ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில
 Meeran

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ரயில் நிலையங்களில் எல்.இ.டி., விளக்குகள்:தெற்கு ரயில்வே
 ayyasamy ram

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 ayyasamy ram

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 ayyasamy ram

பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
 ayyasamy ram

முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
 ayyasamy ram

திருச்சி: போக்குவரத்து அதிகாரி வீட்டில் 223 சவரன் நகை பறிமுதல்
 ayyasamy ram

தமிழ்த்துறை வாழ்த்து
 M.Jagadeesan

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 krishnanramadurai

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 krishnanramadurai

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்:

View previous topic View next topic Go down

சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்:

Post by T.N.Balasubramanian on Wed Aug 26, 2015 4:39 pm

சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்: பேரவையில் முதல்வர் அறிவிப்புமறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

விதி எண் 110-ன் கீழ் அவர் வாசித்த அறிக்கையில், "சிவாஜி கணேசன் நடிகர்களில் சிறப்பிடத்தைப் பெற்றவர்.

'இந்து ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியதன் காரணமாக தந்தை பெரியார் அவர்களால் 'சிவாஜி கணேசன்' என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவரும், 'நடிகர் திலகம்' என்று மக்களால் போற்றப்பட்டவர்.

'கலைமாமணி', 'பத்ம ஸ்ரீ', 'பத்மபூஷன்', 'செவாலியே', 'தாதா சாகேப் பால்கே விருது' ஆகிய விருதுகளுக்கு சொந்தக்காரர்.

'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'கப்பலோட்டிய தமிழன்', போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் பாத்திரங்களை ஏற்று அற்புதமாக நடித்து, அவர்களின் பங்களிப்பினை திரைப்படங்கள் மூலம், பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் சென்றவர்.

மறைந்த சிவாஜி கணேசனின் கலைச் சேவையை பாராட்டிடும் வகையிலும், அவரது நினைவைப் போற்றிடும் வகையிலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, நடிகர் சங்கம் சார்பாக நினைவகம் அமைக்கும் வகையில், சென்னை மாவட்டம், அடையாறு பகுதி சத்யா ஸ்டுடியோவிற்கு எதிரே உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 65 சென்ட் நிலத்தினை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கிட 26.9.2002 அன்று உத்தரவிடப்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சிவாஜி கணேசன் அவர்களுக்கு நினைவகம் அமைக்க இடம் ஒதுக்கித் தரும்படி, கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

அதன் பேரில் மைலாப்பூர் வட்டாட்சியர் அவர்களால் இந்த இடம் தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட இடத்தின் ஊடே நீதியரசர்கள் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை அமைந்திருந்ததால், நீதியரசர்கள் குடியிருப்புக்குச் செல்ல தனியே சாலை அமைப்பதன் செலவான 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை தென்னிந்திய நடிகர் சங்கம் அளித்திட வேண்டுமென அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களால் 2 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்க இயலும் என தெரிவித்து அதனை 26.7.2004 அன்று வழங்கினர். எனவே, புதிய அணுகு சாலையை அமைப்பதற்கான மீதமுள்ள 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை எனது தலைமையிலான தமிழக அரசே ஏற்றுக் கொண்டது.

சிவாஜி கணேசன் மணிமண்டபம் அமைப்பதற்கு வழங்கப்பட்ட நிலத்தை சுற்றி சுற்றுச் சுவர் ஒன்றை 13.2.2006 அன்று தமிழக அரசே அமைத்தது.

தென்னிந்திய நடிகர் சங்கம், சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை தாங்களே அமைத்து விடுவோம் என்று தெரிவித்த காரணத்தால் அப்போதைய அரசு மணி மண்டபம் கட்டுவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.

சிவாஜி கணேசன் அவர்களின் மணிமண்டபத்தை அரசே கட்ட வேண்டும் என்று அப்போதே தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டிருந்தால், அதற்கான உத்தரவையும் அப்போதே வழங்கப்பட்டிருக்கும்.

சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக தமிழக அரசால் வழங்கப்பட்ட இடத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத்தால் இதுவரை நினைவகம் அமைக்கப்படவில்லை.

அந்த இடத்தில் தமிழக அரசே சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டுமென பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, சிவாஜி கணேசன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், மணிமண்டபம் அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

நன்றி தி ஹிந்து

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21579
மதிப்பீடுகள் : 8169

View user profile

Back to top Go down

Re: சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்:

Post by T.N.Balasubramanian on Wed Aug 26, 2015 4:54 pm

சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்: அரசுக்கு கமல் நன்றி

சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்ததற்காக தமிழக அரசுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நடிகர் திலகத்தை மரியாதையுடன் நினைவுகூரியதில் அரசு, நடிகர் இனத்திற்கும் தனக்கும் பெருமை சேர்த்துக்கொண்டது. கண்ணும் மனதும் நிறைய, நன்றி.

அன்னாரது வாரிசு எனத் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முற்படும் பல்லாயிரம் பேரில் நானும் ஒருவன்'' என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நன்றி தி ஹிந்து

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21579
மதிப்பீடுகள் : 8169

View user profile

Back to top Go down

Re: சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்:

Post by shobana sahas on Thu Aug 27, 2015 6:34 am

அருமை...அருமை. அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்:

Post by ayyasamy ram on Thu Aug 27, 2015 6:57 am

தென்னிந்திய நடிகர் சங்கம் ஏன் மணிமண்டபம்
கட்டவில்லை என்பதற்கான காரணத்தையும் கமல்
கூறியிருக்கலாம்...!!
-
சிவாஜி கணேசனின் வாரிசுகளும் திரைப்படத்
துறையில்தானே இருக்கிறார்கள்...2006 ம்
ஆண்டிலிருந்து அவர்கள் என்ன முயற்சி
மேற்கொண்டார்கள்..?
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35116
மதிப்பீடுகள் : 11243

View user profile

Back to top Go down

Re: சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்:

Post by T.N.Balasubramanian on Thu Aug 27, 2015 8:43 am

@ayyasamy ram wrote:தென்னிந்திய நடிகர் சங்கம் ஏன் மணிமண்டபம்
கட்டவில்லை என்பதற்கான காரணத்தையும் கமல்
கூறியிருக்கலாம்...!!
-
சிவாஜி கணேசனின் வாரிசுகளும் திரைப்படத்
துறையில்தானே இருக்கிறார்கள்...2006 ம்
ஆண்டிலிருந்து அவர்கள் என்ன முயற்சி
மேற்கொண்டார்கள்..?
-
மேற்கோள் செய்த பதிவு: 1159076

ஆம் ayyasami ram .
அந்த நடிப்பின் பல்கலை கழகம்,
பலராலும் புறக்கணிக்கப் பட்ட ஒன்று .
காரணங்கள் வெவ்வேறாக இருக்கலாம் .
அவர் குற்றமென சொல்வதென்றால் ,
தென்னிந்தியாவில் பிறந்ததுதான் .
உலகின் வேறெங்கு பிறந்து இருந்தாலும் ,
அவர் நினைவாக ,foundation கூட ஆரம்பித்திருப்பார்கள் .

சந்தோஷம் , இப்போதாவது அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம்
விரைந்து செயல்பட்டால் !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21579
மதிப்பீடுகள் : 8169

View user profile

Back to top Go down

Re: சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்:

Post by krishnaamma on Thu Aug 27, 2015 10:40 am

அடப்பாவிகளா......எத்தனை வருடங்கள் ஓடிவிட்டது சோகம்......................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்:

Post by கண்ணன் on Thu Aug 27, 2015 5:23 pm

சிவாஜி சிறந்த நடிகர் தான். அவருக்காக கண்டிப்பாக மணி மண்டபம் கட்ட வேண்டும். ஆனால் யாருடைய செலவில் என்பது தான் என்  கேள்வி
 
சிவாஜி கலைக்கு இலவச சேவை செய்யவில்லை. பணம் வாங்கிக்கொண்டு தான் சேவை செய்தார். அவருடைய குடும்பத்தினரோ அல்லது தென்னிந்திய நடிகர் சங்கமோ தான் மணி மண்டபம் கட்ட வேண்டும். அதை செய்ய வேண்டியது  அரசு அல்ல. 
இது என்னுடைய தாழ்மையான கருத்து
avatar
கண்ணன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 187
மதிப்பீடுகள் : 81

View user profile

Back to top Go down

Re: சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்:

Post by T.N.Balasubramanian on Thu Aug 27, 2015 5:37 pm

கண்ணன் அவர்களே  ,
தற்காலத்தில் எந்த கலைஞன் சமூக சேவை செய்கிறார் ?.
அப்பிடியே 10 லக்ஷம் செய்தால் 15 லக்ஷதிற்கு அட்வர்டைஸ்மென்ட் .
இப்போது யாரோ இருவர் செய்வதாக கேள்வி .

தமிழ் மக்கள் பணம் எல்லாம் , இவர்களுக்கு உதியமாகப் போக , தமிழ் நாட்டிற்கு /தமிழ் மக்களுக்கு , உதவியோ செய்யாத பெரிய நடிகர்கள் இன்றும் உள்ளனரே !

அதிகமாக சக்திக்கு ஏற்ப உதவி செய்தவர் ஜெய்ஷங்கர் என்று கேள்வி பட்டுள்ளேன் .

இருப்பினும் , இவை எல்லாவற்றிருக்கும் மேலாக கலை உலகிற்கு தன் நடிப்பாற்றலை
வெளிபடுத்தியவர், அமரர் சிவாஜி கணேசன் .
இப்போது அரசு அவர் நினைவாக மணிமண்டபம் கட்டுவதே காலம் கடந்த செயல் என்றே நான் கருதுகிறேன் .

மேலும் , நான் , MGR சினிமாக்களை விரும்பிப் பார்த்தவன் . இருப்பினும் ,நடிப்பு என்றால் சிவாஜிதான் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21579
மதிப்பீடுகள் : 8169

View user profile

Back to top Go down

Re: சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்:

Post by சிவா on Fri Aug 28, 2015 1:35 am

@கண்ணன் wrote:சிவாஜி சிறந்த நடிகர் தான். அவருக்காக கண்டிப்பாக மணி மண்டபம் கட்ட வேண்டும். ஆனால் யாருடைய செலவில் என்பது தான் என்  கேள்வி
 
சிவாஜி கலைக்கு இலவச சேவை செய்யவில்லை. பணம் வாங்கிக்கொண்டு தான் சேவை செய்தார். அவருடைய குடும்பத்தினரோ அல்லது தென்னிந்திய நடிகர் சங்கமோ தான் மணி மண்டபம் கட்ட வேண்டும். அதை செய்ய வேண்டியது  அரசு அல்ல. 
இது என்னுடைய தாழ்மையான கருத்து
மேற்கோள் செய்த பதிவு: 1159205
+1
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்:

Post by சிவா on Fri Aug 28, 2015 1:39 am

சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் என்பது தேவர் இன மக்களின் வாக்குகளைக் குறிவைத்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

ஜாதி வெறி கொண்ட தமிழகம் என்று ஒன்றுபடுகிறதோ, அதுவரை இந்த அரசியல்வாதிகளின் ஆட்டம் அரங்கேறிக் கொண்டேதான் இருக்கும்!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்:

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum