ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10
 தமிழ்நேசன்1981

கண்மணி 30மே2018
 தமிழ்நேசன்1981

ராஜஷ்குமார் நாவல் வரிசை 13
 தமிழ்நேசன்1981

காவலனா அன்றிக் காலனா ?
 M.Jagadeesan

``எங்களின் கோரிக்கை இந்த ஐந்துதான்" - ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரின் அடுத்த மூவ்
 T.N.Balasubramanian

அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்!
 T.N.Balasubramanian

இறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி
 SK

`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ
 ayyasamy ram

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 பழ.முத்துராமலிங்கம்

தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி  பேட்டி
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 SK

அதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்!
 பழ.முத்துராமலிங்கம்

இப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு
 ayyasamy ram

துப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை
 ayyasamy ram

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
 T.N.Balasubramanian

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 கோபால்ஜி

ஓர் அழகான கதை !
 ஜாஹீதாபானு

அது யார், ஜகத்குரு?..
 T.N.Balasubramanian

வருங்காலப் பொறியாளன்
 பழ.முத்துராமலிங்கம்

இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!
 பழ.முத்துராமலிங்கம்

பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

குறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...!!
 krishnaamma

பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
 SK

எக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...!!
 krishnaamma

கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….!!
 krishnaamma

`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
 krishnaamma

* "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
 krishnaamma

சவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்
 krishnaamma

பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
 பழ.முத்துராமலிங்கம்

என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
 T.N.Balasubramanian

ஐ.பி.எல் -2018 !!
 T.N.Balasubramanian

3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
 ayyasamy ram

நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
 ayyasamy ram

‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
 ayyasamy ram

ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
 ayyasamy ram

பெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்
 SK

தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
 ayyasamy ram

இலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி
 ayyasamy ram

லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
 SK

நானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்
 SK

மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
 SK

கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
 SK

காஜல் அகர்வால் கொந்தளிப்பு!-
 SK

சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்..!! ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..!!!
 பழ.முத்துராமலிங்கம்

வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி
 பழ.முத்துராமலிங்கம்

அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
 பழ.முத்துராமலிங்கம்

`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்!’ - டர்பனுடன் பதவியேற்றார்
 பழ.முத்துராமலிங்கம்

வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை…!
 ayyasamy ram

செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
 ayyasamy ram

அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by சிவா on Sun Mar 01, 2009 10:24 am

நீதிபதி: பார்த்தா அப்பாவியா தெரியறே ? நீயா பிக்பாக்கெட் ? நம்பவே முடியலையே ?

குற்றவாளி: உங்களை மாதிரிதாங்க எல்லோரும் ஏமாந்துடறாங்க.சார், பேங்க் கொள்ளை பற்றி ஒரு துப்பு கிடைச்சிருக்கு, கொள்ளை அடிச்சவன் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் உள்ளவன். நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கிறவன்.

எப்படிச் சொல்றீங்க ?

ஒவ்வொரு அக்கவுண்ட்ல இருந்தும் ஆயிரம் ரூபா கரெக்டா எடுத்து அதை அக்கவுண்ட்ல கழிச்சு சரியா கணக்கு டாலி பண்ணிட்டு போயிருக்கான்.என் வழில குறுக்கிட்டதாலதாங்க போலீஸை அடிச்சேன்.

எப்படி ?

ஜெயில்ல இருந்து தப்பி ஒடறப்ப தடுத்தாங்க.தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும் ! !.

ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. ..?தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?

தெரியலையே .. .. என்னது ?

தலையிலே முடி இருக்கறதுதான் .. .. !Last edited by சிவா on Sun Mar 01, 2009 12:09 pm; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by சிவா on Sun Mar 01, 2009 10:27 amஅரசே, இவர்களிருவரும் உங்களை கோழை என்றும், புறமுதுகு காட்டுபவர் என்றும் வீதியில் பேசிய வாறு இருந்தனர் !

ராஜ ரகசியத்தை வெளியிட்ட இவர்களை பாசறையில் அடை ! ! !மாப்பிள்ளை ஏன் புரோகிதர் தாலி கட்டச் சொல்லியும் கட்டாம கல்யாண கூட்டத்துல யாரோ ஒருவர் விசில் அடிச்சதும் தாலி கட்டினாரே ஏன் ?

அதுவா மாப்பிள்ளைதான் பஸ் டிரைவர் ஆச்சே !போன படத்துல ஹீரோ கோயில் தூணைப் புடுங்கி அடிக்கிற மாதிரி காட்டினீங்க !
ஏதோ மக்கள் ஏத்துக் கிட்டாங்க !

அதுக்காக இந்தப் படத்துல கோயிலையே புடுங்கி அடிக்கறது ஒவர் சார் !மாமா ,,,,,,,,,,,,, உங்க வீட்டோட மாப்பிள்ளையா வர எனக்கு தன்மானம் இடம் கொடுக்காது.

சரி ,,,,, என்ன செய்யலாம் ?

உங்க வீட்டை விற்று பணத்தை என்கிட்டே குடுத்துடுங்க. அந்தப் பணத்துல வேற வீடு வாங்கிக் குடி போயிடலாம்.எங்கே, இந்தக் கைதியை விசாரணை பண்ணுங்க பார்க்கலாம்.

டேய் ,,,,,,,,,,,,, பாக்கெட்ல எவ்வளவு பணம் வெச்சிருக்கே ?Last edited by சிவா on Sun Mar 01, 2009 12:10 pm; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by சிவா on Sun Mar 01, 2009 10:29 amடாக்டருக்கு படிக்கலாம்னு இருந்தேன், பாதிலயே படிப்பை நிறுத்த வேண்டியதா போச்சு.

அப்புறம் ?

அஞ்சாங் கிளாஸோட ஸ்கூல் லைஃப்புக்கு முற்றுப் புள்ளி வெச்சிட்டேன்ரெண்டு நாளா என் பையனைக் காணோம்

அப்படியெல்லாம் சந்தேகமா என்னைப் பார்க்காதீங்க சார். என் பொண்ணு வீட்டுலதான் இருக்கா.அப்பா, நான் மேலே படிக்க ஆசைப்படறேன் !

அப்படியா, மேஸ்திரிகிட்ட சொல்லி மாடியில் ரூம் கட்டி தரச் சொல்றேன்.

!@#$%^&*நம்ம ஜோசியர் யோகம் அடிக்கப் போகுதுன்னு சொன்னது சரியாப் போச்சு !

லாட்டரி ஏதாவது விழுந்ததா ?

நீங்க வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியா சண்டை. கடைசில அவ அடிச்சுட்டா ! என் கன்னம் வீங்கிப் போச்சு !சார் ! உங்ககிட்டே ஒரு மணி நேரம் பர்சனலா பேசணும் ! ! வீட்டுக்கு வரலாமா ?

ஐயய்யோ ! ! வீட்டுக்கு வந்து என் டயத்தை வேஸ்ட் பண்ணா தீங்க ! ஆபீசுக்கே வந்துடுங்க ! ! ஒரு மணி என்ன, ரெண்டு மணி நேரம்கூட பேசலாம் ! ! !Last edited by சிவா on Sun Mar 01, 2009 12:11 pm; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by சிவா on Sun Mar 01, 2009 10:31 amதிருநெல்வேலி வரன் ஒண்ணு ஒங்க பொண்ணுக்கு வந்ததே ! என்ன ஆச்சி ?

கடைசி நேரத்திலே அல்வா கொடுத்துட்டாங்க !மொழிப் பிரசினையால என் மகன் ஜெயிலுக்குப் போயிட்டான்.

மொழிப் போராட்டமா ?

தேன்மொழியைக் கெடுத்துட்டான்.நீதிபதி எதிர்க்கட்சி வக்கீல் கேட்கும் கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லு.

குற்றவாளி முடியாதுங்க என் வக்கீல்கிட்ட மட்டும்தான் பேசுவேன் .சர்வர், நீங்க சாப்பிட்டாச்சா ?

ஏன் அக்கறையா கேட்கறீங்க ?

எது ஆர்டர் செஞ்சாலும் பாதி தான் வருது.டாக்டர், எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை ?

அப்போ,,,, ஆபரேஷன் முடி்சதும் பாடியை யார் வந்து வாங்கிக்குவாங்க ?Last edited by சிவா on Sun Mar 01, 2009 12:12 pm; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by சிவா on Sun Mar 01, 2009 11:56 am


ரேஷன் அரிசி

(போலீஸ்காரர்கள் இருவர்)

கண்டெய்னர்ல ரேஷன் அரிசி தான் கடத்திட்டுப் போறாங்கன்னு எப்படிய்யா அவ்ளோ கரெக்டா கண்டுபுடிச்சே..?

தூரத்துல வரும்போதே ரொம்ப மோசமான நாத்தம் அடிச்சுது சார்!

(அரசியல்வாதிகள்)

தலைவரே... நாம ரேஷன் அரிசி பதுக்கி வெச்சிருக்கிறது எப்படியோ தெரி்ஞ்சுபோய் ரெய்டுபண்ண வந்திருக்காங்க.. இப்ப என்ன பண்றது?

யோவ்.. எல்லாம் எடைக்கு எடை தொண்டர்கள் கொடுத்ததுன்னு சொல்லுய்யா..!

(மேடையில் ஒரு அரசியல்வாதி)

நீலக்கலரில் மண்ணெண்ணெய் வழங்குவது போல், ரேஷன் அரிசியையும் நீல கலர் கலந்து வழங்கினால், ஓரளவு அரிசிக் கடத்தலைத் தடுக்கலாமே..! அரசு யோசிக்குமா..?

(ரேஷன் கடையில்)

என்னப்பா இது.. அநியாயமா இருக்கு.. பட்டப்பகல்ல இப்படி மூட்டை மூட்டையா அவருக்கு அரிசி கொடுக்குறே..?

பின்னே.. அவரோட குடும்ப கார்டுல மொத்தம் 234 பேர் இருக்காங்களே..!?Last edited by சிவா on Sun Mar 01, 2009 12:12 pm; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by சிவா on Sun Mar 01, 2009 11:58 amஏழு வருஷமா லவ் பண்றோம். இன்னும் நீங்க கல்யாணப் பேச்சையே எடுக்கலையே?

சரி சித்ரா, இப்ப கேட்கறேன்.. எப்போ உன் கல்யாணம்?


நீங்க இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் நான் உங்களைத் தவிர, வேற எந்த டாக்டர்கிட்டேயும் போனதில்லை!

நானும் அப்படித்தான்! இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் உங்களைத் தவிர, வேற எந்த பேஷண்ட்டுக்கும் ட்ரீட்மெண்ட் கொடுத்ததில்லை!சார்... என் பேரு கந்தசாமி.... சொந்த ஊரு பழனி...

அதுக்கென்ன இப்போ..

ஆயிரம் ரூபா கடன் வேணும். ஊர் பேர் தெரியாதவனுக்கு எல்லாம் கடன் குடுக்க முடியாதுன்னு சொன்னீங்களே.. அதான் அறிமுகப் படுத்திக்கிட்டேன்.


அந்த ஆள் ரொம்ப சிக்கனப் பேர்வழி... எப்ப மார்க்கெட்டுக்குப் போனாலும் வாழைப்பழம்தான் வாங்குவாரு..

ஏன்...

அதான் சீப்பா கிடைக்குதாம்!


அந்த டாக்டருக்கு சொந்தக்காரங்கன்னு சொல்லிக்க யாருமே கிடையாது !

ஏன் ?

எல்லாருக்கும் அவருதான் ஆபரேஷன் பண்ணினாரு !Last edited by சிவா on Sun Mar 01, 2009 12:13 pm; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by சிவா on Sun Mar 01, 2009 12:01 pm(செருப்புக் கடையில்)

என்னங்க... செருப்பு காலை கடிக்குது!

அப்ப மாலைல போட்டுக்கங்க!


(பைனான்ஸ் கம்பெனியில்)

சார்... ஆறு வருஷத்துல டெபாசிட் பணம் டபுள் ஆகும்னு சொன்னீங்களே... என்ன ஆச்சு?

டபுள் ஆகும்னுதானே சொன்னோம்.. திருப்பித் தர்றதா சொல்லலையே!(நடிகை தோழியிடம்)

இன்னும் முப்பது வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா?

எதுக்கு?

ஒரு மெகா சீரியல்ல கதாநாயகி வாய்ப்பு கிடைச்சிருக்கு!(பள்ளி மாணவர்கள் இருவர்)

வர வர நம்ம டீச்சருக்கு ஞாபக மறதி அதிகமாயிட்டே வருது?

எப்படிடா சொல்றே?

திருக்குறளை நம்ம டீச்சரே போர்டுல எழுதிட்டு இதை எழுதியவர் யாரு? ன்னு கேட்கறாங்க!அதான் டி.வி-யில் நியூஸ் போடுறானேன்னு நியூஸ் பேப்பரை நிறுத்தினது தப்பாபோச்சு..

ஏன்... என்னாச்சு?

இப்பப் பாருங்க.. ஓசி பேப்பர் வாங்க வரும் பக்கத்து வீட்டுக்காரரு, கொஞ்சம் டி.வி இருந்தாக் கொடுங்க.. நியூஸ் பார்த்துட்டு தர்றேன்னு சொல்றாரு!
Last edited by சிவா on Sun Mar 01, 2009 12:14 pm; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by சிவா on Sun Mar 01, 2009 12:02 pmடி.வி-க்கு கொடுக்கணும்ங்கற எண்ணத்துலயே அந்த டைரக்டர் சினிமா படம் எடுக்கறாரு போலிருக்கு...

எப்படி சொல்றீ;ங்க..?

படத்து நடுநடுவிலே நிறைய விளம்பரப் படமும் எடுத்திருக்காரே!சென்சார் போர்டுல வேலை செய்யறவரைக் கல்யாணம் செய்துகிட்டது தப்பாப் போச்சு..

ஏன்?

படுக்கையறையே இல்லாம வீடு கட்டியிருக்காரு..!டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் ஆகுது!

டாக்டரோட செலவைப் போய் நீங்க ஏன் பண்றீங்க?அட.. நமக்கேத்த சரியான ஜோடி இவதான்னு நம்ம கல்யாணத்தன்னிக்கு சந்தோஷப்பட்டீங்களா, டியர்..?

ஏய்.. என்ன உளர்றே? நம்ம கல்யாணத்தன்னிக்கு நீ மட்டும்தானே மணப்பொண்ணு கோலத்துல இருந்தே..?என்ன சார்... உங்க பையன் அவனோட தாத்தா மேல ஏறிப் படுத்துகிட்டு இருக்கான்...?

நான்தான் சொன்னேனே.. எங்கப்பா படுத்த படுக்கையா ஆகிட்டாருன்னு..

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by சிவா on Sun Mar 01, 2009 12:53 pmநடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?

ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்கநேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...

வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.உன் வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுறாராமே..?

யார் சொன்னா?

என் வீட்டுக்காரர்தான். காலையில கோலம் போடும்போது, பார்த்தாராம்.பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...

என்னாச்சு?

பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறாளே!யேசனையே இல்லாம மெகா சீரியஸ் மாதிரி படம் எடுத்துட்டோம்!

அப்புறம்.. என்ன பண்ணுனீங்க..?

பேசாம, நாலு இண்டர்வெல் விடறதா முடிவு பண்ணிட்டோம்..!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by சிவா on Sun Mar 01, 2009 12:55 pm(இருட்டில்) அப்பா! உன்னால இருட்டுல எழுத முடியுமா?

ஓ! முடியுமே!

அப்ப என் ரேங்க் கார்ட்ல கையெழுத்துப் போடுங்கஅந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன்!

எப்படிச் சொல்றே?

நான் ஊசி போட்டதும் "என் வலி தனி வலி"ன்னு சொல்றாரு!உன் அப்பனுக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒண்ணுதான்..

ஏன் டார்லிங்..?

திருப்பிக் கொடுக்கறதே இல்லியேகுடி குடியை கெடுக்கும்ன்றது சரியா போச்சு

எப்படி?

எனக்கு கல்யாணம் ஆனதுமே என் மனைவி என்னை குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டா..பையன் உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்தக் கேள்வி, எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க ?

பெண் செருப்பாலடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு ?

பையன் உங்க தங்கையோட லவ்வர் தான்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by சிவா on Sun Mar 01, 2009 12:58 pmமுதல் பெண்: என்னடி இது அநியாம் .. ..உன் வீட்டு வேலைக்காரி லீவு போடற அன்னிக்கு உன் வீட்டுக்காரரும் லீவு போடறாரா,,,,,, இதென்ன கூத்து ?

இரண்டாம் பெண்: சும்மாயிருடி ,,, நான்தான் அவரை வீவு போட வைப்பேன. வேலைக்காரி விட்டுப் போன வேலையை பின்னே யார் செய்யறது ?மனைவி: நமக்கு கல்யாணம் முடி்சு இன்னியோட 10 வருஷம் ஆகுதுங்க

கணவன்: எனக்கு மறந்து போச்சு

மனiவி: இது கூடவா ?

கணவன்: நல்ல விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கும்.காதலன்: கண்ணே உனக்காக இமயமலையையும் தாண்டுவேன் ,,,,,,

காதலி: அதுக்காக ஏன் ஒரு காலை நொண்டறீங்க ?

காதலன்: உங்க வீட்டு கேட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்துட்டேன்.நண்பர்: கவர்னர் பதவிக்கு உங்க பெயர் அடிபடுது ,,,,, நீங்க

என்னடான்னா கவலையா காட்சி தர்றீங்களே ?

அரசியல்வாதி: இந்த தடவையாவது எப்படியும் ஜெயிச்சிடணுங்கற

கவலைதான்.அவன்: சார் ,,,, மூணு நாளைக்கு முன்னாடி வீட்டை விட்டுப்போன என் மனைவியை இன்னும் வீடு வரலை ..

போலீஸ்: கவலைப்படாதீங்க ,,,, எல்லா ஜவுளிக் கடையிலம் தேடிப் பார்க்கச் சொல்றேன்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by சிவா on Sun Mar 01, 2009 1:58 pmமுதல் பெண்: இன்னிக்கு எங்க வீட்ல அடுப்பு எரியதுன்னா அதுக்கு இவர்தான் காரணம்.

இரண்டாம் பெண்: அவ்வளவு பெரிய கொடை வள்ளலா ?

முதல் பெண்: ஊஹும், கியாஸ் கம்பெனி வெச்சிருக்கார்.பெண்: பையனுக்கு பொண்ணு பார்க்கச் சொன்னேனே ,,,,,,

தரகர்: நல்ல இடம், 50 சவரன் போடுறேங்கறா ,,,,,

பெண்: அப்ப முடிச்சிட வேண்டியது தானே

தரகர்: அதில் தானே சிக்கல் ,,, மாமியார் இல்லாத இடமா வேணுமாம்.மனைவி; வர வர நீங்க இளைச்சிக் கிட்டே போறதா எங்கப்பா ரொம்ப

வருத்தப்பட்டாருங்க,,,,

கணவன்: நீ என்ன சொன்னே ?

மனைவி: ஆபிஸ் வேலையும் பார்த்துட்டு வீட்டு வேலையும் பார்த்தா அப்படித்தான் இருக்கும்னு சொன்னேங்க.அந்த பட்டாசுக்கடைக்காரர் இதற்கு முன்னால் பூக்கடை வைத்திருந்தார்

போல் தெரிகிறது ,,,,,,

எப்படி சொல்றே ,,,,, ?

சரவெடி கொடுங்கன்னா ,,, எத்தனை முழம்னு கேட்கிறாரேநிருபர்: தீபாவளிக்கு ரிலீசாகுற உங்க படம் பிச்சுக்கிட்டுபோகும்ன்னு

சொல்றீங்களே, படத்துக்கு என்ன பெயர்

தயாரிப்பாளர்: ராக்கெட்டு !

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by சிவா on Sun Mar 01, 2009 1:59 pm

*

நடிகை: யார் இந்த பொக்கேயை கொடுத்துட்டு போனது ?

செகரட்டரி: உங்க பரம ரசிகர்னு சொல்லிட்டு பொக்கைவாய்க் கிழவர்

ஒருத்தர் கொடுத்துட்டுப் போனாருங்க.வீட்டுக்காரர்: உன் கைப்பக்குவத்தை சாப்பிட்டு என் உடம்பு எடை கூடிடுச்சு பொன்னம்மா ,,, பாரேன்,,, தொந்தி கூட வந்தாச்சு ,,,,

வேலைக்காரி: இதையே எங்க வீட்ல என் பொண்ணு கையால சாப்பிட்ட

உங்க மகனும் சொன்னாருங்க எஜமான்.மனைவி: என்னங்க இது,,,, நடு ராத்திரியில் இப்படி எழுந்து உட்கார்ந்திருக்கீங்க?

செக்யூரிட்டி: அதிகாரி நான்தான் ஏற்கனவே உன்கிட்ட தூங்கும் போதும் உனக்கு பாதுகாப்பா இருப்பேன்னு சொன்னதை மறந்துட்டியா விமலா ,,,காதலன்: கலா நல்லவேளை,,, 6 மணிக்குள்ள வந்து என் வயித்துல பாலை வார்த்தே ,,,,

காதலி: இல்லாட்டி ?

காதலன்: 6 மணிக்கு மேல் மாலாவை வரச் சொல்லி இருந்தேன்,,,, ரெண்டு பேர்ட்டயும் மாட்டியிருப்பேனே ,,,, !கொடுத்த கடன் என்னாச்சு ? எனக்கு வர வர ஞாபக மறதி ஜாஸ்தியாயிட்டே வருது,,,,,,

அப்ப இன்னும் கொ்ஞ்ச நாள் பொறுங்களேன் ,,,,

எவ்வளவு நாள் ,,,,?

உங்களுக்கு முழுசா மறதி ஏற்படற வரைக்கும்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by சிவா on Sun Mar 01, 2009 2:00 pmகணவன்: நம்ம வீட்டுக்கு சாப்பிட ஏங்க மானேஜரை கூப்பிட்டிருக்கிறேன்.

மனைவி: என்ன திடீர்னு ?

கணவன்: அவர் மனைவியோட சாப்பாட்டை கொ்ஞ்ச நாளா குறை சொல்லிக்கிட்டிருந்தாராம் அதான்.நண்பர்: 20 வருஷம் முன்னாடி நீங்க எழுதின கதைகளை இப்பப் படிச்சாலும் நீங்களா இப்படி எழுதினீங்கன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு.

எழுத்தாளர்: உங்களுக்கு ஆச்சரியம் ,,,,, எனக்கு சந்தேகம்.மனைவி: வேலைக்காரியை இனிமே வர வேண்டாம்னு சொன்னீங்களாமே,,,,,, அதைச் சொல்ல நீங்க யாரு ?

கணவன்: அப்படினா வேலைக்கு சேர்த்துக்கலாம்ங்கறியா ?

மனைவி: இல்ல ,,, நானே சொல்லிடறேன் இனிமே வராதேன்னு.காதலி: நேற்று உங்க நண்பர் ராஜுவும் இதே ரோஜாவைக் கொடுத்துதான் ஐ லவ்யூ சொன்னார்

காதலன்: தப்பு,, தப்பு அது வேற ரோஜாவா இருக்கும். இது இன்னிக்கு எங்க தோட்டத்தில் நானே பறிச்சது.கணவன்: நம்ம பையன் எல்லா பாடத்திலும் முதல் மார்க்னு சொன்னான்,,, நீ ஏண்டி முழிக்கிறே ?

மனைவி: அவன் சொன்னது எல்லா பாடத்திலும் ஒவ்வொரு மார்க் வாங்கியிருக்கிறதை.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by சிவா on Sun Mar 01, 2009 2:01 pmகாதலன்: அன்பே ,,, இந்த கடற்கரை ,,, குளிர்ந்த காற்று தனிமை இதெல்லாம் என்ன தோண்றது ?

காதலி: வாய்க்கு ருசியா சாப்பிட ஒரு சுண்டல்காரனைக்கூட காணலையேன்னு தோணுது ,,,காவல் அதிகாரி: உங்களை அரெஸ்ட் பண்றேன்,,, வாங்க ஆஸ்பத்திரிக்கு ,,

அரசியல்வாதி: எதுக்கு ?

காவல் அதிகாரி: எப்பவும் ஜெயிலுக்குப் போனதும் நெஞ்சு வலின்னு ஆஸ்பத்திரிக்குத்தானே போகப் போறீர்,, அதான்.பெண்: வர்ற ஒண்ணாம் தேதி எங்கப்பாவை வந்து பாருங்க ,,,,,

பையன்: நிச்சயம் பண்ணவா ?

பெண் :என் பின்னாடியே வர்றிங்களே அதுக்கு செக்யூரிட்டி சம்பளம் வாங்கதான்மனைவி: போதை ஏறிட்டுதுன்னா அதுக்காக இப்படியா ?

கணவன்: ஏன் ,,, அப்படி என்ன பண்ணினேன் பங்கஜம் ?

மனைவி: உங்க கையில இருக்கிறது பிராந்தி பாட்டில் இல்ல கெரஸின் பாட்டில்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by சிவா on Sun Mar 01, 2009 2:14 pm
வேலைக்காரி: உங்க பையன் என்னைப் பார்க்கிற பார்வையே ஒரு மாதிரி இருக்குங்க,,,,

முதலாளி: கவலைப்படாதே ,,, சித்தி ங்கற முறையில் பார்த்திருப்பான்.நிருபர்: நீங்க எழுதின நாவல் ரொம்ப சூடா இருக்கே, ஏங்க ?

எழுத்தாளர்: கிச்சன்லே நான் சமையல் பண்ணும்போது எழுதினது ஆச்சேஆசிரியர்: உங்க அப்பா ராத்திரி படுக்கிறப்ப சட்டை பாக்கெட்ல நூறு ரூபா வைக்கிறாரு. காலையில பார்க்கிறப்ப நூறு ரூபா அப்படியே இருக்கு. இதுல இருந்து என்ன தெரியுது ?

மாணவன்: எங்க அம்மா ஊர்ல இல்லேன்னு தெரியுது சார் !
அந்தத் தியேட்டர் முதலாளியை போலீஸ் பிடிச்சுக்கிட்டுப் போகுதே ஏன்..?

டி.வி-ல போட வெச்சிருந்த படத்தைத் தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிட்டாராம்!டாக்டர்... நீ;ங்க சொந்தமா வீடு கட்டிட்டு இருந்தீங்களே.. அந்த வேலை முடி்சுதா?

இன்னும் இல்லை. நீங்க ஏன் தினம் அதைக் கேட்கறீங்க?

என்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணப் போறீங்கனு தெரி்சுக்கத்தான்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by சிவா on Sun Mar 01, 2009 2:15 pmதிரும்ப வாங்க முடியாத கடன் கோடிக்கணக்குல இருக்கறதால உங்க பாங்க்குக்கு எதிர்காலமே இருக்காதுன்னு சொல்லிக்கறாங்களே?

நீங்க வேறே.. எதிர்காலத்துல எங்க பாங்க்கே இருக்காதுங்கறதுதான் உண்மை.டாக்டர்.. என் கணவருக்கு சில நேரம் என்னை அடையாளம் தெரிய மாட்டேங்குது..

எப்படி சொல்றீ;ங்க?

சில நேரம் என்னைப் பார்த்தா பயப்பட மாட்டேங்கிறாரு டாக்டர்..குடும்பத்துக்கு விளக்கேற்றி வைக்கப் பொண்ணு வேணும்னு சொல்லி என் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணினது தப்பா போச்சு..

ஏன்?

என் மருமகள் விளக்கேத்தறதைத் தவிற வேற எந்த வேலையும் செய்ய மாட்டேங்கிறா..!நம்ம ஃபைனான்ஸ் கம்பெனி முதலாளிக்கு பத்மஸ்ரீ பட்டம் தரப்போறாங்களாமே...

நிஜமாவா?

ஆமாம்... குல்லா போடாம எல்லோருடைய பணத்தையும் வட்டியோட திருப்பித் தர்றாரே.. சும்மாவா!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by tamilparks on Mon Mar 02, 2009 10:03 am

அனைத்தும் மிகவும் அருமையான நகைச்சுவைகள், மிகவும் சிரித்துவிட்டேன்
avatar
tamilparks
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 444
மதிப்பீடுகள் : 7

View user profile http://tamilparks.50webs.com

Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by Guest on Wed Jul 01, 2009 7:44 pm

ஆ................. கடி தாங்க முடியலையே

யாராவது காப்பாத்துங்களேன்


Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by sudhakaran on Wed Jul 01, 2009 7:55 pm

சிவா சார் நல்லா இருக்கு ஆனால் ஒரேநேரத்துல இவ்வளவு கடிச்சா யாரும் தாங்க மாட்டாங்க.....ரத்தம் வருது சார்...
avatar
sudhakaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 441
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by Guest on Wed Jul 01, 2009 7:56 pm

@sudhakaran wrote:சிவா சார் நல்லா இருக்கு ஆனால் ஒரேநேரத்துல இவ்வளவு கடிச்சா யாரும் தாங்க மாட்டாங்க.....ரத்தம் வருது சார்...

மகிழ்ச்சி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by jegha on Wed Jul 01, 2009 8:29 pm

siva is it enaugh?
avatar
jegha
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 24
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by சிவா on Mon Apr 27, 2015 3:11 am

அன்பு மலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by ayyasamy ram on Mon Apr 27, 2015 5:05 am


வேலைக்காரி: உங்க பையன் என்னைப் பார்க்கிற
பார்வையே ஒரு மாதிரி இருக்குங்க,,,,
-
முதலாளி: கவலைப்படாதே ,,, சித்தி ங்கற முறையில்
பார்த்திருப்பான்...!!
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36720
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by mbalasaravanan on Mon Apr 27, 2015 3:58 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum