புதிய பதிவுகள்
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_c10வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_m10வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_c10 
21 Posts - 72%
ayyasamy ram
வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_c10வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_m10வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_c10 
8 Posts - 28%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_c10வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_m10வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_c10 
64 Posts - 72%
ayyasamy ram
வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_c10வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_m10வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_c10வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_m10வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_c10 
4 Posts - 4%
Rutu
வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_c10வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_m10வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_c10 
3 Posts - 3%
prajai
வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_c10வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_m10வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_c10 
2 Posts - 2%
Jenila
வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_c10வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_m10வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_c10வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_m10வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_c10வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_m10வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_c10 
2 Posts - 2%
manikavi
வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_c10வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_m10வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_c10 
1 Post - 1%
viyasan
வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_c10வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_m10வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 26, 2015 6:28 pm

1. செலவைத் திட்டமிடுங்கள்!

பட்ஜெட் போட நினைத்தாலே முதலில் ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு இந்த மாதத்துக்கு, இந்த விஷயத்துக்கு இவ்வளவுதான் செலவு என்று எழுதிவிடுகிறோம். ஆனால், மாதக் கடைசியில் பட்ஜெட் போட்ட பேப்பரை எடுத்து அதன்படிதான் நாம் செய்திருக்கிறோமா என்று பார்த்தால், இரண்டும் வேறுவேறு மாதிரி இருக்கும்.

இப்படி பட்ஜெட் போடுவது ஒன்று, செலவு செய்வது வேறு ஒன்று என்று இருந்தால், நீங்கள் போடும் பட்ஜெட் எதிர்பார்த்த பலனைத் தராது. பட்ஜெட் போடும்முன் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக நீங்கள் செய்யும் செலவுகள் என்னவோ, அதை அப்படியே எழுதுங்களேன். அப்போது நீங்கள் எந்த விஷயத்துக்கு அதிக செலவு செய்கிறீர்கள் என்பது அப்பட்டமாகத் தெரியும். எதற்கு அதிகம் செலவு செய்கிறீர்கள் என்பது தெரிந்தால், பட்ஜெட் போடும்போது தேவையான பணத்தை சரியாக ஒதுக்கலாம். அப்போது பட்ஜெட்டுக்கும் செய்த செலவுக்கு வேறுபாடு பெரிதாக இருக்காது.

2. எது சாத்தியமோ, அதைச் செய்யுங்கள்!

அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர், நாள் ஒன்றுக்கு மூன்று டீ, ஒரு பாக்கெட் பிஸ்கெட் என்று நாள் ஒன்றுக்கு ரூ.50 செலவழிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த மாதத்திலிருந்து நான் டீ மற்றும் பிஸ்கெட்டை விட்டுவிட்டு, பணத்தை மிச்சப்படுத்தப் போகிறேன் என தடாலடி முடிவெடுத்தால் என்ன ஆகும்? பிறகு ஒரே ஒரு டீ என்று ஆரம்பித்து, பிற்பாடு அது இரண்டாகி, கடைசியில் அது மூன்றில் போய் நிற்கும்.

இதற்கு பதிலாக, அடுத்த மாதத்திலிருந்து ஒரு நாளில் 2 டீ, ஒரு பாக்கெட் பிஸ்கெட் மட்டும் என்று முடிவெடுக்கலாம். அதற்கு அடுத்த மாதத்திலிருந்து 1 டீ, இரண்டு நாட்களுக்கு ஒரு பாக்கெட் பிஸ்கெட் என்று படிப்படியாக செலவைக் குறைத்தால், அது சாத்தியமான விஷயமாகவும் இருக்கும். இதை ஒழுங்காக கடைப்பிடித்தால், ஆபீஸில் டீ குடிப்பதையே விட்டு விடலாம்.

3. குறைந்த விலையில் பர்ச்சேஸ்!

வீட்டுக்கான எந்த பொருள் வாங்குவதாக இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு ஒரே கடையில் அல்லது ஒரே சூப்பர் மார்க்கெட்டில் வாங்குவது கூடாது. அதற்கு பதிலாக, நீங்கள் ரெகுலராக பொருட்களை வாங்கும் கடையைவிட விலை குறைவாகவும், தரமானதாகவும் வெளியில் வேறு கடைகளில் கிடைக்கிறதா என்பதை ஓய்வு நாட்களில் சுற்றித் திரிந்து தெரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக காய்கறிகள், பழங்கள் அழகாக அடுக்கப்பட்டு இருக்கும் ஏசி சூப்பர் மார்க்கெட்டுகளைவிட, மொத்த சந்தைகளில் வாங்கினால் விலை குறைவாக கிடைக்கும். இதனால் மாதாமாதம் பல நூறு ரூபாய் பட்ஜெட்டில் மிச்சமாகும்.

4. கிரெடிட் கார்டு ஜாக்கிரதை!

உங்களுக்கு அத்தியாவசியத் தேவை என்றால் மட்டுமே கிரெடிட் கார்டை வாங்குங்கள். தேவையில்லாமல் கிரெடிட் கார்டை வாங்கி, அந்த கார்டை பயன்படுத்தி எதையாவது வாங்கி கடனைத் திரும்பச் செலுத்தவில்லை என்றால் வங்கிக்கு 45% வட்டி கட்ட வேண்டியிருக்கும். இதனால், உங்கள் சம்பளத்தில் கணிசமான பணத்தை இழக்க வேண்டி இருக்கும். தற்போது உங்களுக்கு கிரெடிட் கார்டு கடன் பாக்கி இருந்தால், எப்பாடுபட்டாவது முதலில் அந்தக் கடனை திரும்பக் கட்டிவிடுங்கள். அப்போதுதான் வட்டியாக செலவழியும் பணம் உங்களுக்கு மிச்சம் ஆகும்.

5. விரலுக்கேத்த வீக்கம்!

உங்கள் வருமானம் எவ்வளவோ, அந்த அளவுக்கு உங்கள் செலவை அமைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, நீங்கள் 50,000 ரூபாய் சம்பளம் வாங்கினால், நீங்கள் ஒரு மாருதி ஸ்விஃப்ட் காரை வாங்க நினைப்பது நியாயம். ஆனால், ஆடியையோ, பி.எம்.டபிள்யூ காரையோ வாங்க நினைத்தால், அது விரலுக்கேத்த வீக்கமாக இருக்காது. இது கார் விஷயத்தில் மட்டும் அல்ல, வீட்டின் ஒவ்வொரு பொருளை வாங்கும்போதும் நம் தகுதியை நினைத்துக்கொண்டு செயல்படுவது அவசியம். பக்கத்து வீட்டுக்காரர்கள் இதை வாங்கிவிட்டார்களே, அதை வாங்கிவிட்டார்களே என்று நினைக்காமல், நமக்கு என்ன தேவையோ, நம்மால் எவ்வளவு செலவழிக்க முடியுமோ, அந்த அளவுக்கு மட்டுமே செலவு செய்வது நல்லது.

6. கடமைகளும் இலக்கும்!

உங்கள் நிதி சார்ந்த கடமைகள் வேறு; இலக்குகள் வேறு. உங்கள் குழந்தைகளின் படிப்பு, திருமணம் போன்றவை உங்கள் நிதி சார்ந்த கடமைகள். அதை உங்களால் தவிர்க்க முடியாது. அதற்கான முதலீட்டை நீங்கள் செய்துதான் ஆகவேண்டும். ஆனால், சொந்த வீடு, கார் வாங்குவது போன்றவை எதிர்கால இலக்குகள். இவற்றுக்காகவும் முதலீடு செய்வது அவசியம் என்றாலும் கட்டாயம் அல்ல.

வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! P61a

நீங்கள் பட்ஜெட் போடும் போது முதலில் கடமைக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலீடு செய்யுங்கள். இந்த கடமை முடிந்தபின்பு, உங்கள் எதிர்கால இலக்குகளுக்கும் முக்கியத்துவம் தந்து, முதலீட்டைத் தொடங்குங்கள். இதன் மூலம் உங்கள் எதிர்காலத் தேவைகளுக்கான தொகை சேர்ந்துகொண்டே இருக்கும். கடமைகளைப் பற்றியும் எதிர்கால இலக்குகள் பற்றியும் நீங்கள் எந்தக் கவலையும் படவில்லை என்றால், இன்றைக்கு உங்களால் தாராளமாக செலவு செய்ய முடியும். ஆனால், எதிர்காலத்தில் உங்கள் தேவைகளை சரியாக நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் தவிப்பீர்கள். இந்த சிக்கல் உங்களுக்கு வராமல் இருக்க, உங்கள் கடமைகளையும் எதிர்கால இலக்குகளையும் மறந்துவிடாதீர்கள்.

7. பட்ஜெட்... அப்டேட்!

சில நேரங்களில் பொருட்களின் விலை அதிகரிக்கும்போது நீங்கள் போட்டுள்ள பட்ஜெட் சரிபட்டு வராததாக இருக்கலாம். இருப்பினும் நீங்கள் போட்ட பட்ஜெட்டின்படியே செலவுகளை மேற்கொள்ளுங்கள். இப்படி கட்டுப்பாடாக இருப்பதால், உங்கள் எதிர்கால இலக்குகள் எந்தக் குறைபாடும் இல்லாமல் நிறைவேறும். இதனுடன் பண வரவுகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். உங்கள் வருமானம் அதிகரித்திருக்கும் போது மட்டும் உங்கள் பட்ஜெட்டை மாற்றுங்கள். அதிலும் செலவுகளை அதிகப்படுத்துவதைவிட சேமிப்பை அதிகப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறப்பு.

8. சர்வாதிகாரம் வேண்டாமே!

இன்று பலரது வீட்டில் கணவன் அல்லது மனைவி என்று யாராவது ஒருவர்தான் பட்ஜெட் போட்டு மொத்த குடும்பத்துக்கான செலவு களையும் நிர்வகித்து வருகின்றனர். இப்படி நிர்வகிப்பதால் குடும்பத்தில் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். பணத்தை நிர்வகிப்பவர் குடும்பத்தின் மீது சர்வாதிகாரம் செலுத்துவதாக தோன்றும்.

எனவே, இரண்டு பேரும் சேர்ந்து பணத்தைக் கையாளுவது சிறப்பாக இருக்கும்; அதே நேரத்தில் செலவுக்கான வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும். முக்கியமாக, பட்ஜெட் போடும்போது குழந்தைகளையும் அருகில் வைத்துக்கொள்வது நல்லது.

9. எமர்ஜென்சி ஒதுக்கீடு!

ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அவசரச் செலவுக்கு என ஒரு தொகையை ஒதுக்கி ரிசர்வில் வைத்துவிடுவது நல்லது. இந்த எமர்ஜென்சி பணத்தை அவசர மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மருத்துவச் செலவு எதுவும் வரவில்லை எனில், திருமணத்துக்கான மொய் எழுதுவது, அன்பளிப்பு வழங்குவது, வாகனப் பராமரிப்பு செலவுகள் போன்றவற்றுக்கும் பயன்படுத்தலாம்.

10. ஒதுக்கீட்டில் உறுதி!

வார இறுதியில் குடும்பத்துடன் நல்ல ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவதற்கு ஒரு தொகையை பட்ஜெட்டில் ஒதுக்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் ஒதுக்கிய தொகை தீர்ந்துவிட்டது. ஆனால், மீண்டும் ஒருமுறை ஓட்டலுக்கு அழைத்துச் செல்லும்படி உங்கள் குழந்தைகள் வற்புறுத்துகிறார்கள் என்றால், கேஸ் சிலிண்டருக்காக ஒதுக்கிய பணத்தை எடுத்து, ஓட்டலுக்கு அழைத்துச் செல்லக்கூடாது. திடீரென கேஸ் சிலிண்டர் வந்துவிட்டால், பணத்துக்கு அலைய வேண்டியிருக்கும். அல்லது கடன் வாங்க வேண்டியிருக்கும். இது மாதிரியான தர்மசங்கடங்களைத் தவிர்க்க, எந்த செலவுக்காக பணத்தை ஒதுக்கி இருக்கிறீர் களோ, அதற்கு மட்டுமே அந்த பணத்தைச் செலவழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்!

பட்ஜெட் போடும்போது இத்தனை விஷயங்களை கவனிக்க முடியுமா என்று மலைக்காதீர்கள். உங்களிடம் கொஞ்சம் ஒழுங்கு இருந்தாலே போதும், இதை எளிதாக செய்துமுடிக்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.
--விகடன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 26, 2015 6:43 pm

மிகவும் நன்று

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Tue May 26, 2015 6:46 pm

வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! 3838410834 வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! 103459460 வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 26, 2015 10:41 pm

ரொம்ப நல்ல பதிவு பாலாஜி புன்னகை .................... சூப்பருங்க
.
.
.
//விரலுக்கேத்த வீக்கம்!

உங்கள் வருமானம் எவ்வளவோ, அந்த அளவுக்கு உங்கள் செலவை அமைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, நீங்கள் 50,000 ரூபாய் சம்பளம் வாங்கினால், நீங்கள் ஒரு மாருதி ஸ்விஃப்ட் காரை வாங்க நினைப்பது நியாயம். ஆனால், ஆடியையோ, பி.எம்.டபிள்யூ காரையோ வாங்க நினைத்தால், அது விரலுக்கேத்த வீக்கமாக இருக்காது. இது கார் விஷயத்தில் மட்டும் அல்ல, வீட்டின் ஒவ்வொரு பொருளை வாங்கும்போதும் நம் தகுதியை நினைத்துக்கொண்டு செயல்படுவது அவசியம். பக்கத்து வீட்டுக்காரர்கள் இதை வாங்கிவிட்டார்களே, அதை வாங்கிவிட்டார்களே என்று நினைக்காமல், நமக்கு என்ன தேவையோ, நம்மால் எவ்வளவு செலவழிக்க முடியுமோ, அந்த அளவுக்கு மட்டுமே செலவு செய்வது நல்லது.//

இது ரொம்ப முக்கியம் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue May 26, 2015 10:57 pm

நல்ல படைப்பு. அனால் இது படி நடப்பது கொஞ்சம் கஷ்டம் தான். எப்படியோ செலவு மாதா மாதம் கூடத்தான் செய்யுது. வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! 103459460 வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 26, 2015 11:11 pm

shobana sahas wrote:நல்ல படைப்பு. அனால் இது படி நடப்பது கொஞ்சம் கஷ்டம் தான். எப்படியோ செலவு மாதா மாதம் கூடத்தான் செய்யுது. வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! 103459460 வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1138859

இல்லை ஷோபனா, முதலில் கஷ்டம் போல இருக்கும் ஆனால் 2 மாதத்தில் பிடிபடும் ................அப்புறம்..ஜாலி தான்............... லிங்க் தரேன் பாருங்கள்........புன்னகை

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 27, 2015 12:18 pm

நன்றி கிருஷ்ணம்மா நன்றி நன்றி நன்றி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed May 27, 2015 10:03 pm

krishnaamma wrote:
shobana sahas wrote:நல்ல படைப்பு. அனால் இது படி நடப்பது கொஞ்சம் கஷ்டம் தான். எப்படியோ செலவு மாதா மாதம் கூடத்தான் செய்யுது. வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! 103459460 வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1138859

இல்லை ஷோபனா, முதலில் கஷ்டம் போல இருக்கும் ஆனால் 2 மாதத்தில் பிடிபடும் ................அப்புறம்..ஜாலி தான்............... லிங்க் தரேன் பாருங்கள்........புன்னகை

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

மேற்கோள் செய்த பதிவு: 1138865

கண்டிப்பாக முயற்சி பண்ணறேன் கிருஷ்னாம்மா. நன்றி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2015 10:26 pm

shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:நல்ல படைப்பு. அனால் இது படி நடப்பது கொஞ்சம் கஷ்டம் தான். எப்படியோ செலவு மாதா மாதம் கூடத்தான் செய்யுது. வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! 103459460 வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1138859

இல்லை ஷோபனா, முதலில் கஷ்டம் போல இருக்கும் ஆனால் 2 மாதத்தில் பிடிபடும் ................அப்புறம்..ஜாலி தான்............... லிங்க் தரேன் பாருங்கள்........புன்னகை

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

மேற்கோள் செய்த பதிவு: 1138865

கண்டிப்பாக முயற்சி பண்ணறேன் கிருஷ்னாம்மா. நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1139027

லிங்கை போய் பார்த்திங்களா?....இல்ல நான் மேலே கொண்டு வரட்டுமா ஷோபனா? ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக