ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
 ayyasamy ram

நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
 ayyasamy ram

‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
 ayyasamy ram

ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
 ayyasamy ram

பெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்
 SK

தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
 ayyasamy ram

சவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்
 ayyasamy ram

இலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி
 ayyasamy ram

இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….!!
 பழ.முத்துராமலிங்கம்

பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
 SK

லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
 SK

நானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்
 SK

மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
 SK

கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
 SK

* "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
 SK

காஜல் அகர்வால் கொந்தளிப்பு!-
 SK

சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
 பழ.முத்துராமலிங்கம்

`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்..!! ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..!!!
 பழ.முத்துராமலிங்கம்

வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி
 பழ.முத்துராமலிங்கம்

அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
 பழ.முத்துராமலிங்கம்

`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்!’ - டர்பனுடன் பதவியேற்றார்
 பழ.முத்துராமலிங்கம்

வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை…!
 ayyasamy ram

செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
 ayyasamy ram

அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
 SK

திண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா? நியூட்ரினோ ஆய்வா?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

நலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்
 பழ.முத்துராமலிங்கம்

மரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..!
 பழ.முத்துராமலிங்கம்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04
 Raju_007

வருங்காலப் பொறியாளன்
 ayyasamy ram

கற்றுக்கொள்! – கவிதை
 ayyasamy ram

பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது
 ராஜா

வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

கன்னட மொழி படத்தில் சிம்பு!
 ayyasamy ram

ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
 ayyasamy ram

மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
 ayyasamy ram

மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
 ayyasamy ram

கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
 ayyasamy ram

பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
 ayyasamy ram

இப்படி செய்து பாருங்க... "இட்லி" பஞ்சு போல் இருக்கும்.
 பழ.முத்துராமலிங்கம்

ஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும் - தொடர் பதிவு
 ayyasamy ram

​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு!
 Dr.S.Soundarapandian

பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!
 Dr.S.Soundarapandian

சுஜாதா நாவல்கள்
 தமிழ்நேயன் ஏழுமலை

பதவியை ராஜினமா செய்தார் தமிழிசை!? தொண்டர்கள் அதிர்ச்சி!
 பழ.முத்துராமலிங்கம்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்
 பழ.முத்துராமலிங்கம்

கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
 பழ.முத்துராமலிங்கம்

கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வாழ்வாங்கு வாழவைக்கும் வாய்மை!

View previous topic View next topic Go down

வாழ்வாங்கு வாழவைக்கும் வாய்மை!

Post by ayyasamy ram on Fri Jul 24, 2015 8:04 am


-
வாய்மை என்பது ஓர் உயர்ந்த அறநெறி. அதைப் பற்றி வள்ளுவம் மிக உயர்வாகப் பேசுகிறது. (அதிகாரம் 30). வள்ளுவரை லட்சியவாதி என நாம் நினைக்கிறோம். அவர் லட்சியவாதி மட்டுமல்ல. யதார்த்தவாதியும் கூட. அதற்குச் சான்றாகப் பல குறள்களை வள்ளுவத்தில் காட்ட இயலும். உண்மை பேச வேண்டியது முக்கியம்தான். ஆனால், எல்லா சந்தர்ப்பங்களிலும் உண்மை பேசினால் சரிவருமா? சில நேரங்களில் சில உண்மைகளைப் பேசாமலும் இருக்கவேண்டி நேர்கிறது.
-
நாம் வீட்டுக்கு வரும் விருந்தாளியை வரவேற்கிறோம். ஆனால், வந்து தொலைத்துவிட்டானே என மனத்தில் நினைக்கிறோம். அதை வெளியே சொல்ல முடியுமா? சொன்னால் என்ன ஆகும்? இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அப்படி நினைக்காமலே இருந்தால் நல்லது. அது முடியாவிட்டால் நினைத்ததைச் சொல்லாமல் இருப்பது நல்லது. அடுத்தவர் மனத்தைப் புண்படுத்த நமக்கு அதிகாரமில்லை.

`வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.’ – என்கிறார் வள்ளுவர். கெட்டதைப் பேசுவானேன்? சில உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பது அறநெறியின்பாற் பட்டதுதான். அதுமட்டுமல்ல. பொய்கூட வாய்மைக்குரிய சிறப்பைப் பெறும் இடங்களும் உண்டு. குற்றமே இல்லாத நன்மையைத் தரக்கூடியது என்றால் பொய் சொல்வதில் தவறில்லை என்கிறது வள்ளுவம். `பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.’

நம் மனச்சாட்சிக்கு உண்மையாக நாம் வாழவேண்டும். ஏனெனில் பொய் சொன்ன பின் ஒவ்வொரு கணமும் நம்மைக் குத்திக் காட்டிக் கொண்டே இருக்கப் போவது நம் மனச்சாட்சிதான். அதை வெளியே எங்கும் எடுத்து வைத்துவிட்டு நாம் சுதந்திரமாக நடமாட முடியாது. நம் மனச்சாட்சியோடு தான் வாழ்நாள் முழுவதும் நாம் வாழ்ந்தாக வேண்டும்.

`தன்நெஞ் சறிவது பொய்யற்க, பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.’
உள்ளத்தில் பொய்யில்லாது வாழ்
பவனை உலக மக்களெல்லாம் கொண்டாடு வார்கள்.

அரிச்சந்திரனையும், காந்திஜியையும் நாம் கொண்டாடுவது
அவர்களின் உண்மை நெறிக்காகத் தானே?
`உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்.’உண்மையே பேசுவது என்ற விரதத்தை மேற்கொண்ட அரிச்சந்திரன் என்ன பாடு பட்டான் என்பதை நாம் அறிவோம்.
விஸ்வாமித்திர முனிவர் உருவாக்கிய அத்தனை சங்கடங்களிலிருந்தும் அவன் இறுதியில் மீண்டான் என்பதையும், உண்மையே பேசுவது, முதலில் சோதனைகளைத் தந்தாலும் இறுதியில் அனைத்து நலங்களையும் வழங்கும் ஓர் உன்னதமான கோட்பாடு என்பதையும் அரிச்சந்திர புராணம் விவரிக்கிறது.

மனைவியை அடிமையாக விற்க நேர்ந்தது. தன் குழந்தையைத் தானே வாளால் கொல்ல நேர்ந்தது. ஆனாலும், உண்மையே பேசினான் அரிச்சந்திரன். அவனை வானகமும் வையகமும் போற்றியது. அவன் இப்போது உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். (அரிச்சந்திரனின் கதையைச் சொல்லும் பழந்தமிழ் நூல் ஒன்று உண்டு. ஐநூறுக்கும் மேற்பட்ட நேரிசை வெண்பாக்களால் ஆன அந்நூல் `அரிச்சந்திர வெண்பா’ என்றே வழங்கப்படுகிறது.)காந்தியை மகாத்மாவாக ஆக்கியது அரிச்சந்திர புராணம்தான். அரிச்சந்திரனின் வரலாற்றைப் பேசும் நாடகத்தைப் பார்த்து, அந்த நாடகம் சொன்ன கருத்தால் கவரப்பட்டு காந்திஜி உண்மையே பேசுவது என்ற கொள்கையில் உறுதி பெற்றார்.

நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திர நாத் தாகூர்தான், காந்திஜிக்கு மகாத்மா என்ற அடைமொழி கொடுத்து முதன்முதலில் அழைத்தவர். பின்னர் அந்த அடைமொழி பிரபலமாயிற்று. தாகூர் அவ்விதம் காந்தியை அழைக்கக் காரணம், காந்திஜி பின்பற்றிய உண்மை என்ற தத்துவமே. அரிச்சந்திரா நாடகத்தை ஒட்டி, இன்னொரு வித்தியாசமான நாடகம் பின்னாளில் தமிழில் எழுதப்பட்டது. சந்திரஹரி என்பது பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய அந்நாடகத்தின் பெயர். அரிச்சந்திரன் என்ற பெயரைச் சந்திரஹரி என அவர் மாற்றியிருக்கிறார்.

அந்த அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி அல்லவா? இந்த சந்திரஹரியின் மனைவி பெயர் மதிச்சந்திரா! பொய் பேசுவதையே வாழ்க்கைக் கோட்பாடாகக் கொண்டு வாழ்பவன் சந்திரஹரி. அவனை ஒரே ஓர் உண்மை பேசவைக்க என்ன பாடு பட வேண்டியிருக்கிறது என்பதை நாடகம் நகைச்சுவையோடு விவரிக்கிறது. இன்று அரிச்சந்திரன்கள் அபூர்வம். சந்திரஹரிகளை எல்லா இடங்களிலும் காண முடியும்!

உண்மை என்பது சத்தியமே. சத்தியம் என்ற வடமொழிச் சொல்லுக்குத் தமிழில் மூன்று இணைச்சொற்கள் வழங்கப்படுகின்றன. `உண்மை, வாய்மை, மெய்மை’ என்பன அவை. உள்ளத்தில் சத்தியத்தோடு இருப்பது உண்மை. பேச்சில் சத்தியத்தையே பேசுவது வாய்மை. உடலால் உண்மை நெறிப்படி நடப்பது மெய்மை. பொதுவாக வாய்மை என்ற சொல்லை சத்தியத்திற்குச் சமமான சொல்லாக நாம் கொள்ளலாம்.

வாய்மை என்பது ஓர் அறம். அதாவது, தர்ம நெறி. இந்த தர்ம நெறிப்படி நடந்தால் அந்த நெறி நம்மைக் காக்கும். தர்மத்திற்குச் சோதனைகள் வரலாம். ஆனால், இறுதியில் தர்மம்தான் வெல்லும். அதனால்தான் `சத்தியமேவ ஜயதே’ என்ற கோட்பாட்டை `வாய்மையே வெல்லும்’ என மொழிபெயர்த்துக் கொண்டாடு கிறோம். வாய்மை கட்டாயம் வெல்லும். இன்னும் சரியாகச் சொல்லப் போனால் வாய்மைதான் வெல்லும். அதில் சந்தேகமே தேவையில்லை. பொய்மைக்குத் தற்காலிக வெற்றி கிட்டலாம். ஆனால், நிரந்தர வெற்றி வாய்மைக்கு மட்டுமே.

தருமத்தின் வாழ்வதனைச் சூதுகவ்வும்
தருமம் மறுபடி வெல்லும் எனுமியற்கை
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும்
வழிதேடி விதியிந்தச் செய்கை செய்தான்
கருமத்தை மென்மேலும் காண்போம் இன்று
கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்

– என மகாகவி பாரதி பாஞ்சாலி சபதத்தில் அறைகூவுகிறார். தருமத்தின் வாழ்வைச் சூது கவ்வினாலும் வாய்மை உள்ளிட்ட தரும நெறிகளே இறுதியில் வெல்லும்
என்பதைப் புராணங்களில் மட்டுமல்ல, நடைமுறை வாழ்விலும் நாம் பரிசோதித்து உணரலாம். அதை அறியக் கொஞ்சம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால், வாய்மை வெல்வது உறுதி.

தன் வீட்டுக்குப் பட்டா வாங்கப் போனார் ஒருவர். பட்டா வழங்கும் அலுவலகத்தில் லஞ்சம் கேட்டார்கள். இவர் லஞ்சம் கொடுப்பதுமில்லை, வாங்குவதுமில்லை என்ற தன் கோட்பாட்டைச் சொல்லிவிட்டுப் பட்டா வாங்காமலே வந்துவிட்டார்.

குறிப்பிட்ட அலுவலர் இரண்டு மூன்று முறை நேரிலும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டார். இவரோ லஞ்சம் கொடுத்துப் பெறும் பட்டா தனக்குத் தேவையில்லை என்றும் வீடு விற்க வேண்டும் என்றால்தானே பட்டா வேண்டும், தனக்கு இப்போது வீட்டை விற்கும் உத்தேசமே இல்லை என்றும் கண்டிப்பாய் தெரிவித்துவிட்டார்.

வாய்மையே வெல்லும் என்பதல்லவா நம் ஆன்மிகக் கோட்பாடு? அப்படியானால் அந்தக் கோட்பாடு நடைமுறை வாழ்விலும் செல்லுபடியாக வேண்டுமல்லவா? ஒருநாள் அந்தப் பட்டா வழங்கும் அலுவலகத்திலிருந்து இவரைக் கூப்பிட்டு எந்த லஞ்சத் தொகையும் பெறாமல் பட்டாவைக் கையில் கொடுத்து அனுப்பி விட்டார்கள்!

இதுபோன்ற சம்பவங்களை நாம் நம் வாழ்வில் நாளும் பார்க்கலாம். வாய்மையே வெல்லும் என்ற கோட்பாட்டைப் புரிந்து கொள்ளக் கொஞ்சம் கால அவகாசம் தேவை. அதுவரை நாம் காத்திருக்க வேண்டும். அவ்வளவுதான்.

உண்மை பேசுபவர்களுக்கு ஒரு பெரிய செளகரியம் உண்டு. அவர்கள் எதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை! பொய் பேசுபவர்கள் என்ன பேசினோம் என்பதைத் தெளிவாக ஞாபகம் வைத்துக் கொண்டால்தான் தொடர்ந்த பொய்களின் மூலம் முதலில் சொன்ன பொய்யைக் காப்பாற்ற இயலும்! பொய் பேசுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. பொய்சொல்வதை ஆழ்மனம் உணர்ந்திருப்பதால் உடல் படபடக்கிறது. வியர்வை கொட்டுகிறது. மொத்தத்தில் ஆரோக்கியம் கெடுகிறது.

பழங்காலம் தொட்டே நீதிவிசாரணை நடக்கும் இடங்களில் பொய் சாட்சி சொல்பவர்கள் இருந்திருக்கிறார்கள். தம் `மனுமுறை கண்ட வாசகம்’ என்ற உரைநடை நூலில் பொய்ச்சாட்சி சொல்வது மகாபாவம் என்கிறார் வள்ளலார்.

அந்த நூலில் பல பாவங்களை அவர் பட்டியலிடுகிறார். `ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்’ என்கிற வள்ளலார் பாடல் புகழ்பெற்றது. தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்தில் உறையும் கந்தவேளைக் குறித்துப்
பாடப்பட்ட உயரிய பக்திப் பாடல் அது.

அந்தப் பாடலில், `உள்ளொன்று
வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு
கலவாமை வேண்டும்!’ என ஓர் அடி

வருகிறது. பொய் பேசுபவர்கள் உள்ளொன்று வைத்துப் புறம் வேறொன்று பேசுபவர்கள். பொய்பேசுபவர்களுடன் உறவு பாராட்டுவது மிகுந்த ஆபத்துகளை விளை
விக்கக் கூடியது என்பதை வள்ளலார் உணர்ந்திருக்கிறார்.

இந்த வரிகளால் வள்ளலார் காலத்திலேயே உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள் நிறைய இருந்திருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. தானமும் தவமும் எதற்காக? உண்மை பேசினால் போதும். அதுவே எல்லா தானத்திற்கும் தவத்திற்கும் சமமானது. உண்மை பேசுவதை விடப் புகழ்தரக் கூடியது வேறொன்றில்லை. எல்லா அறமும் அதுதான். உண்மை பேசினால் மற்ற தரும காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.

`மனத்தொடு வாய்மை மொழியின்
தவத்தொடு தானம் செய்வாரின் தலை.’
`பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.’

`பொய்யாமை பொய்யாமை ஆற்றின்
அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று.’
குளித்தால் உடல் தூய்மையாகிறது.
மனம் தூய்மையாக வேண்டுமானால்
உண்மையைப் பேசுங்கள் என்கிறார்
வள்ளுவர். உண்மை என்னும் புனித நீரால்
நம் நினைவுகளை நாள்தோறும் நாம் நீராட்ட வேண்டும்.

`புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையான் காணப் படும்.’
பலவகை விளக்குகள் இருளை
அகற்றுவதாகக் கருதுகிறோமே, அவை

எல்லாம் புற இருளை அகற்றும் விளக்குகள் தான். பொய்யாமை என்ற ஒரே ஒரு
விளக்குதான் மன இருளைப் போக்கக் கூடியது.
`எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.’

வள்ளுவர் எத்தனையோ விஷயங்களை ஆராய்ந்து அறிந்தவர்.
அவர், தான் உண்மை எனக் கண்டவற்றில்
வாய்மையைவிடச் சிறந்த ஒன்று வேறில்லை என்கிறார்.
`யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை
எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற.’

உண்மையே பேசினால் பிறகு பேசியதெல்லாம் உண்மையாகிவிடும் என்கிறது நம் ஆன்மிகம். திருக்கடையூரில் உறையும் தேவி அபிராமி மீது மட்டற்ற பக்தியோடு வாழ்க்கை நடத்திவந்தார் சுப்பிரமணிய ஐயர் என்ற அபிராமி பட்டர்.

வழிபட வந்த பெண்களையெல்லாம் அன்னை அபிராமியாகக் கண்டு அவர்களின் பாதங்களில் பூத்தூவும் அவரது செயல்களைப் பார்த்துத் திகைத்தான் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னன். அவர் பைத்தியமா இல்லை பக்தரா என மன்னனால் முடிவுகட்ட இயலவில்லை. மன்னன் அமாவாசையன்று, `இன்று என்ன திதி?’ என அபிராமி பட்டரைக் கேட்டான்.

பட்டர் தம் அகக்கண்ணால் தேவியின் முழுநிலவு போன்ற திருமுகத்தையே தரிசித்தவாறு அமர்ந்திருந்தார். அந்த தரிசனத்தில் மெய்மறந்து `பெளர்ணமி` என பதில்
சொன்னார். மன்னன், `இன்று வானில் முழுநிலவு தோன்றாவிட்டால் உமக்குச் சிரச்சேத தண்டனை உறுதி!’ என உறுமிவிட்டுச் சென்றான்.

இப்போது தேவி அபிராமிக்கு ஒரு கடமை நேர்ந்துவிட்டது. உண்மையே பேசும் தன் பக்தன் பேசியதை உண்மையாக்க வேண்டிய கடமை. தன் அடியவனைக் காப்பாற்றா விட்டால் பிறகு அது என்ன தெய்வம்?

அபிராமி தன் செவியில் உள்ள அணிகலனான தாடங்கத்தைக் கழற்றி வானில் வீசினாள். அபிராமி பட்டர் நாள்தோறும் புனையும் பாமாலையான அபிராமி அந்தாதியைக் காதால் கேட்டு மகிழ்பவள் அவள். காதுக்கு அந்தத் தங்கம் தங்கமான கருத்துகள் நிறைந்த தங்கச் சொல்லணி போதாதா? இந்த சாதாரணத் தாடங்கத் தோடு எதற்கு?

அன்னை வீசி எறிந்த பிரகாசமான தோடு வானில் நிலவாய் நிலைத்து தகதகவென ஒளிவீசியது! வானத்தை அண்ணாந்து பார்த்த மன்னன் பரவசமடைந்தான். ஓடோடி வந்து பட்டரின் பாதம் பணிந்தான் என்கிறது அபிராமி பட்டரின் புனித வரலாறு. வாய்மையே பேசுபவர்கள் என்ன சொன்னாலும் அவர்கள் சொன்னதெல்லாம் வாய்மையாகும். வள்ளுவர் சொல்லும் வாய்மையைக் கடைப்பிடித்தால் மண்ணுலகே சொர்க்கமாகும்.

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: வாழ்வாங்கு வாழவைக்கும் வாய்மை!

Post by M.Jagadeesan on Fri Jul 24, 2015 9:51 pm

கதை இடையிட்ட அருமையான கட்டுரை . வாய்மையின் வலிமையைக் காட்டுகின்ற வரிகள் . பகிர்வுக்கு நன்றி அய்யாசாமி ராம் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: வாழ்வாங்கு வாழவைக்கும் வாய்மை!

Post by krishnaamma on Sat Jul 25, 2015 1:37 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: வாழ்வாங்கு வாழவைக்கும் வாய்மை!

Post by shobana sahas on Sat Jul 25, 2015 1:53 am

அய்யா மிகவும் நல்ல கருத்துக்கள் கொண்ட கட்டுரை பதிவு . நன்றி அய்யா ...
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: வாழ்வாங்கு வாழவைக்கும் வாய்மை!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum