ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 ayyasamy ram

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 பழ.முத்துராமலிங்கம்

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணெய்ப்பனை பற்றய இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டா உங்களின் அடுத்த சாகுபடி அதுதான்...
 பழ.முத்துராமலிங்கம்

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்
 பழ.முத்துராமலிங்கம்

மக்கள் அச்சம்... கேரளாவில் மீன் விற்பனை சரிவோ... சரிவு!
 பழ.முத்துராமலிங்கம்

ஏமனை ரத்த சகதியாக்கும் சவுதி - தாக்குதலில் அப்பாவி மக்கள் உடல் சிதறி பலி
 பழ.முத்துராமலிங்கம்

எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
 T.N.Balasubramanian

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு
 T.N.Balasubramanian

புதியவர் --சந்தியா M .
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம்
 பழ.முத்துராமலிங்கம்

பால்வெளி மண்டலத்தில் புதிய கருத்துளை: 80 கோடி மடங்கு பெரிய அளவில் உள்ளதாக கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லையா? ரூ.100 இழப்பீடு; ரிசர்வ் வங்கி அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

துப்பாக்கிகளின் காலம்
 Meeran

பதினைந்தே நாள்களில் அறுவடை செய்யக்கூடிய அசோலாவை உற்பத்தி செய்வது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இந்து கலாச்சாரம்
 Meeran

ஏழாம் உலகம் ????ஜெயமோகன்
 Meeran

கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?
 பழ.முத்துராமலிங்கம்

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
 ayyasamy ram

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 sandhiya m

தோற்று போனால் வெற்றி கிடைக்குமா ?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 
SK
 
ajaydreams
 

Admins Online

ஜூன் மாத பலன்கள் !

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஜூன் மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon Jun 01, 2015 10:58 pm

மாத ராசிபலன் : மீனம்
2015 ஜூன் 1 முதல் 30 வரை

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

மீனம்:

உங்கள் ராசி அதிபதி குரு 5-ல் உலவுவது விசேடமாகும். சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். பொருளாதார நிலை திருப்தி தரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் அனுகூலம் உண்டாகும். திருமனம் போன்ற சுப காரியங்கள் நிகழும்.

திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிட்டும். அரசியல்வாதிகளுக்கு உயர் பதவிகள் கிடைக்கும். நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு கூடும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். போட்டிகளிலும், பந்தயங்களிலும் வழக்கு, வியாஜ்ஜியங்களிலும் வெற்றி கிட்டும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். புத்திசாலித்தனத்தாலும் செயல் வேகத்தாலும் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள்.

15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. நண்பர்கள் உறவினர்களால் மன வருத்தம் உண்டாகும். அலைச்சல் கூடும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. கோபத்தைக் குறைத்துக் கொள்வது அவசியமாகும். பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது. உஷ்ணாதிக்கத்தால் உடல் நலம் பாதிக்கும். புத பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் நஷ்டத்துக்கு ஆளாகாமல் தப்பலாம். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 7, 11, 12, 18, 26 (முற்பகல்), 29,.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, கிழக்கு..

எண்கள்: 1, 3, 6, 9,


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon Jun 01, 2015 10:59 pm

மாத ராசிபலன் : கும்பம்
2015 ஜூன் 1 முதல் 30 வரை

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

கும்பம்:

உங்கள் ஜன்ம ராசிக்கு 4-ல் புதனும் 10-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவி புரிய முன்வருவார்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சியைக் காணலாம். மாணவர்களது திறமை வெளிப்படும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்து வரும். தோட்டங்கள், சுரங்கங்கள், ஆலைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். வருவாயும் அதிகரிக்கும்.

எண்ணெய் வகயறாக்கள் லாபம் தரும். தொழில் சம்பந்தமான இடமாற்றம் உண்டாகும். 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் இருப்பதால் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உணவுப் பழக்கத்திலும் பேச்சிலும் கட்டுப்பாடு தேவை. 4-ல் சூரியனும் செவ்வாயும் உலவுவதால் அலைச்சல் கூடும். பயணத்தால் சிறு சங்கடம் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களால் சிறுசிறு பிரச்னைகள் சூழும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருவது நல்லது. சுக்கிரன் 6-ல் குருவுடன் இருப்பதும் சிறப்பாகாது. கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது.

பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது அவசியமாகும். பெண்களால் ஆடவர்களுக்குத் தொல்லைகளும் அவமானமும் உண்டாகும். கலைஞர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். 15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 5-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகா. மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மக்களால் மன அமைதி குறையும். ஜாதக பலம் இருக்குமானால் கவலைப்படத் தேவையில்லை. ஜாதக பலமும் இல்லாதவர்கள் இறை வழிபாட்டில் ஈடுபடுவதன் மூலம் அமைதி காணலாம்.

அவிட்டம், சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் கூடும் மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 8, 11, 12, 18, 29,.

திசைகள்: வடக்கு, மேற்கு.

எண்கள்: 5, 8.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon Jun 01, 2015 11:00 pm

மாத ராசிபலன்: மகரம்
2015 ஜூன் 1 முதல் 30 வரை

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

மகரம்:

உங்கள் ராசிக்கு அதிபதி சனி 11-ல் இருப்பது விசேடமாகும். ராசியையும், ராசிநாதனையும் குரு பார்ப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். பொது நலப்பணிகளில் ஆர்வம் அதிகமாகும். பிறருக்காக உழைப்பீர்கள். பண நடமாட்டம் திருப்தி தரும். மன உற்சாகம் பெருகும். உங்களைக் காட்டிலும் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு இல்லறம் நல்லறமாகத் திகழும். கூட்டாளிகள் உதவுவார்கள். குடும்ப நலம் சிறக்கும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், தோல் பொருட்கள், திரவப் பொருட்கள் ஆகியவை லாபம் தரும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். தெய்வத் திருப்பணிகள் இனிது நிறைவேறும். தனவந்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 6-ஆமிடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் மேலும் கூடும். எதிரிகள் பயந்து ஓடுவார்கள். வழக்கிலும் போட்டிகளிலும் விளையாட்டிலும் வெற்றி கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். எலெக்ட் ரானிக், எலக்ட் ரிக்கல் சம்பந்தமான பொருட்கள் லாபம் தரும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். செயலில் வேகம் அதிகரிக்கும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். பொருள் வரவு அதிகமாகும். பிரச்னைகள் எளிதில் தீரும். நல்ல எண்ணங்கள் மனதில் உருவாகும். அவை நிறைவேறவும் சந்தர்ப்பம் உருவாகும்.

திருவோணம், அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 7, 8 11, 12, 18, 26, 29,.

திசைகள்: வடகிழக்கு, மேற்கு, வடமேற்கு.

எண்கள்: 3, 7, 8.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon Jun 01, 2015 11:01 pm

மாத ராசிபலன்: தனுசு
2015 ஜூன் 1 முதல் 30 வரை

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

தனுசு:

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் செவ்வாயும் புதனும் 8-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். அரசுப்பணிகளில் நல்ல திருப்பம் உண்டாகும். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்கு இப்போது கிடைக்கும். மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். நிர்வாகத்திறமை கூடும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இன் ஜினீயர்களது நிலை உயரும். எதிரிக்கள் அடங்குவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களிலும் போட்டிப் பந்தயங்களிலும் வெற்றி கிடைக்கும்.

கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். தந்தை நலம் சிறக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். விபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். மாணவர்களுக்குத் திறமை வீண்போகாது. குடும்பத்தில் நல்ல காரியங்கள் நிகழும். விருந்து, விழாக்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.

4-ல் கேதுவும் 8-ல் குருவும் 12-ல் சனியும் உலவுவதால் சுகம் குறையும். தாய் நலனில் கவனம் தேவைப்படும். எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். வீண் விவகாரங்களில் பிரவேசிக்கலாகாது. புதிய முயற்சிகளை இன்னும் சிறிது காலத்துக்கு ஒத்திப்போடுவது நல்லது. 15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 7-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. எதிர்ப்புக்கள் சற்று அதிகரிக்கும். பிறரிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது. வாழ்க்கைத்துணைவரின் நலனில் கவனம் தேவைப்படும். சொத்துக்கள் சம்பந்தமாக காரியங்களில் விழிப்புடன் ஈடுபடவும்.

மூலம் பூராட நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் அதிகம் உண்டாகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 7, 8, 11, 12, 18, 26,.

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, தெற்கு, தென்கிழக்கு. .

எண்கள்: 1, 4, 5, 6, 9.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon Jun 01, 2015 11:03 pm

மாத ராசிபலன்: விருச்சிகம்
2015 ஜூன் 1 முதல் 30 வரை

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

விருச்சிகம்:

உங்கள் ராசிக்கு 9-ல் குருவும் சுக்கிரனும் 11-ல் ராகுவும் உலவுவது விசேடமாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வ தரிசனமும் சாது தசிரனமும் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் அளவோடு நலம் உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் அளவோடு லாபம் தரும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.

ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள், தோல் பொருட்கள், போக்குவரத்துச் சாதனங்கள் ஆகியவை ஆதாயம் கொண்டுவரும். ஜன்ம ராசியில் சனி உலவுவதால் உழைப்பு அதிகரிக்கவே செய்யும். அலைசாலும் கூடும். உடல்நலனில் கவனம் தேவைப்படும். 5-ல் கேது இருப்பதால் மக்களால் சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டு குரு பலத்தால் விலகும். வயிறு சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். 7-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகியோர் உலவுவதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

வியாபாரிகள், இயந்திரப்பணியாளர்கள் கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஆகியோருக்கெல்லாம் சிறுசிறு பிரச்னைகள் சூழும். 15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 8-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. அரசியல், நிர்வாகம், பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் சோதனைகள் சூழும். உடன்பிறந்தவர்களின் நலனில் கவனம் தேவைப்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. தொழிலில் அதிக கவனம் தேவை.

அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும் மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 7, 8, 11, 12, 26, 29,.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு. .

எண்கள்: 3, 4, 6.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon Jun 01, 2015 11:03 pm

மாத ராசிபலன் :துலாம்
2015 ஜூன் 1 முதல் 30 வரை

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

துலாம்:

உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும் 8-ல் புதனும்,உலவுவது சிறப்பாகும். இதர முக்கியமான கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் எதிலும் விசேடமான நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. சிறுசிறு பிரச்னைகள் அவ்வப்போது ஏற்படவே செய்யும். பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சுமுகமாகப் பழகவும். எரிபொருள், மின்சாரம், ஆயுதங்கள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போதும், பயன்படுத்தும்போதும் எச்சரிக்கை தேவை.

அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். இயந்திரப்பணியாளர்கள், இன் ஜினீயர்கள் ஆகியோர் சங்கடங்களுக்கு ஆளாக நேரும். உடன்பிறந்தவர்களாலும் தந்தையாலும் சோதனைகள் சூழும். தொழில் ரீதியாகச் சில பிரச்னைகள் ஏற்படும். இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. பயணத்தின்போது பாதுகாப்பு அவசியமாகும்.

15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 9-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. தந்தை நலனில் அதிக கவனம் தேவைப்படும். ஜனன கால ஜாதகம் வலுத்திருந்து, தற்சமயம் யோக பலமுள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் சங்கடங்கள் பெருமளவுக்குக் குறையும். ஜாதக பலமும் இல்லாதவர்கள் இறைவழிபாட்டிலும், கிரக வழிபாட்டிலும் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி பெறலாம். பெரியவர்களது ஆசிகளைப் பெறுவது நல்லது. நூதன முயற்சிகளை ஒத்திப்போடவும்.

சித்திரை, சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு அனுகூலமான மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 7, 8, 11, 12, 18, 26, 29,.

திசைகள்: வடக்கு, வடமேற்கு. .

எண்கள்: 5, 7.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon Jun 01, 2015 11:03 pm

மாத ராசிபலன்: கன்னி
2015 ஜூன் 1 முதல் 30 வரை

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

கன்னி:

உங்கள் ஜன்ம ராசிக்கு 3-ல் சனியும் 11-ல் குருவும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். குடும்பத்தில் குதூகலம் கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். மக்களாலும் அனுகூலம் உண்டாகும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். கொடுக்கல்-வாங்கலில் வளர்ச்சி காணலாம். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். பேச்சில் திறமை கூடும். பொது நலப்பணிகளில் ஆர்வம் கூடும்.

திரவப்பொருட்கள் லாபம் தரும். தொழிலாளர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களது எண்ணம் ஈடேறும். கலைஞர்களது நோக்கம் நிறைவேறும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்கள் லாபம் தரும். தகவல் தொடர்பு இனங்களால் ஆதாயம் கிடைக்கும். 9-ல் சூரியனும் செவ்வாயும் இருப்பதால் தந்தை நலனில் கவனம் தேவைப்படும். ஜன்ம ராசியில் ராகுவும், 7-ல்கேதுவும் இருப்பதால் அலைச்சல் அதிகமாகும். பிறரிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவதன் மூலம் அவர்களது அதிருப்திக்கு ஆளாகாமல் மீளலாம்.

15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 10-ஆமிடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். போட்டிகள், விளையாட்டுகள் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். இசைக்களைஞர்களுக்கு விசேடமான நன்மைகள் உண்டாகும். அரசுப்பதவி, அரசு உதவி ஆகியவை கிடைக்கும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். காரியத்தில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள்.

ஹஸ்தம், சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு விசேடமான சுப பலன்கள் உண்டாகும் மாதமிது,

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 7, 8, 11, 18, 26, 29,.

திசைகள்: வடகிழக்கு, வடக்கு, மேற்கு, தென்கிழக்கு.

எண்கள்: 3, 5, 6, 8.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon Jun 01, 2015 11:04 pm

மாத ராசிபலன் : சிம்மம்
2015 ஜூன் 1 முதல் 30 வரை

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

சிம்மம்:

உங்கள் ராசிக்கு அதிபதி சூரியன் இந்தமாதம் முழுவதும் சிறப்பாக உலவுகிறார். செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் உயர்ப் பதவிகளும் பொறுப்புக்களும் உங்களைத் தேடிவரும். பெரியவர்கள், மேலதிகாரிகள் ஆகியோரது ஆதரவைப் பெறுவீர்கள். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை மேலோங்கும். எதிரிகள் இருப்பார்கள் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். எலெக்ட் ரிக்கல், எலக்ட் ரானிக்ஸ் இனங்கள் லாபம் தரும்.

தந்தையாலும் உடன்பிறந்தவர்களாலும் அனுகூலம் உண்டாகும். சுப காரியங்களுக்காகவும், மக்கள் நல முன்னேற்றத்துக்காகவும் செலவு செய்வீர்கள். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரம் பெருகும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். ராகு, கேது, சனி ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புக்கள் ஏற்படும். பேச்சிலும் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு தேவை. பிற மொழி, மத, இனக்காரர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம்.

உடல் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். பயணத்தின்போது பாதுகாப்பு தேவை. இதயம், வயிறு சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும் நண்பர்கள், உறவினர்களால் நன்மைகளும் அல்லாதவைகளும் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. 15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் லாப ஸ்தானத்திற்கு இடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். அரசுப்பணிகள் லாபம் தரும். அரசியலைப் பற்றிய ஞானம் உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.
மகம் பூர நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள அதிகரிக்கும் மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 7, 8, 11, 18, 26, 29,.

திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, தெற்கு.

எண்கள்: 1, 5, 6, 9.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon Jun 01, 2015 11:04 pm

மாத ராசிபலன் : கடகம்
2015 ஜூன் 1 முதல் 30 வரை

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

கடகம்:

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் ராகுவும், 11-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகியோரும் உலவுவதால் தோற்றப்பொலிவு கூடும். புதிய ஆடை, அணிமணிகளும் அலங்காரப்பொருட்களும் வாசனைத் திரவியங்களும் சேரும்.
அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும். புகழும் மதிப்பும் உயரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் நிர்வாகத்துறையினருக்கும் சுபிட்சம் கூடும்.

எரிபொருட்கள், மின்சாரம், ஆயுதங்கள், கட்டடப் பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு ஆதாயம் அதிகமாகும். பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். முக்கியமான எண்ணங்கள் மாத முன்பகுதியில் இனிது நிறைவேறும். அரசு உதவி கிடைக்கும். தந்தையாலும் உடன்பிறந்தவர்களாலும் அனுகூலம் உண்டாகும்.

கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டாளிகள் உதவுவார்கள். 5-ல் சனியும், 9-ல் கேதுவும் இருஇப்பதால் மக்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏறபட்டு விலகும். 15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 12-ஆமிடம் மாறுவதால் குடும்ப நலனில் கவனம் தேவை. தந்தையாலும் அரசாங்கத்தாராலும் பிரச்னைகள் சூழும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. சகோதர நலனில் கவனம் தேவைப்படும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை உண்டாகும். கண், தலை சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும்.

பூச நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும் மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 7, 11, 12, 18, 26, 29,.

திசைகள்: கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.

எண்கள்: 1, 4, 5, 6, 9.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon Jun 01, 2015 11:04 pm

மாத ராசிபலன் : மிதுனம்
2015 ஜூன் 1 முதல் 30 வரை

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

மிதுனம்:

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், சுக்கிரனும் 6-ல் சனியும் 10-ல் கேதுவும உலவுவதால் குடும்ப நலம் திருப்தி தரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். பேச்சில் இனிமையும் திறமையும் வெளிப்படும். பண வரவு அதிகமாகும். கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். ஆசிரியர்களது நோக்கம் நிறைவேறும். திரவப்பொருட்கள் லாபம் தரும். தோற்றப்பொலிவு கூடும். தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு அதிகமாகும். அதனால் மனத்தில் தெளிவும் பிறக்கும்.

தொழிலாளர்களது கோரிக்கைகள் சில இப்போது நிறைவேறும். ஆன்மிகவாதிகளுக்கு நற்பெயர் கிட்டும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்களால் ஆதாயம் கிடைக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். 4-ல் ராகுவும், 12-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகியோரும் உலவுவதால் அலைச்சல் அதிகமாகும். உஷ்ணாதிக்கம் கூடும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். அரசியல், நிர்வாகம், பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம்.

15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதும் சிறப்பாகாது. உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. எதிலும் வேகத்தைக் குறைத்துக் கொள்ளவும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. எதிரிகள் இருப்பார்கள் என்றாலும் குரு பலத்தால் சமாளித்து வருவீர்கள்.

மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு பொருளாதார சுபிட்சம் கூடும் மாதமிது. மக்களால் மன மகிழ்ச்சிபெருகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 8, 11, 12, 18, 26, 29,.

திசைகள்: மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

எண்கள்: 3, 6, 7, 8.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon Jun 01, 2015 11:05 pm

மாத ராசிபலன் : ரிஷபம்
2015 ஜூன் 1 முதல் 30 வரை

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

ரிஷபம்:

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும், 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். போட்டிப் பந்தயங்களிலும், விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிட்டும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். மாதர்கள் நலம் பெறுவார்கள். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஜன்ம ராசியில் சூரியன், செவ்வாய், புதன் ஆகியோர் உலவுவதால் அலைச்சல் கூடும். எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது அவசியமாகும். வீண் விவகாரங்க்ளில் ஈடுபடலாகாது.

குரு 3-லும் ராகு 5-லும் உலவுவதால் மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. பொருளாதாரம் சம்பந்தமான இனங்களில் விழிப்புத் தேவை. நண்பர்கள் உறவினர்களால் அதிகம் அனுகூலத்தை எதிர்பார்க்க இயலாமல் போகும். அவர்களால் சில இடர்ப்பாடுகளும் உண்டாகும். உடன்பிறந்த சகோதரிகளால் நலம் பெற வாய்ப்புக் கூடிவரும். தீ, மின்சாரம், ஆயுதம் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போது பாதுகாப்பு தேவை

15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 2-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. பேச்சிலும் செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. கண், மார்பு, நுரையீரல் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவச் செலவுகள் சற்று கூடவே செய்யும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. கெட்ட பழக்கவழக்கங்களைத் தவிர்க்கவும். எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது அவசியமாகும்.

ரோகிணி, மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்களுக்கு ஓரளவு நற்பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 7, 8, 11, 12, 18, 26, 29,.

திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு.

எண்கள்: 6, 7.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon Jun 01, 2015 11:05 pm

மாத ராசிபலன்: மேஷம்
2015 ஜூன் 1 முதல் 30 வரை

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

மேஷம்:

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 4-ல் சுக்கிரனும், 6-ல் ராகுவும் உலவுவதால் சுக, செளக்கியம் கூடும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகளும் அலங்காரப்பொருட்களும் சேரும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். புதியவர்களின் தொடர்பு பயன்படும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் லாபம் தரும். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியங்கள் ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும்.

2-ல் சூரியனும் செவ்வாயும் இருப்பதால் பேச்சில் கடுமையைக் குறைத்துக் கொண்டு, இனிமையைக் கூட்டிக் கொண்டால் குடும்பத்திலும் வெளிவட்டாரத்திலும் உங்கள் செல்வாக்கைக் காத்துக் கொள்ளலாம். 8-ல் சனி இருப்பதால் அதிகம் உழைக்க வேண்டிவரும். சோர்வுக்கும் சோம்பலுக்கும் இடம் தராமல் கடுமையாகப் பாடுபட்டால் தான் ஓரளவாவது பயன்பெறமுடியும். கெட்டவர்களின் சகவாசத்தை அடியோடுதவிர்ப்பதன் மூலம் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாமல் தப்பலாம். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றம் தடைப்படும்.

15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 3-ஆமிடம் மாறுவதால் மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். போட்டிகளிலும், விளையாட்டுகளிலும் வெற்றி கிட்டும். இசைக்கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். இயந்திரப்பணியாளர்கள், இன் ஜினீயர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கெல்லாம் செழிப்புக் கூடும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். தந்தை நலம் சீராகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும்.

அசுவினி, பரணி நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் கூடும் மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 7, 8, 11, 12, 18, 26,.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.

எண்கள்: 4, 5, 6.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by krishnaamma on Mon Jun 01, 2015 11:06 pm

நன்றி விகடன்..........சும்மா ஒரு மாறுதலுக்கு மீனம் டு மேஷம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by shobana sahas on Tue Jun 02, 2015 1:20 am

@krishnaamma wrote:நன்றி விகடன்..........சும்மா ஒரு மாறுதலுக்கு மீனம் டு மேஷம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1140617
நல்லது தானே மாற்றம் ? எனக்கு மிக பிரமாதமாக உள்ளது . பார்போம் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by krishnaamma on Tue Jun 02, 2015 10:26 am

@shobana sahas wrote:
@krishnaamma wrote:நன்றி விகடன்..........சும்மா ஒரு மாறுதலுக்கு மீனம் டு மேஷம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1140617
நல்லது தானே மாற்றம் ? எனக்கு மிக பிரமாதமாக உள்ளது . பார்போம் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1140654

நீங்க எந்த ராசி?....நான் மீனம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by Preethika Chandrakumar on Tue Jun 02, 2015 1:09 pm

என் ராசிக்கு சூப்பரா போட்டிருக்கு.
பதிவிட்ட க்ரிஷ்ணாம்மாக்கு மிக்க நன்றி!!!
avatar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 541
மதிப்பீடுகள் : 126

View user profile

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by shobana sahas on Wed Jun 03, 2015 7:15 am

Naan kanni rasi krishnaamma.
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by சரவணன் on Wed Jun 03, 2015 7:39 am

@shobana sahas wrote:Naan கன்னி - rasi krishnaamma.
நீங்க கன்னி ங்குறது தெரியுது , ராசி என்னன்னு சொல்லுங்க?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by krishnaamma on Wed Jun 03, 2015 10:14 am



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by shobana sahas on Thu Jun 04, 2015 3:01 am

@சரவணன் wrote:
@shobana sahas wrote:Naan கன்னி - rasi krishnaamma.
நீங்க கன்னி ங்குறது தெரியுது , ராசி என்னன்னு சொல்லுங்க?
மேற்கோள் செய்த பதிவு: 1141381
நீங்க என்ன ரஆசி சரவணன் ?
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by சரவணன் on Tue Jun 09, 2015 10:18 pm

@shobana sahas wrote:
@சரவணன் wrote:
@shobana sahas wrote:Naan கன்னி - rasi krishnaamma.
நீங்க கன்னி ங்குறது தெரியுது , ராசி என்னன்னு சொல்லுங்க?
மேற்கோள் செய்த பதிவு: 1141381
நீங்க என்ன ரஆசி சரவணன் ?
கும்பி பாகம்...கும்ப மேலா இது தன என்னோடது...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by shobana sahas on Tue Jun 09, 2015 10:25 pm

@சரவணன் wrote:
@shobana sahas wrote:
@சரவணன் wrote:
@shobana sahas wrote:Naan கன்னி - rasi krishnaamma.
நீங்க கன்னி ங்குறது தெரியுது , ராசி என்னன்னு சொல்லுங்க?
மேற்கோள் செய்த பதிவு: 1141381
நீங்க என்ன ரஆசி சரவணன் ?
கும்பி பாகம்...கும்ப மேலா இது தன என்னோடது...
மேற்கோள் செய்த பதிவு: 1143294
ரொம்ப சூசகமா சொன்னேங்க போங்க . என்னால கண்டே புடிக்க முடியல .... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by சரவணன் on Tue Jun 09, 2015 10:26 pm

சிப்பு வருது சிப்பு வருது
கும்ப ராசிய தான் அப்படி சொன்னேன்...ஹய்யோ ஹய்யோ...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by shobana sahas on Tue Jun 09, 2015 10:29 pm

@சரவணன் wrote:சிப்பு வருது சிப்பு வருது
கும்ப ராசிய தான் அப்படி சொன்னேன்...ஹய்யோ ஹய்யோ...
மேற்கோள் செய்த பதிவு: 1143303
சரி சரி ..இதுக்கு இவ்வளோ சமாளிப்பு தேவையா ... இதுக்கு என்நை பார்த்து ஏன் சிரிக்கனும் .. ஆறுதல் ஆறுதல்
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by சரவணன் on Tue Jun 09, 2015 10:33 pm

@shobana sahas wrote:
@சரவணன் wrote:சிப்பு வருது சிப்பு வருது
கும்ப ராசிய தான் அப்படி சொன்னேன்...ஹய்யோ ஹய்யோ...
மேற்கோள் செய்த பதிவு: 1143303
சரி சரி ..இதுக்கு இவ்வளோ சமாளிப்பு தேவையா ... இதுக்கு என்நை பார்த்து ஏன் சிரிக்கனும் .. ஆறுதல் ஆறுதல்
பேப்பர்ல போடுற ராசி பலன் எல்லாம் நம்பறதில்லை.....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஜூன் மாத பலன்கள் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum