ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 SK

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 SK

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை - - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம்

View previous topic View next topic Go down

வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை - - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம்

Post by ayyasamy ram on Sat Dec 19, 2015 8:42 am


-
காப்பு

* திருச்சானூர் தேவியின்
திருவருள் வேண்டும்,
திருமாலைப்பாடி
திருவடி வணங்க
திருச்சானூர் தேவியின்
திருவருள் வேண்டும்!
-
* ஒருக்காலும் மறவாத
உளமிருக்க, நினைக்க
திருக்கோலம் நெஞ்சில்
நிலைத்திருக்க என்றும்,
திருச்சானூர் தேவியின்
திருவருள் வேண்டும்!

-
* மறுக்காமல் அருள்வாய்
மகா லக்ஷ்மி!
மணக்கும் பாக்களில்
பொருளாய் நீயிருந்து
மறுக்காமல் அருள்வாய்
மகா லக்ஷ்மி!
-
* தாமரைப் பூக்கொண்டு
உனைத் துதித்தேன்,
சந்நதி வணங்கி
மனம் பதித்தேன்!
மறுக்காமல் அருள்வாய்
மகா லக்ஷ்மி!
திருச்சானூர் தேவியின்
திருவருள் வேண்டும்!

-


Last edited by ayyasamy ram on Sat Dec 19, 2015 8:46 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34324
மதிப்பீடுகள் : 11082

View user profile

Back to top Go down

Re: வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை - - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம்

Post by ayyasamy ram on Sat Dec 19, 2015 8:44 am

சுப்ரபாதம்
-------------
-
மார்கழி மாதம் வைகறை நேரம்
மாதவா கேசவா மைவிழி திறவாய்!
மங்கல இசையுடன் தமிழ்ப்பண் ஒலிக்க
கண்ணா கார்மேக வண்ணா எழுவாய்!
பார்புகழ் வேங்கட பதியின் நாயகா
ஆர்கலி தீர்க்க அறிதுயில் கொண்டவா,
பார்வைச் செங்கண் பரிதி ஒளிவிட
பார்கவி பாடினேன், பைய இமை
திறவாய்!
குவிமலரும் விரிந்ததுகாண் கோயில்
மணி ஒலித்ததுகாண்
நவில்தேவர் சூழ்ந்திருக்க நாற்றிசையும்
கைகூப்ப
கவியமுதம் சுவைத்து கண்ணமுதம்
தந்தருள
புவிஏழும் புரப்பவனே போதுஇது
விழி திறவாய்!
-


Last edited by ayyasamy ram on Sat Dec 19, 2015 8:46 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34324
மதிப்பீடுகள் : 11082

View user profile

Back to top Go down

Re: வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை - - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம்

Post by ayyasamy ram on Sat Dec 19, 2015 8:44 am

பாத யாத்திரை

* ஆயிரம் கோடி
விழிகளில் தரிசனம்!
ஆங்கே கோவிந்த
நாம சங்கீர்த்தனம்!

* பாயிரம் பாடியே
பயணம் தொடங்கினேன்
பதி திருப்பதி - மலைப்
படிகளில் ஏறினேன்!

* கோயிலாம் திருமலை
கோபுரம் எதிரே
கோதையின் மாலை
சூடினோன் உள்ளே!

* வேய்ங்குழல் வேந்தனை
காணத் தவித்தே
வாயி லடைந்தேன்
வாழி வெங்கடேசா!

* இயக்கிய பக்தியால்
எளிதில் பிராகாரம்
எல்லாம் கடந்தவன்
எதிரில் நின்றேன்!

* மயக்க மறுத்தேன்
இமைக்க மறந்தேன்!
மலை மாலையாய்
கண்ணீர் வடித்தேன்!

* வியக்கும் விஸ்வ
ரூப தரிசனம்
விடியும் வேளையில்
கிடைத்தது பாக்கியம்!

* தயங்கும் ஜீவனை
தடுத்தாட் கொள்ளவே
தான் ஏழு மலைமீது
நின்றாய், சத்தியம்!
நின்ற திருக்கோலம்
பாற்கடல் பள்ளியில்
கிடந்தாய்!
பாண்டவர் தூதனாய்
நடந்தாய்!
பார்த்த சாரதியாய்
அமர்ந்தாய்!
பதி திருப்பதிதனில்
நிமிர்ந்தாய்!
நின்ற திருக்கோலம் கண்டேன்,
திருமேனி
என்ற சமுத்திரம் உண்டேன்,
விழியாலே!
வென்றவை தோற்றவை யாவும்
சமர்ப்பித்தேன்!
குன்றம் திருமலை
கோவிந்தன் நாமம்
ஒன்றே நிச்சயம்
ஒன்றே சத்தியம்
நன்றே இதுவென்று
நான் தேர்ந்து கொண்டேன்.
திருச்சூர்ணம்
பூத்த பொழில் காடு
புன்முறுவல்!
யாத்த செந்தழிழ்ப்பா
திருச்சூர்ணம்!
கோர்த்த மணிமார்பில்
கோவிந்தன்
சேர்த்த ஸ்ரீதேவி
நம் தாயார்!
காத்த கைத்தலங்கள்
தமிழ்  வேதம்,
காட்டும் திருவடிகள்
அரண் நமக்கே!


Last edited by ayyasamy ram on Sat Dec 19, 2015 8:45 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34324
மதிப்பீடுகள் : 11082

View user profile

Back to top Go down

Re: வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை - - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம்

Post by ayyasamy ram on Sat Dec 19, 2015 8:45 am

நிஜபாத தரிசனம்

நிஜபாத தரிசனம் கண்டேன்!
நிழலான இகசுகங்கள்
அற்பமென உணர்ந்தேன்
நிஜபாத தரிசனம் கண்டேன்!
புஜங்களில் சங்கொடு
சக்கரம் தாங்கினாய்!
புவிதனை வராக
மூக்கினில் ஏந்தினாய்!
கஜராஜன் கால், முதலை
கவ்விய வேளையில்
கருடனில் பறந்து
சக்கரம் ஏவினாய்!
கண்ணனாய் பிறந்து
கம்சனை வீழ்த்தினாய்!
மன்னனாய் துவாரகை
மகுடம் சூடினாய்!
சபையில் திரௌபதி
தன்மானம் கூட்டினாய்!
சகலரும் வணங்க
ஸ்ரீபாதம் காட்டினாய்!

பார்த்தனைக் காக்க
தேரை ஓட்டினாய்!
பாரோரை வழிநடத்த
கீதையை சாற்றினாய்!
ஊற்றாக கவிதையை
உள்ளத்தில் ஊட்டினாய்,
ஏற்றென் பாமாலை
இளநகை மீட்டினாய்!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34324
மதிப்பீடுகள் : 11082

View user profile

Back to top Go down

Re: வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை - - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம்

Post by ayyasamy ram on Sat Dec 19, 2015 8:47 am

சங்கீர்த்தனம்

வனமெல்லாம் மரகதம்
வானெல்லாம் நீலம்
மனமெல்லாம் திருவடிகள்
வாக்கெல்லாம் கோவிந்தன்!
-
தினமெல்லாம் அவன்பூஜை
தெருவெல்லாம் சங்கீர்த்தனம்
உணர்வெல்லாம் பக்திவெள்ளம்
உறவெல்லாம் அவன்உறவே!
-
நினைவெல்லாம் திருச்சூர்ணம்
நிகழ்வெல்லாம் அவன்செயலே
கனவெல்லாம் திருமலையே
கவியெல்லாம் அவன்புகழே!
-
புனலெல்லாம் புஷ்கரணி
பூவெல்லாம் தோமாலை
வினையெல்லாம் வீழ்ந்ததுவே
வீடானது வைகுந்தம்!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34324
மதிப்பீடுகள் : 11082

View user profile

Back to top Go down

Re: வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை - - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம்

Post by ayyasamy ram on Sat Dec 19, 2015 8:48 am

ஆத்ம சமர்ப்பணம்

நாழிகை கடந்து நாளானது
நாளும் நகர்ந்து இரவானது
காலைக் கதிரவன் சுடரானது
காவிரி போல்மனம் கூத்தாடுது!
-
ஆழி மழைக்கண்ணா உனைத் தேடுது
ஆரா அமுதனுன் புகழ் பாடுது
பூவிரி சோலைகள் போதவிழ் மலர்கள்
மாமலை வேங்கடம் மாபெரும் கோபுரம்.
கோயிலின் வாயிலில் கூப்பிய கோலத்தில்
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா வென
கூவிய மனதுடன் கூப்பிய கரத்துடன்
ஆவி அடைக்கல மானது காத்தருள்!
-
தேவியை ஏந்திய மார்பினைக் கண்டேன்
தேடிய பாதம் நான்பற்றிக் கொண்டேன்
பாவியேன் கடைத்தேறு பாதையைக்
காட்டுவாய்!
-
பற்றிய வினைகளைப் பஞ்சென
ஊதுவாய்!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34324
மதிப்பீடுகள் : 11082

View user profile

Back to top Go down

Re: வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை - - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம்

Post by ayyasamy ram on Sat Dec 19, 2015 8:50 am

திருக்கல்யாணம்
--
திருச்சானூர் தேவி திருப்பதி மலை
வாசன்
திருக் கல்யாண வைபோகமே!
-
மருக்கொழுந்து வாசம் மாவிலை
தோரணம்
மணிமுத்துப் பந்தல் பூலோகமே!
-
கடைக் கண்ணாலே திருமகள் நோக்க
கள்ளச் சிரிப்பினால் மாலவன் கேட்க
இமைப்பில் அரங்கேறும் நாடகம் காண
எத்தனை பிறவி தவமிருந்தேனோ?
-
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
அடியைப் பற்றி அணிகலன் பூட்டி
ஸ்ரீதேவி சமேதனாய் ஸ்ரீவேங்க டேசன்
வலம்வர கல்யாண வைபோகமே!
-
மேளங்கள் முழங்க மேகங்கள் பூச்சிந்த
தேவர்கள் துதிக்க திசையெல்லாம் களிக்க
மங்கலநாண் தேவி மார்பில் அரங்கேற
ஆனந்தம், ஆனந்தம் ஆனந்தமே!
-

பல்லாண்டு பல்லாண்டு
மலையப்ப ஸ்வாமிக்கு
பல்லாண்டு பல்லாண்டு
மலைநகராம் திருப்பதிக்கு
பல்லாண்டு பல்லாண்டு!
-
திருத்துழாய் வேந்தனுக்கு
பல்லாண்டு பல்லாண்டு
திருமகள் சமேதனுக்கு
பல்லாண்டு பல்லாண்டு!
-
திருவடியாம் கருடனுக்கு
பல்லாண்டு பல்லாண்டு
திண்தோள்சேர் சக்கரம்
சங்கிற்கும் பல்லாண்டு!
-
அயனமர்ந்த உந்திக்கு
பல்லாண்டு பல்லாண்டு
சயனமாம் அனந்தனுக்கும்
பல்லாண்டு பல்லாண்டு!
-
அமுதூறும் பாற்கடலே
பல்லாண்டு பல்லாண்டு
ஆழ்வார்கள் அனைவருக்கும்
பல்லாண்டு பல்லாண்டு!
-
சரணம்!
ஆள்வினை வேண்டும் ஆக்கமும்
வேண்டும்
அன்றாடப் பணிகள் நிறைவுற வேண்டும்
ஊழ்வினை பொடிபட உன்னருள்
வேண்டும்
உண்மையில் உள்ளம் தோய்வுற
வேண்டும்!
வாழ்வில் சுற்றம் வளமுற வேண்டும்
வாக்கு மனமுடல் வழிபட வேண்டும்
தோள்களில் சங்கு சக்கரம் தரித்தோய்
தூய திருவடி சரணம்! சரணம்!
-
==================================
நன்றி- குங்குமம்- ஆன்மீகம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34324
மதிப்பீடுகள் : 11082

View user profile

Back to top Go down

Re: வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை - - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 19, 2015 9:03 pm

[quote="ayyasamy ram"]
-
* ஒருக்காலும் மறவாத
உளமிருக்க, நினைக்க
திருக்கோலம் நெஞ்சில்
நிலைத்திருக்க என்றும்,
திருச்சானூர் தேவியின்
திருவருள் வேண்டும்!

மேற்கோள் செய்த பதிவு: 1181521
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6661
மதிப்பீடுகள் : 1561

View user profile

Back to top Go down

Re: வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை - - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 19, 2015 9:07 pm

@ayyasamy ram wrote:
* பாயிரம் பாடியே
பயணம் தொடங்கினேன்
பதி திருப்பதி - மலைப்
படிகளில் ஏறினேன்!
*
மேற்கோள் செய்த பதிவு: 1181523
திருமலைக்கு பாதயத்திரை அனுபவம் மிகவும் அருமையாக இருக்கும்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6661
மதிப்பீடுகள் : 1561

View user profile

Back to top Go down

Re: வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை - - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 19, 2015 9:10 pm

@ayyasamy ram wrote:
தினமெல்லாம் அவன்பூஜை
தெருவெல்லாம் சங்கீர்த்தனம்
உணர்வெல்லாம் பக்திவெள்ளம்
உறவெல்லாம் அவன்உறவே!
மேற்கோள் செய்த பதிவு: 1181525
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6661
மதிப்பீடுகள் : 1561

View user profile

Back to top Go down

Re: வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை - - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 19, 2015 9:13 pm

@ayyasamy ram wrote:
நாழிகை கடந்து நாளானது
நாளும் நகர்ந்து இரவானது
காலைக் கதிரவன் சுடரானது
காவிரி போல்மனம் கூத்தாடுது!
மேற்கோள் செய்த பதிவு: 1181526
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6661
மதிப்பீடுகள் : 1561

View user profile

Back to top Go down

Re: வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை - - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 19, 2015 9:14 pm

@ayyasamy ram wrote:
மேளங்கள் முழங்க மேகங்கள் பூச்சிந்த
தேவர்கள் துதிக்க திசையெல்லாம் களிக்க
மங்கலநாண் தேவி மார்பில் அரங்கேற
ஆனந்தம், ஆனந்தம் ஆனந்தமே!
மேற்கோள் செய்த பதிவு: 1181527
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6661
மதிப்பீடுகள் : 1561

View user profile

Back to top Go down

Re: வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை - - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum