ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 ayyasamy ram

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிரித்து மகிழ செய்தித்தாள் படியுங்கள்

View previous topic View next topic Go down

சிரித்து மகிழ செய்தித்தாள் படியுங்கள்

Post by ayyasamy ram on Wed Aug 05, 2015 5:28 pm


-


காலையில் தூங்கி எழுந்து, பல் துலக்கி, காபி குடித்தவுடன் ஒரு வரி விடாமல் பத்திரிகை படிக்கும் வழக்கம் பலருக்கு உண்டு. சில செய்திகளைப் படித்தாலே ரத்தம் கொதிக்கும், உதாரணத்துக்கு, ‘தங்கம் விலை மேலும் சரிவு: பவுன் ரூ.18,664-க்கு விற்பனை’.

சம்பளமும் போதாமல், கையில் சேமிப்பும் இல்லாத நிலையில் இப்படி அநியாயமாக தங்கம் விலை குறைந்து கொண்டிருந்தால் ரத்தம் கொதிக்காமல் இருக்குமா? இதைப் பயன்படுத்திக்கொண்டு பலர் நகைக் கடைகளுக்குப் படையெடுத்துச் சென்று வாங்குகிறார்கள் என்று தொடர்ந்து அதே செய்தியில் படிக்கும்போது ரத்தம் மேலும் கொதித்து சிறிதளவு ஆவியாகக்கூடப் பறந்தது. என்ன ஒரு பரக்காவெட்டித்தனம்? பெரும்பாலானவர்களால் வாங்க முடியாத நிலையில், சற்றே நிதானம் காட்டினால் என்னவாம்? மோடி ஆட்சியில் என் போன்றவர்களுக்கு ஏற்பட்டுவரும் மன உளைச்சல்கள் ஒன்றா, இரண்டா!

அடுத்த பக்கத்தைத் திருப்பினால் அந்தக் கொதிப்பு குறைந்து மகிழ்ச்சி கூத்தாட வைத்தது. ‘22 வீடுகளில் திருடிய கணவன், மனைவி கைது – 210 பவுன், 10 கிலோ வெள்ளி பறிமுதல்’ என்பதுதான் அதற்கான காரணம். அதில்தான் எத்தனை விஷயங்கள் புதைந்திருக்கின்றன!

ஆந்திரத்தைச் சேர்ந்தவர் கர்ண பிரபு (30), அவரது மனைவி சவுமியா (30). அவரும் ஆந்திராவா, தெலங்கானாவா, தமிழ்நாடா தெரியவில்லை. 12 ஆண்டுகளுக்கு முன்னால் ‘மதறாஸ் மனதே’ என்று சென்னைக்கு உரிமையோடு வந்தவர், இங்கேயே காதலித்து சவுமியாவைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். சென்னையில்தான் காதலிக்க எத்தனை இடங்கள்! அடையாறு காந்தி மண்டபம், அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர். சமாதி, மெரீனா, எலியட்ஸ் கடற்கரை, கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையங்கள், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்க ரயில் நிலையங்கள் (கும்மிடிப்பூண்டி மார்க்கத்திலும் காதலிப்பார்கள் என்றே நம்புகிறேன்), பஸ் நிறுத்தங்கள், சென்னைப் பல்கலைக்கழகம், கல்லூரி வளாகங்கள், மால்கள், கோயில்கள், பூங்காக்கள், சுரங்கப் பாதைகள், அண்ணா சாலை, தந்தை பெரியார் சாலை, அரசு மருத்துவ மனைகள், நடை மேம்பாலங்கள் – அவ்வளவு ஏன், ஜன நெரிசல் மிகுந்த ரங்கநாதன் தெருவில்கூட நகராமல் நிற்க முடிந்தால் காதலிக்கலாம்!

கர்ண பிரபு ஊதுபத்தி வியாபாரம் செய்துவந்தார். அதில் கொஞ்சம் வருமானம் வந்திருக்கும்போலத் தெரிகிறது. பைக் வாங்கிவிட்டார். ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்திருந்தால் ஊதுபத்தி விற்பவர்கள் ஆண்டுக்கு 25,000 அட்வான்ஸ் வரி செலுத்த வேண்டும் என்று தன்னுடைய சமதர்ம பட்ஜெட்டில் அறிவித்திருப்பார். ஏழைகள் மேல் எவ்வளவு கரிசனத்தோடு இருந்தார், பாவம்!

இப்படியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன் தியாகராய நகரில் ஒரு வீட்டுக்குள் சென்றபோது, முன் அறையில் வைக்கப்பட்டிருந்த கைப்பையை எடுத்திருக்கிறார் – வேறு யார், கர்ண பிரபுதான். அதில் 7 பவுன் நகை, ரூ.30,000 ரொக்கம் இருந்திருக்கிறது. ம்… எத்தனையோ கைப்பைகளைக் கடந்து வந்திருக்கிறது இந்தத் தமிழனின் வாழ்க்கை (அடியேன்தான்), இப்படியொரு வாய்ப்பு சிக்கவில்லையே! எப்போது அறுந்துவிழும் என்று சொல்ல முடியாத நிலையில் சிவசேனை – பாஜக கூட்டணி உறவுபோல அல்லவா இருக்கிறது என் கைப்பை?

நீங்கள் கேட்கலாம், அதெப்படி வீட்டுக்குள் சட்டென்று நுழைய முடிந்தது என்று! சென்னைவாசிகளைப் பொறுத் தவரை பெரும்பாலும் பெற்ற தாய், தந்தை, உடன் பிறந்தவர் களைத்தான் சட்டென்று வீட்டுக்குள் நுழைய விட மாட்டார்கள். ஊதுபத்தி வியாபாரத்துடன் ‘வீடு புகுந்தும் பொருட்களைச் சேகரிப்பது’ என்று தீர்மானித்திருக்கிறார்கள் இந்தத் தம்பதி ஜகதாம்பதி. இப்போதைய விலைவாசிக்குத்தான் ஒன்றுக்கும் மேற்பட்ட வருவாய் இனங்கள் தேவைப்படுகின்றனவே? எத்தனையோ பேராசிரியர்கள் கோலிவுட்டுக்குப் பாட்டு, கதை-வசனம் எழுதுகிறார்களே? எவ்வளவு கஷ்டமான ஜீவனம் அவர்களுடையது!

கணவன், பகல் நேரத்தில் ஆள் இல்லாத வீடுகளில் நுழைந்து தேட்டை போடும்போது, மனைவி வீதியில் காவல் இருப்பாராம் – எப்படிப்பட்ட ஆதர்ச தம்பதி! இதற்காகவே எலெக்ட்ரானிக் கட்டர், ஸ்க்ரூ டிரைவர், கையுறை போன்ற சாதனங்களுடன் செல்வார்களாம். டவுன் சர்வேயர் டேப்பை மறக்கிறார், எலெக்ட்ரீஷியன் ஜம்பரை வீட்டில் விட்டுவிடுகிறார், போலீஸ்காரர் கேஸ் டைரியைக் கொண்டுசெல்வதில்லை, மாணவர்கள் ஹோம்-ஒர்க் நோட்டைத் தவறவிடுகிறார்கள் என்ற பொறுப்பற்ற தன்மைக்கு இடையில் இப்படி ‘உரிய சாதனங்களோடு’ தொழிலுக்குப் போகிறவர்களும் இருப்பதை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

இவர்கள் சைதாப்பேட்டையில்தான் குடியிருக்கிறார்களாம். சைதாப்பேட்டை என்றாலே அங்கே உதயசூரியன் பொறித்த பொன்விழா வளைவுதான் நினைவுக்கு வரும். இனி, இத்தம்பதியரும் (எனக்கு) நினைவுக்கு வருவார்கள். சைதாப்பேட்டைவாசிகள் பாக்கியசாலிகள்!

ஆதர்ச தம்பதியிடமிருந்து 210 பவுன் நகை, 10 கிலோ வெள்ளிப் பொருட்கள், மூன்று இரு சக்கர வாகனங்கள், பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களைக் கைப்பற்றியிருக் கிறார்கள் போலீஸார். (போலீஸார் ‘கைப்பற்றியது’ என்றால், அதற்கு இன்னொரு அர்த்தம் இருக்கிறதா என்ன?) இவர்கள் அடகு வைத்துள்ள 193 பவுன் நகைகளை மீட்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளார்களாம். (அசல், வட்டி இரண்டும் செலுத்தி மீட்பார்களா? நாம் அடகு வைத்தால், நாம்தானே மீட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது!) இவ்வளவு நகை களை அடகு வைக்கும் அளவுக்கு என்ன பண முடையோ!

பாருங்கள்… ஒரு சின்ன செய்தி, இப்படியாக எத்தனை எத்தனை சிந்தனைகளைத் தூண்டிவிடுகிறது. தினமும் செய்தித்தாள்களை வாசியுங்கள், சிந்தனை தெளிவுபட, சீரிய பாதை புலப்பட, செம்மம் சிறக்க, சிரித்து மகிழ, அலுவலகத்துக்குத் தாமதமாகப் போக… இப்படியெல்லாம் பிரச்சாரம் செய்யத் தோன்றுகிறது.

கணவன், பகல் நேரத்தில் ஆள் இல்லாத வீடுகளில் நுழைந்து தேட்டை போடும்போது, மனைவி வீதியில் காவல் இருப்பாராம் – எப்படிப்பட்ட ஆதர்ச தம்பதி! இதற்காகவே எலெக்ட்ரானிக் கட்டர், ஸ்க்ரூ டிரைவர், கையுறை போன்ற சாதனங்களுடன் செல்வார்களாம். இப்படி ‘உரிய சாதனங்களோடு’ தொழிலுக்குப் போகிறவர்களும் இருப்பதை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை!

(எல்லாம் ரயில் பயண சகவாச தோஷத்தில் வந்த அடுக்குமொழிகள்!)

–ராணிப்பேட்டை ரங்கன்

தமிழ் தி இந்து காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33526
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: சிரித்து மகிழ செய்தித்தாள் படியுங்கள்

Post by T.N.Balasubramanian on Wed Aug 05, 2015 5:50 pm

மறுபதிவு செய்து , மகிழ வைத்த a ram அவர்களுக்கு

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20844
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

Re: சிரித்து மகிழ செய்தித்தாள் படியுங்கள்

Post by krishnaamma on Sun Aug 09, 2015 2:27 am

நாளை வந்து படிக்கிறேன் ராம் அண்ணா புன்னகை .......குட் நைட் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54954
மதிப்பீடுகள் : 11476

View user profile

Back to top Go down

Re: சிரித்து மகிழ செய்தித்தாள் படியுங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum