ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புதிய சமயங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 ரா.ரமேஷ்குமார்

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 krishnanramadurai

ஒரு சந்தேகம்??
 மூர்த்தி

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 krishnaamma

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஹார்வார்டில் தமிழுக்கு ஓர் இருக்கை !

View previous topic View next topic Go down

ஹார்வார்டில் தமிழுக்கு ஓர் இருக்கை !

Post by lotus73 on Thu Sep 03, 2015 7:43 pm

ஹார்வார்டில் தமிழுக்கு ஓர் இருக்கை !
அ.முத்துலிங்கம், ஓவியம்: டிராட்ஸ்கி மருது
'சின்ன சம்பவம்’ என ஒன்றுமே இல்லை. சோதனைக் குழாயில் தற்செயலாக ஒட்டியிருந்த பூஞ்சணத்தில் தொடங்கிய ஆராய்ச்சிதான், பென்சிலின் மருந்து கண்டுபிடிப்பில் முடிந்தது. அதே மாதிரிதான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

'வைதேகி ஹெர்பெர்ட்’ என்ற அமெரிக்கர், தமிழ் சங்க இலக்கிய நூல்கள் பதினெட்டையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். வைதேகியைப் பாராட்டிய ஒரு விழாவில், பென்சில்வேனியாவைச் சேர்ந்த இதய அறுவைசிகிச்சை மருத்துவர் ஜானகிராமன் அவரைச் சந்திக்க நேர்ந்தது.

2,000 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய சங்க இலக்கியத்தின் மேன்மைக்காக, தானும் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் அப்போது எழுந்தது. 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம், ஜானகிராமன் தொலைபேசியில் வைதேகியை அழைத்து

'என் வாழ்நாளில் தமிழுக்கு ஏதாவது பெரிதாகச் செய்யவேண்டும் என நினைக்கிறேன். உங்கள் ஆலோசனை என்ன?’ என்றார். வைதேகிக்கு அந்தக் கணம் மனதில் தோன்றியதைச் சொன்னார்... 'உலகப் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை கிடையாது. தொன்மையான தமிழ் மொழிக்கு ஓர் இருக்கை அங்கே அமையுமானால், உலகமே பயனுறும். தமிழுக்குப் பெருமை; தமிழர்களுக்கும் பெருமை’ என்றார்.

அதைத் தொடர்ந்து காரியங்கள் அதிவிரைவாக நடந்தன. ஹார்வார்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்களோடும் துறைத் தலைவரோடும் மருத்துவர்கள் ஜானகிராமனும், திருஞானசம்பந்தமும் பேசினார்கள்.

பல சந்திப்புகளுக்கும் ஆலோசனைகளுக்கும் பின்னர் ஹார்வார்டு பல்கலைக்கழகம் தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்புதலை வழங்கியது. இதற்கான முதலீடு ஆறு மில்லியன் டாலர் (இப்போதைய நிலவரப்படி சுமார் 40 கோடி ரூபாய்). இதை இரண்டு வருட கால அவகாசத்துக்குள் திரட்டவேண்டும். குறிப்பிட்ட தொகை இலக்கை அடைந்துவிட்டால், ஒரு வருடத்துக்குள்கூட தமிழ் இருக்கையை நிறுவிவிடலாம்.

ஜானகிராமனும் திருஞானசம்பந்தமும் கூட்டாக ஒரு மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளனர். மீதி ஐந்து மில்லியன் டாலரை, உலகத் தமிழ்ப் பற்றாளர்களிடம் திரட்டிவிடலாம் என்பதுதான் நம்பிக்கை.

மருத்துவர் ஜானகிராமன், தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டம், வட கண்டம் என்ற ஊரில் பிறந்தவர். தமிழில் மேல்படிப்பு படிக்க ஏற்பாடு செய்தவருக்கு, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததும் அங்கே சேர்ந்து படிக்கவேண்டிய நிர்பந்தம். 1975-ம் ஆண்டில் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தவர்; தற்போது பென்சில்வேனியாவில் பிரபல இதய சிகிச்சை நிபுணர். இவரைத் தொடர்புகொண்டபோது கணீர் குரலில், ஒரு சொல்கூட ஆங்கிலம் கலக்காமல், அழகுத் தமிழில் பேசினார்...

''360 வருடங்களுக்கு மேலாக ஹார்வார்டு பல்கலைக்கழகம் உலகில் கல்விப் போதனையில் முன்னணியில் இருக்கிறது. தமிழை வளர்ப்பதற்கு ஏதாவது செய்வதாக இருந்தால் முதல்தரப் பல்கலைக்கழகமான ஹார்வார்டில் அதை ஏன் நிகழ்த்தக் கூடாது? எங்கள் வருங்காலத் தலைமுறை தமிழின் பெருமையை உணர்ந்து படிப்பதற்கு ஏற்ற இடமாக அது அமையும். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த

20 தமிழ் மாணவர்கள் ஆர்வம் காரணமாக ஆசியவியல் துறையில் தமிழ் படிக்கிறார்கள். அதைக் கற்பிப்பது ஒரு வெள்ளைக்கார அமெரிக்கர். ஒரு தமிழ் இருக்கை அமைத்தால், அதனால் எத்தனையோ பேர் பயனடைவார்கள்! என் அருமை நண்பர் திருஞானசம்பந்தமும் நானும் இதற்கு ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே. இதனால் கிடைக்கும் வெற்றி உலகத் தமிழர்கள் அனைவருக்கும் சொந்தம்!''  

மருத்துவர் திருஞானசம்பந்தம் அவர்களின் குரலில் அத்தனை கனிவு. அவர் அமெரிக்காவுக்கு 1971-ம் ஆண்டில் புலம்பெயர்ந்தவர்.

''என் இளமைக்கால பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரிப் படிப்பை திருக்குடந்தை நகரில்தான் கற்றேன். நான் பிறந்து, வளர்ந்த குடும்பம் தமிழையும் சித்தாந்த சைவத்தையும் இரு கண்களாக எண்ணியது. ஆகவே, 'தமிழ் என் உயிருக்கு நேர்’ ஆனதில் வியப்பு ஒன்றும் இல்லை. திருக்குறள் எங்கள் வேதம். அது சொல்கிறது... 'யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு.’

கற்றவருக்கு எல்லா நாடும் ஒன்றுதான்; எல்லா ஊரும் ஒன்றுதான். கல்வியை எவரும் எந்த நாட்டிலும் கற்றுக்கொள்ளலாம். உலகத்தின் பழம்பெருமை வாய்ந்த ஹார்வார்டு பல்கலைக்கழகத்திலே கல்வி கற்பது அதி சிறப்பானது. 20 ஆண்டுகளாக இங்கே தமிழ் இருக்கை தொடங்குவதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அது பலன் அளிக்கவில்லை. ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான இருக்கைகள் இருந்தாலும் ஓர் இனக்குழு ஒன்றுசேர்ந்து உருவாக்கிய இருக்கைகள் ஒரு சிலவே. 30 மில்லியன் மக்கள் பேசும் உக்ரேனிய மொழிக்கு இரண்டு இருக்கைகள் உள்ளன. 1.5 மில்லியன் மக்கள்தொகை மட்டுமே பேசக்கூடிய செல்டிக் மொழிக்குக்கூட ஹார்வார்டில் இருக்கைகள் இருக்கின்றன. ஆனால், தமிழ் மொழிக்கு ஓர் இருக்கை இன்று வரை இல்லை. இப்போது ஹார்வார்டு பல்கலைக்கழகம் அதற்கான சம்மதத்தைத் தெரிவித்திருக்கிறது.

எம் வாழ்நாளில் கிடைத்த பெரும் பேறு இது.''



''இதற்கான இணையதளம் இருக்கிறதா?''

'' Harvard Tamil Chair  என்ற இணையதளம் விரைவில் செயல்பட இருக்கிறது. தமிழ் இருக்கை பற்றிய பின்னணியும் செயல்பாடும் விளக்கங்களும்  அதில் கொடுக்கப்பட்டிருக்கும். ஏற்கெனவே ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் Bank of America வங்கிக்கணக்கு  Sangam Professorship in Tamil என்ற பெயரின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. காசோலையாகவோ, வங்கி மூலமாகவோ செலுத்தப்படும் பணம் ஹார்வார்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக் கணக்கில் நேரடியாகப் போய்ச் சேரும்.''

''மீதி ஐந்து மில்லியன் டாலரைச் சேர்ப்பதற்கு என்ன முயற்சிகள் எடுக்கப்படுகின்றன?''

''தமிழை வளர்ப்பதிலும், இந்த இருக்கையின் உருவாக்கத்திலும் தமிழ்நாடு அரசின் உதவியைப் பெரிதும் எதிர்பார்க்கிறோம். தமிழ் இன்றும் வாழும் ஆதி மொழிகளில் ஒன்று. அது உலகத்துக்குச் சொந்தமானது. அது தமிழ்நாட்டிலும் வளரலாம்; அயல்நாட்டிலும் வளரலாம். அதை வளர்க்க வேண்டியது தமிழரின் கடமை. ஹார்வார்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையால் பயன்பெறப்போவது உலக மக்கள். இதனால் கிடைக்கும் பெருமை தமிழ்நாட்டுக்கும் உலகத் தமிழர்களுக்கும் போய்ச் சேரும். தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் பலவிதங்களில் உதவலாம். அவற்றுக்கு எதிர்காலத்தில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்துடன்  ஏற்படப்போகும் தொடர்பு, இரு பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கும் உதவும்.

தமிழ் நிறுவனங்கள் பல இன்று உலக நிறுவனங்களுடன் போட்டிபோட்டு உயர்ந்து நிற்கின்றன. இவை நிதி வழங்கலாம். பல உலக நிறுவனங்களுக்கு தமிழ் ஆளுமைகள் தலைமை வகிக்கிறார்கள். இவர்களில் பலர் தமிழ்ப் பற்றாளர்கள். இவர்களின் உதவியையும் நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம். மற்றும் தொழிலதிபர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணினித் துறை நிபுணர்கள் போன்ற பலரிடம் இருந்தும் உதவிகள் வரும் என நம்புகிறோம்.

தவிர கல்வியாளர்கள், தமிழ்த் துறை வல்லுநர்கள், ஆர்வலர்கள், வாசகர்கள் என யாரும் தங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்ப நிதி உதவி செய்யலாம். உலகம் முழுக்க 5,000 தமிழர்கள் ஒன்றுபட்டால், ஒரு வருட கால அவகாசத்துக்குள் வேண்டிய நிதியைத் திரட்டிவிடலாம். இதற்கு முதலில் வேண்டியது தமிழ்ப் பற்று; இரண்டாவது மனம்; மூன்றாவது பணம்!''

''ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதால் கிடைக்கும் பலன்கள்?'

''அண்மையில் வெளியான பல்கலைக்கழக உலகத் தரவரிசையில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்துக்கே முதல் இடம். இங்கே ஹீப்ரு, சம்ஸ்கிருதம் போன்ற மற்ற செம்மொழிகளுக்கும் இருக்கைகள் உள்ளன. எனவே செம்மொழியான தமிழுக்கும் இருக்கை அவசியம். ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வுகள் உலக அங்கீகாரம் பெற்றவை. இந்தப் பல்கலைக்கழகத்தை உலக அறிவு மையம் என்பார்கள். எனவே, உலகின் பல திசைகளில் இருந்து தரமான மாணவர்கள் தமிழைக் கற்க, ஆராய வாய்ப்புகள் அமையும். தமிழ் இருக்கையின் பெயர் Sangam Professorship in Tamil. ஆகவே 2,300 ஆண்டுகள் பழமையான சங்க நூல்களுக்கும், பழைமையான தமிழ் இலக்கியங்களுக்கும் முன்னுரிமை கொடுத்துக் கற்பிக்கப்படும்; உலகம் முழுக்கப் பரப்பப்படும். இது தமிழின் மேன்மையைப் பரப்ப உகந்த இடமாக இருக்கும்!''

1.5 மில்லியன் மக்கள் மட்டுமே பேசும் செல்டிக் மொழிக்கு ஹார்வார்டில் இரண்டு இருக்கைகள் இருக்கின்றன. சுமார் 80 மில்லியன் மக்கள் பேசும் தமிழ் மொழிக்கு ஓர் இருக்கையாவது நிறுவவேண்டியது எத்தனை அவசியம்? அது அமைந்தால் எத்தனை பெருமையான கணமாக இருக்கும்!

நன்றி - விகடன்
avatar
lotus73
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: ஹார்வார்டில் தமிழுக்கு ஓர் இருக்கை !

Post by T.N.Balasubramanian on Thu Sep 03, 2015 7:59 pm

நல்ல தகவல் --பகிரவேண்டிய விஷயம்தான் லக்ஷ்மி ,அவர்களே . பகிர்ந்தமைக்கு நன்றி .

இதற்கு முதலில் வேண்டியது தமிழ்ப் பற்று; இரண்டாவது மனம்; மூன்றாவது பணம்!''

முற்றிலும் உண்மை .தமிழ் பற்று இருக்கோ இல்லையோ , பணத்தில் பற்று இருக்கிறது என்கிறது மனம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21508
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: ஹார்வார்டில் தமிழுக்கு ஓர் இருக்கை !

Post by ayyasamy ram on Fri Sep 04, 2015 4:38 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: ஹார்வார்டில் தமிழுக்கு ஓர் இருக்கை !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum