ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 SK

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 ஜாஹீதாபானு

தமிழ்த்துறை வாழ்த்து
 VEERAKUMARMALAR

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1 :)

View previous topic View next topic Go down

வாழ்த்து பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1 :)

Post by krishnaamma on Thu Aug 20, 2015 8:11 pm

பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1: பெருநகரங்களில் சென்னை அசத்தல் !துடில்லி: நாட்டில், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்கள் பட்டியலில், பெரிய மாநிலங்கள் வரிசையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பெண்களுக்கு எதிரான, பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் நகரங்களில், சென்னை, மிகக்குறைவான குற்ற எண்ணிக்கையுடன் அசத்தி உள்ளது; தலைநகர் டில்லி, இதில் முதலிடத்தை பெற்றுள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிராக, பாலியல் வன்கொடுமை, வீடுகளில் பெண்களுக்கு அடி, உதை என, காலங்காலமாக, பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. இதுதொடர்பாக, என்.சி.ஆர்.பி., எனப்படும், தேசிய குற்ற ஆவணக்குழு, ஆய்வு மேற்கொண்டு, கடந்த 2014ல், பாதுகாப்பான 10 மாநிலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.முதல் ஐந்து இடங்கள்:


இப்பட்டியலில், முதல் ஐந்து இடங்களை, நாட்டின் மிக சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிடித்துள்ளன. நாகாலாந்து, லட்சத்தீவு, புதுச்சேரி, தத்ரா அண்ட் நகர் ஹவேலி, டையு - டாமன் ஆகியவை, முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன.

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்களில் முதலிடம் பெற்றுள்ள, நாகாலாந்தின் மொத்த மக்கள் தொகை, 19 லட்சம் மட்டுமே. இங்கு, கடந்த 2014ல், 67 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில், 6 சதவீதம் மட்டுமே, பெண்களுக்கு எதிரானவை.

ஆறாமிடம் பிடித்துள்ள தமிழகம், பெரிய மாநிலங்கள் வரிசையில், முதலிடம் வகிக்கிறது. கடந்த 2014ல், தமிழகத்தில், பெண்களுக்கு எதிராக, 6,325 குற்றங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் மக்கள் தொகை, 7.2 கோடி. இதில், 3.6 கோடி பேர் பெண்கள். தமிழகத்தில், கடந்த 2014ல், நிகழ்ந்த மொத்த குற்றங்களில், 18.4 சதவீதம் மட்டுமே, பெண்களுக்கு எதிரானவை.

குற்றங்கள்பட்டியலில், 7ம் இடத்தில் மணிப்பூர், 8ம் இடத்தில் மேகாலயா, 9ம் இடத்தில் உத்தரகண்ட் உள்ளன. யாரும் எதிர்பாராத வகையில், பீகார் மாநிலம், பெண்களுக்கு பாதுகாப்பான, 10வது மாநிலமாக பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இம்மாநிலத்தில், கடந்த 2014ல், பெண்களுக்கு எதிராக, 15 ஆயிரம் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பீகார் மாநிலம், 10.38 கோடி மக்கள் தொகை கொண்ட, நாட்டின் மூன்றாவது பெரிய மாநிலமாக திகழ்கிறது. இங்கு, கடந்த ஆண்டு, நிகழ்ந்த குற்றங்களில், மூன்றில் ஒரு பகுதி, அதாவது, 31.3 சதவீதம், பெண்களுக்கு எதிரானவை.


குற்ற நகரம் டில்லி!


இந்திய நகரங்களில், 'பாலியல் பலாத்கார' நகரமாக, டில்லி உருவெடுத்துள்ளது. டில்லியில் நிகழும் குற்றங்களில், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றங்களின் விகிதம், பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிக அதிகமாக உள்ளது. சென்னை, பாலியல் பலாத்கார குற்ற பட்டியலில் கீழிருந்து இரண்டாவது நகரமாக இருக்கிறது.

பெருநகரங்களில், ஒரு லட்சம் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த பாலியல் குற்றங்கள் விகிதம், என்.சி.ஆர்.பி., ஆய்வு அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில், டில்லி முதலிடத்தை பிடித்து, பெண்கள் பயத்துடன் வாழக்கூடிய நகரமாக உள்ளது. கடந்த, 2014ல், டில்லியில், பெண்களுக்கு எதிராக, 1,813 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சராசரியாக, ஒரு லட்சம் பெண்களுக்கு, 2௪ பேர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகினர்.

2013ல், 1,441 பாலியல் பலாத்காரங்கள் நடந்தன. கடந்த, 2014ல், தேசிய அளவில், ஒரு லட்சம் பெண்களுக்கு, 6 பேர் என்ற விகிதத்தில், பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்தன. டில்லிக்கு அடுத்து, மும்பையில், கடந்த 2014ல், பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் பலாத்கார குற்றங்கள், 607. ஒரு லட்சம் பெண்களுக்கு, 7 பேர் என்ற விகிதத்தில், இக்குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்தியாவில், பெண்களுக்கு எதிராக குறைந்தளவு, பாலியல் பலாத்கார குற்றங்கள் நடந்த நகரங்களாக, கோல்கட்டா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் திகழ்கின்றன. கோல்கட்டாவில், 1 லட்சம் பெண்களுக்கு, 0.5, சென்னையில், 1.5, பெங்களூருவில், 2.5, ஐதராபாத்தில், 3.3 என்ற எண்ணிக்கையில், பாலியல் பலாத்கார குற்றங்கள் நடந்துள்ளன.


பெண்களை கடத்தி திருமணம்:

என்.சி.ஆர்.பி., ஆய்வறிக்கையின்படி, பெண்களை கடத்தும் சம்பவங்களில், 40 சதவீதம், திருமணம் செய்வதற்காகவே நிகழ்கின்றன. பொதுவாக, பணயத் தொகை கேட்கவே, கடத்தல் சம்பவங்கள் நடந்து வந்தன. இந்நிலை, சமீபகாலமாக, மாறி வருகிறது.

பெண் கடத்தல் சம்பவங்களில், 40 சதவீதம், திருமணம் செய்வதற்காக நிகழ்வதாக, ஆய்வறிக்கை கூறுகிறது.கடந்த, 2014ல், இந்தியா முழுவதும், 77 ஆயிரம் பெண்கள் கடத்தப்பட்டதாக, வழக்குகள் பதிவாகின. இவற்றில், 676 சம்பவங்கள் மட்டுமே, பணயத் தொகை கேட்க நடத்தப்பட்டன. 31 ஆயிரம் பெண்கள், கட்டாயத் திருமணம் செய்வதற்காக கடத்தப்பட்டனர்; 1,500 பெண்கள், கொலை செய்யும் நோக்குடன் கடத்தப்பட்டனர்.

பெண்களை திருமணம் செய்வதற்காக, கடத்தப்பட்ட சம்பவங்களில், 50 சதவீதம், உ.பி., பீகார், அசாம் மாநிலங்களில் நிகழ்ந்துள்ளன. உ.பி.,யில் அதிகபட்சமாக, 7,338 பெண் கடத்தல் சம்பவங்கள் நடந்தன. உ.பி.,யில் நடந்த மொத்த கடத்தல் சம்பவங்களில், 60 சதவீதம், திருமணம் செய்வதற்காக நடத்தப்பட்டவை.

பீகாரில், 4,641 பெண்கள், திருமணம் செய்ய கடத்தப்பட்டனர். இங்கு, 2014ல் நடந்த மொத்த கடத்தல்களில், 70 சதவீதம், திருமணம் தொடர்பானவை. அசாமில், 3,883 பெண்கள், திருமணம் செய்ய கடத்தப்பட்டனர். இம்மாநிலத்தில், ஒரு லட்சம் பெண்களுக்கு, 25 பேர் என்ற விகிதத்தில், திருமணம் செய்வதற்காக கடத்தப்பட்டனர்.

thinamalar


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1 :)

Post by krishnaamma on Thu Aug 20, 2015 8:13 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1 :)

Post by krishnaamma on Thu Aug 20, 2015 8:15 pm

தினமலரில் ரசித்த பின்னூடங்கள் :-


Chandrasekaran Narayanan - hosur,இந்தியா

கலாசாரத்தில் , இறைவழிபாட்டில் ,பண்பில் ,மத இணக்கத்தில் இன்னும் சொல்ல போனால் ரயிலில் பயண சீட்டு எடுத்து பயணம் செய்வது உட்பட தமிழர்கள் நேர்மையானவர்கள். ஆனால் நமது அரசியல் தலைவர்களால் தான் நமக்கு கெட்ட பெயர்.
.
.
இந்தியன் kumar - chennai,இந்தியா

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பதற்கு ஏற்ப பல நல்ல விஷயங்கள் தமிழகத்தில் உள்ளது , மதுவையும் ஊழலையும் ஒழித்து விட்டால் இந்தியாவில் தமிழகம் தான் நம்பர் 1 விரைவில் நடைபெற பிரார்த்திப்போம்.
.
.
.
sardar papparayudu - nasik,இந்தியா

இந்நகரில் வாழும் அனைத்து சமுதாயமக்களிலும் , மதங்களிலும் - இந்துக்கள் , முஸ்லீம்கள் , கிருத்துவர்களில் 75 விழுக்காடு அளவிற்கு பழமையான இறை வழிபாடு , முன்னோர்களுக்கு திதி கொடுப்பதை அவரவர்களுக்கு ஏற்பட்ட வழக்கத்தின்படி கைவிடாமல் இருப்பதுதான் சென்னையில் அயோகியதனங்கள் குறைவாய் இருப்பதற்கு முக்கிய காரணம்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1 :)

Post by shobana sahas on Thu Aug 20, 2015 9:41 pm

சந்தோஷமான செய்தி. நல்ல பதிவு . நன்றி க்ரிஷ்ணாம்மா
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1 :)

Post by krishnaamma on Thu Aug 20, 2015 9:52 pm

@shobana sahas wrote:சந்தோஷமான செய்தி. நல்ல பதிவு . நன்றி க்ரிஷ்ணாம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1158340

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ........... ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1 :)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum