ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 T.N.Balasubramanian

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 KavithaMohan

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 KavithaMohan

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

அறிமுகம் வன்னி
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 SK

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 SK

ரமணியின் கவிதைகள்
 ரமணி

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 ayyasamy ram

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
 ayyasamy ram

தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Fri May 29, 2015 11:00 pm

Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:

......................................................

வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி

     போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி

தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை

      நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம் 
 
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.

Last edited by சரவணன் on Fri May 29, 2015 11:07 pm; edited 2 times in total
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Fri May 29, 2015 11:00 pm

1.  சிற்பனக்கினி உண்டனவழி சொல்லும்போது
          காணுமே காமரூபியாய் நிற்குபொன்னய
     வாணிலிய முகமுஞ் செய்தாய் நினைவுடன்
          சிந்தையாலே நேசமாய் நடக்குநன்றே!
 
பொருள்: மனைக்கால் வேணுமென்று வந்தழைத்த யிசைமானும் சிற்பனும் கூட போம்பொழுது காமரூபியாய் அழகுபெத்த ஸ்திரியை(பெண்ணை) கண்டால் மிகவும் நல்லது. லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாம். சர்வ சம்பத்துடன் வாழ்வார்கள். 

சிற்பனகினி என்று தொடங்கும் தொடர் ஒரு பாட்டாகும். விருத்த யாப்புடையது பல சொற்களும் தொடையும் சிதைந்துள்ளன. அதன் உரை காண்க:

Last edited by சரவணன் on Fri May 29, 2015 11:18 pm; edited 4 times in total

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Fri May 29, 2015 11:01 pm

2.      வலமிகச் செல்லும் பல்லி வாலிபயிடமுஞ் சொல்லில்
            பலமிக உயர னாகும் பாங்குடைக் கருமம் நன்றாம்
     குலமிகத் தளமும் நன்றாம் கொக்குறு காகம் நன்று...
            (இறுதி வரி கிடைக்கவில்லை)
 
பொருள்: தலத்திலே சிற்பனும் எசமானும் சென்று நின்றால், வெல்லைப்போர்வை, ரிஷபம், பசு, மான், மற்றும் னரவைக் கண்டால் மெத்த நல்லது. மனை எடுக்க நன்று. வாழ்வு சம்பத்து உண்டாகும்.

வலமிகச் சொல்லும் பள்ளி என்று தொடங்கும் பகுதி ஒரு பாட்டாகும் இதன் முதலடியில் பகுதி உரைக்கு இயைய "வாளுடை யிடப்பங்கானில் " என்றிருத்தல் வேண்டும், இப்பாடலின் இறுதி அடி சுவடில் இல்லை. 

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by Preethika Chandrakumar on Fri May 29, 2015 11:12 pm

avatar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 541
மதிப்பீடுகள் : 126

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Fri May 29, 2015 11:16 pm

3.      எறும்புதா னெழுகுவிடு போயிடித்தியை கண்டால்
              சேர்ந்திடு கரையானொத்தி சோவுபீடிலது கருதவேண்டாம்
        சுரும்புதா னின்றுயர்ந்து தாண்டிடவேண்டாம் வேண்டாம்
             கரும்புபோல் மொழியினாலே காட்டினன் காக்ஷிதானே.
 
பொருள்: மனைகோலப் பாக்கிற தலத்தில் எறும்பு ஒழுங்கு விட்டு போகவும், கரையான் புற்று இருப்பினும், வண்டு கீழ் பறக்கிலும் அந்த தலத்திலே மனைகோலலாகாது. நோவும் பிணியும் உயிர் சேதமும் உண்டு.

இரும்புதான் என்று தொடங்கும் பாடலில் பிழை உள்ளதாக தெரிகிறது. 
எறும்புதா னொழுங்கு விட்டுப் போயிடு மிடத்தை கண்டால் 
செறிந்திடு கரையா னோந்தி சேர்விடம்  கருத வேண்டாம் 
சுரும்புதா னின்று யர்ந்து தாழ்ந்திடின் வேண்டாம் வேண்டாம் 
கரும்பு போன் மொழியினாலே காட்டினன் காட்சி தானே  - என்று திருத்தம் காணலாம்.

Last edited by சரவணன் on Fri May 29, 2015 11:21 pm; edited 2 times in total

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Fri May 29, 2015 11:28 pm

4.   பாங்குடன் பரண்டையார்  தம் பன்னொடு வலத்தில்ப் பாடிப்
          பாங்குடநிடத்தில் போக தெயணியதால் வழியுமாகில்
    ஓங்கிய மனையும் நன்றாம் ஒள்ளியப்பயனுமுண்டாம் 
          தீங்குதான் வருவதில்லை செப்பியவண்ணன் தானே 

என்பது: சிற்பனும் எசமானனும் தலம் பார்க்குமிடத்தில் பாண்டி என்கிற கருங்குருவியிடத்திலே அணிகுரல் வழுவுமாகில் எடுத்த கருமம் நன்றாம், மனைகோலினால் வாழ்வு சம்பத்துண்டாம்.பாங்குடன் என்பது பாட்டு திருத்தம் வருமாறு: 
பாங்குடன் பகண்டை யார் தம்பண்னொடு வலத்திற் பாடிப் 
யான்குயுனிடத்திற் போகி யனிகுரல் வழுவுமாகில்
ஓங்கிய மனையும் நன்றா மொள்ளிய பயனு முண்டாம்
தீங்குதான் வருவதில்லை செப்பிய வண்ணந் தானே.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Fri May 29, 2015 11:42 pm

5. அருக்கனுஞ் சோமன் மேலு
           மண்டினால் மிகவே தாழ்ந்து
    திருத்திய மேற்கும் தெற்கும்
          சிறஞது பூமிமேலே
    வருத்தமில் வாழ்வாரெண்டு
           மனை தனை யெடுத்துக் கொள்ளும்
     கருத்துடை புலவோர்கெல்லாம்
           காரணம் விளம்பலுற்றாம்.
 
என்பது: வடக்கும் கிழக்கும் தாழ்ந்து. மேற்கும் தெற்கும் உயர்ந்து இருப்பதொரு பூமியில் மனைகோலினால் துன்பமில்லை, சுகத்தை கொடுக்கும். (இன்னும் முழு விளக்கத்தையும் யாரவது கொடும்பின் மிக்க நன்று)

அருக்கனுஞ் சோமன் என்பது பாட்டு, அதன் திருத்தம் வருமாறு:
அருக்கனுஞ் சோமன் மேலு மண்டினால் மிகவே தாழ்ந்து
திருத்திய மேற்குத் தெற்குஞ் சிறந்திடு பூமி மேலே
வருத்தமில்வாழ்வா ரென்று மனைதனை யெடுத்துக் கொள்ளும்
கருத்துடைப் புலவோர்க் கெல்லாங் காரணம் விளம்ப லுற்றாம்.   

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Sat May 30, 2015 2:49 pm

6. அந்தணர் தென்திசை அரசர் மேல்திசை
        வந்திடு வணிகாக வடதிசை யாகுமே
     கொந்தமிழ் கீழ்திசை சூத்திரற் காரும்
        தந்திடு நடுவறு பிறமலைத் தானமே.
 
மனை கோல ஊருக்கு திசை பார்க்கும் படி நாலு வர்ணத்தாருக்கும் –
பிராமணருக்கு தெற்கு திசையும் சூத்திரர்கு கிழக்கு திசையும் அரசருக்கு மேற்கு திசையும், வணிகருக்கு வடக்கு திசையும் இப்படி மனை கோலினால் குடியிருக்க நன்றாம். நடுவே பிரம்மஸ்தானம் விடுவது அம்பலமுமாம்.. 

அந்தணர் தென்றிசை அரசர் மேற்றிசை 
வந்திடு வணிகர்கு வடதிசை யாகுமே
சொந்தமாக் கீழ்த்திசை சூத்திரர்க் காகுமாம்
தந்திடு நடுவினிற் பிரமத் தானமே. என்று இந்த பாடலில் திருத்தம் காணலாம்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Sat May 30, 2015 3:06 pm

7. இனிதாகியமை வின் சுவைமண் மறையோன் 
         மனதாகிய கற்பது மன்னவர்க்காம்
   இனிதாகியதெ புரியான துமண் வசீயன்
         சொன்ன தாகிய கைத்தமண்  சூத்திரர்க்கு 

மனைகோல வேணுமென்ற தலத்தில் மண்ணின் சுவையானது 
தித்திப்பான மண் மறையோர்க்கு 
துவர்ப்பான மண் மன்னவருக்கு
புளித்த மண் வைசியருக்கு
கசப்பான மண் சூத்திரர்க்கு ஆகும்.

இப்பாடலின் திருத்தம்: வஞ்சிச்சந்த திருத்தம்;

இனிதாகிய வின்சுவை மண்மறையோன் 
மனதாய் துவற்பது மன்னவர்க்காம்
வனிதா புளி யானமண் வைசியருக்காம்
துனியாகிய கைத்தமண் சூத்திரருக்காம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி on Sat May 30, 2015 3:10 pm

நல்ல பகிர்வு. தொடருங்கள். புன்னகை புன்னகை

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Sat May 30, 2015 3:14 pm

@விமந்தனி wrote:நல்ல பகிர்வு. தொடருங்கள். புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1139785

தொடருறேன் தொடருறேன்...
நீங்க எப்படித்தான் கருட புராணம் உக்காந்து எழுதுநீங்கலோ?.....முழு பாடல்களையும் ஒரே நேரத்துல....ம்ஹூம்...முடியல!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி on Sat May 30, 2015 3:34 pm

@சரவணன் wrote:
@விமந்தனி wrote:நல்ல பகிர்வு. தொடருங்கள். புன்னகை புன்னகை

தொடருறேன் தொடருறேன்...
நீங்க எப்படித்தான் கருட புராணம் உக்காந்து எழுதுநீங்கலோ?.....முழு பாடல்களையும் ஒரே நேரத்துல....ம்ஹூம்...முடியல!

அது பாட்டு இல்ல சரவணா... உரைநடை. இப்படி சரியா பார்க்காம சொன்னா அப்புறம் மறுபடியும்... உடுட்டுக்கட்டை அடி வ

ஒரே நேரத்துல எங்க முடிஞ்சுது? ரொம்பவும் இக்கட்டான நேரத்துல தொடங்கிட்டேன். ஒரு கட்டத்துல அவசியம் இதை போட்டு தான் ஆகணுமானு கூட தோணுச்சு... ஆனா, எப்படியோ நம்மாட்கள் ஆதரவில வெற்றிகரமா முடிச்சிட்டேன்.

ஆனா, சரியான சாலஞ்சிங் ப்ரொஜெக்ட் சரவணன். அது மாதிரி தான் இன்னொன்னு தேடிட்டு இருக்கேன்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Sat May 30, 2015 7:51 pm

8.  திடமாகிய தென் சாரமனை சேர்மறையோன்
         குடசாரெனு மேல்சாரமனை சேர்வரசன்
     வடசாரெனுமனை யாளுது மாவணி கன்
          துடசாரமனை கீழ்சாரமனை சூத்திரர்க்கே!
 
தென்சாரைமனை வடக்கு வாசலுமாகில் மறையோர்க்கு
மேல்சார்மனையும் கிழக்கு வாசலும் மன்னவர்க்கு
வடசார்மனையும் தெற்கு வாசலும் வணிகர்க்கு
கீழ்சார் மனையும் மேற்கு வாசலும் சூத்திரருக்கு
 
திருந்திய பாடல்:
திடமாகிய தென்சார்மனை சேர்மரையோன்
குடசாரெனு மேல்சார்மனை கோலரசன்
வடசாரெனு மணியானது மாவணிகன்
தொடர்சாரமர் கீழ்சார்மனை சூத்திரருக்கே.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat May 30, 2015 7:57 pm

நன்று
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5305
மதிப்பீடுகள் : 1840

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Sat May 30, 2015 8:03 pm

9. நிவிலனாயனவை மைதன கிளையில் 
       மூத்தவர் தனக்கும் மனையிதானதே
   திசையில்மேல் திசையிருப்பூறி விருக்கும்
       பொன்குல மெளையவர் பூதலமார்க்கே.

அவனவன் குடியிருப்புக்குத் திசை பார்த்துச் சொல்வது. தனக்கு உயர்ந்த குலத்தோர், மறையோர், ஞானி, மாதா, பிதா, மாமன், தமையன் மற்றும் வயது மூத்தோருக்கு மேற்க்கே இருக்கலாகாது. துக்கங்காட்டும். அவர்களை தெற்கு, மேற்கு வைத்து,  தான் வடக்கு கிழக்குமாக இருந்தால் சுகத்தை கொடுக்கும்.  

(எங்கள் பகுதியில் இன்றும் பாகப்பிரிவினை செய்யும் போது மூத்த சகோதரர்க்கு மேற்கேயும், இளையவர்க்கு கிழக்கேயும் இடம் ஒதுக்குவது வழக்கத்தில் உள்ளது)

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by ராஜா on Sat May 30, 2015 9:55 pm

@சரவணன் wrote:9. நிவிலனாயனவை மைதன கிளையில் 
       மூத்தவர் தனக்கும் மனையிதானதே
   திசையில்மேல் திசையிருப்பூறி விருக்கும்
       பொன்குல மெளையவர் பூதலமார்க்கே.

அவனவன் குடியிருப்புக்குத் திசை பார்த்துச் சொல்வது. தனக்கு உயர்ந்த குலத்தோர், மறையோர், ஞானி, மாதா, பிதா, மாமன், தமையன் மற்றும் வயது மூத்தோருக்கு மேற்க்கே இருக்கலாகாது. துக்கங்காட்டும். அவர்களை தெற்கு, மேற்கு வைத்து,  தான் வடக்கு கிழக்குமாக இருந்தால் சுகத்தை கொடுக்கும்.  

(எங்கள் பகுதியில் இன்றும் பாகப்பிரிவினை செய்யும் போது மூத்த சகோதரர்க்கு மேற்கேயும், இளையவர்க்கு கிழக்கேயும் இடம் ஒதுக்குவது வழக்கத்தில் உள்ளது)
மேற்கோள் செய்த பதிவு: 1139885

உயர்ந்த குலத்தோர் என்றால் யார் சரவணா ?! ஏன் அவர்களுக்கு மேற்கே இருக்க கூடாது?!

எங்கள் பகுதிகளில் பாகபிரிவினையில் தெரு / ரோட்டுக்கு அருகில் இளைவருக்கும் அதன் பின் மூத்தவர்களுக்கும் பாகம் போகும்.

ஒரு வீட்டில் மூன்று பேர் என்றால் , இளையவர் பங்கு முதலிலும் , அடுத்தவர் பங்கு நடுவிலும் , மூத்தவர் பங்கு கடைசியாகவும் இருக்கும்

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Sat May 30, 2015 10:29 pm

உயர் குலத்தோர் என்று இந்த நூலில் சொல்லியிருப்பது உயர் சாதியினர் (பிராமணர்) ஆக இருக்கலாம்.ஏனெனில் இது வட மொழியிலிருந்து மொழி பெயர்க்கப் பட்டதாக தெரிகிறது - (இது இந்த காலத்திற்கு பொருந்தாது.. புன்னகை )

ஒரு வீட்டில் மூன்று பேர் இருந்தால் அண்ணனுக்கு மேற்கு, முதல் தம்பிக்கு நடுவில், கடை குட்டிக்கு கிழக்கு இப்படித்தான் எங்கள் ஊரில் வழக்கத்தில் உள்ளது அண்ணா....நீங்களும் சோதித்து பாருங்கள்.

அதாவது மூத்தவர் கிழக்கிலும் இளையவர் மேற்கிலும் இருத்தல் ஆகாது என்பது வழக்கம்..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி on Sat May 30, 2015 11:01 pm

@சரவணன் wrote:ஒரு வீட்டில் மூன்று பேர் இருந்தால் அண்ணனுக்கு மேற்கு, முதல் தம்பிக்கு நடுவில், கடை குட்டிக்கு கிழக்கு இப்படித்தான் எங்கள் ஊரில் வழக்கத்தில் உள்ளது அண்ணா....நீங்களும் சோதித்து பாருங்கள்.

அதாவது மூத்தவர் கிழக்கிலும் இளையவர் மேற்கிலும் இருத்தல் ஆகாது என்பது வழக்கம்..
ஆமாம், சொத்து பிரிக்கும் போது, எப்போதுமே மூத்தவருக்கு மேலாண்டையும் (மேற்கு / தெற்கு) இளையவருக்கு கீழாண்டையும் (வடக்கு / கிழக்கு) என்று தான் பிரிப்பார்கள். இது தான் வழக்கமும் கூட.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma on Sun May 31, 2015 1:02 am

நல்ல தொடர் சரவணன், தொடருங்கள் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by shobana sahas on Sun May 31, 2015 1:45 am

சிற்ப சாஸ்திரம் இந்த காலத்துக்கு பொருந்துமா? இதால் உண்மையாக நடை முறையில் நன்மை உள்ளத? யாரவது உண்மை சம்பவ மிருந்தால் விள்ளக்கவும் . என்ன? என்ன?
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by ராஜா on Sun May 31, 2015 1:12 pm

@சரவணன் wrote:உயர் குலத்தோர் என்று இந்த நூலில் சொல்லியிருப்பது உயர் சாதியினர் (பிராமணர்) ஆக இருக்கலாம்.ஏனெனில் இது வட மொழியிலிருந்து மொழி பெயர்க்கப் பட்டதாக தெரிகிறது - (இது இந்த காலத்திற்கு பொருந்தாது.. புன்னகை )

ஒரு வீட்டில் மூன்று பேர் இருந்தால் அண்ணனுக்கு மேற்கு, முதல் தம்பிக்கு நடுவில், கடை குட்டிக்கு கிழக்கு இப்படித்தான் எங்கள் ஊரில் வழக்கத்தில் உள்ளது அண்ணா....நீங்களும் சோதித்து பாருங்கள்.

அதாவது மூத்தவர் கிழக்கிலும் இளையவர் மேற்கிலும் இருத்தல் ஆகாது என்பது வழக்கம்..
மேற்கோள் செய்த பதிவு: 1139936

நான் பார்த்தது எனது கல்லூரி நண்பன் ஒருவனின் வீடு. அவர் அப்பா குடும்பத்தில் மூத்தவர் என்பதால் கடைசியில் இவர்கள் பங்கு (ஒரு சிறிய சந்து வைத்து அதில் மூன்று வீடுகளுக்கும் வாயிற்படி இருக்கும்) புன்னகை , அந்த தெரு தெற்கு வடக்கு தெருவாக இருந்ததால் நான் இப்படி குழம்பிட்டேன் போல.

அக்காவும் இதையே சொல்வதால் நீங்க சொல்வது தான் சரியாக இருக்கும்,

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Mon Jun 01, 2015 9:57 am

@ராஜா wrote:
நான் பார்த்தது எனது கல்லூரி நண்பன் ஒருவனின் வீடு. அவர் அப்பா குடும்பத்தில் மூத்தவர் என்பதால் கடைசியில் இவர்கள் பங்கு (ஒரு சிறிய சந்து வைத்து அதில் மூன்று வீடுகளுக்கும் வாயிற்படி இருக்கும்) புன்னகை , அந்த தெரு தெற்கு வடக்கு தெருவாக இருந்ததால் நான் இப்படி குழம்பிட்டேன் போல.

அக்காவும் இதையே சொல்வதால் நீங்க சொல்வது தான் சரியாக இருக்கும்,
அது மட்டும் இல்லை அண்ணா. தற்கொலை தூண்டும் மனை என்றும் உள்ளது...அதையும் சற்று நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Mon Jun 01, 2015 10:04 am

@shobana sahas wrote:சிற்ப சாஸ்திரம் இந்த காலத்துக்கு பொருந்துமா? இதால் உண்மையாக நடை முறையில் நன்மை உள்ளத? யாரவது உண்மை சம்பவ மிருந்தால் விள்ளக்கவும் . என்ன? என்ன?
முயற்சிக்கிறேன்...
வேறு யாரும் உதவலாமே!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Mon Jun 01, 2015 10:18 am

10. தெக்குவிடு குப்பை திகழ் நிருதி
             யிடுவைக்கோலில் வடதிசைக்கு எருமைத் தொழுகம்
      எய்து மவர்கொள் வடமேற்கும் விட்டுனவும்
             கட்டுபூசற் கடலடக்கத்துப் பசுத்தொழுவம் பத்தே!.

இந்த பாட்டும் உறையும் வெவ்வேறாக உள்ளது.
பாடலில் :  தெற்கே குப்பை மேடு விடவும், நிருதி திசை (தென்மேற்கு) வைக்கோல் போர்,  வடதிசை எருமை கட்ட,
உரையில்: தெற்கு திசை இல்லை, மேற்கு எருமை கட்ட என்று உள்ளது.

வளைவு கட்டளை சொல்வது: தான் குடியிருக்கிற வளைவுக்கு குப்பை போடவும், தென்மேற்கு மூலையில் வைக்கோலை போடவும். மேற்கே எருமை கட்டவும், வடமேற்கு களஞ்சியம் வைக்கவும், வடக்கே பசுத்தொழுவம் கட்டுவது உத்தமம்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by ராஜா on Mon Jun 01, 2015 12:04 pm

@சரவணன் wrote:
@shobana sahas wrote:சிற்ப சாஸ்திரம் இந்த காலத்துக்கு பொருந்துமா? இதால் உண்மையாக நடை முறையில் நன்மை உள்ளத? யாரவது உண்மை சம்பவ மிருந்தால் விள்ளக்கவும் . என்ன? என்ன?
முயற்சிக்கிறேன்...
வேறு யாரும் உதவலாமே!
மேற்கோள் செய்த பதிவு: 1140212

ஏன் நானே உதாரணமாய் இருக்கிறேனே ,

ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு சாதாரண வாஸ்து நிபுணர் ரோட்டில் இருந்து வீட்டை பார்த்துவிட்டு இந்த வீட்டை கட்டியவர் நலமுடன் உள்ளாரா என்று கேட்டுள்ளார் , அதற்கு தம்பி "ஏன் நல்ல தான் இருக்கிறார் " என்று சொல்ல , ஒண்ணுமில்ல தம்பி அவருடைய உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துகொள்ளவும் என்று சொல்லியுள்ளார்.

பிறகு , அவரிடம் பேசும்போது சொல்லியுள்ளார் , இந்த வீட்டின் வாயிற்படி சரியான இடத்தில் இல்லை இது அவரின் உயிருக்கே ஆபத்தை முடியும் , முடிந்த வரை சீக்கிரம் வாயிற்படியை ஒரு அடியாவது தள்ளிவையுங்கள் என்று சொல்லியுள்ளார்.

ஆனால் , வீட்டை கட்டிய எங்கம்மா ஒரு வருடத்திற்குள் இறந்துவிட்டார் அவருக்கு தெரியாது.

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum