ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 ayyasamy ram

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 12:48 am

First topic message reminder :


கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் மதுவிலக்கு கோரி பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் ஆளும் அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது.அதனால்தான் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் காவல்துறை அதிகாரிகளோடு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அவசர அவசரமாகக் கேட்டு அறிந்து இருக்கிறார்.

கோட்டையில் அவசர ஆலோசனை நடந்து கொண்டிருக்கும்போதே சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அந்தக் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைமுன்பு திரண்டனர்.புத்தகத்தைப் படிக்கவா சாராயத்தைக் குடிக்கவா என்று முழக்கங்கள் எழுப்பியவாறு டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராட்டம் நடத்தினர்.காவல்துறை அனுமதி மறுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த மாணவர்களும் விடாமல் போராடினர்.ஒரு கட்டத்தில் டாஸ்மாக் கடைமீது கல்லெறிந்து அடித்து நொறுக்கினர்.அப்போது நிகழ்ந்த தள்ளுமுள்ளுவில் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட மாணவர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

விருத்தாசலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு முன்பாகத் திரண்ட இளைஞர்கள் நெடுநாட்களாக பல்வேறு பிரச்சனைகள் எழ காரணமாக இருந்த,தமிழக அரசு நடத்திவரும் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியுள்ளனர்.இன்னும் பல இடங்களில் பொதுமக்கள்,வயது வித்தியாசம் இன்றி தாமாகவே முன்வந்து டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு மூடவலியுறுத்தி `மதுவிலக்கு` என்ற சமுதாய ஆரோக்கிய தீபத்தை ஏற்ற கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி போராட்டங்கள் நடப்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது.மதுவிலக்கை வலியுறுத்தி பெரியார் தனது தோட்டத்தில் இருந்த நூற்றுக் கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். அவர் காலம் தொடங்கி காங்கிரஸ்,திமுக,அதிமுக என்று கட்சிகள் மாறிமாறி தமிழகத்தில் ஆட்சி செலுத்திய போதும் மதுவிலக்குக் கொள்கை மட்டும் ஆளும் ஆண்ட கட்சிகளுக்கு வேப்பங்காயாக கசக்கவே செய்தது;கசந்தும் வருகிறது. இதில் ஆட்சி அதிகாரம் வகிப்போரே மதுபானம் தயாரிக்கும் ஆலைகளை நடத்தி வருவதும் மதுபான விடுதிகள் பார்கள் நடத்திவருவதும் யதார்த்தம்.

கடந்த 31ஆம் தேதி மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி மார்த்தாண்டத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் பரிதாபமாக இறந்தார். 5 மணி நேரத்திற்கும் மேலாக பல நூறு அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட செல்போன் டவரில் நின்றபடி போராடிய அவர்,போலீசாரின் தவறான அணுகுமுறையால்,அரசின் மெத்தனத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்த நிலையில் பிணமானார். ஒட்டுமொத்த தமிழகமும் காட்டுத் தீயென பரவிய காந்தியவாதி சசிபெருமாள் மரணச் செய்தி அரசியல் இயக்கங்களை ஒன்று படுத்தி,கடந்த 4 நாட்களாக போராட்டங்களைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவரின் தாயாரோடும் மதுவிலக்கு போராட்டத்தை சொந்த ஊரான கலிங்கப்பட்டியிலிருந்து முன்னெடுத்து இருக்கிறார்.நேற்று(ஞாயிறு)அங்கு நடந்த போரட்டத்தில் போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் கலைத்துள்ளனர்.இது மேலும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல மாறி இருப்பதை இன்று(திங்கள்) நடந்து வரும் போராட்ட சம்பவங்கள் காட்டுகின்றன.

காந்தியவாதி சசிபெருமாளின் சொந்த ஊரில் அவரின் வாரிசுகளும்,அரசியல் இயக்கங்களும் அவர் வலியுறுத்திய மதுவிலக்கு போராட்ட தீபத்தை கையிலெடுத்துள்ளனர்.போலீசாரின் மிரட்டல்களுக்கும் கைது கொடுமைகளுக்கும் அஞ்சாமல் தியாகி சசிபெருமாளின் மகள் கவியரசி பள்ளிச் செல்லும் சிறுமியும் சிறைக்குள் தள்ளப்பட்டு இருக்கிறார். வேலூர்,சேலம்,காஞ்சிபுரம் என்று பல்வேறு பகுதிகளில் இருக்கும் செல்போன் கோபுரங்களில் ஏறி இளைஞர்கள் போராடி வருகிறார்கள்.அவர்களிடம் மிரட்டல் விடுக்கும் காவல்துறை சமாதானம் பேசுவது போல பேசி கீழிறங்க வைத்து கைது செய்து வருகிறார்கள் தமிழகம் முழுவதும் உள்ள பல ஆயிரம் செல்போன் டவர்கள் தற்போது போலீசாரின் காவலில் இருக்கின்றன.

தற்போது மதுவிலக்கு போராட்டம் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் பரவியுள்ளது.சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அதனைத் தொடங்கி வைத்துள்ளனர்.மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் தமிழக கல்லூரி மாணவர்கள் கையில்தான் மதுவிலக்கு உள்ளது.அதனால் 1965 ஆம் ஆண்டு மொழிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்காற்றியது போல இப்போது மதுவிலக்கிலும் பங்கெடுக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். நாளை(செவ்வாய்) தமிழகம் முழுவதும் மதிமுக,கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக,தேமுதிக, காங்கிரஸ், வணிகர் சங்கங்கள் மற்றும் பால் நுகர்வோர் சங்கம் ஆகியவை இணைந்து மதுவிலக்கு கோரும் பந்த் நடத்த உள்ளனர். இதற்கு,பாஜகவும் திமுகவும் ஆதரவை வழங்கியுள்ளன.

35 ஆண்டுகளாக மது ஒழிப்புக்காகப் போராடி வரும் டாக்டர் ராமதாஸ்,பாமக இதில் பங்கேற்காது என்று கூறிவிட்டார். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியும் இதில் பங்கேற்காது என்றும் ஆனால் மதுவிலக்குக் கொள்கையை மதிக்கிறோம் என்றும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். பந்த் மூலம் பெருமளவில் மதுவிலக்கு ஆதரவை திரட்ட இந்தக் கட்சிகள் முடிவு செய்து பெருமளவில் திட்டமிட்டுள்ளன.

வரும் 6 ஆம் தேதி தேமுதிக சார்பில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.அடுத்து வரும் 10 ஆம் தேதி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கோரி திமுக சார்பில் அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.தமிழகம் முழுக்க மதுவிலக்கு கோரிக்கை வலிமையடைந்துள்ளது.ஆனால் ஆளும் அரசுத் தரப்பில் கோரிக்கை நிறைவேற்றப்படுவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் போராட்டத்தை எப்படி நீர்த்துப் போகச் செய்யலாம் என்ற கோணத்தில் ஆலோசிக்கப்படுவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 11:30 pm

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை விடுவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: மதுவிலக்கு போராட்டம் நடத்தி கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவ மாணவியரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

" மதுவிலக்கை அமல்படுத்த கோரி போராடி காவல்துறையினரால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பச்சையப்பா கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். மதுவுக்கு எதிராக போராடிய போது மாணவ மாணவவியரை காவல்துறையினர் லத்தியால் கொடூரமாக அடித்து தாக்கியுள்ளனர். அதன் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும், வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், அவர்கள் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 11:31 pm


வைகோ அறைகூவல் ஆபத்தானது: மாணவர்களை எச்சரிக்கும் ராமதாஸ்!

சென்னை: மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை விட்டு வெளியேறி போராட வேண்டும் என்று சில அரசியல் கட்சித் தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் அறைகூவல் விடுப்பது ஆபத்தானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி கடந்த சில நாட்களாக போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், "மாணவர்களும், பெண்களும் மதுக்கடைகளை அடித்து நொறுக்கி இழுத்து மூட வேண்டும். அதற்காக இந்த அரசு அவர்கள் மீது எத்தனை வழக்கு போட்டாலும் அதனை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியிருந்தார்.

இந்நிலையில் வைகோ அறைகூவல் குறித்து மாணவர்களை எச்சரித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி மாணவர் அமைப்புகள் போராடுவது வரவேற்கத்தக்கது. ஆனால், மாணவர்களின் போராட்டம் ஒடுக்கப்படும் விதம் கவலை அளிக்கிறது.

தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் திட்டமிட்டு மக்கள் மீது மதுவைத் திணித்து சீரழித்து விட்டன. மது அரக்கனின் கோரப்பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காகத் தான் கடந்த 35 ஆண்டுகளாக நான் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வருகிறேன். தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்டு வரும் மது ஒழிப்பு போராட்டங்களுக்கு மக்கள், குறிப்பாக பெண்கள் பெருமளவில் திரண்டு வந்து ஆதரவளித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இப்போது மாணவர்களும் மதுவுக்கு எதிராக போராடத் தொடங்கியிருப்பது நல்ல அறிகுறி தான். ஆனால், மாணவர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி, அவர்களின் போராட்டத்தை வன்முறைப் போராட்டமாக சித்தரிக்கவும், போராட்டத்தில் வன்முறையைத் தூண்டி திசை திருப்பவும் முயற்சிகள் நடப்பதை மாணவர் சமுதாயம் உணர வேண்டும்.

தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் அரசு மக்கள் நலனில் சற்றும் அக்கறை இல்லாத அரசாகும். மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருந்திருந்தால் 2012 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தை பா.ம.க. நடத்தியபோதே முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியிருக்கும். ஆனால், மதுவிலக்கில் அக்கறை இல்லாத தமிழக அரசு மதுவுக்கு எதிராக போராடுபவர்கள் மீது அவதூறு பரப்புவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் நடத்தும் போராட்டத்திலும் சமூக விரோத சக்திகளை ஊடுருவச் செய்து வன்முறையை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்த தமிழக அரசு தயங்காது. சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அறவழியில் தொடங்கிய போராட்டத்தில் திட்டமிட்டு வன்முறையை புகுத்தி, அதைக் காரணம் காட்டி மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியது. மாணவர்களின் போராட்டத்தை தமிழக அரசும், காவல்துறையும் எவ்வாறு கையாளும் என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணமாகும்.

சென்னையில் போராட்டம் நடத்திய மாணவ, மாணவியர்களை காவல்துறையினர் இரும்புக் கம்பிகளால் தாக்கி காயப்படுத்தியிருக்கின்றனர். காட்டுமிராண்டித்தனமான இந்த தாக்குதலில் பல மாணவர்களின் எலும்புகள் முறிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த அடக்குமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது.


தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் அனைத்து தரப்பினரின் நோக்கமாகவும் உள்ளது. இந்நோக்கம் அறவழியில் எட்டப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்பமாகும். இது தான் மதுவிலக்குக்காக தமது வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்த தேசத்தந்தை காந்தியடிகளுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும். கடந்த 2008ஆம் ஆண்டில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பிலும், 2012 ஆம் ஆண்டி கட்சியின் சார்பிலும் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவை அனைத்தும் காவல்துறையிடம் அனுமதி பெற்று தான் அறவழியில், அமைதியாக நடத்தப்பட்டன. ஆனால், இப்போது ‘‘மதுக்கடைகளை அறவழியில் போராடி மூட முடியாது; மற வழியில் போராடித் தான் மூட மூடியும். ஆகவே, மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை விட்டு வெளியேறி போராட வேண்டும்’’ என்று சில அரசியல் கட்சித் தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் அறைகூவல் விடுப்பது ஆபத்தானது ஆகும்.

தமிழகத்தில் கள் கூடாது என்பதற்காக தமது தோட்டத்திலிருந்த தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்தியவர் தந்தை பெரியார். ஆனால், அவரது வழி வந்ததாகக் கூறிக் கொள்ளும் ஒரு கட்சியின் முன்னணி தலைவர்கள் மது ஆலைகளை நடத்துகிறார்கள். மதுவிலக்குக்குக் முன்னோட்டமாக மது ஆலைகளை ஏன் மூடக்கூடாது? என்று கேட்டால் மதுவிலக்கு நடைமுறைக்கு வந்த பிறகு மது ஆலைகள் மூடப்பட்டு விடும் என்று ‘பொது அறிவு’டன் பேசுகிறார்கள். தங்களிடம் உள்ள குறைகளை மறைப்பதற்காக அப்பாவி மாணவர்களை போராட்டம் நடத்த தூண்டிவிடுகிறார்கள்.

களத்தில் இறங்கி போராடும் மாணவர்கள் பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. மாறாக ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான். படிக்கும் காலத்தில் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டால் அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி ஒட்டுமொத்த எதிர்காலமும் பாழாகி விடும். சென்னையில் போராட்டம் நடத்திய மாணவியின் வயிற்றை காவல் உதவி ஆணையர் ஒருவர் பூட்ஸ் காலால் உதைக்கும் படம் இன்றைய செய்தித்தாள்களில் வெளியாகியிருப்பது கண்ணீரை வரவழைக்கிறது. அம்மாணவிக்கு ஏற்படும் உடல் நலம் சார்ந்த பாதிப்புகளுக்கு யார் பொறுப்பேற்பார்?

மதுக்கடைகளுக்கு எதிரான மாணவர்களின் உணர்வுகளை பா.ம.க. மதிக்கிறது. ஆனால், மதுக்கடைகளை மூடுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. ஒருபுறம் அறவழியில் போராடி வரும் பா.ம.க., மறுபுறம் சட்டப் போராட்டம் நடத்தி தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 604 மதுக்கடைகளை மூட வைத்திருக்கிறது. அடுத்தகட்டமாக மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500 மதுக்கடைகள் விரைவில் மூடப்படக் கூடும். எனவே, மாணவர்கள் அரசின் அடக்குமுறைக்கு இரையாகி கல்வியும், எதிர்காலமும் பாதிக்கப்படுவதற்கு இடம் தரக்கூடாது. செல்பேசி கோபுரங்கள் மீது ஏறி போராட்டம் நடத்துவது ஆபத்தானது என்பதால் அத்தகைய போராட்டங்களையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதியாக பா.ம.க. போராடி மதுவிலக்கை வெகுவிரைவில் சாத்தியமாக்கும்.

அதேநேரத்தில் மக்களின் உணர்வுகளை மதித்து தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை அரசு மூட வேண்டும். மதுவுக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்; அவர்களின் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 11:33 pm

மதுவிலக்குப் போராட்டம்: மயங்கி விழுந்த இன்ஸ்பெக்டர்!

கோவை: கோவையில் நடந்த மதுவிலக்குப் போராட்டத்தில் பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவையில் உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் ஸ்ரீராமபுரம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடை, குடியிருப்புகளுக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதிவாழ் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளானார்கள்.

எனவே அதை தமிழக அரசு உடனே அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த 5 மாணவிகள் உள்பட 25 மாணவர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி கமிஷனர் கீதா தலைமையிலான போலீசார், மாணவர்களை அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தனர். அதற்கு மாணவர்கள் மறுக்கவே கைது செய்வதாக கூறினார்.

உடனே மாணவ, மாணவிகள் 25 பேரும் கைகளை இணைத்துக் கொண்டு தரையில் படுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது பெண் போலீசார், மாணவிகளை கடுமையாக தாக்கி வேனில் ஏற்ற முயன்றனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், நியாயமான காரணத்துக்காகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை போலீசார் தாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களுக்கு ஆதரவாகப் பொதுமக்களும் களத்தில் குதித்தனர். மேலும் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், போலீசார் பொதுமக்களிடம் இருந்து மாணவர்களை தனியாக பிரித்து கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாலை, மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்ற முயன்றார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு போராட்டத்தில் மாணவர்களின் கை, இன்ஸ்பெக்டர் முத்து மாலையின் நெஞ்சில் பட்டது. அவர் உடல்நலக்குறைவு காரணமாக பேஸ்மேக்கர் பொருத்தி இருந்தார். அதன்மேல் மாணவர்களின் கை பட்டதும் முத்து மாலை சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு நிலவியது.

அங்கு இருந்த போலீசார் மயக்கமடைந்த இன்ஸ்பெக்டர் முத்து மாலையை மீட்டு அங்கிருந்த வேனில் ஏற்றி, அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 25 மாணவர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டு, அருகே உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக பாப்ப நாயக்கன் பாளையம் – காந்திபுரம் ரோட்டில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் ஆதரவோடு போராட்டம் நடந்ததும்,போரட்டத்தில் இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்ததும் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 11:34 pm

மதுவிலக்கு: நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து தீர்வு காண விஜயகாந்த் வேண்டுகோள்!

சென்னை: உயர் நீதிமன்ற நீதியரசர்கள் தமிழகத்தில் மதுவிலக்கிற்காக நடைபெறும் போராட்டங்களை பார்த்து மதுவிலக்கை அமல்படுத்துவதன் அவசியம் கருதி, தாங்களாகவே முன்வந்து, நீதிமன்றத்தின் மூலம் தீர்வுகாண வேண்டுமென தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, இன்று நடைபெறுகின்ற முழு கடையடைப்பு போராட்டத்திற்கு தேமுதிக முழு ஆதரவு அளித்துள்ளது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே தேமுதிக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அதிமுக அரசினுடைய காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கின்ற பெயரில், நேற்று இரவோடு இரவாக கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஜனநாயக ரீதியில், அகிம்சை வழியில் நடைபெறும் போராட்டங்களில் இதுபோன்ற அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு, கைது செய்வதில்லை. போராட்டத்தில் ஈடுபடும்போது கைதுசெய்யப்படுவதே ஜனநாயக நெறியாகும்.

ஆனால் அதிமுக அரசு போராட்டத்திற்கு முன்பே தேமுதிகவினர் மீதுள்ள அச்சம் காரணமாக முழுஅடைப்பு போராட்டம், மக்கள் போராட்டமாகமாறி வெற்றி பெற்றுவிடும் என்ற பயத்தின் காரணமாகவே கைது செய்துள்ளதாக கருதுகிறேன். அப்படி இல்லையெனும்பட்சத்தில் உடனடியாக அனைவரையும் அதிமுக அரசு விடுதலை செய்யவேண்டும்.

இதுபோன்ற மிரட்டல்களுக்கெல்லாம், தேமுதிக ஒருபோதும் அஞ்சாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்களுக்கு பாதுகாப்பளிக்கவேண்டிய காவல்துறை, கேவலமாக டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு காவல் இருப்பது போன்ற வெட்கக்கேடான விஷயம் வேறேதுமில்லை.

அதிமுக ஆட்சியில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிலிருந்து, காவல்துறை வரை அனைவரும் ஒட்டுமொத்தமாக பொய்யான தகவல்களையே நீதிமன்றங்களுக்கு அளித்துவருகிறார்கள்.

டாஸ்மாக் மதுக்கடைகளை அதிகரித்துவிட்டு 500 மதுக்கடைகளை மூடிவிட்டோமென்றும், மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறதென்றும், அரசு சார்பில் பொய்யான தகவல்கள் நீதிமன்றங்களில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் காவல்துறையோ மதுவினால் ஏற்படும் கொலை, கொள்ளை, அடிதடி, விபத்து போன்றவற்றை மறைத்து, நீதிமன்றங்களுக்கு தவறான தகவல்களை அளிப்பதாக தெரியவருகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும், வழிபாட்டு தலங்கள் அருகிலும், பள்ளிகளின் அருகிலும் இருக்கின்ற டாஸ்மாக் மதுக்கடைகளை அப்புறப்படுத்தவேண்டுமென நீதிமன்றம் அறிவுறுத்தியும், பொய்யான காரணங்களைக்கூறி நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை இந்த அதிமுக அரசு பொருட்படுத்தாமல், நீதிமன்றத்தையே ஏமாற்றும் போக்கில் செயல்படுகிறது.

மேன்மைதாங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் தமிழகத்தில் மதுவிலக்கிற்காக நடைபெறும் மாணவர்கள் போராட்டத்தையும், மக்கள் போராட்டத்தையும், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூகநல அமைப்புகள் நடத்தும் போராட்டங்களையும் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சியிலும் பார்த்திருப்பீர்கள்.

எனவே தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதன் அவசியம் கருதி, தாங்களாகவே முன்வந்து, நீதிமன்றத்தின் மூலம் தீர்வுகாண வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 11:44 pm

போராட்டம் நடத்துவோருக்கு டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை

டாஸ்மாக் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி, வன்முறையை கையாளாமல் அறவழியில் போராட்டம் நடத்த வேண்டும் என்று மதுவிலக்கு போராட்டத்தினருக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், ஊழியர்களின் பாதுகாப்பை உணர்ந்து சேதாரங்களை தவிர்க்க, டாஸ்மாக் கடைகளை தற்காலிகமாக மூட டாஸ்மாக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அந்தச் சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மதுவிலக்கை அமல்படுத்த வேண்டி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டுமென்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்தச் சூழலில் போராட்டம் வலுத்துள்ளது. மதுவிலக்குக்காக போராடுபவர்கள் டாஸ்மாக் பணியாளர்களின் பாதுகாப்பற்ற சூழ்நிலையை புரிந்துகொண்டு வன்முறையைத் தவிர்த்து அறவழியில் போராட வேண்டும்.

தமிழகம் முழுவதும் 6,856 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. அவை அனைத்தையும் காவல் துறையினர் பாதுகாப்பது சாத்தியமற்றது.

எனவே, போராட்டம் நடைபெறும் இடங்களில் ஊழியர்களின் பாதுகாப்பை உணர்ந்து சேதாரங்களை தவிர்க்க, டாஸ்மாக் கடைகளை தற்காலிகமாக மூட டாஸ்மாக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்தச் செய்திக்குறிப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 11:46 pm

மதுக்கடைகளை ஒரே நாளில் மூடினால் நலத் திட்டங்கள் பாதிக்கும்: சரத்குமார்

மதுவிலக்கு போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

மேலும், மதுக்கடைகளை ஒரே நாளில் மூடினால் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில், "கூட்டு முயற்சி மூலமாகவே சமுதாயத்தில் மதுப் பழக்கத்தை நிறுத்த முடியும். ஆனால், மதுவிலக்கு போராட்டத்தை அரசுக்கு எதிரான போராட்டமாக மாற்ற நினைக்கின்றனர்.

அறவழிப் போராட்டம் என்ற பெயரில் சட்டத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். அப்பாவிகளையும் தூண்டி விடுகின்றனர்.

டாஸ்மாக் மூலம் கிடைக்கும் ரூ.30 ஆயிரம் கோடி வருவாயில் இலவசத் திட்டங்கள், சமூக நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. டாஸ்மாக் கடைகளை ஒரே நாளில் மூடினால் மக்கள் நலத் திட்டங்களை உடனடியாக நிறுத்தவேண்டிய நிலை ஏற்படும்.

குடிப்பழக்கம் உள்ளவர்களை படிப்படியாகவே அதில் இருந்து விடுவிக்க முடியும். இல்லாவிட்டால், எதிர்மறையான விளைவுகளே ஏற்படும்.

மது அருந்தக் கூடாது என்ற விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டுமே தவிர, மதுவிலக்கு பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது" என்று சரத்குமார் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by krishnaamma on Wed Aug 05, 2015 12:03 am

//மதுக்கடைகளை ஒரே நாளில் மூடினால் நலத் திட்டங்கள் பாதிக்கும்: சரத்குமார்//

அதுசரி...............புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Thu Aug 06, 2015 10:35 pm

அனுமதியின்றி போராட்டம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது

பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி சென்னையில் கோயம்பேடு முதல் கோட்டை வரை மனித சங்கிலி போராட்டத்தில் தேமுதிகவினர் ஈடுபட்டனர்.மனித சங்கிலி போராட்டத்திற்கு போலீசாரும், ஐகோர்ட்டும் அனுமதிக்காத நிலையில் அக்கட்சியினர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டார். அவருடன் 100-க்கும் மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விஜயகாந்த் கைது செய்யப்பட்டதையடுத்து தேமுதிக வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர். தீவுத்திடல் அருகே தேமுதிக தொண்டர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை சென்ட்ரல், கீழ்பாக்கம் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடத்திய தேமுதிகவினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மதுரை, திண்டுக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட பல இடங்களிலும் தேமுதிகவினர் மதுவிலக்கை அமல்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Thu Aug 06, 2015 10:35 pm

தமிழகத்தில் கடைசி சொட்டு மது ஒழிக்கப்படும் வரை தொடர்ந்து போராடுவேன்- டாக்டர் ராமதாஸ்

தமிழகத்தில் கடைசி சொட்டு மது ஒழிக்கப்படும் வரை தொடர்ந்து நான் போராடுவேன் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எதையும் செய்யக்கூடியவர் கருணாநிதி. விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கிறது என்பதால் தான், இதுவரை 5 முறை அளித்து நிறைவேற்றப்படாத மது விலக்கு வாக்குறுதியை மீண்டும் ஒருமுறை அளித்திருக்கிறார். கருணாநிதி கூற்றுப்படியே பார்த்தாலும் 1981-ம் ஆண்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்ட பிறகு 35 ஆண்டுகளாக தமிழகத்தை மது அரக்கன் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு எதிராக இதுவரை ஒரே ஒரு போராட்டமாவது நடத்தியதுண்டா? ஆனால், நான் அப்படியல்ல. கடந்த 35 ஆண்டுகளாக மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதே எனது வாழ்க்கை முறையாக மாறியிருக்கிறது. உதாரணத்திற்காக ஒரு சில போராட்டங்களை மட்டும் பொதுமக்கள் பார்வைக்கு பட்டியலிடுகிறேன்...

*பா.ம.க. தொடங்கப்படுவதற்கு முன்பே 1984-ம் ஆண்டில் மதுவுக்கு எதிராக மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினேன். 1989-ம் ஆண்டில் பா.ம.க. தொடங்கப்பட்டதும் நிறைவேற்றப்பட்ட 2-வது தீர்மானமே தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது தான். 2004-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் முழு மதுவிலக்கு கோரி பா.ம.க. மகளிர் அணி சார்பில் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம். தைலாபுரம் அருகிலுள்ள மதுக்கடைக்கு பூட்டுப் போட முயன்றபோது நானும் கைது ஆனேன். இந்த போராட்டத்தின்போது 15 ஆயிரம் பெண்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

02.03.2007 அன்று மதுக்கடைகளில் குடிப்பகங்கள் திறப்பதை கண்டித்து எனது தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டம். 23.11.2008 அன்று சென்னையில் மது ஒழிப்பு கலந்தாய்வுக் கூட்டம். 27.06.2009 சென்னையில் மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு பேரணி. 04.05.2011 மது விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் தோனியை கண்டித்து சென்னையில் அவர் தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டு பசுமைத் தாயகம் சார்பில் போராட்டம்.

26.02.2013 மதுவிலக்கை வலியுறுத்தி தருமபுரியில் பா.ம.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம். 01.01.2014 ஆரணியில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் பா.ம.க. மகளிர் அணி சார்பில் மது விலக்குக்கு எதிரான மகளிர் எழுச்சி மாநாடு நடத்தப்பட்டது. இவை தவிர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன். வழக்கறிஞர்கள் சமூகநீதிப்பேரவை மூலம் சட்டப்போராட்டம் நடத்தி தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 604 மதுக்கடைகளை அகற்ற வைத்திருக்கிறோம்.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் முடிவில் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500 மதுக்கடைகள் மூடப்படும் என்று நம்புகிறேன். மதுவிலக்கு போராட்டத்தை நான் அரசியலாக கருதவில்லை. மாறாக சமூகக் கடமையாகவே கருதுகிறேன். தேர்தலுக்காகவோ, வாக்குகளை வாங்குவதற்காகவோ இந்த போராட்டங்களை நான் நடத்தவில்லை. அதேபோல், நான் ஏற்கனவே கூறியதைப் போலவே மது விலக்கில் தி.மு.க.வுக்கு அக்கறை இருந்தால், அதன் மீதான அக்கட்சியின் உறுதிப்பாட்டை மது ஆலைகளை மூடி காட்ட வேண்டும். அதைவிடுத்து வார்த்தை சிலம்பம் ஆடுவதில் எந்த பயனும் இல்லை.

மற்றபடி மதுவிலக்கு கோரி இதயசுத்தியுடன் பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களை நான் ஆதரிக்கிறேன். அதேநேரத்தில் மாணவர்கள் தங்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதிக்காத வகையில் செயல்படும்படி கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் கடைசி சொட்டு மது ஒழிக்கப்படும்வரை நான் தொடர்ந்து போராடுவேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Thu Aug 06, 2015 10:36 pm

தேமுதிக தொண்டர்கள் மீது காவல் துறை தடியடி

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி கோயம்பேடு முதல் கோட்டை வரை மனித சங்கிலி போராட்டம் நடத்த தே.மு.தி.க முடிவு செய்தது. இதற்கு காவல்துறை அனுமதி தரவில்லை இதையடுத்து போராட்டத்திற்கு அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தே.மு.தி.க சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது உரிய உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில் திட்டமிட்டப்படி சென்னை கோயம்பேட்டில் இன்று மாலை விஜயகாந்த் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது.

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் அவர்களை கலைந்து போகும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனால் விஜயகாந்த் அதனை ஏற்க மறுத்து தனது ஆதரவாளர்களுடன் கைகோர்த்து மனித சங்கிலி போராட்டத்தை தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விஜயகாந்த் உள்பட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது போலீஸாருடன் தேமுதிக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதேபோல், தேமுதிக இளைஞரணி செயலாளர் சுதிஷ், பிரேமலதா விஜயகாந்தும் கைது செய்யப்பட்டார். தேமுதிகவினர் ஏற்றிச்செல்லப்பட்ட பேருந்துகளை தொண்டர்கள் செல்லவிடாமல் தடுத்ததால் காவல் துறை தடியடி நடத்தி தொண்டர்களை கலைத்தது. இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Thu Aug 06, 2015 10:52 pm

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது: தலைவர்கள் கண்டனம்!

சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தே.மு.தி.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை, கோயம்பேட்டில் நடந்த போராட்டத்தில் விஜயகாந்த்தும், சென்னை சென்ட்ரல் அருகே நடந்த போராட்டத்தில் அவரது மனைவி பிரேமலதாவும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், போலீஸ் அனுமதி அளிக்காத நிலையில் போராட்டம் நடத்தியதாகக் கூறி விஜயகாந்த், பிரேமலதா உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் விஜயகாந்த் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

இந்நிலையில், கைது செய்யப்பட்டு நெற்குன்றத்திலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் வைக்கப்பட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்தித்துப் பேசினார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தவே தமிழக அரசை வலியுறுத்துகிறோம். ஆனால் அரசு அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மதுவிலக்கு என்ற கொள்கைக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளோம் '' என்றார்.


வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், ''விஜயகாந்த் உள்ளிட்டோரை கைது செய்தது அராஜக நடவடிக்கை. அடக்குமுறையின் மூலம் அச்சுறுத்தலாம் என அரசு தவறாக எண்ணுகிறது'' என்றார்.


மு.க.ஸ்டாலின்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ''மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தே.மு.தி.க. நடத்திய மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது கண்டனத்திற்குரியது'' என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Thu Aug 06, 2015 11:15 pm

நாடு முழுவதும் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டால் தமிழகத்திலும் மதுவிலக்கு... நத்தம் விஸ்வநாதன் பேச்சு

நாடு முழுவதும் மது விலக்கு கொண்டு வரப்பட்டால் தமிழகத்திலும் மது விலக்கு கொண்டு வரப்படும் என மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் மதுவிலக்கு கோரி போராட்டங்கள் வெடித்து வருகின்றன. தீவிரமடைந்து போராட்டங்கள் சில பகுதிகளில் வன்முறையில் முடிகின்றன.

மதுவிலக்கு விவகாரம் தமிழக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில், மது விலக்கு குறித்து அத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கமளித்துள்ளார்.

கடலூரில் நடைபெற்ற அதிமுகபொது கூட்டத்தில் அவர் பேசியதாவது..

நாடு முழுவதும் மது விலக்கு கொண்டு வரப்பட்டால் தமிழகத்திலும் மது விலக்கு கொண்டு வரப்படும். நாட்டில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கு கொண்டு வரப்படவில்லை. அதே நேரத்தில் நமது மாநிலத்தில் மது விலக்கு கொண்டு வரப்பட்டால் பிற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் மது தமிழகத்தை கள்ளச்சந்தையாக மாற்றிவிடும்.

தமிழகத்தில் மது விற்பனை அரசின் விருப்பம் இன்றி தான் நடைபெற்று வருகிறது. தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் மது நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அது ஏன் தடுக்கப்படவில்லை. இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by krishnaamma on Fri Aug 07, 2015 1:41 am

ம்ம்... இப்போ எல்லா பேப்பரிலும் மதுவிலக்கு செய்தி தான் முதல் பக்கத்தில் வருது புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Sat Aug 08, 2015 12:49 pm

தக்கலையில் டாஸ்மாக் கடை முன்பு பெண்கள் முற்றுகை: 131 பேர் கைது

தக்கலையை அடுத்த கோழிப்போர் விளையில் டாஸ்மாக் ஒன்று உள்ளது.

இதனை அகற்றக்கோரி அந்த பகுதி மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். இன்று கோழிப்போர் விளை கிராம முன்னேற்ற சங்க பெண்கள் மற்றும் ஊர் மக்கள் ஏராளமானோர் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு ஸ்டாரி தலைமை தாங்கினார். முளகுமூடு வட்டார தலைவர் பாதிரியார் சகாயதாஸ் முன்னிலை வகித்தார். கோழிப்போர்விளை பங்குத்தந்தை பபியான், பாதிரியார் ஒய்ஸ்லின் சேவியர், திக்கணங்கோடு ஊராட்சி தலைவர் முருகராஜன், தி.மு.க. முன்னாள் மாவட்ட துணை செயலாளர் விஜயகுமார் மற்றும் 500–க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

தகவல் அறிந்து கல்குளம் தாசில்தார் குமாரதாஸ், இணை தாசில்தார் சுரேஷ், கிராம நிர்வாக அதிகாரி கில்டா ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 15 சிறுவர்கள், 5 ஆண்கள், 111 பெண்கள் உள்பட 131 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை போலீசார் அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். போராட்டம் காரணமாக காலை 10 மணிக்கு திறக்கப்பட வேண்டிய டாஸ்மாக் கடை மூடியே கிடந்தது. போராட்டம் முடிந்து பெண்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்ட பின்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Sat Aug 08, 2015 1:20 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Sat Aug 08, 2015 1:25 pm

மதுவுக்கு 4,011 டாஸ்மாக் ஊழியர்கள் பலி: கடைகளை மூட பணியாளர்களே வலியுறுத்தல்

தமிழகத்தில் மதுவுக்கு அடிமையாகி கடந்த 13 ஆண்டுகளில் 4,011 டாஸ்மாக் ஊழியர்கள் இறந்துள்ளனர். அதனால், மதுக்கடை களை மூடிவிட்டு, மாற்றுப்பணி வழங்க வேண்டும் என அரசுக்கு டாஸ்மாக் பணியாளர் சங்கங்களே வலியுறுத்தியுள்ளன.

தமிழகத்தில் 2003-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி அரசு டாஸ் மாக் சில்லறை விற்பனை தொடங் கப்பட்டது. ஆரம்பத்தில், டாஸ்மாக் கடைகளில் பணிபுரிய மேற்பார்வை யாளர்களுக்கு ரூ.2 ஆயிரம், விற்பனையாளர்களுக்கு ரூ.1,500 என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. இப்பணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

குடும்பத்தில் விருப்பமோ, சமுதாயத்தில் மரியாதையோ இல்லாத இந்த வேலையில் சேர இளைஞர்கள் ஆர்வம் செலுத்தாத தால் மேற்பார்வையாளருக்கு ரூ.3,000, விற்பனையாளருக்கு ரூ.2,000, உதவி விற்பனையாள ருக்கு ரூ.1,500 ஊதியம் வழங்கப் படும் என மீண்டும் அறிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த வேலைக்கு எஸ்.எஸ்.எல்.சி. முதல் பட்டதாரிகள் வரை விண் ணப்பித்தனர். இவர்களில், 36,000 பேரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தேர்வு செய்து, 6,286 கடைகளில் பணி நியமனம் செய்தனர். தற்போது டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை 6,856 ஆக அதிகரித்துள்ளன.

இதுபோன்ற சூழ்நிலையில், தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளில் மதுவுக்கு அடிமையாகி டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த 4,011 ஊழி யர்கள் மரணமடைந்துள்ளனர். அதனால், டாஸ்மாக் கடை களை மூடிவிட்டு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் சங்கங்களே தற்போது அரசை வலியுறுத்தி வருகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் ஏ.ஐ.டியூ.சி. சங்க மாநில பொதுச்செயலர் தனசேகரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

டாஸ்மாக் நிறுவனத்தில் வரு வாய் 2004-ம் ஆண்டு ரூ.4,867 கோடியாக இருந்தது. இது தற் போது ரூ.26,852 கோடியாக அதிகரித்துள்ளது. குடிப்பவர் கள் எண்ணிக்கையும், கடைகள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட் டன. ஆனால், டாஸ்மாக் ஊழி யர்கள் எண்ணிக்கை மட்டும் நாளுக்குநாள் சுருங்கி வருகிறது. 36 ஆயிரமாக இருந்த ஊழியர்கள் எண்ணிக்கை, 26,865 பேராக குறைந்துவிட்டனர்.

டாஸ்மாக் கடைகள் தொடங் கியபோது நான்கு ஆண்டு வேலை நியமன தடை சட்டம் நடைமுறையில் இருந்தது. இதனால், படித்த இளைஞர்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லாததால் இந்த வேலையில் சேர்ந்தோம். அதன்பின் போதுமான ஊதி யம் இல்லை. சலுகைகள் இல்லாததால் பெரும்பாலான ஊழியர்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டனர்.

அதனால் சமுதாயத்திலும், குடும்பத்திலும் மதிப்பில்லாத இந்த வேலையில் தொடர விருப்பம் இல்லாத டாஸ்மாக் ஊழியர்கள் பலர் சுயதொழில், குரூப்-2, குரூப்-4 தேர்வு எழுதி அரசுப் பணிக்கு சென்றுவிட்டனர்.

1,500 பேர் முதல் 2,000 பேர் வரை தற்போது ‘சஸ்பெண்ட்’, ‘டிஸ்மிஸ்’ நடவடிக்கையில் உள் ளனர். மீதியுள்ளவர்களில் 4,011 பேர் மரணமடைந்துள்ளனர். குறிப்பாக கடந்த 2012, 2013, 2014 ஆகிய மூன்று ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் மதுவுக்கு அடிமையானதே.

பலர் குடித்துவிட்டுதான் கடையை திறக்கின்றனர். இவர் கள் குடித்துவிட்டு வாக னத்தை ஓட்டுவதால் விபத்தில் மரணமடைகின்றனர். பலர் உடல் நலத்தை பராமரிக்காமல் மது குடித்தே மாரடைப்பு, கல்லீரல், மஞ்சள் காமாலை நோயால் இறக்கின்றனர்.

வெளியூர்களில் தங்கி பணி புரியும் ஊழியர்கள், வாரம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வீட்டுக் குச் செல்கின்றனர். அதனால், இயற்கையாகவே குடும்பங்களில் பிரச்சினை ஏற்பட்டு புரிதல் இல்லாமல் பலர் தற்கொலை செய்துள்ளனர்.

சனி, ஞாயிறு விடுப்பு வேண்டும்

இவ்வாறு டாஸ்மாக் ஊழியர்கள் 4,011 பேரின் மரணத்துக்கு அடிப்படை காரணமாக மது இருந் துள்ளது. கடந்த 13 ஆண்டு களில் மது வாங்க வரும் வாடிக்கையாளர்களின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்க்கிறோம். அதற்கு நாங்களும் ஒரு வகையில் காரணம் என்கிறபோது வேதனையாக உள்ளது.

அதனால், டாஸ்மாக் கடை களை மூட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. முதற்கட்டமாக மாதத்தின் முதல் சனி, ஞாயிறு விடுமுறை அளிக்க வேண்டும். விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும். மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைத்து படிப்படியாக மூடலாம் என்றார்.

டாஸ்மாக் நிறுவனத்தில் வருவாய் 2004-ம் ஆண்டு ரூ.4,867 கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.26,852 கோடியாக அதிகரித்துள்ளது. குடிப்பவர்கள் எண்ணிக்கையும், கடைகள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Sun Aug 09, 2015 10:00 pm

மதுவிலக்கு: தமிழகம் முழுவதும் நாளை திமுக ஆர்ப்பாட்டம்

மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை திமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

மதுவிலக்குக் கோரி எதிர்க்கட்சிகள் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றன.

திமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Sun Aug 09, 2015 10:04 pm

மதுவிலக்குக்கு வாய்ப்பு இல்லையென்றால், படிப்படியாக குறையுங்கள்

பூரண மதுவிலக்குக்கு வாய்ப்பு இல்லையென்றால், படிப்படியாக மதுக்கடைகளின் எண்ணிக்கையையும், விற்பனை நேரத்தையும் குறைக்க வேண்டும் என்று தேமுதிகவின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுதந்திரத் தினத்தன்று அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வாய்ப்பில்லை என்றாலும், பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் வேண்டும்.

ஆகஸ்டு 15 சுதந்திரத் தினத்தன்று மதுக்கடைகளின் எண்ணிக்கையையும், விற்பனை நேரத்தையும் குறைத்து, 21 வயது பூர்த்தியானவர்களுக்கு மட்டுமே மதுவிற்பனை செய்யப்படும் எனும் அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடவேண்டும்.

அக்டோபர் 2-ஆம் காந்தி ஜெயந்தி அன்று அந்த அறிவிப்பை அமல்படுத்த வேண்டும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by krishnaamma on Sun Aug 09, 2015 11:31 pm

@சிவா wrote:மதுவிலக்குக்கு வாய்ப்பு இல்லையென்றால், படிப்படியாக குறையுங்கள்

பூரண மதுவிலக்குக்கு வாய்ப்பு இல்லையென்றால், படிப்படியாக மதுக்கடைகளின் எண்ணிக்கையையும், விற்பனை நேரத்தையும் குறைக்க வேண்டும் என்று தேமுதிகவின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுதந்திரத் தினத்தன்று அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வாய்ப்பில்லை என்றாலும், பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் வேண்டும்.

ஆகஸ்டு 15 சுதந்திரத் தினத்தன்று மதுக்கடைகளின் எண்ணிக்கையையும், விற்பனை நேரத்தையும் குறைத்து, 21 வயது பூர்த்தியானவர்களுக்கு மட்டுமே மதுவிற்பனை செய்யப்படும் எனும் அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடவேண்டும்.

அக்டோபர் 2-ஆம் காந்தி ஜெயந்தி அன்று அந்த அறிவிப்பை அமல்படுத்த வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1156770

ம்...செய்தால் நல்லது புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum