ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உபயோகமான வீட்டுக்குறிப்புகள்
 ayyasamy ram

ரசாயனம் பூச்சு நிறைவு: வள்ளுவர் சிலையை இன்று முதல் பார்வையிடலாம்
 ayyasamy ram

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ஜாஹீதாபானு

மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன்
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 Dr.S.Soundarapandian

போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 Dr.S.Soundarapandian

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

அவல் பக்கோடா!
 Dr.S.Soundarapandian

வாளிப்பான பெண்ணின் துருப்புச் சீட்டு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

அவள் என்னைக் கரங்களால் அணைத்தபோது! (அயர்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை!

View previous topic View next topic Go down

ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை!

Post by கார்த்திக் செயராம் on Thu Dec 03, 2015 4:58 pm

தன்னலமற்ற சென்னை:ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை!

 
தொடரும் அடை மழை, வீட்டை மூழ்கடித்திருக்கும் வெள்ளம், ’இன்னும் மழை பொழியும்’ என்ற  கலவர நிலவரம் என சென்னை ஊழிக்காலத்தை எதிர்கொண்டிருக்கிறது. வெள்ளத்தில் சிக்கியிருக்கும் ஒவ்வொருவருக்கும் அவசர கவனிப்பு தேவை என்பதால், எவருக்கு முதலில் உதவுவது, எவருக்குப் பின்னர் உதவுவது என்ற குழப்பமும் பதட்டமும் நிவாரணக் குழுவினரையே சோர்வடையச் செய்கிறது. வெள்ளம் புகுந்ததால் வீட்டை விட்டு வெளியேறிய பதட்டம், தண்ணீரில் வரும் பாம்பு உள்ளிட்ட உயிரினங்ள் அளிக்கும் பயம்.சாப்பாடு-தண்ணீர் இல்லை... இயற்கை உபாதைகள் கழிக்க முடியாத அவஸ்தை, ’ஏரி உடைந்துவிட்டது’ என்று வரும் மிரட்டல் வதந்திகள், பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி செயலிழந்த வேதனை, மின்வெட்டு, சார்ஜ் போட கூட வழியில்லாத நிலை. கிடைக்காதமொபைல் சிக்னல்கள் என எந்த தலைமுறை சென்னைவாசியும் சந்திக்காத இன்னல்களை இன்று சந்தித்து கொண்டிருக்கிறோம்.

தொழில்நுட்பம் இத்தனை முன்னேறியும் அதீத மழைப் பொழிவைக் கணிக்கவோ, வெள்ள சேத முன்னேற்பாடு நடவடிக்கைகளில் களமிறங்கவோ நம்மால் முடியவில்லை. ஆனால், எத்தனை இன்னல்கள் வந்தாலும் சென்னை மக்கள் அதிலிருந்து மீண்டு விடுவார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. அதுவரை நம்மாலான ஆதரவை அவர்களுக்கு வழங்க வேண்டியது அவசியம். ஆதரவு வழங்காவிட்டாலும் அவர்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தாமலேனும் இருக்கலாம். அது எப்படி?

* முதற்காரியமாக சென்னையில் வெள்ளத்தில் மூழ்கியிருப்பவர்களின் அலைபேசிக்கு தேவையில்லாமல் தொடர்பு  கொண்டு பதட்டம் விதைக்காதீர்கள். ‘என்னப்பா... டி.வில ஏரி உடைஞ்சிருச்சுனு சொல்றான். உன் வீட்டுக்குப் பின்னாடிதானே அது இருக்கு’ என்றெல்லாம் பீதி கிளப்பாதீர்கள். தகவல் தொடர்பு, மின்சாரம் என அனைத்தும் துண்டிக்கப்பட்டு அலைபேசி சார்ஜும் குறையும் சூழ்நிலையில் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருப்பவர்களை இது போன்ற யூக செய்திகளை  பரப்புவரை தவிர்க்கவும். 

* சென்னைவாசிகளின் வாட்ஸ்அப்களுக்கு தேவையில்லாத ஃபார்வர்ட் மெசேஜ், மழை மீம்ஸ், மொக்கை ஜோக்குகளை இரண்டொரு நாட்களுக்கு அனுப்பாதீர்கள். அத்யாவசிய தகவல்கள் வாட்ஸ்அப் மூலமே பரவும் இந்நேரத்தில், அப்படியான அநாவசிய தகவல்கள் அலைபேசி சார்ஜை குறைக்கும், டேட்டாவை காலி செய்யும். இந்த தருணத்தில் ஒவ்வொரு மெசேஜும் ஒவ்வொரு அழைப்புமே அத்தியாவசியம்!

* ‘இவர் வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவுகிறார். தொடர்பு கொள்ளவும்’ என்று வரும் வாட்ஸ்அப், குறுந்தகவல்களை அப்படியே பரப்பாதீர்கள். சம்மந்தப்பட்ட எண்ணுக்கு அழைத்து, அந்த தகவல் உண்மைதானா என்று பரிசோதித்துவிட்டு, பின்னர் ‘ஊர்ஜிதமான தகவல்’ என்ற தலைப்புடன் அதை அனுப்புங்கள். ஏனெனில், அப்படி குவியும் தகவல்களில் வதந்திகளே அதிகம். அவற்றில் சிலவற்றையேனும் உங்கள் பங்குக்கு குறைக்கலாம்.

*  ’சென்னையில் என் மகள், மகன் படிக்கிறார்/வேலை பார்க்கிறார். அவர்களுக்கு உதவச் செல்கிறேன்’ என்று உடனே கிளம்பி வருவதை முடிந்தவரை தவிர்க்கலாம். நீங்கள் சென்னைக்கு வருவதே சிரமம். ஒருவேளை வந்துவிட்டாலும், கோயம்பேடு/எக்மோர்/தாம்பரம்/சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னைக்குள் வருவது கடினமான காரியம். வழி தெரியாமல் வெள்ளத்தில் சிக்கி நீங்கள் திண்டாடினால், உங்களை மீட்பது அவர்களுக்குப் பெரும் சிரமமாகிவிடும். உங்கள் மகன்/மகளை சென்னையில் பாதுகாப்பான இடங்களில் அமைந்திருக்கும் உறவினர் வீடுகளில் சென்று தங்க சொல்லுங்கள். தேவையில்லாமல் நீங்கள் இங்கு வந்து அவர்களுக்கு மேலும் கஷ்டத்தை உருவாக்க வேண்டாம்.* அதே போல சென்னையில் இருப்பவர்களையும் உடனே கிளம்பி ஊருக்கு வரச் சொல்லாதீர்கள். செங்கல்பட்டுக்கு அந்தப் பக்கம் சாலை வசதி இல்லை. எக்மோரிலிருந்து கிளம்பும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. விமான சேவைகள் கூட செயலிழந்துள்ளன. அதனால் சென்னையிலிருந்து கார், பேருந்து, ரயில், விமானம் வழியாக எங்கும் நகர முடியாத நிலை உள்ளது.

* ஃபேஸ்புக்/ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில், மழையையும் அரசாங்கத்தையும் சபித்துக் கொண்டிருக்காதீர்கள்.வெறுப்பை விதைக்காதீர்கள். உணவு, இருப்பிட வசதிகளை அளிப்பவர்களைப் பற்றிய ஊர்ஜிதமான தகவல்கள் #VERIFIED  என்ற ஹேஷ்டேக்குடன் பகிரப்பட்டு வருகிறது. அதை முடிந்தவரை ஷேர்/ரீட்விட் செய்யுங்கள்.

* பொதுப்பணித்துறை, சுகாதாரத் துறை, வெள்ள நிவாரணக் குழு என அரசு இயந்திரத்தில் பணி புரிபவர்களாகவோ, அல்லது அதோடு தொடர்பில் இருப்பவர்களாகவோ இருந்தால், மீட்புப் பணி குறித்த ஊர்ஜிதமான தகவல்களைப் பகிரலாம். அல்லது உதவி தேவைப்படுபவர்கள் பற்றிய விவரங்களை சம்மந்தப்பட்ட துறையினரிடம் சேர்ப்பிக்கலாம்!* மிக முக்கியமாக ’மழை சென்னையை சுத்தம் செஞ்சுட்டுப் போகும்னு பார்த்தா, சுத்தமா  செஞ்சுட்டுதான் போகும் போல’ என்பது போன்ற மழை மீம்ஸ், ’ஏய் மழையே... ஏன் செய்கிறாய் இந்தப் பிழையை’ என்பது போன்ற மழை கவிதைகளை உருவாக்கிப் பரப்பாதீர்கள்.ஏனென்றால் மழையில்லாத வாழ்வை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

இத்தகைய இக்கட்டான சூழலிலும் சென்னைவாசிகள் தன்னலமற்று சேவையாற்றுவதை பார்க்க முடிகிறது.  நம்பிக்கையும் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தையும் கொண்ட மக்களை சென்னை பெற்றிருக்கிறது எனவே தேவையில்லாத வதந்திகளை பரப்பி அவர்களது தன்னம்பிக்கையை சீர் குலைக்க வேண்டாம்.

- இப்படிக்கு ஊழிகால சென்னைவாசி    

நன்றி விகடன்
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை!

Post by ayyasamy ram on Thu Dec 03, 2015 6:56 pm

இக்கட்டான சூழலிலும் சென்னைவாசிகள் தன்னலமற்று சேவையாற்றுவதை பார்க்க முடிகிறது..!
-
சூப்பருங்க
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32537
மதிப்பீடுகள் : 10814

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum