ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்

View previous topic View next topic Go down

கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்

Post by ayyasamy ram on Fri Nov 13, 2015 9:15 pm


-

ஜாம்பவான் என்றதும், ‘அவர் ராமாயண காலத்தில் ராமபிரானுக்கு
உதவிய, வானர அரசன் சுக்ரீவனின் அரசவையில் அமைச்சராக
இருந்தவர்’ என்று அனைவரும் சொல்லி விடுவார்கள். அவர் மிகுந்த
அனுபவம் வாய்ந்தவராகவும், அறிவுக்கூர்மையுடையவராகவும்
இருந்தார். அதனால்தான் அவரால் ராமபிரானுக்கே கூட சில
நேரங்களில் ஆலோசனைகளை வழங்க முடிந்தது.
-
இலங்கையில் சீதை இருப்பதாக தகவல் கிடைத்தது. கடலைத் தாண்டி
தான் இலங்கைக்கு செல்ல வேண்டும். ஆனால் கரையே கண்ணுக்கு
தெரியாத அந்த சமுத்திரத்தை பார்த்து வானர வீரர்கள் சோர்ந்து
போய் விட்டனர். ‘எப்படி இதனை தாண்டிச் செல்வது?’ என்று
அயர்ந்திருந்தவர்களிடம், ‘ஆஞ்சநேயனே சமுத்திரத்தை தாண்டும்
வலிமை பெற்றவன்’ என்று அனுமனுக்கு அவரது பலத்தின்
பெருமையை உணர்த்தி கடலைத் தாண்டச் செய்தவர் ஜாம்பவான்.
இவ்வாறு பிறரை உந்துதல்படுத்தி காரியங்களை வெற்றிபெறச்
செய்வதில் வல்லவராக இருந்தார்.
-
அது மட்டுமல்லாமல் அவர் உடல் வலிமையிலும் சிறப்பு மிக்கவராக
இருந்தார். ‘ஜாம்பவான்’ என்ற பெயரே அவரது வலிமையைப்
புலப்படுத்தும். ராவண யுத்தத்தின் போது, ராவணனின் மகன்
மேகநாதன் விடுத்த நாக பாணத்திற்கு அனைவரும் மூர்ச்சையுற்ற
நிலையில், அந்த பாணத்தால் பாதிக்கப்படாத ஒரே ஒருவர் ஜாம்பவான்
மட்டுமே. அவர் ஓங்கி ஒரு குத்து விட்டபோது மேகநாதன் மட்டுமல்ல,
ராவணன் கூட மூர்ச்சையாகி போனான்.
-
அப்படிப்பட்ட ஜாம்பவான் ராமாயண காலம் மட்டுமின்றி,
மகாபாரத காலத்திலும் கூட வாழ்ந்தார் என்பது பலர் அறியாத
விஷயமாக இருக்கலாம். அது என்ன கதை என்பதைப் பார்க்கலாம்.
-
மல்யுத்தத்தில் சிறந்தவர்

-------------------
-
ஜாம்பவான் மல்யுத்தம் செய்வதில் வல்லவர். யாருடனாவது நன்றாக
மல்யுத்தம் செய்ய வேண்டும் என்ற ஆவல் அவருக்கு உண்டு. ஆனால்
அவரை எதிர்த்து மல்யுத்தம் செய்யத்தான் யாரும் இல்லாமல் போய்
விட்டனர். அவரது ஆவலை பூர்த்தி செய்ய எண்ணினார் இறைவன்.
அதற்காக ஒரு யுகம் காத்திருக்க வேண்டி வந்தது ஜாம்பவானுக்கு.
-
ராமரின் பட்டாபிஷேகம் முடிந்து அனைவரும் அயோத்தியில் இருந்து
விடைபெற்று திரும்பிக் கொண்டிருந்தனர். ஜாம்பவான், ராமரை
பிரிய மனமின்றி கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தார். அவரது
எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட ராமபிரான், ‘ஜாம்பவானே!
நீ எங்கிருந்தாலும் உன்னுடைய நெஞ்சில் நான் இருப்பேன். அடுத்து
வரும் துவாபர யுகத்தில் நேருக்கு நேராக உனக்கு காட்சி தருவேன்’
என்று வாக்குறுதி அளித்தார்.
-
ஸ்யமந்தக மணி

-------------------
-
துவாபர யுகத்தில் யது குலத்தில் தோன்றியிருந்தார் கிருஷ்ண
பகவான். யாதவர்களில் சிறந்த ஸத்ராஜித் என்ற அரசன், சிறப்பான
வழிபாட்டின் மூலம் சூரியனை மகிழ்வித்து, அவரிடம் இருந்து
ஸ்யமந்தக மணி என்ற ஒப்பற்ற ரத்தினத்தை பெற்றான்.
அந்த ரத்தினமானது எந்த இடத்தில் இருக்கிறதோ, அந்த இடம்
செல்வச் செழிப்பாக இருக்கும். எனவே ஸத்ராஜித் ஆண்ட சிறு
நாடானது எந்த குறையும் இன்றி செழித்திருந்தது.
-
கண்ணபிரான் ஸத்ராஜித்தை சந்தித்து, ‘அரசே! உன்னிடம்
உள்ள ஸ்யமந்தக மணியை, நாட்டின் பெரும்பகுதியை ஆளும்
உக்ரசேன மகாராஜாவுக்கு தந்தால், அதன் மூலம் நாட்டில் உள்ள
மக்கள் அனைவரும் செழிப்புடன் வாழ்வார்கள்’ என்று கூறினார்.
ஆனால் ஆசையின் காரணமாக அதனை தானே வைத்துக்
கொண்டான் ஸத்ராஜித்.

வீண் பழிச்சொல்

---------------------
ஒரு நாள் ஸத்ராஜித்தின் சகோதரன் பிரசேனன், ஒளி பொருந்திய
ஸ்யமந்தக மணியை கழுத்தில் அணிந்து கொண்டு, காட்டிற்கு
வேட்டையாடச் சென்றான். அடர்ந்த வனத்தில் சிங்கத்தால்,
பிரசேனன் கொல்லப்பட்டான். அவன் அணிந்திருந்த மணியை,
சிங்கம் எடுத்துக் கொண்டு ஒரு குகைக்குள் நுழைந்தது. குகையில்
வசித்து வந்த ஜாம்பவான், சிங்கத்தை கொன்று அந்த மணியை,
தன் வளர்ப்பு மகள் ஜாம்பவிக்கு கொடுத்து விட்டார்.
-
வேட்டைக்கு சென்ற தம்பி திரும்பி வராததால் மிகவும்
வருத்தமுற்றான் ஸத்ராஜித். பல நாட்கள் ஆகியும் பிரசேனன்
வராததால், ஸ்யமந்தக மணிக்காக கண்ணன் அவனை
கொன்றிருப்பானோ? என்ற சந்தேகம் ஸத்ராஜித்துக்கு வந்தது.
இந்த அபாண்டமான பழியை பற்றி அறிந்த கண்ணபிரான்,
தன் மீது விழுந்த பழிச்சொல்லை நீக்க முடிவு செய்தார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்

Post by ayyasamy ram on Fri Nov 13, 2015 9:16 pm


-


ஜாம்பவானுடன் மோதல்

---------------------

பிரசேனன் சென்ற காட்டிற்கு புறப்பட்டுச் சென்றார் கிருஷ்ணர்.
அடர்ந்த வனத்தில் ஓரிடத்தில் பிரசேனன் இறந்து கிடந்தான்.
அவனை சிங்கம் தாக்கியிருப்பதை கிருஷ்ணர் கண்டுகொண்டார்.
பிரசேனனுக்கு அருகில் பதிந்திருந்த சிங்கத்தின் கால் தடத்தைப்
பற்றி சென்றபோது, அது ஒரு குகை வாசலில் கொண்டு போய்
விட்டது. குகைக்குள் நுழைந்தார் கிருஷ்ண பகவான்.
-
அங்கு கழுத்தில் ஸ்யமந்தக மணியை அணிந்தபடி இருந்த
ஜாம்பவியை பார்த்தார் கிருஷ்ணர். அன்னிய ஆடவன் ஒருவனைப்
பார்த்ததும் பயத்தில் கத்தினாள் ஜாம்பவி. மகளின் சத்தம் கேட்டு
அங்கு வந்த ஜாம்பவானிடம், ஸ்யமந்தக மணியை தரும்படி
கேட்டார் கிருஷ்ணர். ஜாம்பவான் மறுத்ததால் அவர்களுக்குள்
யுத்தம் தொடங்கியது.
-
மல்யுத்தம் புரிவதில் வல்லவரான ஜாம்பவான், மிகுந்த
கோபத்துடன் சண்டையிட்டார். கண்ணனுக்கும், ஜாம்பவானுக்கும்
இடையே தொடர்ச்சியாக 27 நாட்கள் யுத்தம் நடந்தது.
ஒருவருக்கு மற்றவர் சளைத்தவர் இல்லை என்பதைப் போல
இருவரும் மல்யுத்தம் புரிந்தனர்.
-
காட்சி கொடுத்த இறைவன்

------------------------

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தன் பலம் குறைந்து வருவதை,
உடல் சோர்வின் மூலமாக அறிந்து கொண்டார் ஜாம்பவான்.
‘சோர்வையே அறிந்திராத தனக்கு சோர்வு ஏற்படுவது விந்தையாக
உள்ளதே! தன்னுடன் போரிடும் இந்த வீரன் உண்மையில் மானிடனாக
இருக்க வாய்ப்பில்லை’ என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டார்.
-
அப்போது அவருக்கு தான் யார் என்பதை உணர்த்தும் வகையில்
ராமபிரானாக காட்சியளித்தார், கிருஷ்ண பகவான். ‘இறைவனை
எதிர்த்து போரிட்ட பாவியாகி விட்டேனே!’ என்று கதறியபடியே
கண்ணனின் காலடியில் விழுந்தார் ஜாம்பவான்.
-
‘ஜாம்பவானே! உனக்கு நிகராக இவ்வையகத்தில் மல்யுத்தம் புரிவோர்
எவருமில்லை. ஒருவருடனாவது நன்றாக யுத்தம் செய்ய வேண்டும் என்ற
உனது ஆவலை பூர்த்தி செய்யவே இது நிகழ்ந்தது’ என்றார் கிருஷ்ணர்.
-
பின்னர் ஜாம்பவானை தொட்டு தூக்கி, தான் விட்ட குத்துக்களால்
அடிபட்ட இடங்களை தடவிக் கொடுத்தார் கிருஷ்ண பகவான்.
இறைவனின் வாஞ்சையைக் கண்டு வாய் மொழி வராமல் ஆனந்தத்தில்
திளைத்துப் போனார் ஜாம்பவான். தன் மகள் ஜாம்பவியையும்,
ஸ்யமந்தக மணியையும், கண்ணனிடம் ஒப்படைத்து அக மகிழ்ந்தார்.
-

ஜாம்பவான் யார்?
--------------------

பிரம்மதேவரே, ஜாம்பவானாக அவதரித்தார். உலக சிருஷ்டி தொழிலை
செய்து வந்த காரணத்தால், பிரம்மதேவரால் வேறு எந்த காரியத்திலும்
ஈடுபட முடியவில்லை. குறிப்பாக இறை பணியை செய்வது, அதற்காக
முழு நேரத்தையும் செலவிடுவது என்பது இயலாமல் போயிற்று.
இதற்காக என்ன செய்யலாம்? என்று சிந்திக்க தொடங்கினார்.
உடனே அவர், கரடியின் வடிவம் கொண்டு ஜாம்பவான் என்ற பெயரில்
பூமியில் தோன்றினார். கடவுளின் பெயரையே ஜெபிப்பது, இறைவனையே
தியானிப்பது, அவனது லீலைகளையே நினைத்து உருகுவது என்று
எப்போதும் இறைவனின் நினைவிலேயே தன் வாழ்நாட்களை கழிக்கத்
தொடங்கினார்.
-
----------------------------------------------
தினத்தந்தி - ஆன்மிகம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்

Post by Dr.S.Soundarapandian on Fri Nov 13, 2015 10:55 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4297
மதிப்பீடுகள் : 2274

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Nov 14, 2015 9:29 am

அருமையான கிருஷ்ணர் பிரம்மாவாகிய ஜாம்பவான் கதை.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3981
மதிப்பீடுகள் : 1166

View user profile

Back to top Go down

Re: கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்

Post by naanaa1977 on Sat Nov 14, 2015 1:44 pm

avatar
naanaa1977
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்

Post by கார்த்திக் செயராம் on Sat Nov 14, 2015 1:57 pm

avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்

Post by K.Senthil kumar on Sat Nov 14, 2015 2:20 pm

avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 312

View user profile

Back to top Go down

Re: கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்

Post by Aathira on Sat Nov 14, 2015 2:43 pm

கட்டுரைகளைப் படிக்கும் அன்பர்கள் வெற்று குறியீடுகளை இட்டு கருத்து சொல்லாமல் ஏதேனும் எழுதலாமே. பதிவிட்டவர்க்கு மகிழ்வாக இருக்குமே.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்

Post by Aathira on Sat Nov 14, 2015 2:50 pm

// ராவணனின் மகன்
மேகநாதன் விடுத்த நாக பாணத்திற்கு அனைவரும் மூர்ச்சையுற்ற
நிலையில், அந்த பாணத்தால் பாதிக்கப்படாத ஒரே ஒருவர் ஜாம்பவான்
மட்டுமே. //

//பிரம்மதேவரே, ஜாம்பவானாக அவதரித்தார். உலக சிருஷ்டி தொழிலை
செய்து வந்த காரணத்தால், பிரம்மதேவரால் வேறு எந்த காரியத்திலும்
ஈடுபட முடியவில்லை. குறிப்பாக இறை பணியை செய்வது, அதற்காக
முழு நேரத்தையும் செலவிடுவது என்பது இயலாமல் போயிற்று.
இதற்காக என்ன செய்யலாம்? என்று சிந்திக்க தொடங்கினார்.
உடனே அவர், கரடியின் வடிவம் கொண்டு ஜாம்பவான் என்ற பெயரில்
பூமியில் தோன்றினார்.//

சின்ன வயசில் கேட்ட கதை. ஆனால் ஒன்றும் நினைவில் இல்லை.
ஜாம்பவானை நினைவூட்டிய ஜாம்பவானுக்கு நன்றி


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்

Post by K.Senthil kumar on Sat Nov 14, 2015 2:59 pm

கடையை கவனித்துக்கொண்டு விரிவான கருத்துசொல்ல முடியவில்லை அக்கா அதற்காகவே குறியீட்டை பயன்படுத்தினேன் இனிவரும் பதிவுகளில் தங்கள் ஆணைப்படியே நடந்துகொள்கிறேன்..
avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 312

View user profile

Back to top Go down

Re: கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்

Post by Aathira on Sat Nov 14, 2015 3:04 pm

@K.Senthil kumar wrote:கடையை கவனித்துக்கொண்டு விரிவான கருத்துசொல்ல முடியவில்லை அக்கா அதற்காகவே குறியீட்டை பயன்படுத்தினேன் இனிவரும் பதிவுகளில் தங்கள் ஆணைப்படியே நடந்துகொள்கிறேன்..
மேற்கோள் செய்த பதிவு: 1174727
இது தங்களுக்கு மட்டும் இல்லை செந்தில். வரிசையாக எல்லோரும் குறியீடுகளையே பயன் படுத்தியுள்ளனர். பதிவு செய்தவர் மனம் கொஞ்சம் மகிழட்டுமே நம் கருத்தால் என்பதால் சொன்னேன். அவ்வளவுதான். இது ஆணையெல்லாம் இல்லை செந்தில்


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்

Post by K.Senthil kumar on Sat Nov 14, 2015 3:15 pm

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி அக்கா
avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 312

View user profile

Back to top Go down

Re: கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்

Post by Hari Prasath on Sat Nov 14, 2015 4:15 pm

மிக அருமையான பதிவு ஐயா
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum