புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தானங்களில் சிறந்தது எது..? Poll_c10தானங்களில் சிறந்தது எது..? Poll_m10தானங்களில் சிறந்தது எது..? Poll_c10 
21 Posts - 64%
ayyasamy ram
தானங்களில் சிறந்தது எது..? Poll_c10தானங்களில் சிறந்தது எது..? Poll_m10தானங்களில் சிறந்தது எது..? Poll_c10 
10 Posts - 30%
Ammu Swarnalatha
தானங்களில் சிறந்தது எது..? Poll_c10தானங்களில் சிறந்தது எது..? Poll_m10தானங்களில் சிறந்தது எது..? Poll_c10 
1 Post - 3%
M. Priya
தானங்களில் சிறந்தது எது..? Poll_c10தானங்களில் சிறந்தது எது..? Poll_m10தானங்களில் சிறந்தது எது..? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தானங்களில் சிறந்தது எது..? Poll_c10தானங்களில் சிறந்தது எது..? Poll_m10தானங்களில் சிறந்தது எது..? Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
தானங்களில் சிறந்தது எது..? Poll_c10தானங்களில் சிறந்தது எது..? Poll_m10தானங்களில் சிறந்தது எது..? Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
தானங்களில் சிறந்தது எது..? Poll_c10தானங்களில் சிறந்தது எது..? Poll_m10தானங்களில் சிறந்தது எது..? Poll_c10 
4 Posts - 4%
Rutu
தானங்களில் சிறந்தது எது..? Poll_c10தானங்களில் சிறந்தது எது..? Poll_m10தானங்களில் சிறந்தது எது..? Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
தானங்களில் சிறந்தது எது..? Poll_c10தானங்களில் சிறந்தது எது..? Poll_m10தானங்களில் சிறந்தது எது..? Poll_c10 
2 Posts - 2%
prajai
தானங்களில் சிறந்தது எது..? Poll_c10தானங்களில் சிறந்தது எது..? Poll_m10தானங்களில் சிறந்தது எது..? Poll_c10 
2 Posts - 2%
Jenila
தானங்களில் சிறந்தது எது..? Poll_c10தானங்களில் சிறந்தது எது..? Poll_m10தானங்களில் சிறந்தது எது..? Poll_c10 
2 Posts - 2%
Baarushree
தானங்களில் சிறந்தது எது..? Poll_c10தானங்களில் சிறந்தது எது..? Poll_m10தானங்களில் சிறந்தது எது..? Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தானங்களில் சிறந்தது எது..? Poll_c10தானங்களில் சிறந்தது எது..? Poll_m10தானங்களில் சிறந்தது எது..? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தானங்களில் சிறந்தது எது..? Poll_c10தானங்களில் சிறந்தது எது..? Poll_m10தானங்களில் சிறந்தது எது..? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தானங்களில் சிறந்தது எது..?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 08, 2015 2:25 pm

பல வருடங்களுக்கு முன்பு வடநாட்டு யாத்திரையின் போது ராமகிருஷ்ணமிஷன் மருத்துவமனையில் துறவி ஒருவர் இருந்தார். மருத்துவராக விளங்கிய அவர், ஏழை எளிய மக்களின் நோய் தீர்த்து வந்தார். அவருக்கு மிகுந்த வயதாகியிருந்தது.
சக்கர நாற்காலியில் வந்து இளம் மருத்துவர்களுக்கு அறிவுரையும் வழிகாட்டுதலும் வழங்கிக் கொண்டிருந்தார். அவரிடம், ‘தங்களது இந்த உத்தமமான சேவையை பல வருடங்களாகச் செய்து வருகிaர்கள் தற்போது ஓய்வு எடுத்துக் கொள்ளலாமே?’ என்றதற்கு அவர், ‘நான் இயற்கையிலிருந்து பெற்றுக் கொண்டே இருக்கிறேன், அதற்கு திரும்ப வழங்க வேண்டாமா?’ என்றார் முக மலர்ச்சியுடன்.

நம் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் இயற்கை வஞ்சனை இல்லாமல் வாரி வழங்குகிறது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், ஆறு, கடல், தாவரங்கள் அனைத்தும் நமக்கு வாழ்வு அளிக்கின்றன இயற்கை நம்மிடமிருந்து எதையும் கவர்ந்துகொள்ள நினைப்பதில்லை அபகரிக்கும் எண்ணம் மனிதனுக்கே தோன்றுகிறது.

அடுத்த வேளை உணவை சேமிக்கும் எண்ணம்கூட இல்லாத உயிர்களும் இருக்கின்றன. அடுத்த பத்து தலைமுறைகளுக்கும் சேர்த்து கொள்ளையடிக்கும் மனிதனும் இருக்கிறான்.

தனது சுயநலத்துக்காக வனங்களை அழித்து கான்கிரீட் காடுகளாக்குகிறான் மனிதன் அழகிய பூமியை, நீரை, காற்றை களங்கப்படுத்துவதில் மனிதனுக்குத்தான் எத்தனை முனைப்பு? இயற்கை மனிதனின் ஆசையை நிறைவேற்றி விடுகிறது; பேராசையைக் கண்டே சீறுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 08, 2015 2:26 pm

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை – என்கிறார் வள்ளுவர்

தன்னிடம் உள்ளவற்றை பிறருடன் பகிர்ந்துகொள்வது உயர்ந்த குணம. பிறருக்கு நாம் வழங்குவது அதிகமாகவும், பிறரிடமிருந்து நாம் பெறுவது குறைவாகவும் இருக்க வேண்டும்.

திருவள்ளுவர் ஈகை என்று தனியே அதிகாரமே வகுத்திருக்கிறார். வேதங்களும், சிரத்தையுடன் தானம் செய்ய வேண்டும். நிறைய கொடுக்க வேண்டும். அதிகம் கொடுப்பதற்கு இல்லையே என்ற வெட்கத்துடன், அக்கறையுடன் கொடுக்க வேண்டும் அறிவு பூர்வமாக கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றன.

கொடுப்பது என்பது தன்முனைப்பை அதிகப்படுத்திக் கொள்வதற்காகவோ, அழுது வடிகின்ற குழல் விளக்கில் பெயரை எழுதி வைத்து நான் கொடையாளி பார்தாயா? என்று மார்தட்டிக் கொள்வதற்காகவோ அல்ல!

பிறக்கும் போது உடையின்றி பிறந்தோம். இறந்த பிறகு எதையும் எடுத்துச் செல்ல முடியாது இடையில் வாழும் காலத்தில் என்னுடையது என்று இறுக்கிக் கொள்ள எதுவும் இல்லை என்ற அடிப்படை உண்மையை உள்ளத்தில் எழுதிக் கொள்ள வேண்டும்.

பலர், பொருளைக் கொடுத்துவிட்டு, உரிமையை மட்டும் தம்மிடமே வைத்துக்கொள்வர். நான் உனக்குக் கொடுத்த பொருளை நீ வேறு எவருக்கும் கொடுக்கக் கூடாது. அதனை இப்படித்தான் உபயோகிக்க வேண்டும். இந்த சிந்தனை, எதிர்பார்ப்பின் உச்ச கட்டம் நம் முன்னோர் இதுபோன்று தானம் செய்யச் சொல்லவில்லை.

ஹோமம் செய்கையில் இதம் ந மம இது என்னுடையது அல்ல என்று கூறி, அந்தப் பொருளில் உள்ள உரிமையையும் சேர்த்துக் கொடுத்துவிடவே கற்றுக் கொடுத்திருக்கின்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 08, 2015 2:29 pm

கொடுப்பதில் உள்ள சுகம் கொடுத்துப் பார்த்தவர்களுக்கே விளங்கும். தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறருக்கு கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் தீயயஅறிவுடையவர்கள், பிறருக்குக் கொடுப்பதில் உள்ள சுகத்தை அறியாரோ? என்று பொருள்படும்படி.

இருப்பவை அனைத்தும் இறைவனுடைய சொத்தாக இருக்க; நாம் செய்யும் தானங்கள் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் கதைதான் என்பதை உணர வேண்டும்.

கீதையில் கிருஷ்ணர் தானத்தை சாத்விக தானம், ராஜஸ தானம், தாமஸ தானம் என மூன்றாகப் பிரித்துக் கூறுகிறார். தகுந்த இடத்தில், தகுந்த வேளையில், எதிர்பார்ப்பின்றி, தகுதியுள்ளவருக்கு முறையாக அளித்தல் சாத்விக தானம் பிரதிபலனை எதிர்பார்த்து சிரமத்துடன் கொடுக்கப்படுவது ராஜஸ் தானம் தகுதியற்ற இடத்திலும், காலத்திலும், தகுதி அற்றவர்களுக்கு உபசரிப்பு இன்றியும், அவமரியாதையுடனும் கொடுக்கப்படுவது தாமஸ தானம்.

ஈயென இரத்தல் இழிந்தன்று ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று

என்கிறது பைந்தமிழ்ப் பாடல் ஒன்று கொடு. என்று ஒருவரிடம் கையேந்துவது இழிவு. இல்லை என்று தர மறுப்பது அதைவிட இழிவானது.

பெற்றுக்கொள்ளுங்கள் என்று கொடுப்பதே உயர்ந்தது. வேண்டாம் என மறுப்பது அதைவிட உயர்ந்தது.
-
தானங்களில் சிறந்தது எது..? UplwdyuLRe6SPZGJdR3p+vamanar
-
கொடுத்தே பழக்கப்பட்ட கடவுள், மகாபலியிடம் தானம் கேட்கச் செல்லும்போது பெறுபவரின் நிலையை எண்ணி வாமனராகச் சென்றார் என்பர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 08, 2015 2:30 pm

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம் உடைமை

வைத்திழக்கும் வன்க ணவர்? – என்கிறார் திருவள்ளுவர்.

வலக்கை கொடுப்பது இடக்கைக்குத் தெரியாமல் கொடுக்கும் தானமே சிறந்தது. தன் மனைவிக்கு இறுதிக் கடனைச் செய்ய விறகு கேட்டு வந்த அந்தணருக்கு, தன் அரண்மனையின் சந்தன மரத்தாலான தூணையே பெயர்த்துக் கொடுத்தான் கர்ணன்.

கொடுப்பதில் பணிவு தேவை ‘உன்னால் ஒருவருக்கும் உதவி செய்ய முடியாது மாறாக, சேவைதான் செய்ய முடியும்? என்றார் சுவாமி விவேகானந்தர்.

எங்கோ நின்றுகொண்டு, சில காசுகளை அள்ளி எறிவதாலேயே ஒருவன் கொடையாளி ஆகிவிட முடியாது. கொடுப்பதனால் புண்ணியம் பெறுகிறோம். நம் உள்ளம் தூய்மை பெறுகிறது கொடுப்பது நம்மை தெய்வநிலைக்கு கொண்டு செல்கிறது. எனவே, கொடுப்பதற்கு வாய்ப்பு தந்த இறைவனுக்கு நன்றி செலுத்தியபடியே, பணிவுடன் கொடுக்க வேண்டும்.

பெறுபவரது இருப்பிடம் தேடிச் சென்று தானாக வழங்குவது உயர்ந்தது. வீடு தேடி வந்தவர் குறிப்பறிந்து அவர் கேட்கும் முன்னர் வழங்குவது நடுத்தரமானது கேட்ட பிறகு கொடுப்பது கடைத்தரமானது என்பது நம் பண்பாட்டில் ஊறிய பெரியோர்களது வாக்கு.

தானத்தில் சிறந்தது அன்னதானம் வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும். இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்கிறார் பாரதியார். அன்னதானத்துக்கு பெயர்போன தேசம் இந்தியா. நூறு வருடங்களுக்கு முன் அங்கு ஹோட்டல்களே இல்லை. காரணம் உணவை விற்கும் பழக்கம் நம்மிடம் இல்லை அன்ன சத்திரங்களில் தங்கி, இளைப்பாறி நம் முன்னோர் விருந்தோம்பலில் நனைந்து இமயம் முதல் குமரி வரை நடந்து சென்ற தேசம் இது.

தாகத்துக்கு தண்ணீர் அளித்தல், விசிறி வழங்குதல், ஆடைகள் கொடுத்தல், கோயில் கட்டுதல், குளம் வெட்டுதல் என நம் முன்னோரது வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது தானம் எனும் உயர்ந்த பண்பு.

நாமும் இயன்றவரை பெரியோர் செய்து வந்த அறங்களை விடாமல் தொடர்வது அவசியம்.

அன்னதானத்தைக் காட்டிலும் மேலானது அறிவுதானம். அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்கிறார் பாரதியார்.

அன்னதானத்தையும் அறிவு தானத்தையும் மிஞ்சியது ஆன்ம தானம். மனிதனுக்கு தன்னைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் மெய்யறிவு அளித்து, அவன் பிறவிப் பெரும்பயனை அடைய உதவும் தானம் இது. இதன் மூலம் மனிதன் நிறைமனிதனாகிறான்.

ஆதரவற்றோர் இல்லங்களில் சென்று சேவை செய்வது அவர்களுடன் நேரத்தைக் செலவிடுவதுகூட ஓர் உயர்ந்த தானம் தான். நம்மைச் சுற்றியுள்ள பலருக்கு நம்முடைய உதவி தேவைப்படுகிறது. அது ஓர் ஏழைக் குழந்தைக்கு பென்சிலாகவும் இருக்கலாம். பள்ளிக் கடடத்துக்கான நிதியாகவும் இருக்கலாம்.

தானத்தின் சிறப்பை உணருங் கள், தகுந்தோர்க்கு ஈந்து உவகை அடையுங்கள் இதுவே வாழ் வாங்கு வாழும் வாழ்க்கை நெறி.

நன்றி: இணையம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 08, 2015 5:24 pm

நன்றி a ram .

தானங்களில் சிறந்தது அன்னதானம் என்பேன் .
அதற்கு அடுத்ததில் முக்கியம் என கருதுவது
சமாதானம் .
இருக்கும் நாட்கள் நாம் அறியோம்
எதற்கு வீண் மனப்பேதங்கள் ?

எக்குலத்தவர் ஆயினும் எம்மதத்தினர் ஆயினும்
எனக்கு யாவரும் சகோதர சகோதரிகளே .

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 08, 2015 7:00 pm

தானங்களில் சிறந்தது கல்விதானம் தான் !



அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கெழுத்தறி வித்தல்

-மகாகவி பாரதியார் .

--



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 08, 2015 7:09 pm

M.Jagadeesan wrote:தானங்களில் சிறந்தது கல்விதானம் தான் !



அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கெழுத்தறி வித்தல்

-மகாகவி பாரதியார் .

--
மேற்கோள் செய்த பதிவு: 1167369

சரி jagadeesan !

சமாதானம் .
இருக்கும் நாட்கள் நாம் அறியோம்
எதற்கு வீண் மனப்பேதங்கள் ?

பாரதியுடன் எதற்கு பேதம் கொள்வது !

ரமணியன் சிரி சிரி சிரி சிரி சிரி புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 08, 2015 8:16 pm

ஒரு சாண் வயிறே இல்லாட்டா
இந்த உலகத்தில் ஏது கலாட்டா
-னு
திரைப்பட பாடல் ஒன்று இருக்கு...!
-
அன்னதானம் & கல்விதானம்
இரண்டுமே முக்கியமானவைதான்...!!


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக