ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எல்லாம் பிறர்க்காகவே!
 Dr.S.Soundarapandian

இன்பமாய் இருக்கின்றனரே! (சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இன்னொரு திருமணம் செய்துகொள்கிறார்களே ! (சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

நிதானமாக அடித்து ஆடும் ஆஸ்திரேலியா....
 ayyasamy ram

பெண் குழந்தை ஒன்றிற்கு பிறந்து 6 நிமிடங்களில் ஆதார் எண் கிடைத்தது
 ayyasamy ram

படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

அழகென்றால் நீதான்! (நேபாளக் காதல் கவிதை)
 Dr.S.Soundarapandian

நேபாளிக் காதல் கவிதை !
 Dr.S.Soundarapandian

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 Dr.S.Soundarapandian

ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
 Dr.S.Soundarapandian

புதிரான போர் - கவிதை
 Dr.S.Soundarapandian

பேதம் இல்லாத காதல் - கவிதை
 Dr.S.Soundarapandian

ஐந்து கடல்கள் நாடு என்பது எகிப்து - பொ.அ.தகவல்
 Dr.S.Soundarapandian

கூட்டு குடும்பம் - கவிதை
 Dr.S.Soundarapandian

அழுக்குப் பிடித்து மஞ்சளாக இருக்கிறாய் ! (ரஷியக் கவிதை)
 Dr.S.Soundarapandian

மனைவியுடனே மீண்டும் ஜோடி போடும் வேலு பிரபாகரன்...
 ayyasamy ram

காயாம்பூ நிறம் கறுப்பு - பொ.அ.தகவல்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

காதல் என்பது...
 Dr.S.Soundarapandian

காதல் - கவிதை
 Dr.S.Soundarapandian

அறிமுகம் சந்திரசேகரன்
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(462)
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 ராஜா

பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
 ayyasamy ram

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
 ayyasamy ram

அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
 ayyasamy ram

இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கவிதை
 Dr.S.Soundarapandian

நதிக்கரை - கவிதை
 Dr.S.Soundarapandian

மிஸ்டர் பெத்தேரி படுக்கை அறையில் ! (பின்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஈச்ச மரங்களுக்கு மேலே அவள் முகம் ! (ஈராக் நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பின்லாந்தில் எல்லாம் இருக்கிறது ! (பின்லாந்து நாட்டின் இசைப்பாடல்)
 Dr.S.Soundarapandian

மின் நூல்கள்
 aeroboy2000

ஆங்கில நாவல்கள் தமிழில்
 aeroboy2000

முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 Dr.S.Soundarapandian

புகைப்படம் - கவிதை
 Dr.S.Soundarapandian

நீ என்ன தேவதை – கவிதை
 Dr.S.Soundarapandian

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
 ayyasamy ram

2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
 ayyasamy ram

பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
 ayyasamy ram

7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
 ayyasamy ram

இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
 ayyasamy ram

நான் சாகவில்லை!
 Dr.S.Soundarapandian

விஷ சேவல் கோழி மீன்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

. விநோதமான வேலை!
 Dr.S.Soundarapandian

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 Dr.S.Soundarapandian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by rajaalways on Mon Jun 22, 2015 10:19 am

FACEBOOK கில் நான் இதை படித்தேன் இது உண்மையா?  

ஒரு LPG சிலிண்டர் வாங்கி அது தீர்ந்துஇன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அ ந்த நேரம் வரை....

அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும்
அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை...!

இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால்...
சிலண்டர் விபத்து நேரும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து யாரும் அந்த காப்பீட்டுத் தொகையை
கேட்டு உரிமை கோருவதில்லை!,

நாம் சிலிண்டருக்காக ஒவ்வொரு முறையும் கொடுக்கும் தொகையிலும்
அந்த காப்பீட்டுக்கான பாலிசி தொகையும் சேர்த்துதான் செலுத்தி வருகிறோம்...

இந்த காப்பீடு குறித்து அரசாங்கமோ, எண்ணெய் நிறுவனங்களோ கூட வாடிக்கயாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதும் இல்லை!

சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேர்ந்தால்....

சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்!
avatar
rajaalways
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 159
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by ராஜா on Mon Jun 22, 2015 10:30 am

அதிர்ச்சி அப்படியா ....

இது குறித்து தெரிந்தவர்கள் யாரேனும் விளக்கம் கொடுங்கள் நண்பர்களே

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30669
மதிப்பீடுகள் : 5533

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by விமந்தனி on Mon Jun 22, 2015 10:33 am

நிஜமாகவா...?

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by krishnaamma on Mon Jun 22, 2015 10:36 am

ஆமாம் இது நிஜம்  தான்..........ஒருமுறை எங்களுக்கு காஸ் போடுபவரே சொன்னார், ஆனால் காஸ் கம்பெனிகள் இதை அவ்வளவாக 'ப்ராபகாண்டா' செய்வது இல்லை சோகம் .......இதையும்  அவரே வரு த்தமாய் சொன்னார் !

.
.
அந்த இன்சுரன்ஸ் கான  சிறு தொகையும் சேர்thதுத் தான் நம்மிடம் காஸ் காக வாங்கறாங்களாம் ..

Last edited by krishnaamma on Mon Jun 22, 2015 10:42 am; edited 3 times in total

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by சரவணன் on Mon Jun 22, 2015 10:38 am

ராஜா wrote:அதிர்ச்சி அப்படியா ....

இது குறித்து தெரிந்தவர்கள் யாரேனும் விளக்கம் கொடுங்கள் நண்பர்களே
மேற்கோள் செய்த பதிவு: 1146828 ஆமோதித்தல்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11137
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by T.N.Balasubramanian on Mon Jun 22, 2015 10:44 am

இன்சூரன்ஸ் காப்பிடு உண்டு .
40 லக்ஷம் இல்லை . 5 /10 லக்ஷம் ஈடு கேட்க முடியும் .

வெளியில் செல்கிறேன் .
பிறகு தொடர்கிறேன் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20503
மதிப்பீடுகள் : 7873

View user profile

Back to top Go down

Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by பாலாஜி on Mon Jun 22, 2015 11:03 am

இது உண்மைதான் ...விகடனில் வெளிவந்த கட்டுரையை இங்கு தருகின்றேன் ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19827
மதிப்பீடுகள் : 4003

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by பாலாஜி on Mon Jun 22, 2015 11:05 am

உங்கள் சமையலறையில் 50 லட்சம் ..? !

'நாம் கியாஸ் சிலிண்டர் வாங்கும் போது, அதற்கான இன்ஷூரன்ஸ் தொகையையும் சேர்த்துதான் கட்டுகிறோம். எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால், அந்த இன்ஷூரன்ஸைப் பயன்படுத்தி 40 லட்சம் ரூபாய் வரையிலும் இழப்பீடு பெற முடியும். ஆனால், இந்தச் செய்தியை இன்ஷூரன்ஸ் நிறுவனமோ, கியாஸ் நிறுவனமோ மக்களுக்குச் சொல்வது இல்லை!’ இப்படி ஒரு செய்தி குபீரெனப் பரவுகிறது. அது உண்மையா?

உண்மைதான்! ஆனால், முழு உண்மை அல்ல. எரிவாயு இணைப்பை நாம் பெறும்போதே, ஒவ்வோர் இணைப்பின் மீதும் இரண்டு வகையான இன்ஷூரன்ஸ் எடுக்கப்படுகின்றன. ஒன்று, சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனம் எடுப்பது; மற்றொன்று நமது கியாஸ் ஏஜென்சி எடுப்பது. இந்த இன்ஷூரன்ஸுக்கான பிரீமியம் தொகையை, கியாஸ் ஏஜென்சிகளும் கியாஸ் நிறுவனங்களுமே செலுத்திவிடும்; வாடிக்கையாளர்களாகிய நாம் செலுத்தவேண்டியது இல்லை.

ஒருவேளை கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டு உயிர் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டால், இதற்கான தொகையை இன்ஷூரன்ஸ் மூலம் பெற்றுக்கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்கள் யார் பாதிக்கப்பட்டாலும் இது பொருந்தும். இதன்படி, தனிநபருக்கான விபத்துக் காப்பீடு 5 லட்சம் வரையிலும், மருத்துவச் செலவுகள் 15 லட்சம் வரையிலும், உடைமைச் சேதாரம் 1 லட்சம் வரையிலும் அதிகபட்சமாக இழப்பீடு பெற முடியும். இந்த இழப்பீட்டுக்கான உச்சவரம்பு எல்லா வகையிலும் சேர்த்து தனிநபருக்கு 10 லட்சம், குறிப்பிட்ட ஒரு விபத்துக்கு 50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இப்படி ஒரு இன்ஷூரன்ஸ் இருப்பது குறித்து, கியாஸ் ஏஜென்சிகளும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் மக்களுக்கு எந்தத் தகவலும் சொல்வது இல்லை. இது தொடர்பான விழிப்புஉணர்வும் மக்களிடம் இல்லை. இதனால் கியாஸ் சிலிண்டர் விபத்துக்கள் எத்தனையோ நடந்திருந்தும், கடந்த 20 ஆண்டுகளில் ஒரு கிளெய்ம்கூட செய்யப்படவில்லை. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய், பிரீமியம் என்ற பெயரில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்குச் செல்கிறது.அதே நேரம், இந்த முறையில் கிளெய்ம் செய்ய வேண்டுமானால், அதற்கு பல நிபந்தனைகள் இருக்கின்றன. விபத்து ஏற்பட்டதும் உங்கள் கியாஸ் ஏஜென்சியிடம் எழுத்துபூர்வமாக புகார் கொடுக்க வேண்டும். அவர்கள், சம்பந்தப்பட்ட கியாஸ் நிறுவனத்திடமும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமும் தெரிவிப்பார்கள். பிறகு, அதிகாரிகள் குழு நேரில் வந்து ஆய்வு செய்வார்கள். அதுவரையில் விபத்து நடந்ததற்கான தடயங்களை அப்படியே வைத்திருக்க வேண்டும். விபத்து குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்து எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்க வேண்டும். யாருக்கேனும் உயிர் இழப்பு ஏற்பட்டிருந்தால், மரணச் சான்றிதழ், போஸ்ட்மார்ட்டம் அறிக்கை ஆகியவற்றை இணைக்க வேண்டும். விபத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்திருந்தால், அதற்கான மருத்துவமனை/ மருந்துப் பொருட்களின் ரசீதுகளை இணைக்க வேண்டும். விபத்தின் மூலம் உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டிருந்தால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒரு சர்வேயரை நியமித்து சேத மதிப்பைக் கணக்கிடும். ஆனால், இவையெல்லாம் விபத்துக்குப் பிறகான நடைமுறை.

விபத்துக்கு முன்னரே நாம் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் ஏகமாக இருக்கின்றன. நீங்கள் பயன்படுத்தும் அடுப்பு, கியாஸ் டியூப், லைட்டர் உள்ளிட்ட பொருட்கள் ஐ.எஸ்.ஐ தரச் சான்று பெற்றவையாக இருக்க வேண்டும். அப்படி சான்று பெற்றிருந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் கியாஸ் ஏஜென்சியிடம் உரிய கட்டணம் செலுத்தி, தரத்தை உறுதிப்படுத்தி சான்றிதழ் வாங்கிக்கொள்ள வேண்டும். சமையல் அறை அல்லாத இடங்களில் கியாஸ் சிலிண்டரைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. நமது பெயரில் நாம் பெற்ற கியாஸ் சிலிண்டராக இருக்க வேண்டும். அவசரத்துக்குக் கடன் வாங்கிய சிலிண்டரில் விபத்து ஏற்பட்டால், கிளெய்ம் செய்ய முடியாது. இப்படிப் பல நிபந்தனைகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் நிறைவேற்றி இருந்தால் மட்டுமே, விபத்து ஏற்பட்டால் இழப்பீடு கோர முடியும்.

'ஐ.எஸ்.ஐ சான்று பெற்ற பொருட்கள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தரத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்’ என்ற முதல் இரண்டு விஷயங்களிலேயே நம் ஆட்கள் அத்தனை பேரும் ஃபெயில் ஆகிவிடுவார்கள். இத்தனை சிக்கலான நிபந்தனைகளை வைத்துக்கொண்டு, அதை மக்களுக்குத் தெரிவிக்காமல் இருப்பது ஏன்?

'இது தொடர்பாக விளம்பரங்கள் செய்வது இல்லை என்பது உண்மைதான். அதற்காக இதை நாங்கள் மறைக்கிறோம் எனச் சொல்ல முடியாது. எல்லா விவரங்களும் எங்கள் இணையதளங்களில் வெளிப்படையாக இருக்கின்றன’ என்கிறார்கள் எரிவாயு நிறுவன ஊழியர்கள்.

கியாஸ் சிலிண்டர் விபத்துச் செய்திகள் ஒவ்வொரு நாளும் வந்துகொண்டே இருக்கின்றன. சிலிண்டர்களை எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் கையாள்வது இதற்கு முக்கியக் காரணம் என்றால், காலாவதியான சிலிண்டர்கள் இன்னொரு காரணம்.

அது என்ன காலாவதியான சிலிண்டர்?

'இந்த சிலிண்டர், எரிவாயு நிரப்பும் தரத்துடன்தான் இருக்கிறது’ என, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொரு சிலிண்டரும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். அந்தச் சோதனையில் சிலிண்டரில் ஏதேனும் குறை இருப்பது தெரியவந்தால், அது சரிசெய்யப்பட்டு இந்தியத் தர நிர்ணய அமைப்பு (Bureau of Indian Standards) சான்று அளித்த பின்னரே, மீண்டும் பயன்பாட்டுக்கு விட வேண்டும். ஒரே சிலிண்டரில் இரண்டாவது முறையாகக் குறை இருப்பது கண்டறியப்பட்டால், அது பயன்பாட்டில் இருந்து அகற்றப்படும்.

சிலிண்டரின் தலைப்பகுதியில் மூன்று கம்பிகள் இருக்கின்றன அல்லவா? அதில் ஒரு கம்பியின் பக்கவாட்டில், சிலிண்டரின் எடை விவரங்கள் இருக்கும். இன்னொன்றில், காலாவதி தேதி குறித்த எண்கள், சுருக்கெழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஜனவரி முதல் மார்ச் வரையில் A, ஏப்ரல் முதல் ஜூன் வரையில் B, ஜூலை முதல் செப்டம்பர் வரை C, அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் D. உதாரணத்துக்கு உங்கள் சிலிண்டரில் A–15 என எழுதப்பட்டிருந்தால், அதன் எக்ஸ்பயரி தேதி மார்ச் 2015 என அர்த்தம். இந்தத் தேதிக்குப் பிறகு சிலிண்டரைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. கியாஸ் கசிவு முதல் சிலிண்டர் வெடிப்பது வரை பல அபாயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதனால் ஏற்படும் விபத்துக்களும் அதிகம். காலாவதித் தேதியைக் கடந்து இருந்தாலோ, மிக நெருக்கத்தில் இருந்தாலோ, அந்த சிலிண்டரை நிராகரிக்கும் உரிமை நுகர்வோருக்கு உண்டு!

காப்பீடு பெற...

சென்னைப் புறநகர் பகுதியில் உள்ள கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் ஒருவரிடம் பேசியபோது, ''கியாஸ் ஏஜென்சி தரப்பில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் எடுக்கிறோம். கியாஸ் கம்பெனி தரப்பில் எடுக்கணீப்படும் இன்ஷூரன்ஸ் தனி. என் அனுபவத்தில் இதுவரை யாரும் இன்ஷூரன்ஸ் கிளெய்ம் பண்ணியது இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அடுப்பு, லைட்டர், டியூப் போன்றவற்றின் தரத்தை உறுதிப்படுத்தி சான்றிதழ் வாங்கிக்கொள்ள வேண்டும். இதற்காக எங்கள் பிரதிநிதிகள் சென்றால் மக்கள் யாரும் ஒத்துழைப்பதும் கிடையாது. ஒருவேளை இனிமேல் யாரேனும் இப்படி தரச் சான்றிதழ் பெற்று உரிய முறையில் பராமரித்தால், ஏதேனும் விபத்து ஏற்படும்போது இன்ஷூரன்ஸ் கிளெய்ம் பண்ணலாம்'' என்றார்.

---விகடன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19827
மதிப்பீடுகள் : 4003

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by krishnaamma on Mon Jun 22, 2015 11:24 am

விவரமான பகிர்வுக்கு நன்றி பாலாஜி...........எனக்கு இவ்வளவு விவரம் தெரியாது...............ஆனால் ஏதோ இன்சூரன்ஸ் இருக்கு என்று மட்டுமே தெரியும் புன்னகை......................மிக்க நன்றி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by சரவணன் on Mon Jun 22, 2015 11:45 am

இவ்ளோ இருக்கா பாலாஜி அண்ணா....?

அவங்க வந்து பாக்குற வரைக்கும் சிலிண்டர் வெடித்த வீட்டை அப்படியே போட்டு வச்சிருக்கணும?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11137
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by பாலாஜி on Mon Jun 22, 2015 11:48 am

சரவணன் wrote:இவ்ளோ இருக்கா பாலாஜி அண்ணா....?

அவங்க வந்து பாக்குற வரைக்கும் சிலிண்டர் வெடித்த வீட்டை அப்படியே போட்டு வச்சிருக்கணும?
மேற்கோள் செய்த பதிவு: 1146865

ஆமாம் , கிளெய்ம் செய்ய நிபந்தனைகள் மிக கடினமானதாக உள்ளது ..இதனால்தான் மக்கள் இதில் அதிக ஆர்வம் செலுத்தவில்லை என்று நினைக்கின்றேன் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19827
மதிப்பீடுகள் : 4003

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by தமிழ்நேசன்1981 on Mon Jun 22, 2015 11:51 am

மக்கள் பயன்பெறக்கூடிய எந்த விடயத்தையும் அரசாங்கமோ நிறுவனங்களோ உரிய முறையில் மக்களுக்கு கொண்டு சேர்த்த்து இல்லை. சேர்க்க போவதும் இல்லை. ஊடகங்கள்தான் இந்த விடயத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும். மக்களிடம் காசு வாங்குவது மட்டும் மறைமுகமாகவோ நேரடியாகவோ வசூலித்துவிடுவார்கள். இதில் இவர்கள் கில்லாடிகள்தான். மக்கள்தான் பாவம். எதற்க்காக பணம் கொடுக்கிறோம் என்பது தெரியாமலேயே அல்லல் படுகிறார்கள். தற்போதை பிரதமர் இன்சூரன்ஸ் திட்டமும் இந்த வகையை சேர்ந்த ஒன்றுதான். கேட்காமலேயே பேங்க்கில் இருந்து 12 ரூபாய் எடுத்துவிடுகிறார்கள். பின்னாளில் ஏதோ ஒரு காரணமாக பேங்கில் பணம் இல்லாமல் அக்கவுண்ட் இருந்தால் அதையே காரணம் காட்டி இன்சூரன்ஸ் காலாவதி ஆகிவிட்டது என்று கூறப்போகிறார்கள். சாமானியர்கள் எந்த நேரமும் அக்கவுண்ட்டில் காசு சேர்த்துவைப்பதில்லை. அதுவரை அவர்கள் அக்கவுன்ட்டில் இருந்து கேட்காமல் கொள்ளாமல் பிடித்தம் செய்யப்பட்ட தொகையின் நிலை..ராமசாமி..என் பணம் வந்துடும்..னு கவுண்டமணி சொல்ற மாதிரிதான்... அநியாயம் அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சார் இதுநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 951

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by ராஜா on Mon Jun 22, 2015 12:13 pm

தமிழ்நேசன்1981 wrote:மக்கள் பயன்பெறக்கூடிய எந்த விடயத்தையும் அரசாங்கமோ நிறுவனங்களோ உரிய முறையில் மக்களுக்கு கொண்டு சேர்த்த்து இல்லை. சேர்க்க போவதும் இல்லை.

corporate நிறுவனங்களுக்கு தெரியும் இன்சுரன்ஸ் என்ற பெயரில் பொதுமக்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பதற்கு பதில் , ஓரிரு அரசியல்நாய்களுக்கு எலும்புத்துண்டை தூக்கி போட்டு விஷயத்தை அமுக்கிடலாம் என்று புன்னகை

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30669
மதிப்பீடுகள் : 5533

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by T.N.Balasubramanian on Mon Jun 22, 2015 2:10 pm

LPG காப்பீட்டு தொகை சம்பந்தமாக ,நான் கூற வந்ததை , நாட்டாமை பாலாஜி , கூறிவிட்டார் .

நன்றி ,பாலாஜி .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20503
மதிப்பீடுகள் : 7873

View user profile

Back to top Go down

Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by சிவா on Mon Jun 22, 2015 11:43 pm

தலைப்பு திருத்தப்பட்டு, திண்ணைப் பேச்சு பகுதிக்கு மாற்றப்பட்டது!சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by T.N.Balasubramanian on Tue Jun 23, 2015 8:36 am

முன்பெல்லாம் டெலிவரி பையனுக்கு ,காஸ் விலை +பக்ஷீஸ் ,ரவுண்ட் ஆஃப் கொடுப்போம் .
10இல்ரிந்து 14 வரை பையனுக்கு டிப்ஸ் கிடைக்கும் .
இப்போதெல்லாம் குறைந்த பட்ஷம் 20/- வேண்டும் என்கிறார்கள் .
அவர்கள் கூறும் காரணம் , போகஸ் இணைப்புகள் குறைந்து விட்டன .
ஆகவே அந்த போகஸ் டிப்ஸ் கணக்கை உங்கள் மூலம் ஈடு செய்கிறோம் என்கிறார்கள் .
ஒரு +பாயிண்ட் , காஸ் புக் பண்ணி 3நாட்களுக்குள் கிடைக்கிறது .
ஒரு முறை புக் பண்ணி மறுநாளே வந்துவிட்டது .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20503
மதிப்பீடுகள் : 7873

View user profile

Back to top Go down

Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by ayyasamy ram on Tue Jun 23, 2015 8:42 am

இங்கும் (சிதம்பரத்தில்)
காஸ் புக் பண்ணினால், உடனே
டெலிவரி ஆகிறது...
-
போன் மூலமே புக் பண்ண வேண்டும்
செல்போனுக்கு காஸ் டெலிவரி ரெடி என்ற
தகவலும், டெலிவரி ஆன பின், மான்யத் தொகை
வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது என்ற குறுஞ்
செய்தியும் வருகின்றன
-
டெலிவரி செய்பவர்களுக்கு டிப்ஸ் 30 ரூபாயாக
உள்ளது
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30983
மதிப்பீடுகள் : 9607

View user profile

Back to top Go down

Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by T.N.Balasubramanian on Tue Jun 23, 2015 8:48 am

எவ்வளவு கொடுத்தாலும் ,இன்னும் கொடுக்கமாட்டார்களா என்ற எண்ணம் அனேகரிடம் உள்ளது .
30 ரூபாய் டிப்ஸ் + டெலிவரி கமிஷன் என குறைந்த பட்ஷம் 10 ரூபாய் ஆக மொத்தம்
ஒரு சிலிண்டருக்கு 40 ரூபாய் .ஒரு நாளுக்கு 25 முதல் 30 சிலிண்டர் டெலிவரி பண்ணினால்
வருமானம் 1000 முதல் 1200/- (வரி இல்லாமல் )

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20503
மதிப்பீடுகள் : 7873

View user profile

Back to top Go down

Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by விமந்தனி on Tue Jun 23, 2015 9:20 am

காஸ் விலை 605.50/- நான் கொடுப்பது 620/- மட்டுமே. முதல்ல எல்லாம் டிப்ஸ் 10 ரூபாய் தான் கொடுத்துட்டு இருந்தேன். இப்ப தான் 5 ரூபாய் ஏற்றியிருக்கேன்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by T.N.Balasubramanian on Tue Jun 23, 2015 12:40 pm

விமந்தனி on Tue Jun 23, 2015 9:20 am

காஸ் விலை 605.50/- நான் கொடுப்பது 620/- மட்டுமே. முதல்ல எல்லாம் டிப்ஸ் 10 ரூபாய் தான் கொடுத்துட்டு இருந்தேன். இப்ப தான் 5 ரூபாய் ஏற்றியிருக்கேன்.

குமாரசாமி கணக்கா இருக்கே .
ஏற்றியிருப்பது 4.50 ரூபாய் .சொல்லறது 5 ரூபாய் .
உங்க முகராசி பேசாம வாங்கிட்டு போறாங்க .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20503
மதிப்பீடுகள் : 7873

View user profile

Back to top Go down

Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by பாலாஜி on Tue Jun 23, 2015 12:46 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி on Tue Jun 23, 2015 9:20 am

காஸ் விலை 605.50/- நான் கொடுப்பது 620/- மட்டுமே. முதல்ல எல்லாம் டிப்ஸ் 10 ரூபாய் தான் கொடுத்துட்டு இருந்தேன். இப்ப தான் 5 ரூபாய் ஏற்றியிருக்கேன்.

குமாரசாமி கணக்கா இருக்கே .
ஏற்றியிருப்பது 4.50 ரூபாய் .சொல்லறது 5 ரூபாய் .
உங்க முகராசி பேசாம வாங்கிட்டு போறாங்க .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1147175

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19827
மதிப்பீடுகள் : 4003

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by ராஜா on Tue Jun 23, 2015 1:57 pmவிமந்தனி wrote:காஸ் விலை 605.50/- நான் கொடுப்பது 620/- மட்டுமே. முதல்ல எல்லாம் டிப்ஸ் 10 ரூபாய் தான் கொடுத்துட்டு இருந்தேன். இப்ப தான் 5 ரூபாய் ஏற்றியிருக்கேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1147114

T.N.Balasubramanian wrote:எவ்வளவு கொடுத்தாலும் ,இன்னும் கொடுக்கமாட்டார்களா என்ற எண்ணம் அனேகரிடம் உள்ளது .
30 ரூபாய் டிப்ஸ் + டெலிவரி கமிஷன் என குறைந்த பட்ஷம் 10 ரூபாய் ஆக மொத்தம்
ஒரு சிலிண்டருக்கு 40 ரூபாய் .ஒரு நாளுக்கு 25 முதல் 30 சிலிண்டர் டெலிவரி பண்ணினால்
வருமானம் 1000 முதல் 1200/- (வரி இல்லாமல் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1147105

அதானே ... நீங்கள் சொல்வது போல ஒவ்வொருத்தரும் 0.50 பைசா குறைவாக கொடுத்தால் ஒரு நாளைக்கு சுமார் ரூபாய் 12.50 முதல் 15.00 வரை அந்த டெலிவரி ஆளுக்கு இழப்பு ஏற்படுகிறது , அதனால் விமந்தனி அக்கா தவறான தகவல் கொடுத்தததை வன்மையாக கண்டிக்கிறேன் புன்னகை

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30669
மதிப்பீடுகள் : 5533

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by விமந்தனி on Tue Jun 23, 2015 2:42 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி on Tue Jun 23, 2015 9:20 am

காஸ் விலை 605.50/- நான் கொடுப்பது 620/- மட்டுமே. முதல்ல எல்லாம் டிப்ஸ் 10 ரூபாய் தான் கொடுத்துட்டு இருந்தேன். இப்ப தான் 5 ரூபாய் ஏற்றியிருக்கேன்.

குமாரசாமி கணக்கா இருக்கே .
ஏற்றியிருப்பது 4.50 ரூபாய் .சொல்லறது 5 ரூபாய் .
உங்க முகராசி பேசாம வாங்கிட்டு போறாங்க .
ரமணியன்
ஆமாம் ஐயா பேசாம தான் வாங்கிட்டு போயிடுவாங்க. அடாவடியா கேட்டா கண்டிப்பா (பயந்துட்டு) கொடுத்துடுவேன். ஆனா என்னவோ கேக்க மாட்டாங்க.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by விமந்தனி on Tue Jun 23, 2015 2:57 pm

ராஜா wrote:

விமந்தனி wrote:காஸ் விலை 605.50/- நான் கொடுப்பது 620/- மட்டுமே. முதல்ல எல்லாம் டிப்ஸ் 10 ரூபாய் தான் கொடுத்துட்டு இருந்தேன். இப்ப தான் 5 ரூபாய் ஏற்றியிருக்கேன்.

T.N.Balasubramanian wrote:எவ்வளவு கொடுத்தாலும் ,இன்னும் கொடுக்கமாட்டார்களா என்ற எண்ணம் அனேகரிடம் உள்ளது .
30 ரூபாய் டிப்ஸ் + டெலிவரி கமிஷன் என குறைந்த பட்ஷம் 10 ரூபாய் ஆக மொத்தம்
ஒரு சிலிண்டருக்கு 40 ரூபாய் .ஒரு நாளுக்கு 25 முதல் 30 சிலிண்டர் டெலிவரி பண்ணினால்
வருமானம் 1000 முதல் 1200/- (வரி இல்லாமல் )

ரமணியன்

அதானே ... நீங்கள் சொல்வது போல ஒவ்வொருத்தரும்  0.50 பைசா குறைவாக கொடுத்தால் ஒரு நாளைக்கு சுமார் ரூபாய் 12.50 முதல் 15.00 வரை அந்த டெலிவரி ஆளுக்கு இழப்பு ஏற்படுகிறது , அதனால் விமந்தனி அக்கா தவறான தகவல் கொடுத்தததை வன்மையாக கண்டிக்கிறேன் புன்னகை

நிஜமாவே 62௦ ரூபா தான் தர்றேன். வருஷத்துக்கு அதிக பட்சமாக 6 சிலிண்டருக்கு மேல் தாண்டாது. தீபாவளிக்கு 5௦ ரூபா. பொங்கலுக்கு 5௦ ரூபா டிப்ஸ் தருவேன். அவ்வளவு தான். நிஜத்தகவல் தான் ராஜா. நம்பனும்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by விமந்தனி on Tue Jun 23, 2015 2:59 pm

பாலாஜி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி on Tue Jun 23, 2015 9:20 am

காஸ் விலை 605.50/- நான் கொடுப்பது 620/- மட்டுமே. முதல்ல எல்லாம் டிப்ஸ் 10 ரூபாய் தான் கொடுத்துட்டு இருந்தேன். இப்ப தான் 5 ரூபாய் ஏற்றியிருக்கேன்.

குமாரசாமி கணக்கா இருக்கே .
ஏற்றியிருப்பது 4.50 ரூபாய் .சொல்லறது 5 ரூபாய் .
உங்க முகராசி பேசாம வாங்கிட்டு போறாங்க .
ரமணியன்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஏதோ இதிலாவது சாமார்த்தியமாய் இருக்கிறேனே என்று பார்த்தால்...... எல்லாரும் இப்படி கலாய்த்தால் எப்படியாம்...? சோகம்

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum