ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உடல் காட்டும் அறிகுறிகள்!
 ayyasamy ram

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மரணித்த நம்பிக்கை.!

View previous topic View next topic Go down

best மரணித்த நம்பிக்கை.!

Post by kumaravel2011 on Sun Jul 26, 2015 12:36 pm

இதோ அதோ என்று இருந்த அந்த மேல்முறையீடு விசாரணைக்கு திங்களன்று வர
இருக்கிறது.    பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான
வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 27 அன்று வர இருந்தபோது, இருந்த பரபரப்போ,
மே 11 அன்று கர்நாடக உயர்நீதிமனறத் தீர்ப்பு வர இருந்தபோது இருந்த
பரபரப்போ, உச்சநீதிமன்றத்தில் வர உள்ள மேல் முறையீட்டுக்கு சுத்தமாக
இல்லை.
M_Id_426903_TN_CM_Jayalalitha
அவ்வழக்கு கர்நாடகத்தில் இருந்த வரை, தினமும் அது குறித்து ஒரு மணிநேரம்
விவாதிக்கும் பத்திரிக்கையாளர் கூட, “அதை விடுடா” என்று சலிப்போடு
சொல்கிறார்.   ஊடகங்களிலும் இது குறித்த பரபரப்பு முற்றிலும் இல்லாமல்
இருக்கிறது.  வாரமிருமுறை இதழ்களில் கூட இது குறித்த செய்திகள் குறைவாகவே
இருக்கிறது.
நீதிமன்றங்களின் மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டதையே இது
காட்டுகிறது.   பணமும் செல்வாக்கும் இருந்தால், எத்தனை பெரிய வழக்காக
இருந்தாலும் அதிலிருந்து வெளிவர இயலும் என்பதை ஜெயலலிதா ஆணித்தரமாக
உணர்த்தி உள்ளார்.   லஞ்ச ஒழிப்புத் துறை ஜெயலலிதா மீது தொடர்ந்திருந்த
வழக்கானது  விஞ்ஞானபூர்வமான முறையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு.
ஏறக்குறைய முழுக்க முழுக்க கணிதம் சார்ந்தது.  1991 முதல் 1996 வரை,
ஜெயலலிதாவுக்கு 66.5 கோடி வருமானம் இருந்ததா இல்லையா என்பது மட்டுமே
தீர்மானிக்கப்பட வேண்டியது.  இப்படிப்பட்ட வழக்கிலேயே ஒரு நீதிபதி
அப்பட்டமாக கண்ணுக்கு தெரியும் வகையில் ஒரு பிழையோடு தீர்ப்பளித்து,
ஜெயலலிதாவை விடுதலை செய்திருக்கிறார்.    இதன் பிறகு, மேல்முறையீட்டில்
அப்படி என்ன நடந்து விடப்போகிறது என்றே பலரும் கருதுகின்றனர்.
உச்சநீதிமன்றத்தில் இத்தீர்ப்பு சரி செய்யப்படுமா என்று பலரிடம்
கேட்டதற்கு, பெரும்பாலானோர் நம்பிக்கை அற்றே பதிலுரைத்தனர்.
உச்சநீதிமன்றமோ, உயர்நீதிமன்றமோ, சம்பந்தப்பட்ட நபருக்குத் தகுந்தார்ப்
போலத்தான்  வழக்கின் விசாரணை நடைபெறுகிறது.   அதிலும் பல நேர்வுகளில்
ஆஜராகும் வழக்கறிஞரை வைத்தே தீர்ப்புகள் வருகின்றன.   வழக்கை
விசாரிக்கும் நீதிபதிகளின் தன்மையும் தீர்ப்புகளில் பிரதிபலிக்கின்றன.
உதாரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தை எடுத்துக் கொண்டால், திமுகவுக்கு
எதிரான வழக்கு நீதிபதி சி.டி.செல்வத்திடம் செல்கிறது என்றால், அது
நிச்சயம் தள்ளுபடி என்று உறுதியாக கூறலாம்.    ஒரு பெரிய குற்றவாளியின்
ஜாமீன் மனு நீதிபதி கர்ணனிடம் சென்றால், 100 சதவிகிதம் அவர் விடுதலை
என்று உறுதியாக நம்பலாம்.     வழக்குகளில் உள்ள சட்ட நுணுக்கங்களின்
அடிப்படையில் ஆராய்ந்து அலசி தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் வெகு குறைவே.
சாதாரண மனிதர்களைப் போன்ற அனைத்து விருப்பு வெறுப்புக்களும் இந்த
நீதிபதிகளுக்கும் உண்டு.  ஒரு வழக்கறிஞரை பிடிக்காது என்றால், அந்த
வழக்கறிஞர் தாக்கல் செய்யும் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வது.
அவரை பிடிக்கும் என்றால், எல்லா வழக்குகளிலும் உத்தரவு பிறப்பிப்பது
என்று இப்படித்தான் நீதிமன்றங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஜெயலலிதா என்றால், எழுந்து நின்று வழக்கை
விசாரிக்கும் அளவுக்கு பணிவு காட்டும் நீதிபதிகள் சென்னை
உயர்நீதிமன்றத்தில் பலர் உண்டு.  தற்போது இரண்டாவது மூத்த நீதிபதியாக
சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் சதீஷ் அக்னிஹோத்ரி இந்த வகையைச்
சேர்ந்தவர்தான்.   அரசு தலைமை வழக்கறிஞர் சோமயாஜி ஆஜரானார் என்றாலே, அந்த
வழக்கில் கண்ணை மூடிக்கொண்டு அரசுக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பிப்பது இவரது
வழக்கம்.
இந்த வழக்கம் உச்சநீதிமன்றத்திலும் உண்டு.     ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை
கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததும், உச்சநீதிமன்றத்தில் மேல்
முறையீடு செய்யப்பட்டது.  அந்த வழக்கை விசாரித்தவர், தலைமை நீதிபதி
தத்து. ஜெயலலிதா எப்படியாவது சிறையில் இருந்து வெளிவர வேண்டும் என்று,
வீட்டுச் சிறையில் கூட இருக்கத் தயார் என்றே அவரது வழக்கறிஞர்
வாதாடினார்.  அவரது வழக்கறிஞர் ஃபாலி எஸ் நரிமன் எப்படியாவது ஜெயலலிதாவை
விடுதலை செய்ய வேண்டும் என்று மன்றாடினார்.
FL12_kumaraswamy_j_2418095m
ஆனால் வழக்கை விசாரித்த தத்துவோ, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியதோடு,
அவரது மேல் முறையீட்டு மனுவையும் நான்கு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்
என்று உத்தரவிட்டார்.   இப்படியொரு வேண்டுகோளை ஜெயலலிதா தரப்பே
வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.  இப்படி கேட்காத
வரத்தையெல்லாம் அளித்த தத்து, செய்திருக்க வேண்டிய முக்கியமான விஷயம்
என்ன தெரியுமா ?  கூட்டல் பிழையோடு வெளிவந்த அந்த தீர்ப்பை சரிசெய்ய
தானாக முன்வந்து வழக்கை எடுத்திருக்க வேண்டும்.   தன்னுடைய உத்தரவினால்
இப்படியொரு தவறான தீர்ப்பு வெளியாகி, நீதித்துறைக்கு பெரும் களங்கம்
ஏற்பட்டுள்ளதே என்று உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.  ஆனால்,
அதைப்பற்றி துளியும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் தத்து.
தற்போது செய்யப்பட்டுள்ள இந்த மேல் முறையீட்டையாவது, ஒரு உருப்படியான
நீதிபதியிடம் அனுப்பி வைத்துள்ளாரா என்றால் இல்லை.  பினாகி சந்திர கோஷ்
பற்றி உச்சநீதிமன்றத்தில் கேட்டால், வரும் தகவல்கள் ஆரோக்கியமானதாக
இல்லை.  இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு
வழக்கு திங்களன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ஜெயலலிதா தரப்பிலோ மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.  கடந்த முறை
இதே போல ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை நம்பிக்கையோடு
எதிர்ப்பார்த்தனர் என்று வந்த தகவலை, நமது நீதித்துறையின் மீது இருந்த
நம்பிக்கை காரணமாக நம்பவில்லை. ஆனால், குமாரசாமிக்கு பிறகு, இதை
நம்பித்தான் ஆக வேண்டும்.  நீதித்துறையின் மீது நம்பிக்கையோடு இருந்த
இதயங்களில் ஈட்டி பாய்ச்சிவிட்டார் குமாரசாமி.
இந்திய நீதித்துறையானது மிக மிக அற்புதமாக உலகுக்கே வழிகாட்ட வேண்டிய ஒரு
அமைப்பாக இருந்தது.   கேசவானந்த பாரதி வழக்கு அப்படிப்பட்ட ஒரு வழக்கு.
பிரபல வழக்கறிஞர் நைனி பல்கிவாலா வாதாடிய மூன்று முக்கிய வழக்குகளில்
இந்திரா அரசுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது.  கோலக்நாத் என்ற வழக்கு,
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட வழக்கு மற்றும் மன்னர் மான்ய ஒழிப்பு
குறித்த வழக்கு ஆகிய வழக்குகளில் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டதால்,
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் அதிகாரத்தை குறைப்பது என்று
இந்திரா முடிவெடுத்தார்.  இதையடுத்து, இந்த மூன்று தீர்ப்புகளையும் ரத்து
செய்யும் வண்ணம் ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தார்.  இந்தத்
தீர்ப்பின் பொருள் என்னவென்றால், பாராளுமன்றம் நினைத்தால், அடிப்படை
உரிமைகளைக் கூட நீக்கி விடலாம் என்பதே.   இதை எதிர்த்து கேசவானந்த பாரதி
மற்றும் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.   இந்த வழக்கை
விசாரிக்க மொத்தம் 13 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நியமிக்கப்பட்டது.  அந்த
வழக்கில் பாராளுமன்றத்துக்கு எல்லா உரிமைகளும் உண்டு என்று ஆறு
நீதிபதிகள் முடிவெடுத்தனர்.   அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை
அம்சங்களை மாற்றுவதற்கு அரசுக்கு உரிமை இல்லை என்று ஏழு நீதிபதிகள்
முடிவெடுத்தனர்.   அந்த ஏழாவது நீதிபதிதான் இந்திராவின் மிரட்டல்களுக்கு
அடிபணியாத எச்.ஆர்.கண்ணா.
நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாக
இருந்தவர் எச்.என்.ரே.    தந்திரமாக கேசவானந்த் பாரதி தீர்ப்பை
திருத்துவதற்காக மீண்டும் 13 நீதிபதிகள் அடங்கிய அமர்வை கூட்டினார் ரே.
இந்த வழக்கில் மீண்டும் நைனி பல்கிவாலா ஆஜராகி, வாதாடியபோதுதான், இந்த
வழக்கை திருத்துவதற்காக யாருமே மனுத்தாக்கல் செய்யவில்லை என்பது தெரிய
வந்தது. இந்த விவகாரம் வெளிவந்ததும், அந்த அமர்வு கலைக்கப்பட்டது.
இப்படி அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை ஷரத்துக்கள் அனைத்தையும்
பாதுகாப்பதில், இந்திய நீதிமன்றங்கள் பெரும்பணி ஆற்றியுள்ளன.
அப்படிப்பட்ட நீதிமன்றங்களின் வாரிசுகளாகத் தான் இன்று குமாரசாமிகளும்
ஏ.என்.ரேக்களும் உருவாகியுள்ளனர். நீதித்துறையின் களங்கங்களாக உள்ள
இவர்களின் கையில்தான் இந்திய நீதித்துறையின் முகத்தையே மாற்றி அமைக்கும்
வழக்கு உள்ளது என்பது, வேதனையானது.
இது குறித்து பேசிய ஒரு மூத்த பத்திரிக்கையாளர், “கர்நாடக அரசின் மேல்
முறையீடு குறித்து தற்போது பரபரப்பு ஏதும் இல்லாமல் இருப்பது, இந்திய
மக்கள், நீதித்துறையின் மீது ஒரு துளி கூட நம்பிக்கை வைக்கவில்லை
என்பதையே காட்டுகிறது.  இதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு நீதித்துறையையே
சாரும்.  செருப்பு தைப்பவன் முதல், ஐஏஎஸ் அதிகாரிகள் வரை, அனைவருக்குமான
கடைசி நம்பிக்கையாக இருப்பது, இந்திய நீதிமன்றங்களே.   இந்த
நம்பிக்கைக்கு வெளிப்படையான சவாலாக குமாரசாமியின் தீர்ப்பு அமைந்துள்ளது.
பணமும், வலுவும் உள்ளவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து நிச்சயம்
தப்பித்து விடலாம் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.    இப்படியொரு மோசமான
நீதிப்பிறழ்வை இன்னும் எத்தனை நாளைக்கு உச்சநீதிமன்றம் வேடிக்கைப்
பார்க்கப் போகிறது என்பது தெரியவில்லை.
ஜெயலலிதா மற்ற வழக்குகளைப் போல விடுதலை செய்யப்பட்டிருந்தால் இத்தகைய
விவாதங்கள் ஏற்படப்போவதில்லை  ஆனால், முழுக்க முழுக்க முட்டாள்த்தனமான
ஒரு தீர்ப்பு இது.   மொத்த உலகமும் நம்மைப் பார்த்து கைகொட்டிச்
சிரிக்கும் நிலைக்கு நம்மை தள்ளியுள்ளது இந்தத் தீர்ப்பு.
இது ஜெயலலிதாவோ  அல்லது கருணாநிதியோ சம்பந்தப்பட்ட ஒரு தீர்ப்பாக பார்க்க
முடியாது.  இந்திய ஜனநாயகத்தின் ஒரு தூணையே உளுத்துப் போகச் செய்த ஒரு
தீர்ப்பு.   மேலும், இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி, இந்தியா முழுக்க
பல்வேறு ஊழல் குற்றவாளிகள் தப்பிக்க பயன்படும் வகையில் அமைந்துள்ள
தீர்ப்பு இது.
ஜெயலலிதாவின் பிடிக்குள் அடங்கி, இதையும் சரி என்று உச்சநீதிமன்றம்
சொன்னாலும் வியப்பில்லை” என்றார்.
குமாரசாமியின் தீர்ப்பு நம் மீது பூசப்பட்ட கரி அல்ல.
உச்சநீதிமன்றத்தின் மீது பூசப்பட்ட கரி.  இந்தக் கறையை உச்சநீதிமன்றம்
துடைக்குமா, அல்லது கறை நிலைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க
வேண்டும்.
https://www.savukkuonline.com/
avatar
kumaravel2011
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

best Re: மரணித்த நம்பிக்கை.!

Post by சங்கர்.ப on Sun Jul 26, 2015 12:53 pm

நன்றி !

ஞாயத்தில் நிறம்
பார்க்கும் காலமிது
தண்டனையை கூட
கூலாக “ஜெயில் பறவை”
ஆக்கியிருக்கிறது

பிரசண்டேஜ்ஜில்
பிழை இருக்கிறது
பேப்பர் எல்லாம்
ரீவேல்யூஷன்
சென்றிருக்கின்றன.

என் மகனுக்கு கூட
கணக்கில் பிணக்குதான்
சந்தோஷம் எனக்குத்தான்
எப்படியும் அவன்
பின்னாளில்
பெரிய ஜட்ஜ்தான்

யார் சொன்னார்கள்
சோறில்லை என்று
நான் கேட்கிறேன் வா
இப்போது நான்
சொல்கிறேன்
”சோறில்லை போ”

காமெடிதான் ஞாபகத்திற்கு வருகிறது....
avatar
சங்கர்.ப
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 60
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum