  கண்டிக்க நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.

– அப்துல் கையூம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 16, 2015 6:05 pm

ஜெயகாந்தன் - வைரமுத்து சர்ச்சை!-என் யூகம் சரிதான்


ஜெயகாந்தன் Vs வைரமுத்து Jaykay




குமுதம் வார இதழில் 'வைரமுத்து சிறுகதைகள்' எனும் நெடுந்தொடரைப் பாராட்டி ஜெயகாந்தன் அவர்களின் பெயரிலான கடிதம் வெளிவந்தது தொடர்பான சர்ச்சையில் கடும் மன உளைச்சலுக்கு ஆளானவர்களில் நானும் ஒருவன்.

நான் ஜெ.கே. மீது வழிபாட்டுணர்வு கொண்ட அபிமானி என்பதும் கவிஞர் வைரமுத்துவுக்கு வேண்டியவன் என்பதும் என் இலக்கிய முன்னோடிகளும் நண்பர்களும் நன்கறிந்த விஷயம்.

ஜேகே யின் ஓரிரு நூல்களைப் படித்தவர்களுக்குக் கூட அந்தக் கடிதம் அவரின் எழுத்துப் பாணியில் இல்லை என்பது நன்றாகத் தெரியும் .எனவே செய்தி வெளிவந்த போதே கவிஞர் வைரமுத்துவிடம் தொடர்பு கொண்டு பேசினேன். "ஜே.கே. தரப்பிலிருந்து உங்களிடம் யார் பேசினார்கள், கடிதம் அனுப்பும் வேலையை யார் ஒருங்கிணைத்தார்கள் என்பதையெல்லாம் நீங்கள் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்குமே' என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்தேன். 'கொஞ்சம் பொறுமையாக இருங்கள்' என்று சொன்னார்.இதில் திரு யு.எஸ்.எஸ்.ஆர்.நடராஜன் முக்கியப் பங்கு வகித்திருப்பார்  யூகித்தேன்.

ஜெயகாந்தன் Vs வைரமுத்து Vm%2Bpic


இன்று வெளிவந்துள்ள நக்கீரன் இதழில் இது தொடர்பான கட்டுரை வெளிவந்துள்ளது. இதில் திரு.நடராஜன்,தான் ஜேகே யிடம் கவிஞர் வைரமுத்துவின் சிறுகதையை வாசித்துக் காட்டியதாகவும்,ஜே.கே மெல்லிய குரலில் 'நல்லாயிருக்கே'என பாராட்டியதாகவும் இதைக் கேள்விப்பட்டு ஆனந்தப்பட்ட கவிஞர் வைரமுத்து சிறுகதைகள் தொகுக்கப்படும் போது பயன்படுத்த ஜேகே ஒரு வாழ்த்துமடல் தருவாரா என்று கேட்டதாகவும் சொல்லியுள்ளார்.


ஜேகே ஒப்புதலின் பேரில் தானும் ஜேகே அவர்களின் இரண்டாவது மனைவி திருமதி கௌசல்யா அவர்களும் அந்தக் கடிதத்தின் வரைவைத் தயாரித்து ஜேகேயிடம் படித்துக் காட்டி அவர் கையெழுத்து போட முடியாத நிலையில் பழைய கையெழுத்தை ஜேகே ஒப்புதலுடன் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


மாடியில் இருந்த ஜேகே மகள் தீபா அவர்களுக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருக்காது என்னும் திரு.நடராஜன்,திருமதி கௌசல்யாதான் ஜே.கேவின் இலக்கிய உதவியாளர் என்றும் தெரிவிக்கிறார்.


//அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது.// என்று ஜேகே அவர்கள் மகள் தீபாசொன்னதை நக்கீரன் சுட்டிக் காட்டியுள்ளது.

ஜெயகாந்தன் Vs வைரமுத்து 20150425_081908

ஜெயகாந்தன் Vs வைரமுத்து 20150425_081943



ஜேகேஒப்புதலுடன் அனுப்பப்பட்ட கடிதம் என்பதை இவர்கள் முன்னரே தெளிவுபடுத்தி, இது ஜேகே யின் கடைசி எழுத்து என்ற வரியையும் நடராஜன் தவிர்த்திருந்தால் விஷயம் இவ்வளவு பெரிய சிக்கலாகியிருக்காதோ என்னவோ.


மரபின் மைந்தன் முத்தையா - வெற்றித்தமிழர் பேரவையின் செயலாளர்
வைரமுத்துவின் அணுக்கத் தொண்டர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 17, 2015 12:20 pm

நன்றி ஆதிரா !
இன்றைய தலைமுறைக்கு வேண்டுமானால் JK யை பற்றி அதிகம் தெரியாமல் இருக்கலாம் .
இன்றைய தலைமுறைக்கு முக வின் அரசியல், மதியுகம் தெரியும் .இறந்தவரின் பெயரைக் கூறி ,என்னைத் தனியே அழைத்து ,இதை செய்யச் சொன்னார் , இன்னாரை பற்றி அன்றே வருத்தப்பட்டுக் கொண்டார் என்பார் . அந்த பெயர் பட்டியலில் , ராஜாஜி ,காமராஜர் , அண்ணா , இந்திரா காந்தி  எல்லோரும்  இருப்பர் .  உண்மையா என்று எப்பிடி பரிசோதிக்க முடியும் .
இதைக் உத்தியை கடைபிடிக்கும் வித்தகர்கள் உண்டு .
பதவியில் இருப்பவர்களை ஜின்க் ஜின்க் அடிக்கும் / அடித்த கவிஞர்களையும்
நாம் அறிவோம் .
பெயர் /பதவி /அதிகாரம் /ஆளுமை  விரும்பாத மனித குலம், காண்பது அரிது .

JK யை பற்றி பேசி விட்டு ,
மற்றவர்களை பற்றி பேசுவதே ,
JK க்கு நாம் இழைக்கும் அநீதி என்று என் மனதில் படுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 17, 2015 1:24 pm

T.N.Balasubramanian wrote:நன்றி ஆதிரா !

JK யை பற்றி பேசி விட்டு ,
மற்றவர்களை பற்றி பேசுவதே ,
JK க்கு நாம் இழைக்கும் அநீதி என்று என் மனதில் படுகிறது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1137046

அது எப்படி அநீதி ஆகும் ரமணீயன் சார். ஒருவரின் இறப்பை எப்படியெல்லாம் தமக்குச் சாதகமாகப் பயன் படுத்திக்கொள்கின்றார்கள்  என்பது ஒரு புறம் இருக்கட்டும். அன்றாடச் செய்திகளாவது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா?


வரலாறு முக்கியம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 17, 2015 5:30 pm

aadhira wrote:ஒருவரின் இறப்பை எப்படியெல்லாம் தமக்குச் சாதகமாகப் பயன் படுத்திக்கொள்கின்றார்கள்
அதன் தாக்கம் தான் , அநீதி என்கிற வார்த்தையின் பிரயோகம்

வரலாறு முக்கியம் தான் , அப்போதுதான் எல்லாரையும் அறிய முடிகிறது .புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun May 17, 2015 7:53 pm

எரிகின்ற வீட்டில் பிடுங்குவது என்பார்களே.....அது இதுதானா ?!!! சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக