ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உடல் காட்டும் அறிகுறிகள்!
 ஜாஹீதாபானு

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு கலாச்சார சீரழிவு

View previous topic View next topic Go down

புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு கலாச்சார சீரழிவு

Post by கார்த்திக் செயராம் on Sat Dec 19, 2015 8:42 am

அறிதல், தெரிதல், புரிதல், தெளிதல், உணர்தல் எல்லாம் வேறு வேறு ஆனாலும் முன்னேற அடுத்து எடுத்து வைக்க வேண்டிய படிகள் அடிகள் ஒவ்வொன்றும்.நாட்காட்டி நிறைய வேண்டும் வீடு நிறைய மாட்ட வேண்டும் என ஆசைப்பட்டது 25 வயது… இப்போது ஒன்றிருந்தால் போதும். எதற்கு நிறைய?,எவரிடமும் சென்று கேட்பது தேவையில்லாமல் எதற்கு? என்பது மகனுக்கு அறிவுரை சொல்வது தற்போதைய வயது.

இந்தியாவில் காபி, தேநீர் அடிமைகளை உருவாக்கியதும் காலனி ஆதிக்கமே,பசு வதைக் கூடஙகளை உருவாக்கியதும் காலனி ஆதிக்கமே,இப்போது உலகின் பெருவாரியான நாடுகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட இந்தியாவிலும் இதன் தாக்கம் உருவாக மதுவின் தாக்கம் உயிர் போ(க்)க ஷாங்காயில் 35 பேர் பலி,42 பேர் காயம் கேரளாவில் 6 பொறியியல் மாணவர் பலி, சென்னையில் 102 விபத்துகள்,4பேர் பலி,ஒரு  மாணவர் கொலை.இன்னும் நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் எத்தனை உயிர்சேதமோ யாமறியோம்.. எல்லாம் காப்பி அடித்து ஆங்கில புத்தாண்டை கொண்டாடியதன் விளைவாக.

பேரறிஞர் அண்ணா சொல்லுவார் எல்லாம் வெள்ளைக்காரர்கள் கண்டறிந்த அறிவியல் பொருட்களை நாம் பயன்படுத்திக் கொண்டே நமது கலாச்சாரமான ஆயுதபூஜை,சரஸ்வதி பூஜை,தீபாவளி, இன்ன பிற இந்து திருவிழாக்களை கொண்டாடலாமா எனக் கேட்பார். சரியானதுதான் இந்த வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, பரமபதவாசல் சொர்க்க வாசல் எல்லாம் எப்படி அப்படித்தான் அதற்கு இதற்கு என்று எல்லாம் ஒரு விளக்கம் இருக்கும். அதை எல்லாம் சொல்லப்புகுவது இந்த பதிவின் நோக்கமல்ல. ஆனால் அறிஞர்க்குத் தெரியும் வெள்ளைக்காரர் என்றாலே அது ஆங்கில வெள்ளைக்காரரை மட்டுமே குறிக்கும் என எண்ணுகிறோம். ஆனால் ஐரோப்பியாவிலேயே ஜெர்மனி, ஐரிஸ், நார்வே, ஸ்வீடன், ரசியா( ஐரோப்பா ஆசியா அதாவது யுரேசியன்)இங்கிலாந்திலேயே அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், போர்ச்சிக் கீசியம், டச்சுக்காரர் எனச் சொல்லப்படும் நெதர்லாந்து இனம் , சீனம் இப்படி கிரேக்கம், யவனம் இப்படி உலகெங்கும் பல இனங்கள் பல மனிதப் பிரிவுகள் விரவிக் கிடக்கின்றன.

 எனினும் இந்த இங்கிலாந்து சார்ந்த வெள்ளைக்காரர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் பிணைப்புகளுடன் உலகின் பெருவாரியான நாடுகளை காலனி ஆதிக்கத்தில் பிணைத்து அவர்களை அங்கு உள்ள ஒற்றுமையுடன் இருந்த சகோதரத்துவ மக்களை பிரித்துப் போட்டு விட்டனர் என்றும் அவர்கள் ஒன்று சேர விடாமல் தமது குள்ள நரித்தந்திரமான மூளையைக் கொண்டு. அதில் விளைந்ததுதான் நமது இந்து முஸ்லீம் கலவரங்களின் பற்றி எரிதல்கள். அதற்கும் முன்னால் கூட துவேஷம் இருந்தது என்ற போதிலும் அவை ஒருபோதும் உயிர்களை அழிக்குமளவு மாறவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்

இவர்கள் தான் முதன் முதலில் வணிக நோக்கத்துடன் தேநீர் ,காபி ஆகிய பொருட்களை திட்டமிட்டு இலவசமாக கொடுத்து பழக்கி, ஏங்கவைத்து பின் அதை இங்கேயே இந்தியர்கள் உழைப்பையே பயன்படுத்தி பயிரிட்டு நல்ல முதல் தரமானதை எடுத்து தமது நாட்டுக்கு ஏற்றுமதி செய்து விட்டு குப்பை போன்ற 3 ஆம் தரத்தை நமது மக்களிடையே மறு முதலீடாக்கி பெருத்த கொள்ளை இலாபம் ஈட்டினர். அவர்கள் வரலாறு ஒவ்வொரு இந்தியனும் அறிய வேண்டியதே. ஆனால் அவ்வளவு வரலாற்றையும் ஏமாந்த இந்திய அரசர்கள் அந்த வெள்ளைத்தோல் அழகிகளுக்கும் அவர்களின் சீமைச் சரக்குக்கும்,வாசனப்பொருட்களுக்கும் விலையாகி அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்து கடைசியில் இந்த நாட்டை பிச்சைக்கார நாடாக்கிய கதையும் வீரபாண்டியர், மருது சகோதரர், வேலூ நாச்சியார், எட்டப்பன் போன்ற கதைகளையும் ஜான்ஸி, திப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிரான இயக்க முறைகளை எல்லாம் இங்கு சொல்லப் புகும் எண்ணம் இல்லை.

நேற்று ஒரு நண்பர் முகப்புத்தகத்தில் இந்தியாவின் குருகுல கல்வி, உழவுத் தொழில் ஆகியவற்றை அழித்தால்மட்டுமே இந்தியாவை வீழ்த்த முடியும் என்று ஆராய்ந்து கண்டறிந்த இராபர்ட் கிளைவ் எப்படி 350 பசுவதைக் கூடங்களை நிறுவி பசுக்களை இந்தியாவின் ஆதார விருத்திகளாக வேளாண் தொழிலுக்கு விளங்கி வந்த காமதேனுக்களை, கற்பகத்தருக்களை, அமுதசுரபிகளை அழித்து ஒழித்தார் என்ற பதிவிட்டிருந்தார். அடியேனும் அதை எடுத்து எமது முகப்புத்தகத்தின் பக்கத்திலும் பங்கிட்டிருந்தேன். இது ஏற்கெனவே படிக்கப்பட்டிருந்தாலும், ஆசிரியர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்தாலும் அரிய செய்தி எனவே விட மனமில்லை. அதை இந்த பதிவின் இறுதியில் தந்திருக்கிறேன் உங்கள் பார்வைக்காக.

முழுக்கால் சட்டை வசதியாக இருக்கிறது வேட்டியை விட அது பரவாயில்லை. ஆனால் விளக்கேற்றி நல்ல நாட்களில் தாய் தந்தையரை வணங்கி ஆசி வாங்கும் பழக்கத்துக்கு மாறாக மதுக்குடித்து விட்டு கேக் வெட்டி மெழுகு வர்த்தி அணைத்த வாழ்வும் பெண்களை எல்லாமே காமமாக பார்த்து வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளும் பழக்கமும் இங்கு வர என்ன காரணம்? விவாகரத்து, மதுக்குடி, மதுக்குளியல்,குடும்பம் என்ற கோயில் சிதைவு,பொது இடங்களில் அநாகரீகம், சாலையில் மாசு ஒலி,இருசக்கர வாகனத்தில் சென்று அழிதல், இதெல்லாம் மேலை நாட்டு ஊடகங்களும், மேலை நாட்டு கலாச்சாரமும் ஆங்கில புத்தாண்டை கொண்டாட சொல்லிக் கொடுத்த முறைகளா?

 தாம் தமது தனித்தன்மை எல்லாம் ஒழிந்து விட்டது. அசல்கள் நகலைப் பார்த்து அது போல இருக்கவே ஆசைப்படுகிறது. எனவே காப்பி அடித்து எங்கு பார்த்தாலும் ஹேப்பி நியூ இயர் சொல்கின்றன.

இந்தியாவின் நீர்ப்பாசனத் தந்தை சர்.ஆர்தர் காட்டன், முல்லைப்பெரியாறு செய்த பென்னி குக் போன்ற மாமேதகைகளும், வில்லியம் பெண்டிங் பிரபு இன்னும் நல்ல எண்ணத்துடன் இந்தியரை வாழ்வைத்த ஆங்கிலேயரும் காந்தியாருக்கு ஒத்துழைத்து அவரது புகழை உயர்த்திய, விவேகானந்தர், ஜே.கே, ஓசோ, ஏன் இன்ன பிற இந்திய அறிஞர்களின் ஆன்மிக குருக்களை உயர்த்திய உலகளாவிய அளவு புகழ் பெற வைத்ததும் ஆங்கிலேயே நல்ல மனிதர்களே.அவர்கள் தியாகிகளாக இருந்து நமது தியாகத்தை மதித்து உலகளாவிய அளவில் உன்னதர்களாக விளங்கினர் நம்மவரையும் உன்னதமடைய வைத்தனர்.ஜி.யு.போப்,கால்டுவெல், வீரமாமுனிவர் பற்றி எல்லாம் ,மதர் தெரஸா பற்றி எல்லாம் சொல்லவே வேண்டாம். அவர்கள் கூட வேறு மண்ணில் இருந்து இங்கு வந்து இந்த மண்ணுக்கு அலங்காரமான அழகிய மணமுள்ள மலர்களாக மறைந்தபின்னும் விளங்கிவருபவர்கள்தான்.

அதில் மாறுபட்ட கருத்து இல்லை. எனினும் ஆங்கில ஆட்சியின் ஆங்கிலேயரின் எதிர்மறையான பின்விளைவுகளை டயர் போன்ற அரக்கர்கள் செய்த அழிவுகளை, நாட்டைப்பிரித்தாண்டதை, என்றுமே ஒன்றாகிவிடாமல் செய்திட்ட சதிகளை ஆராயப்புகுந்தால் நாட்கள் போதாது.

எல்லாவற்றிலும் நல்லது கெட்டது இருக்கும் என்பார்கள். அது போல ஆங்கில ஆதிக்கம், நமக்கு விளவித்த நல்லது கெட்டது ஆகியவற்றை சீர்தூக்கிப் பார்க்க கற்றுக்கொண்டு அவை பற்றி அறிதல், தெரிதல், புரிதல், தெளிதல். உணர்தல் ஆகிய அளவுகோள் கொண்டு நமது தனித்தன்மைகளை இழக்காமல் நாம் அவர்களை காப்பி அடிக்க வேண்டுமா? அவர்கள் நம்மை காப்பி அடிக்க வேண்டாமா? என்பதை எல்லாம் யோசித்தபின் இந்த புத்தாண்டுக் கொண்டாட்டம் ,களியாட்டம் போன்றவற்றில் வரும் இளையதலைமுறை ஈடுபடாமல் இருந்தால்நன்றாக இருக்கும்.

நன்றி கவிஞர் தணிகை

மறுபடியும் பூக்கும்
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு கலாச்சார சீரழிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 19, 2015 8:56 pm

@கார்த்திக் செயராம் wrote:
எல்லாவற்றிலும் நல்லது கெட்டது இருக்கும் என்பார்கள். அது போல ஆங்கில ஆதிக்கம், நமக்கு விளவித்த நல்லது கெட்டது ஆகியவற்றை சீர்தூக்கிப் பார்க்க கற்றுக்கொண்டு அவை பற்றி அறிதல், தெரிதல், புரிதல், தெளிதல். உணர்தல் ஆகிய அளவுகோள் கொண்டு நமது தனித்தன்மைகளை இழக்காமல் நாம் அவர்களை காப்பி அடிக்க வேண்டுமா? அவர்கள் நம்மை காப்பி அடிக்க வேண்டாமா? என்பதை எல்லாம் யோசித்தபின் இந்த புத்தாண்டுக் கொண்டாட்டம் ,களியாட்டம் போன்றவற்றில் வரும் இளையதலைமுறை ஈடுபடாமல் இருந்தால்நன்றாக இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1181520
இது நமக்கு தேவையில்லை என்றே தோன்றுகிறது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3970
மதிப்பீடுகள் : 1163

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum