ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

தமிழ்த்துறை வாழ்த்து
 VEERAKUMARMALAR

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by krishnaamma on Mon Jun 01, 2015 11:23 pm

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது என்று கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

பெங்களூருவில் இன்று நடைபெற்ற கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் விடுதலை அளிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டது.

இந்த தீர்ப்பில் கணக்கு பிழை இருப்பதாக கூறி, தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே, மேல்முறையீடு குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது மிகவும் முக்கியமான வழக்கு என்பதால் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டோம் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என கர்நாடக  அரசின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார்,  கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திராவுக்கு அண்மையில் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

இருப்பினும் எந்த தேதியில் மேல்முறையீடு செய்வது என்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என கர்நாடக சட்டத் துறை அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா, அதிமுகவினர் அதிர்ச்சி

கர்நாடக அரசின் இந்த முடிவு ஜெயலலிதா மற்றும் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு?

மேலும் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதை தொடர்ந்து அவர் போட்டியிட உள்ள ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் கர்நாடக அரசின் முடிவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக அரசின் மேல்முறையீட்டு முடிவு, ஜெயலலிதாவுக்கு எதிரான பிரசாரத்திற்கு கிடைத்த  வாய்ப்பு என்ற எண்ணத்தில், இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற தங்களது முடிவை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாற்றிக்கொண்டு, போட்டியிடுவதாக அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.

திமுக, ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் வரவேற்பு

இந்நிலையில் கர்நாடக அரசின் மேல்முறையீட்டு முடிவை வரவேற்பதாக திமுக தெரிவித்துள்ளது. திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் இதுகுறித்து கூறுகையில், இவ்வழக்கில் எழுத்துப்பூர்வமாக வாதாட திமுகவுக்கு உரிமை உள்ளதாகவும், தேவைப்படும்போது திமுக அதனை பயன்படுத்தும் என்றும் கூறி உள்ளார். அதேப்போன்று , தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் வரவேற்றுள்ளார்.

சரியான முடிவு: ஆச்சார்யா

மேலும் கர்நாடக அரசு சரியான முடிவை எடுத்துள்ளதாக இவ்வழக்கில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜரான ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார்.கர்நாடக அரசு சட்டரீதியான முடிவை எடுத்துள்ளதாகவும், கர்நாடக அரசு கேட்டுக்கொண்டால் இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராவேன் என்றும் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

முடிவின் பின்னணியில் அரசியல்:  நாஞ்சில் சம்பத்

இந்நிலையி்ல் கர்நாடக அரசின் இந்த முடிவின் பின்னணியில் அரசியல் உள்ளதாகவும், ஜெயலலிதாவை வேதனைக்குள்ளாக்க வேண்டும் என திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவு இது என்றும், இவ்வழக்கில் நியாயம் நிச்சயம் வெல்லும் என்றும்,  நீதியையும் நிலைநாட்டுவோம் என்றும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

வழக்கு கடந்து வந்த பாதை...

கடந்த 18 ஆண்டுகளாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா மற்றும் இளவரசி,சுதாகரன் ஆகியோர் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கர்நாடக மாநில கீழமை நீதிமன்றம் இது தொடர்பாக தீர்ப்பளித்தது. நீதிபதி டி.குன்ஹா அளித்த அந்தத் தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் சிறைத் தண்டனை  மற்றும் நூறுகோடி அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதியே முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.அவருடன் சசிகலா,இளவரசி,மற்றும் சுதாகரன் ஆகியோரும் சிறை வாசம் அனுபவித்தனர். பின்னர் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா 219 நாட்கள் தனது போயஸ் தோட்ட இல்லத்திலேயே முடங்கிக் கிடந்தார். அவருக்குப் பதிலாக அந்த நேரத்தில் தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்று தமிழக அரசை நடத்தி வந்தார். ஆனால் பல்வேறு முறைகேடுகள் பன்னீர்செல்வம் ஆட்சியில் நிறைந்து விட்டதாக புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர்நீதி மன்றம்,ஜெயலலிதா உள்ளிட்டோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்க்கவில்லை என்று கூறி 4 போரையும்  கடந்த மாதம் 11 ஆம் தேதி விடுவித்தது. இதனால் மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார். ஜெயலலிதா மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட வசதியாக அதிமுகவின் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்த வெற்றிவேல்  தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து தேர்தல் ஆணையம் வரும் 27 ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் என்று அறிவித்து அதற்கான பணிகளை விரைவுப் படுத்தியது.

இந்நிலையில் இன்று கர்நாடக அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக முடிவு செய்து அது தொடர்பான அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இந்த முடிவு,  தமிழக அரசியலில் பெரும் பரபரப்பினை உண்டக்கியுள்ளதோடு மீண்டும் அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Last edited by krishnaamma on Wed Jun 03, 2015 12:34 am; edited 1 time in total

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by சிவா on Tue Jun 02, 2015 2:53 am

நல்ல முடிவு! நீதி இன்னும் உயிருடன் உள்ளதா என்பதை அறிய மேலும் ஒரு வாய்ப்புக் கிட்டியுள்ளது! ஆனால் தீர்ப்பு எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வரும் என்பதுதான் தெரியாது!

20 வருடங்கள் கழித்து ஜெ. குற்றவாளி எனத் தீர்ப்பு வந்தால் ஜெ.வின் நிலைமை பரிதாபமானதாக இருக்கும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by krishnaamma on Tue Jun 02, 2015 10:07 am

@சிவா wrote:நல்ல முடிவு! நீதி இன்னும் உயிருடன் உள்ளதா என்பதை அறிய மேலும் ஒரு வாய்ப்புக் கிட்டியுள்ளது! ஆனால் தீர்ப்பு எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வரும் என்பதுதான் தெரியாது!

20 வருடங்கள் கழித்து ஜெ. குற்றவாளி எனத் தீர்ப்பு வந்தால் ஜெ.வின் நிலைமை பரிதாபமானதாக இருக்கும்!
மேற்கோள் செய்த பதிவு: 1140679

ஹா......ஹா..ஹா.....ஜெ வின் நிலைமையா நம்ப ( மக்களின்) நிலைமையா சிவா? ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by balakarthik on Tue Jun 02, 2015 11:00 am

கேசை போட்டாலும் போடவேண்டியவர்களுக்கு அம்மா CASHA போட்டு கேசை முடிசிருவாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by யினியவன் on Tue Jun 02, 2015 11:07 am

காசு பார்க்க தான் இந்த பயமுறுத்தல்கள்.

நீதியை நிலை நாட்ட இல்லை, நிதியை பெருக்கும் நாட்டம் தான்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by balakarthik on Tue Jun 02, 2015 11:12 am

ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!

ஒரு FEMALEலுக்கு எதிரா எத்தனை மேல் முறையிடுகள் இதுதான் male chauvinismமா

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by krishnaamma on Tue Jun 02, 2015 11:17 am

@balakarthik wrote:கேசை போட்டாலும் போடவேண்டியவர்களுக்கு அம்மா CASHA போட்டு கேசை முடிசிருவாங்க

நிஜம்.........இன்னும் கொஞ்சம் பெரிய சூட்கேஸ் தேவைப்படும் அவ்வளவுதான் சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by krishnaamma on Tue Jun 02, 2015 11:17 am

@யினியவன் wrote:காசு பார்க்க தான் இந்த பயமுறுத்தல்கள்.

நீதியை நிலை நாட்ட இல்லை, நிதியை பெருக்கும் நாட்டம் தான்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by krishnaamma on Tue Jun 02, 2015 11:18 am

@balakarthik wrote:ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!

ஒரு FEMALEலுக்கு எதிரா எத்தனை மேல் முறையிடுகள் இதுதான் male chauvinismமா
மேற்கோள் செய்த பதிவு: 1140771

ஹா.ஹா.ஹா........இருக்கும் ......இருக்கும்.....ஜாலி ஜாலி ஜாலி.....................
.
.
.
எவ்வளோ அறிவுப்பா இந்த பாலாக்கு புன்னகை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by ராஜா on Tue Jun 02, 2015 11:19 am

@சிவா wrote:நல்ல முடிவு! நீதி இன்னும் உயிருடன் உள்ளதா என்பதை அறிய மேலும் ஒரு வாய்ப்புக் கிட்டியுள்ளது! ஆனால் தீர்ப்பு எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வரும் என்பதுதான் தெரியாது!

20 வருடங்கள் கழித்து ஜெ. குற்றவாளி எனத் தீர்ப்பு வந்தால் ஜெ.வின் நிலைமை பரிதாபமானதாக இருக்கும்!
மேற்கோள் செய்த பதிவு: 1140679

அடுத்து 2016 தமிழக தேர்தலுக்கு ஜெயலலிதாவை தங்கள் பிடிக்குள் வைத்துகொள்ள BJP & காங்கிரஸ் ஆடும் சடுகுடு ஆட்டம் தான் தல இது.

இதில் அப்பாவி நம் தமிழக மக்கள் தான் பாவம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by balakarthik on Tue Jun 02, 2015 11:24 am

தல காங்கிரசே குடு குடுன்னு ஆடிக்கிட்டுத்தான் இருக்கு இதுல சடு குடு வேற ஆடுறாங்களா

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by சரவணன் on Tue Jun 02, 2015 11:26 am

@balakarthik wrote:தல காங்கிரசே குடு குடுன்னு ஆடிக்கிட்டுத்தான் இருக்கு இதுல சடு குடு வேற ஆடுறாங்களா
சிரிப்பு உண்மை உண்மை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by யினியவன் on Tue Jun 02, 2015 11:36 am

@balakarthik wrote:ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!

ஒரு FEMALEலுக்கு எதிரா எத்தனை மேல் முறையிடுகள் இதுதான் male chauvinismமா
அதே தான் பாலா

அன்னாயிசத்தில் துவங்கி அம்மாயிசம் ஆகி இப்ப ஷாவநிசம் ஆயிடுச்சுavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by balakarthik on Tue Jun 02, 2015 11:40 am

@யினியவன் wrote:அன்னாயிசத்தில் துவங்கி அம்மாயிசம் ஆகி இப்ப ஷாவநிசம் ஆயிடுச்சு

ஆமாம் சர்வநாசம் ஆகுரவைரைக்கும் விடமாட்டாங்க போலிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by ராஜா on Tue Jun 02, 2015 11:51 am

@balakarthik wrote:தல காங்கிரசே குடு குடுன்னு ஆடிக்கிட்டுத்தான் இருக்கு இதுல சடு குடு வேற ஆடுறாங்களா
மேற்கோள் செய்த பதிவு: 1140787

இந்த தீர்ப்பை இறுதி தீர்ப்பா மாற்றுவதா இல்லை மேல்முறையீட்டுக்கு சென்று ஜெயலலிதாவுக்கு ஆப்பாக மாற்றுவதா என்பது காங்கிரஸ் ஆளும் கர்நாடகத்தின் கையிலே இருக்கு பாலா.

ஏற்கனவே நடந்த டீல் படி 2016ல் BJP + ADMK கூட்டணி ஓகே ஆனதால் தான் அம்மணி "புடம் போட்ட தங்கமா" வெளியே வந்தார்.

இப்ப டீலுக்கு டீல் விடுற போட்டி நடக்குது புன்னகை Congress + ADMK க்காக , அதற்கான நாடகம் தான் இது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by மாணிக்கம் நடேசன் on Tue Jun 02, 2015 12:30 pm

எல்லாம் புஸ்ஸுன்னு போயிடும், எல்லாம் அரசியல் தாங்க காரணம். அம்மா அழகா வெளியில
வந்துடுவாங்க, வேணும்னா பாருங்களேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4232
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by balakarthik on Tue Jun 02, 2015 12:32 pm

@மாணிக்கம் நடேசன் wrote:எல்லாம் புஸ்ஸுன்னு போயிடும், எல்லாம் அரசியல் தாங்க காரணம். அம்மா அழகா வெளியில
வந்துடுவாங்க, வேணும்னா பாருங்களேன்.

இப்ப இருக்குற மூஞ்சியோடையே வந்தா போதுமுங்க அவ்வுளவு அழகாலாம் வேண்டாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by பாலாஜி on Tue Jun 02, 2015 1:10 pm

@balakarthik wrote:
@மாணிக்கம் நடேசன் wrote:எல்லாம் புஸ்ஸுன்னு போயிடும், எல்லாம் அரசியல் தாங்க காரணம். அம்மா அழகா வெளியில
வந்துடுவாங்க, வேணும்னா பாருங்களேன்.

இப்ப இருக்குற மூஞ்சியோடையே வந்தா போதுமுங்க அவ்வுளவு அழகாலாம் வேண்டாம்
மேற்கோள் செய்த பதிவு: 1140830

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by M.Jagadeesan on Tue Jun 02, 2015 7:54 pm

ஜெயலலிதாவுக்கு மேல்முறையீடு செய்ய உரிமை இருக்கும்போது , கர்நாடக அரசுக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உள்ளது . அந்த உரிமைக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல ! உச்ச நீதி மன்றத்தில் , அவர் நிரபராதி என்ற தீர்ப்பு வருமானால், அது ஜெ. வுக்கும் பெருமைதானே !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5006
மதிப்பீடுகள் : 2384

View user profile

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by balakarthik on Tue Jun 02, 2015 8:04 pm

@M.Jagadeesan wrote:ஜெயலலிதாவுக்கு மேல்முறையீடு செய்ய உரிமை இருக்கும்போது , கர்நாடக அரசுக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உள்ளது . அந்த உரிமைக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல ! உச்ச நீதி மன்றத்தில் , அவர் நிரபராதி என்ற தீர்ப்பு வருமானால், அது ஜெ. வுக்கும் பெருமைதானே !

எப்படியும் நம்ம முகத்துல கரியைத்தான் பூசபோறாங்க அதுக்குள்ள நாமளும் நமக்கு பிடித்த சாயத்தை பூசலாமேனுத்தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by Aathira on Tue Jun 02, 2015 8:06 pm

தப்புக் கணக்குன்னு தெரிஞ்சும் போடலாமா? குமார சாமி மட்டுமா போடுவாரு...... கர்நாடக அரசும் போடுதே

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by யினியவன் on Tue Jun 02, 2015 8:08 pm

இன்னும் கட்சியில் சில அல்லக் கைகள் மொட்டை, பால் குடம், அலகு குத்தாம இருக்காங்களாம்.

அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக்காகத்தான் அப்பீல்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by krishnaamma on Tue Jun 02, 2015 8:10 pm

@யினியவன் wrote:இன்னும் கட்சியில் சில அல்லக் கைகள் மொட்டை, பால் குடம், அலகு குத்தாம இருக்காங்களாம்.

அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக்காகத்தான் அப்பீல்.

இருக்கும்..இருக்கும்..............புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by krishnaamma on Tue Jun 02, 2015 8:10 pm

@Aathira wrote:தப்புக் கணக்குன்னு தெரிஞ்சும் போடலாமா? குமார சாமி மட்டுமா போடுவாரு...... கர்நாடக அரசும் போடுதே

இது காலத்தின் கட்டாயம், அரசியல் நாடகம் பாலா...............பிஜேபி மற்றும் காங்கிரசின் விளையாட்டு, பிஜேபி தமிழகத்தில் காலுன்ற வழி பார்க்கிறார்கள் புன்னகை...................

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by balakarthik on Tue Jun 02, 2015 8:11 pm

@Aathira wrote:தப்புக் கணக்குன்னு தெரிஞ்சும் போடலாமா? குமார சாமி மட்டுமா போடுவாரு...... கர்நாடக அரசும் போடுதே

கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியாத்தான் இருக்கும்ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum