ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 ayyasamy ram

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 ayyasamy ram

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 ayyasamy ram

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 மூர்த்தி

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by சிவா on Sat May 30, 2015 1:46 am


பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதையடுத்து, தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பொது வேட்பாளராக தன்னை நிறுத்தக் கோரி அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.

ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வெற்றிவேல், தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அந்தத் தொகுதிக்கு வரும் ஜூன் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தத் தொகுதியில், அதிமுக சார்பில் ஜெ.ஜெயலலிதா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன.

இந்தத் தேர்தலில் முறைகேடு நடக்காது என தேர்தல் ஆணையம் வாக்குறுதி அளித்தால் மட்டுமே, தாங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார். ஜூன் 3ஆம் தேதி தமிழக காங்கிரசின் செயற்குழு இது குறித்து முடிவெடுக்குமென அவர் கூறியிருக்கிறார்.

இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்பட மாட்டாது என உறுதியளித்தால் பாமக போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து, தனக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுவருகிறார்.

இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை அவர் சந்தித்து ஆதரவு கோரினார். டிராஃபிக் ராமசாமிக்கு ஆதரவளிப்பது குறித்து திமுக தலைவர் மு.கருணாநிதிதான் முடிவெடுக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திமுகவிடம் ஆதரவு கேட்டதால், டிராஃபிக் ராமசாமிக்கு ஆதரவளிக்கப் போவதில்லையென பாமக தெரிவித்திருக்கிறது.

தேசிய ஜனநாயக் கூட்டணியின் சார்பாக வேட்பாளரை நிறுத்துவது குறித்து விவாதிப்பதற்காக, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை பாரதீய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் சந்தித்துப் பேசினார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by balakarthik on Sat May 30, 2015 1:09 pm

இந்தத் தேர்தலில் முறைகேடு நடக்காது என தேர்தல் ஆணையம் வாக்குறுதி அளித்தால் மட்டுமே, தாங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார்.

வாக்குறுதி எப்படி அளிக்கனுமாம் சூடம் ஏத்தி சத்தியம் பண்ணிதந்தா ஓகேயா இல்ல அம்மா சத்தியம் (Mother Promise) செய்யணுமா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by M.Jagadeesan on Sat May 30, 2015 1:21 pm

அதிகார பலத்திற்கும் , பண பலத்திற்கும் பாடம் புகட்டும் வகையில் டிராபிக் ராமசாமியை மக்கள் வெற்றிபெறச் செய்யவேண்டும் . ஆனால் அது நடக்குமா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4998
மதிப்பீடுகள் : 2363

View user profile

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by balakarthik on Sat May 30, 2015 1:23 pm

@M.Jagadeesan wrote:அதிகார பலத்திற்கும் , பண பலத்திற்கும் பாடம் புகட்டும் வகையில் டிராபிக் ராமசாமியை மக்கள் வெற்றிபெறச் செய்யவேண்டும் . ஆனால் அது நடக்குமா ?

ட்ராபிக் ஜாஸ்தி நடக்காது ஜனங்கள் த்விட்டர்லையும் முகநூளுளையும் இவரை பத்தி எழுதுவோம் அனால் ஒட்டு போடசொன்னால் 2000 ரூபாய்க்கே எங்கள் ஒட்டு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by சரவணன் on Sat May 30, 2015 1:40 pm

கைல காசு, மெஷின்ல ஓட்டு - இவன் ஆர். கே நகர் தொகுதி குடிமகன்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by யினியவன் on Sat May 30, 2015 1:42 pm

மீண்டும் பதவி போகாது என்பது உறுதியா தெரியுமா?

ஊழல் ஊழல் ஊழல் - அதில் உழன்று கொளுத்த புழுக்கள் நிறைந்த நாடாகிவிட்டது.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by balakarthik on Sat May 30, 2015 2:05 pm

அக்ரிமெண்டே அதுத்தானே ராஜ்யசபாவில் BJPக்கு சப்போர்ட் செய்தால் வழக்கிலிருந்து விடுதலை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by M.Jagadeesan on Sat May 30, 2015 4:38 pm

@யினியவன் wrote:மீண்டும் பதவி போகாது என்பது உறுதியா தெரியுமா?

ஊழல் ஊழல் ஊழல் - அதில் உழன்று கொளுத்த புழுக்கள் நிறைந்த நாடாகிவிட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1139748

கர்நாடகா அரசு உச்சநீதி மன்றத்தில் அப்பீல் செய்யப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது . அப்படிச் செய்தால் , அம்மா மீண்டும் மக்களின் முதல்வர் ஆவது உறுதி !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4998
மதிப்பீடுகள் : 2363

View user profile

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by யினியவன் on Sat May 30, 2015 8:20 pm

@M.Jagadeesan wrote:கர்நாடகா அரசு உச்சநீதி மன்றத்தில் அப்பீல் செய்யப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது . அப்படிச் செய்தால் , அம்மா மீண்டும் மக்களின் முதல்வர் ஆவது உறுதி !

நம்ம சட்டம் என்றுமே உறங்கிவிட்டு லேட்டா தான் முழிக்கும், அதுவரை திருதிருவென்று முழிக்கும்.

இடைத்தேர்தல் கூத்து முடிந்த பின்னர் முழிக்கும், மக்கள் பணம் விரயமான பின்னர் முழிக்கும்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by Aathira on Sat May 30, 2015 8:36 pm

@யினியவன் wrote:
@M.Jagadeesan wrote:கர்நாடகா அரசு உச்சநீதி மன்றத்தில் அப்பீல் செய்யப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது . அப்படிச் செய்தால் , அம்மா மீண்டும் மக்களின் முதல்வர் ஆவது உறுதி !

நம்ம சட்டம் என்றுமே உறங்கிவிட்டு லேட்டா தான் முழிக்கும், அதுவரை திருதிருவென்று முழிக்கும்.

இடைத்தேர்தல் கூத்து முடிந்த பின்னர் முழிக்கும், மக்கள் பணம் விரயமான பின்னர் முழிக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1139891
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat May 30, 2015 8:53 pm

@M.Jagadeesan wrote:
@யினியவன் wrote:மீண்டும் பதவி போகாது என்பது உறுதியா தெரியுமா?

ஊழல் ஊழல் ஊழல் - அதில் உழன்று கொளுத்த புழுக்கள் நிறைந்த நாடாகிவிட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1139748

கர்நாடகா அரசு உச்சநீதி மன்றத்தில் அப்பீல் செய்யப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது . அப்படிச் செய்தால் , அம்மா மீண்டும் மக்களின் முதல்வர் ஆவது உறுதி !
மேற்கோள் செய்த பதிவு: 1139819
அப்படி நடக்கும் என்று நம்புவோம்
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by யினியவன் on Sat May 30, 2015 8:56 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
அப்படி நடக்கும் என்று நம்புவோம்

நிச்சயம் நடக்க வேண்டும் அய்யா.

அம்மணியை தொடர்ந்து, அய்யா குடும்பம் பின்னர் நிலக்கரி கூட்டம், இன்னும் பல கூட்டங்கள் உள்ளே செல்ல வேண்டும். அம்மணி தப்பித்தால் மற்றவர்களும் தப்பி விடுவார்கள்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by M.Jagadeesan on Sat May 30, 2015 10:13 pm

@யினியவன் wrote:
@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
அப்படி நடக்கும் என்று நம்புவோம்

நிச்சயம் நடக்க வேண்டும் அய்யா.

அம்மணியை தொடர்ந்து, அய்யா குடும்பம் பின்னர் நிலக்கரி கூட்டம், இன்னும் பல கூட்டங்கள் உள்ளே செல்ல வேண்டும். அம்மணி தப்பித்தால் மற்றவர்களும் தப்பி விடுவார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1139900

அய்யா குடும்பம் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள் ?

மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்களையா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4998
மதிப்பீடுகள் : 2363

View user profile

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by யினியவன் on Sat May 30, 2015 10:22 pm

கலைஞர் அய்யா புன்னகைபுன்னகைபுன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by சிவா on Sat May 30, 2015 10:32 pm

@M.Jagadeesan wrote:
@யினியவன் wrote:மீண்டும் பதவி போகாது என்பது உறுதியா தெரியுமா?

ஊழல் ஊழல் ஊழல் - அதில் உழன்று கொளுத்த புழுக்கள் நிறைந்த நாடாகிவிட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1139748

கர்நாடகா அரசு உச்சநீதி மன்றத்தில் அப்பீல் செய்யப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது . அப்படிச் செய்தால் , அம்மா மீண்டும் மக்களின் முதல்வர் ஆவது உறுதி !

இதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்றே தோன்றுகிறது! மத்திய அரசின் நேரடி தலையீடு இதில் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது! அந்த தைரியத்தில் தான் மீண்டும் முதல்வராகியுள்ளார். இனிமேல் இவர் இறக்கும் வரை வேறு யாரும் முதல்வராக முடியாது! காரணம் அதிமுகவின் பணபலம் அளவுக்கதிகமாக உள்ளது!

ஒரு அதிமுக மாவட்டச் செயலாளரின் மாத வருமானம் ஒரு கோடி ரூபாய். இது நேரடியாக அவர் வாயாலேயே சொல்லக் கேட்டேன்.

எம்பி எலக்‌ஷனில் 13 கோடி ரூபாய் செலவு செய்தேன், அதில் கடனாக வாங்கியது 10 கோடி ரூபாய், இப்பொழுது இருக்கும் மாவட்ட செயலாளர் பதவி நீடித்தால் 10 மாதங்களில் கடனை அடைத்து விடுவேன் என்றார்!

மாவட்ட செயலாளருக்கே மாதம் ஒரு கோடி வருமானம் என்றால், முதல்வரின் மாத வருமானம் எத்தனை ஆயிரம் கோடிகள் என்பதை சொல்லியா தெரிய வேண்டும்!

அனைத்தும் மக்களின் பணம். ஒரு வேளை சோற்றுக்கே சிரமப்படும் மக்களின் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் இந்த அரசியல் நாய்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by சரவணன் on Sat May 30, 2015 10:34 pm

சிவா அண்ணா சொல்வது உண்மைதான். கர்நாடகாவுக்கு வேற வேலை இல்லையா என்ன? இதை அவர்கள் ஏன் செய்யவேண்டும். வேண்டுமானால் 
தானை தலைவன், தமிழ் காவலன், மனிதகுல மாணிக்கம், கோட்டை நாயகன் எங்கள் தலைவர்  கலைஞர் அய்யா செய்யட்டும்..


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by சிவா on Mon Jun 01, 2015 12:14 am

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெ., போட்டியின்றி தேர்வு?

சென்னை : சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில், முதல்வர் ஜெயலலிதா, போட்டியின்றி தேர்வு செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க.,வினரிடம் ஏற்பட்டு உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க., போட்டியிடவில்லை என, அறிவித்து விட்டது. ஸ்ரீரங்கத்தை விட, அதிக ஓட்டு வித்தியாசத்தில், ஜெயலலிதாவை வெற்றி பெற வைக்க, அ.தி.மு.க.,வினர் தயாராக உள்ளனர். இதனால், மாற்று கட்சியினர் களமிறங்க தயங்குகின்றனர். இப்படி, அரசியல் கட்சிகள் ஒதுங்கினால், பெயரளவுக்கு போட்டியிடுவோரை, வாபஸ் வாங்க வைத்துவிடலாம். இதன்மூலம், ஜெயலலிதாவை போட்டியின்றி வெற்றி பெற வைக்கலாம் என, ஆளுங்கட்சியினர் கணக்கு போட்டு வருகின்றனர்.அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தால், தங்களுக்கு, 'கவனிப்பு' வராது என, ஆர்.கே.நகர் மக்கள் கவலையடைந்து உள்ளனர்.

ஜெ.,க்கு 6வது தொகுதி :

தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆறாவது தொகுதியாக, ஆர்.கே.நகரில் போட்டியிட உள்ளார்.முதல்வர் ஜெயலலிதா, 1989 சட்டசபை தேர்தலில், போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். அடுத்து, 1991 தேர்தலில், பர்கூர் மற்றும் காங்கேயம் தொகுதியில், வெற்றி பெற்றார். அடுத்து 1996 தேர்தலில், பர்கூர் தொகுதியில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தார். 2002 மற்றும் 2006 தேர்தலில், ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.கடந்த, 2011 தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது நடைபெற உள்ள, இடைத்தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில், களம் இறங்குகிறார். இது, ஜெயலலிதா போட்டியிடும், ஆறாவது தொகுதி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by சிவா on Mon Jun 01, 2015 12:24 am

ஜெ.,வை எதிர்க்க எதிர்க்கட்சிகள் தயக்கம் : அ.தி.மு.க.,வினர் மகிழ்ச்சி

முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து களம் இறங்க, எதிர்க்கட்சிகள் தயங்குவது, அ.தி.மு.க.,வினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், ஆளுங்கட்சியாக உள்ள, அ.தி.மு.க., அசைக்க முடியாத கட்சியாக உள்ளது. 2014 லோக்சபா தேர்தலில், அனைத்து கட்சிகளுக்கும் முன், 'தனித்து போட்டி' என, ஜெயலலிதா அறிவித்தார்.மற்ற கட்சிகள், யாருடன் கூட்டணி சேரலாம் என, முடிவு செய்வதற்குள், ஜெயலலிதா முதல்கட்ட பிரசாரத்தை முடித்தார்.அவரது வேகத்துக்கு பலன் கிடைத்தது. தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளில், 37 தொகுதிகளை, அ.தி.மு.க., கைப்பற்றியது.அதேபோல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த இடைத்தேர்தல்கள் அனைத்திலும், அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது.சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, அடுத்த மாதம் 27ம் தேதி, இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க., சார்பில், முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். ஆனால், அவரை எதிர்த்து நிற்க போவது யார் என்பது தெரியவில்லை.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், 'தேர்தலில் போட்டியிடவில்லை' என, முதல் கட்சியாக தி.மு.க., அறிவித்தது; விடுதலை சிறுத்தை கட்சியினரும், அப்படியே அறிவித்து விட்டனர்.அதைத் தொடர்ந்து, பா.ம.க., - த.மா.கா., ஆகியவையும் போட்டியில்லை என, அறிவித்து விட்டன.மது குடிப்போர் சங்கம், 'டிராபிக்' ராமசாமி, ஆகியோர் மட்டுமே, களம் இறங்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.அரசியல் கட்சிகள் அனைத்தும், போட்டியிட தயங்கி வருவது, அ.தி.மு.க.,வினரிடம், மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:முதல்வர் வெற்றி பெறுவது உறுதி என்பதால், எதிர்க்கட்சிகள் போட்டியிட விரும்பவில்லை. எதிர்க்கட்சிகள் போட்டியிடாததால், தேர்தல் சுறுசுறுப்பில்லை.வாக்காளர்களும், ஆர்வமாக ஓட்டு போட வருவது சந்தேகம் தான். மொத்தத்தில், சுவாரஸ்யம் இல்லாமல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்கப் போகிறது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

ஆர்.கே.நகரில் 1.50 லட்சம் ஓட்டு வித்தியாசம்:அ.தி.மு.க.,வினர் இலக்கு:ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், இதுவரை இல்லாத அளவிற்கு, ஓட்டு வித்தியாசம் இருக்க வேண்டுமென, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், ஆறு இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன.முதலில் நடந்த, திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்சோதி, 14,684 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், 68,757; புதுக்கோட்டையில், 71,498; ஏற்காட்டில், 78,116 என, ஓட்டு வித்தியாசம் அதிகரித்தது.கடந்த லோக்சபா தேர்தலுடன், ஆலந்துார் சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடந்தது. பொதுத்தேர்தலுடன் சேர்ந்து இடைத்தேர்தல் வந்ததால், வழக்கமான இடைத்தேர்தல் கவனிப்பு, இந்த தொகுதியில் இல்லை.இதனால், அ.தி.மு.க., ஓட்டு வித்தியாசம் குறைந்தது. அத்தொகுதியில், 16,708 ஓட்டுகள் வித்தியாசத்தில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது.சில மாதங்களுக்கு முன், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நடந்தது. இதில், அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதி, 96,516 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அதையும் முறியடிக்கும் வகையில், இதுவரை இடைத்தேர்தலில் எந்த கட்சியும் பெறாத அளவுக்கு, குறைந்தபட்சம், 1.50 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், முதல்வர் ஜெயலலிதாவை, வெற்றிபெற வைக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளதாக, அக்கட்சியினர் தெரிவித்தனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by balakarthik on Mon Jun 01, 2015 10:45 am

எந்த கட்சியும் பெறாத அளவுக்கு, குறைந்தபட்சம், 1.50 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், முதல்வர் ஜெயலலிதாவை, வெற்றிபெற வைக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளதாக, அக்கட்சியினர் தெரிவித்தனர்

ஆர் கே நகருள இல்லாம போய்ட்டோமே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by சிவா on Tue Jun 09, 2015 12:19 am

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி போட்டியிடாது - தமிழிசை சவுந்தரராஜன்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி போட்டியிடாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது தொடர் பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது. ஏனெனில் அங்கு இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடக்குமா என்று சந்தேகமாக உள்ளது.

மேலும் தேர்தல் ஆணை யம் நடுநிலையுடன் நடந்து கொள்ளும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எனவே தான் தேசிய ஜனநாயக கூட்டணி இந்த முடிவை எடுத்துள்ளது.
இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு தவிர மற்ற அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக் கணித்துள்ளன. இதனால் இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.- இந்திய கம்யூ னிஸ்டு கட்சிகளிடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

எனவே முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மகேந்திரன் தவிர மற்ற அனைவரும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதுவரை 10-க்கும் மேற்பட்ட சுயேட்சைகள் மனு செய் துள்ளனர்.மனுக்கள் பரிசீலனை முடிந்தபிறகு பல சுயேட்சை கள் மனு தள்ளுபடி ஆகலாம். அதன்பிறகு வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் எத்தனைபேர் போட்டியிடுகிறார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by சிவா on Tue Jun 09, 2015 12:19 am

ஆர்.கே. நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி இல்லை இளங்கோவன் அறிவிப்பு

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து இடைத் தேர்தல்களிலும் ஆளும் கட்சி வேட்பாளர்கள்தான் வெற்றி பெற முடியும் என்ற நிரந்தர நிலை உருவாக்கப்பட்டு விட்டது. சட்டத்தின்படி, சுதந்திரமாக, பாரபட்சமின்றி, நடுநிலையோடு செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையமே இதற்கு துணை போவது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

சென்னை, ராதாகிருஷ் ணன் நகர் இடைத் தேர்த லில் முதல்-அமைச்சர் ஜெய லலிதா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் ஆத்து மீறல்களையும், ஒருதலைபட்சமான நடவடிக்கைகளையும் ஆளும் கட்சியின் அறங் கேற்ற ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையை முன் கூட்டியே அறிந்த காரணத்தினால்தான் இத்தேர்தலில் போட்டி யிடுவதாக இருந்தால் சுதந்திரமாக, பாரபட்சமின்றி தேர்தல் நடத்துவதற்கு வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் ஆணையம் உறுதி மொழி அளித்தால் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கும் என்று பகிரங்கமாக கூறி இருந்தோம்.

ஆனால் அதற்கு இதுவரை தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

நாம் எதிர்பார்த்தபடி ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியின் அராஜகங்கள், அத்துமீறல்கள் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் என தங்கு தடையின்றி ஆரம்பித்து விட்டன.எனவே இத்தகைய ஜனநாயக சட்ட விரோதமான அசாதாரண சூழலை தடுத்து நிறுத்திட தேர்தல் ஆணையம் முற்றிலும் தவறிவிட்ட காரணத்தினால் ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கவில்லை என்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by சிவா on Sun Jun 14, 2015 1:23 am

ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 230 தேர்தல் பணிமனைகள் அமைப்பு; தொண்டர்களுக்கு பிரசார பணி ஒதுக்கப்படுகிறது

ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 230 தேர்தல் பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தொண்டர்களுக்கு பிரசார பணி ஒதுக்கப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா போட்டி

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதில் போட்டியிடும் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் தொகுதியில் முகாமிட்டு அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து தொகுதியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம், ஜெயலலிதா நிறைவேற்றிய திட்டங்கள், சாதனைகளை பட்டியலிட்டு, அதனை பொதுமக்களிடம் விளக்கியும், ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள அனைத்து குறைகளையும் ஜெயலலிதா நிவர்த்தி செய்வார் என்று வாக்குறுதி அளித்தும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

230 தேர்தல் பணிமனைகள்

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பேட்டையில் கடந்த மாதம் 31-ந் தேதி அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது. அதன் பின்னர், அடுத்தடுத்த நாட்களில் அ.தி.மு.க. சார்பில் வரிசையாக தேர்தல் பணிமனைகள் திறக்கப்பட்டன.

நேற்றைய நிலவரப்படி 230 வாக்குச்சாவடி மையங்களுக்கு, ஒரு தேர்தல் பணிமனை என்ற அடிப்படையில் 230 தேர்தல் பணிமனைகளை அ.தி.மு.க.வினர் அமைத்துள்ளனர்.

இந்த தேர்தல் பணிமனைகளில் காலை 7 மணிக்கே குவியும் அ.தி.மு.க.வினர் எந்தெந்த பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். அதனடிப்படையில் குறிப்பிட்ட இடங்களை தேர்ந்தெடுத்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். திட்டமிட்டு குழு, குழுவாக பிரிந்து சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நூதன பிரசாரம்

உடலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை வர்ணம் பூசியும், இரட்டை இலை போன்று தலைமுடியை வெட்டியும், நின்றுகொண்டே சைக்கிளை ஓட்டியும் நூதன முறையில் அ.தி.மு.க. தொண்டர்கள் பலர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அ.தி.மு.க. மாணவர் அணியினர் வாக்காளர்கள் காலில் விழுந்து ஜெயலலிதாவுக்கு வாக்களியுங்கள் என்று வேண்டு கோள் விடுத்து வருகின்றனர். அ.தி.மு.க.வினர் பிரசாரத்தால் ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் களைகட்டி உள்ளது.

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஒரு புறம் பிரசாரம் மேற்கொண்டபடியே, மற்றொரு புறம் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியிலும் அ.தி.மு.க.வினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by சிவா on Sun Jun 14, 2015 1:25 am

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு தி.மு.க. ஆதரவு அளிக்குமா? மு.க.ஸ்டாலின் பேட்டி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு தி.மு.க. ஆதரவு அளிக்குமா? என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

தி.மு.க. ஆதரவு அளிக்குமா?

கேள்வி:- ஓ.பன்னீர் செல்வம் முதல்-அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் எந்த அரசு பணிகளும் நடக்கவில்லை, இப்போதும் அமைச்சர்கள் அனைவரும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முகாமிட்டு இருப்பதால் பணிகள் எதுவும் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தான் இதுபற்றி அவர்களிடம் கேட்க வேண்டும், எழுத வேண்டும்.

கேள்வி:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கேட்கப்பட்டு உள்ளதே? தி.மு.க. ஆதரவு கொடுக்குமா?

பதில்:- இந்திய கம்யூனிஸ்டு கட்சி மட்டும் அல்ல எந்த கட்சியும் ஆதரவு கேட்பது அவர்களது உரிமை. தி.மு.க. ஆதரவு அளிக்குமா? என்பதை தலைவர் கருணாநிதி தான் முடிவு செய்து அறிவிப்பார்.

பொது தேர்தலுக்கு தயார்

கேள்வி:- இடைத்தேர்தலை புறக்கணித்து விட்டீர்கள், சட்டமன்ற பொதுதேர்தலுக்கு தயாராகி விட்டீர்களா?

பதில்:- தி.மு.க.வை பொறுத்தவரை எப்போது தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருக்கிறது.

கேள்வி:- ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் நியாயமாக நடத்தப்படுமா? தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடந்துகொள்ளும் என எதிர்பார்க்கிறீர்களா?

பதில்:- நீங்கள் சந்தேகமாக கேட்பதில் இருந்தே தேர்தல் எப்படி நடக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

சி.பி.ஐ. விசாரணை தேவை

கேள்வி:- திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப்படாமல் இருப்பதற்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளது. இதில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என கேட்பீர்களா?

பதில்:- இந்த வழக்கை பொறுத்தவரை ஆரம்பத்திலேயே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என தி.மு.க. கோரிக்கை வைத்தது. சி.பி.ஐ. விசாரணை நடத்தினால்தான் முழு உண்மையும் வெளியே வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by சிவா on Sun Jun 14, 2015 1:27 am

மதுபானத்துக்கு ரசீது வழங்கப்படுமா? சுயேச்சை வேட்பாளர்

27-ந்தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு 53 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், பரிசீலனைக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்பட 32 பேருடைய மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்கான கூட்டம் தண்டையார்ப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நேற்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

தேர்தல் நடத்தும் அதிகாரி சவுரிராஜன், பொது பார்வையாளர் ராஜீவ் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளர்கள் கலந்துகொண்டனர். ஜெயலலிதா சார்பில் ஆர்.கே.நகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் பங்கேற்றார்.

கூட்டத்தில், மது குடிப்போர் சங்கம் சார்பில் சுயேச்சையாக போட்டியிடும் பி.குமாரசாமி என்பவர், ‘வேட்பாளர் செய்யும் செலவுகள் கணக்கு காட்ட வேண்டும் என்று கூறுகிறீர்கள். ஓட்டலில் உணவு சாப்பிட்டால் ரசீது வாங்கி கொள்கிறோம். ஆனால் ‘டாஸ்மாக்’ மதுபான கடையில் மது அருந்தினால் ரசீது தருவதில்லை. இது தேர்தல் நடத்தை விதிமீறலில் அடங்குமா? என்று கேட்டார்.

இந்த கேள்வியை கேட்டதும் தேர்தல் அதிகாரிகள் செய்வதறியாமல் சிறிது நேரம் திகைத்தபடி கூட்டத்தை நிறைவு செய்தனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by சிவா on Sun Jun 14, 2015 1:27 am

ஜெயலலிதா 21-ந் தேதி சூறாவளி பிரசாரம்; வேனில் சென்று 5 இடங்களில் பேசுகிறார்

சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடுகிறார். வேனில் சென்று 5 இடங்களில் அவர் பேசுகிறார்.

இடைத்தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு 27-ந் தேதி (சனிக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பிரதான எதிர்கட்சிகளான தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., பா.ஜ.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை.

அ.தி.மு.க. சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன் போட்டியிடுகிறார். சுயேச்சையாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்பட பலர் களத்தில் உள்ளனர்.

ஜெயலலிதா பிரசாரம்

ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 3-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் 50 பேர் தொகுதியில் தீவிரமாக பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதேபோல், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சி.மகேந்திரன் உள்ளிட்ட வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால், ஆர்.கே. நகர் தொகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அங்கு சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

அ.தி.மு.க.வினர் உற்சாகம்

அன்று மாலை 3 மணிக்கு மேல் வீட்டில் இருந்து பிரசார வேனில் புறப்படும் அவர், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, ராயபுரம் ஆகிய 5 இடங்களில் பொதுமக்கள் மத்தியில் பேசி வாக்குசேகரிக்க உள்ளார். ஜெயலலிதா பிரசாரம் செய்யும் இடங்கள் மேலும் 2 அதிகப்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர். ஜெயலலிதா வருகையையொட்டி, ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum