ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 ayyasamy ram

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 ayyasamy ram

திரைப் பிரபலங்கள்
 heezulia

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 மூர்த்தி

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 மூர்த்தி

தெரிஞ்சதும் தெரியாததும்
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 krishnanramadurai

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 ayyasamy ram

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 ayyasamy ram

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 ayyasamy ram

நாச்சியார் விமர்சனம்
 ayyasamy ram

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 ayyasamy ram

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 T.N.Balasubramanian

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 T.N.Balasubramanian

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 SK

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
 SK

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 SK

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
 SK

மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
 SK

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 SK

நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
 SK

பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
 SK

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
 SK

நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
 SK

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 SK

புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
 SK

ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
 SK

பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
 ayyasamy ram

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: ரஜினிகாந்த்
 ayyasamy ram

சிரவணபெளகொலாவில் மஹாமஸ்தாபிஷேக விழா இன்று துவக்கம்
 Dr.S.Soundarapandian

சனீஸ்வரா காப்பாத்து!
 Dr.S.Soundarapandian

கூகிளில் இரண்டு புதிய மாற்றம்.
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(464)
 Dr.S.Soundarapandian

ஒரு ஆங்கில வார்த்தைக்கு 47 தமிழ் வார்த்தைகள்
 மூர்த்தி

பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
 SK

நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
 gayathri gopal

ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
 SK

திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது: இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவால் 5 ஆயிரம் பேர் பாதிப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள்

View previous topic View next topic Go down

பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள்

Post by johnfkennedymca on Tue May 26, 2015 8:10 pm

பூண்டி மகான்.
வடஆற்காடு மாவட்டத்தில் போளுர்
தாலுகாவில் உள்ளது பூண்டி என்னும்
சிறிய கிராமம். அங்கு வாழ்ந்து பல
அற்புதங்களை நிகழ்த்தியவர் பூண்டிமகான்
ஆவார்.
எப்போதும் கையில் ஓர் அழுக்குத் துணி மூட்டை உடலையே சட்டை பண்ணாத அவர் அணிந்திருந்ததோ சட்டைக்குமேல் பற்பல சட்டைகள். இப்படி ஒரு மகான் வாழ்ந்தார். அருளுருவில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கும். அவர்தான் பூண்டி மகான் என்றும், ஆற்று சுவாமிகள் என்றும் அடியவர்களால் பக்தியோடு அழைக்கப்படும் சித்த புருஷர். இன்றும் அவரை வழிபடுபவர்களுக்கு வற்றாத அருள்புரிந்து காத்துக் கொண்டிருக்கிறார் அந்த மாபெரும் மெய்ஞ்ஞானி. அந்த மகாஞானி ஸித்தி அடைந்துவிட்டாரா இல்லையா? ஸித்தி அடைந்துவிட்டதாகத்தான் சொல்கிறார்கள். ஆனால் தன் அடியவர்கள் சிலருக்கு இன்றும் நேரில் அவர் காட்சி தருவதாகவும் சொல்கிறார்கள் என்றும் வாழும் சித்தர்கள் எப்படி ஸித்தி அடைய முடியும்? அவரின் வாழ்க்கைச் சரித்திரம் அவர் நிகழ்த்திய அற்புதங்களின் மொத்தத் தொகுப்பாக இருக்கிறது. அவர் நிகழ்த்திய அற்புதங்கள் நம்பக் கஷ்டமானவை. ஆனால் அடியவர்கள் அவர் மேல் கொண்ட நம்பிக்கை காரணமாக அந்த அற்புதங்கள் உண்மையிலேயே நிகழ்த்தப்பட்டவை. நம்பக் கஷ்டமானவற்றைக் கூட நிகழ்த்திக் காட்டுவதுதானே சித்தர்களின் தவ ஆற்றலின் மகிமை?

பூண்டி மகான் எந்த ஊரைச் சார்ந்தவர்? அவர் எவ்விதம் துறவியானார்? இதுபோன்ற வினாக்களுக்கு இன்றுவரை விடையில்லை. அவர் எங்கிருந்தோ ஒருநாள் பூண்டிக்கு வந்தார். அது பூண்டி செய்த பாக்கியம். பின்னர் அவர் அங்கேயே தங்கினிட்டார். அதனாலேயே அவர் பூண்டி மகான் என்று அடியவர்களால் அன்போடு அழைக்கப்படலானார். அவருக்கு மக்கள் இன்னொரு திருநாமத்தையும் சூட்டினார்கள்- ஆற்று சுவாமிகள் என்று! பூண்டி கலசப்பாக்கம் ஆற்றங்கரையில் எந்நேரமும் யோகத்தில் ஆழ்ந்திருந்ததால் அவரை ஆற்று சுவாமிகள் என்றழைக்கும் வழக்கம் தோன்றியது. ஆனால் யோசித்துப் பார்த்தால் இந்தப் பெயருக்கு நாம் இன்னொரு பொருளையும் காணமுடியும். தன் ஆன்மிகத் தவ ஆற்றலால் மக்களை நன்னெறிப்படுத்தி ஆற்றுப்படுத்தியவர் அவர். ஆற்றுப்படுத்துபவரை ஆற்று சுவாமிகள் என்றழைப்பது பொருத்தம் தானே? அவரை முதலில் பார்த்தவர்கள் ஏதோ பைத்தியகாரர் போலிருக்கிறது என்றுதான் நினைத்தார்கள். அவருக்கு நிரந்தரமாக ஒரு பைத்தியம் பிடித்திருந்தது என்பதும் உண்மைதான். அதுதான் கடவுள் பித்து. ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றி சாரதா தேவியிடமும் ஸ்ரீஅரவிந்தரைப் பற்றி அவரது மனைவி மிருணாளினியிடமும் ஒரு பைத்தியத்திற்கல்லவா உங்களைக் கட்டி வைத்து விட்டார்கள்? என்றுதானே உறவினர்கள் சொன்னார்கள்? இறைநிலையில் தோய்ந்த மகான்களைப் பைத்தியக்காரர்கள் என்று சொல்லும் உலகியல் மரபிலிருந்து பூண்டி மகான் மட்டும் எப்படித் தப்பிக்க முடியும்?

அவரைத் தொடக்கத்தில் பைத்தியம் என்று நினைத்தவர்கள் மெல்ல மெல்ல அவர் பைத்தியமில்லை. மாபெரும் மகான் என்று உணரத் தலைப்பட்டார்கள். தங்கள் வாழ்வில் நேரும் துயரங்களுக்கெல்லாம் அவரையே சரண் புகுந்தார்கள். ஆற்றங்கரையில் தவம் செய்த அவரது அருள் சக்தி மக்களை நோக்கி ஆற்று வெள்ளமாகப் பாய்ந்தது. முன்வினை காரணமாக மனிதர்களுக்கு நேர்ந்த எல்லா உலகியல் துன்பங்களையும் தம் அருளாற்றலால் நீக்கி மக்களுக்கு நல்வாழ்வை அருளினார் அவர். பின்னாளில் அவரது மகிமை உணர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக அவரைப் போய் வணங்குவதும் வழக்கமாயிற்று. ஆனால் இயன்றவரை எப்போதும் கூட்டத்திலிருந்து தனிப்பட்டே அவர் வாழ்ந்தார். அந்த சித்த புருஷரை பூண்டியில் முதலில் பார்த்தவர்கள் சில விவசாயிகள்தான். ரமணரை சேஷாத்ரி பரப்பிரும்மம் இனங் கண்டு உலகிற்கு அறிவிக்கவில்லையா? அது போலான பெரும் பெருமை அந்த விவசாயிகளுக்குக் கிட்டியது. ஆன்மிக உலகம் ஊர் பெயர் தெரியாத அந்த விவசாயிகளை என்றும் நன்றியோடு நினைக்க வேண்டியது அவசியம்.

கையில் ஏரும் கலப்பையுமாக வந்து கொண்டிருந்த அவர்கள், நாகதாளி முட்புதரில் உள்ளே சிக்கியவாறு அமர்ந்து மோனத்தவத்தில் ஆழ்ந்திருந்த அவரை தரிசித்தார்கள். யார் இவர்? முட்புதரின் அடர்த்திக்குள் இவர் எப்படிப் போய் உட்கார்ந்தார்? இவர் உட்கார்ந்த பின்னர் முட்புதர் வளர்ந்து இவரை முடியதா? அல்லது முட்புதருக்குள் ஒரு செடிபோல இந்த விந்தையான மனிதச் செடி தானாகவே முளைத்ததா? அவர்கள் மிகுந்த கவனத்தோடு முட்புதரை வெட்டி சுவாமியை எடுத்து வெளியே வைத்தார்கள். மூச்சு வந்துகொண்டிருந்ததால் அது மனித உருவம்தான் என்று புரிந்தது. இல்லாவிட்டால் ஒரு சிலை என்றுதான் கருதியிருப்பார்கள். அசைவே இல்லை முகத்தைப் பார்த்தால் குழந்தைபோல் இருந்தது. அவரைப் பார்க்கப் பார்க்க அவர்மேல் அளவற்ற பிரியம் எழுந்தது. கோவிலில் இருக்கும் சிலைக்கும் இந்த மனித உருவத்திற்கும் அதிக வித்தியாசத்தை அவர்களால் காண இயவில்லை. அவர்கள் பக்தியோடு அவரையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார்கள். திடீரென எழுந்தார் பூண்டி மகான் சரசரவென்று கம்பீரமாக நடக்கத் தொடங்கினார்! அது நடையல்ல; ஓட்டம் விவசாயிகள் அவரைத் துரத்திக் கொண்டு ஓடினார்கள்!

கொஞ்சம் கஞ்சி சாப்பிடுங்கள், கொஞ்சம் கூழ் சாப்பிடுங்கள்! என்று வேண்டினார்கள். அவர் அந்த எளிய உழவர்களின் அன்பான உபசாரம் எதையும் மறுக்கவில்லை கொடுத்ததை வாங்கிக் குடித்தார். எதுவும் வேண்டுமென்றும் அவர் கேட்கவில்லை. ஆற்று மணலின் இன்னொரு இடத்தில் அமர்ந்து நிஷ்டையில் ஆழ்ந்தார். அவ்வளவு தான் மறுபடி அசைவே இல்லாத சிலையாகிவிட்டார்! பசி என்றோ தாகம் என்றோ அவர் என்றும் எதுவும் சொன்னதில்லை எங்கோ சூனியத்தை வெறித்த ஒரு நிலைகுத்திய பார்வை. சுற்றுப்புறச் சூழலை முற்றிலும் மறந்த ஒரு மோன நிலை. ஆற்றங்கரையை விட்டால், காக்கங்கரை விநாயகர் கோவில் வாயில் படியில்தான் அவர் பெரும்பாலும் அமர்ந்திருப்பார். சந்தைக்கு வரும் மக்கள் கூட்டத்தைப் பராக்குப் பார்த்துக் கொண்டிருப்பார் எங்கோ வெறித்த பார்வை. சிலர் அவருக்கு டீ வாங்கிக் கொடுப்பார்கள். அதைச் சாப்பிடுவார்.

யாரும் எதுவும் கொடுக்கவில்லையா? வேண்டும் என்று எதையும் கேட்க மாட்டார். நேரே ஆற்றங்கரைக்குப் போவார். கைப்பிடியளவு மணலை எடுப்பார். அதைப் சாப்பிட்டு ஆற்றுத் தண்ணீரை அள்ளிக் குடிப்பார்! அவர் சாப்பிட்ட மணல் அவரளவில் எந்தக் கெடுதலும் செய்யாமல் ஜீரணம் ஆயிற்று என்பதுதான் விசேஷம்! மண்ணுக்குள் உடல் போகப்போகிறது. இப்போது உடலுக்குள் மண் போகட்டும் என்று நினைத்தாரோ என்னவோ! அவர் மணலைச் சாப்பிடும் வைபவத்தை ஒருநாள் ஓர் அன்பர் பார்த்து விட்டார். பார்த்தவர் திகைப்பில் ஆழ்ந்தார். ஆனால் ஆற்று சுவாமிகளோ, மேலும் ஒரு கைப்பிடி மணலை எடுத்து, நீயும் சாப்பிடுகிறாயா என்று சைகையால் வினவியபோது அன்பருக்கு அடிவயிறு கலங்கியது! ஆற்று சுவாமிகள் ஏதோ பலகாரம் சாப்பிடுவதுபோல் மணலை சாப்பிடுகிறார் என்ற செய்தி ஊர் முழுவதும் பரவியது. மக்கள் திகைப்படைந்தார்கள். ஜாதி மத வேறுபாடுகளை ஒருநாளும் அவர் பார்த்ததில்லை. நிறைய முஸ்லிம்கள் வெகு பிரியமாக அவருக்குக் கூழ் கொடுப்பார்கள். அவர் ஆனந்தமாக அந்தக் கூழை அருந்தி மகிழ்வார்.

கலசப்பாக்கம் பாலகிருஷ்ண முதலியாருக்கு அவர்மேல் பிரியம் அதிகம். அவர் ஒரு சோடாக்கடை வைத்திருந்தார். அந்த சோடாக் கடைப்பக்கமாக வந்து சுவாமிகள் அவ்வப்போது அமர்வதுண்டு. சுவாமிகளுக்கு சோடாவோ கலரோ கொடுப்பார் அவர். சுவாமிகள் அதை வாங்கிக் குடித்துவிட்டுப் போய்விடுவார். சில நேரங்களில் அவர் செய்யும் சித்துகள் வியப்பைத் தரும், நல்ல உச்சி வெய்யிலில், நடந்தால் கால் பொரியும் ஆற்றங்கரை மணலில் ஏதோ பஞ்சு மெத்தையில் படுத்திருப்பது போல் சுகமாகப் படுத்துக் கொண்டிருப்பார். அப்படியே நிஷ்டையிலும் ஆழ்ந்து விடுவார். அந்தப் பக்கமாக வரும் பள்ளி மாணவர்கள் அவர் உடலை அசைத்துப் பார்ப்பார்கள். தேக்குக் கட்டைப்போல் உறுதியான உடல் அவருக்கு. அதில் எந்த அசைவும் இருக்காது. எறும்பும் பூச்சிகள் சிலவுர் அவர் உடலில் ஊர்ந்துகொண்டிருக்கும். மாணவர்கள் அந்த எறும்பையும் பூச்சிகளையும் ஊதி அகற்றி விட்டு, அவரது பாதத்தைத் தொட்டுக் கும்பிட்டு விட்டுச் செல்வார்கள். சுவாமிகளுக்கு எறும்பு ஊர்ந்ததும் தெரியாது; சிறுவர்கள் தன் பாதங்களைத் தொட்டு கும்பிட்டதும் தெரியாது.

அப்படியே படுத்திருப்பவர் இரவெல்லாம் அங்கேயேதான் கிடப்பார். வெய்யில் மாறி மழை கொட்டு கொட்டென்று கொட்டும். அந்த மழைநீரில் அவர் உடல் கட்டைப்போல் அப்படியேதான் கிடக்கும். இப்படி அந்த வைபவம் பல நாட்கள் நீடிக்கும். பின்னர் பழையபடி எழுந்து கடைகளுக்கு வரத் தொடங்குவார். பூண்டி மக்களெல்லாம் அவரை தெய்வமென்றே கருதினார்கள். சிறுவர்களுக்குத் தேர்வு வந்துவிட்டால் போதும். பூண்டி சுவாமிகளை மாணவர்கள் ஏராளமான பேர் சூழ்ந்து கொள்வார்கள் சாமி! நான் பரீட்டையில் தேறுவேனா? என்று ஆர்வத்தோடு கேட்பார்கள். சிலர் கேள்விக்குத் தலையாட்டுவார் சுவாமிகள் வேறு சிலர் கேள்விக்குப் பேசாமல் இருந்து விடுவார். சில சிறுவர்கள் வரும்போது அவர்களை அவர் அழைக்கும் விதமே அலாதி ஒரு சிறுவனை அடேய் ஜட்ஜ்! இங்கே வாடா! என்று அழைப்பார். அந்தச் சிறுவன் பிற்காலத்தில் ஜட்ஜ் ஆனான் என்பதுதான் விசேஷம் இப்படி மற்றவர்களின் எதிர்காலத்தை முன்னரே அவர் கணித்துச் சொன்ன சம்பவங்கள் அவர் வாழ்வில் அதிகம்.
ஒருநாள் இம்மகான்
அவ்வூரில் உள்ள செய்யாற்றின்
கரையோரம் சமாதியில் ஆழ்ந்திருந்தபோது ஆற்றில்
திடீரென வெள்ளம்
பெருக்கெடுக்க ஆரம்பித்தது.
இதனைக்கண்ட கிராமமக்கள் ஒரு மூங்கில் கூடை
மூலம் மகானைக் காப்பாற்ற
முயன்றார்கள். வெள்ளம் மேலம்
தீவிரமாகவே மூங்கில்கூடையுடன் மகானை
வெள்ளம் இழுத்துச் செல்ல, மக்கள்
மட்டும் தப்பினர். சிலநாள் கழித்து
வெள்ளநீர் வடிந்தபோது ஓரிடத்தில் அந்த
மூங்கில்கூடை தெரியவே கிராமமக்கள்
சென்று பார்த்தபோது மகான் எப்போதும்
போல சமாதிநிலையில் இருந்தார். அவருக்கு
எந்த பாதிப்பும் இல்
லை. உடலினை பல துண்டுகளாக பிரித்து
மீண்டும் ஒன்றாக்கிக்
கொள்ளக்கூடிய நவகண்டயோகம்
எனும் அற்புத சித்தியும் படைத்தவர் பூண்டி
மகான்.
ஒருமுறை மகானிடம் மதிப்பும், மரியாதையும்
கொண்ட ஒரு பக்தர் தனது மகளின்
திருமணத்திற்கு பணம் இல்லையெனக்கூறி
தன்மகளின் திருமணம் நல்லபடி நடக்க ஆசி
வழங்கும்படி கேட்க, மகானோ 'கவலைப்படாதே,
எல்லாம் நல்லபடி நடக்கும். உனது வீட்டுக்கு
பக்கத்தில் உள்ள விவசாயிடம் பழைய தேய்ந்த
கொலுவு ஒன்று வாங்கிவா'
என்றார். கொலுவு என்பது ஏர்
கலப்பையின் கீழே அமைக்கப்படும்
இரும்பாலான நிலத்தைத் தோண்ட உதவும்
கருவியாகும்.
இது தேயத்தேய சிறிதுசிறிதாக கீழே இறக்கி
அமைப்பார்கள். அதிகம்
தேய்மானமாகிவிட்டால் அதனை
எடுத்துவிட்டு, வேறு புதிதாக
அமைத்திடுவார்கள். பழையது எதற்கும்
உதவாது. பழைய இரும்பென எடைக்குப்போட
மட்டுமே பயன்படும். அத்தகைய
கொலுவு ஒன்றை வாங்கிவரும்படி
பூண்டிமகான் சொன்னார். அந்த
பக்தரும் அதேபோல அவ்விவசாயியிடம்
கொலுவு ஒன்றை கேட்டு வாங்கிவந்து
மகானிடம் தந்தார். அந்த இரும்பு
கொலுவை வாங்கிய மகான் அதனை
சிலதடவைகள் தனது கையினால் தடவிட அந்த
இரும்புகொலுவு தங்கமாக
மாறியது. 'இதனை விற்று உனது மகளின்
திருமணத்தை நல்லபடி நடத்து போ' எனக் கூறி
மகான் அனுப்பிவைத்தார்.
பூண்டி மகான் அவர்கள் செய்த
எத்தனையோ அற்புதங்களில் இதுவும்
ஒன்றாகும். கையால் தொட்டு,
தனது யோகசக்தியின் மூலம் இரும்பைத்
தங்கமாக மாற்றுவது வள்ளலார்
குறிப்பிட்டதுபோல யோகசித்தி வகையைச்
சார்ந்ததாகும். நினைத்த நேரத்தில் ஒரு
சாதாரண உலோகத்தை உயர்ந்த (தங்க)
உலோகமாக மாற்றும் அற்புத சித்தியினை
பூண்டிமகான் பெற்றிருந்தார்.
அவர் அந்த சித்தியினைத் தன்சுய
நலத்துக்காகப் பயன்படுத்தாமல், பிறர்
நலனுக்காக மட்டும் பயன்படுத்தி வந்தார்.
சூட்சும உடலில் இன்றும் வாழ்ந்துவரும்
பூண்டி மகானை மனதார நினைத்து
வேண்டிக்கொள்ளுங்கள். நிச்சயம்
அவர் அருள் செய்வார்.
avatar
johnfkennedymca
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15
மதிப்பீடுகள் : 11

View user profile http://johnfkennedymca@gmail.com

Back to top Go down

Re: பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள்

Post by shobana sahas on Tue May 26, 2015 8:28 pm

 ஜான்.
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue May 26, 2015 8:47 pm

புதிய செய்தி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள்

Post by johnfkennedymca on Tue May 26, 2015 8:56 pm

நன்றி...
avatar
johnfkennedymca
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15
மதிப்பீடுகள் : 11

View user profile http://johnfkennedymca@gmail.com

Back to top Go down

Re: பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum