ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 ayyasamy ram

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 பழ.முத்துராமலிங்கம்

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ayyasamy ram

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 ayyasamy ram

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 ayyasamy ram

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 ayyasamy ram

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 heezulia

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by சிவா on Sat May 30, 2015 3:16 am

First topic message reminder :


பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதையடுத்து, தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பொது வேட்பாளராக தன்னை நிறுத்தக் கோரி அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.

ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வெற்றிவேல், தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அந்தத் தொகுதிக்கு வரும் ஜூன் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தத் தொகுதியில், அதிமுக சார்பில் ஜெ.ஜெயலலிதா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன.

இந்தத் தேர்தலில் முறைகேடு நடக்காது என தேர்தல் ஆணையம் வாக்குறுதி அளித்தால் மட்டுமே, தாங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார். ஜூன் 3ஆம் தேதி தமிழக காங்கிரசின் செயற்குழு இது குறித்து முடிவெடுக்குமென அவர் கூறியிருக்கிறார்.

இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்பட மாட்டாது என உறுதியளித்தால் பாமக போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து, தனக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுவருகிறார்.

இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை அவர் சந்தித்து ஆதரவு கோரினார். டிராஃபிக் ராமசாமிக்கு ஆதரவளிப்பது குறித்து திமுக தலைவர் மு.கருணாநிதிதான் முடிவெடுக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திமுகவிடம் ஆதரவு கேட்டதால், டிராஃபிக் ராமசாமிக்கு ஆதரவளிக்கப் போவதில்லையென பாமக தெரிவித்திருக்கிறது.

தேசிய ஜனநாயக் கூட்டணியின் சார்பாக வேட்பாளரை நிறுத்துவது குறித்து விவாதிப்பதற்காக, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை பாரதீய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் சந்தித்துப் பேசினார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by சிவா on Sun Jun 14, 2015 2:58 am

ஓட்டுப்பதிவின்போது வாக்காளர் அடையாளத்தை உறுதி செய்வதற்கான ஆவணங்கள் எவை? தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவின்போது, வாக்காளர் அடையாளத்தை உறுதி செய்வதற்கான ஆவணங்கள் எவை என்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அடையாளம் காட்ட முடியாதவர்கள்

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. வாக்காளர்கள் யாருக்கெல்லாம் புகைப்பட அடையாள அட்டை தரப்பட்டு இருக்கிறதோ, அவர்கள் அனைவரும் அந்த அட்டையை வைத்து தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தி ஓட்டு போடவேண்டும்.

வாக்காளர் அட்டை இருந்தும் அதை வாக்குச்சாவடிக்கு கொண்டு வராதவர்களும், புகைப்படம் தெளிவாக இல்லாததால் தனது அடையாளத்தை உறுதி செய்ய முடியாதவர்களும், கீழ்க்கண்ட மாற்று ஆதாரங்களில் ஏதாவது ஒன்றை காட்டி ஓட்டுபோடலாம்.

11 மாற்று ஆவணங்கள்

பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம்; மத்திய அல்லது மாநில அரசு அல்லது பொதுத்துறை நிறுவனம் வழங்கியுள்ள அரசு பணிக்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை; வங்கி அல்லது தபால் அலுவலகத்தின் புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்; பான் அட்டை;

ஆதார் அட்டை; தேசிய ஜனத்தொகை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டதற்கான ஸ்மார்ட் அட்டை; மகாத்மாகாந்தி வேலை உறுதிக்கான பணி அட்டை; தொழிலாளர் நலத்துறை வழங்கும் சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை; புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை; தேர்தல் கமிஷன் வழங்கும் “பூத் சிலிப்”, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான அதிகாரபூர்வ அடையாள அட்டை ஆகியவை மாற்று ஆதாரங்களாகும். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பே புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்களை அனைவருக்கும் தேர்தல் கமிஷன் வழங்கும்.

பட்டியலில் பெயர்இருக்க வேண்டும்

வேறு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பெயர் பதிவு அதிகாரியிடம் பெறப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையையும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுபோட வாக்காளர் பயன்படுத்தலாம். ஆனால் அந்த தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் ஓட்டுபோட முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by சிவா on Tue Jun 23, 2015 1:47 am

மக்களால் நான், மக்களுக்காகவே நான்: ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா பேச்சு

‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்ற அடிப்படையில் எப்போதும் செயலாற்றி வருகிறேன். எனக்கு எல்லாமே நீங்கள்தான் என்று ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொள்ளும் போது பேசினார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரச்ச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதா பேசியதாவது:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதே தனது லட்சியம்.கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வெற்றிவேலை, எனது வேண்டுகோளை ஏற்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தீர்கள்.

இந்த இடைத்தேர்தல், நீங்கள் விரும்பாத இடைத்தேர்தல். பொதுத்தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில், அரசியல் சதியால் போடப்பட்ட வழக்கால், இடைப்பட்ட சிறிது காலத்துக்கு நான் முதல்வராக இல்லாத சூழல் ஏற்பட்டது. எனவே, இந்த இடைத்தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இப்போது நானே இங்கு போட்டியிடுகிறேன். தேர்தலில் வெற்றி பெறுவது என்பது வேறு. பிறரை தோற்கடிப்பது என்பது வேறு. ஆனால், இந்தத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதே எனது லட்சியம்.

மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்னையும், அதிமுகவையும் வெல்ல முடியாது என்பதால்தான், எதிர்க்கட்சிகள் போட்டியிடவில்லை. ஆனால், அதற்கு பல கற்பனை கதைகளை கட்டவிழ்த்து விடுகின்றன.

பிறரின் குறைகளைச் சொல்லி வாக்குகளை கேட்க நான் இங்கு வரவில்லை. நாங்கள் செயல்படுத்திய சமூகநல, வளர்ச்சி மற்றும் தொலைநோக்குத் திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்குகளை கேட்கவே வந்திருக்கிறேன்.

20 கிலோ விலையில்லா அரிசி, ரூ. 25-க்கு லிட்டர் பாமாயில், ரூ. 30-க்கு கிலோ துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, தாலிக்கு தங்கத்துடன் ரூ. 50,000 திருமண உதவி, கட்டணமில்லா கல்வி, ஆண்டுக்கு 4 பள்ளிச் சீருடைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், விலையில்லா மிதிவண்டிகள், விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ரூ. 1,000 ஓய்வூதியம், அரசு கேபிள்கள் மூலம் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களை பார்க்கும் வசதி, தாய்- சேய் நலம் காக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், விலையில்லா மடிக்கணினி, கட்டணமில்லா பேருந்துப் பயணம், மகப்பேறு உதவி, அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், அம்மா மருந்தகங்கள், அம்மா சிமென்ட், அம்மா உப்பு, மக்களை நாடிச் சென்று குறைகளைத் தீர்க்கும் அம்மா திட்டம் என எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லாத அளவுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 4,992 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்துள்ளோம். இதனால் தொழில் வளர்ச்சி பெருகியுள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தி இருக்கிறோம். ரூ. 41 கோடியில் துணை மின் நிலையப் பணிகள் நடந்துள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் இந்தத் தொகுதியில் 14,313 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சிதிலமடைந்த வீடுகளுக்குப் பதிலாக ரூ. 101 கோடியில் 1,500 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

ரூ. 25 கோடியில் 254 உட்புறச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் ரூ. 17 கோடியில் 205 உட்புறச் சாலைகள் புதுப்பிக்கப்படவுள்ளன. கத்திவாக்கம் நெடுஞ்சாலை - ரயில்வே சந்திப்பில் ரூ. 12 கோடியில் மேம்பாலப் பணிகள், ரூ. 3.30 கோடியில் மீனம்பாள் நகரில் மகப்பேறு மருத்துவமனை ஆகிய பணிகள் முடியும் நிலையில் உள்ளன. 22,144 கர்ப்பிணிகளுக்கு ரூ. 8.86 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. 11,106 நோயாளிகளிகளுக்கு ரூ. 19.89 கோடியில் முதல்வரின் விரிவான பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

44,596 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பங்களுக்கு விரைவில் வழங்கப்படும். 32,609 பேர் ரூ. 1,000 மாத ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். 14 புதிய வழித்தடங்களில் 36 புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த தொகுதியில் மட்டும் 10 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.

ஆர்.கே.நகரில் ரூ. 2.77 கோடியில் 10 குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் 236 தெருக்களில் குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டுள்ளது. ரூ. 242 கோடியில் மழைநீர் வடிகால், தெரு விளக்குகள், சாலைகள் அமைக்கும் பணிகள் சென்னை மாநகராட்சியால் செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் ரூ. 36 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படி ஏராளமான பணிகளை ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்காக செய்திருக்கிறோம்.

இங்கே, என்னை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் போட்டியிடுகிறார். இதே கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் என்னையும், அதிமுக அரசையும் பாராட்டி பேசியுள்ளனர். அக்கட்சியின் எம்எல்ஏ எம்.ஆறுமுகம், ‘‘அம்மா உணவகம் ஏழைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்’’ என்றும், அக்கட்சியின் மற்றொரு எம்எல்ஏவான எஸ்.குணசேகரன், ‘‘திறமையான கல்வி கற்க பல்வேறு சலுகைகளை அதிமுக அரசு அளித்துள்ளதாகவும்’’ சட்டப்பேரவையில் என்னைப் பாராட்டி பேசியுள்ளனர். ஆனால், இன்று என்னை எதிர்த்து போட்டியிடுவதால் வேறு வழியின்றி எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்ற அடிப்படையில் எப்போதும் செயலாற்றி வருகிறேன். எனக்கு எல்லாமே நீங்கள்தான். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில் உங்களுக்கா எப்போதும்போல பாடுபடுவேன்.

எங்களது சாதனைகளை சீர்தூக்கிப் பார்த்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும். வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் வகையில் நீங்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by ayyasamy ram on Tue Jun 23, 2015 12:57 pm

பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில்

ஜெ- ஜெயிப்பார்...!!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35063
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by M.Jagadeesan on Tue Jun 23, 2015 1:00 pm

ஜெயித்த சில நாட்களிலேயே " மக்களின் முதல்வர் " ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4995
மதிப்பீடுகள் : 2363

View user profile

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by rajaalways on Tue Jun 23, 2015 1:12 pm

முடிவு அனைவருக்கும் தெரிந்ததே
avatar
rajaalways
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 159
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by M.Jagadeesan on Tue Jun 23, 2015 7:41 pm

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி விப்பதற்கே
...ஆயிரம் பள்ளிகள் திறந்தார் அன்றுஒருவர் !
ஆர் .கே . நகரில் தேர்தல் கூத்துக்காய்
...அத்தனை பள்ளியும் மூடினார் மற்றொருவர் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4995
மதிப்பீடுகள் : 2363

View user profile

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum