ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சித்தர் பாடல்கள்

View previous topic View next topic Go down

சித்தர் பாடல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Oct 08, 2015 9:55 pm

எண்சீர் விருத்தம்-சித்தர் பாடல்கள்

சிறந்தபரா பரமாகிய யெங்குந் தானாய்த்
தீர்க்கமுடன் ரவிமதியுஞ் சுடர்மூன்றாகிப்
பரந்தருளும் ஐம்பூத மாயை தோன்றிப்
பல்லாயிரங் கோடிஅண்டம் படைத்த போதம்
வரம்பெருகி அனந்தஅனந்தம் உயிரு மாகி
மதபேத மாகவுந்தான் வடிவைக் காட்டிச்
சரம்பெருக அண்டத்தி லெழுந்தே நின்ற
சச்சிதா னந்தம்அதைப் பணிகு வோமே.


-காக புசுண்டர் சித்தர்
பராபரமாக எங்கும் சிறந்து தானே எங்குமாய் நின்று,சூரிய சந்திர விண்மீன்கள் ஆகிய மூன்று ஒளியுமாகி, ஐம்பூதங்கள் கொண்ட மாயையும் ஆகி, பல்லாயிரம் கோடி உலகுகளைப் படைத்த அறிவுடைப் பொருளாகி, எண்ணற்ற உயிர்களுமாகி, மதங்களை நீக்கி, தன் உண்மை வடிவைப் புலப்படச் செய்து, எங்கும் சஞ்சரித்து நின்ற சத்சித் ஆனந்தம் ஆகிய கடவுளைப் பணிகுவோமே.

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7677
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

Re: சித்தர் பாடல்கள்

Post by விமந்தனி on Fri Oct 09, 2015 12:02 am

பாடலுக்கான விளக்கத்துடன் மிகவும் அருமையான பதிவு. தொடர்ந்து சித்தர் பாடல்களை அறியத்தாருங்கள்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சித்தர் பாடல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Oct 09, 2015 6:13 pm

மாளாத சக்தியடா மனித சக்தி
மலிவாகக் கிடைக்குதடா கணத்துக்கு உள்ளே
மீளாத மார்க்கமடா மின்னாத் தாளை
மேவியுனக்கு உட்காணும் வேதை மார்க்கம்
ஆளாக வென்றேனும் எப்போ தேனும்
அனைவர்க்கும் கிட்டுமடா ஞானப் பேறு
தூளாகக் காமத்தைத் துரத்தி விட்டே
துணையாகக் கம்பத்தே தூங்கு வாயே.


-காரைச் சித்தர்

மனித சக்தி மாளாத பெரிய சக்தி.ஒரு கணம் உணர்வால் எளிதில் அதை அடையலாம். மின்னல் போலும் பராசக்தி உள்ளேயே காணும் மார்க்கம் மீளாத்து ஆகும். ஆளாக வேண்டும் என்று எப்போதாவது நினைப்பவர்க்கு ஞானப் பேறு கிட்டும். காமத்தை தூளாகத் தூக்கி எறிந்து சுழு முனையாகிய தீப கம்பத்தை உணர்ந்து தியானம் செய்க.

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7677
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

Re: சித்தர் பாடல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Oct 10, 2015 10:26 am

மூலவட்ட மானகுரு பாதங் காப்பு
முத்திக்கு வித்தான முதலே காப்பு
மேலவட்ட மானபரப் பிரமங் காப்பு
வேதாந்தங் கடந்துநின்ற மெய்யே காப்பு
காலவட்டந் தங்கிமதி யமுதப் பாலைக்
கண்டுபசி யாற்றிமனக் கவடு நீக்கி
ஞாவட்டம் சித்தாடும் பெரியோர் பாதம்
நம்பினதால் உரோம னென்பேர் நாயன் தானே.


-உரோமரிஷி ஞானம்

மூலாதாரப் பகுதியும் குரு பாதமாகும் எனது நூலைக் காக்க. முத்திக்கு வித்தாகிய இறைவனாகிய முதல்வனும், தலைக்கு மேல் உள்ள பகுதியில் வெளிப்படும் பரப்பிரம்மமும்,(தலைக்கு மேல் சுடராக விளங்கும் பகுதியாம்) என் நூலைக் காக்க.
வேத முடிவுக்கு அப்பாலும் விளங்கும் மெய்ப்பொருள் காக்க. காலத்தைக் காட்டும் சூரிய சந்திரர் இயக்கத்துக்குட்பட்ட மதி மண்டலத்தில் ஊறும் அமுதமாகிய பாலை உண்டு, ஞானப் பசியாறி, மனக் கவலை நீங்கி, இவ்வுலகில் சித்தினால் பல சாதனை செய்யும் பெரியோர் பாதங்களை வணங்கியதாலும் நம்பியதாலும் உரோமன் என்று இந்த நாயேனை அழைப்பர். இது கடவுள் வாழ்த்து.நூல் நன்கு முடிவுறவும் தன் பெயர் கூறவும் பயன் கொண்டார்.
(வேடு-கவலை. ஞால வட்டம்-தலைக்கு மேல் உள்ள பகுதியில் வெளிப்படும் பரப்பிரம்மம்)


நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7677
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

Re: சித்தர் பாடல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 11, 2015 11:45 am

முன் ஞானம் நூறு

அகண்டபரி பூரணமாம் உமையாள் பாதம்
அப்புறத்தே நின்றதோர் ஐயர் பாதம்
புகன்றுநின்ற கணேசனொடு நாதாள் பாதம்
புகழ்பெரிய வாக்குடைய வாணி பாதம்
நாகன்றெனவே யெனையாண்ட குருவின் பாதம்
நிறைநிறையாய்ச் சொரூபத்தில் நின்றோர் பாதம்
முகன்றெனையீன் றெடுத்தசின் மயத்தின் பாதம்
மூவுலகும் மெச்சுதற்குச் காப்புத் தானே.


--கைலாயக் கம்பளிச் சட்டைமுனி நாயனார்

எங்கும் பரவிய உமாதேவியின் பாதம். அதை அடுத்து அப்படி நின்ற சிவனார் பாதம். கனேசர் நாதாள், கலைவாணி, குரு சொருபத்தில் நின்றோர், சின்மயம் ஆகியோர் பாதங்கள் என் நூலை மெச்சும்படி காப்பாராக.
(நாதாள்-நாதர்கள். பரிபூரணம்-எங்கும் நீக்கம்அற நிறைந்திருக்கும் பொருள்)

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7677
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

Re: சித்தர் பாடல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Oct 12, 2015 7:49 pm

எண்சீர் விருத்தம்

அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி!

அகண்டபரி பூரணத்தின் அருளே போற்றி!

மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி!

மதுரதமி ழோதும் அகத்தியரே போற்றி!

எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி!

இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி!

குண்டலிக்குள் அமர்ந்துநின்ற குகனே போற்றி!

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி!


--திருவள்ளுவ ஞானம்

அண்டங்கள்,அவற்றிலுள்ள உடல்கள் ஆகிய யாவற்றிலும் நிறைந்து நிற்கும் பிரமன் திருமால் போற்றி!
இவர்களை இப்படி நிற்கச் செய்த விரிந்த பிரபஞ்சம் முழுதும் நீக்கமற இருக்கும் பரிபூரணமான அருள் போற்றி!
பூமண்டலத்தைச் சூழ்ந்து ஒளி சிறக்க செய்யும் சூரிய சந்திரர் நட்சத்திர ஒளிகள் போற்றி! இனிய தமிழை ஓதும் அகத்தியன் போற்றி!
எட்டுத் திசைகளும் புகழும் சிறப்புக்குரிய என் குருவே போற்றி!
இடைகலையால் மாற்றப்படும் சுழுமுனை சென்று இணையும் கமலம்(ஆதார கமலம்) போற்றி!
குண்டலியின் உள்ளே அமர்ந்திருக்கும் குகனே போற்றி! குருமுனிவன் இரு பாதங்களையும் எப்போதும் போற்றி!

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7677
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

Re: சித்தர் பாடல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Oct 13, 2015 10:18 pm

எண்சீர் விருத்தம்

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்

சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு

புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள்

பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு

பத்தியினால் மனமடங்கி நிலையில்

பாழிலே மனத்தை விடார் பரமஞானி

சுத்தியே யலைவதில்லை சூட்சஞ் சூட்சம்

சுழியிலே நிலையறிந்தால் மோட்சந் தானே


--அகத்தியர்


என்றுமுள்ளது சத்தியம்.
எங்கும் நிறைந்த்து பராபரம்.
இதுவே தெய்வம்.
எல்லா உயிர்களிலும் சீவனாக அதுவே உள்ளது.
இதை அறிவால் புண்ணியர்கள் அறிவர்.
அப்படி அறிபவர் கோடியில் ஒருவரே இவ்வுலகில் உண்டு.
அப்படி அறிந்ததால் பக்தி மிகுந்து மனம் அடங்கி ஒரே நிலையில் நிற்பர்.
பாழானவற்றில் மனத்தை விட மாட்டார்கள்.
அவர்கள் பரம ஞானி ஆவர்.
எங்கும் சுற்றி இதை அலைந்து தேட வேண்டாம்.
சூக்குமமான ஒரு சுழியிலேயே இதன் நிலையை அறிந்தால் அவர்களுக்கு மோட்சமுண்டு.

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7677
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

Re: சித்தர் பாடல்கள்

Post by krishnaamma on Tue Oct 13, 2015 11:45 pm

நல்ல திரி ஐயா புன்னகை..மிக்க நன்றி ! ............... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: சித்தர் பாடல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Oct 14, 2015 8:34 am

@krishnaamma wrote:நல்ல திரி ஐயா புன்னகை..மிக்க நன்றி ! ............... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1168780
நன்றி வணக்கம் அம்மா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7677
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

Re: சித்தர் பாடல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Oct 14, 2015 6:29 pm

எண்சீர் விருத்தம்


அடியாகி அண்டரண்டத் தப்பால் ஆகி

அகாரமெனு மெழுத்ததுவே பாதமாகி

முடியாகி நடுவாகி மூலந் தன்னில்

முப்பொருளுந் தானாகி முதலுமாகிப்

படியாய்முப் பாழற்றுப் படிக்கு மப்பாற்

படிகடந்து பரஞ்சோதிப் பதியு மாகி

அடியாகு மூலமதே அகார மாகி

அவனவளாய் நின்றநிலை யறிவ தாமே.--திருமூல நாயனார் சித்தர்


அடியிலிருந்து அண்டங்களும் அதில் வாழ்வோரும் ஆகி, அகாரம் என்ற எழுத்தொலியுமாகி, அதுவே ஓம் என்பதில் முதல் (படி) பாதமாகியது. ஓம் என்பது அடி, நடு,முடி என்று மூலாதார முதல் செல்வதாகி, மும் மூர்த்திகளும் தானே ஆகி,அவர்களுக்கு முதலும் ஆகி, படிமுறையால் ஒளி உச்சியில் முப்பாழும் நீங்கி, அதற்கும் அப்பால் உள்ளவற்றைக் கடந்தால் பரஞ்சோதி ஆகிய பரம்பொருளைக் காணலாகும். அடியாகிய மூலாதாரமே அகரமாகக் கொண்டு உயர்ந்தால் அவனும், அவளும் ஓரணுவில் ஒன்றியிருப்பது அறியலாகும்.

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7677
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

Re: சித்தர் பாடல்கள்

Post by ayyasamy ram on Wed Oct 14, 2015 7:14 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36109
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: சித்தர் பாடல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Oct 14, 2015 7:40 pm

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7677
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

Re: சித்தர் பாடல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Oct 15, 2015 6:17 pmஇருள்வெளியாய் நின்றசிவ பாதம் போற்றி

எழுத்ததனின் விவரத்தை விரித்துச் சொல்வேன்

அருவுருவாய் நின்றதுவே எழுத்த தாகும்

ஆதியந்தம் அண்டபிண்ட மதுவே யாகும்

திருவுருவாய் ரவிமதியாய் நின்ற ரூபம்

சிவசக்தி திருமாலின் ரூப மாகும்

வருமுருவே சிவசக்தி வடிவ மாகும்

வந்ததிலும் போனதிலும் மனத்தை வையே.--வால்மீகி சூத்திரம்

இருளாகவும், வெட்டவெளியாகவும் இருப்பது சிவமேயாகும்.அவரின் பாதம்   போற்றுகிறேன்.
எழுத்துக்களை விவரமாக விரித்துச் சொல்கிறேன். கேள்.
அருவுருவமாகவும் நின்ற நாதமே எழுத்தானது.
ஆதியந்தம் என்பனவும், அண்டங்களே உடலாகப்(பிண்டமாக) உள்ளன என்பதும் சரியேயாம்.
அழகிய உருவமாய், சூரிய சந்திர வடிவமாக இருப்பதும் சிவன், சத்தி, திருமால் ஆகியோரின் வடிவமேயாகும்.
எல்லா உருவங்களுமாகச் சிவசக்தி வடிவமே வரும்.
ஆகவே வந்த்தும் மறைந்த்துமாகிய வடிவங்களில் மனத்தை வைப்பீராக.

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7677
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

Re: சித்தர் பாடல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Oct 16, 2015 6:40 pm

பூஜா விதி

ஆதியென்ற மணிவிளக்கை அறிய வேணும்

அகண்டபரி பூரணத்தைக் காண வேணும்

சோதியென்ற துய்யவெளி மார்க்க மெல்லாஞ்

சுகம்பெறவே மனோன்மனி யென்னாத்தாள் தன்னை

நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்

நிற்குணத்தி னின்றநிலை யாருங் காணார்

வேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று

விளங்குவதும் பூசையிது வீண் போகாதே.


--இராம தேவர்

எல்லாவற்றுக்கும் மூலமாகிய மணிவிளக்குப் போலும் உள் ஒளியை அறிய வேண்டும்.
அதனால் பிரபஞ்சம் முழுவதும் விரிந்த பரிபூரணத்தை காண வேண்டும்.
சோதி தோன்றுதலை உச்சியிலான வெளியின் வழியே இன்பம் தரும் மனோன்மனியாகும் என் தாய் தன்னை எங்கும் நியதியாய் நிர்வாகம் செய்யும் பரஞ்சோதியான தாயின் பாதம் இவற்றை அறிய வேண்டும்.
நிர்க்குணமாய் இருக்கும் அவள் நிலையை உடலிலும் உலகிலும் யாரும் அறிவது கடினம்.
வேதாந்தமாகிய யோக மார்க்கம் என்னும் வேதிக்கும் செயலால் இவற்றை விளங்கிக் கொள்ளும் பூசை இது வீண் போகாது.

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7677
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

Re: சித்தர் பாடல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Oct 17, 2015 6:14 pm

காப்பு எண்சீர் விருத்தம்

தெளிவுதனில் தெளிவுதரு மருளுங் காணும்

கெணத்திலே சிவமயமுஞ் சேரத் தோணும்

வழியதனில் நல்லவழி ஞானம் கூடும்

மகத்தான வேதாந்தம் சித்தி காட்டும்

ஒளிவுதனி லொளிவுதரு முறுதி சொல்வார்

உற்பனத்தி லுற்பனமா யுறுதி தோணும்

வெளியதனில் வெளியாகி நாதத் துள்ளே

விளங்கிநின்ற வாலைப்பெண் ணாதி காப்பே!

--கருவூரார்.

இவள் தெளிவார்க்குத் தெளிவும் பிறர்க்கு விளங்காமையும் தருவாள்;
ஒரு கணத்தில் சிவமயமாகச் சேர்ப்பாள்;
நல்ல வழியில் ஞானம் காட்டுவாள்;
மறை உடல் மறைவு தருவாள்;
உறுதியும், உதிப்பதில் உதிப்பதும் காட்டுவாள்;
வெளியோடு வெளியாக விரியும் நாதத்தில் ;
விரியும் விளக்கமாய் நிற்கும் வாலைப் பெண்ணாகிய இந்த ஆதி என்னைக் காக்கட்டும்.

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7677
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

Re: சித்தர் பாடல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 18, 2015 6:02 pm

நஞ்சுண்ண வேண்டாவே      அகப்பேய்

நாயகன் தாள்பெறவே!

நெஞ்சு மலையாதே          அகப்பேய்

நீயொன்றும் சொல்லாதே!


-- அகப்பேய் சித்தர்

அகப்பேயே! நஞ்சு உண்ணல் முதலிய வழிகளில் உயிர் விட்டால் கடவுள் தாள் பெறலாம் என்பது உண்மையன்று. நெஞ்சு மலைக்காமல் நான் சொல்வதைக் கேள். நீ வாயால் ஒன்றும் பேசாதிரு.

விளக்கம்; மவுனமே திருவடி பெற எளிய வழி என்பதாகும்.

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7677
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

Re: சித்தர் பாடல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Oct 19, 2015 7:07 pm

கலிவிருத்தம்

ஆதி யந்தமில் லாதவ னாதியைத்

தீது றும்பவந் தீப்படு பஞ்சுபோல்

மோ துறும்படி முப்பொறி யொத்துறக்

காத லாகக் கருத்திற் கருதுவாம்.தொடக்கமும் முடிவும் இல்லாத (ஆதி-பிரம்மம்) பிரம்மத்தைக் காதலோடு கருத்தூண்றி நினைத்தால், பஞ்சில் படும் நெருப்பைப் போல், தீயது தரும் நம் பிறவி மற்றும் மூன்று பொறிகள் வெளிப்படும்.

விளக்கம்= மூன்று பொறி-முத்தீயில் ஏற்படும் மூன்று பொறிகளாம். வேதத்தில் முழுமுதற் கடவுள் என்று பேசபடுவது பிரம்மம் ஆகும். எல்லாவற்றையும் தனியே சேர்ந்தாலும், எல்லாம் ஒன்றாக சேர்ந்தாலும் அவற்றை விடப் பெரியது என்பதே பிரம்ம்ம எனப்படும். இதையே ஆதி என்றும், ஆதியந்தம் இல்லாதது என்றும் கூறுவர்.

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7677
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

Re: சித்தர் பாடல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Oct 20, 2015 6:38 pm

பதின்மூன்று

சீர்கொண்ட அருமறையின் பொருளாய்நின்ற

தெட்சணா மூர்த்தியுடபாதங் காப்பு

பேர்கொண்ட சூத்திரமே பதின்மூன்றுக்குள்

பிரித்துவைப்பேன் பூவழலை பெருமையெல்லாம்

நீர்கொண்ட வூசரத்தின் மகிமைதன்னை

நிசமாகச் சொல்லாமல் மறந்துபோட்டார்

ஆர்கொண்ட வேணியணா ருமைக்குச்சொன்னார்

ஆத்தாளு மடியேனுக் கறைந்திட்டாளே.


--சூரியானந்தர் சூத்திரம்

வேதங்களின் பொருளாய் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் திருவடி காக்கட்டும். பதின்மூன்று சூத்திரங்களுக்குள் யோகம் எல்லாம் அடக்கிச் சொல்வேன். மற்றையோர் உண்மைகளைச் சொல்ல மறந்து விட்டனர்.சிவன் ஆகிய தட்சிணாமூர்த்தி உமைக்குச் சொல்ல அவள் எனக்குச் சொன்னாள்.

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7677
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

Re: சித்தர் பாடல்கள்

Post by சசி on Tue Oct 20, 2015 8:36 pm

அருமையான பாடலும், விளக்கங்களும் நன்றி ஐயா
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: சித்தர் பாடல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Oct 21, 2015 6:45 pm

கடவுள் வாழ்த்து.


ஆனஅஞ்சு எழுத்துளே அண்டமும் அகண்டமும்

ஆனஅஞ்சு எழுத்துளே ஆதியான மூவரும்

ஆனஅஞ்சு எழுத்துளே அகாரமும் மகாரமும்

ஆனஅஞ்சு எழுத்துளே அடங்கலாவது உற்றதே.


--சிவ வாக்கியர்

திருஐந்து எழுத்து எனப்படும் ‘நமசிவாய’ அல்லது ‘சிவாயநம’ என்னும் சைவ மந்திரத்தை இதில் விளக்குகிறார்.
அண்டமாகிய இந்த உலகம், அண்டமாகிய இந்தப் பிரபஞ்சம் ஆகிய இரண்டும் ஐந்தெழுத்துகளின் உள்ளே அடங்கியன ஆகும்.
எல்லாவற்றுக்கும் ஆதியாகிய பிரமன், திருமால்,உருத்திரன் ஆகிய மூவரும் இந்நமந்திரத்தில் அடங்கியுள்ளனர்.
அ+உ+ம் என்னும் ஓங்காரத்தின் விரிவும் பயனும் இந்த மந்திரத்தில் அடங்கியுள்ளன.
ஐந்தெழுத்தில் எல்லாம் அடங்கியுள்ளன என்க.

விளக்கம்: ஓம் என்பதை முதல் எழுத்தாலும் கடைசி எழுத்தாலும் மூன்றாம் அடியில் கூறினார். தோற்றம், முடிவு ஆகிய யாவும் என்பதை இது குறித்ததால் எல்லாம் என்பது பெறப்பட்டது..
திருமந்திரத்தில் ஓங்காரத்திலும் ஐந்தெழுத்திலும் எல்லாம் அடக்கம் என்ற கருத்தை இப்பாடல் தழுவியுள்ளது.
சிவன் எல்லாம் அறிந்தவர், எல்லாம் செய்தவர், இன்னும் செய்பவர் ஆகையால் அவரைக் குறிக்கும் ஐந்தெழுத்திலும் பூமியிலும் யாவும் அடக்கம் என்றார்.


நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7677
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

Re: சித்தர் பாடல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Oct 22, 2015 6:27 pm

காக புசுண்டர்

ஓமென்ற சுழுமுனையடா அண்ட வுச்சி

ஓம்முடிந்த பட்டணத்துக்கு அப்பாற் சென்று

நாமென்று சொல்லற்று யோக ஞானம்

நாட்டுகிறேன் அஞ்சனமுந் திலதப் போக்கும்

வாமென்ற வைத்தியமும் அட்ட கர்மம்

வாதமென்ற வித்தையெல்லாந் தெளிவ தாகக்

காமென்ற பீடமதிற் கண்டு தேறிக்

காட்டுகிறேன் மெய்ஞ்ஞானக் கருவைப்  பாரே.ஓம் என்ற மந்திர ஒலியுடன் சுழுமுனை நாடியில் யோக முயற்சியை ஏற்றினால் அது உச்சி தலை வரை (அண்ட உச்சி) தானே போகும். அங்குள்ள சகஸ்ராரமாகிய இடம் கடந்து (பட்டணம்) அப்பாலும் போய் , நாம் என்ற உணர்வு நீங்கி யோக ஞானத்தை நாட்டுகிறேன். மை தயார் செய்தல், எண்ணெய் விடல், பிற மருத்துவம், எண்வகை மந்திர செய்கை, இரசவாதமாகிய திறமை எல்லாம் காம் என்று பீஜத்தால் கண்டு தெளிந்து மெய்ஞ்ஞானமாகிய அடிப்படையைக் காட்டுகிறேன் பார்.
(மையால் பலவற்றை தெளிந்து காணலாம்; தைலம் போல் யாவும் தெளிவாதலாம்) தலை உச்சிக்குச் சென்று அதன் மேலும் பரவினால் பிற அண்டங்களையும் கடக்கும். ஆகையால் யோக முயற்சியை அண்ட உச்சி என்றனர்.


நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7677
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

Re: சித்தர் பாடல்கள்

Post by சசி on Thu Oct 22, 2015 8:02 pm


அருமையான பாடல் ஐயா நன்றி
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: சித்தர் பாடல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Oct 22, 2015 8:42 pm

Sasiiniyan Sasikaladevi wrote:
அருமையான பாடல் ஐயா நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1170864
நன்றி அன்பரே.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7677
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

Re: சித்தர் பாடல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Oct 23, 2015 7:09 pm

உரோமரிஷி ஞானம்

கண்ணாடி சிலமூடித் தனுப்பி னாலே

கருவதனை அறியாமல் மாண்டு போனான்

விண்ணாடிப் பாராத குற்றம் குற்றம்

வெறுமண்ணாய்ப் போச்சுஅவன் வித்தை யெல்லாம்

ஒண்ணான மவுனமென்றே யோகம் விட்டால்

ஒருபோதுஞ் சித்தியில்லை! வாதந் தானும்

பெண்ணார்தம் ஆசைதன்னை விட்டு வந்தால்

பேரின்ப முத்திவழி பேசு வேனே


கண்களை மூடியும்,மூடாதும் நுழையச் செய்யும் யோக முயற்சியால் பயனின்றிப் பலர் மாண்டு போயினர்.
விண்ணை (வெளியை) நாடிப் பார்க்காததும் அவர்கள் குற்றமாகும்.
இதனால் அவர்கள் வித்தைகள் வெறும் மண்ணாய்ப் போயின..
மவுனத்தை மட்டும் கைக் கொண்டு, யோகத்தை விட்டு விட்டால் ஒரு பொழுதும் வெற்றில்லை. பெண் ஆசை விட்டு வந்தால் தான் ரசவாதம் என்பது சித்தியாகும். மேலும் பேரின்ப முத்திக்கு வழியாகும்.

(வித்தை-அறிவு,திறம்,மந்திரம் முதலியவாம்)
(ரசவாதம்- தங்கம் செய்தல்)
(இரசவாதம்- தாழ்ந்த உலோகத்தை உயர்ந்த உலோகம் ஆக்குதல்)


நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7677
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

Re: சித்தர் பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum