ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
Ideas on changing Government rules and regulations for easing lives of citizens
 T.N.Balasubramanian

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ஊர காணோம்
 ayyasamy ram

என் இடத்தைத் தீர்மானிக்க நேரம் வரவில்லை – கீர்த்தி சுரேஷ்
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 T.N.Balasubramanian

ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
 ayyasamy ram

பென்குவின் பறவைகள்
 ayyasamy ram

இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
 ayyasamy ram

காதல் என்பது…..
 ayyasamy ram

மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
 ayyasamy ram

உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
 ayyasamy ram

மாற்றம் என்பது...
 ayyasamy ram

ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
 ayyasamy ram

ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
 ayyasamy ram

பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
 ayyasamy ram

'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
 ayyasamy ram

எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
 ayyasamy ram

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 03
 shruthi

Youtube. வீடியோ டவுண்லோட் செய்ய சிறந்த ஆப்
 Meeran

இந்த வார இதழ்கள் சில
 Meeran

மே 25 நடப்பு நிகழ்வுகள்
 Meeran

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 02 - தவறவிடாதீர்கள்
 தமிழ்நேசன்1981

கனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்
 vighneshbalaji

எனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு
 vighneshbalaji

சிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை
 vighneshbalaji

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்
 sudhagaran

"குருவே சரணம்" - மகா பெரியவா !
 T.N.Balasubramanian

2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்
 ayyasamy ram

வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
 பழ.முத்துராமலிங்கம்

சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
 ayyasamy ram

தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
 ayyasamy ram

மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
 ayyasamy ram

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குதிரை பேர வரலாறு
 ayyasamy ram

புறாக்களின் பாலின சமத்துவம்
 ayyasamy ram

போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
 ayyasamy ram

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 பழ.முத்துராமலிங்கம்

மாறுவேடப் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
 ayyasamy ram

தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ….(பொது அறிவு தகவல்)
 ayyasamy ram

ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
 ayyasamy ram

விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
 ayyasamy ram

சினிமா -முதல் பார்வை: செம
 ayyasamy ram

அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”
 கோபால்ஜி

ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

எல்லாம் நன்மைக்கே! - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*
 krishnaamma

மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
 krishnaamma

திருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி
 krishnaamma

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 krishnaamma

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 krishnaamma

ஓர் அழகான கதை !
 krishnaamma

'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !
 krishnaamma

அது யார், ஜகத்குரு?..
 krishnaamma

நான் யார் ?
 B VEERARAGHAVAN

டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
 பழ.முத்துராமலிங்கம்

நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
 ayyasamy ram

அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்
 ayyasamy ram

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நம்ம குலதெய்வம்

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

நம்ம குலதெய்வம்

Post by rajaalways on Tue Jun 23, 2015 10:24 am

First topic message reminder :

இந்த திரியில் உங்களுக்கு தெரிந்த உங்கள் குலதெய்வம் களின் வரலாற்றை பதிவு செய்யலாம்

குலதெய்வங்களைப் பற்றி அறிய முற்பட்ட போது கிடைத்த பழையனூர் நீலியின் கதை. இந்தக் கதையுடன் வெள்ளாலர்களைப் பற்றிய தகவலும் வருகிறது என்பது கவணிக்கத் தக்கது. நீலியை இசக்கி என சில இனத்தவர் வழிபட்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதும் திருவாலங்காட்டிலிருந்து பழையனூர் முக்கால் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதும் செய்தி.
காஞ்சிபுரத்தில் ஒரு வணிகன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் நீலி. அவளுடன் அவன் இன்பமாக வாழ்ந்து வந்தான். கணவனுக்கு நீலி ஒரு குறையையும் வைக்கவில்லை. என்றாலும் அந்த வணிகன் அடிக்கடி பாலியல் தொழில் புரிபவர்களின் வீட்டுக்கு சென்று வந்தான். நீலிக்கு இது பிடிக்கவில்லை. கண்டித்தாள். வணிகன் இதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து தனது லீலைகளை நடத்தி வந்தான். நீலியும் விடவில்லை. அவனை கண்டிப்பதையும் நிறுத்தவில்லை. தனது சந்தோஷத்துக்கு இடையூறாக நீலி இருப்பதால், சுபயோக சுபதினத்தில் அவளை அவன் கொன்று விட்டான்.

நீலி பேயாக மாறி அவனை பழிவாங்க அலைந்து கொண்டிருந்தாள். இந்த விஷயம் வணிகனுக்கு தெரிந்ததும் சாமியாரை தேடி ஓடினான். அவரிடமிருந்து ஒரு மந்திரவாளை பெற்றுக் கொண்டான். எங்கு சென்றாலும் அந்த வாளுடனேயே சென்றான்.

ஒருநாள் பழையனூருக்கு வியாபார விஷயமாக அவன் சென்றபோது, பேய் உருவில் இருந்த நீலி அவனை துரத்த ஆரம்பித்தாள். ஆனால், அவளால் அவனை எதுவும் செய்யமுடியவில்லை. அவனிடமிருந்த மந்திரவாள் அவளை தடுத்தது. உடனே நீலி, கள்ளிக்கொம்பை ஒடித்து அதை குழந்தையாக மாற்றினாள். தானும் ஒரு அழகிய பெண்ணாக மாறினாள். குழந்தையை இடுப்பில் சுமந்தபடி அவனை பின்தொடர்ந்தாள். வணிகன் பயந்துவிட்டான். நேராக பழையனூரில் உள்ள 70 வேளாளர்கள் அடங்கிய சபையில் முறையிட்டான். அழகிய பெண்ணாக உருமாறி இருந்த நீலி அழுதாள். இவர் என் கணவர். தாசி வலையில் விழுந்து என்னையும் எங்கள் குழந்தையையும் நிர்கதியாக விட்டுவிட்டார். எங்களை சேர்த்து வையுங்கள்…” என்று கதறினாள் .

இதை கேட்டு வணிகன் அலறினான். ” பொய். இவள் என் மனைவியே அல்ல. பேய்!” என ஓலமிட்டான். ஆனால், குழந்தை ஓடிச்சென்று அவனை கொஞ்சியது. ”அப்பா…” என்றழைத்து முத்தமிட்டது . இதனை பார்த்த வேளாளர்கள் வணிகன் பொய் சொல்வதாக நினைத்தனர். ”சரி, இன்றிரவு நீங்கள் மூவரும் இங்கேயே தங்குங்கள். நாளை காலையில் மற்ற விஷயங்களை பேசிக் கொள்ளலாம்” என்றபடி வணிகனையும், குழந்தையுடன் இருந்த அந்தப் பெண்ணையும் ஒரே அறையில் தங்க வைத்தனர். முரண்டு பிடித்த வணிகனை அடக்கினர். போகும்போது மறக்காமல் வணிகனிடமிருந்த அந்த மந்திர வாளை வாங்கி சென்றனர். ”உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் எழுபது பேர் இருக்கும்போது இந்த வாள் எதற்கு? உங்களுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நாங்கள் எழுபது பேரும் தீக்குளிக்கிறோம்” என்று சொல்லிவிட்டு சென்றனர்.

வணிகனின் கையைவிட்டு மந்திரவாள் சென்றதும் அழகிய பெண்ணாக உருமாறியிருந்த நீலி, தன் உருவத்துக்கு வந்தாள். வணிகனை கொன்று பழி தீர்த்தாள். மறுநாள் வணிகனை காப்பாற்ற முடியாமல் போனதற்காக எழுபது வேளாளர்களும் தீக்குளித்து இறந்தார்கள்.

avatar
rajaalways
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 159
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down


Re: நம்ம குலதெய்வம்

Post by T.N.Balasubramanian on Wed Jun 24, 2015 7:53 pm

எங்களுக்கு சொந்த ஊர்  திருச்சி துறையூர் பக்கத்தில் உள்ள கரட்டாம்பட்டி தான் .
குலதெய்வம் , மலை மீதுள்ள ,பிரசன்னவெங்கடாசலபதி .
இந்த மலைக்கு பெருமாள் மலை என்ற பெயர் .  
இப்போது மலைக்கு போகும் வழி சீரமைக்க பட்டுள்ளது .
முன்பெல்லாம் ,ஏழு மலை ஏறி திருப்பதிக்கு போக முடியாதவர்கள் ,
இந்த பெருமாள் மலை ஏறி பெருமாள் தரிசனம் செய்வார்கள் .
இந்த மலை ஏற முடியாதவர்கள் ,பக்கத்தில் உள்ள குணசீலம் சென்று ,
பெருமாளின் மூத்த சகோதரரை ,ஸ்ரீனிவாச பெருமாளை தரிசனம் செய்து ,
முடிக்காணிக்கை செலுத்துவர். அங்கீகரிக்கப்பட்ட வழக்கம் இது .
கரட்டாம்பட்டி ,பெருமாள் மலை எவ்வளவு முக்கியத்துவமோ ,
அதே அளவு முக்கியத்துவம் கிராமத்து காவல் தெய்வம் "மண்டி கருப்புக்கு "உண்டு .
குதிரை மேல் ஆரோகித்து , ஊரை, காவல் காக்கும் கருப்பசாமி என்னும்
அய்யனார் .    
எங்கள் சுபமூகூர்த்த பத்தரிகைகளில் ,
வெங்கடாசலபதி துணையின் வரிக்கு ,அடுத்து
மண்டி கருப்பு துணை நிச்சயமாக இருக்கும் .
இவரை பற்றிய கதைகள் பல உண்டு .
மனதில் நின்றுள்ளது ரெண்டு .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21965
மதிப்பீடுகள் : 8237

View user profile

Back to top Go down

Re: நம்ம குலதெய்வம்

Post by rajaalways on Thu Jun 25, 2015 10:55 am

தயவு செய்து எங்களுக்கும் கொஞ்சம் சொல்ல முடியுமா
@T.N.Balasubramanian wrote:எங்களுக்கு சொந்த ஊர்  திருச்சி துறையூர் பக்கத்தில் உள்ள கரட்டாம்பட்டி தான் .
குலதெய்வம் , மலை மீதுள்ள ,பிரசன்னவெங்கடாசலபதி .
இந்த மலைக்கு பெருமாள் மலை என்ற பெயர் .  
இப்போது மலைக்கு போகும் வழி சீரமைக்க பட்டுள்ளது .
முன்பெல்லாம் ,ஏழு மலை ஏறி திருப்பதிக்கு போக முடியாதவர்கள் ,
இந்த பெருமாள் மலை ஏறி பெருமாள் தரிசனம் செய்வார்கள் .
இந்த மலை ஏற முடியாதவர்கள் ,பக்கத்தில் உள்ள குணசீலம் சென்று ,
பெருமாளின் மூத்த சகோதரரை ,ஸ்ரீனிவாச பெருமாளை தரிசனம் செய்து ,
முடிக்காணிக்கை செலுத்துவர். அங்கீகரிக்கப்பட்ட வழக்கம் இது .
கரட்டாம்பட்டி ,பெருமாள் மலை எவ்வளவு முக்கியத்துவமோ ,
அதே அளவு முக்கியத்துவம் கிராமத்து காவல் தெய்வம் "மண்டி கருப்புக்கு "உண்டு .
குதிரை மேல் ஆரோகித்து , ஊரை, காவல் காக்கும் கருப்பசாமி என்னும்
அய்யனார் .    
எங்கள் சுபமூகூர்த்த பத்தரிகைகளில் ,
வெங்கடாசலபதி துணையின் வரிக்கு ,அடுத்து
மண்டி கருப்பு துணை நிச்சயமாக இருக்கும் .
இவரை பற்றிய கதைகள் பல உண்டு .
மனதில் நின்றுள்ளது ரெண்டு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1147663

தயவு செய்து எங்களுக்கும் சொல்ல முடியுமா
avatar
rajaalways
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 159
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: நம்ம குலதெய்வம்

Post by T.N.Balasubramanian on Thu Jun 25, 2015 1:59 pm

@Rajaalways wrote:தயவு செய்து எங்களுக்கும் கொஞ்சம் சொல்ல முடியுமா

எந்தன் பாட்டி,அவருடைய பாட்டி அவருக்கு சொன்னதை , எந்தன் தாயாருக்கு சொன்னது
அந்த காலங்களில் ரோடு வசதி இல்லாத கிராமங்கள் .பஸ் ,ட்ரைன் வசதி (இன்றும் ) கிடையாது .
கரட்டாம்பட்டி கிராமம் .
உறவினர் பெண்மணி ,30 வயது ,அவரது மகள் இருவரும் பக்கத்து கிராமத்தில் (10 கிலோமீட்டர் தூரம் )இருக்கும் உறவினரை பார்க்க சென்று , பார்த்துவிட்டு திரும்பி வருகின்றனர் . எப்போதும் போல் ,ஹிட்ச் ஹைக்கிங் தான் அல்லது வண்டி எதுவும் நடுவழியில் வராத போது பொடி நடைதான் ..
நாமெல்லாம் நாகரீகமாக ,கட்டை விரலை உயர்த்தி lift கேட்டு போக வேண்டிய இடத்திற்கு போவது
போல் , அந்த காலத்தில் ,ஒத்தை மாட்டு வண்டியோ /ரெட்டை மாட்டு வண்டியில் , கேட்டு ஏறி போவதுண்டு .
வண்டி ஒட்டுபவர்களே , கூப்பிட்டு அழைத்து சென்று ,போகும் வழியில் ,இறக்கி விட்டு செல்வர் . அதுவும் பெண்மணி ,
கூடவே குழந்தை என்னும் போது , தங்கச்சி முறை வைத்து கூட்டி செல்வர் .
சரி , நாம் நம்முடைய கொள்ளுப் பாட்டி காலத்துக்கு போவோம் .
பெண்மணி ,உறவினரை பார்த்து விட்டு அவர்கள் அன்புடன் கொடுத்த காய்கறிகளையும் ,மற்ற பொருள்களையும் ஒரு சாக்கில் போட்டுக் கொண்டு , குழந்தையை பிடித்து கொண்டு , வண்டி ஏதாவது வருகின்றதா என்று பார்த்து நடந்து
வருகிறார் .அவர் துரதிர்ஷ்டம் ஒரு வண்டி கூட வரவில்லை . பாவம் குழந்தையாலும் நடக்க முடியவில்லை . இருட்டி விட்டது .பாதை தெரியவில்லை . உத்தேசமாக போய் கொண்டே இருக்கிறார் . ஊர் வந்த பாடில்லை . குழந்தை வேறு அழுகிறது . முட்டையை இறக்கி வைத்து விட்டு , மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு என்ன பண்ணலாம் என்று யோசனை. ஒன்னும் புலப்படவில்லை . இனி கருப்பு விட்ட வழி என்று மனதில் நினைத்துக்கொண்டு , இப்பிடி ஆயிடுத்தே கருப்பு ,நான் என்ன பண்ணுவேன் , அவங்க சொன்ன மாதிரி ராத்தங்கி வந்துருக்கணும் . அசட்டு தைரியத்துலே வந்துட்டேன் .மண்டி கருப்பு , நீதான் காப்பாத்தணும் . நாளைக்கு உன்கிட்ட வந்து கற்பூரம் காட்டறேன் .
என்று கூறி அழுகையை அடக்கிக் கொண்டார் . 10 /15 நிமிடம் கழிந்து இருக்கும் . ஜல் ஜலக்,ஜல் ஜலக்,ஜல் ஜலக்
என்ற சத்தம் மெதுவாக வருகிறது . தூரத்தில் ஒரு விளக்கு மினுக்மினுக் மினுக்கிக் கொண்டு ,நடனமாடிக் கொண்டு ,எதிர் திசையில் வருகிறது . முதலில் பயமாக இருந்தாலும் ,அவளுக்கு புரிந்து விட்டது . மாட்டு வண்டி ,சிறிய விளக்குடன் வந்து கொண்டு இருக்கிறது . வந்த ஊருக்கே போகலாமாஎன்ற குழப்பம் .
இவள் அருகே வந்ததும் வண்டி நின்றது . தலையில் முண்டாசுடன் வண்டிக்காரன் . "என்ன தாயீ , இங்கே இந்நேரத்திலே நின்னுகினு ,என்கிறார் .பெண்மணி கரடாம்பட்டி போகணும் என்று சொன்னதும் , தப்பான காட்டு பாதலே வந்துருக்கியம்மா ,கரட்டம்பட்டிக்கு எதிர் திசையிலே இல்லே . என்றார் . வண்டிலே ஏறிக்கோ ,உன்னை விட்டுட்டு போறேன் என்றார் . பெண்மணி ,தயங்கினாலும் ,மூட்டையை முதலில் தள்ளிவிட்டு பின்னால் குழந்தையுடன் ஏறிக்கொண்டார் .எப்பிடி வழி தப்பியது என்று ஒன்றும் புரியவில்லை . வண்டிக்காரரே கேட்டார் ,
எம்மா மாரியம்மன் கோவில் தாண்டி , இடப்புறம் திரும்புவதற்கு பதிலா ,வலப்பக்கம் திரும்பிட்டையே என்றார் .
ஒரே குழப்பம் . ஒன்னும் புரியல்லை . இருக்கலாம் அய்யா ,இருட்டுலே நடந்து இருக்கலாம் என்றாள் .
வண்டி பயணம் ஜல் ஜலக்ஜல் ஜலக்ஜல் ஜலக்என்று தொடர்ந்தது .ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தது .
குழந்தையை எழுப்பி விட்டு ,மூட்டையை உள்ளே வைக்க .போகுமுன் ,
அண்ணாச்சி மொரு தண்ணி குடிக்கிறீங்களா , கொண்டு வரேன் என்று சொல்லி உள்ளே போனாள் .
சட்டியில் இருந்து மோர் எடுத்து ,ரெண்டு உப்புக்கல்லை போட்டு ,மோருடன் வெளியே வந்து பார்க்கையில் ​​
குழந்தை மட்டுமே நின்றுகொண்டு இருந்தாள். ஏய் , வண்டிகார மாமா எங்கே என்று கேட்க , நீ உள்ளே போனதுமே ,
மாமா , " நீ உள்ளே போம்மா , நான் வரேன் "சொல்லிட்டு ,அப்பிடியே போய்டாரம்மா.
வெளியில் பார்த்தால் , வண்டி வந்ததோ ,போனதோ ,ஜல் ஜலக்​ஜல் ஜலக்​சத்தமோ இல்லை .
மறுநாள் ,இதை பற்றி பேசும் பொது ஊரார் சொன்னது ,நேத்திக்கு உனக்கு வண்டி ஒட்டி வந்தது ,கருப்பசாமி தான் .
அந்த ஜல் ஜலக்​ஜல் ஜலக்​ஜல் ஜலக்​சத்தம் மண்டிகருப்பு எழுப்பும் வேல் சப்தம் என்றார்களாம் .​​​​​

ரமணியன் (நன்றி கொள்ளுப்பாட்டி )


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21965
மதிப்பீடுகள் : 8237

View user profile

Back to top Go down

Re: நம்ம குலதெய்வம்

Post by ayyamperumal on Thu Jun 25, 2015 2:25 pm

எனக்கு தெரிந்த ஒரு எளிமையான வழி உண்டு . மதுரைக்கு அருகே உள்ள திருவாதவூரில் ஒரு சிறந்த கோடாங்கி இருக்கிறார். வெற்றிலை பாக்கு 101 ரூபாய் காணிக்கை அவர்முன் வைத்துவிட்டு அமர்ந்தாள் போதம். நீங்கள் எதுவும் பேச தேவையில்லை . உங்கள் குல தெய்வம் உள்ள ஊர் அதன் பெயர் அனைத்தையும் சொல்லிவிடுவார் . அவரது அலைபேசி எண் 9787821885
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: நம்ம குலதெய்வம்

Post by ராஜா on Thu Jun 25, 2015 2:48 pm

@T.N.Balasubramanian wrote:ஊரார் சொன்னது ,நேத்திக்கு உனக்கு வண்டி ஒட்டி வந்தது ,கருப்பசாமி தான் .
அந்த ஜல் ஜலக்​ஜல் ஜலக்​ஜல் ஜலக்​சத்தம் மண்டிகருப்பு எழுப்பும் வேல் சப்தம் என்றார்களாம் .​​​​​

ரமணியன் (நன்றி கொள்ளுப்பாட்டி )
மேற்கோள் செய்த பதிவு: 1147782 உடல் சிலிர்க்கிறது ஐயா
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30911
மதிப்பீடுகள் : 5595

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நம்ம குலதெய்வம்

Post by krishnaamma on Thu Jun 25, 2015 7:11 pm

@ayyamperumal wrote:எனக்கு தெரிந்த ஒரு எளிமையான வழி உண்டு .     மதுரைக்கு  அருகே உள்ள திருவாதவூரில்  ஒரு சிறந்த கோடாங்கி இருக்கிறார். வெற்றிலை பாக்கு  101 ரூபாய் காணிக்கை அவர்முன் வைத்துவிட்டு  அமர்ந்தாள் போதம். நீங்கள் எதுவும் பேச தேவையில்லை .   உங்கள்  குல தெய்வம்  உள்ள  ஊர் அதன் பெயர் அனைத்தையும்  சொல்லிவிடுவார்  .     அவரது  அலைபேசி எண்  9787821885

வாப்பா பெருமாள், நலமா?........என்ன ரொம்பநாளாய் ஆளைக்காணும்? ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55538
மதிப்பீடுகள் : 11625

View user profile

Back to top Go down

Re: நம்ம குலதெய்வம்

Post by krishnaamma on Thu Jun 25, 2015 7:12 pm

@ராஜா wrote:
@T.N.Balasubramanian wrote:ஊரார் சொன்னது ,நேத்திக்கு உனக்கு வண்டி ஒட்டி வந்தது ,கருப்பசாமி தான் .
அந்த ஜல் ஜலக்​ஜல் ஜலக்​ஜல் ஜலக்​சத்தம் மண்டிகருப்பு எழுப்பும் வேல் சப்தம் என்றார்களாம் .​​​​​

ரமணியன் (நன்றி கொள்ளுப்பாட்டி )
மேற்கோள் செய்த பதிவு: 1147782 உடல் சிலிர்க்கிறது ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1147786

ஆமாம் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55538
மதிப்பீடுகள் : 11625

View user profile

Back to top Go down

Re: நம்ம குலதெய்வம்

Post by rajaalways on Fri Jun 26, 2015 9:29 am

@T.N.Balasubramanian wrote:


மறுநாள் ,இதை பற்றி பேசும் பொது ஊரார் சொன்னது ,நேத்திக்கு உனக்கு வண்டி ஒட்டி வந்தது ,கருப்பசாமி தான் .
அந்த ஜல் ஜலக்​ஜல் ஜலக்​ஜல் ஜலக்​சத்தம் மண்டிகருப்பு எழுப்பும் வேல் சப்தம் என்றார்களாம் .​​​​​  

ரமணியன்  (நன்றி கொள்ளுப்பாட்டி )
மேற்கோள் செய்த பதிவு: 1147782

ரொம்ப நன்றி

avatar
rajaalways
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 159
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: நம்ம குலதெய்வம்

Post by விமந்தனி on Sat Jun 27, 2015 12:22 am

@ராஜா wrote:
@விமந்தனி wrote:

இதுவும் பார்த்தேன் தமிழ். இதிலும் அசைவம் பிரச்சனையாக இருக்கிறதே. அது தான் வருத்தம்.


குலதெய்வம் என்றாலே கிடாவெட்டி சரக்கு படையல் போட்டு கும்பிடுவது தானே புன்னகை அக்கா

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நம்ம குலதெய்வம்

Post by விமந்தனி on Sat Jun 27, 2015 12:39 am

@ayyamperumal wrote:எனக்கு தெரிந்த ஒரு எளிமையான வழி உண்டு .     மதுரைக்கு  அருகே உள்ள திருவாதவூரில்  ஒரு சிறந்த கோடாங்கி இருக்கிறார். வெற்றிலை பாக்கு  101 ரூபாய் காணிக்கை அவர்முன் வைத்துவிட்டு  அமர்ந்தாள் போதம். நீங்கள் எதுவும் பேச தேவையில்லை .   உங்கள்  குல தெய்வம்  உள்ள  ஊர் அதன் பெயர் அனைத்தையும்  சொல்லிவிடுவார்  .     அவரது  அலைபேசி எண்  9787821885

தகவலுக்கு


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நம்ம குலதெய்வம்

Post by T.N.Balasubramanian on Mon Jun 29, 2015 4:08 pm

@Rajaalways wrote:தயவு செய்து எங்களுக்கும் கொஞ்சம் சொல்ல முடியுமா

மறக்க முடியா நிகழ்ச்சி --2.
===========================================================================
மண்டிகருப்பு எனும் கருப்பசாமி -அனுபவம் 2.​
​இரவு 10மணி இருக்கும் .
வாசக்கதவு தட்டும் சத்தம் .
மூதாட்டி ஒருவர் 55/58 வயது இருக்கும் .
சிம்னி விளக்கை பெரிது பண்ணி , வாசல் பக்கம் வந்து  யாரு என்று கேட்டார் .
அம்மா , கீழூர் கிராமத்து ஊர் காவல்காரன் அம்மா !
உங்க மவ அந்த ஊர்லே  இருக்காங்களா ?
அந்த மூதாட்டியின் மகள் அந்த ஊரில் தான் இருக்கிறார் . மேலும் அவர் நிறைமாச கர்ப்பிணி .இன்னும் ஒரு வாரத்தில் பிரசவம் ஆகும் என்று மருத்துவச்சி சொல்லி இருந்தார் .
ஆமாப்பா ,என்று கதவை திறந்தார் .
முண்டாசு கட்டிக் கொண்டு ,கட்டு மஸ்த்தான உடல் .படர்ந்த மீசையுடன் ஒரு உருவம் . கையில் பெரிய தடி வைத்து இருந்தார்.
அம்மா , மவளுக்கு , வலி எடுத்திடுச்சு , மருத்துவச்சி ஊர்லே இல்லே . அய்யாவும் ஊர்லே இல்லே
அதன் என்கிட்டே சொல்லி அனுப்பிச்சு .சீக்கரம் கிளம்புங்கம்மா .உங்களுக்கு பிரசவம் பாத்து பழக்கம்மாமே . மூதாட்டி , ஏதோ ஓரிரு பிரசவத்தின் போது ,கூட இருந்து உதவியதுடன் சரி .வேறெதுவும் தெரியாது . பெத்த மகள் சொல்லி அனுப்பி இருக்காள் . உதவிக்கு யாரும் இல்லை . கிளம்பி விட்டாள் ,கையில் கிடைத்த துணிகளை எடுத்துக் கொண்டு . கூடவே மண்டி கருப்பு விபுதி பொட்டலம் கையில் .கருப்பு சாமி வேண்டிக் கொண்டு , கதவை பூட்டி விட்டு , கிராமத்து காவல்காரனுடன் போக ஆரம்பித்தாள் . ரெண்டு பேருக்கும் 5 அடி வித்தியாசம் .
கண்மாயை சுற்றிக்கொண்டு போகணும் .எப்பிடியும் 60/70 நிமிடம் ஆகும் .
காவல்காரன் , அம்மா ,என்கூட வாங்க ,மதகு வழியா போயிடலாம் 15 நிமிடத்துலே போயிடலாம் .
ஏம்ப்பா, தண்ணி அதிகமாக போயிட்டு இருக்குமே ,போக முடியாதே என்றாள் .
இல்லேமா , அதிக தண்ணி எல்லாம் வழிஞ்சிடுச்சு , நான் அப்பிடி வந்தேன் ,நீங்க வாங்க
சீக்ரம் போகணும் என்றார் .
மதகு பக்கம் அவர் சொன்ன மாதிரி தண்ணி வழியாமல்  இருக்க ,காவல்காரன் எதுக்கும் இந்த
கம்பின் ஒரு முனை பிடிச்சுக்கோங்க ,வழுக்கினாலும் வழுக்கும் என்று நீட்ட , மூதாட்டியும் அதை பிடித்து , மறு முனை வந்தார் .
இருவரும் மகள் வீட்டை  அடைய ,மகளோ வலி பொறுக்க  முடியாமல் கதறிக் கொண்டு இருந்தார் .
மூதாட்டி உடனே செயலில் இறங்கினார். அதற்குள் காவல்காரரும் அக்கம் பக்கத்து வீட்டில் இருந்து
பெண்களை உதவிக்கு கூட்டிவந்து உதவினார் . அம்மா எல்லாம் நல்லபடியா நடக்கும் ,எனக்கு வேலை இருக்கு என்று கூறி ,காவலாளியும் கிளம்பினார் .
அரைமணி நேரத்தில் குழந்தை சுகமாக பிறக்க , தாயும் அசதியால் கண்மூடினார் .
மறுநாள் காலை பொழுது விடியுமுன் மருமகனும் வந்து சேர்ந்தார் .
மூதாட்டி , என்னப்பா ,நிறைமாச கர்ப்பிணியை இப்பிடி விட்டுட்டு போகலாமா ? என்று கேட்க ,
இல்லேமா நன்னா இருந்தா  , மருத்துவச்சி வேறு நிச்சயமாக ஒரு வாரம் ஆகும் என்று சொன்னதால்
பணம் தரேன்னு சொன்ன ஆளை பக்க போனேன் .இவ்வளவு சீக்கிரம் பிரசவம் ஆகும்னு தெரியாது .
நீங்க எப்பிடி சரியான நேரத்துக்கு வந்தீங்க என்று கேட்டார் .
இதன் நடுவே குழந்தை அழுகை சத்தம் ,மகளின் அழைப்பு , உள்ளே போனார் மூதாட்டி .
சிறிது செய்யவேண்டிய உதவிகளை செய்கையில் ,நீ எப்பிடி அம்மா சரியான சமயத்துக்கு வந்தே ?
என்று மகள்  கேட்டாள். ஏம்மா நீதானே உங்க ஊர் காவல்காரன் கிட்டே சொல்லி அனுப்பிச்சே .அவன் கூட 1/2 மணிலே வந்தேன்   .
என்னம்மா சொல்லறே , நான் யாரு கிட்டேயும் சொல்லையம்மா . திடீருன்னு உடம்பு ஒரு மாதிரி ஆயிடுச்சு இவரும் இல்லே ,என்னே பண்ணுவேன் கருப்பு சாமி ,நீதான் காப்பாத்தணும் சொன்னது தான் தெரியும்மா . வேறு ஒன்னும் தெரியாது . அதுவும் 1/2 மணியில் நீ வந்ததுதான் ஆச்சர்யம் என்றாள் . கண்மாய் வழியாக வந்தோம் என்றதும்  எப்பிடி,அம்மா  ,ஏரிலே அவ்வளவு தண்ணி இருக்கே என்றாள் .
மருமகனும் மறுநாள் கிளம்பி வருவதாக இருந்தாராம் . ஊருக்கு போ போ என்று யாரோ சொல்கின்ற மாதிரி இருந்துச்சு . ரோடுபக்கம் வந்த ரெட்டை மாட்டுவண்டி ,சந்தைக்கு போக சரக்குடன் வந்து கொண்டு இருந்துச்சு ..அதுலே ஏறி வந்தேன் என்றார் . அவரும் கண்மாயில் அதிகம் தண்ணீர் போய்கொண்டு இருப்பதை பார்த்ததாக சொன்னார் .
அந்த ஊரில் இன்னும் காவல்காரனாக யாரையும் நியமிக்கவில்லையாம் . கருப்புசாமி இருக்கச்சே ,காவலாளி எல்லாம் வேண்டாம் என்று பஞ்சாயத்து கூறிவிட்டதாம் .
கண்மாயை கடக்க காவலாளி ,கம்பை கொடுத்த போது , அந்த கம்பு எழுப்பிய ஜல்ஜல்ஜலக் சத்தம் நினைவுக்கு வந்தது
அப்பிடி என்றால் , மகளின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து அன்று காவலாளியாக வந்து ,தன்னைக் கூட்டி வந்ததும்,மருமகனிற்கு ஊருக்கு வர சொன்னதும் மண்டி கருப்பு என்னும் கருப்பசாமியாகத்தான் இருக்கும் என்றார் அந்த மூதாட்டி .

=======================================================================================
நன்றி கொள்ளுப்பாட்டி ,

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21965
மதிப்பீடுகள் : 8237

View user profile

Back to top Go down

Re: நம்ம குலதெய்வம்

Post by rajaalways on Mon Jun 29, 2015 4:48 pm

நன்றி ஐயா, ஆனால் எனக்கு கருப்பு சாமி பற்றிய வரலாறு கூற முடியுமா. பிறந்தது அம்மா அப்பா பற்றி.

avatar
rajaalways
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 159
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: நம்ம குலதெய்வம்

Post by T.N.Balasubramanian on Mon Jun 29, 2015 7:15 pm

@Rajaalways wrote:எனக்கு கருப்பு சாமி பற்றிய வரலாறு கூற முடியுமா. பிறந்தது அம்மா அப்பா பற்றி.

தெரியாதே . இப்பவும் அவர் வெட்ட வெளியில் குதிரை மீது ஆரோகணித்து இருக்கார் .
கூரை வேய்வதற்கு முயற்சித்தார்கள். பலன் இல்லை .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21965
மதிப்பீடுகள் : 8237

View user profile

Back to top Go down

Re: நம்ம குலதெய்வம்

Post by ayyamperumal on Thu Jul 02, 2015 12:25 pm

@rajaalways wrote:நன்றி ஐயா, ஆனால் எனக்கு கருப்பு சாமி பற்றிய வரலாறு கூற முடியுமா. பிறந்தது அம்மா அப்பா பற்றி.

மேற்கோள் செய்த பதிவு: 1148524


   நீங்களே தெரிந்து கொள்ளலாம்  ஆனால்   கொஞ்சம்  கொஞ்சம் செலவாகும்.   திருச்சி  அருகே துரையூரில்  ஓங்கார குடில்   அகத்தியர் சுத்த சன்மார்க்க சங்கம் உள்ளது   ஆறுமுக அரங்க மகா தேசிக  சுவாமிகள் கருப்புசாமியை பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.  அதன்  விலை 2500 இருக்கலாம். என்றோ  தின தந்தியில்  படித்த நினைவு.
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: நம்ம குலதெய்வம்

Post by T.N.Balasubramanian on Thu Jul 02, 2015 8:50 pm

@ayyamperumal wrote:துரையூரில் ஓங்கார குடில் அகத்தியர் சுத்த சன்மார்க்க சங்கம் உள்ளது ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகள்

மிக்க நன்றி , ஐயம் பெருமாள் . நலமா ? நீண்ட நாட்களாக காணவில்லையே !
அருமையான தகவல் .
அடுத்த முறை போகும் போது , துறையுருக்கும் போகவேண்டியதுதான் .
எப்பிடியும் குணசீலம் போய் வரும்போது , இங்கேயும் நுழையவேண்டியதுதான் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21965
மதிப்பீடுகள் : 8237

View user profile

Back to top Go down

Re: நம்ம குலதெய்வம்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Thu Jul 30, 2015 11:24 pm

குலதெய்வ வழிபாடு என்பது குருபாராம்பரியம் போன்றதே . ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறக்கும் ஒரு ஆத்மா – மனிதனுக்கு அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவனை கண்காணித்து பாதுகாப்பதில் அந்த குடும்பத்தின் காவல் தெய்வம் போல ஒரு ஆவி மண்டல சக்தி பொறுப்பெடுத்துக்கொள்கிறது . குடும்ப ஆண்டவர் என்பதாகவும் இந்த ஆவி மண்டலசக்தி அறியப்படும் .

குரான் 13:11. மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்  (மலக்குகள் என்றால் தேவதூதர்கள் அல்லது ஆவிமண்டல சக்திகள் என்பது பொருள் )

கடவுள்தான் எல்லாவற்றையும் நிர்வகிக்கிறார் என்றாலும் ; அவரது பரலோக ராஜ்ஜியத்தின் பூமிக்கான அதிகாரிகளாக இந்த குலதெய்வங்களை எடுத்துக்கொள்ளலாம்

மேலும் அறிய லிங்கை சொடுக்கவும்

குலதெய்வ வழிபாடு!
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: நம்ம குலதெய்வம்

Post by T.N.Balasubramanian on Fri Jul 31, 2015 10:07 am

நல்லதோர் விளக்கம் கிருபா அவர்களே

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21965
மதிப்பீடுகள் : 8237

View user profile

Back to top Go down

Re: நம்ம குலதெய்வம்

Post by கவியரசன்(கவிச்சுடர்) on Fri Jul 31, 2015 10:16 am

ஆகா மெய் சிலிர்க்கிறது நல்ல பதிவு .................... ஆனால் நம்பிடத்தான் அறிவியல் மனம் மறுக்கிறது
avatar
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 169
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: நம்ம குலதெய்வம்

Post by krishnaamma on Fri Jul 31, 2015 11:54 am

@கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:குலதெய்வ வழிபாடு என்பது குருபாராம்பரியம் போன்றதே . ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறக்கும் ஒரு ஆத்மா – மனிதனுக்கு அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவனை கண்காணித்து பாதுகாப்பதில் அந்த குடும்பத்தின் காவல் தெய்வம் போல ஒரு ஆவி மண்டல சக்தி பொறுப்பெடுத்துக்கொள்கிறது . குடும்ப ஆண்டவர் என்பதாகவும் இந்த ஆவி மண்டலசக்தி அறியப்படும் .

குரான் 13:11. மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்  (மலக்குகள் என்றால் தேவதூதர்கள் அல்லது ஆவிமண்டல சக்திகள் என்பது பொருள் )

கடவுள்தான் எல்லாவற்றையும் நிர்வகிக்கிறார் என்றாலும் ; அவரது பரலோக ராஜ்ஜியத்தின் பூமிக்கான அதிகாரிகளாக இந்த குலதெய்வங்களை எடுத்துக்கொள்ளலாம்

மேலும் அறிய லிங்கை சொடுக்கவும்

குலதெய்வ வழிபாடு!
மேற்கோள் செய்த பதிவு: 1154233

கிருபானந்தன், உங்கள் பதிவில் இருந்த லிங்க் ஐ எடுத்துவிட்டேன் .................உங்கள் ப்ளாக் ஆக இருக்கும் பக்ஷத்தில் நீங்கள் உங்கள் கைஎழுத்துப்பகுதி இல் போடுங்கள் புன்னகை.......நம் தளத்தின் விதி முறைகள் லிங்குகளை அனுமதிப்பது இல்லை  புன்னகை

அன்புடன் ,
கிருஷ்ணாம்மா  புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55538
மதிப்பீடுகள் : 11625

View user profile

Back to top Go down

Re: நம்ம குலதெய்வம்

Post by ராஜா on Fri Jul 31, 2015 1:51 pm

@krishnaamma wrote:
@கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:குலதெய்வ வழிபாடு என்பது குருபாராம்பரியம் போன்றதே . ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறக்கும் ஒரு ஆத்மா – மனிதனுக்கு அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவனை கண்காணித்து பாதுகாப்பதில் அந்த குடும்பத்தின் காவல் தெய்வம் போல ஒரு ஆவி மண்டல சக்தி பொறுப்பெடுத்துக்கொள்கிறது . குடும்ப ஆண்டவர் என்பதாகவும் இந்த ஆவி மண்டலசக்தி அறியப்படும் .

குரான் 13:11. மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்  (மலக்குகள் என்றால் தேவதூதர்கள் அல்லது ஆவிமண்டல சக்திகள் என்பது பொருள் )

கடவுள்தான் எல்லாவற்றையும் நிர்வகிக்கிறார் என்றாலும் ; அவரது பரலோக ராஜ்ஜியத்தின் பூமிக்கான அதிகாரிகளாக இந்த குலதெய்வங்களை எடுத்துக்கொள்ளலாம்

மேலும் அறிய லிங்கை சொடுக்கவும்

குலதெய்வ வழிபாடு!
மேற்கோள் செய்த பதிவு: 1154233

கிருபானந்தன், உங்கள் பதிவில் இருந்த லிங்க் ஐ எடுத்துவிட்டேன் .................உங்கள் ப்ளாக் ஆக இருக்கும் பக்ஷத்தில் நீங்கள் உங்கள் கைஎழுத்துப்பகுதி இல் போடுங்கள் புன்னகை.......நம் தளத்தின் விதி முறைகள் லிங்குகளை அனுமதிப்பது இல்லை  புன்னகை

அன்புடன் ,
கிருஷ்ணாம்மா  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1154312

நன்றி நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30911
மதிப்பீடுகள் : 5595

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நம்ம குலதெய்வம்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sun Aug 02, 2015 10:51 pm

தமிழ் நேசன்  

முத்தையா  என்பது  முருகன்  அல்ல . தாருகாசுரனோடு சம்மந்தப்பட்ட  ஒரு வரலாறு  இது  நடந்த  இடம்  தேனி மாவட்டம் உத்தமபாளையம்  என்ற ஊரில் பெரியாற்றின் கரையில் உள்ளது  

சுருக்கமாக சொல்கிறேன்

தாருகாசுரன் சிவனிடம் வரம் வேண்டி தவம் செய்கிறான் . சிவனும் வரம் தர சம்மதிகிறார்  . தாருகன் தான் கையால் யாரின் தலையை  தொட்டாலும் அவர் உடனே இறக்க வேண்டும் உயிருள்ள யாராலும் தனக்கு சாவு வரக்கூடாது என வரம் கேட்டு  சிவன் வழங்கி விடுகிறார் பின்பு அவன் அசுரனாகி பலரை கொடுமைப்படுத்த  ஒரு நாள் சிவனையே துரத்த  அவர் அங்கும் இங்கும் ஓடி நாராயணனை சிக்கலிலிருந்து விடுவிக்க அழைக்கிறார் . அப்போது அங்கிருந்த ஒரு கருப்புசாமி சிலையின்  உள்ளே  முத்தாக நாராயணன் நுழைந்து  கொள்ள அந்த சிலை தாருகாசுரனை தாக்கி கொன்று விடுகிறது

அன்றிலிருந்து  அந்த காவல் தெய்வம் முத்து கருப்பண்ணசாமி அல்லது முத்தையா  என்ற காவல் தெய்வமாகிறது

இதில் விசேஷம் என்னவென்றால் கருப்புசாமி சைவசமய காவல்தெய்வம் என்றால்  வைணவத்தில் முத்து கருப்பண்ணசாமி காவல் தெய்வம் . இவர் நாமம் இட்டிருப்பார் .உயிர்ப்பலி கிடையாது . சைவப்பலியாக பூசணிக்காயை உடைக்கவேண்டும் .

முத்தையா என்பதே காலப்போக்கில் அய்யனார் என குதிரை மீது வருபவர் . ஆனால் நாமம் இட்டு வைணவ மரபில் உள்ளவர்

காலபோக்கில் வைணவம் சைவம் இரண்டும் கலந்து  உயிர்ப்பலியும் செய்கிறார்கள்
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: நம்ம குலதெய்வம்

Post by Namasivayam Mu on Thu Aug 27, 2015 3:51 pm

குலதெய்வம்: காக்கவீரன் கருப்பசாமி  கோவில்,கருமாத்தூர்,உசிலம்பட்டி,மதுரை.
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: நம்ம குலதெய்வம்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Wed Sep 16, 2015 9:41 pm

தாருகாவனம் உத்தமபாளையம் தேனி மாவட்டம் கீழே சில படங்கள் உள்ளன . இதில் விஷேசம் என்னவென்றால் முத்துகருப்பனசாமி சிலை நவபாஷனத்தால் உருவாக்கப்பட்டது இவ்விடம் பின்பு சமண முனிவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது என்றால் இக்கோவில் சமணர்களுக்கும் முந்தய புரதானமானது என்பதே உண்மை

avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: நம்ம குலதெய்வம்

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 20, 2015 4:33 pm

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4545
மதிப்பீடுகள் : 2410

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: நம்ம குலதெய்வம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum