ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 ayyasamy ram

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இனிய தீபாவளி
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 M.Jagadeesan

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு

View previous topic View next topic Go down

கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு

Post by ayyasamy ram on Tue Dec 22, 2015 6:38 am

தமிழகத்தில், பணம் சம்பாதிப்பதற்காக போலியான ஜோதிடர்கள் பலர்
உலவிக் கொண்டிருக்கும்போது, தனது ஜோதிடத் திறமையைப் பணம்
சம்பாதிக்கப் பயன்படுத்தாத ஏ.எம்.ராஜகோபாலன், பலருடைய
நம்பிக்கை நாயகனாகத் திகழ்கிறார்.
-
அவரை நமது ‘துக்ளக்’ வாசகர்கள், அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள்.
அந்த கலந்துரையாடலின் இறுதிப்பகுதி இங்கே:
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31537
மதிப்பீடுகள் : 10061

View user profile

Back to top Go down

Re: கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு

Post by ayyasamy ram on Tue Dec 22, 2015 6:42 am

ரேவதி மில்டன்:
ஒரு பெண்ணிற்கு நல்ல நேரம் பார்த்துத் திருமணம் செய்து தாலி
கட்டுகிறார்கள். அதே பெண், தன்னுடைய கணவனுக்கு உடம்பு
சரி இல்லை என்றால், ஸ்வாமியிடம் வேண்டிக் கொண்டு அந்தத்
தாலியை உண்டியலில் செலுத்துகிறாள். இது சரியா?

-
ஏ.எம்.ஆர்.:
இதுபோல் செய்தால், நம்முடைய தோஷம் நிவர்த்தி ஆகும் என்ற
நம்பிக்கையின் பேரில் பலர் இதைச் செய்கிறார்கள். இதெல்லாம்
கற்பனையான விஷயங்கள். இப்படியெல்லாம் செய்யக் கூடாது.
வேத காலத்தில் திருமாங்கல்யம் என்பதே கிடையாது.
பிற்காலத்தில் அந்நியர்கள் வந்து நம்முடைய பெண்களை இழுத்துச்
செல்லும் போது, திருமணமான ஹிந்துப் பெண்களெல்லாம் வியாதி
இருக்கு என்று சொல்லித் தப்பித்து கொண்டார்கள்.
-
அதனால், அந்நியர்களும் திருமணமான பெண்களைத் தொட
மாட்டார்கள். இந்தச் சமயத்தில்தான், தாலி கட்டும் வழக்கம்
ஏற்படுத்தப்பட்டது.
-
ஒரு பெண் ஆதரவின்றி இருந்தால், அவளைச் சகோதரியாக ஏற்று,
ரக்க்ஷா பந்தன் கட்டுவதும் அப்போது வந்ததுதான். திருமாங்கல்யத்தை
மஞ்சள் கயிறில் ஏன் போடுகிறார்கள்?
எந்தக் கஷ்டம் வந்தாலும் அதை ஒன்றும் செய்யக் கூடாது என்று தான்.
இதுவே அந்தத் தாலிச்சரடு தங்கத்தில் இருந்தால், கஷ்ட காலங்களின்
அதை விற்கவோ அல்லது அடமானம் வைக்கவோ தோன்றும்.
-
தங்கத்தில் தாலிச்சரடு என்பதும் பிற்காலத்தில் வந்ததுதான்.
திருமணம் என்பது, அந்தப் பெண் மற்றும் ஆணின் வாழ்க்கையில் ஒரு
முறை நடக்கும் பெரிய விசேஷம்.
அதனால், நம்முடைய ஆசைக்காகத் தங்கத்தில் தாலி அணிந்து
கொள்கிறோம். உண்மையான தாலி என்பது, மஞ்சள் கயிறு தான். தாலியை
உண்டியலில் போடும் பரிகாரம் எந்த ஜோதிட சாஸ்திரத்திலும் கூறப்பட
வில்லை.
-
--------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31537
மதிப்பீடுகள் : 10061

View user profile

Back to top Go down

Re: கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு

Post by ayyasamy ram on Tue Dec 22, 2015 7:14 am

சரண்யா
சுமங்கலியாக இருக்கும் பெண்கள் திருப்பதி சென்று
மொட்டை அடிப்பதாக வேண்டிக்கொள்கிறார்கள்.
இந்த வேண்டுதல் சரியா? தவறா?

ஏ.எம்.ஆர்.:
இதுவும் எந்த ஜோதிட சாஸ்திரத்திலும் பரிகாரமாகச்
சொல்லப்படவில்லை. அவசியமும் இல்லை. பஹவான்
பக்திக்குக் கட்டுப்பட்டவன். அந்த பக்தியை நீங்கள்
திடமாக வைத்திருந்தால், அவன் உங்களைக் காப்பாற்றி
விடுவான்.

நாம் அவசரப்படுகிறோம். ஒரு நேர்மையான அதிகாரி
லஞ்சமே வாங்க மாட்டார் என்றால் கூட, நாம் அவருக்கு
லஞ்சம் கொடுத்தால், வேலை விரைவாக முடியும் என்று
நம்புகிறோம்.

அதேபோல பஹவானிடமும், நாம் இதைச் செய்தால்,
அவர் நமக்கு இதைச் செய்வார் என்று நினைக்கிறோம்.
இதெல்லாம் நம்முடைய கற்பனையான நினைப்பு மட்டுமே.

கோயிலுக்குச் சென்று நம்முடைய பெயரில் அர்ச்சனை
செய்வதே தவறு என்று பெரியவா சொல்லி இருக்கிறார்.
ஒரு குழந்தை தன்னுடைய தாயிடம், ‘நான் உனக்கு இதைத்
தருகிறேன் அதற்குப் பதில் நீ எனக்குப் பால் கொடு’ என்று
கேட்பது எவ்வளவு அபத்தமானது?

பஹவானின் அன்பிற்கு எதை ஈடாகக் கூறுவது என்று
ஆழ்வார்கள் பஹவானிடமே கேட்டார்கள். அதற்கு ‘இதைவிட
ஒரு அன்பு இருக்க முடியாது என்று ஒன்று இருந்தால், அதைவிட
உயர்ந்தது என்னுடைய அன்பு’ என்று கூறினாராம் பஹவான்.

எப்படி ஒரு தாய், தான் பெற்ற குழந்தையைப் பார்த்துக்
கொள்கிறாளோ, அது போல் பஹவான் எல்லோரையும் பார்த்துக்
கொள்கிறார். அவனிடம் கேட்டால் போதும் கிடைத்து விடும்.
ஆனால், அந்த நம்பிக்கை நமக்கு வேண்டும். கலியினுடைய
தோஷத்தினால், நமக்கெல்லாம் பஹவானிடம் நம்பிக்கை
குறைந்து வருகிறது.
-
-----------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31537
மதிப்பீடுகள் : 10061

View user profile

Back to top Go down

Re: கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு

Post by சாமி on Tue Dec 22, 2015 7:15 am

ayyasamy ram wrote: ஏ.எம்.ஆர்.:- வேத காலத்தில் திருமாங்கல்யம் என்பதே கிடையாது. பிற்காலத்தில் அந்நியர்கள் வந்து நம்முடைய பெண்களை இழுத்துச் செல்லும் போது, திருமணமான ஹிந்துப் பெண்களெல்லாம் வியாதி இருக்கு என்று சொல்லித் தப்பித்து கொண்டார்கள். அதனால், அந்நியர்களும் திருமணமான பெண்களைத் தொட மாட்டார்கள். இந்தச் சமயத்தில்தான், தாலி கட்டும் வழக்கம்
ஏற்படுத்தப் பட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1182096

தாலி என்பது தமிழனின் பண்பாடு. இவர் சொல்லும் வேதகாலம் என்பது ஆரியர்களின் காலம். அதை தமிழ்க் கலாச்சாரமாக சொல்வது தவறு. தாலிக்கு ஏற்றுக் கொள்ளமுடியாத ஒரு விளக்கத்தைத் தருகிறார். இதையெல்லாம் தமிழன் கேட்க (படிக்க) வேண்டிய தலையெழுத்து.....!?! என்ன கொடுமை சார் இது
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு

Post by ayyasamy ram on Tue Dec 22, 2015 7:32 am

சேஷாத்ரி:
தினமும் காலையில் சில ஜோதிடர்கள் தொலைக்
காட்சிகளில் ராசி பலன் கூறுகிறார்கள்.
காலண்டர்களில் தின பலன் போடுகிறார்கள்.
இது எப்படிச் சரியாக இருக்கும்? அவரவர் ஜாதகத்தைப்
பொருத்துத்தானே அன்றைய பலன் இருக்கும்?

-
ஏ.எம்.ஆர்.:
மனசாட்சிப்படிச் சொல்ல வேண்டுமென்றால், வார ராசி பலன்,
தினசரி பலன் இவை யெல்லாம் பொய்தான். வார ராசிபலன்
சொல்லுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. சிம்ம ராசி என்று
எடுத்துக் கொண்டால், ஒரு ஊரிலேயே குறைந்தது ஐயாயிரம்
நபர்களாவது இருப்பார்கள்.

எல்லோருக்கும் ஒரே விதமாக அந்த நாள் அமையுமா?
அமையாது. ஆனால், சமீபத்தில் ஒரு ரஷ்ய விமானத்தில் பயணம்
செய்த இருநூற்று முப்பது நான்கு பேரும் இறந்து விட்டார்கள்.
அப்படி என்றால் அவர்கள் அனைவரது ஜாதகமும் ஒன்றா?

நம்முடைய நாட்டில் எமெர்ஜென்ஸி காலத்தில், எல்லா
சட்டங்களையும் ரத்து செய்தது போல், ‘விபரீத யோகம்’ என்று
ஜோதிடத்தில் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த விபரீத யோகத்தில், எந்த ஜாதக விதிகளும் செயல்படாது.
-
------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31537
மதிப்பீடுகள் : 10061

View user profile

Back to top Go down

Re: கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு

Post by ayyasamy ram on Tue Dec 22, 2015 7:34 am

அண்ணாதுரை:
அரசியல், மருத்துவம் என்று எல்லாத் துறைகளும் தரம்
தாழ்ந்து வருகின்றன. அதே போல ஜோதிட சாஸ்திரத்திலும்
உண்மையான விஷயம் தெரிந்த பெரியவர்கள் மிக மிகக்
குறைவு. பெரும்பாலானவர்கள் போலியான பரிகாரங்கள்
கூறி ஏமாற்றி வருகிறார்கள்.
இது போன்ற ஒரு சூழ்நிலையில், உங்களைப் போன்றவர் ஏன்
ஜோதிடத்தைப் பற்றி ஒரு புத்தகம் எழுதக் கூடாது?
-

ஏ.எம்.ஆர்.:
இதில் ஒரே ஒரு பிரச்னைதான் இருக்கிறது.
ஜோதிடம் என்பது புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ளும்
விஷயம் அல்ல. புத்தகத்தைப் படித்தாலும் புரியாது.

ஒரு குருவின் பாதத்தடியில், சிஷ்யனாக அமர்ந்து கற்றுக்
கொள்ள வேண்டிய கலை இது. அதனால்தான் குருகுல வாசம்
என்று அந்தக் காலத்தில் வைத்தார்கள்.

உண்மையில், குருவின் மூலம் கற்றுகொண்டால், அவ்வளவு
சுலபமான விஷயம் இது.
-
--------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31537
மதிப்பீடுகள் : 10061

View user profile

Back to top Go down

Re: கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு

Post by ayyasamy ram on Tue Dec 22, 2015 7:35 am

கே.மகேஷ்:
உங்களுடைய பரிகாரத்தில் கோயில்களுக்கு ஏதாவது
உதவி செய்யச் சொல்கிறீர்கள். இதனால் கவனிப்பாரற்று
இருந்த பல கோயில்கள் செப்பனிடப்பட்டுப் புதுப்பொலிவு
பெற்றுள்ளன. இப்படி பரிகாரம் சொல்லுவதற்கான உந்துதல்
என்ன?

-
ஏ.எம்.ஆர்.:
முதலில் கோயில்கள் எதற்காக ஏற்பட்டுள்ளன
என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நமது கர்மாக்களினால் பலவிதமான கஷ்டங்கள் நமக்கு
வருகின்றன. இந்தக் கர்மாக்களினால் வரும் கஷ்டத்தைப்
போக்கப் பலவிதமான பரிகாரங்களும், மந்திரங்களும்
இருக்கின்றன.

ஜோதிடம் என்பது ரிக் வேதத்தில் இருக்கிறது.
பரிகார மந்திரம் என்பது அதர்வண வேதத்தில் இருக்கிறது.
இத்தகைய பரிகாரங்களை எல்லாம் நாம் வீட்டில் வைத்துச்
செய்ய முடியாது. அந்த மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.
அதனால், அந்தப் பரிகாரங்களைக் கோயிலில் செய்யலாம்
என்று கூறியுள்ளார்கள்.
-
-------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31537
மதிப்பீடுகள் : 10061

View user profile

Back to top Go down

Re: கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு

Post by ayyasamy ram on Tue Dec 22, 2015 7:36 amசரண்யா:
சோழியை உருட்டிப் பலன் சொல்லுவது உண்மையா?

ஏ.எம்.ஆர்.:
ஜோதிடத்தைப் பொறுத்தவரை ஏழு கிளைகள் இருக்கின்றன
என்று கூறலாம். அதில் ஒன்று தான், பணிக்கர்கள் பார்க்கும்
பிரசன்னம். அதுவும் தெய்வீகமானதுதான்.

நீங்களும் நானும் இத்தனை வருடங்களாக இந்தச் சென்னையிலேயே
இருந்தும், இன்றுதான் நாம் சந்திக்கும் வாய்ப்பும், நேரமும்
அமைந்திருக்கிறது. இந்தச் சந்திப்பும் கூட, இறைவனுடைய
அனுக்ரஹம் இருந்தால்தான் நடக்கும்.

இப்படி நடக்கும் என்று நான் கிரஹங்களின் நிலையை வைத்துக்
கூறுவேன். இதையே சோழிகளின் மூலமாகக் கூறுவதுதான் –
பிரசன்னம். கேரளாவில் பெரிய கோயில் காரியங்கள் எல்லாமே
பிரசன்னம் கேட்டுத்தான் நடத்துகிறார்கள். அது உண்மையான
ஒன்றுதான்.
-
--------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31537
மதிப்பீடுகள் : 10061

View user profile

Back to top Go down

Re: கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு

Post by ayyasamy ram on Tue Dec 22, 2015 7:52 am

ரேவதி மில்டன்:
ராசிகளுக்கு ஏற்ற கற்கள் அணிவதால், வாழ்க்கையில்
கஷ்டம் நீங்கி சுபிக்க்ஷம் அடையலாம் என்று கூறுகிறார்களே?
இது உண்மையா?

-
ஏ.எம்.ஆர்.:
இதுவும் உண்மைதான்.
ஆனால், இப்பொழுது கொடுக்கப்படும் கற்கள் எல்லாம்
போலியானவை. அதனால் உரிய பலன் கிடைப்பதில்லை.
உதாரணமாக, நல்ல ஜுரத்திற்கு அதற்குரிய மருந்தைக்
கொடுக்காமல், வேறு மருந்தைக் கொடுத்து ‘உடம்பு
சரியாகவில்லை’ என்று கூறுவது எவ்வளவு முட்டாள்தனமோ,
அப்படித்தான் போலியான கற்களை அணிந்து கொண்டு,
தங்களுடைய கஷ்டம் தீரவில்லை என்று கூறுவதும்.
-
-------------------------------------------------
-
கே.மகேஷ்:
ஜாதகம் பார்க்கும் ஜோதிடராக எல்லோரும் ஆக முடியுமா
அல்லது அதற்கும் ஜாதகத்தில் ஏதாவது விசேஷ அமைப்பு
இருக்க வேண்டுமா?

-
ஏ.எம்.ஆர்.:
ஜாதகத்தில் புதன், லக்னத்திலேயோ அல்லது ஐந்தாம் இடத்திலோ
இருந்தால், அவர்களுக்கு ஜோதிடம் நன்றாக வரும். குறைவாகக்
கற்று கொண் டால் கூட அது அவர்களுக்குப் பலிக்கும்.
ஏனென்றால், லக்னத்திலும் ஐந்தாம் இடத்திலும் புதன் இருப்பவர்கள்,
நேர்மையாளராக இருப்பார்கள். ஜோதிடம் என்பது நாம் கற்றுக்
கொள்ளும் கலை என்பதையும் தாண்டி, அதைக் கற்றுக் கொள்ளும்
நபருடைய ஒழுக்கம், மற்றும் வாழ்வியல் முறையும் அவருடைய
வாக்குப் பலிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.
-
------------------------------------------------------
-
லட்சுமி வெங்கட்ராமன்:
ஹிந்துக்களில் பெரும்பாலோர் குழந்தை பிறந்த தேதியை
வைத்துதான் ஜாதகம் கணிக்கிறார்கள். ஆனால், சில பேர் பெண்
ருதுவான நேரத்தை வைத்து ஜாதகம் கணிக்கிறார்கள். இது சரியா?

-
ஏ.எம்.ஆர்.:
இரண்டும் ஒன்றுதான். ஜனனகால ஜாதகத்தைக் கணித்திருந்தால்,
அந்தப் பெண் ருதுவாகக் கூடிய நேரத்தையும் அப்போதே கூறியிருப்பார்கள்.
பிறந்த இடத்தின் ஏழாம் இடத்தைப் பார்த்தாலே, அது ருது ஜாதகம்தான்.
-
-----------------------------------------------
-
சரண்யா:
பத்துப் பொருத்தங்கள் பார்த்துச் செய்யும் திருமணங்கள் கூட
முறிவது ஏன்?

-
ஏ.எம்.ஆர்.:
அந்த ஆண் மற்றும் பெண்ணின் ஜாதகத்தில் ஏதேனும் தவறு
இருந்திருக்கலாம். அந்த ஜாதகத்தைப் பார்த்தவர் தவறாகப் பார்த்து
இருக்கலாம். பொதுவாக ஜோதிட அறிவியல் என்பது பொய்யாகாது.
-
--------------------------------------------

லட்சுமி வெங்கட்ராமன்:
பாவங்கள் ஒரு குடும்பத்தில் உள்ள ஆண் குழந்தைகளையும்,
அவர்களுடைய ஆண் வாரிசுகளையும் மட் டுமே பாதிக்கும்.
பெண் குழந்தைகளைப் பாதிக்காது என்று கூறப்படுவது
உண்மையா ?

-
ஏ.எம்.ஆர்.:
-
இல்லை. இரண்டு பேரையுமே பாதிக்கும்.
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில், ஒரு பெண் சம்பாதிக்கிறாள்
என்ற காரணத்திற்காகவே அந்தப் பெண்ணிற்கு அவளது தந்தையே
திருமணத்தைச் செய்யாமல் இருக்கிறார்.
-
அந்தப் பெண் ஒரு பெரிய பாவத்தைச் செய்ததால்தான் இப்படி
ஒரு தந்தைக்கு மகளாகப் பிறந்து இருக்கிறார்.
ஒரு ஜீவனுடைய கர்ப்ப வாசம் என்பது பனிரெண்டு மாதங்கள்.
தந்தையின் கர்ப்பத்தில் இரண்டு மாதங்களும், தாயின் கர்ப்பத்தில்
பத்து மாதங்களும் இருக்கிறது.
-
நம்முடைய மறுபிறவி என்பதை, நாம்தான் நம்முடைய
செயல்களினால் தீர்மானிக்கிறோம். பிறப்பு மற்றும் மறுபிறப்பு
என்பது, நம்முடைய பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அமைகிறது.
-
--------------------------------------

தொகுப்பு : எஸ்.ஜே. இதயா

–நன்றி துக்ளக்

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31537
மதிப்பீடுகள் : 10061

View user profile

Back to top Go down

Re: கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு

Post by Namasivayam Mu on Tue Dec 22, 2015 6:42 pmபடமாடக் கோவில் பகவர்க்கு ஒன்றுஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றுஈயில்
படமாடக் கோயில் பகவர்க்கு அது ஆமே----திருமந்திரம்

avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு

Post by T.N.Balasubramanian on Tue Dec 22, 2015 7:33 pm

நல்ல தகவல்கள் .
திரு AMR கூறுகின்ற பல விஷயங்களில் எனக்கு உடன்பாடு உண்டு .
ராசிபலன்களில் அவர் கூறுவதும் சரியே .
TV ,பேப்பர்களில் தினம் தினம் வரும் ராசி பலன்கள் சுத்த ஹம்பக் .

13 வருடங்களுக்கு முன் எனது உறவினர் ஒருவருக்கு சதாபிஷேகம் .(80 வருடம் ).
என் மூலமாக தான் வைதீகர் ஏற்பாடுகள் எல்லாம் .
உறவினர் எழுப்பிய கேள்வி :  கல்யாணத்தின் போது ஒரு முறை , ஷஷ்டி அப்த பூர்த்தியின் (60)
இரெண்டாம் முறை தாலி முடிந்ததால் , 80 ஆண்டிற்கு மூன்றாம் முறையாக தாலி முடியவேண்டுமா எனக் கேள்வி .
அதற்கு அவர் (வயது 83) அளித்த பதில் : தாலிகட்டும் போது கூறுகின்ற "மாங்கல்யம் தந்துனாம் மம ஜீவ ஹெதுனாம் "என்பது கல்யாண மந்திரங்களில் சாஸ்திரப்படி எங்கும் கூறப்படவில்லையாம் .
சமூக பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டது , முதல் கல்யாணத்திற்கே அவசியம் இல்லை என்கிற போது ,
சதாபிஷேகதிர்க்கு அவசியமா ?   என்றார் .
இருந்தாலும் நம்மால் எல்லாம் தடை செய்யமுடியாது . சாஸ்திரத்தில் இல்லை என்றால் , நம்முடைய வித்வத்தன்மையையே சந்தேகம் படுவார்கள் .
அவர்களுக்கு அவசியம் என்று தோன்றினால் மூன்றாவது மாங்கல்யம் கட்டட்டும் என்றார் .

நிறைய பேருக்கு எந்தன் இந்த பதிவில் ,உடன்பாடு இருக்காது . இருப்பினும் எங்கள் இருவர்  இடையே நடந்த சம்பாஷணையை கூறுவது சரி என்றே எனக்கு படுகிறது .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20568
மதிப்பீடுகள் : 7923

View user profile

Back to top Go down

Re: கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு

Post by ayyasamy ram on Tue Dec 22, 2015 10:18 pm

குமுதம் சோதிடம் புத்தகம் ... AMR
அவர்களின் ராசிபலன் மற்றும் அவரது கேள்வி- பதில்
பகுதிக்காகவும், ஆன்மிக தகவலுக்காவும் பலரால்
விரும்பபட்டு, தொடர்ந்து வாங்கப்படுகிறது...
-
அதனை ஒரு சேவையாகவே செய்து வருவதாக
நினைக்கத் தோன்றுகிறது...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31537
மதிப்பீடுகள் : 10061

View user profile

Back to top Go down

Re: கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு

Post by krishnaamma on Tue Dec 22, 2015 10:30 pm

ayyasamy ram wrote: குமுதம் சோதிடம் புத்தகம் ... AMR
அவர்களின் ராசிபலன் மற்றும் அவரது கேள்வி- பதில்
பகுதிக்காகவும், ஆன்மிக தகவலுக்காவும் பலரால்
விரும்பபட்டு, தொடர்ந்து வாங்கப்படுகிறது...
-
அதனை ஒரு சேவையாகவே செய்து வருவதாக
நினைக்கத் தோன்றுகிறது...
-
மேற்கோள் செய்த பதிவு: 1182255

எனக்கு கூட அவருடையவைகள் படிக்க பிடிக்கும் ராம் அண்ணா, நீங்கள் முடிந்தால் அப்பப்போ போடுங்கோ புன்னகை.....பகிர்வுக்கு மிக்கநன்றி.............இதோ படிக்கிறேன் !

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு

Post by krishnaamma on Tue Dec 22, 2015 10:39 pm

பஹவானின் அன்பிற்கு எதை ஈடாகக் கூறுவது என்று 
ஆழ்வார்கள் பஹவானிடமே கேட்டார்கள். அதற்கு ‘இதைவிட 
ஒரு அன்பு இருக்க முடியாது என்று ஒன்று இருந்தால், அதைவிட 
உயர்ந்தது என்னுடைய அன்பு’ என்று கூறினாராம் பஹவான். அருமை அருமை ............... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எப்படி ஒரு தாய், தான் பெற்ற குழந்தையைப் பார்த்துக் 
கொள்கிறாளோ, அது போல் பஹவான் எல்லோரையும் பார்த்துக் 
கொள்கிறார். அவனிடம் கேட்டால் போதும் கிடைத்து விடும். 
ஆனால், அந்த நம்பிக்கை நமக்கு வேண்டும். கலியினுடைய 
தோஷத்தினால், நமக்கெல்லாம் பஹவானிடம் நம்பிக்கை 
குறைந்து வருகிறது.ரொம்ப சரியாய் சொல்லி இருக்கார்..........இந்த ஒரு ஜன்மத்துக்கே தாயாய் இருக்கக் கூடியவள் அத்தனை ஆதுரத்துடன் இருப்பா.....இருக்கா என்றால் .....நம்முடைய ஜன்ம ஜன்மத்துக்கும் தாயாக இருக்கும் அந்த கோவிந்தன் நம்மைக் கை விட்டு விடுவானா என்ன? புன்னகை.................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு

Post by krishnaamma on Tue Dec 22, 2015 10:41 pm

ayyasamy ram wrote:
சேஷாத்ரி:
தினமும் காலையில் சில ஜோதிடர்கள் தொலைக்
காட்சிகளில் ராசி பலன் கூறுகிறார்கள்.
காலண்டர்களில் தின பலன் போடுகிறார்கள்.
இது எப்படிச் சரியாக இருக்கும்? அவரவர் ஜாதகத்தைப்
பொருத்துத்தானே அன்றைய பலன் இருக்கும்?

-
ஏ.எம்.ஆர்.:
மனசாட்சிப்படிச் சொல்ல வேண்டுமென்றால், வார ராசி பலன்,
தினசரி பலன் இவை யெல்லாம் பொய்தான். வார ராசிபலன்
சொல்லுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. சிம்ம ராசி என்று
எடுத்துக் கொண்டால், ஒரு ஊரிலேயே குறைந்தது ஐயாயிரம்
நபர்களாவது இருப்பார்கள்.

எல்லோருக்கும் ஒரே விதமாக அந்த நாள் அமையுமா?
அமையாது. ஆனால், சமீபத்தில் ஒரு ரஷ்ய விமானத்தில் பயணம்
செய்த இருநூற்று முப்பது நான்கு பேரும் இறந்து விட்டார்கள்.
அப்படி என்றால் அவர்கள் அனைவரது ஜாதகமும் ஒன்றா?

நம்முடைய நாட்டில் எமெர்ஜென்ஸி காலத்தில், எல்லா
சட்டங்களையும் ரத்து செய்தது போல், ‘விபரீத யோகம்’ என்று
ஜோதிடத்தில் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த விபரீத யோகத்தில், எந்த ஜாதக விதிகளும் செயல்படாது.
-
------------------
சூப்பர் புன்னகை..............

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு

Post by shobana sahas on Wed Dec 23, 2015 2:44 am

T.N.Balasubramanian wrote:நல்ல தகவல்கள் .
திரு AMR கூறுகின்ற பல விஷயங்களில் எனக்கு உடன்பாடு உண்டு .
ராசிபலன்களில் அவர் கூறுவதும் சரியே .
TV ,பேப்பர்களில் தினம் தினம் வரும் ராசி பலன்கள் சுத்த ஹம்பக் .

13 வருடங்களுக்கு முன் எனது உறவினர் ஒருவருக்கு சதாபிஷேகம் .(80 வருடம் ).
என் மூலமாக தான் வைதீகர் ஏற்பாடுகள் எல்லாம் .
உறவினர் எழுப்பிய கேள்வி :  கல்யாணத்தின் போது ஒரு முறை , ஷஷ்டி அப்த பூர்த்தியின் (60)
இரெண்டாம் முறை தாலி முடிந்ததால் , 80 ஆண்டிற்கு மூன்றாம் முறையாக தாலி முடியவேண்டுமா எனக் கேள்வி .
அதற்கு அவர் (வயது 83) அளித்த பதில் : தாலிகட்டும் போது கூறுகின்ற "மாங்கல்யம் தந்துனாம் மம ஜீவ ஹெதுனாம் "என்பது கல்யாண மந்திரங்களில் சாஸ்திரப்படி எங்கும் கூறப்படவில்லையாம் .
சமூக பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டது , முதல் கல்யாணத்திற்கே அவசியம் இல்லை என்கிற போது ,
சதாபிஷேகதிர்க்கு அவசியமா ?   என்றார் .
இருந்தாலும் நம்மால் எல்லாம் தடை செய்யமுடியாது . சாஸ்திரத்தில் இல்லை என்றால் , நம்முடைய வித்வத்தன்மையையே சந்தேகம் படுவார்கள் .
அவர்களுக்கு அவசியம் என்று தோன்றினால் மூன்றாவது மாங்கல்யம் கட்டட்டும் என்றார் .

நிறைய பேருக்கு எந்தன் இந்த பதிவில் ,உடன்பாடு இருக்காது . இருப்பினும் எங்கள் இருவர்  இடையே நடந்த சம்பாஷணையை கூறுவது சரி என்றே எனக்கு படுகிறது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182229

நான் உங்கள் பதிவை ஆதரிக்கிறேன் அய்யா . எனக்கும் இவர் கூறிய பலவற்றில் உடன்பாடு இருக்கிறது . அய்யா அவர்கள் சரியாக சொல்வது போல் தான் உள்ளது .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு

Post by shobana sahas on Wed Dec 23, 2015 2:45 am

krishnaamma wrote:பஹவானின் அன்பிற்கு எதை ஈடாகக் கூறுவது என்று 
ஆழ்வார்கள் பஹவானிடமே கேட்டார்கள். அதற்கு ‘இதைவிட 
ஒரு அன்பு இருக்க முடியாது என்று ஒன்று இருந்தால், அதைவிட 
உயர்ந்தது என்னுடைய அன்பு’ என்று கூறினாராம் பஹவான். அருமை அருமை ............... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எப்படி ஒரு தாய், தான் பெற்ற குழந்தையைப் பார்த்துக் 
கொள்கிறாளோ, அது போல் பஹவான் எல்லோரையும் பார்த்துக் 
கொள்கிறார். அவனிடம் கேட்டால் போதும் கிடைத்து விடும். 
ஆனால், அந்த நம்பிக்கை நமக்கு வேண்டும். கலியினுடைய 
தோஷத்தினால், நமக்கெல்லாம் பஹவானிடம் நம்பிக்கை 
குறைந்து வருகிறது.ரொம்ப சரியாய் சொல்லி இருக்கார்..........இந்த ஒரு ஜன்மத்துக்கே தாயாய் இருக்கக் கூடியவள் அத்தனை ஆதுரத்துடன் இருப்பா.....இருக்கா என்றால் .....நம்முடைய ஜன்ம ஜன்மத்துக்கும் தாயாக இருக்கும் அந்த கோவிந்தன் நம்மைக் கை விட்டு விடுவானா என்ன? புன்னகை.................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1182269

சரியாக சொன்னீர்கள் க்ரிஷ்ணாம்மா .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு

Post by Namasivayam Mu on Thu Jan 14, 2016 7:11 amபடமாடக் கோவில் பகவர்க்கு ஒன்றுஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றுஈயில்
படமாடக் கோயில் பகவர்க்கு அது ஆமே----திருமந்திரம்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு

Post by M.Jagadeesan on Thu Jan 14, 2016 7:47 am

கோவில்களில் நமது பெயருக்கு மட்டுமல்ல ; சுவாமி பெயருக்கும் தேங்காய்ப் பழம் கொண்டு அர்ச்சனை செய்வதும் தவறாகும் .

பெரிய புராணத்தின் முதல் சருக்கமான திருமலைச் சருக்கத்தில் சுந்தரர் பெருமானின் வரலாறு
இடம்பெற்றிருக்கின்றது. இவ்வரலாற்றில் இறைவன் தமிழை விரும்பிக் கேட்டதாக சேக்கிழார் குறிப்பிடுகின்றார். தூய மறையினைப் பாடும் இறைவன், “நமக்கும் அன்பின் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக” என்று கூறியதாய்ச் சேக்கிழார்பெரிய புராணத்தில் பதித்துள்ளார். இதன் வழி இறைவனுக்குச் சிறந்த அர்ச்சனை பாடுதலே ஆகும் என்று தெளிவாகிறது. பெருமான் விரும்பிக் கேட்ட உயர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள தமிழர்கள் பெருமானைத் தமிழிலேயே போற்றிப் புகழ்ந்து, அகங்குழைந்து, கண்ணீர் மல்கி வழிபடலாம் என்று புலனாகிறது. பெருமானால் ஆட்கொள்ளப் பெற்ற சுந்தரரும், “பித்தா” என்ற தமிழ்ச்சொல்லைக் கொண்டே பெருமானை முதலில் வழுத்தி வழிபடுகின்றார். இறைவனைத் தமிழில் வழிபடுவதே தமிழர் வழக்கு என்பதனைச் சேக்கிழார் பெரிய புராணம் நெடுகிலும் பதிக்கின்றார்.
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4772
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு

Post by Namasivayam Mu on Thu Jan 14, 2016 11:20 am

M.Jagadeesan wrote:கோவில்களில் நமது பெயருக்கு மட்டுமல்ல ; சுவாமி பெயருக்கும் தேங்காய்ப் பழம் கொண்டு அர்ச்சனை செய்வதும் தவறாகும் .

பெரிய புராணத்தின் முதல் சருக்கமான திருமலைச் சருக்கத்தில் சுந்தரர் பெருமானின் வரலாறு
இடம்பெற்றிருக்கின்றது. இவ்வரலாற்றில் இறைவன் தமிழை விரும்பிக் கேட்டதாக சேக்கிழார் குறிப்பிடுகின்றார். தூய மறையினைப் பாடும் இறைவன், “நமக்கும் அன்பின் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக” என்று கூறியதாய்ச் சேக்கிழார்பெரிய புராணத்தில் பதித்துள்ளார். இதன் வழி இறைவனுக்குச் சிறந்த அர்ச்சனை பாடுதலே ஆகும் என்று தெளிவாகிறது. பெருமான் விரும்பிக் கேட்ட உயர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள தமிழர்கள் பெருமானைத் தமிழிலேயே போற்றிப் புகழ்ந்து, அகங்குழைந்து, கண்ணீர் மல்கி வழிபடலாம் என்று புலனாகிறது. பெருமானால் ஆட்கொள்ளப் பெற்ற சுந்தரரும், “பித்தா” என்ற தமிழ்ச்சொல்லைக் கொண்டே பெருமானை முதலில் வழுத்தி வழிபடுகின்றார். இறைவனைத் தமிழில் வழிபடுவதே தமிழர் வழக்கு என்பதனைச் சேக்கிழார் பெரிய புராணம் நெடுகிலும் பதிக்கின்றார்.
மேற்கோள் செய்த பதிவு: 1187682

வாழ்க வளமுடன்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum