ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்
 T.N.Balasubramanian

ஆனி திருமஞ்சன மகாஉத்சவம்
 ayyasamy ram

படிக்கணும் நாமும் படிக்கணும்
 ayyasamy ram

சீற்றம் – கவிதை
 ayyasamy ram

நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
 ayyasamy ram

ஆறு வித்தியாசம்…
 ayyasamy ram

ரேஷன் கார்டு கதைகள்…!
 ayyasamy ram

டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
 ayyasamy ram

தமிழ்நேசன் அவர்களுக்கு
 balakama

அமெரிக்காவில் இந்த வாரம் - 6
 மூர்த்தி

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 ராஜா

ரமதான் -நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள் ! 
 M.Jagadeesan

காக்கைச் சிறகினிலே
 ayyasamy ram

முதல் பார்வை: வனமகன் – வசீகரிக்கிறான்!
 ayyasamy ram

விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
 சரவணன்

திரிபலா சூரணம்!
 ayyasamy ram

பொண்டாட்டியே உதைப்பா...!
 ayyasamy ram

வானிலை அறிக்கை - தொடர் பதிவு
 ayyasamy ram

பார்லி மழைகால கூட்டத்தொடர் ஜூலை 17 ல் துவங்குகிறது
 ayyasamy ram

இதற்கொரு கவிதை தாருங்களேன். (6 )
 M.Jagadeesan

பட்டாம் பூச்சியின் மரணம்
 ayyasamy ram

நிலா…மழை…குழந்தை
 ayyasamy ram

புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
 ayyasamy ram

நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
 ayyasamy ram

எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
 ayyasamy ram

கடன் பாட்டு…!!
 ayyasamy ram

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

லூயி பாஸ்டர்
 ayyasamy ram

மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
 ayyasamy ram

பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
 ayyasamy ram

புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
 ayyasamy ram

அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
 ayyasamy ram

ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
 ayyasamy ram

நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
 ayyasamy ram

arimugam
 T.N.Balasubramanian

சென்னைக்கு வந்து சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்
 T.N.Balasubramanian

ஹைக்கூ கவிதைகள்
 M.Jagadeesan

சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி
 ayyasamy ram

துன்ப காலங்களில் கடவுள்
 T.N.Balasubramanian

நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
 ayyasamy ram

ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
 ayyasamy ram

பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
 ayyasamy ram

வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
 anuradhamv

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)
 T.N.Balasubramanian

அறமற்ற அறிவியல்
 sugumaran

வேலன்:- குறிப்பிட்ட நேரத்தில் கணிணி ரீஸ்டார்ட் ஆகவும் நின்றுவிடவும் செய்திட
 velang

தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் !
 T.N.Balasubramanian

#அபிஷேகத்தின்ஆற்றல்அறிவோம் !!!
 T.N.Balasubramanian

ஏன் பிறந்தநாள் ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாட வேண்டும்?
 T.N.Balasubramanian

"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."
 T.N.Balasubramanian

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)
 SARATHI NEGAMAM

நாடி அடிப்படையில் திருமண காலங்கள்
 SARATHI NEGAMAM

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன
 soplangi

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Thamaraimanalan

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது
 T.N.Balasubramanian

உலக யோகா தினம்
 சரவணன்

வேலன்:- வால்பேப்பர் கேலரி.
 velang

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
 ayyasamy ram

தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
 ayyasamy ram

உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015

View previous topic View next topic Go down

அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015

Post by சிவா on Sat Sep 05, 2015 12:35 amஉலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) நிஷிகோரி (ஜப்பான்), தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு), டேவிட் பெரர் (ஸ்பெயின்), போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

ஜோகோவிச் இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றி இருந்தார். பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் தோற்று இருந்தார். இதனால் அமெரிக்க ஓபன் பட்டத்தை வெல்ல இயலும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ஜோகோவிச் ஒரே ஒருமுறை மட்டுமே அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் (2011) பெற்று உள்ளார். 4 தடவை இறுதிப் போட்டியில் தோற்று இருக்கிறார்.

அவருக்கு ஆன்டி முர்ரே, ரோஜர் பெடரர், வாவ்ரிங்கா, சவாலாக இருப்பார்கள். மேலும் கால் இறுதியில் 8–ம் நிலை வீரரான ரபேல் நடாலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

9 முறை பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்ற சாதனை வீரரான நடால் சமீபகாலமாக சரியாக ஆடவில்லை. கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்ற பிறகு அவர் கிராண்ட்சிலாமில் அரை இறுதியை தொட்டது இல்லை.

இரண்டாம் நிலை வீரரான ரோஜர்பெடரர் 17 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று சாதனையாளர் ஆவார். கடந்த 3 ஆண்டுகளில் அவர் எந்த கிராண்ட்சிலாமையும் வெல்லவில்லை.

பெண்கள் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஆதிக்கம் செலுத்தி வருகிறார். தொடர்ச்சியாக 4 கிராண்ட் சிலாம் பட்டங்களை (2014– அமெரிக்க ஓபன், 2015 ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன்) வென்று இருந்தார். அவரது ஆதிக்கம் இந்தப் போட்டியிலும் நீடிக்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

34 வயதான செரீனா இந்த அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றால். ஸ்டெபிகிராப் சாதனையை சமன் செய்வார். ஜெர்மனி முன்னாள் வீராங்கனையான ஸ்டெபிகிராப் 22 கிராண்ட் சிலாம் வென்று உலக அளவில் 2–வது இடத்தில் உள்ளார். செரீனா 21 கிராண்ட்சிலாம் பட்டம் கைப்பற்றி உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற அவருக்கு இந்த முறையாவது சவால் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு சாம்பியனான அவர் அமெரிக்க ஓபன் பட்டத்தை மட்டும் 6 தடவை வென்றுள்ளார்.

ஷிமோனா ஹெலப் (ருமேனியா), ஷரபோவா (ரஷியா), குவிட்டோவா (செக்குடியரக), வோஸ்னி யாக்கி (டென்மார்க்), இவானோவிக் (செர்பியா) போன்ற முன்னணி வீராங்கனைகளும் சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளனர்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015

Post by சிவா on Sat Sep 05, 2015 12:36 am

ஷரபோவா காயத்தால் விலகல்

முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான மரியா ஷரபோவா (ரஷியா) விலகியுள்ளார். வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகி உள்ளதாக போட்டி அமைப்பாளர் டேவிட் புருவர் தெரிவித்துள்ளார். ஷரபோவாவின் விலகல் செரீனாவுக்கு கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

உலக தரவரிசையில் 2–வது இடத்தில் இருக்கும் அவர் 2006–ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015

Post by சிவா on Sat Sep 05, 2015 12:37 am

முதல் சுற்றில் ராட்வன்ஸ்கா வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் போலந்து வீராங்கனை ராட்வன்ஸ்கா வெற்றி பெற்றார்.

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் 6-4, 6-1, 6-2 என்ற நேர்செட்டில் இத்தாலி வீரர் சிமோன் போலெலியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் 17-ம் நிலை வீரர் கிரிகோர் டிமித்ரோவ் (பல்கேரியா) 6-4, 6-2, 6-4 என்ற நேர்செட்டில் மேத்யூ எப்டெனை (ஆஸ்திரேலியா) வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் மிகைல் குகுஷ்கின் (கஜகஸ்தான்) 6-3, 6-3, 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது சீன தைபே வீரர் வான் சன் லூ காயம் காரணமாக விலகியதால் மிகைல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் அக்னிஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் செக் குடியரசின் காதெரினா சினிகோவாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்ற ஆட்டங்களில் மரியானா மரினோ (கொலம்பியா), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), அனெட் கொடாவெய்ட் (எஸ்டோனியா), மகரோவா (ரஷியா), ஜோவோனாஸ்கி (செர்பியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், 2006-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றியவருமான ரஷியாவின் அழகு பதுமை மரியா ஷரபோவா இந்த போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் விலகி உள்ளார். காலில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் அவர் விலகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015

Post by சிவா on Sat Sep 05, 2015 12:37 am

ஜோகோவிச், செரீனா 2–வது சுற்றுக்கு தகுதி

உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) தொடக்க சுற்றில் பிரேசிலை சேர்ந்த ஜோ.சவுசாவை எதிர் கொண்டார். இதில் ஜோகோவிச் 6–1, 6–1, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

8–ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) முதல் சுற்றில் குரோஷியாவை சேர்ந்த போர்னா கோரிக்கை சந்தித்தார். இதில் நடால் 6–3, 6–2, 4–6, 6–4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்ற ஆட்டங்களில் நடப்பு சாம்பியனும், 9–ம் நிலை வீரருமான சிலிச் (குரோஷியா), 7–ம் நிலை வீரர் டேவிட் பெரர் (ஸ்பெயின்), 10–ம் நிலை வீரர் ரோஸ்னிக் (கனடா), 19–ம் நிலை வீரர் சோங்கா (பிரான்ஸ்) ஆகியோர் வென்று 2–வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

உலகின் 4–ம் நிலை வீரரான நிஷிகோரி (ஜப் பான்) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்றார்.

அவர் 4–6, 6–3, 6–4, 6–7 (6–8), 4–6 என்ற கணக்கில் பிரான்ஸ் வீரர் பெனாய்டிடம் தோற்றார். நிஷிகோரி கடந்த அமெரிக்க ஓபனில் இறுதிப்போட்டி வரை நுழைந்தவர் ஆவார்.

இதேபோல 16–ம் நிலை வீரரான மான்பிலசும் (பிரான்ஸ்) தொடக்க சுற்றிலேயே வெளியேறினார்.

நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) முதல் சுற்றில் ரஷியாவை சேர்ந்த விட்டாலியாவை சந்தித்தார். இதில் செரீனா 6–0, 2–0 என்ற கணக்கில் முன்னணியில் இருந்த போது விட்டாலியா காயத்தால் விலகினார். இதனால் செரீனா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மற்ற ஆட்டங்களில் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), ரட்வன்ஸ்கா (போலந்து) ஆகியோர் வெற்றி பெற்று 2–வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

7–ம் நிலை வீராங்கனை அனா இவானோவிக் (செர்பியா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்றார்.

சுலோவாக்கியாவை சேர்ந்த டொமினிக்கா சிபுல் கோவா 6–3, 3–6, 6–3 என்ற கணக்கில் இவானோவிக்கை தோற்கடித்தார்.

இதேபோல 21–ம் நிலை வீராங்கனை ஜெலீனா ஜான்கோவிக் (செர்பியா), 29–ம் நிலை வீராங்கனை ஸ்டெப்ஹென்ஸ் (அமெரிக்கா) ஆகியோரும் முதல் சுற்றில் தோற்றனர்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015

Post by சிவா on Sat Sep 05, 2015 12:37 am

பெடரர், முர்ரே முன்னேற்றம்

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் 2–ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் 6–1, 6–2, 6–2 என்ற கணக்கில் லியானர்டோ மேயரை (அர்ஜென்டினா) வீழ்த்தி 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

3–ம் நிலை வீரரான ஆண்டிமுர்ரே (இங்கிலாந்து) 7–5, 6–3, 4–6, 6–1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் கைரோஜசை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), ஜான் இஸ்னர் (அமெரிக்கா), தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு) ஆகியோர் வென்று 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஷிமோனா ஹெலப் (ருமேனியா) முதல் சுற்றில் மரினாவை (நியூசிலாந்து) எதிர்கொண்டார். இதில் ஹெலப் 6–2, 3–0 என்ற கணக்கில் இருந்தபோது மரினா காயத்தால் விலகினார். இதனால் ஹெலப் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

4–ம் நிலை வீராங்கணையான வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6–2, 6–0 என்ற கணக்கில் ஜேமிலோயிப்பை (அமெரிக்கா) வீழ்த்தினார்.

மற்ற ஆட்டங்களில் குவிட்டோவா (செக் குடியரசு) அசரென்கா (பெலாரஸ்), கெர்பர் (ஜெர்மனி) ஆகியோர் வென்று 2–வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

செக்குடியரசுவை சேர்ந்த 6–ம் நிலை வீராங்கனை ஷபரோவா அதிர்ச்சிகரமான தோற்றார். பிரெஞ்சு ஓபனில் 2–வது இடத்தை பிடித்த அவர் 4–6, 1–6 என்ற கணக்கில் லெசினாவிடம் (உக்ரைன்) தோற்றார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015

Post by சிவா on Sat Sep 05, 2015 12:38 am

கிவிடோவா எளிதில் வெற்றி

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இது கடின தரையில் நடத்தப்படும் போட்டியாகும். பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் செக்குடியரசின் பெட்ரோ கிவிடோவா, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் சீஜ்மன்ட்டை பந்தாடினார். விம்பிள்டனை இரண்டு முறை வென்றவரான கிவிடோவா அமெரிக்க ஓபனில் பங்கேற்று இருப்பது இது 8-வது முறையாகும்.

ஆனால் ஒரு தடவையும் அவர் 4-வது சுற்றை தாண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனைகளான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-2, 6-0 என்ற நேர் செட்டில் ஜாமி லோப்பையும் (அமெரிக்கா), விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 6-1, 6-2 என்ற நேர் செட்டில் லூசி ராடெக்காவையும் (செக்குடியரசு) விரட்டியடித்தனர். பிரெஞ்ச் ஓபனில் இறுதி சுற்று வரை முன்னேறி ஆச்சரியப்படுத்தியவரான செக்குடியரசின் லூசி சபரோவா முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்றுப்போனார்.

தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள அவரை 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் 37-ம் நிலை வீராங்கனையான லெசியா சுரென்கோ (உக்ரைன்) சாய்த்தார். இதே போல் வளர்ந்து வரும் நட்சத்திரமான தரவரிசையில் 14-வது இடம் வகிக்கும் சுவிட்சர்லாந்தின் பாக்சின்ஸ்கி 5-7, 0-6 என்ற நேர் செட்டில் செக்குடியரசின் பார்போரா ஸ்டைரிகோவாவிடம் ‘சரண்’ அடைந்தார். மற்றபடி ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், சபினே லிசிக்கி, ஸ்பெயினின் கார்பின் முகுருஜா, ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசுர், இத்தாலியின் சாரா எர்ரானி, பிளவியா பென்னட்டா ரஷியாவின் எலினா வெஸ்னினா ஆகிய முன்னணி வீராங்கனைகள் முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015

Post by சிவா on Sat Sep 05, 2015 12:38 am

நடால், செரீனா 3–வது சுற்றுக்கு தகுதி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கணையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2–வது சுற்றில் நெதர்லாந்தை சேர்ந்த கிசி பெர்ட்டன்சை சந்தித்தார்.

இதில் செரீனா 7–6 (7–5), 6–3 என்ற நேர்செட் கணக்கில் வென்று 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

15–ம் நிலை வீராங்கணையான ரட்வன்ஸ்கா (போலந்து) 6–3, 6–2 என்ற கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த மக்டாவை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் வீனஸ் வில்லியம்ஸ், மேடிசன், பெதானி (அமெரிக்கா) ஆகியோர் வென்று 3–வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

8–ம் நிலை வீரரும், 2 முறை சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 2–வது சுற்றில் அர்ஜென்டினாவை சேர்ந்த டியோகோவை எதிர்கொண்டார். இதில் நடால் 7–6 (7–5), 6–3, 7–5 என்ற கணக்கில் வென்றார்.

நடப்பு சாம்பியனும், 9–ம் நிலை வீரருமான சிலிச் (குரோஷியா) 6–2, 6–3, 7–5 என்ற கணக்கில் இவான்ஜனியை வீழ்த்தினார்.

உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் 2–வது சுற்றில் ஆஸ்திரியாவை சேர்ந்த ஆண்டிரியாசை சந்தித்தார். இதில் ஜோகோவிச் 6–4, 6–1, 6–2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார்.

மற்ற ஆட்டங்களில் 7–ம் நிலை வீரர் டேவிட் பெரர்– (ஸ்பெயின்) 10–ம் நிலை வீரர் ரோனிக் (கனடா), சோங்கா (பிரான்ஸ்), டேவிட் கோபின் (பெல்ஜியம்) ஆகியோர் வென்று 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்– மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

இதேபோல ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா– புனோரின் (ரூமேனியா) ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015

Post by சிவா on Sat Sep 05, 2015 12:39 am

பெடரர், குவிட்டோவா 3–வது சுற்றுக்கு தகுதி

கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. 4–ம் நாளான நேற்று 2–வது சுற்று ஆட்டங்கள் நடந்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) பெல்ஜியம் வீரர் டார்சிசை எதிர்கொண்டார்.

இதில் ரோஜர் பெடரர் 6–1, 6–2, 6–1 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இங்கிலாந்தின் ஆண்டிமுர்ரே 2–வது சுற்றில் போராடி வென்றார். பிரான்ஸ் வீரர் மார்னேரிவுக்கு எதிரான போட்டியில் முதல் 2 செட்டை இழந்த ஆண்டி முர்ரே சுதாரித்து கொண்டு அடுத்த 3 செட்டை கைப்பற்றி வென்றார். சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா 7–6 (7–2), 7–6 (7–4), 7–6 (8–6) என்ற செட் கணக்கில் தென்கோரியா வீரர் சூங்கை வீழ்த்தி 3–வது சுற்றுக்கு முன்னேறினார்.

தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு) 7–6 (7–2), 6–1, 6–3 என்ற செட் கணக்கில் ரஷியா வீரர் யூசோனய்வை வீழ்த்தினார்.

மற்ற ஆட்டங்களில் டோமிக் (ஆஸ்திரேலியா), யங் (அமெரிக்கா), பெல்லுச்சி (பிரேசில்) ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), கேஸ்யூட் (பிரான்ஸ்) ஆகியோர் 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் 5–ம் நிலை வீராங்கணையான குவிட்டோவா (செக் குடியரசு) அமெரிக்க வீராங்கனை கிய்சுடன் மோதினார். இதில் 6–3, 6–4 என்ற நேர்செட் கணக்கில் வென்று 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ரூமேனியாவின் ஹலப் 6–3, 6–3 என்ற நேர்செட் கணக்கில் உக்ரைனின் போன்டேரன்கோவை வீழ்த்தினார். பெலராஸ் வீராங்கணை அசெரன்கா 7–5, 6–4 என்ற செட் கணக்கில் விக்மேயரை (பெல்ஜியம்) வீழ்த்தி 3–வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் பொன்னாட் (இத்தாலி), கெர்பர் (ஜெர்மனி), சமந்தா (ஆஸ்திரேலியா), இரானி (இத்தாலி), லிசிக்கி (ஜெர்மனி), ரோஜர்ஸ் (அமெரிக்கா), பெட்கோவிக் (ஜெர்மனி) ஆகியோர் வென்று 3–வது சுற்றுக்கு முன்னேறினர்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015

Post by சிவா on Sat Sep 05, 2015 12:39 am

டென்னிஸ் வீரர்களை வாட்டி வதைக்கும் கடும் வெயில்: அமெரிக்க ஓபனில் இதுவரை 14 பேர் ஓய்வு

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான அமெரிக்க ஒபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது, அமெரிக்காவில் 30 டிகிரிக்கும் அதிகமாக வெயில் வாட்டி வதைப்பதால், டென்னிஸ் விளையாடும் வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அனல் பறக்கும் ஆடுகளத்தில் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியாமல் போட்டியில் சுருண்டு விழுவதும், பாதியிலேயே போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதும் தொடர்கிறது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில், 28ம் தரநிலையில் இருக்கும் அமெரிக்க வீரர் ஜேக் சோக் (வயது 22), பெல்ஜியம் வீரர் ரூபன் பெமில்மேன்சை எதிர்த்து விளையாடினார். முதல் இரண்டு செட்களை 6-4, 6-4 என கைப்பற்றிய சோக், மூன்றாவது செட்டை 3-6 என இழந்தார்.

4-வது செட் ஆட்டத்தில் சோக் 1-2 என பின்தங்கிய நிலையில், ஆடிக்கொண்டிருந்தபோது தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் திடீரென மைதானத்திலேயே நிலைதடுமாறி விழுந்தார். கடும் வெப்பமும் இருந்ததால் சோர்வுடன் காணப்பட்டார். உடனே, மருத்துவர்கள் ஐஸ் பேக் மற்றும் குளிர்ந்த துண்டுகளை பயன்படுத்தி அவருக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவரால் தொடர்ந்து எழுந்து நடக்க முடியாததால் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். எனவே, எதிர்த்து விளையாடிய வீரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அமெரிக்க ஓபன் போட்டியில் இருந்து விலகும் 11-வது வீரர் இவர் ஆவார்.

இவரைத் தொடர்ந்து, சில மணி நேரங்களில் உஸ்பெகிஸ்தான் வீரர் டேனிஸ் இஸ்டாமின் பாதியில் வெளியேறினார். இவர் 7-வது கோர்ட்டில் நடந்த போட்டியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமை எதிராக 6-4, 6-4, 1-0 என முன்னிலை பெற்றிருந்தபோது ஓய்வு பெற்றார்.

இதுதவிர மகளிர் பிரிவில் இரண்டு வீராங்கனைகள் முதல் சுற்றில் ஓய்வு பெற்றனர். இதன்மூலம், இந்த ஆண்டு அமெரிக்க ஓபனில் இதுவரை 14 பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015

Post by சிவா on Sat Sep 05, 2015 12:40 am

பயஸ், சானியா முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சானியா மிர்சா ஆகியோர் 2-ம் சுற்றுக்கு முன்னேறினர்.

இந்தியாவின் முன்னணி வீரரான லியாண்டர் பயஸ், இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் வெர்டாஸ்கோவுடன் இணைந்து களமிறங்கினார். இந்த ஜோடி, ஜெர்மனியின் புளோரியன் மேயர்-பிராங்ஸ் மோடர் ஜோடியை 6-2, 6-3 என்ற நேர்செட்களில் வென்றது. இந்த வெற்றியை பெறுவதற்கு பயஸ் ஜோடிக்கு 62 நிமிடங்களே தேவைப்பட்டது.

இரண்டாம் சுற்றில் அமெரிக்காவின் அதிவேக ஆட்டக்காரர்களான ஸ்டீவ் ஜான்சன்-சாம் கெர்ரி ஜோடியை எதிர்த்து பயஸ் ஜோடி விளையாட உள்ளது.

இதேபோல், மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், முதல் தரநிலை ஜோடியான சானியா-மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிஸ்) ஜோடி, அமெரிக்காவின் கெய்த்லின் கிறிஸ்டியன்-சப்ரினா சான்டமரியா ஜோடியை எதிர்கொண்டது. 56 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில், சானியா-ஹிங்கிஸ் ஜோடி 6-1, 6-2 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று 2ம் சுற்றுக்கு முன்னேறியது. இரண்டாம் சுற்றில் இந்த ஜோடி, டிமியா(சுவிஸ்)-சியா ஜங் (தைபே) ஜோடியை எதிர்கொள்கிறது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015

Post by சிவா on Sat Sep 05, 2015 11:16 pm

நடாலை நாக்அவுட் ஆக்கிய பேபியோ போக்னினி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியனான ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

அமெரிக்க ஓபனில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற நடால் (ஸ்பெயின்), ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தில் இத்தாலியின் பேபியோ போக்னினியை எதிர்கொண்டார். ஆரம்பத்தில் ஆக்ரோஷமாக ஆடிய நடால் அடுத்தடுத்து 2 செட்களை கைப்பற்றினார்.

அதன்பின்னர் போக்னினியின் வசம் ஆட்டம் சென்றது. நடாலின் சர்வீஸ்களை அபாரமாக எதிர்கொண்ட போக்னினி, கடுமையாகப் போராடி அடுத்த மூன்று செட்களையும் கைப்பற்றினார். இறுதியில், 3-6, 4-6, 6-4, 6-3, 6-4 என்ற கணக்கில் போக்னினி வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்க ஓபனில் நடால் விரைவில் வெளியேற்றப்பட்டுள்ளார். அத்துடன் 2004ம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டில்தான் எந்த கிராண்ட்ஸ்லாம் பட்டமும் பெறவில்லை. இதேபோல் இந்த ஆண்டில் மூன்று முறை நடாலை போக்னினி தோற்கடித்துள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், லோபஸ், டிசோங்கா, மலின் சிலிக் உள்ளிட்ட முன்னணி வீரர்களும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015

Post by சிவா on Wed Sep 09, 2015 2:00 am

கலப்பு இரட்டையர் அரையிறுதியில் போபண்ணா- பயஸ் ஜோடி பலப்பரீட்சை

அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் கலப்பு இரட்டையருக்கான ஒரு அரையிறுதியில் இந்தியாவின் பயஸ் ஜோடியும், போபண்ணா ஜோடியும் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

லியாண்டர் பயஸ் சுவிட்சர்லாந்தில் மார்ட்டினா ஹிங்கிஸ் உடன் சேர்ந்து கலப்பு இரட்டையரில் விளையாடி வருகிறார். அதேபோல் ரோகன் போபண்ணா சீன தைபேயின் யங்-ஜன் சான் உடன் சேர்ந்து விளையாடி வருகிறார்.

காலிறுதியில் பயஸ் ஜோடி ரோமானியாவின் சிமோனா ஹாலேப்- ஹொரியா தெகாயு ஜோடியை எதிர்கொள்ள இருந்தது. இந்த ஜோடி போட்டியில் இருந்த விலகியதால் பயஸ் ஜோடி வெற்றி பெற்றது.

போபண்ணா ஜோடி சூ-வெய் Hsieh (சீன தைபே - ஹென்றி கோன்டினேன் (பின்லாந்து) ஜோடியை எதிர்கொண்டது. போபண்ணா ஜோடி 7-6, 5-7, 13-11 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

அரையிறுதியில் இந்திய ஜோடிகள் மோதுவதால் ஏதாவது ஒரு ஜோடி இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015

Post by சிவா on Wed Sep 09, 2015 2:01 am

ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப் (ருமேனியா) 4–வது சுற்றில் லிசிகியை (ஜெர்மனி) சந்தித்தார். இதில் ஹெலப் 6–7 (6–8) 7–5, 6–2 என்ற கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

அவர் கால் இறுதியில் பெலாரசை சேர்ந்த அசரென்காவை எதிர் கொள்கிறார். 20–ம் நிலை வீராங்கனையான அசரென்கா 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் லெப்சென்சோவை (அமெரிக்கா) வீழ்த்தினார்.

5–ம் நிலை வீராங்கனை குவிட்டோவா (செக்குடியரசு) 7–5, 6–3 என்ற கணக்கில் இங்கிலாந்தை சேர்ந்த ஜோகன்னாவை வீழ்த்தினார். அவர் கால் இறுதியில் பெனட்டாவை (இத்தாலி) சந்திக்கிறார். பெனட்டா 4–வது சுற்றில் 6–4, 6–4 என்ற நேர் செட் கணக்கில் சமந்தா ஸ்டோசுரை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார்.

உலகின் 3–ம் நிலை வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 4–வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

அவர் 6–7 (5–7), 3–6 7–6 (7–2), 6–7 (0–7) என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 15–ம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனிடம் தோற்றார். ஏற்கனவே 3–வது சுற்றில் மற்றொரு முன்னணி வீரரான நடால் தோல்வி அடைந்து இருந்தார்.

ஆண்டர்சன் கால் இறுதியில் 5–ம் நிலை வீரரான வாவ்ரிங்காவை (சுவிட்சர்லாந்து) சந்திக்கிறார். அவர் 4–வது சுற்றில் 6–4, 1–6, 6–3, 6–4 என்ற கணக்கில் அமெரிக்காவை சேர்ந்த டேவிட்யங்கை தோற்கடித்தார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015

Post by சிவா on Wed Sep 09, 2015 2:13 am

சானியா ஜோடி முன்னேற்றம்

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்த ஜோடி தங்களின் 3-வது சுற்றில் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் மைக்கேலா கிராஜிசெக்-செக்.குடியரசின் பர்போரா ஸ்ட்ரைகோவா ஜோடியை தோற்கடித்தது.

சானியா ஜோடி தங்களின் காலிறுதியில் போட்டித் தரவரிசை யில் 9-வது இடத்தில் இருக்கும் சீன தைபேவின் யங் ஜான் சான்-ஹாவ் சிங் சான் ஜோடியை சந்திக்கிறது. சீன தைபே ஜோடி தங்களின் முந்தைய சுற்றில் 5-7, 6-1, 7-6 (4) என்ற செட் கணக்கில் ருமேனியாவின் ஐரினா-ரலுகா ஒலாரு ஜோடியை வீழ்த்தியது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015

Post by சிவா on Wed Sep 09, 2015 2:14 am

புச்சார்டு விலகல்

மற்றொரு 4-வது சுற்றில் இத் தாலியின் ராபர்ட்டா வின்ஸியை எதிர்த்து விளையாடவிருந்த கனடாவின் யூஜீனி புச்சார்டு ஓய்வறையில் வழுக்கி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து 4-வது சுற்றில் விளை யாடாமலேயே காலிறுதிக்கு முன்னேறினார் ராபர்ட்டா வின்ஸி.

ஒற்றையர் பிரிவு மட்டுமின்றி, இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில் இருந்தும் புச்சார்டு விலகிவிட்டதாக போட்டி இயக்குனர் டேவிட் பீரிவர் தெரிவித்துள்ளார்.

ராபர்ட்டா வின்ஸி தனது காலி றுதியில் பிரான்ஸின் கிறிஸ்டினா மேட்னோவிச்சை சந்திக்கிறார். மேட்னோவிச் தனது 4-வது சுற்றில் 7-6 (2), 4-6, 6-1 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரி சையில் 13-வது இடத்தில் இருந்த ரஷ்யாவின் எக்டெரினா மக ரோவாவை வீழ்த்தினார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015

Post by சிவா on Wed Sep 09, 2015 2:14 am

செரீனா-வீனஸ் மோதல்

இன்று நடைபெறும் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் அமெரிக் காவைச் சேர்ந்த செரீனா வில்லி யம்ஸ்-வீனஸ் வில்லியம்ஸ் சகோத ரிகள் மோதுகின்றனர். காலண்டர் கிராண்ட்ஸ்லாமை வெல்வதில் தீவிரமாக இருக்கும் செரீனா, தனது 4-வது சுற்றில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான மேடிசன் கீஸை தோற்கடித்தார்.

போட்டித் தரவரிசையில் 23-வது இடத்தில் இருக்கும் வீனஸ் வில்லியம்ஸ் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் சர்வதேச தரவரிசையில் 152-வது இடத்தில் இருந்த எஸ் தோனியாவின் அனெட் கொன்டா வெய்டை வீழ்த்தினார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015

Post by shobana sahas on Thu Sep 10, 2015 1:04 am

செரீனா வில்லியம்ஸ் வெற்றிபெற்றார் .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 856

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum