ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 heezulia

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 T.N.Balasubramanian

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வடக்கா? வேண்டாம்

View previous topic View next topic Go down

வடக்கா? வேண்டாம்

Post by kavinele on Sun Nov 15, 2009 5:09 pmஇந்தியா
ஆன்மீகத்தில் மிகச் சிறந்த நாடு. நம் முன்னோர்கள் ஏற்படுத்திய பழக்க
வழக்கங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிக்கோள் உடையதாகும். அந்தப் பழக்கத்தை
கடைபிடிக்க ஒரு கதை சொல்லப்படும். இதன் நோக்கம் சிறு வயதிலிருந்தே அந்தப்
பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பதே. அந்தப் பழக்கத்தைக்
கடைபிடிப்பதால் நாம் அடையும் அனுகூலங்கள் பல. இவ்வகையான பழக்க
வழக்கங்களில் ஒன்று தலையை வட திசையில் வைத்துப் படுப்பது தவறு என்பது.
இதற்கு ஒரு கதையும் கூறுவர்.
1.
வட திசையில் தலை வைத்துப் படுக்கக் கூடாது. ஏன்? வடதிசையில் தலையை
வைத்துப் படுக்கப்போன பேரனைப் பார்த்து, "அப்படிப் படுக்காதே, அது தவறு.
மற்ற திசையில் தலை வைத்துப் படு" என்றாள் பாட்டி. "ஏன் படுத்தால்
என்னவாம்?" என்று கேட்டான் பேரன். "அப்படிப் படுத்தால் உன் தலை காணாமல்
போய்விடும்" என்று சொல்லி ஒரு கதையும் சொன்னாள்.
பார்வதி
தேவி ஒரு சமயம் வெளியே செல்ல வேண்டியிருந்தது. வீட்டைப் பார்த்துக்கொள்ள
யாரும் இல்லாததால் மண்ணால் ஒரு பொம்மை செய்து அதற்கு உயிர் கொடுத்துக்
காவலுக்கு வைத்தாள். யார் வந்தாலும் உள்ளே விடாதே என்று சொல்லிப் போனாள்.
சிறிது நேரத்தில் சிவன் வந்தார். அவர் வீட்டிற்குள் செல்வதைக் காவல்
காத்திருந்த பையன் தடுத்தான். சிவன் என்ன கூறியும் உள்ளே செல்ல விடவில்லை.
கோபம் கொண்ட சிவபெருமான் அந்தப் பையன் தலையை வெட்டி விட்டு வீட்டுக்குள்
சென்று விட்டார். திரும்பி வந்த பார்வதி தேவி பையன் இறந்து கிடப்பதைப்
பார்த்து திடுக்கிட்டாள். சிவனை விசாரித்தபோது அவர் நடந்ததைச் சொன்னார்.
நான் உருவாக்கிய பையனை அழித்து விட்டீர்களே! அவனை உயிர்ப்பித்துக்
கொடுங்கள் என்று பிடிவாதம் செய்தாள். உடனே சிவன் பூத கணங்களைக் கூப்பிட்டு
எவனொருவன் வட திசையில் தலை வைத்துப் படுத்திருக்கிறானோ அவன் தலையைக்
கொய்து எடுத்து வாருங்கள் என்று பணித்தார். பூதகணங்கள் தேடி அலைந்ததில்
ஒரே ஒரு யானை அவ்விதம் படுத்திருப்பதைப் பார்த்து அதன் தலையை வெட்டி
கொண்டு வந்தனர். சிவன் அந்த யானைத் தலையைப் பையன் உடம்பில் பொருத்தி
அவனுக்கு உயிர் கொடுத்தார். அவர்தான் பிள்ளையார். ஆகையால் நீ வடதிசையில்
தலை வைத்துப் படுத்தால் தலைக்கு ஆபத்து என்று பாட்டி பேரனுக்குச் சொன்னாள்.
இதை
நாம் இப்பொழுது விஞ்ஞான பூர்வமாக ஆராய்வோம். நாம் வலு உள்ளவர்களாக
இருப்பதற்குத் தேவையான இரும்பு, கோபால்ட் மற்றும் நிக்கல் முதலியவை சிறிய
அளவில் நம்முடைய உடலில் உள்ளன. பூமியில் 0-40 பாகைக்கு உட்பட்ட இடங்களில்
பூமியின் காந்தப் புல கிடைத்தளக் கூறு கணிசமான அளவில் உள்ளது. அதன் அளவு
பூமத்திய ரேகையில் 0.38 ஆயர்ஸ்டெட் (Oersteds - C.G.S.Units) ஆகவும் 40
பாகையில் 0.31 ஆயர்ஸ்டெட் ஆகவும் உள்ளது. அதாவது ஒரு ஏலேடு காந்தமுனையை
(unit pole) இந்த 0-40 பாகைக்குள் வைத்தால் அதனுடைய தன்மைக்கு ஏற்ப
கவர்ச்சி அல்லது விலக்கு விசை 0.38 லிருந்து 0.31 டைன்ஸ் (dynes) வரை அந்த
இடத்தின் அட்சக்கோட்டைப் பொறுத்து இருக்கும். காந்தப் புலக் கோடுகளின்
விசை பூமியின் தெற்கு வடக்காகச் செல்லுகிறது. மனிதன் வடக்கு நோக்கித் தலை
வைத்துத் தூங்கும் போது இந்த விசைக்கோடுகள் மனிதனின் உடல் மூலமும்,
செரிப்ரம்(ceribrum) வழியாகவும் செல்கிறது. ஒவ்வொரு கணத்திலும் உடம்பில்
உள்ள இரும்பு, கோபால்ட், நிக்கல் இவை காந்தம் ஆக்கப்படுகி்றன (get
magnetised). சிறிது நேரத்தில் நம் உடலே சிறு சிறு காந்தங்கள் உள்ளதாக
ஆகிவிடுகிறது. இந்த சிறு காந்தங்கள் எல்லாம் சேர்ந்து காந்தத்
திருப்புத்திறன் 'எம். (of magnetic moment M) உடைய காந்தமாகிவிடுகிறது.
இதன் அளவு காந்த முனை வலிமையும் காந்தத்தின் நீளத்தின் பெருக்குத்தொகையும்
ஆகும் (is the resultant of pole strength multiplied by the length of
the magnet). இதனால் மனித உடலானது எம் எச் டைன்ஸ் (MH dynes) காந்த
விசைக்கு உட்படுகிறது. 'எச்' என்பது பூமியின் காந்தப் புலக் கிடைத்தளக்
கூறு. அதாவது காந்தப் புல செறிவு. (Horizontal component of earth's
magnetc field).
வட
திசையில் தலை வைத்துத் தூங்கும்போது அவன் காந்த விசைக்கோட்டுடன் 0 பாகை
ஏற்படுத்துகிறான். ஆகையால் விசையின் கூறு தேகத்தின் வழியே எம் எச் கோசைன்
0 ஆகும். கோசைன் 0 = 1 ஆகையால் முழுமையாக எம் எச் டைன்ஸ் விசை தேகத்தின்
செரிப்ரம் வழியாகச் செல்லும். அதாவது அவன் சேமித்து வைத்துள்ள
சக்தியிலிருந்து ஒவ்வொரு கணமும் காந்த விசையை எதிர்த்து, உடம்பைச்
சமனிலையில் வைக்க வேண்டி, எம் எச் டைன்ஸ் செலவழிக்க வேண்டியுள்ளது. அதாவது
ஒவ்வொரு முறையும் உடலின் சேமிப்பு சக்தியில் எம் எச் டைன்ஸ் இழக்க
வேண்டியுள்ளது. வடதிசையில் தலை வைத்துப் படுப்பதால் ஒரு பிரயோசனமும்
இல்லாமல் நமது சக்தி வீணாகிறது. தென் திசையில் தலை வைத்துப் படுக்கும்போது
உடலின் வழியாகச் செல்லும் விசையின் கூறு எம் எச் கோசைன் 180 ஆகும்.
இப்பொழுது இவன் இயங்கும் காந்த விசைக்கோட்டிற்கு எதிராகப்
படித்திருப்பதால் கோசைன் 180 = -1 ஆகும். அவன் ஒவ்வொரு கணமும் - எம் எச்
டைன்ஸ் இழக்கிறான். அதாவது எம் எச் டைன்ஸ் அவன் உடலில் கூடுகிறது. ஆகையால்
தெற்கில் தலை வைத்துப் படுப்பது அவனுக்கு சாதகமாகிறது.
கிழக்கு
மேற்காகப் படுக்கும் பொழுது இயங்கும் விசையின் கூறு எம் எச் கோசைன் 90
அல்லது எம் எச் கோசைன் 270 ஆகவும் ஆகிறது. இதன் அளவு சூன்யம் (0).
ஏனென்றால் கோசைன் 90 அல்லது கோசைன் 270 = 0 இதனால் மனிதனுடைய உடல் எந்த
ஒரு செயல்பாட்டிற்கும் உட்படுவதில்லை. உயர் அட்சக்கோட்டில் வாழும்
ஜனங்களின் மீது இந்த காந்த விசை பாதிப்பதில்லை. ஏனென்றால் அதன் அளவு மேலே
போகப்போகக் குறைந்துவிடுகிறது. அதன் அளவு U.K.வில் 0.18 சி.ஜி.எஸ். யூனிட்
ஆகவும் துருவங்களில் சூன்யமாகவும் ஆகிவிடுகிறது. இதிலிருந்து அதிகமான
(maximum) காந்த விசையால் பாதிக்கப்படுபவர்கள் இரண்டு ட்ராபிக்ஸ்
(Tropics)க்கு இடையில் வசிக்கும் ஜனங்கள்தான் என்று தெரிகிறது. இந்தியா
இந்த பாகத்தில் இருக்கும் ஒரு தேசமானதால், நம் முன்னோர்கள் மிகவும்
சரியான, கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டிய பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
அவர்கள் நோக்கம் உடலில் இருந்து எள்ளளவு சக்தியும் ஒரு பலனில்லாமல்
வீனாக்கப்படக்கூடாது என்பதே இந்த கோட்பாட்டிற்கு காரணம்.
படித்தவர்களுக்கு, அதுவும் விஞ்ஞானம் படித்தவர்களுக்குத்தான் மேற்சொன்ன
விளக்கம் புரியும். நம் முன்னோர்கள் படித்தவன், படிக்காதவன், எழுத்தறிவு
இல்லாதவன் என்று பாரபட்சம் பார்க்காமல் யாவரும் பயனடைய வேண்டிக் கதைகள்
மூலம் சில வழக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். நம் முன்னோர்கள் நோக்கம் மனிதன்
பலனடைய வேண்டும் என்பதே தவிர, அந்தத் தகவல் எந்த முறையில் சொல்லப்படுகிறது
என்பது அல்ல. இதிலிருந்து நம் முன்னோர்கள் எவ்வளவு விஞ்ஞான பூர்வமாக நல்
வாழ்விற்கான கோட்பாடுகளை ஏற்படுத்தி உள்ளனர் என்பது தெரிகிறது.
மேற்கூறிய
கதை போல்தான் எல்லாக் கதைகளுக்கும் ஓர் அறிவுபூர்வமான உள்ளர்த்தம் இருக்க
வேண்டும் என்று நாம் உணர வேண்டும். எல்லாவற்றிற்கும் நமக்கு விஞ்ஞான
பூர்வமான விளக்கம் தெரியாவிட்டாலும், அவற்றீன்படி நடக்க முடியாவிட்டாலும்,
அவை எல்லாம் நம் நன்மை கருதியே சொல்லப்பட்டன என்று அறிந்து உணர்ந்தால்,
அதுவே போதும்
avatar
kavinele
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 946
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: வடக்கா? வேண்டாம்

Post by ராஜா on Sun Nov 15, 2009 5:17 pm

மிக சிறந்த கட்டுரை , கவி வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்


இதை விஞ்ஞானம் பகுதிக்கு மாற்றி விடுகிறேன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30775
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வடக்கா? வேண்டாம்

Post by வித்யாசாகர் on Sun Nov 15, 2009 5:38 pm

நம் நிறைய பழக்கவழக்கங்களுக்கு நிறைய உன்னத அர்த்தங்கள் உண்டு தோழரே. சரியாக எடுத்து சொல்ல தான் உங்களை போன்றோர் சற்று குறைந்து விட்டனர். இடையே புகுத்திய சில தவறான மூட பழக்க வழக்கங்களும் சேர்ந்து கேளிக்கைக்கும் விமர்சனத்திற்கும் இடமளித்துவிட்டதென்பதே வருத்தமான விடயம்.

வீட்டு வாசலில் தெளிக்கும் சாணம் வரை நெற்றியில் வைக்கும் பொட்டிற்கும்; கை கால்களில் இடும் ஆபரணம் வரை சரியான நல்ல காரண விளக்கங்கள் உண்டு. அவைகளை அக்கால கட்டத்தில் ஏற்குமாறு சொல்ல பின்னிய கதைகள் மட்டுமே புனையப் பட்டவையாக இருக்கலாம், எனினும் கூறிய காரணங்கள் 'அர்த்தமும் அவசியமும்' நிறைந்தவை. மிக நல்ல பதிவென்று கருதுகிறோம் தோழரே.. மிக்க நன்றி.. தொடருங்கள்!
avatar
வித்யாசாகர்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1819
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

Re: வடக்கா? வேண்டாம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum