ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஃபேஸ்புக் அடிமைகளா நாம்?

View previous topic View next topic Go down

ஃபேஸ்புக் அடிமைகளா நாம்?

Post by kumaravel2011 on Sat Jul 25, 2015 8:32 am

உழைப்பு யாருடையது, செல்வம் யாருடையது... என்பது ஆந்திராவின் மக்கள் கவிஞரான செரபண்ட ராஜுவின் கவிதை வரி.


இந்த ஆவேச வரிகள் உழைக்கும் மக்களுக்காக எழுதப்பட்டவை. ஃபேஸ்புக் தொடர்பாக அமெரிக்கரான மைக்கேல் ரோசன்பிளம் என்பவர் எழுதியுள்ள இணைய பத்தியை படிக்கும்போது இந்த வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. உழைப்பாளிகளுக்கான செரபண்ட ராஜுவின் தார்மீக கோபம் போல, ரோசன்பிளம் இணையவாசிகளின் சார்பில், உள்ளடக்கம் யாருடையது, செல்வம் யாருடையது? என கேட்டு இந்தப் பத்தியை எழுதியிருக்கிறார்.


ஹஃபிங்டன் போஸ்ட் இணைய இதழில் ஃபேஸ்புக்கை தொழிற்சங்கமயமாக்குவோம் (Let's Unionize Facebook) எனும் தலைப்பில் எழுதியுள்ள இந்தப் பத்தியில், அவர் நாமெல்லாம் ஃபேஸ்புக் அடிமைகளா? என்று கேள்வி எழுப்புகிறார். ஃபேஸ்புக்குக்கு மட்டும் அல்ல, டிவிட்டர் அடிமைகள், இன்ஸ்டாகிராம் அடிமைகள் என்றும் குறிப்பிடுகிறார். இந்த இணைய சேவைகளுக்காக நாம் ஓயாமல் உள்ளடக்கத்தை உருவாக்கி கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்றும் அவர் குறைப்பட்டுக்கொள்கிறார்.


இந்தக் கருத்துக்கு அவர் வந்து நிற்கும் விதம்தான் கவனத்துக்கு உரியது. வரலாற்றின் இடைப்பட்ட காலமான 15-ம் நூற்றாண்டில் நிலமே பெரும் செல்வமாக கருதப்பட்டதாகவும், பெரும் நிலப்பரப்பை கொண்ட பிரபுக்களிடம் பலரும் அடிமைகளாக வேலை பார்த்தனர் என்றும் குறிப்பிடுகிறார்.


சைபர்வெளி அடிமைகள்


காலம் மாறியிருக்கிறதே தவிர வரலாறு மாறவில்லை. இன்று நிலம் என்பது சைபர்வெளியாகி இருக்கிறது, அதில் நாமெல்லாம் அடிமைகளாக இருக்கிறோம், அமேசானின் ஜெப் பெசோசும், ஃபேஸ்புக்கின் ஜக்கர்பெர்கும் இணைய பிரபுக்களாக நமது உள்ளடக்கத்தைக் கொண்டு செல்வம் சேர்த்துக்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
ஜக்கர்பெர்க்


ஃபேஸ்புக்கின் 100 சதவீத உள்ளடக்கம் நம்முடையது அல்லவா என கேட்கும், இதை இலவசமாக செய்து கொண்டிருக்கும் முட்டாள்கள் அல்லவா நாம் என்றும் கேட்கிறார். இதை அவர் சொல்லும் விதம் இன்னும் துடிப்பாக இருக்கிறது. தினமும் நாம் எந்த ஊதியமும் பெறாமல், ஜக்கர்பர்கின் இணைய நிலத்தில் குடியிருக்கும் உரிமைக்காக அவருக்காக உள்ளடக்கத்தை உருவாக்கி கொண்டிருக்கிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஜக்கர்பர்கின் 33 பில்லியன் டாலர் செல்வமும் நாம் சேர்த்து கொடுத்தது என்கிறார்.


இதன் பிறகு அவர் சொல்லும் விஷயம் என்ன தெரியும? 20-ம் நூற்றாண்டில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் தங்களிடம் உழைப்பு எனும் சக்தி இருப்பதை உணர்ந்து கொண்டு அதன் ஆற்றலை உணர்த்த தொழிற்சங்கம் அமைத்துக்கொண்டது போல, ஃபேஸ்புக் பயனாளிகள் தொழிற்சங்கம் அமைக்கலாகாதா? என்றும் ரோசன்பிளம் கேள்வி எழுப்புகிறார்.


ஃபேஸ்புக்குக்காக உழைப்பு!


நிச்சயம் புதுவிதமான சிந்தனை தான். அதற்காக ஃபேஸ்புக்குக்கு எதிராக நாம் கொடி பிடித்துப் போராட வேண்டும் என்று அர்த்தமில்லை. ஆனால், நிச்சயம் நமது ஃபேஸ்புக் பழக்கம் பற்றி யோசித்தாக வேண்டும். ஃபேஸ்புக்கை இலவச சேவையாக கருதி மகிழ்ச்சியுடன் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால் நமது உள்ளடக்கத்தை வைத்து ஃபேஸ்புக் விளம்பர வருவாயை அள்ளிக்கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடுகிறோம். நம்மை அறியாமல் நாம் ஃபேஸ்புக் போன்ற தளங்களுக்காக அடிமைகள் போல உள்ளடக்கத்தை உருவாக்கி கொண்டிருக்கிறோம்.


இந்தக் கருத்து உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். சமூக வலைப்பின்னலாக அது ஏற்படுத்தி தரும் பலன்களை வைத்து நீங்கள் வாதிடலாம். உண்மைதான், ஃபேஸ்புக் இணைய யுகத்தில் நட்புக்கும், தகவல் பரிமாற்றத்துக்கும் இன்னும் பல பயன்களுக்கும் வித்திட்டிருக்கிறது. மறுப்பதற்கில்லை. பல நேரங்களில் ஃபேஸ்புக் போன்ற சேவைகள் சமூக ஊடகங்களாக செயல்படுகின்றன. எகிப்திலும் வளைகுடா நாடுகளிலும் மலர்ந்த சமூகப் புரட்சியில் ஃபேஸ்புக்குக்கும் அதன் சமூக சகாக்களுக்கும் முக்கிய பங்கிருக்கிறது. சமூக ஊடகங்களில் பயன்பாட்டுக்கு இன்னும் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.


ஃபேஸ்புக் பயன்பாடு


ஃபேஸ்புக்கை நாம் எப்படிப் பயன்படுத்தப் பழகியிருக்கிறோம் என்பதுதான் பிரச்னை. சமூக வலைப்பின்னலாக ஃபேஸ்புக்கின் ஆதார பலம் நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் என நட்பு வளையத்தை விரியச்செய்வதுதான். இந்த நட்பு வளையத்தில் எதைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதும், எதற்காக பகிர்ந்து கொள்கிறோம் என்பது முக்கியமானது இல்லையா?எல்லாவற்றையும் நிலைத்தகவலாக பகிர்ந்து கொள்வது இயல்பாக இருக்கிறது. வீட்டு விஷேசத்தில் எடுத்த புகைப்படங்களையும், சுற்றுலா பயணத்தில் எடுத்த புகைப்படங்களையும் எந்த யோசனையும் இல்லாமல் ஃபேஸ்புக்கில் பகிர்கிறோம். அதனால் என்ன வந்துவிடப்போகிறது?


ஆனால், உங்கள் தனிப்பட்ட பயணம் பற்றிய புகைப்படம், நண்பர்களின் நண்பர்களுக்கு எந்த விதத்தில் அவசியமானது என்று யோசித்துப்பாருங்கள்? உங்கள் மகனுடனோ, மகளுடனோ இருக்கும் புகைப்படம் நிலைத்தகவலாக வெளியிடுவது எதற்காக? அவற்றுக்கு காரணம் இல்லாமல் கிடைக்கும் லைக்குகளை விட்டுத்தள்ளுங்கள்.


புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது இயல்பானது தான். வீட்டுக்கு வரும் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் புகைப்பட ஆல்பத்தை காண்பித்து மகிழ்வது வழக்கமானது தான். ஆனால் நன்றாக யோசித்துப்பாருங்கள், எல்லோரிடமும் நீங்கள் இவ்வாறு செய்வதில்லை. அதற்கு ஒரு பரஸ்பர நெருக்கம் தேவை. வரவேற்பறையில் பேசிக்கொண்டிருக்கும் எல்லா நண்பர்களுக்கும் நீங்கள் புகைப்பட ஆல்பத்தை காட்ட விரும்ப மாட்டீர்கள். அதற்கான நெருக்கமும் இணக்கமும் இல்லாத நிலையில் அந்த நண்பரும் கூட அதை விரும்பமாட்டார். இதெல்லாம் எழுதப்படாத சமூக விதிகள். இயல்பாக எல்லோரும் அனுசரித்து நடப்பவை.


தனியுரிமை கவலை


ஆனால் ஃபேஸ்புக்கில் சொந்த ஊர் பயண புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது எந்தவகையான வெளிப்பாடு? ஊர் மாறியிருக்கிறது, விவசாயம் மங்கிவிட்டது போன்ற பொதுவான எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம். கிராமத்து மண்வாசத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் தனிப்பட்ட குடும்பக் காட்சிகளை சித்தரிக்கும் புகைப்படங்களை பகிர்வது எதனால்? உங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களும் குடும்பத்தின் புகைப்படங்களும் தேவையில்லாமல் இணையத்தில் எல்லா இடங்களிலும் இறைந்து கிடப்பது நல்லதல்ல.


வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்கள், விண்ணப்பித்தவர்கள் பற்றி தகவல்கள் சேகரிக்க சமூக வலைப்பின்னல் பக்கங்களை அலசிக்கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? விண்ணப்பத்தில் குறிப்பிடும் தகவல்களை எல்லாம் விட ஒருவரைப் பற்றிய சித்திரத்தை அவரது சமூக வலைப்பின்னல் பதிவுகள் உணர்த்தி விடுவதாக கருதப்படுவதும் உங்களுக்குத் தெரியுமா? இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஃபேஸ்புக் பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு செயல்படுவதாக கூறப்படுவதை அறிந்திருக்கிறீர்களா?


நேற்று நீங்கள் ஃபேஸ்புக்கில் எந்தச் சிந்தனையும் இல்லாமல் பகிர்ந்து கொண்ட தகவலும் புகைப்படமும் என்றேனும் ஒரு நாள் உங்களுக்கு வில்லங்கமாக முடியும் வாய்ப்பு உள்ளது என்பதும் தெரியுமா?


ஜார்ஜ் ஆர்வெல் சித்தரித்த கண்காணிப்பு யுகம் போல நாளை யாரேனும், ஃபேஸ்புக்கில் நீங்கள் விரோதமான கருத்தை சொல்லியிருந்தீர்களே என்று கேட்கக்கூடிய நிலை வரலாம். இது கற்பனை தான். ஆனால் நிகழாது என்று சொல்வதற்கில்லை.


என்ன செய்யலாம் ?


அதற்காக ஃபேஸ்புக் பயன்பாடே தவறு என்று பொருள் அல்ல. அது உங்கள் விருப்பம்; உரிமையும் கூட. ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துங்கள், ஆனால் எதற்காக பயன்படுத்துகிறோம் என யோசிக்கவும் செய்யுங்கள். லைக்குகளுக்கும், கமெண்ட்ஸுக்கும் ஆசைபட்டு நீங்கள் பொதுவில் பகிர விரும்பாத எதையும் இணையத்தில் ஆவணப்படுத்தாதீர்கள். இணையத்தில் வெளியிட்ட எதையும் நீங்கள் திரும்ப பெற முடியாது? உங்கள் பக்கத்தில் டெலிட் செய்தாலும் அதற்கு முன்பாகவே அதன் நகல் இணையத்தில் பல இடங்களில் பதிவாகி இருக்கும்.


எனவே, எதையும் பகிரும் முன், இது சமூக வெளிக்கு ஏற்றதா என யோசியுங்கள்.


கருத்துகள் என்றால் வலைப்பதிவாக எழுத முடியுமா என முயன்று பாருங்கள். புகைப்படங்கள் என்றால் இமெயில் மூலம் தேர்ந்தெடுத்த நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா என யோசியுங்கள்.


மறக்காமல் ஃபேஸ்புக்கின் தனியுரிமை அமைப்புக்கு (பிரைவசி செட்டிங்) சென்று பாருங்கள். எந்த வகை தகவல்கள் யாருக்கானவை என தீர்மானியுங்கள். தனியுரிமையில் இறுதி அதிகாரம் ஃபேஸ்புக்கிடமே இருக்கிறது என்றாலும் கொடுக்கப்பட்டுள்ள உரிமையையாவது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


இது ஃபேஸ்புக்கைச் சரியாக பயன்படுத்த வைக்கும்.


விக்கி வாழ்க!


வலைப்பதிவு யுகம் முடிந்து ஃபேஸ்புக் யுகம் துவங்கியிருப்பதாக கருதப்படும் நிலையில், பலரும் வலைப்பதிவுக்கு முழுக்கு போட்டு ஃபேஸ்புக் படைப்பாளிகளாக மாறுகிறார்கள் என்று சொல்லப்படும் காலத்தில் இந்த எதிர்கருத்து ஆச்சர்யத்தை அளிக்கலாம். ஆனால் இணையத்தில் தனியுரிமையின் அவசியத்தையும் அதன் அலட்சியத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் மெல்ல உணரத் துவங்கியிருக்கிறோம் என்பதையும் மறந்துவிடக்கூடாது.


எல்லாவற்றையும் பகிரும் போக்கு பற்றிய கேள்விகளை எழுப்புவதுதான் இந்தப் பதிவின் நோக்கம்.


இன்னொரு முக்கிய விஷயம், சமூக ஊடக் பயன்பாட்டில் ஒருவர் தனக்கான சரியான வலைப்பின்னலைக் கண்டுகொள்வதும் முக்கியம். கல்லூரி மாணவர்களுக்கும், பணியிடத்தில் இருப்பவர்களுக்கும் ஃபேஸ்புக் பயன்பாடு கேளிக்கையைத் தரலாம். ஆனால் தொழில்முறை நபர்களுக்கான லிங்க்டுஇன் சமூக வலைப்பின்னல் தங்களுக்கு இன்னும் பொருத்தமாக இருக்காதா? என யோசிக்க வேண்டும்.


இவ்வளவு ஏன் விக்கிபீடியா கூட சமூக வலைப்பின்னல் ரகத்தைச் சேர்ந்ததுதான் தெரியுமா? ஓயாமல் நிலைத்தகவல் பதிவு செய்வதற்கு நடுவே விக்கிபீடியாவிலும் நல்ல தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாமே!


ஃபேஸ்புக் தொடர்பான மைக்கேல் ரோசன்பிளம்’ கட்டுரை: http://www.huffingtonpost.com/michael-rosenblum/lets-unionize-facebook_b_7526822.html?ir=India&adsSiteOverride=in


குறிப்பு: ஃபேஸ்புக் தொடர்பான சிந்தனைகளில் ஓபன் சோர்ஸ் முன்னோடியான ரிச்சர்ட் ஸ்டால்மன் கருத்துகள் முக்கியமானவை. ஃபேஸ்புக் பயன்பாட்டுக்கு எதிராக அவர் எழுதிய கட்டுரை எழுப்பும் கேள்விகள் சிந்தனைக்குரியவை; https://stallman.org/facebook.html
By சைபர்சிம்மன்
http://www.dinamani.com/junction/nettum-nadappum/2015/06/12/ஃபேஸ்புக்-அடிமைகளா-நாம்/article2861101.ece
avatar
kumaravel2011
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: ஃபேஸ்புக் அடிமைகளா நாம்?

Post by கவியரசன்(கவிச்சுடர்) on Sat Jul 25, 2015 10:31 am

நல்ல விசயம் நண்பரே தேவையான பதிவுதான் தற்போது
avatar
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 169
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: ஃபேஸ்புக் அடிமைகளா நாம்?

Post by தமிழ் பிரியன் on Tue Sep 22, 2015 10:22 pm

நல்ல பதிவு ,

இதை மக்களிடம் கொண்டு சேர்க்க கூட பேஸ் புக் தான் தேவைப்படும்.

காலம் இன்டர்நெட் (கலி) காலமா போச்சுavatar
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 40
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: ஃபேஸ்புக் அடிமைகளா நாம்?

Post by Namasivayam Mu on Wed Sep 23, 2015 6:25 am

இழப்பதற்கு எதுவும் இல்லை என்று கருதுபவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் அவசியம் இல்லை. எதோ பொழுது போனால் சரி என்று நினைப்பவர்களுக்கும் மனதில் உள்ளவற்றை பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் சுகத்தை அனுபவிப்பவர்களுக்கும் எதை மூடி எதை மறைத்து என்ன ஆகப் போகிறது?

கண்காணி இல் என்று கள்ளம பல செய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணியாகக் கலந்து எங்கும் நின்றானை
கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே--திருமந்திரம்2043


avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: ஃபேஸ்புக் அடிமைகளா நாம்?

Post by தமிழ் பிரியன் on Thu Sep 24, 2015 11:17 am

@Namasivayam Mu wrote:இழப்பதற்கு  எதுவும் இல்லை  என்று கருதுபவர்களுக்கு  எச்சரிக்கை எதுவும் அவசியம் இல்லை. எதோ பொழுது போனால் சரி என்று நினைப்பவர்களுக்கும்  மனதில் உள்ளவற்றை பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் சுகத்தை அனுபவிப்பவர்களுக்கும் எதை மூடி எதை மறைத்து என்ன ஆகப் போகிறது?

உண்மை
கண்காணி இல் என்று கள்ளம பல செய்வார்
  கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
  கண்காணியாகக் கலந்து எங்கும் நின்றானை
  கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே--திருமந்திரம்2043


மேற்கோள் செய்த பதிவு: 1164238
avatar
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 40
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: ஃபேஸ்புக் அடிமைகளா நாம்?

Post by jagan on Tue Nov 17, 2015 1:57 am

@கவியரசன்(கவிச்சுடர்) wrote:நல்ல விசயம் நண்பரே தேவையான பதிவுதான் தற்போது
மேற்கோள் செய்த பதிவு: 1153242

jagan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஃபேஸ்புக் அடிமைகளா நாம்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum