ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

தலையில்பொடுகு அரிப்பு
 T.N.Balasubramanian

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Namasivayam Mu on Sun Aug 30, 2015 12:43 pmமனம்  என்பது பிரபஞ்சம் என்பது என் கருத்து.  நமது உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும்  உள்ள தொடர்பே எண்ணங்கள்  ஆகும். அதனால்தான் எண்ணச்சிறகுகள்  விரிவடைந்து ஓர் நொடிக்குள் பிரபஞ்சத்தில்  நம் அறிவுக்கு எட்டியதூரம் வரை  உடனுக்குடன் செல்ல முடிகிறது. இதைத்தான் மனோ வேகம் என்று சொல்லுகிறோம்.
மனமானது முதல் கட்டமாக  ஐந்துவகை  நிலைகளைக் கொண்டது. அதுவே விரிவடைந்து  இருபத்து ஐந்து நிலைகளாகப் பரிணமிக்கிறது. அவை

1. விழிப்பு நிலை

2.கனவுநிலை

3.உறக்கநிலை

4.துரியநிலை

5. துரியாதீதநிலை

ஒவ்வொரு நிலையம் ஐந்து ஐந்து  நிலைகளாகப் பிரிந்து மொத்தம் இருபத்து ஐந்து  நிலைகளாக அமையும். துரிய நிலையும்  துரியாதீத நிலையம் தியான சாதனையாளர்களுக்கு உரியதால்  நாம் முதல் மூன்று நிலைகளைப் பற்றி மட்டும் சிந்திக்கலாம்

விழிப்பில்  விழிப்பு
விழிப்பில்  கனவு
விழிப்பில் உறக்கம்

கனவில் விழிப்பு
கனவில் கனவு
கனவில் உறக்கம்


உறக்கத்தில் விழிப்பு
உறக்கத்தில் கனவு
உறக்கத்தில் உறக்கம்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by T.N.Balasubramanian on Sun Aug 30, 2015 1:36 pm

ஆரம்பமே அருமையாக உள்ளது .
ஒரு பானை சோற்றுக்கு ,ஒரு சோறு பதம்
என்பதே போல் ,
வரப்போகின்ற பதிவுகள்
எப்பிடி இருக்கும் என்பதற்கு ,
ஒரு எடுத்துக்காட்டு .அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20636
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Namasivayam Mu on Sun Aug 30, 2015 1:56 pm

மனம் என்பது பிரபஞ்சமாக  விரிவடைந்து பரவிக்கிடக்கின்றது. பிரபஞ்ச அறிவே  எண்ண அலைகளாகத் தோன்றி பிரபஞ்சம் முழுக்க வலம் வருகின்றன. நமது பூமியில் உள்ள  ஜீவராசிகள்  அனைத்தும் பிரபஞ்ச அறிவான  எண்ணங்களை  தமது மூளையின் மூலம் கிரகித்துக் கொள்கின்றன. மூளைக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பு எண்ணங்களாலே உண்டாகின்றன. எண்ணங்கள் மூளைக்குள் வந்து பதிவாகும் செயலையே நாம்   நமக்குள் மனம்  இருப்பதாக கருதுகிறோம். எண்ணங்கள் மூளையில் பதிவாகாமல்  போகும் பட்சத்தில் அந்த உடலில் உயிர் இருந்தாலும் அந்த உடல் மூளைசாவு  அடைந்துவிட்டதாக  கருதுகிறோம். எண்ணங்கள் பொதுவாக நேர்மறை எண்ணங்கள் மற்றும் எதிமறை  எண்ணங்கள்  என்று வகைப்படுத்தலாம். உயிரினங்கள்  தமது செயலுக்கு அடிப்படையாக  இவ்வகை எண்ணங்களே அமைகின்றன.
இதைத்தான் மகன்கள்  இப்படி சொல்லுகிறார்கள்:
“பரத்தினுள் மண்டலங்கள் அடக்கம்
மண்டலத்தில் பூதங்கள் அடக்கம்
பூதங்களில் சடங்கள்  அடக்கம்
சடங்களில் செயல்கள் அடக்கம்
செயல்கள் பரத்தின் இயல்பே"

ஒவ்வொரு உயிரினமும் மாறுபட்ட மனோபாவங்களைக் கொண்டிருப்பதற்கு  யார் காரணம் அதற்கு இந்த மாறுபட்ட பிரபஞ்சமே காரணமாகும். பிரபஞ்சத்தில் உள்ள கோடிக்கணக்கான  நட்சத்திரங்களும் கோள்களும் தமது ஆற்றல்களால் உருவாக்கும்  மாறுபட்ட செயல்பாடுகளே உயிரின பேதங்களுக்கு  காரணமாக அமைந்து விடுகின்றன. உதாரணத்திற்கு சூரிய ஆற்றல்  வெளிச்சமாக பூமியை வந்தடைகிறது. காலையில் இதமாகவும் உச்சிவேளையில் உஷ்ணமாகவும் நம்மை உணர வைக்கிறது. அது போலவே மற்ற நட்சத்திரங்களும்  அவைகளின் ஆற்றல்களால் தமது தாக்கத்தினை பிரபஞ்சம் முழுக்க  பல்வேறு செயல்களை உண்டாக்குகிறது.
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Namasivayam Mu on Mon Aug 31, 2015 5:40 pm

எனவே ஜீவராசிகள்  யாவும் பிரபஞ்ச விதிகளின் ஆளுமைக்கு கட்டுப்பட்டவை  என்று உணரப்படுகிறது. பிரபஞ்ச ஆற்றல்கள் என்ன அலைகளாக ஜீவராசிகளின்  மூளையில் அதாவது நாம் கருதும் மனதில் பதிவாகின்றன. விழிப்பு நிலையில் மனிதர்களுக்கு  எண்ணங்கள் உருவாவது இல்லை. காரணம் விழிப்புநிலையில் மனம் சில கணங்களே நிலை பெற இயலும். உடனே அது மீண்டும் கனவு நிலைக்கு சென்றுவிடும். மனிதன்  பொதுவாகவே விழித்திருக்கும் போது  கனவுநிலையிலேயே  காலம் கழிக்கிறான். அபொழுது தோன்றும் எண்ணங்களையே  நாம் கற்பனை என்று சொல்லுகிறோம். கற்பனை என்ற ஒன்று இல்லாவிட்டால் மனிதன் வாழவே முடியாது. விழிப்பு  நிலையில் தோன்றும் கற்பனைகளே மனிதனை செயல் பட வைக்கின்றன. மனிதனின் செயல்கள் கடந்த காலத்தில் நடந்தவை , நிகழ் காலத்தில்  நடப்பவை மற்றும்  எதிர்காலத்தில்  நடக்ககூடும் என்று  விரும்பும் யாவும் மனதின் ஆழ்மனதில் பதிவாகிவிடுகின்றன. அந்த ஆழ்மன நிலையைத்தான்  துரியநிலை என்கிறோம். நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாக நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்  மனதின் மேல் அடுக்குக்கு வந்துகொண்டே இருக்கும். விழிப்புநிலையில்  மேல் எழும் எண்ணங்களை  சில சமயம் நாம் பற்றிக்கொள்வோம். அல்லது அவைகளை வேண்டாம் என்று தள்ளி விடுவோம்
மனதில் தோன்றும் விருப்பு வெறுப்பு எண்ணங்கள் கற்பனையாக மனதில் நிழல் ஆடியவை. நாம் உறங்கும்பொழுது அவை கனவுகளாக மனத்திரையில் காட்சி வடிவம் பெறுகின்றன  என்பது என் கருத்து
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by T.N.Balasubramanian on Mon Aug 31, 2015 6:40 pm

@namasivayam Mu wrote:விழிப்பு நிலையில் மனிதர்களுக்கு எண்ணங்கள் உருவாவது இல்லை.

எண்ணங்கள் உருவாவதற்கு விழிப்பு நிலை அவசியமில்லையா ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20636
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Namasivayam Mu on Mon Aug 31, 2015 7:16 pm

ஆமாம்
விழித்து இருக்கும்போது மனம் கனவு வயப்படுவதால்தான்  எண்ணங்கள் தோன்றுகின்றன. விழிப்பு நிலை என்பது சில வினாடிகளே நீடிக்கும். போலிஸ் மற்றும் ராணுவ படைகளின் அணிவகுப்பில்  அட்டேன்ஷன் என்று  சொல்லி விழிப்பு நிலைக்கு  கொண்டுவருவார்கள் அது சில நொடிகளே நீடிக்கும்உடனே  ஸ்டாண்ட் அட் ஈஸ் என்று சொல்லி விழிப்பு நிலையை  தளரச் செய்வார்கள். விழிப்பு நிலையில்  வேறு எந்த எண்ணமும் மனதிற்குள்  புகக் கூடாது என்பது  இங்கே நியதி.
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by T.N.Balasubramanian on Mon Aug 31, 2015 7:24 pm

நன்றி !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20636
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Namasivayam Mu on Tue Sep 01, 2015 7:28 am

@T.N.Balasubramanian wrote:நன்றி !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1159957

வாழ்க வளமுடன்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by ayyasamy ram on Tue Sep 01, 2015 9:08 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33011
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Namasivayam Mu on Tue Sep 01, 2015 9:26 am

avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by krishnaamma on Tue Sep 01, 2015 4:50 pm

நல்லா இருக்கு ஐயா இந்த திரி.....தொடருங்கள்....தொடர்கிறோம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Namasivayam Mu on Tue Sep 01, 2015 7:14 pm

6 அல்லது 7 வயது முதலே  நான் கனவுகள்  காணத்தொடங்கி விட்டேன். ஆரம்ப கால கனவுகளில் பெரும்பாலானவை மலை உச்சியில் இருந்து கீழே விழுவது போல தோன்றும். சில சமயம் பாம்புகள் விரட்டுவது போல தோன்றும். பாம்புகளைப் பற்றி கனவு காணாத மனிதர்களே இருக்க முடியாது என்றே  சொல்ல வேண்டும். மனிதனுடைய ஆழ் மனதில்  பாம்புகளைப்பற்றிய பய உணர்வு   பிறவித் தொடராக  மரபணுக்களிலேயே பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். சிறிய வயதில் மட்டும் அல்ல  மனிதன் சாகும் வரை எந்த வயதிலும் பாம்புகள் வந்து மிரட்டுவது போல கனவு காணும் வழக்கம் இருக்கிறது.

ஒவ்வொருநாள்  உறக்கத்திலும் கனவுகள்  வருகின்றன. அவையாவும் நம் நினைவில்  இருப்பதில்லை.விழித்தவுடன் பெரும்பாலான கனவுகள் மறந்து போகின்றன. ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கனவுகள்  வருவது உண்டு. ஒரு கனவு முடிந்தவுடன் நாம் விழித்துக் கொண்டால் மறுபடி தூங்கும் போது அதே கனவு  சில நாட்களில் தொடர்வதும்  உண்டு. அல்லது வேறு கனவு  காண்பதும் உண்டு. ஆரம்ப கால கனவுகள்  கருப்பு வெள்ளை திரைப்படம் போல இருந்தன. அதற்கு நான் அந்த கால கட்டத்தில் பார்த்த திரைப்படங்களின்  பாதிப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.காரணம் இப்பொழுது காணும் கனவுகள் எல்லாம் கலர் கலராகவே காட்சிப்படுத்தப் படுகின்றன.
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Namasivayam Mu on Tue Sep 01, 2015 7:19 pm

@krishnaamma wrote:நல்லா இருக்கு ஐயா இந்த திரி.....தொடருங்கள்....தொடர்கிறோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1160090
மிக்க நன்றி
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Namasivayam Mu on Wed Sep 02, 2015 5:00 pm

பத்து வயதுக்கு மேல் முப்பது வயது வரை  கண்ட கனவுகள்  பெரும்பாலும் காசு  சம்மந்தப் பட்ட கனவுகளாகவே எனக்கு  அமைந்திருந்தன.அந்த வயதின் தேவை காசாகவே இருந்திருப்பதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக்கருதுகிறேன். கனவுகளில்  தெருவில்  நடப்பது போலவும் கீழே காசு கிடப்பது போலவும் தோன்றும். குனிந்த அந்த காசை எடுத்தவுடன் பக்கத்தில்  இன்னொரு காசு அதற்கு அடுத்து மேலும் ஒரு காசு  இப்படி நிறைய காசுகளை எடுத்து  கால் சட்டை பையில் போட்டுக்கொண்டு வீடு வருவதாக  ஒருமுறை அல்ல  நூற்றுக் கணக்கான  முறை  கண்டிருக்கிறேன். விடிந்த பிறகுதான்  அது கனவு என்று தெரிய வரும். சில ஆண்டுகளுக்குப் பிறகு  காசுக்கனவுகள்  காணும் பொழுது  எனக்கு கனவில்  சிரிப்பு வரும். நான் எனக்கு நானே சொல்லிக் கொள்வேன் . இது நிஜம் அல்ல கனவுதான் என்று. ஏற்கனவே இது போல பல கனவுகள்  கண்டிருப்பதால்  இதுவும் கனவுதான் என்றும்  தோன்றும். இந்த நிலையைத்தான்  கனவில் விழிப்புநிலை  என்று சொல்லப்படுகிறது.


இந்த வயதில் காசுக்கனவுகளைத் தவிர  பறப்பது போன்ற கனவுகளும்  அடிக்கடி காண்பதுண்டு. பறப்பது என்றால் பறவையைப்போல்  வானத்தில் இரண்டு கைகளையும் விரித்து  ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு  நான் பறந்து செல்வேன். அபொழுது  கனவில் எனக்கு மட்டும்தான்  பறக்கும் சக்தி உள்ளதாக  நினைத்துக் கொள்வேன். காரணம்  வனத்தில் என்னைப்போல  வேறு  மனிதர்கள் எவரும் பறந்ததை நான் காண்பதில்லை. பறக்கும் சக்தி எனக்கு மட்டும்தான் உண்டு என்ற ரகசியத்தை கனவில் கூட யாரிடமும் நான் சொல்லியது இல்லை.பறக்கும் கனவுகள்  தொடர்ந்து  காணும் பொழுது  கனவில் நான் காண்பது கனவுதான் என்பதை பின்னர் உணர்ந்து கொண்டேன். விழித்தவுடன்  நாம் ஏற்கனவே இதுபோல கண்டிருகின்றோமே  என்று நினைத்து அதனை  மறந்து விடுவேன்.

வாலிபப் பருவத்து கனவுகளைப் பற்றி சொல்லும் போது  இங்கே குறிப்பிட வேண்டியது  எதிர் பாலின கவர்ச்சிக் கனவுகள்  ஆகும். இந்த கனவுகளும் சில சமயம் வந்து தொல்லைப் படுத்தும். கனவு  உடல் ரீதியில் என்ன மாற்றத்தை உண்டாகுகிறது என்பதுதான்  இங்கு சொல்லே வேண்டியது இருக்கிறது. ஆமாம் கனவின் பாதிப்பு  உடலில் ஸ்கலிதம் உண்டாவதற்கு காரணமாக அமைகின்றது
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Namasivayam Mu on Mon Sep 07, 2015 6:31 pm

எனக்கு 12 வயது ஆகும்போது அம்மா இறந்துவிட்டார்கள். அப்போது அம்மாவுக்கு 43 வயது. அம்மா இறந்த பிறகு அடிக்கடி கனவில் வருவார்கள். கனவில் நான் அம்மாவிடம் கேட்கும் கேள்வி நீதான் செத்துப்போய்ட்டியே அப்புறம் எப்படி அம்மா உசிரோடு இருக்கீங்க என்றுதான் கேட்பேன். அம்மா அதற்கு நான் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் என்றுதான் பதில் சொல்லுவார்கள். சுமார் 25 ஆண்டுகள் கனவில் அம்மா வந்தார்கள் . அட்டிக்கடி அம்மா கனவில் வரும் பொழுது நான் கனவில் அம்மாவிடம் நான் நான் உங்களைக் கனவில் தான் பார்க்கிறேன். இப்பொழுது காண்பதுவும் ஒரு கனவுதான் என்று பல கனவுகளில் சொல்லுவேன் . அதற்கு அம்மா இது நிஜம்தான் கனவு அல்ல என்று சொல்லுவார்கள்.

அப்புறம் அம்மா கனவில் வரவில்லை . எந்தந்தையிடம் அம்மா கனவில் வருவதில்லையே ஏன்? என்று கேட்டேன் . அதற்கு அவர் அம்மா ஆவி உலகத்திலிருந்து மேல் உலகம் சென்றிருக்கும், அதனால்தான் கனவில் வரவில்லை என்று சொன்னார்கள். சில ஆண்டுகள் கழித்து அப்பாவும் இறந்துவிட்டார்கள்.

பிறகு அப்பா மட்டும் அடிக்கடி கனவில் வருவார் அவரிடமும் அம்மாவிடம் கேட்ட கேள்விதான் கனவிலும் கேட்டேன். அப்பாவும் தான் சாகவில்லை என்றுதான் பதில் சொல்லுவார் இன்னும் அப்பா கனவில் வந்து கொண்டுதான் இருக்கிறார்

அம்மா இறந்து 49 ஆண்டுகள் முடிந்துவிட்டன. சில தினங்களுக்கு முன் கனவில் 25 ஆண்டுகள் கழித்து அம்மா வந்தார்கள். ஆனால் சற்று முதிய கோலத்தில் இருந்தார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அப்பொழுது நான் அதை கனவு என்று நினைக்கவில்லை . நிஜம் என்ற உணர்வே இருந்தது.அம்மாவிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். என்ன பேசினேன் என்பது மறந்து விட்டது.கனவில் அம்மா தனக்கு வயது 92 என்று சொன்னார்கள். அதன் பின் ஒரு சிறிய 'ஈ' போல உருமாறி பறந்து சென்று ஒரு புள்ளியாகி மறைந்துவிட்டர்கள். நான் திகைத்து நிற்கையில் என் தந்தையார் கனவில் என்னிடம் வந்தார். அம்மாவிடம் ரெம்ப நேரம் பேசினாயா? என்று கேட்டார். அத்துடன் கனவு கலைந்தது. காலை எழுந்தவுடன் அம்மாவின் தற்போதய வயது என்ன என்பதை கணக்குப் போட்டு பார்த்தேன் அம்மா கனவில் சொல்லியபடி 92 தான் ஆகிறது.
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by சிவா on Wed Sep 09, 2015 1:52 am

மிகவும் அருமையான திரி!

தங்களின் கனவுகளின் பகிர்வு சுவாரஸ்யமானதாக உள்ளது.

எனக்கு ஒரே ஒருமுறை பறப்பது போன்ற கனவு வந்தது. வானத்தில் தங்கம் போன்ற பளபளப்புடன் பொருட்கள் மின்னிக் கொண்டிருக்க அதனூடே நான் பறந்து சென்றேன்!

ஆனால் எனக்கு கனவுகள் வருவது மிகவும் அரிது. மாதத்திற்கு ஒரு கனவு வருவதே அபூர்வம்.

ஆனால் என் மனைவி காலையில் எழுந்ததும் அவர் கண்ட கனவுகளைக் கூறி முடிக்கவே அரை மணி நேரமாகும். தினமும் அவர் கூறும் கனவுகளுக்கு ஏதாவது அர்த்தத்தைக் கூறியாக வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலை எனக்கு!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Namasivayam Mu on Wed Sep 09, 2015 7:13 am

கனவு காண்பதும் ஒரு வித சுகானுபவமே. வாழ்க வளமுடன் :வணக்கம்:
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Sarmila Sarmi on Mon Sep 14, 2015 5:49 pm

Dr.sir enekku enethu rasi nachchathiram ennevenru theriyathu parthu sollamudiyuma plz my birthdate 7 10 1991
avatar
Sarmila Sarmi
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Sarmila Sarmi on Mon Sep 14, 2015 5:51 pm

Dr.sir enekku enethu rasi nachchathiram ennevenru theriyathu parthu sollamudiyuma plz my birthdate 7 10 1991 my neme is puviraj. Thax u
avatar
Sarmila Sarmi
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Namasivayam Mu on Mon Sep 14, 2015 6:02 pm

@Sarmila Sarmi wrote:Dr.sir enekku enethu rasi nachchathiram ennevenru theriyathu parthu sollamudiyuma plz my birthdate 7 10 1991 my neme is puviraj. Thax u
மேற்கோள் செய்த பதிவு: 1162447
எனக்கு ராசி , நட்சத்திரம் பற்றி எதுவும் தெரியாது
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Sarmila Sarmi on Mon Sep 14, 2015 6:10 pm

Is ok sir thx
avatar
Sarmila Sarmi
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Namasivayam Mu on Fri Sep 18, 2015 6:18 am

எனக்கு வேலை கிடைத்தவுடன் சென்னையில் வந்து ஒரு எட்டு ஆண்டுகள் வாடகை வீட்டில் குடி இருந்தோம். பின்னர் ஒரு இருபத்து இரண்டு ஆண்டுகள் அரசு குடியிருப்பில் குடி இருந்தோம். வாடகை வீட்டில் குடிஇருந்தகாலம்  மிகவும் சௌகரியக் குறைவு அனுபவித்த காலம் என்றே சொல்ல வேண்டும். ரெம்பவும் கஷ்டம்.அரசு குடி இருப்பு கிடைத்தவுடன் அப்பாடா இதுதான் சொர்க்கம் என்று சொல்லுகிறார்களோ என்று கருதும் அளவுக்கு  அதிக வசதிகள் கொண்டதாக அமைந்திருந்தது. அது மிகவும் நீண்ட ஒரு வசந்த காலம் என்றுதான் சொல்ல வேண்டும்

.
ஆனால் அந்த இருபத்து இரண்டு ஆண்டுகளிலும்  எனக்கு வந்த கனவுகளில் பெரும்பாலும் வாடகை வீடு தேடி அலைவது போல்தான் கனவுகள் வந்தன.  சில கனவுகளில் புதிய புதிய வாடகை வீடுகளை சென்று பார்ப்பது போல் இருக்கும். சில சமயங்களில் நான் முன்பு குடியிருத்த  வீட்டிற்கே மறுபடியும் குடியேறுவது போலும் இருக்கும். அப்பொழுது அந்த பழைய வீட்டில் நான் அங்கு குடியிருந்த பொது வசித்த  அதே குடித்தனக்காரர்கள்  கனவிலும் மீதும் வருவார்கள்.. தொடர்ச்சியாக இந்த மாதிரிக் கனவுகள் காணும் பொழுது நான்  இதுவும் கனவுதான் என்று கனவிலேயே நினைத்துக் கொள்வேன். இது கனவில் கனவு என்ற மனநிலையை  மனம் அடைவதாக உணர முடிந்தது.
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Namasivayam Mu on Tue Sep 22, 2015 8:39 pm

சென்னையில்  முப்பது  ஆண்டுகள் அலுவலகப் பணியில்  ஓடிவிட்டது. அதில் எட்டு ஆண்டுகள்  பேருந்தில் அலுவலகம் சென்றேன்.மீதம் உள்ள 22 ஆண்டுகளும்  மின்சார ரயில் பயணம். கனவுகள் பெரும்பாலும் அலுவலகம்  செல்வது சம்மந்தமாகவே  இருக்கும். குறித்த நேரத்தில் அலுவலகம் செல்லமுடியாத நிலை கனவில் அடிக்கடி வரும்.அப்பொழுதெல்லாம் பறவை போல் பறந்து அலுவலகம் சென்றுவிடுவேன். சிலசமயங்களில் கனவில் நான் அலுவலகத்துக்கு கார் அல்லது ஜீப்பில்  சென்று விடுவேன். உண்மையில் எனக்கு சைக்கிள் ஓட்டவே தெரியாது. கனவில் மட்டும் நான்கு சக்கர வாகனம்  ஓட்டுவேன்.

மின்சார ரயிலில் அலுவலகம் செல்லும்போது வந்த கனவுகளில்  கூட்டம் காரணமாக  ரயில் பெட்டியில் ஏற முடியாமல் போகும். அல்லது நான் நிற்கும் பிளாட் பாரத்துக்கு வரும் ரயில்  நிற்காமல் சென்று விடும். அல்லது வேறு பிளாட் பாரத்துக்கு போய் விடும். அந்த மாதிரி சமயங்களில் தரையில் இருந்து ஓர் அடி உயரத்தில் நான் சருக்கிக் கொண்டு  ஒரு காந்த சக்தியின் துணையால் அலுவலகம் செல்வது போல் கனவுகள் வரும்.

அலுவலத்தில் 14 ஆண்டுகள் எனக்கு ஒருவர் மேல் அதிகாரியாக இருந்தார். அதன்பிறகு அவர் ஓய்வு  பெற்றபின் நான் அவர் வகித்த பொறுப்புக்கு வந்து விட்டேன்.அதில் 13 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தேன். நான் ஓய்வு பெற்று 6 வருடங்கள் ஆகிறது. சமீபத்தில் வரும் அலுவலக கனவுகளில்  நான் இன்னும் அந்த மேல் அதிகாரியின் கீழ் பணிபுரிவதாகவே காண்கிறேன்.
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Namasivayam Mu on Thu Sep 24, 2015 7:29 pm

பொதுவாக 95 % கனவுகள் விடிந்தவுடன் மறந்துவிடுகின்றன. சில கனவுகள் மட்டுமே நினைவில் முழுவதுமாகப் பதிவாகின்றன. நமக்கு சம்மந்தம் இல்லாத கனவுகளும் அவ்வப்பொழுது வருகின்றன.
அவை அனேகமாக மறந்தும் போய் விடுகின்றன. பூகம்பம் சுனாமி ஆகியவை நிஜ வாழ்க்கையில் ஏற்பட்டதை தொலைக்காட்சிகளில் காணுவதால் அதன் பாதிப்போ என்னவோ சில பூகம்பம் மற்றும் சுனாமிக் கனவுகளும் கண்டிருக்கிறேன்.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் சொந்தமாக வீடுகட்டி சென்னைக்கு அருகே குடி இருக்கிறேன். இந்த ஆறு ஆண்டுகளில் நான் கண்ட கனவுகளில் நான் கிராமத்தில் 36 ஆண்டுகளுக்கு முன் வசித்த வீட்டில் குடி இருப்பதாகவே கனவுகள் வருகின்றன.

avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Namasivayam Mu on Tue Sep 29, 2015 7:17 am

கனவு காணும் மனிதர்கள் மனதில் தோன்றும் பொதுவான எண்ணம் கண்ட கனவு பலிக்குமா என்பதுதான்
.அதனால் தானோ என்னவோ கனவுக்கு பலன் அறிந்து கொள்வதற்கு மனிதர்கள் ஆசைப்படுகிறார்கள். இது உலகம் முழுவதும் உள்ள மனிதர்களுக்கும் பொருந்தும்.

நான் ஆயிரம் ஆயிரம் கனவுகள் கண்டு இருக்கிறேன். எல்லாமும் பலித்ததில்லை. ஆனால் ஒரே ஒரு கனவு மட்டும் பலித்தது. அது எப்படி என்பது புரியவில்லை..சுமார் 7 ஆண்டுகள் இருக்கும். கனவில் நான் ஹைதராபாத் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வருகிறேன். நிஜமாக நான் ஹைதராபாத் இதுவரை சென்றது இல்லை. கனவில் ஸ்டேஷன் வாசலுக்கு வந்த பிறகுதான் தெரிந்தது. முதல்நாள் பெய்த மழையில் அந்த நகரமே மழை வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. ஸ்டேஷன் வாசலில் வாகனங்கள் யாவும் நீரில் மூழ்கி யுள்ளன. ஒருசிலர் மழை நீரில் நீந்திச்செல்கின்றனர். கனவு முடிந்தது.

அன்று காலை தொலைகாட்சி செய்தியில் ஹைதராபாத் வெள்ளத்தைப் பற்றிதான் காட்டிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அந்த நிகழ்வு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.


avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum