ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 ayyasamy ram

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ayyasamy ram

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 ayyasamy ram

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ayyasamy ram

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 ayyasamy ram

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 krishnaamma

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 krishnaamma

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 krishnaamma

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 ayyasamy ram

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 ayyasamy ram

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ayyasamy ram

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 T.N.Balasubramanian

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 ஜாஹீதாபானு

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
 T.N.Balasubramanian

பாதை எங்கு போகிறது...?
 SK

நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
 SK

சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
 SK

குழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி
 T.N.Balasubramanian

கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
 SK

தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
 SK

வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்..

View previous topic View next topic Go down

திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்..

Post by சிவா on Fri Sep 04, 2015 11:56 pm


‘பாண்டியநாடு’ படத்திற்குப் பிறகு இயக்குநர் சுசீந்திரன், விஷால் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் புதிய படம் ‘பாயும்பலி’.

மதுரையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தாதாக்கள், அவர்களுக்குப் பின்புலமாக செயல்படும் அரசியல்வாதிகள், அவர்களை வேட்டையாடும் போலீஸ் அதிகாரியாக விஷால் – இது தான் கதைக்களம்.

பல காலமாக கேட்டுக் கேட்டு புளித்துப் போன கதையும், பார்த்துப் பார்த்து சலித்துப் போன காட்சிகளுடன் கூடிய கமர்சியல் சினிமா தான் என்றாலும், வெண்ணிலா கபடிக் குழு, அழகர் சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா உள்ளிட்ட பல வித்தியாசமான கதையம்சங்களுடன் கூடிய படங்களை எடுத்த இயக்குநர் ஆயிற்றே? முதன் முறையாக போலீஸ் கதை ஒன்றை இயக்கியுள்ளார். அதில் என்ன வித்தியாசம் காட்டியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

கதைச் சுருக்கம்

மதுரையில் நல்ல கொழுத்த பணக்காரத் தொழிலதிபர்களை எல்லாம் ஒவ்வொருவரையாக கடத்திக் கொண்டு போய் வைத்து பணம் பறிக்கிறது ஒரு கொள்ளைக் கும்பல். அந்த கும்பலை ஒழிக்க அந்த ஊருக்கு புதிய அசிஸ்டண்ட் கமிஷனராக நியமிக்கப்படுகிறார் விஷால்.

யாரை வேண்டுமானால் எந்த நேரத்திலும் சுடக்கூடிய அதிகாரத்தை வழங்கி இரகசியமாக அனுப்பி வைக்கிறது காவல்துறைத் தலைமை. பதவி ஏற்பதற்கு 15 நாட்களுக்கு முன்னரே அந்த ஊருக்குப் போய், இரகசியமாக அந்தக் கடத்தல் கும்பலை பட்பட்டுனு குருவியை சுடுவதைப் போல் ஒவ்வொருவரையாக சுட்டுக் கொல்கிறார் விஷால்.

எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கையில் ஒரு பெரிய திருப்பம் காத்திருக்கிறது. அவர் வீட்டில் ஒருவர் தான் அந்தக் கும்பலுக்கே தலைவன் என்பதை அறியும் விஷால் துடித்துப் போகிறார். சொந்தமா? கடமையா? என்பதை விஷால் தீர்மானிப்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.

நடிப்பு

போலீஸ் அதிகாரி வேடம் விஷாலுக்கு கச்சிதமாகப் பொருந்தியது என்றால் அது ‘சத்யம்’ படத்தில் தான். அந்தக் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடை உடை பாவனை அனைத்திலும் மிடுக்கைக் காட்டியிருப்பார்.

இந்தப் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் தான் அவருக்கு காக்கிச் சட்டை வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் அவரிடம் அந்த மிடுக்கை எதிர்பார்க்க முடியாது.

இந்தப் படத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் ஹீரோயினைப் பார்த்து ‘என்னப் பொண்ணுடா’ என்பது போல் அசடு வழிவதைப் போல் காட்சிகளும் உள்ளன.

பகலில் காஜல் பின்னால் சுற்றுவதும் இரவில் தாதாக்கள் பின்னால் துப்பாக்கியுடன் அலைவதுமாக நடித்திருக்கிறார் விஷால். மற்றபடி நடிப்பில் பெரிய வித்தியாசம் என்று சொல்லும்படியான எந்த ஒரு விசயமும் விஷாலிடம் இல்லை.

காஜல் அகர்வால் .. வெள்ளை வெளேரென்று ‘யார் இந்த முயல்குட்டி’ என்று கேட்கும் படி படத்தில் வந்து போகிறார். நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட ‘வந்து போகிறார்’ என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஆம் .. உண்மையில் காஜல் அகர்வாலுக்கு படத்தில் இரண்டு பாட்டு, சில காதல் காட்சிகள் அவ்வளவு தான் வேலை.

படத்தில் நகைச்சுவைக்காக சிரிப்புப் போலீசாக சூரி.. பொண்டாட்டியிடம் அடி வாங்குகிறார், சிறுவனிடம் அடி வாங்குகிறார். ஆனால் அசிஸ்டெண்ட் கமிஷனர் விஷாலின் நண்பனாக கூடவே இருக்கிறார். போலீஸ் உயர் அதிகாரிகளின் இரகசியப் பேச்சு வார்த்தைகளில் கூட சாதாரண கான்ஸ்டபிளான சூரி கூடவே இருக்கிறார்.

என்றாலும், சூரியின் அந்த ‘ஹெல்மட்’ காமெடியும், குரங்கு காமெடியும் மட்டும் நம்மையும் மறந்து குபீரென்று சிரிக்க வைக்கிறது.

அடுத்து படத்தின் விறுவிறுப்பிற்கு முக்கியக் காரணமான கதாப்பாத்திரம் செல்வம் தான். செல்வமாக சமுத்திரக்கனி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். என்றாலும், அவர் ஏற்றுள்ள கதாப்பாத்திரம் தான் நம்பும் படியாக இல்லை. ஒரே ஒருமுறை அரசியல் தோல்வி ஒரு மனிதனை இந்த அளவிற்கு மிருகமாக மாற்றுமா? அதுவும் சுதந்திரப் போராட்டவாதியின் வாரிசால் இப்படி ஒரு தீய வழிக்குச் செல்ல முடியுமா?, “அப்பா சாயங்காலம் வரும் போது பொம்ம கார் வாங்கிட்டு வரேன் பா” என்று தனது செல்ல மகனிடம் சொல்லும் ஒரு தந்தையால் தன் தந்தையை கொல்ல முடியுமா? போன்ற கேள்விகள் படம் முடிந்தும் நம் மனதில் தேங்கி நிற்கிறன.

ஒளிப்பதிவு, இசை

வேல்ராஜ் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கின்றது. குறிப்பாக இரவில் எடுக்கப்பட்டுள்ள எண்கவுண்டர் காட்சிகள் அந்த சூழலை அப்படியே காட்டுகின்றன. படத்தின் துவக்கத்தில் வரும் அந்த ‘ஏரியல்வியூ’ காட்சி, ‘மதுரக்காரி’, ‘சிலுக்குமரமே’ பாடல் காட்சிகள் அழகு.

இமானின் பின்னணி இசை மனதில் நிற்கிறது. ‘மதுரக்காரி’ பாடலில் அந்தக் குரலும், இசையும் ரசிக்க வைத்தது. ‘பாயும்புலி’, ‘யார் இந்த முயல்குட்டி’ பாடல்கள் கேட்கும் இரகம்.

மொத்தத்தில் ‘பாயும்புலி’ என்ற போலீஸ் கதையில் இயக்குநர் சுசீந்திரன், போலீசையும், வில்லனையும் ஒரே வீட்டில் மோத வைத்திருக்கிறார். அது ஒன்று மட்டுமே, மற்ற போலீஸ் படங்களை ஒப்பிடுகையில் அவர் காட்டியிருக்கும் வித்தியாசம்.

மற்றபடி, பாயும் புலி – எதிர்பார்த்ததை விட சீற்றம் சற்று குறைவு தான்..

- ஃபீனிக்ஸ்தாசன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்..

Post by ayyasamy ram on Mon Sep 14, 2015 6:50 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35936
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்..

Post by krishnaamma on Tue Sep 15, 2015 2:07 am

//அடுத்து படத்தின் விறுவிறுப்பிற்கு முக்கியக் காரணமான கதாப்பாத்திரம் செல்வம் தான். செல்வமாக சமுத்திரக்கனி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். என்றாலும், அவர் ஏற்றுள்ள கதாப்பாத்திரம் தான் நம்பும் படியாக இல்லை. ஒரே ஒருமுறை அரசியல் தோல்வி ஒரு மனிதனை இந்த அளவிற்கு மிருகமாக மாற்றுமா? அதுவும் சுதந்திரப் போராட்டவாதியின் வாரிசால் இப்படி ஒரு தீய வழிக்குச் செல்ல முடியுமா?, “அப்பா சாயங்காலம் வரும் போது பொம்ம கார் வாங்கிட்டு வரேன் பா” என்று தனது செல்ல மகனிடம் சொல்லும் ஒரு தந்தையால் தன் தந்தையை கொல்ல முடியுமா? போன்ற கேள்விகள் படம் முடிந்தும் நம் மனதில் தேங்கி நிற்கிறன.//

இது தான் கொஞ்சம் நெருடலாய் இருக்கு..........மத்த படி படம் ஓகே புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum