ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 SK

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 SK

உணவே உணர்வு !
 SK

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 krishnaamma

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

In need of Antivirus Software
 rtr_18

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

ஐ.பி.எல் -2018 !!
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கந்தர் அலங்காரம் 9 , 15 , 17

View previous topic View next topic Go down

கந்தர் அலங்காரம் 9 , 15 , 17

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Wed Sep 16, 2015 11:49 pm

avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: கந்தர் அலங்காரம் 9 , 15 , 17

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Wed Sep 23, 2015 3:33 am

தேனென்று பாகென்றுவமிக் கொணாமொழித் தெய்வ வள்ளி
  கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ
     வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
        தானன்று நானன் றசரீரி யன்று சரீரியன்றே.   ...      9இனிமையாக பேசுவது என்பது ஒரு கலையல்ல . ரெம்ப நேரம் நடிக்கமுடியாது . நிதானமும் கடவுளில் நிலைத்த மனதும் இல்லாத நபரால் இனிமையாக பேசவே முடியாது

முருகனுக்கு இரு மணைவிகள் என்றால் இருவரும் ஒருவர்க்கு ஒருவர் நேர் மாறானவர்கள் . ஒருவர் தாழ்ந்த குணாதிசியம் உள்ள வள்ளி குரத்தி அதாவது மனுஷி . மற்றவளோ இந்திரனின் மகளான தேவாணை அதாவது தேவலோகத்தை சேர்ந்தவள் என்பார்கள் அதாவது முருகன் பரலோகத்தில் ஒரு சம்மந்தமும் பூலோகத்தில் ஒரு சம்மந்தமும் செய்துகொண்டான் என்று மேலோட்டமாக விளக்கம் சொல்லிவிட்டார்கள்

ஆனால் முருகனின் வேலால் எழுதப்பட்ட நாவு உடைய அருணகிரியார் அவர்கள் இருவருமே பூலோகத்தை சேர்ந்த வள்ளிமார்களே என பல இடங்களில் பாடியுள்ளார்

திருப்புகழில் வள்ளிமார் இரு புடை சூழ வள்ளியூர் உறை பெருமாளே என உள்ளது

இருவருமே வள்ளிகள் தான் . ஆனால் அதில் வலப்புறம் இருப்பவள் தெய்வ வள்ளி . இடப்புறம் இருப்பவளோ தெய்வீகத்தன்மை அதிகம் இல்லாத வள்ளி

இது என்ன விளக்கம் ? பல பிறவிகளாக அக்கிரமம் அகம்பாவம் செய்துகொண்டிருக்கும் ஒரு நபர் ஏதாவது ஒரு காரணத்தால் கொஞ்சம் பக்திக்குள் வந்துவிட்டால் போதும் அல்லது யாராவது ஒரு குருவிடம் யோகம் தியானம் மூச்சு பயிற்சி குண்டலினி என்று கொஞ்சம் கற்றுக்கொண்டால் போதும் என்னவோ தேவலோகத்திலிருந்து நேராக வந்திருப்பதுபோல கொஞ்சம் அலட்டல் மனிதர்களுக்கு வருவது இயற்கை .

என் மதம்தான் தண்டி மற்றதெல்லாம் சண்டி என்று பிதற்றவும் அந்தக்கடவுளை வைதால் தங்கள் கடவுள் வந்து சொர்க்கம் கொடுத்துவிடும் என்றெல்லாம் ரெம்ப தெரிந்ததுபோல சண்டை சச்சரவும் செய்வார்கள்

வள்ளி என்றாலே கொஞ்சம் ரம்மியமானவள் அழகுள்ளவள் துடிப்பும் மிடுக்கும் உள்ளவளே . பக்திக்குள்ளான ஒரு ஆத்மா ஆன்மீக தேடலுள்ள ஆத்மா வள்ளியே . இறைவனைப்பொறுத்து உலகாயாத மனிதர்களை விட இவர்கள் வள்ளிகளே . ஆனால் இன்னும் நிறைய மனித குணங்கள் குற்றம் குறைகள் தெளிவும் பக்குவமும் அற்ற நிலையுள்ள வள்ளிக்குரத்திகளே.

அப்படி பல பிறவி ஆன்ம வாழ்வினால் ஒரு குறிப்பிட்ட பரிபக்குவம் அடைந்து விட்டாலோ அவர்கள் தெய்வ வள்ளியாகி விடுகிறார்கள்

இந்த வார்த்தை தேனா பாலா என்று கண்டுபிடிக்க இயலாத இனிமையான வார்த்தைகளை இயல்பாக கொண்ட தெய்வ வள்ளிகளைப்போன்ற  ஆத்மாக்களின் சற்குருவான முருகன் தனக்கு உபதேசித்த ஒரு விசயம் உண்டு அது என்ன தெரியுமா ?

நான் யார் என்பதை உணர்ந்து தெளிந்தால் அதுவே மெய்ஞானம் என்பார்கள்

ஆளாளுக்கு ஒரு விளக்கமும் தெளிவும் சொல்லி அதை கிளிப்பிள்ளை போல சொல்ல கற்றுக்கொண்டு தங்களை ஞானமார்க்கிகள் என்றும் சொல்லிக்கொள்வார்கள்

நான் தான் கடவுள் என்று சொல்வதற்கு பெயர் ஞானமாம்

ஆனால் அருணகிரியார் என்ன சொல்கிறார் ஞானசற்குரு முருகன் தனக்கு என்ன உபதேசித்தாரம்

நீ  யார் தெரியுமா ? நீ மண்ணா இல்லை நீ நீரா இல்லை நீ காற்றா இல்லை நீ நெருப்பா இல்லை ஆகாயமா அதுவும் இல்லை

எல்லாம் தானான கடவுளா அதுவும் இல்லை . ஆதியிலே வெளிப்பட்ட சத்தம் அசரீரியா என்றால் அதுவுமில்லை ஏனென்றால் அது சகலவற்றையும் தன்னுள் தாங்கும் பரமாத்மா

அப்ப யார்தான் நான் ?

நீ சரீரி .

என்ன முருகன் குழப்புகிறார் ?

நீ பஞ்சபூதமோ அதனால் ஆன உடல் அல்ல .

அல்லது காற்றைப்போன்ற உயிருமல்ல

அல்லது கடவுளா அதுவுமில்லை பரமாத்மாவா அதுவும் இல்லை

பிறகு யாராம் ?

தனித்துவமான ஜீவாத்மா . அதற்கென்று ஒரு சூக்கும சரீரம் இருக்கிறது

அது அழிவற்றது .

இந்த ஜீவாத்மா ஒருநாளும் கடவுளாக ஆகிவிட முடியாது . பரமாத்மாவாக இரண்டற கலந்து ஐக்கியமாகி விட முடியுமா அதுவும் முடியாது . பிறகு என்னவாக ஆக முடியுமாம் ?

சதா இறைவனை சரணாகதி அடைந்து அவருக்கு அடங்கிய கருவியாக மட்டும் இருக்கும் தேவதூதனாக மாறி பரலோகத்தில் நுழைய முடியும்

அதற்கு சுயத்தை விட்டு சும்மாயிருக்கும் மனநிலையை அடையவேண்டும் .

முழுசரணாகதி நிலை இறைவனுக்கு அடிமைத்தனம்

ஞானசற்குருவின் பாதம் படாமல் அல்லது அந்த பாதம் நம்மை அடிமைப்படுத்தினால் போதும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் அது வராது

அருணகிரியாரும் அதற்கு பெருமைப்படுகிறார்

தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
  பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
     மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
        சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே.   ...     15தாவி தாவி ஓடும் மயிலிலும் – அது மகிழ்ச்சியின் அடையாளம் . ஏன் அது மகிழ்ச்சியாக இருக்கிறதாம் அதன் மீது முருகனின் பாதம் படுகிறதாம்

தேவதூதர்கள் கீழே விழுந்துவிடாமல் தேவர்களாகவே இருக்கும் ரகசியம் என்னவாம் ? அவர்கள் தலையில் முருகனின் பாதம் படுகிறதாம்

மகாபலி சக்கரவர்த்தி பாவ கறை திரை கடந்த மகோன்னத ஆத்மா . பரசுராமாரால் சத்ரியர்களின் அகம்பாவம் அடக்கி ஒடுக்கப்பட்டது . அதன் பிறகு அவர் கடலிலிருந்து ஒரு புதிய புனித பூமியை உண்டாக்கி அதற்கு சத்வ குணமுள்ள ராஜாவை அமர்த்தினார் . அந்த பரம்பரையில் வந்தவர் மகாபலி . நீதிநெறி வழுவாமல் தான தர்மங்கள் செய்து வந்தார் . ஆனால் தன்னைப்போல தானதர்மம் யாரும் செய்ததில்லை செய்யமுடியாது என்றொரு கர்வம் இதயத்தின் ஆழத்தில் அவருக்கு இருந்ததாம் . அந்த கர்வத்தை அடக்க நாராயணன் வாமன அவதாரம் எடுத்து வந்து மூவடி யாசித்து பெற்றாராம் ஓரடியால் உலகம் முழுவதையும் அளந்து இரண்டாவது அடியாள் அண்டம் முழுவதையும் அளந்து விட்டாராம் . மூன்றாவது அடிக்கு எதுவுமில்லை . தன கர்வம் அழிந்தவனாக தன தலையில் மூன்றாவது அடி வைக்க வேண்டிக்கொண்டானாம்

இதுதான் தேவர்கள் தேவர்களாகவே இருக்கும் ரகசியம் . அவர்கள் எப்போதும் முழுசரணாகதி அடைந்து அடிமைகளாகவே இருப்பார்கள் தாங்களாக எதையும் செய்யாமல் சும்மாயிருந்து இறைவனின் ஏவலை மட்டுமே செய்பவர்கள்

யார் எங்களுக்கும் திறமை இருக்கிறது ; நாங்களும் எதையாது செய்வோம் என்பவர்களே அசுரர்களாக மாறியவர்கள்

வேதா கமசித்ர வேலா யுதன் வெட்சி பூத்ததண்டைப்
  பாதார விந்தம் அரணாக அல்லும் பகலுமில்லாச்
     சூதான தற்ற வெளிக்கே யொளித்துச்சும் மாவிருக்கப்
        போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே.   ...     17      

வேதங்கள் ஆகமங்கள் அனைத்தையும் தன் அழகிய வடிவமாக வைத்திருக்கும் அந்த வேலாயுதன் அசுர இயல்பை அஹம்பாவத்தை கர்வத்தை சுயத்தை அழிப்பதற்கென்றே வீரத்தின் அடையாளமாக வெட்சி மாலை அணிந்து தயாராக உள்ள கால்களை வைத்துள்ளானாம் . அந்த பாதாரவிந்தத்தை இரவும் பகலும் எண்ணாத ஏதொன்றும் சூதாகவே முடியும்

இந்த சூது சரணாகதி தத்துவத்தை உபதேசிக்காது . பிடி சட்டிபிகேட் நீ தான் கடவுள் நீ ஞானியாகி விட்டாய் குண்டலினியை ஏற்று இறக்கு ஜீவசமாதியடைந்து உலகத்தை நீதான் காக்கவேண்டும் என்று உபதேசித்துக்கொண்டுள்ளது

இந்த சூதை ஒரு ஆத்மா வென்றால் வெட்டவெளியான அருப இறைவனை உணர்ர்ந்துகொள்ளும் .

அவனுக்கே தன்னை ஒப்படைத்து சும்மாயிருக்க கற்றுக்கொள்ளமாட்டாயா என் மனமே

படைப்புகளாக வெளிப்பட்ட அனைத்தும் பரமாத்மா நாராயணன் என்றால் அதற்குள்ளேதான் நான்கு அதிதேவர்களும் அவர்களுக்கு கீழான தேவர்களும் அண்ட சராசரங்களும் மனிதர்களும் மற்ற படைப்புகளும் உள்ளன .

இவை அனைத்தும் அதற்கு வெளியே உள்ள வெட்டவெளியில் கால்வாசி கூட கிடையாதாம் . அப்படியானால் நாம் அறிந்துகொண்ட எந்த வெளிப்பாட்டிற்க்கும் அதிதேவர்களுக்கும் விட மிகமிக பெரியவர் இறைவன் . அறிந்துகொண்ட அனைத்தின் மூலமாக அறியாத அவரை வணங்க வேண்டும்

நான்கு அதிதேவர்கள் மூலமாக கடவுளே என வணங்குவதே சீலமானது

இந்த ரகசியம் பூத உடம்பை நான் என நம்பிக்கொண்டிருக்கும் உலகாயாத மனிதர்களுக்கு விளங்காது

யார் அருளுலக வாழ்வுக்குள் தொடர்புள்ளவனோ அவனுக்கு மட்டுமே விளங்கும் ரகசியமாகும்

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum