ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 ரா.ரமேஷ்குமார்

புதிய சமயங்கள்
 gayathri gopal

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 ayyasamy ram

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 பழ.முத்துராமலிங்கம்

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ayyasamy ram

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 ayyasamy ram

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 ayyasamy ram

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 ayyasamy ram

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மகா பெரியவா

View previous topic View next topic Go down

மகா பெரியவா

Post by ayyasamy ram on Sat Dec 05, 2015 2:05 pm


பாண்டவா வனவாசம் பண்ணிண்டு இருக்கறச்சே
ஒருசமயம் துர்வாச முனிவர் அவாளைப் பார்க்கப்
போனாராம்.

பசின்னு கேட்டுண்டு வந்த அந்தத் தபசிக்கு தர்றதுக்கு
ஒண்ணும் இல்லாம பாண்டவர்கள் தவிச்சதும்,
ஆபத்பாந்தவனா கிருஷ்ணர் வந்து பிரச்னையை தீர்த்து
வைச்சதும் அநேகமா எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.

பாஞ்சாலி அலம்பி வைச்ச அட்சய பாத்திரத்துல ஒட்டிண்டு
இருந்த ஒரே ஒரு பருக்கையைத்தான் கிருஷ்ணர் சாப்பிட்டார்.
ஆனா, அதுவே முனிருக்கும் அவரோட வந்த சீடர்களுக்கும்
வயிறு நிரம்ப வைச்சுடுத்து இதெல்லாம் உங்களுக்குத்
தெரிஞ்சது தானே?

அதேமாதிரி பசியோட இருக்கறவாளுக்கு சாப்பிட ஏதாவது
பண்ணணும்ங்கறதுக்காகவும், தன்னை தரிசனம்
பண்ணவர்றவாளோட அறியாமையைப்
போக்கணும்கறதுக்காகவும் பெரியவா செஞ்ச திட்டம் ஒண்ணோட
அனுபவத்தைத்தான் இப்போ சொல்லப்போறேன்.

தஞ்சாவூர் பக்கம் இருந்த பிரபலமான டாக்டர் ஒருவர்
காஞ்சிபுரத்துக்கு வர்ற சமயத்துல எல்லாம் மடத்துக்கும் வந்து
பெரியவாளை தரிசனம் பண்ணிட்டுப் போறதை வழக்கமா
வச்சுண்டு இருந்தார். அவர் வர்றச்சே எல்லாம் ரொம்ப வெலை
ஒசத்தியான ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை (அந்தக்காலத்துல
இதெல்லாம் பணக்காரா மட்டுமே சாப்பிடற பழங்களா இருந்தது)
வாங்கிண்டு வந்து கூடையோட பெரியவாகிட்டே சமர்ப்பிச்சுட்டுப்
போவார்.

ஒருசமயம் பரமாசார்யா, கும்பகோணத்துக்கு பக்கத்துல இருந்த
ஒரு கிராமத்துல முகாமிட்டிருந்ததை தெரிஞ்சுண்டு அங்கேயே
அவரை தரிசனம் பண்ண வந்தார் அந்த டாக்டர். வர்றச்சே வழக்கம்
போலவே பெரிய கூடையில் நிறைய பழங்களை எடுத்துண்டு
வந்தார்.

அவர் வந்த நேரம் மடத்துல கைங்கர்யம் பண்ற ஒருத்தர்,
முகாமோட வாசல்ல நின்னுண்டு இருந்தார். டாக்டர் பெரியவா
தரிசனத்துக்கு வழக்கமா வர்றவர்ங்கறதால அவரை அடையாளம்
தெரிஞ்சுண்டு, வாங்கோன்னு கூப்பிட்டார்.

கொஞ்ச நேரம் அவர்கிட்டே பேசிண்டு இருந்த டாக்டர்,
‘நான் வர்றச்சே எல்லாம் பெரியவாளுக்குன்னு ஆசையா பழங்களை
வாங்கிண்டு வர்றேன். ஆனா அதை மடத்துல இருக்கற
பெருச்சாளிகளும் சாப்பிடறதா தெரியறது. பெருச்சாளிகள் எல்லாம்
இந்தப் பழக்கூடைய நெருங்காத படிக்கு நீங்கதான் பத்திரமா
வைக்கணும். அதோட, இந்தப் பழங்கள் எல்லாத்தையும்
பெரியவாளுக்கே குடுக்கணும். இது என்னோட ஆசை!’ அப்படின்னு
அவர்கிட்டே சொல்லி, பழக்கூடையை அவர்கிட்டேயே ஒப்படைச்சார்.

மடத்துக்கு கைங்கர்யம் பண்றவருக்கு டாக்டர்கிட்டே என்ன
சொல்றதுன்னு தெரியலை. அதனால், ‘ஆகட்டும் பார்த்துக்கறேன்’னு
சொல்லிட்டு, பழக்கூடையை வாங்கி உள்ளே வைச்சுட்டார்.

உள்ளே வந்து பெரியவாளை தரிசனம் பண்ணினார் டாக்டர்.
மெல்லிசா ஒரு சிரிப்பை உதிர்த்த பரமாச்சார்யா, அவருக்கு
பிரசாதத்தை குடுத்தார். பவ்யமா அதை வாங்கிண்ட டாக்டர்,
‘பெரியவா, உத்தரவு தரணும். நான் புறப்படறேன்’ அப்படின்னார்.

‘என்ன அவசரம்? இன்னும் ஒரு ரெண்டு மூணு மணி நேரம் இருந்து
வந்த வேலையை முடிச்சுட்டுதான் போயேன்’ அப்படின்னார் ஆச்சார்யா.
டாக்டருக்கு ஒண்ணும் புரியலை. ‘வந்தது, பெரியவாளை தரிசனம்
பண்ணணும்னு, அந்த வேலை முடிஞ்சுடுத்து அப்புறம் வேற என்ன
வேலை இருக்கு?’ புரியலைன்னாலும் பரமாசார்யா சொன்னதை தட்ட
முடியாம, ‘சரி உங்க உத்தரவுப்படியே செய்யறேன்!’ என்று அந்தப்
பக்கமா உள்ளே போய் உட்கார்ந்துண்ட்டுட்டார்.

கிட்டத்தட்ட ரெண்டு மணிநேரம் ஆகியிருக்கும். தனக்குப் பக்கத்துல
நின்னுண்டு இருந்த ஒரு சீடன்கிட்டே, ‘நீ உள்ளே போய் அந்த டாக்டரை
அழைச்சுண்டு வா. அதோட, அவர் பழக்கூடை ஒண்ணைக் கொணடு
வந்து கொடுத்திருக்கார். அதை எடுத்துண்டு, அதை வாங்கி
வைச்சவரையும் கூட்டிண்டு வா!’ அப்படின்னார்.

எல்லாருக்கும் ஆச்சரியம். டாக்டர், பெரியவாளை தரிசனம்
பண்ணினப்போ பழக்கூடை பத்தி எதுவும் சொல்லலை. அவர் கொண்டு
வந்து குடுத்ததும், ஒருத்தர் அதை வாங்கிவைச்சதும் பெரியவாளுக்கு
எப்படித் தெரியும்னு எல்லாரும் யோசிச்சுண்டு இருக்கறச்சயே,
டாக்டர் அங்கே வந்து நின்னார்.

பின்னாலேயே பழக்கூடையை எடுத்துண்டு, அதை வாங்கிவைச்சவரும்
வந்து நின்னார்.

தனக்கு முன்னால அந்தப் பழக்கூடையை வைக்கச் சொன்ன பெரியவா,
டாக்டரை ஒரு நிமிஷம் உத்துப் பார்த்தார்.

‘எனக்கு என்ன வயசு ஆகறதுன்னு நோக்கு தெரியுமோ.. அறுபதைத்
தாண்டியாச்சு. பழம் ஒடம்புக்கு நல்லதா இருக்கலாம். ஆனா,
இத்தனையையும் நான் ஒருத்தனே சாப்பிட்டா அது எந்த மாதிரி
ஹானி பண்ணும்னு டாக்டரான நோக்கே தெரியுமோல்லியோ…
அப்படி இருக்கறச்சே ‘இதை எந்தப் பெருச்சளியும் தின்னுடாம
பார்த்துக்கணும்னு அவர்கிட்டே சொன்னியே அது நியாயமோ?

மடத்துல இருந்து இந்தப் பழத்தைத் திங்கறவா பெருச்சாளின்னா. எ
ல்லாரையுமு் விட நானில்லையோ பெரிய பெரிச்சாளி.’

சொன்ன மகாபெரியவா, கொஞ்சம் நிறுத்தினார். இதுக்குள்ளே
டாக்டருக்கு உடம்பெல்லாம் குப்னு வேர்த்து முகமெல்லாம்
வெளுத்துடுச்சு. தான் பேசினது தப்புன்னு புரிஞ்சுண்டதால அவர்
கை, காலெல்லாம் லேசா நடுங்கவும் ஆரம்பிச்சுது.

‘நீ ரொம்ப பதட்டப்படாதே… நான் உன்னை மட்டும் சொல்லலை.
இங்கே வர்றவா பலரும் உன்னை மாதிரிதான். அவா தர்ற
எல்லாத்தையும் நானே சாப்பிடணும்ங்கறதுதான் அவாளோட
அவா! ஆனா அது முடியுமோ?
மொதல்ல நான் ஒரு சன்யாசிங்கறதையே எல்லாரும் மறந்துடறா.
எனக்கு எதுக்கு இத்தனை பழமும் பொருளும்? இதெல்லாம்
அநாவசியமில்லையோ!

அப்புறம் ஏன் இதையெல்லாம் நான் வாங்கிக்கறதா பாவனை
பண்ணிக்கறேன்னா, இங்கே மடத்துல எத்தனையோ நல்ல
காரியங்கள் நடத்தப்படறது, அதுக்கெல்லாம் பொருள் வேறும்.
குழந்தைகளையும் பொண்டாட்டியையும் விட்டுட்டு, மடமே
கதின்னு வந்து எத்தனையோ பேர் இங்கேயே இருந்து கைங்கரியம்
செஞ்சுண்டிருக்கா. அவாளுக்கெல்லாம் சாப்பிடறதுக்காவது நான்
ஏதாவது பண்ணியாகணும். இந்த மடத்தைப் பராமரிக்க வேண்டியது
என்னோட பொறுப்பில்லையோ!

சன்யாசியான எனக்கு அதைச் செய்யறதுக்கு ஏது வருமானம்?
உங்கள மாதிரியானவா தர்றதுதானே? அதைவைச்சு தானே நான்
இவாளுக்கு ஏதாவது செய்யணும்? அப்புறம் இவா சாப்பிடக்
கூடாதுன்னு நினைச்சா அது எப்படி முடியும்?

நீங்க எல்லாரும் ஒரு விஷயத்தை நன்னா புரிஞ்சுக்கணும்.
நீங்க ஒரு பொருளை ஒருத்தருக்குக் குடுத்துட்டா, அதுக்கப்புறம்
அது அவாளோடதுன்னு ஆயிடும். அதுக்கு நீங்க பாத்யதை கொண்டாட
முடியாது. அதை அவர் என்ன பண்ணணும்கறதை அவரேதான்
தீர்மானிக்கணும். அப்படித்தான் செய்யணும்னு நீங்க கன்ட்ரோல்
பண்ண முடியாது.

அப்படித்தான் நீங்க எனக்காகத் தர்றதும், அதெல்லாம் மத்தவாளுக்கும்
பிரயோஜனப்படற மாதிரி செய்யறதுதான் சன்யாசியான என்னோட
கடமை. நீங்க ஆசைப்படற மாதிரி நானே எல்லாத்தையும்
அனுபவிக்கணும்கறது சாத்யப்படவே படாது!’

சொன்ன பெரியவா, டாக்டர் தந்திருந்த பழக்கூடையில இருந்து
ஒவ்வொரு பழமா எடுத்து தான் உட்கார்ந்துண்டு இருந்த இடத்துக்குப்
பக்கத்துல இருந்த ஜன்னல் வழியா வெளியில வீச ஆரம்பிச்சுட்டார்.

பதறிப்போய்ட்டார் டாக்டர். பெரியவா ஏத்துக்காதது மட்டுமல்லாமல்,
பழத்தை தூக்கி வேற எறியராறே… பெரியவாளே எல்லாத்தையும்
சாப்பிடணும்னு ஆசைப்பட்டது அவ்வளவு பெரியதப்பா? அப்படின்னு
மனசுக்குள்ளே நினைச்சு திகைச்சு நின்னவர், மனசுக்குள்ளே ஏதோ
தோணினவரா, வேகமா போய், அந்த ஜன்னல் பக்கமா வெளியில
எட்டிப் பார்த்தார்.

அவர் முகம் ஜன்னல் பக்கமா வெளியில தெரிஞ்ச விநாடி,
‘சாமீ! நீங்க குழந்தை குட்டியோட, நோய் நொடியில்லாம ஆரோக்யமா
நீண்டகாலம் இருக்கணும். எங்களுக்கு இவளோ நல்ல பழங்களைக்
குடுத்த நீங்க மவராசனா இருக்கணும்!’ அப்படின்னு கோரசா குரல்
எழும்பித்து வெளியில இருந்து.

என்னன்னு பார்த்தா, பத்துப் பதினைஞ்சு நரிக்குறவக் குடும்பம்
குழந்தைகளோட நின்னுண்ணு, ஜன்னல் பக்கமா வந்து விழற பழங்களை
எல்லாம் பிடிச்சு சேகரிச்சுண்டு இருந்தா. அவாள்லாம், அந்த டாக்டர்தான்
தங்களுக்காக பழங்களை வீசி எறியறதா நினைச்சுண்டு அவரை வாழ்த்த
ஆரம்பிச்சா!

மறுபடியும் மகாபெரியவாளைப் பார்த்தார் டாக்டர்.
‘என்ன பார்க்கறே? அவாளுக்கெல்லாம் இவ்வளவு நல்ல பழஙகளைத்
தர்றதுக்கு யாருக்காவது மனசு வருமா? இப்போ நீ குடுத்ததா நினைச்சு
சந்தோஷமா எடுத்துண்டு போறாளே, அவாளோட மூஞ்சைப் பார்த்தியோ,
எத்தனை ஆனந்தம் அதுல தெரியறது? அந்த மாதிரியான சந்தோஷத்தை
மத்தவாளுக்குத் தர்றதுதான் பரமேஸ்வரனுக்கு ப்ரீதி தெரியுமோ..!

நம்பளால முடிஞ்சதை மத்தவாளுக்குத் தரணும்னு நினைக்கணும்.
கிடைக்கற எல்லாத்தையும் நாமளே அனுபவிக்கணும்னு நினைக்கறதும்,
நாம நினைச்சமாதிரிதான் எல்லாமே நடக்கணும்னும் நினைக்கறது தப்பு
புரிஞ்சுதோ?

இனனொரு முக்கியமான விஷயம்… நீ ஆசைப்பட்ட மாதிரியே மடத்துல
இருக்கற எந்தப் பெருச்சாளியும் அந்தப் பழத்தைத் திங்காம பார்த்துண்டாச்சு…
போதுமோ?’
மகாபெரியவா சொல்லி முடிக்க, அப்படியே சாஷ்டாங்கமா அவர் காலடியில
விழுந்தார் டாக்டர். பரமாசார்யா உபதேசம் பண்ணின பாடத்தைப்
புரிஞ்சுண்டுட்டேன்னு சொல்லாம சொல்ற மாதிரி, அவர் கண்ணுல இருந்து
நீர் வழிஞ்சு பெருகித்து.

தப்பை உணர்ந்துட்டாலே மன்னிப்புக் கிடைச்சுடும்கறதை உணர்த்தற மாதிரி
அவரை எழுந்திருக்கச் சொல்லி, இன்னொருதரம் பிரசாதம் தந்து, ‘அவா
வாழ்த்தின மாதிரியே மகாராஜனா இரு’ன்னு ஆசிர்வதிச்சு அனுப்பினார் மகா
பெரியவா.
எந்த தெய்வம் தன்னோட நைவேத்யத்தை தானே சாப்பிட்டிருக்கு?
அதெல்லாம் தன்னோட பக்தனுக்குக் கிடைக்கணும்கறதுதானே கடவுளோட
எண்ணம்? அப்படின்னா, தனக்குக் கிடைக்கறதெல்லாம் தேவை உள்ள
மத்தவாளுக்கேன்னு நினைச்ச பரமாசார்யாளை நடமாடம் தெய்வம்னு எல்லாரும்
சொன்னது வாஸ்தவமான உண்மைதானே.

———————————

– பி. ராமகிருஷ்ணன்
குமுதம் பக்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35064
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: மகா பெரியவா

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 05, 2015 2:23 pm

டாக்டருக்கு புரிய வைத்த காஞ்சி பெரியவர் நன்றி ஐழா.
@ayyasamy ram wrote:
ஒருசமயம் பரமாசார்யா, கும்பகோணத்துக்கு பக்கத்துல இருந்த
ஒரு கிராமத்துல முகாமிட்டிருந்ததை தெரிஞ்சுண்டு அங்கேயே
அவரை தரிசனம் பண்ண வந்தார் அந்த டாக்டர். வர்றச்சே வழக்கம்
போலவே பெரிய கூடையில் நிறைய பழங்களை எடுத்துண்டு
வந்தார்.
மேற்கோள் செய்த பதிவு: 1178659
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6970
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum